Home Blog Page 5599

கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கும் சப்-கலெக்டருக்கும் தக்கலை குமாரகோவிலில் திருமணம்

sabarinathan divya marriage - 2026

நாகர்கோயில்:

கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. சபரிநாதனுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி திவ்யா எஸ். அய்யருக்கும், தக்கலை அடுத்த குமாரகோவிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணத்தை முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி நடத்தி வைத்தார்.

கேரள மாநிலம் அருவிக்கரை தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சபரிநாதன். இவருக்கும், திருவனந்தபுரம் சப்-கலெக்டர் திவ்யா எஸ். அய்யருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். கடந்த மாதம் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது திருமணத்தை குமரி மாவட்டம் தக்கலையை அடுத்த குமாரகோவிலில் உள்ள முருகன் கோவிலில் வைத்து நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இன்று காலை 9.40 க்கு இருவருக்கும் இடையே திருமணம் நடந்தது. முருகனை வழிபட்ட பின்னர், கோவில் முன் உள்ள மண்டபத்தில் மணமக்கள் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்தார். எம்.எல்.ஏ சபரிநாதன் திருமாங்கல்யத்தை திவ்யா எஸ். அய்யர் கழுத்தில் கட்டினார்.

இந்தத் திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் மட்டுமே கலந்துகொண்டனர். பின்னர் மணமக்கள் இருவரும் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றனர். இன்று மாலை திருவனந்தபுரம் நாலாஞ்சிரையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

கேரள முன்னாள் சபாநாயகர் கார்த்திகேயனின் மகன் சபரிநாதன். என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், மும்பையில் ஒரு நிறுவனத்தில் முதன்மை அதிகாரியாக பணியாற்றி வந்தார். கார்த்திகேயன் திடீரென மரணம் அடைந்ததால், காலியான அருவிக்கரை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற சபரிநாதன் அதன் பின்னர் நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்றார். எம்.எல்.ஏ. ஆன பின்னர் தொகுதி பிரச்னைக்காக திருவனந்தபுரம் சப்-கலெக்டர் திவ்யா எஸ். அய்யரை சந்தித்தார். இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ள அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இப்போது திருமணம் நடந்துள்ளது.

எம்.எல்.ஏ., சபரிநாதன் தனது திருமணத்தைக் குறித்துக் கூறியபோது, ஜூன் 30-ந் தேதியான இன்று என் வாழ்நாளில் மறக்க முடியாத பல சம்பவங்கள் நடந்துள்ளன. எனது திருமணம் இன்று நடந்தது போல ஜூன் 30-ந் தேதி தான் நான் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டேன். அதனால் இந்த 30-ந் தேதியை என்னால் மறக்க முடியாது. நாங்கள் இருவரும் காதலித்தபோது முருகன்- வள்ளியுடன் குடிகொண்டிருக்கும் கோவலில் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தோம். அது பெற்றோர் விருப்பம் மக்களின் அன்பு ஆகியவற்றால் இன்று நிறைவேறி உள்ளது. இதற்காக எங்களோடு துணை நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

சபரிநாதனுடன் மலர்ந்த காதல் குறித்து திவ்யா எஸ். அய்யர் கூறியபோது, சபரிநாதன் என்னுடன் அலுவல் ரீதியாக பேசினார். அதன் பிறகு இருவரும் எங்களின் தனிப்பட்ட விருப்பங்களை பேசிக் கொண்டோம். அப்போது எனக்கு விருப்பமான இசை, சினிமா, புத்தகம் படித்தல் போன்றவற்றில் அவரும் ஆர்வமாக இருப்பதை அறிந்தேன். அந்த ஆர்வம் அவர் மீது காதலாக மாறியது. அதன்பின் அவரை சந்திக்க வெட்கமாக இருந்தது. அப்போது நான், கல்லூரி பருவத்தை நினைத்துக் கொண்டேன். இப்போது நினைத்தாலும் மனம் சிலிர்க்கிறது. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்ததும் மனம் மகிழ்ச்சி கொண்டது” என்றார்.

