Home Blog Page 5600

பிக்பாஸ்: இப்படியும்கூட ஏமாற்றுவார்களா?

big boss - 2026
நடிகர் கமல்ஹாசன் நடுவராக பங்கேற்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டது. இதில் நடிகர், நடிகைகள்  உட்பட 15 பேர் பங்கு பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் 100 நாட்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை. இந்த நிகழ்ச்சியில் தற்போது பல்வேறு சர்ச்சை செய்திகள் சமூக வலைதளங்களில் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் பேஸ்புக் பக்கத்தில் ஒருவர் இந்த நிகழ்ச்சி குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  நிறைய பேருக்கு இந்த நிகழ்ச்சிய பத்தி முழுசா தெரிந்திருக்க வாய்ப்பில்ல! ஹிந்தில பல வருஷமா ஓடிட்டு இருக்குர நிகழ்ச்சி இப்போ தமிழ்நாட்டுக்கு வந்திருக்கு ! 100 நாள்னு சொன்னாலும் அதோட சூட்டிங்க மிஞ்சி போனா பத்தே நாள்ல முடிச்சிடுவாங்க, அத அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேர கணக்குல பிரிச்சு 100 நாளைக்கு ஒளிபரப்புவாங்க ! என்னன்ன நடக்கனும் பேசனும்னு எல்லாமே முன்னடியே ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு தான் சூட்டிங் தொடங்கும் !

ஒவ்வொருத்தரா மக்கள் ஓட்டு போட்டு வெளியேத்திட்டு இருப்பாங்க, ஆனா உண்மையிலேயே யாரு வெளியேரனும்னு முடிவு பண்ணிதான் அதுக்கு ஏத்த மாதிரி காட்சிகள் அமைக்க பட்டிருக்கும்! நிறைய சண்டைகள் , மோதல்கள், விவாதம், சச்சரவில் தொடங்கி காதல், கள்ளகாதல், பாலியல் தொல்லைகள் உட்பட நடப்பதுபோல் காட்சிகள் அரங்கேறும்! மக்கள் அதை கண்டு கொதித்தெழுந்து தவறு செய்தவனுக்கு எதிராக ஓட்டு அளித்து வெளியேற்றும்படி நடைபெறும்! சிலர் தாங்கலாகவே உள்ளே இருக்க முடியாமல் கோபத்தில் வெளியேருவதுபோல் வைத்து TRP ஏற்றுவார்கள் !

இளைஞர்களை கவர வீட்டினுள் கவர்ச்சியான அரைகுறை ஆடைகளையே அணிந்து வருவார்கள் நடிகைகள். ஊரெங்கிலும் இதில் நடைபெறும் சம்பவங்களையே பேசுமாறு வைப்பார்கள்! இறுதியில் அவர்கள் முடிவு செய்தபடியே ஒருவரை மக்களே தேர்ந்தெடுத்ததுபோல் பரிசு வழங்கி அடுத்த சீசனுக்கான வேலைகள் தொடங்கி விடும்! இது எல்லாம் தானாக நடப்பதாக நம்பி இதுவரை அக்கம் பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என பார்த்து வந்த மக்கள் , இனி இந்த வீட்டில் என்ன நடக்கிறது என பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் , அடுத்த சீசனுக்காக ஏங்கவும் செய்வார்கள் !

அடுத்தவர் வீட்டில் நடப்பதை மிகுந்த அக்கறை கொண்டு எட்டி பார்க்கும் நம் மன ஓட்டமே இந்த நிகழ்ச்சியின் உயிர் நாடி! அதை வைத்தே கலாச்சாரத்தை அழித்து காசு பார்க்கும் ஒரு கும்பல்! அதை கிண்டல் செய்கிரேன் என மீம்ஸ் போட்டு மக்களிடையே இன்னும் அதிகமாக பகிர வைக்கும் சில இளைஞர்கள்! முடிந்தால் விழிப்புணர்வு மீம்ஸ் போட்டு மக்களுக்கு புரிய வையுங்கள் ! இந்த முறையாவது மீடியா TRP பசிக்கு பலி ஆகாமல் சாமர்த்தியமாக விழித்து கொண்டு மக்கள் பிரச்சனையில் தலையிடு தமிழா!”

என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதவை பார்க்கும் பொழுது இப்படியும் நடக்க வாய்ப்புள்ளதா என்றுதான் தோன்றுகிறது.

ரூ.1 கோடி கமிஷன் பெற்று ஏமாற்றிய வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது

powerstar srinivasan - 2026

பெங்களூரு:

கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 1 கோடி கமிஷனாகப் பெற்று ஏமாற்றிய வழக்கில், நகைச்சுவை நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனை பெங்களூரு போலீசார் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர்.

