Home Blog Page 5626

கோவாவில் பிளாஸ்டிக் பை தடை: மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம்

manohar parrikar - 2026

பனாஜி:

கோவாவில் பிளாஸ்டிக் பை பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.  இந்தத் தடையை மீறுவோருக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவா சுற்றுலாத் தலங்களில் முக்கியமானதாகத் திகழ்கிறது. உலகம் முழுவதும் இருந்து இங்கே பயணிகள் வருகின்றனர். எனவே, கோவாவை தூய்மையாக வைத்திருக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என முதல்வர் மனோகர் பாரிக்கர் அறிவித்தார். கடைகளுக்கு செல்லும் மக்கள் துணிப் பைகளை பயன்படுத்தும் பழக்கத்தினை கடைப்பிடிக்க வேண்டும் என அவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

பொதுமக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வார்களெனில் மாநில அரசால் திறம்பட செயல்பட முடியாது. அரசு தூய்மையான நகரங்களை வழங்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்.  எனினும், சாலையில் குப்பைகளை நாம் தூக்கி எறிகிறோம். நெடுஞ்சாலைகளில் குப்பைகளை சேகரிப்பதற்கு பணிமனைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.  பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என நான் கேட்டு கொள்கிறேன்.
பொதுமக்கள், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.  வரும் ஜூலை மாதத்தில் இருந்து யாரேனும் பிளாஸ்டிக் பைகள் விற்பது அல்லது வாங்குவது தெரிய வந்தால் அவர்கள் அபராதம் கட்ட வேண்டும். அது சிறிய தொகையாக இருக்காது.  பெருந்தொகையாக இருக்கும்.  அபராதத் தொகை ரூ.5 ஆயிரம் வரை இருக்கும். தொடக்கத்தில் அபராத தொகையில் தளர்வு இருந்தாலும், பின்னர் தடையை கடுமையாக அமல்படுத்த இருக்கிறோம்.
பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டம் நாடு முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது.  இத்திட்டத்தினை தொடக்கத்தில் சிலர் கிண்டல் செய்தனர்.  ஆனால், பொதுமக்கள் தற்பொழுது இதுபற்றி பேசி வருவதுடன், இத்திட்டத்திற்காக பணியாற்றியும் முன் வருகிறார்கள் என அவர் கூறினார்.

மாடு விற்பனை மீதான மத்திய அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை!

madurai high court - 2026

மதுரை:
உச்ச நீதிமன்ற வழிகாட்டலில் வரன்முறையற்ற வகையில் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதைத் தடை செய்யும் மத்திய அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மத்திய அரசு, விவசாயப் பணிகள் அல்லாத, இறைச்சி நோக்கத்தில் மாடுகளை, கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்வதை வரன்முறைப் படுத்தும் புதிய உத்தரவை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த செல்வகோமதி என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது:-
கடந்த 26-ந்தேதி மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகள் விற்க தடை விதித்தது. மேலும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இது சட்டவிரோதம். இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும். உணவு என்பது தனி மனித விருப்பமாகும். இதில் அரசு தலையிட உரிமை இல்லை. எனவே மாட்டு இறைச்சி மீதான மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் முரளிதரன், கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவுக்கு 4 வார இடைக்கால தடை விதித்தது. மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் இவ்விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்றும் அந்த அமர்வு உத்தரவிட்டது.

சென்னை ஐஐடி.,யில் மாட்டிறைச்சி விருந்து நடத்தியவர்களுக்கு ‘தர்ம அடி’!

IIT Madras PhD scholar who participated in beef fest beaten - 2026

சென்னை:
சென்னை ஐஐடி., வளாகத்தில் மாட்டிறைச்சி விருந்து நடத்தி, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு சக மாணவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் தர்ம அடி கொடுத்தனர்.

கால்நடை வணிக விதிமுறையில் மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை மாற்றம் கொண்டு வந்தது. அதன்படி இறைச்சி மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்புக்காக மாடு, கன்றுக் குட்டி, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்க மத்திய அரசு தடை விதித்தது. மேலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து சில இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. குறிப்பாக இடதுசாரிகள் அதிகமுள்ள கேரளாவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன், காங்கிரஸார் சிலரும் கைகோர்த்தனர். அவர்கள் மாட்டிறைச்சித் திருவிழா நடத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

கேரளத்தில் நிகழ்ந்ததைப் பார்த்து, சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் கேரளத்தைச் சேர்ந்த மாணவர்கள் தூண்டுதலில், ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி உண்ணும் திருவிழாவை நடத்தினர். இதில், 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் மாட்டிறைச்சி உணவு வகைகளை ஹோட்டலில் வாங்கி வந்து வளாகத்தின் உள்ளேயே இணைந்து உண்டனராம். இதை மாட்டிறைச்சித் திருவிழா என்ற பெயரில் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாட்டிறைச்சித் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்த கேரளத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவர் சூரஜ்க்கு சக மாணவர்கள் தர்ம அடி கொடுத்தனர். ஹால்டல் கேண்டீனில் மதிய உணவு வேளையின் போது சுமார் 7 மாணவர்கள் சேர்ந்து சூரஜ் மீது தாக்குதல் நடத்தினராம். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வலதுசாரி சிந்தனை கொண்ட மாணவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் சூரஜின் வலது கண் கடுமையாக காயம் அடைந்துள்ளது. உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்தத் தாக்குதல் குறித்து டீன்-இடம் மாட்டிறைச்சித் திருவிழா நிகழ்ச்சி நடத்திய மாணவர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. மாட்டிறைச்சி உண்ணுவது உரிமை எனப் போராடுபவர்களுக்கு இருந்தால், மாட்டை புனிதமாகக் கருதி அவற்றைப் பாதுகாப்பவர்களுக்கும் அதே உரிமை இருக்கிறது என்று அங்கிருந்தவர்கள் கோஷம் இட்டனர்.

திருச்சி, நெல்லை கலெக்டர்கள் உள்பட 22 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு!

images 30 - 2026

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த மாவட்ட
கலெக்டர்கள், துணை ஆணையர்கள் உள்பட 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
செய்யப்பட்டுள்ளனர்.

பணியிட மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் விவரம்:

மீன்வளத் துறை இயக்குநராக தண்டபாணி நியமனம்.

நகர மற்றும் ஊரக திட்டத்துறை ஆணையராக பீலா ராஜேஷ் நியமனம்.

