Home Blog Page 5955

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு உதவ தயார் : பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் பலத்த மழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை குறைந்தாலும், வெள்ள நீர் மட்டும் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு உதவி செய்யவும், நிவாரண நிதி வழங்கவும் தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் செய்தியாளர்களிடம்கூறியுள்ளார்.

மழை வெள்ளப் பெருக்குக்காக வழக்கு தொடர முடியுமா? : விளக்கம் அளித்த உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் பலத்த மழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை குறைந்தாலும், வெள்ள நீர் மட்டும் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்பு ஆஜராகி,தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்கிறது. சென்னையில் அனைத்து பகுதிகளும் மழை வெள்ளத்தில் மிதக்கிறது. மக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். எனவே, இதுகுறித்து இந்த உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, தகுந்த உத்தரவை தமிழக அரசுக்கு பிறப்பிக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.

வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், மழைக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்று தெரிவித்தார்கள். மேலும் இது குறித்து அவர்கள் அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது :-

கனமழை பெய்வது என்பது இயற்கையானது. பல பகுதிகளில் சாலைகளிலும், வீட்டுக்குள்ளும் மழை வெள்ளம் புகுந்துள்ளது. மக்களும் கடுமையாக அவமதிப்படுகின்றனர். இந்த இயற்கை சீற்றத்துக்காக இந்த ஐகோர்ட்டை நாடுபவர்கள், ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, சட்டவிரோதமாக கட்டிடங்கள் தொடர்பாக ஏன் இங்கு வருவதில்லை? நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளால் மழை வெள்ளம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. இந்த இயற்கை சீற்றத்தின் வீரியத்தை உணர்ந்த பின்னர், இந்த ஐகோர்ட்டுக்கு வருவதை ஏற்கமுடியாது. மக்கள் ஓட்டு போட்டுத்தானே அரசாங்கத்தை தேர்வு செய்கின்றனர்? அதேநேரம், தேர்தலில் வாக்குறுதிகளை கொடுக்கும்போது, அதை நிறைவேற்றவும் சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும் என்று நீதிபதிகள் அளித்த விளக்கத்தில் கூறியுள்ளனர்.

பாரீஸில் தீவிரவாதிகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை

பாரீஸில் தீவிரவாதிகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடை பெற்று ற்றுவருவதாக தெரிகிறது. இதில் போலீஸார் சிலர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகிறது.

பாரீஸ் தாக்குதல் தீவிரவாதிகளைப் பிடிக்க செயின்ட் டெனிஸ் பகுதியில் தீவிரவாத தடுப்பு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து பாரீஸ் புறநகர் பகுதியான செயின்ட் டெனிஸில் காவல் துறையின குவிந்துள்ளனர்.

தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கூறப்படும் குடியிருப்புப் பகுதியினை காவல் துறையினர் சுற்றிவளைத்துள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த காவல் துறை ஆபரேஷன் குறித்து உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “பாரீஸில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்பதால் இத்தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. இந்தப் பகுதி முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது” என்றார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த 15-ம் தேதி பயங்கரவாதிகள் 6 இடங்களில் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 128 பேர் உயிரிழந்தனர். ஏறத்தாழ 200 பேர் காயமடைந்தனர்.

பாரீஸில் இசை அரங்கம், கால்பந்து மைதானம், ஓட்டல்கள் என 6 முக்கிய இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, சிரியா – இராக்கில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. பாரீஸ் தாக்குதலை பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஐ.எஸ். பிரிவு தலைமையேற்று நடத்தியுள்ளது.

அந்த நாட்டைச் சேர்ந்த அப்துல் ஹமீது என்பவர் பாரீஸ் தாக்குதலுக்கு மூளையாகச் செயல் பட்டுள்ளார். சிறுவயதிலேயே பெல்ஜியத்தில் இருந்து சிரியாவுக்கு தப்பிச் சென்ற அவர் தற்போது ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவராக உள்ளார்.