நகைச்சுவை நடிகர், ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் தில்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு, ரூ.100 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.10 கோடி கமிஷன் பெற்றாராம். இதை அடுத்து தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில், சீனிவாசன் கைது செய்யப்பட்டு தில்லி சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுபோல், பெங்களூரைச் சேர்ந்த மஸ்ரூர் ஆலம், அவரது சகோதரர் சஜ்ஜாத் வாகம் ஆகியோருக்கு ரூ.30 கோடி கடன் பெற்றுத் தருவதாக ரூ.1 கோடி கமிஷன் பெற்று ஏமாற்றியதாக, பெங்களூரு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து தில்லியில் வைத்து பெங்களூரு போலீசார் சீனிவாசனைக் கைது செய்தனர். நேற்று பெங்களூரு அழைத்து வரப்பட்ட சீனிவாசன், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிமன்ற அனுமதியுடன் போலீசார் சீனிவாசனைக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

கமிஷன் பெற்ற பணத்தை சினிமாவில் முதலீடு செய்து, தாம் நஷ்டப் பட்டதாக போலீசாரிடம் சீனிவாசன் கூறியுள்ளார். இவர் மீது சென்னை, தில்லி, பெங்களூரு உட்பட பல இடங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஊழல் சின்னம் ஜெயலலிதாவுக்கு  நினைவு மண்டபமா?: ராமதாஸ்

M Jayalalithaa - 2026
தமிழக முதலமைச்சராக பதவி வகித்து மறைந்த ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினாக் கடற்கரையில் பிரமாண்டமான நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட ஒருவருக்கு நினைவு மண்டபம் அமைத்து தியாகியாக்கும் செயல் கண்டிக்கத்தக்கது.
ஜெயலலிதா மறைந்த சில நாட்களில் சட்டப்பேரவையில் நடந்த விவாதத்திற்கு பதிலளித்த  அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை மெரினாக் கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு  அருகில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். எனினும் அந்த நேரத்தில்  ஜெயலலிதா எந்த வழக்கிலும் தண்டிக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் அப்போது எதிர்ப்பு எழவில்லை. அதன்பின்னர் வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த 4 ஆண்டு சிறைத் தண்டனை, தலா ரூ.10 கோடி  அபராதம் விதித்து அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இந்த ஊழலில் ஜெயலலிதாவுக்கு உள்ள பங்கு குறித்து விரிவாக விளக்கியிருந்த உச்சநீதிமன்றம், தீர்ப்பளிக்கப்படும் போது ஜெயலலிதா உயிருடன் இல்லை என்பதால் அவருக்கு தண்டனை வழங்கவில்லை. எனினும் அவர் குற்றவாளி தான்.
அந்த அடிப்படையில் தான் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் படங்களை அகற்ற வேண்டும்; அரசு திட்டங்களுக்கு சூட்டப்பட்டுள்ள ஜெயலலிதாவின் பெயரை நீக்கிவிட்டு,  அவற்றை அரசுத் திட்டங்கள் என்ற பெயரிலேயே செயல்படுத்த வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் முதல் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது. இத்தகைய சூழலில் ஊழலின் அடையாளமாக திகழும் ஜெயலலிதாவுக்கு மக்களின் வரிப்பணத்தில் நினைவு மண்டபம் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் போது ஜெயலலிதா இறந்து விட்டதால் தான் அவரை குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் அறிவிக்கவில்லை. இது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த நடைமுறை தான். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் அவரும் இந்த வழக்கில் குற்றவாளி என்று அறிவித்து ரூ.100 கோடி அபராதம் செலுத்த உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கும். ஜெயலலிதாவும் முதலமைச்சர்  பதவியிலிருந்து நீக்கப்பட்டு 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்துக் கொண்டு இருந்திருப்பார்.
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் ஜெயலலிதாவின் ஊழல்கள் பற்றி உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் கடுமையான கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். ‘‘சொத்து வழக்கில் குற்றஞ்சாற்றப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் ஒரே முகவரியில் வசித்திருக்கிறார்கள். இவர்களுக்கு இடையில் வேறு தொடர்புகள் இல்லை என்று கூறமுடியாது. இன்னும் கேட்டால் ஊழல் செய்து தாம் குவித்த சொத்துக்களை பகிர்ந்தளித்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத் தான் இவர்களை ஜெயலலிதா தமது போயஸ் தோட்டத்தில் தங்க வைத்திருந்தார்’’ என்று நீதிபதி சந்திரகோஷ் கூறியிருக்கிறார்.  ஊழல்கள் மூலம் சொத்துக்குவித்த வழக்கில் சசிகலா மற்றும் அவரது உறவினர்களை விட ஜெயலலிதா தான் முதன்மைக் குற்றவாளி என்பதற்கு இதை விட சிறந்த ஆதாரம் எதுவும் இருக்க முடியாது.
இதற்கெல்லாம் மேலாக நினைவு மண்டபம் எனப்படுவது பொதுவாழ்வில் ஒழுக்க சீலர்களாகவும், தியாகத் திருவிளக்காகவும் விளங்கியவர்களை போற்றுவதற்காக அமைக்கப்படுவது ஆகும். சிறந்த தலைவர்களின் சிலைகள் மற்றும் நினைவிடங்களை அடுத்தடுத்த தலைமுறையினர் பார்க்கும் போது, அந்த தலைவர்களைப் போல நாமும் வாழ்ந்து நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும் என்பதற்காகத் தான் நினைவிடங்கள் அமைக்கப்படுகின்றன. ஜெயலலிதாவுக்கு நினைவு  மண்டபம் அமைக்கப்படும் பட்சத்தில் அவரது வாழ்க்கையிலிருந்து அடுத்தடுத்த தலைமுறையினர் கற்றுக் கொள்ள என்ன இருக்கும்? தொட்டில் குழந்தை திட்டம் முதல் சுடுகாட்டு கூறை வரை அனைத்து நிலைகளிலும் ஊழல் செய்து லட்சக்கணக்கான கோடிகளை குவித்தார் என்பதைத் தான் ஜெயலலிதா நினைவிடத்திலிருந்து கற்க முடியும். வருங்காலத் தலைமுறையினருக்கு அந்த பாவம் தேவையில்லை.
அதுமட்டுமின்றி, சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த மற்றொரு நீதிபதி அமிதவா ராய், ‘‘உயிர்க்கொல்லி தீமையான ஊழலின் பிடியிலிருந்து குடிமக்கள் சமுதாயத்தை மீட்க வேண்டும். நமது முன்னோர் மற்றும் இந்திய விடுதலைக்காக போராடிய தியாக சீலர்களால் கனவு காணப்பட்ட நிலையான, நியாயமான, உன்னதமான சமூக அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினால், இப்புனித பணியில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று அழைப்பு விடுத்தார். சாதாரண குடிமகனுக்கான இந்த அழைப்பு தமிழக அரசுக்கும் பொருந்தும். எனவே, வருங்காலத் தலைமுறையினருக்கு தவறான வழிகாட்டுதலை வழங்குவதை தவிர்ப்பதற்காக, ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என எச்சரிக்கிறேன்.
மருத்துவர் ராமதாஸ்,
நிறுவுனர், பாமக.,