திருச்சி மாவட்ட ஆட்சியராக ராஜா மணி ஐஏஎஸ் நியமனம்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பழனிசாமி ஐஏஎஸ் நியமனம்

நாகை ஆட்சியராக சுரேஷ் குமார் ஐஏஎஸ் நியமனம்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரி நியமனம்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக வெங்கடேஷ்நியமனம்.

போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளராக டேவிதார் நியமனம்.

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரியாக இருந்த பிரவீன் நாயர், தமிழ்நாடு
மகளிர் மேம்பாட்டுக்குழு மேலாண் இயக்குனராக மாற்றம்.

அரியலூர் ஆட்சியர் திரு.சரவணவேல்ராஜ் பள்ளி கல்வி இணை இயக்குநராக பணிமாற்றம்
மாற்றம்.

நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த கருணாகரன் வேளாண்துறை கூடுதல் செயலராக
நியமிக்கப்பட்டுள்ளார்.

அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனராக நந்தகுமார் நியமனம்குடிநீர் வாரிய
மேலாண்மை இயக்குனராக மகேஸ்வரன் நியமனம்

கூடுதல் தலைமை செயலர் அந்தஸ்தில் நில நிர்வாக ஆணையராக மோகன் பியாரே
நியமிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை செயலராக வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி
நியமிக்கப்பட்டுள்ளார்.

கூட்டுறவு சங்கங்கள் கூடுதல் பதிவாளராக ஜி.கே.அருண் சுந்தர் தயாளன்
நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதித்துறை கூடுதல் செயலராக ஆர்.அனந்தகுமாரை தமிழக அரசு நியமித்துள்ளது.

நில அளவை மற்றும் தீர்வுத்துறை இயக்குனராக எம்.ரவிக்குமாரை அரசு
நியமித்துள்ளது.

சர்வ சிஷ்ய அபியான் திட்ட இயக்குனராக கே.நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிலத்துறை கூடுதல் செயலராக பூஜா குல்கர்னியை தமிழக அரசு நியமித்துள்ளது.

“வாழ்ந்து கெட்டவருக்கு வாழ்வளித்த மகான்”

10406745 859208287442471 99817598003990377 n 1 - 2026

*​”வாழ்ந்து கெட்டவருக்கு வாழ்வளித்த மகான்”(*சொம்பை அலம்பவோ, தீர்த்தம்
(தண்ணீர்) நிரப்பவோ இல்லாமல் வைத்திருந்த தனவந்தருக்கு பல்லக்கில் வைத்திருந்த
குங்குமப் பிரசாதத்தை ஒரு பிடி அள்ளி எடுத்த பெரியவாள், தனவந்தரின் வெறும்
வெள்ளிச் சொம்பினுள் போட்டு, அவரிடம் வழங்கி, ”*க்ஷேமமா இரு*” என்று
ஆசிர்வதித்த சம்பவம்)

*நன்றி-பால ஹனுமான்.-(இது ஒரு மறுபதிவு)கு*ம்பகோணத்துக்கு அருகில் உள்ளது
திப்பிராஜபுரம். அழகிய இந்த கிராமத்தின் சிறப்பு அக்ரஹாரம்.+ வேத பாடசாலையும்
அமைந்துள்ள இந்த கிராமத்தில், வேத விற்பன்னர்கள் மற்றும் சாஸ்திர பண்டிதர்கள்
ஆகியோர் வாழ்ந்தனர்.

கட்டுக் குடுமியும் கழுத்தில் ருத்திராட்சமுமாக மாணவச் சிறுவர்கள் பலர்
இங்கும் அங்குமாக ஓடியாடி விளையாடுவதே அத்தனை அழகு! அது மட்டுமா? அக்ரஹார
வீட்டு வாசல்களில்… காலை- மாலை இரண்டு வேளையும் காவிக் கோலங்கள்
நிறைந்திருக்கும். அக்ரஹாரப் பெண்கள், தீபமேற்றி ஸ்லோகங்களைப் பாடுவர். இதே
போல் திருவிசநல்லூர், திருவிடைமருதூர், கோவிந்தபுரம் ஆகியவையும் அழகு தவழும்
கிராமங்கள். காஞ்சி மகா பெரியவாள் இந்த கிராமங்களை பெரிதும் நேசித்தார்.

ஒருமுறை, திப்பிராஜபுரத்தில் முகாமிட்டிருந்தார் பெரியவாள். இந்த கிராமத்து
மக்கள், மகா பெரியவாளிடம் மிகுந்த பக்தி வைத்திருந்தனர். ஒரு நாள்… ‘*ஜய ஜய
சங்கர ஹர ஹர சங்கர*’ எனும் கோஷம் முழங்க, மேனாவில் (பல்லக்கு) வீதியுலா
வந்தார் காஞ்சி பெரியவாள். வழிநெடுக வாழைமரமும் மாவிலைத் தோரணங்களும்
கட்டப்பட்டிருந்தன. வீடுகள் தோறும் வாயிலில் கோலமிட்டு, தீபமேற்றி
வைத்திருந்தனர்.

ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மேனா நின்றது. அந்தணர்கள் வேத மந்திரங்களை
முழங்கினர்; பூர்ண கும்பத்தைத் தொட்டு ஆசிர்வதித்தார் பெரியவாள். அனைவரும்
அவரை நமஸ்கரித்தனர்.

மெள்ள நகர்ந்து கொண்டிருந்தது மேனா. இந்த நிலையில்… தனவந்தர் ஒருவர், தனது
வீட்டில் பரபரப்பும் பதட்டமுமாக இருந்தார். ‘*பெரியவாளை தரிசிக்க வேண்டும்*’
என்று எண்ணி, பூர்ண கும்பத்துக்காக பெட்டிக்குள் வைத்திருந்த வெள்ளிச் சொம்பை
எடுத்துக் கையில் வைத்துக் கொண்டாலும் ‘ஊரே கூடியிருக்கும் இந்த வேளையில்
வாசலுக்கு வந்து பெரியவாளை தரிசிக்க வேண்டுமா?’ என்று சிந்தித்தபடி தவித்து
மருகினார்.