தமிழக மீனவர்கள் 180 பேர் ஆந்திராவில் சிறைப்பிடிப்பு

Fishermen at Marina Beach Chennai - 2026

சென்னை:
ஆந்திரத்தில்ப மீனவர்களால் தமிழக மீனவர்கள் 180 பேர் சிறைப்பிடிக்கப் பட்டுள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த 140 மீனவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 13 விசைப் படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். ஆந்திரக்கடல் பகுதியான மண்ணூர் பூண்டி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது விசைப்படகுகளில் வந்த ஆந்திர மீனவர்கள் அவர்களை திடீரென சுற்றி வளைத்தனர். பின்னர், காசிமேடு மீனவர்கள் 140 பேரையும் 13 விசைப்படகுகளுடன் சிறை பிடித்து சென்றனர்.

நேற்று மாலை பென்னார்பாளையம் அருகே காசி மேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 40 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களையும் படகுகளுடன் ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்துச் சென்றனர். மொத்தம் இவ்வாறு 180 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் காசி மேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். மீனவர்களை மீட்பதற்கான முயற்சியில் மீனவர் சங்க பிரதிநிதிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திர மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மீனவர் சங்க பிரதிநிதிகள் ஆந்திராவுக்கு புறப்பட்டு செல்கின்றனர்

Maneka Gandhi believes men do not commit suicide

Maneka Gandhi - 2026

Union minister Maneka Gandhi believes men do not commit suicide and even says she hasn’t heard of a single such case. Her answer to a query, during a Facebook Live session, about the government’s initiative to reduce suicide rates among men has left several people fuming.

The Union women and child development minister said, “Which men have committed suicide? Why not try and resolve the situation rather than commit suicide — I have not heard/read of a single case.”

However, the data, in fact, leaves her in a pickle. According to the National Crime Records Bureau (NCRB), in 2015, as many as 1,33,623 suicides were reported in the country, of which 91,528 (68%) were by men and 42,088 were by women. Of the 86,808 married persons who committed suicide in 2015, 64,534 (74%) were men, the NCRB data states.

The minister, through the three-hour long chat on the social media site, was pilloried by people for being “anti- men” and spent most part of the chat trying to answer questions the over the issue.

கல்யாணம் கட்டிக்கப் போறாராம் ஸ்ரீதிவ்யா

sri divya - 2026

நடிகை ஸ்ரீதிவ்யா கடந்த 2010ம் ஆண்டில் ’மனசார’ என்ற தெலுங்கு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் இந்தப் படம் பெரும் தோல்வியைத் தழுவியது. அதனால் 2 ஆண்டுகள் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். அதன் பிறகு 2013ம் ஆண்டில் இயக்குநர் பொன்ராம் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவில் அறிமுகமானர்.

ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். இவர் தமிழில் ஜீவா, வெள்ளைக்கார துரை, காக்கிசட்டை, ஈட்டி, காஸ்மோரா,மருது,பெங்களூர் நாட்கள், மாவீரன் கிட்டு, சங்கிலிபுங்கிலி கதவ தொற, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவரது கையில் வேறு எந்த படமும் கைவசம் இல்லை. இதனால் இவரது பெற்றோர்கள் இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். ஏற்கெனவே ஸ்ரீ திவ்யா பிரபல டாக்டர் ஒருவரை காதலித்து வருவதாக தகவல் பரவியது. பெற்றோர்கள் திருமண ஏற்பாடு செய்து வருவதால் விரைவில் ஸ்ரீதிவ்யா திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

வருகிறது 3 சிம் ஆண்ட்ராய்ட் மொபைல்

3 sim mobile - 2026

இரண்டு சிம் ஸ்மார்ட்போன்கள் இப்போது, மொபைல் வர்த்தக சந்தையில் கோலோச்சுகின்றன. இருந்தும் இரண்டு இரட்டை சிம் மொபைல்களை பயன்படுத்தும் நிலையில் அவர்கள் இருக்கின்றார்கள். ஒரே மொபைல் போனாக இருந்தால் வசதியாகத்தான் இருக்கும்.

இவர்களது பிரச்னைக்கு தீர்வாக 3 சிம் கார்ட்டினை பயன்படுத்தக்கூடிய அடாப்டர் (Adapter) ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை சுவிட்ஸர்லாந்தினை சேர்ந்த குழு ஒன்று வடிவமைத்துள்ளது.

ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் கைபேசிகளில் இதனை இணைத்து பயன்படுத்த முடியும். இருப்பினும் இது எப்போது விற்பனைக்கு வரும்; விலை என்ன என்பது குறித்து முழுத் தகவலும் வெளியிடப் படவில்லை

“பரமாசார்யாளிடம் வெண்ணெய் கேட்ட பாலகிருஷ்ணன்”

1234201 315112848661397 4724600860700186658 n 1 - 2026

“பரமாசார்யாளிடம் வெண்ணெய் கேட்ட பாலகிருஷ்ணன்”

(பெரியவாளோட உதட்டுல இருந்த எல்லா பாளம்
பாளமான வெடிப்பும் இருந்த எடமே தெரியாம சுத்தமாக
போய்விட்டிருந்தது.ஆச்சரியமா பார்த்தவாகிட்டே
ஆசார்யா
​சொன்னார்;”என்ன பார்க்கறேள்? வெண்ணெயை
வாங்கிண்டுபோன பால கிருஷ்ணன் அதை சாப்ட்டுட்டான்
போல இருக்கு. அதான் எனக்கு சரியாயிடுத்து!”)

நன்றி-குமுதம் லைஃப்-இன்று வெளியான இதழ்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

கும்பகோணம் மடத்துல ஒரு சமயம். நல்ல பனிக்காலம்.
விடியற்காலையில் எழுந்திருக்கறதுக்கே பலரும்
சோம்பல்படுவா. பனிகொட்டறதுல ரெண்டடி தூரத்துல
இருக்கறவாளோட முகம்கூட தெரியாது.ஒரு போர்வைக்கு
நாலு போர்வை போர்த்திண்டாலும் உடம்பு நடுங்கும். ஆனா
அத்தனை குளிர்லயும் மகாபெரியவா கார்த்தால
நாலுமணிக்கெல்லாம் எழுந்து, கொஞ்சமும் சலிச்சுக்காம
நீராடிட்டு நித்ய கர்மானுஷ்டானங்களையும் அனுஷ்டிக்க
ஆரம்பிச்சுடுவார்.

வாட்டற பனியோட பிரதிபலிப்பா, மகா பெரியவாளோட
உதடுகள்ல நிறைய வெடிப்பு வந்துடுத்து. உதட்டோட உள்
பக்கம் எல்லாம் புண்ணாயிடுத்து.அந்த மாதிரியான
நிலைமைல உதட்டை சரியா மூடக்கூட முடியாது.
ரணமா இருந்ததால, சரியா பேசக்கூட முடியாம வேதனை
இருந்தாலும் தன்னோட கஷ்டம் எதையும் வெளிக்காட்டிக்
கொள்ளாமல் எப்போதும்போல மடத்துல உள்ளவா,
வேதம் சொல்ல வர்றவா,தரிசனம் பண்ண வர்றவாள்னு
எல்லார்கிட்டேயும் பேசிக் கொண்டிருந்தார்.

பனிக்காலத்துல உதடு வெடிக்கும்போது அடிக்கடி வெண்ணெய்
தடவிண்டே இருந்தால் சீக்கிரமா வெடிப்பு சரியாகிவிடும்.
ஆனால், ஆசார சீலரான பெரியவா, கடைகள்ல விற்கிற
வெண்ணெயை வாங்கித் தந்தால் தடவிக் கொள்ள மாட்டார்..
என்ன பண்ணுவது? மடத்துலய தயார் செய்யறதுன்னா அப்போ
இருந்த நிதி நிலைமைல அது கொஞ்சம் செலவான விஷயம்.
அதோட வெண்ணெய் தயார் பண்றதுக்கு குறைஞ்சது ரெண்டு
நாளாவது ஆகும். என்ன செய்யறதுன்னு மடத்துல இருந்தவா
எல்லாரும் யோசிச்சுண்டு இருந்தா.