குட்கா விற்க லஞ்சம்: விஜயபாஸ்கருக்கு வேட்டு?

health minister vijayabaskar - 2026

புதுதில்லி:

குட்கா, பான் மசாலா விற்பனையை அனுமதிக்க கோடிக் கணக்கான ரூபாய் லஞ்சமாகக் கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து தில்லியில் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா புதன்கிழமை நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது இந்த பிரச்னை தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதுவது குறித்து ஆலோசனை நடத்தப் பட்டுள்ளது. இது மாநில சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்களை தடை செய்து உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது. இதை அடுத்து மத்திய அரசு, நாடு முழுவதும் குட்கா, பான் மசாலா, ஜர்தா, புகையிலை அடங்கிய வாசனைப் பாக்கு உள்ளிட்ட பொருள்களின் விற்பனைக்கு தடை விதித்தது. அத்துடன், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தயாரிப்பு, விற்பனை ஆகியவற்றுக்கும் தடை விதிக்க அறிவுறுத்தி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் தடையை மீறி குட்கா, பான் மசாலா விற்கப் படுவதாக புகார்கள் வந்தன. இதை அடுத்து, கடந்த ஆண்டு ஜூலையில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சில நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு நிறுவனத்தில் குட்கா, பான் மசாலா விற்பனை தொடர்பான ஆவணங்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்களில், இத்தகைய தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்க, காவல்துறை உயர் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோடிக் கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப் பட்டிருந்தது.

குட்கா தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான மாதவராவ் என்பவர், 2015–2016ஆம் ஆண்டு மட்டும் ஒரு அமைச்சர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வாக்குமூலம் அளித்தார். இந்த லஞ்ச விவகாரம் தொடர்பான ஆவணங்களை, மேல் நடவடிக்கைக்காக தமிழக ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் வருமான வரித்துறையினர் வழங்கினர்.

தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை அனுமதிக்க அமைச்சர், 2 டிஜிபிக்கு ஆகியோருக்கு ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுக்கப் பட்டதாகவும், யாரெல்லாம் இந்த லஞ்சப் பணத்தைப் பெற்றனர் என்ற பட்டியல் வருமான வரி சோதனையில் அம்பலமானதாகவும் நேற்று ஆங்கில செய்தி சேனல் ஒன்றில் செய்தி வெளியானது.

இந்த விவகாரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா தனது துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் தடையை மீறி குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது குறித்து அமைச்சர் ஜே.பி.நட்டா தனது அதிருப்தியை வெளிப்படுத்தினாராம். கூட்டத்தில் பேசிய அதிகாரிகள், தமிழகத்தில் தடையை மீறி குட்கா, பான் மசாலா விற்கப்படுவது குறித்து மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் கேட்டு மத்திய அரசின் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்புவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், குட்கா, பான் மசாலா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மற்ற மாநிலங்களுக்கும் கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

India-US trade relations have the opportunity for Make in India, America First visions

modi trumb handshake - 2026

Encouraging both the US and India to foster environments that grow businesses and advance economic opportunity, Dinesh Paliwal, President, and CEO of Harman International said the US-India relationship is a powerful bond that has produced enormous value and advancements for both countries and the world over – from technology and industry to culture and education.

“By promoting and stimulating closer collaboration, particularly through the increased flow of trade, knowledge and diplomatic relations, we stand to create enormous value for companies, communities, and individuals of both nations,” he said.

“The endeavors led in partnership by Prime Minister Modi, influential organizations like the USIBC and U.S. industry are critical to this endeavor,” Paliwal said. According to Ajay Singh, CEO of Spicejet, India-US trade relations have the opportunity like never before of growing exponentially under Prime Minister Modi’s ‘Make in India’ and President Trump’s ‘America First’ visions.

“The synergy between the two must be explored and exploited towards mutual benefit,” he said.

“SpiceJet is pleased to have announced an order of 205 Boeing 737 Max aircraft worth USD 22 billion, creating or sustaining 132,000 jobs in the US An additional order of 20 airplanes was announced June 19, further adding 13,000 jobs in the US,” he said.

“There is now an opportunity for technologically advanced American companies to ‘Make in India’, including the likes of Boeing, to build commercial airplane parts in India. Please come and leverage the advantages of not only the fastest growing economy in the world but also the fastest growing aviation market in the world,” Singh said.

USIBC president Mukesh Aghi said both governments prioritise their domestic and foreign trade policies. “We congratulate President Trump and Prime Minister Modi on having completed a successful first round of talks and look forward to future engagements,” Aghi said.