பதறிப் போன தனவந்தர், கையில் வைத்திருந்த வெள்ளிச் சொம்புடன், ஓடி வந்தார்.
பெரியவாளை நெருங்கி பவ்யமாக நின்றார். அவரின் கையிலிருந்த சொம்பை ‘வெடுக்’கென
பிடுங்கினார் பெரியவாள்.அவரது வீட்டு வாசலின் முன் நின்றது மேனா. வீட்டுக்குள்
இருந்து தயக்கத்துடன் எட்டிப் பார்த்த தனவந்தரைப் பார்த்து, ‘*வா இங்கே…*’
என்பது போல் சைகை காட்டினார் பெரியவாள்!

தனவந்தருக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘இந்த சொம்பை அலம்பவோ, தீர்த்தம்
(தண்ணீர்) நிரப்பவோ இல்லையே…’ எனும் குற்ற உணர்ச்சியில் கூனிக் குறுகி தலை
கவிழ்ந்து நின்றார் தனவந்தர்.

பல்லக்கில் வைத்திருந்த குங்குமப் பிரசாதத்தை ஒரு பிடி அள்ளி எடுத்த
பெரியவாள், தனவந்தரின் வெறும் வெள்ளிச் சொம்பினுள் போட்டு, அவரிடம்
வழங்கி, ”*க்ஷேமமா
இரு*” என்று ஆசிர்வதித்தார்.

உடனே பெரியவாளின் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தார் தனவந்தர்.
அவரால் பேசவே முடியவில்லை. பொலபொலவென கண்ணில் நீர் பெருகிற்று. சில
நிமிடங்களுக்குப் பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட தனவந்தர், ‘*குரு மகா
தெய்வமே…*’ என்று பேச முற்பட்டார். ஆனால், மெல்லிய புன்னகையுடன், ‘போகலாம்’
என்பது போல் சைகை காட்டினார் மகா பெரியவாள். மேனா நகர்ந்தது.

ஊர் மக்களுக்கு ஆச்சரியம்! ‘அட… பக்தி சிரத்தையுடன் எல்லோரும் பூரணகும்பம்
அளித்தபோது, அவற்றைத் தொட்டு மட்டுமே ஆசீர்வதித்த பெரியவாள், இந்த
தனவந்தருக்கு மட்டும் குங்குமம் கொடுத்து ஆசீர்வதிக்கிறாரே? பரவாயில்லை…
தனவந்தர் அதிர்ஷ்டசாலிதான்’ என்று பேசிக் கொண்டனர்.

உண்மைதான்! சீரும் சிறப்புமாக வாழ்ந்த தனவந்தர், சமீபத்தில் நொடித்துப் போய்
விட… இதையடுத்து வெளியே வருவதும் இல்லை; எவரையும் சந்திப்பதையும் தவிர்த்து
வந்தார். அவமானத்தால் வீட்டிலேயே அடை பட்டுக் கிடந்தார். அதனால்தான் பெரியவாள்
வீதியுலா வந்தபோதும் வெளியே வர தயங்கினார் தனவந்தர்.

இதை உணராமலா இருப்பார் பெரியவாள்? அந்த தனவந்தர் வாழ்ந்து கெட்டவர் என்பதை
அறிந்தவர், வீதியுலாவின் போது அவரை அழைத்து, அவர் கையில் இருந்த சொம்பில்
குங்குமத்தையும் வழங்கி அருள் புரிந்தார்.

சில மாதங்களில்… தனவந்தரின் குடும்பம் மெள்ள முன்னேறியது. படிப்படியாக செல்வம்
சேர… மீண்டும் தழைத்தோங்கியது தனவந்தரின் குடும்பம். பழைய நிலையை விட இன்னும்
பல படி முன்னேறினார்!

இதையறிந்த திப்பிராஜபுரம் மக்களுக்கு பெரியவாள் மீது இருந்த பக்தியும் அன்பும்
பல மடங்கு அதிகரித்தது.

வெற்றி தரும் ஹோரை ரகசியம்!

astrology main - 2026

ஹோரை அறிந்து நடப்பவனை . யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு. அப்படிப் பட்ட ஒரு மகத்தான விஷயம்
பற்றி நான் பதிகிறேன். இது உங்களுக்கு அளப்பரிய பலன்கள் தரும்
ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஹோரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஹோரை கிடையாது.

பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஹோரைகளும் உருவாக்கப்பட்டன. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஹோரைகளை கணக்கிட்டுள்ளனர்.

சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு வானவியல் அறிஞர்கள் ஹோரைகளை உருவாக்கினர். இதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஹோரையை சூரியனுக்கு அளித்தனர்.அதற்கு அடுத்து சுக்கிரன் , அதற்கு அடுத்து புதன் ஓரை , 4வது இடம் சந்திரனுக்கும், 5வது இடம் சனிக்கும், 6வது இடம் குருவுக்கும், 7வது இடம் செவ்வாய்க்கும் வழங்கினர்.

இதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர் வீச்சுதான் காரணம்.
இவற்றில் சுக்கிரன் ஹோரை, புதன் ஹோரை, குரு ஹோரை ஆகிய மூன்றும் நல்ல ஹோரைகள் எனப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றாலும் – இந்த ஹோரைகளில் துவங்கலாம்.

ஹோரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதன் முதல் ஹோரையாக கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஹோரை.

இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஹோரை, 8-9 மணி வரை புதன் ஹோரை, 9-10 வரை சந்திரன் ஹோரை, 10-11 வரை சனி ஹோரை, 11-12 மணி வரை குரு ஹோரை, 12-1 மணி வரை செவ்வாய் ஹோரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஹோரை துவங்கும்.

இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஹோரை, புதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஹோரை, அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஹோரை கணக்கிடப்படும்.

பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஹோரைகள் கணக்கிடப்படுகின்றன.6 – 1- 8 – 3
இந்த வரிசையை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். காலை 6 மணிக்கு வரும் ஹோரை , திரும்பவும் மதியம் 1 மணிக்கும், இரவு 8 மணிக்கும் , பின்பு அதிகாலை 3 மணிக்கும் வரும்.

*சூரிய ஹோரை

சூரியன் ஹோரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும். உங்கள் மேலதிகாரிகளை சந்தித்தல், போன்ற பெருந்தலைகளை சந்திக்கும் காரியம் செய்யலாம்.

இந்த நேரத்தில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன் பாடுகளையோ செய்வது நல்லதல்ல, சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஹோரை ஏற்றதல்ல. இந்த ஹோரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.இந்த நேரத்தில் உயில் சாசனம் எழுதலாம்.