அந்த சமயத்துல வயசான பாட்டி ஒருத்தர், ஆசார்யாளை
தரிசனம் செய்யறதுக்கு வந்தா.முந்தின நாள் பெரியவாளை
தரிசனம் பண்ண வந்தப்போ அவரோட உதடு
வெடிச்சிருக்கறதைப் பார்த்ததாகவும்,அதனால் தானே மடியோட
ஆசாரமா பசும்பால் வாங்கி,காய்ச்சி,உறை குத்தி,தயிராக்கிக்
கடைஞ்சு ஆசாரத்துக்கு எந்தக் குறைபாடும் வராம வெண்ணெய்
எடுத்துக்கொண்டுவந்திருக்கறதாகவும் மடத்து சிப்பந்திகள்கிட்டே
சொன்ன அந்தப் பாட்டி,தான் கொண்டுவந்த வெண்ணெயை
ஆசார்யா முன்னால வைச்சுட்டு நமஸ்காரம் பண்ணினா.

“பெரியவா! ஒங்க ஒதடு பனியால ரொம்ப பாளம் பாளமா
வெடிச்சிருக்கு. நான் ரொம்ப மடியா வெண்ணெய் கடைஞ்சு
எடுத்துண்டு வந்திருக்கேன். நீங்க மறுக்காம இதை ஏத்துண்டு
ஒதட்டுல தடவிக்கணும்!” அப்படின்னு ப்ரார்த்தனை செய்தாள்.

அப்போ பெரியவாளை தரிசனம் பண்றதுக்கு வந்திருந்த ஒரு
தம்பதியோட குழந்தை அம்மாவோட கையைப் பிடிச்சுண்டு
அத்தனைநேரம் சமர்த்தா நின்னுண்டு இருந்த குழந்தை,
வெண்ணெயைப் பார்த்ததும், தாயாரோட கையை உதறிட்டு
ஓடிவந்து பெரியவா முன்னால நின்னு,’எனக்கும் வெண்ணெய்
வேணும்’கற மாதிரி தன்னோட பிஞ்சுக்கையை நீட்டியது.

சாட்சாத் பாலகோபாலனே வந்து ஆசார்யாகிட்டே வெண்ணெய்
வேணும்னு கேட்கற மாதிரி தோணித்து அங்கே இருந்தவா
எல்லாருக்கும்.இதுக்குள்ளே, அந்தக் குழந்தையோட பெற்றோர்
அவசர அவசரமா அதைத் தூக்கிக்க வந்துட்டா. அதோட
வெண்ணெய் கேட்டது தப்புங்கற மாதிரி உஸ்னு அதட்டவும்
ஆரம்பிச்சா. கை அசைவுல அவாளை பேசாம இருக்கச்
சொன்னார், மகாபெரியவா.

தன்னை தரிசிக்கவர்றவா கேட்காமலேயே அவாளுக்குத்
தேவையானதைத் தெரிஞ்சுண்டு குடுக்கக்கூடிய பெரியவா,
ஆத்மார்த்தமான பக்தி உள்ளவாளுக்கு தன்னையே
குடுத்துடக்கூடிய அந்த தெய்வம், குழந்தை அழற
தோரணையிலேயே அதுக்கு என்ன தேவைன்னு தெரிஞ்சுண்டு
குடுக்கற அம்மா மாதிரியான அந்த மஹா மஹா மாதா,
தனக்கு முன்னால இருந்த அத்தனை வெண்ணெயையும்
தூக்கி அந்தக் குழந்தைகிட்டே குடுத்துட்டார்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த சீடர்களுக்கு கொஞ்சம்
முகம் சுருங்கியது.’ரொம்ப நன்னா இருக்கு ஆசார்யா
பண்ணினது. ஏதோ கொழந்தை கேட்டா ஒரு எலுமிச்சங்காய்
சைஸுல உருட்டிக் குடுத்தா போறாதா? அப்படியே
டப்பாவோடாயா தூக்கிக் குடுக்கணும்? இப்போ ஒதட்டுல
தடவிக்க ஏது வெண்ணெய்?’ அப்படின்னு மனசுக்குள்ளே
சிலர் நினைச்சுண்டா.சிலர் மகாபெரியவா காதுல
விழாதபடி முணுமுணுப்பா பேசிண்டா.

“என்ன எல்லாரோட முகமும் தொங்கிப் போயிடுத்து?
வெண்ணெயை மொத்தமா குடுத்துட்டேனேன்னா?
கொழந்தை சாப்ட்டாலே போதும்.என்னோட ஒதட்டுப்புண்
சரியாயிடும்!” தானே குழந்தையாக சிரித்தார்-பெரியவா.