India-US partnership has never been more important: American Corporate Leader

modi trumb whitehouse - 2026

Describing the meeting between US President Donald Trump and Prime Minister Narendra Modi as highly successful, a top American corporate leader has said that the partnership between the two largest democracies of the world has never been more important than it is today.

“Both governments are deeply committed to creating greater economic opportunity for their citizens. The partnership between the US and India has never been more important,” ” said John Chambers, executive chairman of Cisco and chairman of the US India Business Council (USIBC). Chambers said in his address to the annual meeting of the top industry advocacy group which represents the voice of US businesses having a footprint in India.

Chambers said “I am incredibly proud of the impact we have had so far in driving economic growth, job creation, innovation and entrepreneurship in both nations, and we look forward to shaping the future of both countries by doubling down on our efforts in the years to come”.

‘ஆசார்யா தனக்குத் தானே விதிச்சுண்டு இருந்த பரீட்சை!”

10649504 925523734144259 6912074781457211637 n - 2026

‘ஆசார்யா தனக்குத் தானே விதிச்சுண்டு இருந்த பரீட்சையை
விடச்சொல்லி நாம அவரைக் கட்டாயப்படுத்தி எவ்வளவு பெரிய
அபகாரம் செஞ்சுட்டோம்’னு புரிஞ்சது–மடத்து அதிகாரிக்கு.

தெய்வம் ஒரு விஷயத்தைத் தீர்மானிச்சு நடத்திண்டு
இருக்குன்னா,அதுக்கு ஆயிரமாயிரம் காரணம் இருக்கும்.அதைத்
தடுக்கவோ,நிறுத்தவோ நமக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
மீறி முயற்சி பண்ணினா,சங்கடம்தான் வரும்னு சொல்லுவா

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
நன்றி-குமுதம் பக்தி-13-07-2017 தேதியிட்ட இதழ் (சுருக்கம்)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

1934-35 ம் வருஷம் நடந்த நிகழ்ச்சி.

சன்யாசிகளுக்கு எதுமேலேயும் ஆசை கூடாதுன்னு சொல்றாளே
தான் அப்படித்தான் இருக்கோமா? ஒரு வேளை தனக்கு வேளை
தவறாம பிட்சாவந்தனம் கிடைச்சுடறதால தனக்கு ஆசை
எதுவும் வரலையோ?இதை எப்படித் தெரிஞ்சுக்கறது.அப்படிங்கற
எண்ணம் ஆசார்யாளுக்கு ஏற்பட்டது.அதுக்கு அவர் வைச்சுண்ட
பரீட்சை என்ன தெரியுமா?சுத்த உபவாசம். அதாவது தீர்த்தம்கூட
குடிக்காம உபவாசம்.

தினமும் தனக்கு பிட்சாவந்தனம் பண்ணிவைக்கற பாரீஷதரைக்
கூப்டு மத்தவா யாருக்கும் சொல்லக்கூடாதுன்னு உத்தரவு
போட்டுட்டு, சொட்டு ஜலம்கூட குடிக்காம உபவாசம்
இருந்துண்டிருந்தார் மகாபெரியவா.

ஆச்சு ரெண்டு வாரம் ஓடியிருக்கும்.மடத்துல முக்கியமான
பொறுப்புல இருந்த ஒருத்தருக்கு பெரியவாளோட தினசரி
நடவடிக்கைகள்ல ஏதோ மாற்றம் இருக்கிற மாதிரி மனசுக்குப்
பட்டிருக்கு. என்னவா இருக்கும்னு யோசிச்ச அவருக்கு,மகா
பெரியவாளோட தேகத்துல லேசா தளர்ச்சி இருக்கிறது
தெரிஞ்சிருக்கு. அப்புறம் மெதுவா மெதுவா விசாரிச்சு,பெரியவா
உபவாசம் இருக்கிறதை பாரீஷதர் மூலமா தெரிஞ்சுண்டுட்டார்.

விச்ராந்தியா இருந்த சமயத்துல பெரியவா முன்னால் நின்றார்.

“என்ன விஷயம்?”-பார்வையாலே கேட்டார் பரமாசார்யா.

“நீங்க உங்களையே வருத்திண்டு எதுக்காகவோ உபவாசம்
இருக்கேள்னு எனக்குத் தெரிஞ்சுடுத்து. நீங்க உடனடியா அந்த
விரதத்தைக்கைவிடணும்.உங்கதேகம் ரொம்ப பலவீனமாகிண்டே
வர்றது!” அப்படீன்னு கெஞ்சினார் அவர்.

(அவர் மனசை சமாதானப்படுத்தறதுக்காக-பாரீஷதரை நாளை
முதல் பிட்சாவந்தனம் என்று சொல்லி -போன பிறகு
பாரீஷதரிடம் நான் சொன்னதை அப்படியே மறந்துடு என்று
உத்தரவு போட்டார் பெரியவா-இந்த விஷயமும் மடத்து
அதிகாரிக்கு தெரிந்துவிட்டது.-சமையலறையைப் பார்த்தபிறகு)

“பெரியவா…நீங்க நாளைக்கே பிட்சாவந்தனம் பண்ணி,
உபவாசத்தை கைவிட்டாகணும்,இல்லைன்னா நான்
மடத்தைவிட்டே போய்டுவேன்!” உரக்கவே சொன்னார் அதிகாரி.

அவரைப் பார்த்து மெல்லிசா ஒரு புன்னகை செஞ்ச ஆசார்யா,
“போயேன், ஏன், நீ இல்லைன்னா மடம் நடக்காதோ?”-பெரியவா.