சுக்கிர ஹோரை :

சகல சுப காரியங்களுக்கு வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும் ஏற்றது. குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட சகல காரியங்களிலும் நன்மை ஏற்படும். விவசாய்த்திற்கும், பயணங்கள் செய்யும் நல்லது. இந்த ஹோரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாள்களில் கிடைக்கும்.

புதன் ஹோரை :

கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம்.இந்த ஹோரையில் காணாமல் போகும் பொருள் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும்.

சந்திர ஹோரை :

வளர்பிறை காலத்தில் சந்திரன் ஹோரையும் நல்ல ஹோரையாகவே கருதப்படுகிறது.

இந்த ஹோரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல் ஆகியற்றைச் செய்யலாம். இந்த ஹோரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம்.குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்களையும் மிகவும் ஏற்றது. வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது.பிறரைச் சந்தித்துப் பேசவும் செய்யலாம். இந்த ஹோரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.

சனி ஹோரை :

இதில் சனி ஓரை ஒரு சில காரியங்களுக்கு நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது.
உதாரணமாக சனி ஹோரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, பாத யாத்திரை , நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது.

குரு ஹோரை :

எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது.எதுவும் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியமாக இருக்கக்கூடாது. கப்பற்பயணம் செய்வதற்கு இந்த ஹோரை சிலாக்கிய்மானது அல்ல. இந்த நேரத்தில் காணாமல் போனபொருள்களைப் பற்றி வெளியில் சொன்னாலே போதும் . உடனே கிடைத்து விடும்.

செவ்வாய் ஹோரை :

செவ்வாய் ஹோரை நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஹோரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும். செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம் . அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய். எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷய்ங்களையோ, சண்டை சச்சரவுக்கான் விஷயங்களையோ பற்றிய் பேசலாம். இருப்பினும் இந்த ஓரையை தவிர்ப்பது நல்லது. இந்த ஓரை நேரத்தில் பொருள்கள் காணாமல் போனால் உடனே முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும். தாமதித்தால் கிடைக்காது.

ஒரு சிறந்த ஜோதிடராக நீங்கள் ஓரை சம்பந்தமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயமும் உண்டு. நவ கிரகங்களில் – ஒன்றுக்கொன்று கடும் பகை கிரகங்களும் உண்டு. அல்லவா ? அதையும் நீங்கள் மனதில் கொண்டு , ஹோரை தேர்ந்தெடுங்கள். என்னதான் குரு ஹோரை சுப ஹோரை என்றாலும், வெள்ளிக் கிழமை – குரு ஹோரை தேர்ந்தெடுக்க வேண்டாம்.
சரி, நிஜமாகவே இந்த ஹோரையின் செயல்பாடு அறிய – நீங்களே ஒரு சில விஷயங்களில் , துவங்கிப் பாருங்கள். வியந்து போவீர்கள். மனித வாழ்வில் ஹோரைகளின் பங்களிப்பு முக்கியமானது. நம்மை அறியாமலேயே ஹோரைகளின் கதிர்வீச்சை உணர முடியும். அதை உணர்ந்து நடந்தால் நலம் பெறுவீர்கள்.

குறிப்பாக கணவன் , மனைவி ஏதாவது வாக்குவாதம் செய்யத் துவங்கினால் , செவ்வாய் அல்லது சனி ஹோரை வந்தால், அடக்கி வாசியுங்கள். அது மிகப் பெரிய சண்டையாகிவிடும். கணவன் . மனைவி என்றில்லை. மற்றவருக்கும் பொருந்தும். ஆதலால் , காலத்தின் இந்த ரகசிய கணக்கு – நீங்களும் தெரிந்து வைத்திருப்பதில் தவறில்லை…

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

தகவல்:  திருமலை

எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த நட்சத்திர நாளில் ஒன்றைச் செய்தால் வெற்றிகிட்டும்?!

astrology main - 2026

சந்திர பலம் உள்ள நாட்கள்?

?எடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்து தரும் நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள்

?நம் ராசி, நட்சத்திரத்துக்கு உகந்த நேரங்களை பெரும்பாலோர் பார்ப்பதில்லை. இதனால் மேற்கொள்கின்ற முயற்சிகள் தோல்வி அடையும். அந்த காலத்தில் பெரியவர்கள் நாள் செய்யாததை நல்லோர் செய்யார் என்பார்கள். நற்செயல்களை நல்ல நாள் நட்சத்திரத்தில் ஆரம்பித்தால் ஜெயம் உண்டாகும் என்பதற்காக இது சொல்லப்பட்டது. அதன்படி நமக்கு நன்மை செய்கின்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை ஆரம்பிக்கலாம்.

?நல்ல விஷயங்கள் பேசலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வங்கி கணக்கு தொடங்கலாம். கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்கலாம்.

?பரிகார பூஜைகள் செய்யலாம். வேலைக்கான முயற்சிகளை தொடங்கலாம். இப்படி செய்வதால் அந்த நட்சத்திர தாரபலம், சந்திர பலம் காரணமாக நம் முயற்சிகளுடன், அதிர்ஷ்டமும் சேர்வதால் காரிய வெற்றி, அனுகூலம் உண்டாகிறது.

?நாடி செல்லும் காரியங்கள் கை கூடிவர உங்கள் நட்சத்திரங்களுக்கு நன்மை தரும் நட்சத்திரங்கள்:

?அஸ்வினி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

?பரணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

?கிருத்திகை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

?ரோகிணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், கேட்டை, அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

?மிருகசீரிஷம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவாதிரை, பூசம், அசுவினி, கிருத்திகை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

?திருவாதிரை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

?புனர்பூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூசம், மகம், உத்திரம், சித்திரை, அனுஷம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

?பூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

?ஆயில்யம் : நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகம், உத்திரம், சித்திரை, விசாகம், மூலம், உத்திராடம், அவிட்டம், அசுவினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம்.

?மகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், பூராடம், திருவோணம், சதயம், பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

?பூரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை, உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

?உத்திரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம்.ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

?அஸ்தம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயிணீல்யம், பூரம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

?சித்திரை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, திருவாதிரை, பூசம், மகம், உத்திரம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

?சுவாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, பரணி, புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

?விசாகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, பூசம், மகம், உத்திரம், சித்திரை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

?அனுஷம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கேட்டை, பூராடம், திருவோணம், சதயம், ரேவதி, பரணி, ரோகிணி, ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

?கேட்டை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், பூசம், மகம், உத்திரம், சித்திரை, விசாகம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

?மூலம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

?பூராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

?உத்திராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

?திருவோணம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

?அவிட்டம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, புனர்பூசம், பூசம், மகம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

?சதயம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி, பூசம், ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

?பூரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், ஆயில்யம், மகம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

?உத்திரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, மகம், பூரம், அஸ்தம், கேட்டை, பூராடம், திருவோணம், சதயம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

?ரேவதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டா ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

?மேற்கண்டவாறு அந்த அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கு சாதகமான நட்சத்திரத்தன்று செய்யும் அனைத்து செயல்களும் ஜெயமாகும்.

தகவல்: ஜோதிடர் ரமா குருமூர்த்தி

தவறுக்கான தண்டனை!

krishna arjuna rath - 2026

மகா பாரத யுத்தத்தின் முடிவு சமயம்! பீஷ்மர் அம்புப்படுக்கையில் படுத்திருந்தார்.

அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

ஒரு ஞானியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அவர் தனது சாவுக்காக பயப்படுபவரும் அல்ல.

*கௌரவர்களுக்காக போர் செய்து தோற்றுப் போனதற்காகவோ, அவர்களின் மரணத்திற்காகவோ கலங்குபவரும் அல்ல!

அப்படியானால், எதற்காக அழுகிறார் என்ற சந்தேகத்துடன் கிருஷ்ணர் அவரை அணுகினார்.

கௌரவர்களும், பாண்டவர்களும், திரௌபதியும உடன் நின்றனர்.

“”மகாத்மாவே! ஏன் அழுகிறீர்கள்! ஞானியான தங்கள் கண்ணில் நீர் வழிகிறதென்றால், அதற்கு அர்த்தமில்லாமல் இருக்காதே!” என்றார் கிருஷ்ணர்.

“கிருஷ்ணா! அறியாதவன் போல் பேசுகிறாயே! எவ்வளவோ இழப்புகள்! பாண்டவர்களுக்காக கடவுளின் அவதாரமாக நீயும் இருக்கிறாய்.

ஆனாலும், அவர்களின் கஷ்டம் தீரவில்லை, பிரச்னைக்கு முடிவும் கிடைக்கவில்லை. அதை நினைத்து அழுகிறேன்,” என்றார்.

கண்ணன் பதிலேதும் சொல்லாமல் சிரித்தார்.

அந்த சிரிப்பின் அர்த்தம் என்ன தெரியுமா?

சூதாட்டம் தவறு என்று தெரிந்தும் தர்மர் சூதாடினார். அதிலும், மனைவியை பந்தயப் பொருளாக வைத்து இழந்தார்.

இந்த கொடிய செயலுக்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டாமா!

நாம் செய்யும் தவறை முழுமையாக உணரும் வரை, இறைவனின் தண்டனை தொடரும்.

அதை அனுபவிப்பதைத் தவிர வேறு வழியில்லை…!!

பசுப் பாதுகாப்பும் ரந்திதேவன் கதையும்!

go matha - 2026

பசுக்களின் பாதுகாப்பு குறித்து மஹாபாரதத்திலுள்ள ரந்திதேவன் கதை குறித்த தெளிவான விளக்கம் 2015 மன்மத மார்கழி டிசம்பர் நரசிம்மப்ரியா இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மறுபடியும் உங்கள் பார்வைக்கு – APN ஸ்வாமி.

***

உலகில் மேன்மையை அடைய விரும்புபவன் எக்காரணம் கொண்டும் பசுக்களையும், ப்ராம்மணர்களையும் அவமதிக்கக் கூடாது.

ஒரு நாள் இரவு தற்செயலாக News channel பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் காரசாரமானதொரு விவாதம் நடந்துகொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியை நடத்துபவர், பங்கு கொள்பவர் என அனைவருமே ஆவேசமடைந்தவர்களைப் போன்று பேசிக் கொண்டிருந்தனர். ஒருவர் நடுவே மற்றொருவர் குறுக்கிட்டும், பேசவொட்டாமல் தடுத்தும் ஒரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பொதுவாகவே இதுபோன்ற அக்கப்போர்களைப் பார்க்க விரும்பாதவனாயினும் அன்றைய தலைப்பு சற்றே சுவாரஸ்யம் தந்ததால் பார்த்தேன்.

தற்போது நமது நாட்டில் பரபரப்பாகப் பட்டிதொட்டிகளிளெல்லாம் பேசப்படும் பசுமாமிசம் சாப்பிடலாமா? கூடாதா? என்பதே அதன் தலைப்பு. இதுவரையிலும் படித்து வந்துள்ள நீங்கள் நானேதோ தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைப்பதாக எண்ணியிருப்பீர்கள். இருந்தும் தொடர்ந்து மேலே படியுங்கள்.

புலாலுண்பதை எதிர்ப்பவர், புலாலுண்பதை ஆதரிப்பவர் என இருவரும் கடும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். நான் பார்த்தவரையில் ஆதரிப்பவரின் கைதான் ஓங்கி இருந்தது. புலாலை மறுப்பவர் தடுமாறி, தடுமாறித்தான் விளக்கம் அளித்தார். அதுவே ஆதரவாளர் தன் கட்சியை பலப்படுத்துவதாக அமைந்தது. தவிரவும் அவர் மஹாபாரதத்திலிருந்து ஒரு அதிரடியான உதாரணத்தை எடுத்துக்காட்டி புலால் மறுப்பாளரைத் திகைப்படைய செய்துவிட்டார்.

“பசுவைக் கொல்வது பாவமில்லை. கூட்டம் கூட்டமாக வைதிகர்கள் பசுவைக் கொன்றதற்குப் பல ப்ரமாணங்கள் உள்ளன. அவற்றினுள் முக்யமான ப்ரமாணம் இது” என்று அவர் கூறியதின் கருத்தை அறியலாம். மஹாபாரதத்தினின்றும் ஸம்ஸ்க்ருத ச்லோக மேற்கோளை அவர் படித்தார். அது தப்பும், தவறுமாக சகிக்க முடியாமலிருந்தது. ஆனால் அது மிக மிக பலமான ப்ரமாணம்.

இந்துக்கள் பசுவைக் கொல்பவர்கள் என்பதினை நன்கு வலியுறுத்தக் கூடியதாக அமைந்தது. முதலில் அதன் பொருளுணரலாம்.