அன்னிக்கு சாயங்காலமே பெரியவாளோட உதட்டுல
இருந்த எல்லா பாளம் பாளமான வெடிப்பும் இருந்த எடமே
தெரியாம சுத்தமாக போய்விட்டிருந்தது.

ஆச்சரியமா பார்த்தவாகிட்டே ஆசார்யா சொன்னார்;
“என்ன பார்க்கறேள்? வெண்ணெயை வாங்கிண்டுபோன
பால கிருஷ்ணன் அதை சாப்ட்டுட்டான் போல இருக்கு.
அதான் எனக்கு சரியாயிடுத்து!”

சரீரம் வேறவேறயா இருந்தாலும் உள்ளே இருக்கிற ஆத்மா
ஒண்ணுதான்கறது அத்வைதம்.அந்தக் கொள்கையைப்
பரப்பறதுக்காகவே ஆதிசங்கர மகான் ஏற்படுத்தின மடத்தை
அலங்கரிக்க வந்த ஆசார்யா, இந்த லீலை மூலமா அதை
நேரடியா உணர்த்தினதை நினைச்சு சிலிர்த்துப்போனார்கள்
எல்லாரும்.

இன்றைய முக்கிய செய்திகள்

  • flashnews - 2026

இன்றைய பரபரப்பு செய்திகள் 29/06/17

***

தமிழகத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம் : மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.

அமெரிக்காவில் நுழைய 6 இஸ்லாமிய நாட்டினருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

குளம் தூர்வாரும் பணியை தமிழக அரசு தான் தொடங்கியதாக முதலமைச்சர் விளம்பரம் தேடுகிறார்.குளங்களில் தூர்வாரும் பணியை தொடங்கியது திமுக தான் : முக. ஸ்டாலின்.

துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்கலாம் : நசீம் ஜைதி.

தினகரன் – பழனிசாமி இடையே பிரிவு கிடையாது; கருத்து வேறுபாடு இருந்தாலும் அதுவும் விரைவில் விலகும்.ஆகஸ்ட் 5க்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் டிடிவி தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் – புகழேந்தி.

மருத்துவப்படிப்பில் மாநில மாணவர்களுக்கு 85% ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு.தமிழக அரசும், எம்சிஐயும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

குட்கா விவகாரத்தில் முதலமைச்சரின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என கூறி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.

வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய தொழில்பேட்டைகள் அமைக்கப்படும். மாவா, குட்கா விவகாரம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது : முதலமைச்சர் பழனிசாமி.

குட்கா விவகாரத்தில் முதலமைச்சர் விளக்கத்தை பூசி முழுகியுள்ளார்;குட்கா விசாரணை நாடகமாகநடந்து வருகிறது : ஸ்டாலின்.

ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்க இண்டிகோ ஏர்லைன்ஸ் முடிவு.

காவல்துறை எங்கள் மீது போட்டுள்ள பொய் வழக்கை முறியடிப்போம் : திருமுருகன் காந்தி.

நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான மூல வாக்கு ஜூலை 11 ஆம் தேதி விசாரிக்கப்படும்: உயர்நீதிமன்றம்.

திருமணம் நடந்து 150 நாட்களுக்குப் பிறகும் திருமணத்தை பதிவு செய்து கொள்வதற்கு வழிவகை செய்ய சட்டத்திருத்தம் பேரவையில் தாக்கல்.

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 810 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு;1-வது நிலையின் 1-வது பிரிவில் பராமரிப்பு பணியால் மின்உற்பத்தி நிறுத்தம்.

ஜம்மு – காஷ்மீரில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.

நாகேஷ் திரையரங்கம்” என்ற தலைப்பில் படம் வெளியிட தடை விதிக்க கோரி நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த்பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

செக் மோசடி வழக்கில் காங். முன்னாள் எம்.பிக்கான தண்டனை நிறுத்திவைப்பு.முன்னாள் எம்.பி அன்பரசு கோரிக்கையை ஏற்று உயர்நீதிமன்றம் நடவடிக்கை.