அப்படிக் கேட்டதும் கொஞ்சம் சுர்ருன்னு ஆன அந்த அதிகாரி;
“மடத்தைவிட்டுப் போறது உங்களுக்கு லக்ஷ்யம் இல்லைதானே,
அப்படின்னா, நான் இந்த லோகத்தைவிட்டே போய்டறேன்!”
கொஞ்சம் ஆவேசமா சொன்னார், அந்த அதிகாரி.

அவரோட ஆவேசத்தப் பார்த்த பரமாசார்யா;
“ஏன் இப்படித் தொந்தரவு பண்ணறே? ஒனக்கு நான் விரதத்தை
பூர்த்தி செய்யணும்.அவ்வளவுதானே…அப்படின்னா நீயே
பிட்சாவந்தனம் பண்ணிவைச்சுடு!” அமைதியாகச் சொன்னார்.

“பிட்சாவந்தனம் செஞ்சுவைக்கறதுன்னு தீர்மானிச்சுட்டே,
அப்புறம் அதை ஏன் நாளைக்குன்னு தள்ளிப்போடணும்.
இன்னிக்கே இப்பவே செஞ்சுடு. வேற யாரையும் கூப்டாம
நீயே போய் இருக்கிறதை எடுத்துண்டு வா!”-பெரியவா

வழக்கமா ராத்திரி பிட்சைக்கு கொஞ்சம் பாலும் பழமும்தான்
எடுத்துப்பார் பெரியவா. உபவாசத்தை பூர்த்தி பண்ண்றதுக்கும்
அதுதான் தோதாக இருக்கும் என்று தீர்மானம் பண்ணிண்ட
அந்த அதிகாரி,அங்கே இருந்த பழக்கடைகள்ல இருந்து ரெண்டு
மூணு எடுத்துண்டு வந்து பெரியவா முன்னால வைத்தார்.

அதையெல்லாம் பார்த்த பரமாசார்யா,”வெறும் கனிவர்க்கத்தை
மட்டும் எடுத்துண்டு வந்தா எப்படி? இன்னிக்கு சுக்ரவார
பூஜைக்குப் பண்ணின சொஜ்ஜி,சுண்டல் பிரசாதமெல்லாம்
இருக்குமே அதையெல்லாம் எடுத்துண்டு வா!” அப்படின்னார்.

யார்கிட்டேயும் இதுவேணும்,அதுவேணும்னு கேட்காத
ஆசார்யா, தன்கிட்டே அப்படிக் கேட்டதும் அவசர அவசரமா
ஓடினவர்,பிரசாதங்களப் பாத்திரத்தோட அப்படியே
கொண்டுவந்து வைச்சார்.

அடுத்து நடந்ததுதான் நம்பவே முடியாத ஆச்சரியம்.
சொக்கநாதர் மீனாட்சியைக் கல்யாணம் செஞ்சுண்டப்போ
குண்டோதரனை வைச்சு ஒரு திருவிளையாடல் நடத்தினாரே,
அப்படி ஒரு லீலையை அங்கே தானே பண்ண ஆரம்பிச்சுட்டார்
ஆசார்யா.

ஆமாம்…. இருந்த கனிவர்க்கம் எல்லாத்தையும் சாப்டு
முடிச்சவர்,பிரசாதங்களையும் துளிவிடாம சப்பிட்டுட்டார்.
அதுமட்டுமில்லாம, “என்ன அவ்வளவுதானா? வயறார
பிட்சாவந்தனம் செஞ்சுவைக்கறதா சொல்லி என்னோட
ஜடராக்னியைத் தூண்டிவிட்டுட்டியே..போ இன்னும் ஏதாவது
இருந்தா எடுத்துண்டு வா!” அப்படின்னார்-பெரியவா.

நடக்கிறது நிஜம்தானா? கனவா?ன்னு நம்ப முடியாம திகைச்சு
நின்ன அவருக்கு, அடுத்ததா என்ன கொண்டு வர்றதுன்னுகூட
தெரியலை. அப்படியே திருதிருன்னு விழிச்சுண்டு நின்னார்.

“என்ன, சாப்டறாப்புல ஒண்ணும் இல்லையா? அப்படின்னா
போய் பால் இருக்கான்னு பார்த்து எடுத்துண்டு வா!”
உத்தரவு வந்தது ஆசார்யாகிட்டேர்ந்து.

ஓடோடிப்போய் கூஜா நிறைய பாலை எடுத்துண்டு வந்து
பெரியவா முன்னால வைச்சார் அவர். அடுத்த க்ஷணம்
அதையும் குடிச்சு முடிச்சுட்டு நிமிர்ந்து பார்த்தார்,பெரியவா.

அந்தப் பார்வைல இருந்த தீட்சண்யத்தைப் பார்த்தோரோ
இல்லையோ அப்படியே பதறிப்போய்விட்டார் அந்த அதிகாரி.
‘ஆசார்யா தனக்குத் தானே விதிச்சுண்டு இருந்த பரீட்சையை
விடச்சொல்லி நாம அவரைக் கட்டாயப்படுத்தி எவ்வளவு பெரிய
அபகாரம் செஞ்சுட்டோம்’னு புரிஞ்சது அவருக்கு. சாஷ்டாங்கமா
பெரியவா திருவடியில விழுந்தார்.

தெய்வம் ஒரு விஷயத்தைத் தீர்மானிச்சு நடத்திண்டு
இருக்குன்னா, அதுக்கு ஆயிரமாயிரம் காரணம் இருக்கும்.அதைத்
தடுக்கவோ,நிறுத்தவோ நமக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
மீறி முயற்சி பண்ணினா,சங்கடம்தான் வரும்னு சொல்லுவா.