ரந்திதேவன் எனும் அரசன் செய்த யாகத்தில் அனேகமாயிரம் பசுக்கள் பலி கொடுக்கப்பட்டன (கொல்லப்பட்டன). இப்படி அனேகமாயிரம் வருடங்கள் நடந்த யாகத்தில் கொல்லப்பட்ட பசுக்களின் தோல்களும், கொழுப்புகளும் நிறைந்திருந்தன. அவற்றிற்குக் கணக்கே இல்லை. (ம.பா. அநுசாஸநபர்வம் – 124 – 10 – 13).

இதுதான் விஷயம். இதைப் படிக்கும் நாமும் திடுக்கிடுகிறோம். எப்பொழுதுமே ஹிந்து மதத்தின் கொள்கைகளை விமர்சிக்கும் நமக்கு இது போன்று விஷயங்களால்; நம் பெரியோர்கள் மூடர்கள் எனும் எண்ணம் மேலும் ஓங்குகிறதல்லவா!. இதனால் தான் மற்றவர்கள் எளிதில் உள் புகுந்து நம் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

தொலைக்காட்சியில் பார்த்த அந்த விவாதம் குறித்த நேரத்தில் எவ்விதமோ முடித்து வைக்கப்பட்டுவிட்டது.எப்படியும் ஒருவரையொருவர்ஒப்புக்கொள்ளப் போவதில்லை. ஆனால் புலாலுண்பவர் எடுத்தாண்ட அந்த உதாரணத்தின் பொருளை நன்கு தெரிந்து கொள்ளவேண்டாமா! அதனால் சற்று விரிவாக எழுதுகிறேன். கவனித்துப் படியுங்கள். முடிந்தால் சமூக வலைத்தளங்களில் பரப்புங்கள்.

முதலில் பசுக்களின் பெருமை அறியலாம். பசுக்கள் ப்ரஹ்மதேவரால் மனதில் படைக்கப் பட்டவைகள். அவர் அம்ருதம் அருந்தி அவரின் முகத்திலிருந்து மணம் வீசும்போது பசுக்கள் உண்டாயின. அதனால் அவைகளுக்கு ஸுரபி (மணம் மிக்கவை) எனும் பெயர் உண்டானது.

உலகில் மேன்மையை அடைய விரும்புபவன் எக்காரணத்தாலும்பசுக்களையும், ப்ராம்மணர்களையும் அவமதிக்கக் கூடாது. ஆவின் (பசு) தேகத்தில் அனைத்து தேவர்களும் வசிக்கின்றனர். பசுவை வணங்குவதால் முப்பத்தி முக்கோடி தேவர்களை வணங்கிய பயனடையலாம். இதன் பெருமையை வேதம், இதிஹாஸம், புராணம் என அனைத்தும் பேசுகின்றன. ப்ரம்மா, இந்திரன், நாரதர், க்ருஷ்ணன், திலீபன், வஸிஷ்டர், மாந்தாதா, சுமித்ரர், கபிலர் என பெரியோர்கள் பலரும் பசுவின் பெருமைகளைப் பேசிவருகின்றனர். இத்தகைய பசு ஒருவனுக்கு எல்லாவிதத்திலும் வணங்கத் தக்கதாகிறது. இவையனைத்தும் அதே அநுசாஸந பர்வத்தில் உள்ள கோ (பசு) மாஹாத்மியங்கள்.

இனி ரந்தி தேவனுடைய கதையைப் பார்ப்போம். அதற்கு முன்பாக சுமித்ரர் எனும் ராஜரிஷியை அறியவேண்டும்.

ப்ருகு வம்சத்தில் பிறந்த ராஜரிஷியான சுமித்ரருக்கு அங்கிரஸ் எனும் மஹரிஷி ஒரு பசுவை தானமளித்தார். மிகுந்த பக்தியுடன், ச்ரத்தையுடன் சுமித்ரர் கோஸம்ரக்ஷணம் செய்தார். இதனால் அவரின் ஒரு பசு பல்லாயிரக்கணக்கில் பெரும் மந்தையாகியது. எருதுகளும், பசுக்களுமாகிய மாபெரும் மந்தையால் பூலோகம் நிறைந்தது. அதே சமயம் ஒருநாள் சுமித்ரரின் பசுக்கள் அழகிய பெண்ணுருவம் கொண்டு இனிமையாக விளையாடும் ஒரு சிலரைக்கண்டு ஆச்சர்யமடைந்து அவர்களை யாரென்று கேட்டன.

அதற்கு அந்த பெண்ணுருவம் கொண்டவர்கள் “நாங்களும் பசுக்கள் தான். கோலோகம் (பசு உலகம்) எங்களின் இருப்பிடம். எங்களின் பால், மூத்திரம், சாணம் என அனைத்தையும் மஹரிஷிகள் யாகத்தில் உபயோகிக்கின்றனர். அதனால் நாங்கள் சுகமாகவும், நினைத்த உருவத்தை எடுக்கும் ஆற்றல் பெற்றவராகவும் இருக்கி÷Ùம்.”

“ஆனால் உங்கள் ரிஷி (சுமித்ரர்) உங்களின் மீது பரிவு கொண்டு பாலைக்கூட கறப்பதில்லை. கன்றின் வாயிலிருந்த நுரையையே உண்பதால் பேனபர் என்று பெயர் பெற்றுள்ளார். இருந்தாலும் உங்களின் உயர்ந்த அம்ருதமயமான பால் முதலியவை யாகத்தில் உபயோகிக்கப் படாமையால் உங்களால் முழுதும் தெய்வாம்சம் பெற முடியவில்லை” என்றன.

இது கேட்டு சுமித்ரரின் பசுக்கள் “தாங்கள் தெய்வாம்சம் பெறுவதற்கு என்ன வழி?” என்று கேட்டன. அதற்கு கோலோகபசுக்கள் “இப்போது மஹாத்மாவான ரந்தி தேவன் ஆயிரம் வருடகாலம் செய்யக்கூடிய ஸத்ரயாகத்தைச் செய்து வருகிறான். நீங்கள் அனைவரும் சென்று அவனது யாகத்தில் பசுக்களாகி உங்களின் தேகத்தை விடுத்திடுங்கள். அவ்விதம் பரிசுத்தமான யாகத்தில் நீங்களாக முன்வந்து தேகத்தை த்யாகம் செய்வதினால் உயர்ந்த கோலோகத்தை அடைவீர்கள்” என்று சொல்லின.