அஹிம்சையை உலகிற்கு போதித்த தேசம் இந்தியா; 16 வயது ஜூனைக் கான் என்ற சிறுவன் அடித்துக்கொல்லப்பட்ட சூழலில் பிரதமர் பேச்சு.

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர். அருப்புகோட்டையில் மீட்கப்பட்ட சிலை விற்கப்பட்ட வழக்கில் ஆஜரானார்.

சிலை விவகாரத்தில் சிக்கிய டிஎஸ்பி காதர் பாஷா சஸ்பெண்ட்.உயர்நீதிமன்றத்தில் விசாரணையின் போது தமிழக அரசு வழக்கறிஞர் தகவல்.

ஜம்மு-காஷ்மீரில் 5 கிலோ எடையுள்ள இரண்டு ஐஇடி வெடிகுண்டு பறிமுதல்.

அமர்நாத் யாத்திரையின் முதல் குழு பயணம் தொடங்கியது.

நாளை நடைபெறும் ஜிஎஸ்டி அறிமுக கூட்டத்தை புறக்கணிக்கிறது திமுக.

புதிய 200 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி. சில்லறை தட்டுப்பாடு எதிரொலி.

மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தின் போது தூண்டுதல் அறிக்கை வெளியிட்ட இருவருக்கு பிடிவாரண்ட்.

இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி குஜராத் சென்றுள்ளார். அகமதாபாத் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஈரோடு – பெரியகள்ளிப்பட்டியில் துணைமின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். 11 கிலோவாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்ப்பட்டுள்ளததாக அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

கலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வருடன் ஆலோசனை என சென்னையில் பேட்டியளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

வரலாறு தெரியாத கலைராஜன் என்னை டிடிவி நியமித்ததாக தவறான தகவலை பரப்பி வருகிறார் : கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்மொழி.

1999 இல் கடலூர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளராக ஜெயலலிதா என்னை நியமித்தார். என்னை நியமித்து ஓராண்டுக்குப் பிறகு டிடிவி தினகரன் கட்சிப்பதவிக்கு வந்தார் : அருண்மொழி.

திருச்சி விமானநிலையத்தில் கடத்திவரப்பட்ட ₹40லட்சம் மதிப்புள்ள 1.6கிலோ தங்கம் பறிமுதல் :
சுங்கத்துறை வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை.

கோவை குற்றாலம் அருவியில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு. 3 வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு.

சென்னை : வரி ஏய்ப்பு செய்ததாக செய்யது பீடி நிறுவனத்தில் 2-வது நாளாக வருமானத்துறையினர் நடத்தி வருகின்றனர்.

திருச்சி : மணப்பாறையில் பழைய இரும்புக் கடையில் மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்.

கடலூர் : ரெட்டிச்சாவடி அருகே கரிக்கல்நகரில் வைரஸ்காய்ச்சலால் 100பேர் பாதிப்பு. குடியிருப்புப்பகுதியில் கழிவுகள் கலப்பதால் நோய் பரவுவதாகப் புகார்.

செய்யது பீடி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ரூ. 3 கோடி பறிமுதல்.

பிரபல ஆன்மீக பாடகி சூலமங்கலம் ஜெயலட்சுமி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்* சூலமங்கலம் சகோதரிகளில் இளையவரான ஜெயலட்சுமிக்கு வயது 85 ஆகும்.

ஆக்ஸ்ஃபோர்டு அகராதியின் புதிய பதிப்பில் 240 இந்திய வார்த்தைகள் இடம்பிடித்துள்ளன ஆக்ஸ்ஃபோர்டு அகராதியின் 9வது பதிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

எண்ணூர் துறைமுகத்தை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டம்.

மலேசியா கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்து விட்டு மீண்டும் மலேசியாவிற்கு செல்ல வேண்டிய மலிண்டோ ஏர் லைன்ஸ் விமானம் தொழில் நுட்ப கோளாரின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் திருச்சி விமான நிலையத்தில் 152 பயணிகள் தவிப்பு. கோலாலம்பூரில் இருந்து பிறநாடு களுக்கு , வேறு விமானங்களில் செல்ல வேண்டிய நான்கு பயணிகள் திருச்சி விமான நிலையத்தில் தர்ணா போராட்டம்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு எதிர்ப்பு தெரிவித்து தீப்பெட்டி ஆலைகள் ஜூலை 1முதல் மூடல் – தொடர் போராட்டம் நடத்த உற்பத்தியாளர்கள் முடிவு.