இன்றைய முக்கிய செய்திகள்

flashnews - 2026

ரயில் டிக்கெட்டில் தமிழ் மொழியும் இடம்பெறும் : இந்திய ரயில்வே வாரிய கூடத்தில் முடிவு.

குட்கா விறபனைக்கு ரூ.40 கோடி லஞ்சம் வாங்கியதாக தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. குட்கா விற்பனைக்கு லஞ்சம் வாங்கிய ஆதாரங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் மணல் விற்பனையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். கட்டுமான பணிக்கான மணல் விற்பனை செயலியை முதல்வர் வெளியிட்டார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுக்க காரணம் என்ன? , காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என உயரதிகாரிகளிடம் முறையிட்டீர்களா? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் புகார் குறித்து விளக்கம் தர மனுதாரருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திராவில் தடுப்பணை இல்லை மேல்மட்ட பாலம் மட்டுமே கட்டப்படுகிறது; பாலத்தால் தமிழகத்திற்கு வரக்கூடிய தண்ணீருக்கு பாதிப்பில்லை : தமிழக முதல்வர் பழனிசாமி.

அமெரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.

பால் கலப்படம் குறித்து நான் கூறியதை சிலர் கேலி செய்து வருகின்றனர். ஆவின் பால் பொருட்களில் கலப்படம் இல்லை என்பது ஆய்வில் உறுதி : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் சிறப்பு : நெதர்லாந்தில் மோடி பேச்சு.

திருப்பதி திருமலையில் திவ்ய தரிசன டிக்கெட்டுக்கு வழங்கப்படும் லட்டு 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் லட்டு வழங்கப்படாது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

டெல்லி: ரேஷன் பொருட்களின் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஓராண்டுக்கு பழைய விலையே தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக கோரிக்கை – அதே கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டு சட்டசபையிலிருந்து வெளிநடப்பு.

பால் பொருட்களில் ரசாயனம் கலக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறிய புகாருக்கு நெஸ்லே நிறுவனம் மறுப்பு.

காமெடி நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மேலும் ஒரு மோசடி வழக்கில் கைது.

முரசொலி பவளவிழாவில் பங்கேற்க அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் அழைப்பு.

காவல்துறையில் பணிபுரிவோர் தங்கள் குறைகளை tnpolicewelfare@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம் – காவல்துறை தலைமை இயக்குநர் வேண்டுகோள்.

சிலை, கஞ்சா கடத்தலில் போலீஸ் அதிகாரிகள் சம்மந்தப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. கடத்தலில் சம்மந்தப்பட்டுள்ள அதிகாரிகள் மீது முழுமையான விசாரணை வேண்டும் : தமிழிசை.

GST நடைமுறைபடி புதிய வரியை ஜூலை 1 முதல் திரையரங்குகளில் அமல்படுத்த உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் தெரிவித்தோம் – அபிராமி ராமநாதன்.

கலப்பட பால் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் : பொன்.ராதாகிருஷ்ணன்.

ஸ்டாலின் ஏரிகளை தூர்வாரும் பணியை தொடங்கும் முன்பே அரசு தொடங்கியது. ரூ.300 கோடி செலவில் 2,025 ஏரிகள் தூர்வாரப்படும் : தமிழக முதலமைச்சர் பழனிசாமி.

ஜூலை 1 முதல் பான் கார்டுக்கு புதிதாக விண்ணப்பிப்போர் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் : மத்திய அரசு.

ஜூலை 1ஆம் தேதி பாஜக ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் சென்னை வருகை.

செய்யது பீடி நிறுவனத்திற்கு சொந்தமான தமிழகத்தின் 40 இடங்களில் வருமானவரி சோதனை.

ஜம்மு – காஷ்மீர் : அமர்நாத் புனித யாத்திரை தொடக்கம்-போலீஸ், சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப் வீரர்கள் சுமார் 40,000பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் : ஒருவந்தூரில் உள்ள அரசு மணல் குவாரியை மூடக்கோரி காவிரி மீட்பு குழு சார்பில் இன்று கடையடைப்பு & உண்ணாவிரதம்.

சென்னை அடையாறு இல்லத்தில் டிடிவி தினகரனுடன் எம்பி.பிரபாகரன் சந்திப்பு.

குடியரசுத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீராகுமார் வேட்புமனு தாக்கல்.

ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்தின் மாற்று வேட்பாளராக வெங்கய்ய நாயுடு மனுதாக்கல்.

முதுநிலை மருத்துவ படிப்பு வழக்கில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஜூலை 5 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு.

எதிர்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளர் மீரா குமார் வரும் ஜூலை1 ம் தேதி சென்னை வருகை, ஸ்டாலினை நேரில் சந்திக்கிறார்.

மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உட்பட 3 பேரின் நீதிமன்ற காவல் ஜூலை 12 வரை நீட்டிப்பு.

சென்டாக்கில் நடந்த முறைகேடுகள் பற்றிய ஆதாரங்களை மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஜே.பி.நட்டாவிடம் அளித்துள்ளேன் : கிரண்பேடி.

நெய்வேலி அருகே ஏரியை தூர்வாருவதில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக 3 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை : சேர்வலாறு அணை ஒரே நாளில் 13 அடி உயர்வு.

தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபாகிர்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் தனுஷ். இதன் 2வது கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அவர் பெல்ஜியத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஆகஸ்ட் முதல் வாரம் வரை இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்கும் அவர், அதன்பின் சென்னை திரும்புவார்.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலை நிர்வகிக்க ஓய்வு பெற்ற​ நீதிபதி நியமனம் :சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தலைமைச்செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

கொல்கத்தா : நாடாளுமன்றத்தில் 30 ம் தேதி நள்ளிரவில் நடக்கும் ஜி.எஸ்.டி மசோதா அறிமுக கூட்டத்தை புறக்கணிப்போம் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

குட்கா விற்க அனுமதிக்க அமைச்சர், 2 டிஜிபிக்கு லஞ்சம்

income tax raid - 2026

தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை அனுமதிக்க அமைச்சர், 2 டிஜிபிக்கு லஞ்சம்:
ரூ.40 கோடி வாங்கியவர்கள் பட்டியல் வருமான வரி சோதனையில் அம்பலம்

சென்னை:

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ‘குட்கா’ போதைப்பொருளை விற்பனைக்கு
அனுமதிக்க சுகாதாரத்துறை அமைச்சர், 2 டிஜிபிக்கள் மற்றும் போலீஸ் உயர்
அதிகாரிகள், மாநகராட்சி, உணவுத்துறை, மத்திய கலால் துறையில் உள்ள உயர்
அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி லஞ்சம் கொடுத்த ஆதாரங்கள் வருமான வரித்துறையிடம்
சிக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்தில்
போதைப் பொருளான குட்கா விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. குட்கா விற்பனைக்கு
அமைச்சர் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக வருமான வரித்துறையினர்
கைப்பற்றிய ஆவணங்களை ஆங்கில தொலைக்காட்சி நேற்று வெளியிட்டது. இது தமிழக
அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கில தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தி விவரம் வருமாறு:

சென்னை மாதவரத்தில் கடந்த 2011 முதல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா
என்ற போதைப் பொருள் விற்பனை செய்யும் நிறுவனம் இயங்கி வந்தது. தமிழகத்தில்
உயர் பதவியில் இருந்தவரின் மருமகன் மற்றும் அவரது நண்பர்கள் இந்த நிறுவனத்தை
நடத்தி வந்தனர். இதனால் அதிகாரிகள் அங்கு சென்று சோதனையிடவில்லை. அதிகாரிகள்
துணையுடன் இந்த நிறுவனம் மாநிலத்தின் பெரும் பகுதிக்கு குட்காவை விற்பனை
செய்து வந்தது. இந்த நிறுவனத்தால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு
ஏற்படுவதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றன.இதனால், மாதவரத்தில் உள்ள
குட்கா நிறுவன குடோனில் கடந்த ஆண்டு ஜூலை 8ம் தேதி வருமான வரித்துறையினர்
அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நிறுவனத்தில் எந்த ஆவணங்களும் சிக்கவில்லை.
அலுவலகத்தில் யோகேஸ்வரி என்ற கணக்காளருக்குத்தான் அனைத்து விவரங்களும்
தெரியும் என்று கூறப்பட்டது. இதனால் அவரது வீட்டில் வருமான வரித்துறையினர்
சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதிகாரிகளுக்கு
லஞ்சம் கொடுத்த தகவல், தேதி வாரியாக கொடுத்த பணம், வாங்கிக் கொண்டு வந்து
கொடுத்த ஊழியர் பற்றிய ஆதாரங்கள் அதில் தெளிவாக இருந்தன. ஆனால் ஒவ்வொரு
ஆதாரமும் ரகசிய குறியீடுகள் மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.

மேலும் அதிகாரிகளுக்கு கொடுத்த லஞ்சத்தை பொது செலவீனம் என்று குறிப்பிட்டிருந்தனர்.
குறிப்பாக 2014ம் ஆண்டு நவம்பர் முதல் 2016ம் ஆண்டு ஜூலை வரை லஞ்சம் கொடுக்கப்பட்ட கணக்குகள் சிக்கின. இந்த ஆவணங்களின் அடிப்படையில் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான ஏ.வி.மாதவராவ் என்பவரிடம் மறுநாள் வருமான வரித்துறை உதவி இயக்குநர் கண்ணன் நாராயணன் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில், கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் உள்ள ரகசிய குறியீடுகள் குறித்தும், குறியீடுகளில் உள்ள அதிகாரிகள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் மாதவராவ் குறிப்பிடும்போது, தமிழக அரசு குட்கா விற்பனைக்கு தடை
செய்ததால், அந்த தொழிலை நாங்கள் நடத்த கவுன்சிலர்கள் முதல் அமைச்சர் வரையும்,
உதவி கமிஷனர் முதல் டிஜிபி வரையும் லஞ்சம் கொடுத்தோம். ஆவணத்தில் எச்.எம்
என்று குறிப்பிடப்பட்டது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை குறிக்கும்.
அவருக்கு மாதம் ரூ.14 லட்சத்தை, எங்கள் நிறுவன ஊழியர் ராஜேந்திரன் மூலம்
கொடுத்து வந்தோம். மத்திய கலால் துறை அதிகாரிகளுக்கு எங்கள் ஊழியர்
நந்தகுமாரும், நானும் நேரடியாக சென்று மாதம் ரூ.2 லட்சம் வீதம் லஞ்சம்
கொடுத்தோம். செங்குன்றம் உதவி கமிஷனருக்கு மாதம் ரூ.10 லட்சம் கொடுத்தோம்.
குடோன் இருந்த பகுதியில் உள்ள கவுன்சிலர்களுக்கு மாதம் ரூ.14 லட்சம், உணவு
பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு மாதம் ரூ.7 லட்சம் கொடுத்தோம், சென்னையில்
போலீஸ் கமிஷனராக இருந்தவருக்கு மாதம் ரூ.20 லட்சம் கொடுத்து வந்தோம். அதில்
ஒரு கமிஷனர் மொத்தம் ரூ.1.4 கோடி வாங்கியுள்ளார்.