அதற்குள்ளாக அங்கிருந்த சில முரட்டு கபிலை பசுக்கள் “எங்களுக்கு இதுபோன்ற ஸந்மார்கத்தைக் காண்பிக்காத சுமித்ரரைக் கொல்வோம்” எனத் தீர்மானித்தன. இதையறிந்த கோலோக பசுக்கள் சுமித்ரரின் தேகத்திலிருந்து அவரின் ஆத்மாவை பிரித்து அவரை புண்யமான கோலோகத்திற்கு அழைத்துச் சென்று உபசரித்தன.

சுமித்ரரின் தேகத்தின் மீது கோபம் கொண்டு அதனை முட்டியும், குத்தியும் ஏனைய பசுக்கள் அழித்தன. இதனால் அவற்றின் முகம் அமங்கலமாக வேண்டியது என கோலோக பசுக்கள் சாபம் அளித்தன. இதனால்தான் பசுக்களின் முன்புறம் பார்ப்பதைவிட பின்புறம் உயர்ந்தது. பின்புறத்தில் லக்ஷ்மியின் வாசம் ஏற்பட்டது.

இதன் நடுவே சுமித்ரரின் பசுக்கள் ரந்திதேவனிடம் சென்று யாகத்தில் தங்களைக் கொல்லுமாறு வேண்டின. அன்பர்களே! கூர்ந்து கவனியுங்கள். பசுக்கள் யாகத்தில் தங்களைக் கொல்லுமாறு வேண்டின. ஆனால் தர்மாத்மாவான ரந்திதேவன் “மாபாதகமான இக்கொடிய செயலைச் செய்வதைவிட நான் உயிரை விடுவதே மேல்” எனத் தெரிவித்தான்.

ஆனால் சுமித்ரரின் பசுக்களோ “அரசே! ஜீவகாருண்யம் உள்ள, சிறந்த தர்மசீலரான தங்களின் யாகத்தில்தான் எங்களுக்கு நற்கதி கிடைக்கும். எங்கள் அனைவரையும் கரையேற்றுங்கள்” என்று இறைஞ்சின. அதன்படி அரசனும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டான்.

“சரி, இந்த யாகத்தால் உங்களுக்கு உயர்ந்த கோலோக ப்ராப்தியுண்டானால் அதற்கு சம்மதிக்கிறேன். ஆனால் நீங்கள் கூட்டம், கூட்டமாக இறக்கும் போது ஏதாவது ஒரு பசு மரணத்தைக் கண்டு அஞ்கினால் உடனே யாகத்தை நிறுத்துவேன். மேலும் உங்களுக்கு உதவி செய்யும் எனக்கு பசுவதையினால் பாபம் ஏற்படக்கூடாது” என்றான்.

இவ்விதம் அரசனின் வேண்டுகோளை ஏற்ற பசுக்கள் வரம் தந்தன. அதன் பின்னர் தான் இந்தக் கட்டுரையின் முதல் பகுதியில் சொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பசுக்களின் பலி. அதன் ரக்தமும், நுணநீரும், மாமிசமும் கலந்து ஒரு நதீ உண்டானது. அதுதான் சர்மண்வதி.

இவ்விதம் பசுக்கள் யாகத்தில் பலியாகி கோலோகத்தை அடைந்து கொண்டிருந்த சமயம் ஒரே ஒரு பசுவானது தன் கன்றை நினைத்து உருகியது. இதைக்கண்ட அரசன் உடனேயே யாகத்தை நிறுத்திவிட்டான். ஏனைய பசுக்கள் பூலோகத்தில் பெருகி அதன் பின்னர் தங்ளின் பால், தயிர், நெய் இவற்றால் ஹோமங்களுக்கு உபயோகப்பட்டு நல்ல வளத்தை அடைந்தன.

யுதிஷ்டிரருக்கு இக்கதையைச் சொன்ன பீஷ்ம பிதாமஹர் “பசுக்களை எப்போதும் பூஜிக்க வேண்டும், ஹிம்சை செய்யக்கூடாது. கோவதம் பெரும் பாபம். கோமாம்ஸம் உண்பவன் மீளமுடியாத நரகத்தில் வீழ்வான். ஆகையால் தர்மபுத்ரா பசுக்களையும், ப்ராம்மணர்களையும் எப்போதும் வணங்குவாயாக” என்றார்.

இவ்விதம் முன், பின் தொடர்புகளில் அனேக விஷயங்கள் விளக்கப்பட்டிருக்க அதையெல்லாம் விடுத்து தங்களுக்கு அனுகூலமான ஒரே ஒரு ச்லோகத்தை (அதையும் தப்புத் தப்பாக)ச் சொன்னால் அது கண்டு நம்மவர்கள் ப்ரமிப்பதைக் கண்டுதான் மனது வேதனையடைகின்றது.

இதே அநுசாஸந பர்வத்தில் சுமார் பத்து அத்யாயங்களில் பசுக்களின் மேன்மை, அதை தானம் செய்யும் முறை, யாருக்குச் செய்வது, செய்யும் போது சொல்லவேண்டிய மந்த்ரங்கள் என பல அபூர்வ விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன.

ப்ரமாணத்தைச் சொல்பவர் அந்த ப்ரமாணத்தை ஒப்புக் கொள்பவராக இருக்கவேண்டும். மஹாபாரதத்தையோ! கண்ணனையோ ஒப்புக்கொள்ளாதவர் இந்த ஒரு வாக்யத்தை மட்டும் பிடித்துத் தொங்குவானேன். இதில் நம்மவர்களும் (ஆஸ்திகர்களும்) மயங்குவதுதான் வேதனை அளிக்கின்றது. இந்தக் கட்டுரை உங்களுக்கே த்ருப்தி அளிப்பதாகவிருந்தால் (convincing) ஏனையவர்களுக்கும் இச்செய்தியை எடுத்துச் செல்லலாமே. மேலும் விவரங்களை அறிய நம் ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியா வெளியீடான மஹாபாரதம் புத்தகம் படித்துப் பயனடையுங்கள். பதினாறு வால்யூம் தள்ளுபடி விலை – Rs.1,700/-

திருமண் இட்டுக்கொள்வதன் அறிவியல் விளக்கம்

sriramanujar - 2026

நாமம் எனப்படும், (திருமண்+ ஸ்ரீ சூர்ணம்(சிகப்பு சாந்து) இடுவதின், விஞ்ஞான விளக்கம்; :