ஜிஎஸ்டியை காரணம் காட்டி தியேட்டரில் சினிமா கட்டணம் உயர்வு என புகார்.தியேட்டர் அதிபர்கள் மீது நடவடிக்கை கோரி கமிஷ்னர் அலுவலகத்தில் மனு.

ஜிஎஸ்டி வரிச்சட்டத்தில் வரிவிகிதங்கள் மற்றும் சட்ட விதிகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும்: வணிகர் சங்க பேரமைப்பு.

புதிய டிஜிபியை தேர்வு செய்வது குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை. டெல்லியில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவருடன் ஆலோசனை.

கடலூர்: பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை; செல்வம் என்பவருக்கு 10 ஆண்டு சிறை வழங்கியது கடலூர் மகளிர் நீதிமன்றம்.

தேனி: பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையில் இருந்து 15 கன அடி நீர் திறப்பு.

 

பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார் : அமைச்சர் சிவி சண்முகம்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நிழலாக திகழ்ந்தவர் சசிகலா – சட்டப்பேரவையில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் புகழாரம்.

இரட்டை இலை சின்னத்தை மீண்டும் மீட்போம் – ஓ.எஸ். மணியன்.

பாலில் கலப்படம் உள்ளதாக நாங்கள் தான் நிரூபித்துள்ளோம் – பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை விமான நிலையத்தில் பேட்டி.

எந்த பாலில் கலப்படம் உள்ளது என்பதில் மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர்.பால் நிறுவனங்களிடம் பணம் கேட்டதாக வெளியான செய்தி உண்மை இல்லை – ராஜேந்திர பாலாஜி.

தேசிய கைத்தறி தினம் ரூ.1.5 கோடி செலவில் கொண்டாடப்படும் : அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.

டிடிவி தினகரன் மீதான அந்திய செலாவணி மோசடி வழக்கு ஜூலை 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

காவிரியில் இருந்து தண்ணீர் கேட்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது : நடிகர் விஷால்.

நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கு : திலீப்பிடம் 12 நேரம் போலீசார் விசாரணை.

ஆந்திராவில் செம்மரம் கடத்திய ஊர்க்காவல்படை வீரர் உட்பட 5 பேர் கைது.

இந்தியாவிலேயே முதல் முறையாக வாலிபரின் மூச்சு குழாயில் பிளேடு துண்டுகள் அகற்றம் : ஸ்டான்லி டாக்டர்கள் சாதனை.

ஈரோடு : சித்தோடு அருகே பாட்டி பாவாயி , தந்தை பழனிசாமியை சுட்டுக்கொன்ற சந்தோஷ்குமார் காவல் நிலையத்தில் சரண்.

வாட்டிகன் நிதி அமைசர் ஜார்ஜ் பெல் மீது ஆஸி போலீஸார் பாலியல் வழக்கு பதிவு : நேரில் ஆஜராக சம்மன்.

கடலூர் : கெடிலம் ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட திரைப்பட நடிகர் சிவமணி கைது.

திருவண்ணாமலை: செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் கையாடல் புகாரில் வரித் தண்டலர் சஸ்பெண்ட்.

குட்கா விவகாரத்தில் என் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன் : அமைச்சர் விஜயபாஸ்கர்.

குட்கா விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்மேல் திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள் – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

எனக்கு மடியில் கனமில்லை; எனவே வழியில் பயமில்லை – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஐ சிறுமைபடுத்தி பேசிய திண்டுக்கல் சீனிவாசனை எம்ஜிஆர் கட்சியின் அமைச்சர் பதவியில் இருந்து விலகி விடு தமிழக முதல்வரே உடனடியாக நடவடிக்கை எடு என்று திண்டுக்கல் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இது ஹை லெவல் லவ்ஜிஹாத்: 100 பெண்களை கைவைத்த இளைஞர்!