மற்றொரு கமிஷனர் ரூ.75 லட்சம் வரை வாங்கியுள்ளார். இந்தப் பணத்தை எங்கள்
ஊழியர் ராஜேந்திரன்தான் கொடுத்து வந்தார் என்று தனது வாக்குமூலத்தில் மாதவராவ்
குறிப்பிட்டார்.

வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களில் குறிப்பிட்ட
காலகட்டத்தில் சென்னை நகர போலீஸ் கமிஷனராக டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோர்
இருந்தனர். அவர்கள் பெயரை ஆவணத்தில் குறிப்பிடாமல், சி.பி.(சென்னை போலீஸ்
கமிஷனர்) என்று குறிப்பிட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆவணத்தின்படி
டி.கே.ராஜேந்திரன் ரூ.1.4 கோடியும், ஜார்ஜ் ரூ.75 லட்சமும் வாங்கியதாக
ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க சென்ற ஊழியர்,
நிறுவனத்தில் அதற்கான வவுச்சரும் போட்டுள்ளார். இந்த வவுச்சர்களும்
கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து மாதவராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,
மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகளுக்கு மாதம் ரூ.3.5 லட்சம், வடசென்னை
இணை கமிஷனராக இருந்த அதிகாரிக்கு மாதம் ரூ.5 லட்சம் லஞ்சம் கொடுத்தோம் என்று
கூறியுள்ளார்.

இந்த குட்கா நிறுவனத்தில் லஞ்சம் வாங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் 2
டிஜிபி மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வருமான வரித்துறை
அதிகாரிகள், தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் கடந்த 6
மாதமாக தமிழக அரசு அந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்
வருமான வரித்துறையே குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு
சம்மன் அனுப்பி விசாரிப்பதா அல்லது இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தக்
கோருவதா என்று அதிகாரிகள் தற்போது தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இது
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளிக்கு சிறப்பு போனஸாக லஞ்சம்: அமைச்சர் முதல் 2 டிஜிபிக்கள், இணை
கமிஷனர், மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை,
மத்திய கலால்துறை, மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஒவ்வொரு மாதமும் லஞ்சம்
கொடுக்கப்பட்டு வந்தது. தீபாவளி நேரத்தில் அந்த மாத லஞ்சம் தவிர, ஒரு மாத
லஞ்சத்தை போனஸாக கொடுத்து அசத்தியுள்ளனர். அதில் முன்னாள் போலீஸ் கமிஷனருக்கு கிறிஸ்துமஸ் செலவுக்காக ரூ.15 லட்சம் லஞ்சமாக கொடுத்து அதிர்ச்சி அளித்துள்ள ஆவணங்களும் வருமான வரித்துறையில் சிக்கியுள்ளன.

உங்கள் பிரதமர் உங்கள் பைகளில்: நெதர்லாந்து இந்திய வம்சாவளியினரிடம் மோடி!

Modi in usa - 2026

ஆம்ஸ்டர்டாம்:

உங்கள் பிரதமர் உங்கள் பைகளில் இருப்பார் என்று நெதர்லாந்து இந்திய வம்சாவளியினரிடம் மோடி கூறினார்.

பிரதமர் மோடி தனது 2 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு ஐரோப்பிய நாடான நெதர்லாந்து வந்தார். நேற்று அவர் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரட்டேயை ஆம்ஸ்டர்டாம் நகரில் சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே சமூக பாதுகாப்பு, நீர் மற்றும் கலாசார ஒத்துழைப்பு என 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந்தச் சந்திப்பின்போது பருவநிலை மாற்ற ஒப்பந்தம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாடு ஆகியவற்றில் இருநாடுகளும் ஒத்துழைத்து செயல்படுவதை உறுதி செய்தனர்.

மார்க் ரட்டேயை சந்தித்த பிரதமர் மோடி, “இந்தியாவின் இயற்கையான கூட்டாளியாக நெதர்லாந்து திகழ்கிறது. இரு நாடுகள் இடையேயான உறவு பல நூற்றாண்டுகள் பழமையானது. அது மிகவும் வலிமையாக உள்ளது. ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு பிராந்திய நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பெற நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. உங்களது ஆதரவு இல்லையென்றால், இந்த அமைப்பில் இந்தியாவால் இடம் பெற்று இருக்க முடியாது“ என்று கூறினார்.

இதையடுத்து, நெதர்லாந்தில் வாழும் இந்தியர்களை அவர் சந்தித்தார். இந்தச் சந்திப்பில், “ஐரோப்பாவில் இங்கிலாந்துக்கு அடுத்து நெதர்லாந்தில்தான் அதிகமான அளவில் இந்தியர்கள் வாழ்கின்றனர். இங்கு வாழும் இந்தியர்கள், இந்தியாவின் வளர்ச்சியிலும் பங்குகொள்ள வேண்டும். நீங்கள் ‘நரேந்திர மோடி’ செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். உங்கள் பிரதமர் உங்கள் பைகளில் இருப்பார்” என்று கூறினார் மோடி.