ஊர்த்த்வரேதம் இது நாராயண ஸுக்தத்தில் கடைசியா வரும் வார்த்தை. இதுக்கும் நாம் இட்டுக்கொள்ளும் திருமண் காப்பிற்கும் நிறைய சம்மந்தம் உண்டு. அது எப்படி அப்படினா. இந்த திருமண் காப்பிற்கு ஊர்த்த்வபுன்ட்றம் என்று பெயர். சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம். அப்படினா இந்த திருமண் காப்பை ஹரிபாத த்வயம் னு குறிப்பிடுவர். ஹரினா ஸ்ரீமன் நாராயணன் த்வயம் என்றால் இரண்டு பாதம் தெரியும். ஸ்ரீமன் நாராயணனின் இரடண்டு பாதங்கள் நெற்றியில் அணிதல் வெறுமையாக அணிந்தால் எப்படி இருக்கும்,பாதத்தை வெறுமனே வைக்க முடியுமா, முடியாதே ஸ்வாமி,இப்போ ஒரு உயர்ந்த வஸ்து இருக்கு அதாவது வைரம் இருக்கு அந்த வைரத்தை அப்படியே கீழே வைப்போமா மாட்டோம் ஒரு வெல்வட்டு வஸ்திரத்தில் வெப்போம்,

ஆத்துல பெருமாள் இருக்கார் அவரை கீழ ஏள பன்றோம் திருவாராதனம் பன்ன அப்படியே பண்ணுவோமா என்ன ஒரு தட்டு, ஒரு ஆசனம் கொடுத்து மரியாதை கொடுத்து ஏள பன்றோம், (வைக்கிறோம்)

இப்போ ஆசாரியன் ஏளிருக்கார் அவரை அப்படியே கீழ ஒக்கார வெப்போமா இல்லை ஆசனம் கொடுக்கிறோம்.

அதேபோல் உயர்ந்த திருவடி உலகத்தை அளந்த திருவடி கங்கையை உலகிற்்கு கொண்டு வந்த திருவடி. பிரம்மனால் பாத பூஜை செய்த திருவடி. அந்த திருவடியை அப்படியே வைக்க முடியுமா முடியாது ஆக அதற்கு ஒரு ஆசனம் தருகிறோம் அதுதான் கமல பீடம் அல்லது பாதம் அல்லது சேஷச பீடம் அல்லது பாதம் என்று கீழே நாசி மூலத்தில் ஒரு சின்ன கொடு போன்ற வட்டம் உள்ள ஒரு பாதம் இடுகிறோம். இது எம்பெருமானார் கத்யத்ரயத்தில் வருகிறது, நாசி மூலத்தில் இருந்து இடப்படும் திருமண் என்று வர்ணிப்பர். நாசி மூக்கு மூலம் என்றால் அடி மூக்கிற்கு அடியேதுன்னா மூக்கும் நெற்றிக்கும் இடைப்பட்ட பகுதி அல்லது மூக்கு ஆரம்பிக்கும் பகுதி அந்த இடத்தில் ஆசனம் இட்டு திருமண் இரண்டு ஹரி பாதங்களையும் மேலே இழுத்து மெல் நோக்கி செல்லுதல்.

இப்போதான் ஊர்த்வ என்ற பொருள் இங்கே சொல்லப்படும். ஊர்த்வ என்றால் மேல் நோக்கி செல்லுதல் அல்லது உயரே என்று பொருள்.

ஆத்மா ஜோதி மயமானவர். ரேதம் என்றால் ஒளி ஆத்மா ஒளி வடிவம் கொண்டவர். ஊர்த்த்வ ரேதம் ஆத்மாவான ஒளி மேல் நோக்கி செல்லும். இப்போ திரி போட்டு விளக்கு ஏற்றுகிறோம் ,அந்த திரிய தலை கிழே பிடிங்கோ சுடரானது மேல் நோக்கித்தான் செல்லும் ,அது போன்றே இந்த ஆத்மா மேல் நோக்கித்தான் செல்லும் ,உள்ளே இருக்கும் இந்த ஆத்ம விளக்கு மேல் நோக்கி சென்று உயரே சென்று எம்பெருமானின் திருவடியை அடைகிறார். எப்போ சப்த குணம் அதிகம் இருந்தால் தான் திருவடியை அடைய முடியும் அதனால் தான் திருமண் வெள்ள வேஷ்டி வெள்ளை சப்த குணத்தை வெள்ளை என்று நிறத்தால் குறுப்பிடுவது ,ஒரு ஒரு குணத்திற்கும் ஒரு நிறம் உண்டு என்று கீதையில் சொல்லப்பட்டு உள்ளது. அப்படியாக சத்வ குணத்தை வளர்த்து பெருமாளை அடைகிறது இந்த ஒளி வடிவ ஆத்மா.

திருமண் இட்டுக்கும் போது மேல் நோக்கி இழுக்க வேண்டும் கீழ் நோக்கி இழுக்க கூடாது. ஆத்மா ஆனவர் மேல் நோக்கி போக வேண்டும் என்கிற மேன்மை தத்துவத்தை உணர்த்தும் திருமண்.

திருமண் காப்பு என்று என் கூறுகிறார்கள் என்றால் இந்த திரு மண்ணானது சூரியனில் இருந்து வரும் எதிர்மறை கதிர்களை தடுத்து நம் மூளையில் உள்ள நரம்பு மண்டலத்தை தாக்காமல் காத்து கொடுப்பதால் இது திருமண் காப்பு என்கிறோம்.

இப்போ திருமண் காப்பினை இடும் ஊர்த்தவரேதம் என்று நினைவு படுத்தியே இட்டுக்கொள்ள வேண்டும். இதை பெரிய நம்பிகள் இராமானுருக்கு பஞ்ச சம்ஸ்க்காரம் பண்ணும் பொழுது திருமண் எப்படி கீழே பீடம் இட்டு இட வேண்டும் ,அவ்வாறு இடுவதால் ஆத்ம யோகத்தில் 7 சக்கரம் வழியே மேல் வந்து ஆதிசேனை போல் வெளியே படம் எடுத்து நிற்க வேண்டும் என்று உபதேசித்து,பஞ்ச ஸம்ஸ்க்காரம் பண்ணிவித்தார்.

ஆஹ திருமண் இடும் பொழுது ஊர்த்தவரேதம் என்று நினைவில் கொண்டு இட்டுக்கொள்ள வேண்டும்.

ஊர்த்த்வரேதம் விரூபாக்ஷம் விச்வரூபாய வை நம:

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்