bangaloresathak - 2026

பெங்களூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் 100 பெண்களை காதலிப்பது போல் ஏமாற்றி அவர்களிடம் இருந்து நகை, பணம் மற்றும் அவர்களது கர்ப்பையும் சூறையாடிய சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூருவை சேர்ந்த 28 வயதான சதாக் முஷ்தக் என்ற இளைஞர் பல பெண்களிடம் தான் உயர் பதவி ஒன்றில் இருப்பது போல நடித்து அவர்களை மயக்கி தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தி காதலிப்பது போல் நாடகமாடி வந்துள்ளார். அவர்களது கற்பையும் சூறையாடிவிட்டு அவசர தேவைக்கு பணம் தேவைப்படுகிறது என கூறி அவர்களிடம் இருந்து பணம், நகை உள்ளிட்டவற்றை வாங்கிக்கொண்டு மாயமாகி வந்துள்ளர் சதாக் முஷ்தாக். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் சதாக் முஷ்தக் மீது புகார் கொடுக்க முன்வராத நிலையில் தற்போது ஒரு இளம்பெண் சதாக் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை வைத்து சதாக் முஷ்தக்கை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் சதக் 75 முதல் 100 பெண்களிடம் இதுபோல் காதலித்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது. பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை அபகரித்து செல்லும் இந்த செயலை சதக் கடந்த 2007-ஆம் ஆண்டு முதலே செய்து வந்துள்ளான். அதாவது தனது 18 வயது முதலே இதனை ஆரம்பித்துள்ளான் சதாக் முஷ்தக்

உலகின் மிக முக்கிய பிரதமர் வருகிறார்: மோடியை ஆவலுடன் எதிர்நோக்கும் இஸ்ரேல்!

Modi in usa - 2026

புது தில்லி:

பிரதமர் மோடி 3 நாள் சுற்றுப் பயணமாக வரும் ஜூலை 4ம் தேதி இஸ்ரேல் செல்ல உள்ளார். அண்மையில் அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற அவர், பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார்.

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் குறித்து “உலகின் மிகமுக்கியமான பிரதமர் வருகிறார்” என அந்நாட்டின் முன்னணி இதழ் ஒன்று பிரதான பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. மோடியின் வருகை குறித்து ’தி மார்க்கர்’ எனும் இஸ்ரேலின் முன்னணி பத்திரிக்கை ’விழித்திரு இஸ்ரேல், உலகின் மிக முக்கியமான பிரதமர் வருகிறார்’ என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ளது.

அதில், “அமெரிக்க அதிகர் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு வருவதற்கு முன்னர் மிகப் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், அவர் பெரிதாக எதுவுமே கூறவில்லை. ஆனால் தற்போது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாட்டின் பிரதமராகவும், 125 கோடி மக்களின் தலைவராகவும் உள்ள மோடியின் வருகை அதைவிட முக்கியத்துவம் பெற வேண்டும்” என்று அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலின் பெரும்பாலான பத்திரிகைகள் மோடியின் வருகைக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. குறிப்பாக, ஜெருசலேம் போஸ்ட் எனும் செய்தி இணையதளம் ’மோடி வருகை’ என்று தனியாக ஒரு பக்கத்தையே திறந்துள்ளது. இந்தச் சுற்றுப் பயணம் மூலம் இஸ்ரேலுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்கிற பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார்.

விக்னேஷ்சிவன் – நயன்தாராவின் ‘கல்யாண பாடல்’ ரெடி

nayan 1 - 2026

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவாவும், காதலித்து வருவதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு முன்பே இருவரும் சேர்ந்து வாழ்வதாகவும் கிசுகிசு எழுந்து வருகிறது.

இந்த நிலையில் நயன்தாராவை நினைத்து உருகி உருகி ஒரு திருமண பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளாராம். இந்த பாடல் அவர் இயக்கி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம்பெறுகிறது. என்றாலும் இந்த பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் நயனை மனதில் வைத்து எழுதியுள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நயன்தாராவுடன் திருமணம் எப்போது என்று சமீபத்தில் கேள்வி கேட்ட செய்தியாளர் ஒருவரிடம் ‘தற்போதைய நிலையில் எனது முழு கவனம் எனது பணியில் மட்டுமே உள்ளது’ என்று விக்னேஷ்சிவன் பதிலளித்துள்ளார்.