சிரியாவில் உள்ள முகாமில் அவரது தலைமையில்தான் பாரீஸ் தாக்குதல் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 27 வயதாகும் அவரைப் பிடிக்க பிரான்ஸ் உளவுத் துறை பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில், அப்துல் ஹமீது செயின்ட் டெனிஸ் பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெண் காவலர் பயணி ஒருவரை ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளி விட்டதில் பலி

 மேற்கு வங்காளத்தின் உத்தர்பாரா மற்றும் ஹிந்த் மோட்டார் ரெயில்வே நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த உள்ளூர் பயணிகள் ரெயிலில் இருந்து ரெயில்வே படை

பயணி ஒருவரை ரயில்வே படை பெண் காவலர் வெளியே தள்ளி விட்டதில் அவர் பலியானார்.

இந்த சம்பவத்தை அடுத்து பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஹவுரா-பண்டல் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் மறியல் போராட்டமும் நடந்துள்ளது.

மேற்கு வங்காளத்தின் பத்ரகாளி நகரில் துவாரிக் வன சாலை பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் தீபக் சர்மா (40). இவர் நேற்று மாலை உத்தர பிரதேசத்தின் ஹவுரா-பண்டல் செல்லும் மாத்ரிபூமி பெண்கள் சிறப்பு புறநகர் உள்ளூர் ரயிலில் பயணம் செய்துள்ளார். அவரை பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலர் ஒருவர் அம்டாலா பகுதி அருகே வெளியே தள்ளி விட்டுள்ளார். ரயில் ஹிந்த் மோட்டார் ரயில் நிலையத்திற்கு இரவு 7.55 மணிக்கு வந்தபோது, பயணிகள் பெண் காவலரை அடித்து உள்ளனர்.

தீபக் மரண செய்தி பரவியதை அடுத்து ஆத்திரமுற்ற அப்பகுதி மக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டதுடன் ரயில் மறியலிலும் ஈடுபட்டனர். அதனுடன் வேறு 2 ரெயில்களை நோக்கி கற்களை வீசினர். அதன் ஜன்னல்களை அடித்து நொறுக்கி பெட்டிகளை சேதப்படுத்தினர். இந்நிலையில், அதிக எண்ணிக்கையில் போலீசார் கொண்ட படை ஒன்று அங்கு வந்தது.

அவர்களை நோக்கியும் கற்கள் வீசப்பட்டன என அரசு ரயில்வே போலீசின் மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்பின் உத்தரபாரா & amp கோத்ராங் நகராட்சியின் தலைவர் திலீப் யாதவ் தலைமையில் ஹிந்த் மோட்டார் ரயில்நிலைய பகுதியில் ரயில் மறியல் போராட்டம் மீண்டும் நடந்தது. பேலூர் ரயில் நிலையத்திலும் ஒரு பகுதி பயணிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தினால் ஒட்டு மொத்த ரயில் சேவை பாதிக்கப்பட்டது. கொல்கத்தாவில் பணிபுரியும் தனியார் நிறுவன ஊழியரான தீபக் தனது மனைவியுடன் ரயிலில் பயணம் செய்துள்ளார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். அவர் தவறு எதுவும் செய்து இருந்து அல்லது பெண்கள் பெட்டியில் பயணம் செய்து உள்ளார் என அறியப்பட்டால் பெண் காவலரே அவரை கைது செய்திருக்கலாம். ஓடும் ரயிலில் இருந்து அவரை ஏன் கீழே தள்ளி விட வேண்டும்? என திலீப் யாதவ் கூறியுள்ளார். அந்த பெண் காவலர் அடையாளம் காணப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ரயில் சேவை பாதிக்கப்பட்ட நிலையில் ரயிலுக்காக காத்திருந்த பால் வியாபாரி ஒருவர் பலியாகியுள்ளார். ரயில் நிலையங்களில் 100க்கும் அதிக பயணிகள் ரயிலுக்காக காத்திருந்து அவதியுற்றனர் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அட்டாக் பாண்டி குண்டர் சட்டத்தில் கைது

கடத்தல், கொலை, கொள்ளை, உள்ளிட்ட 20–க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய அட்டாக் பாண்டியை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யும்படி மதுரை மாநகர காவல் ஆணையாளர் சைலேஷ் குமார்யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மு.க.அழகிரியின் ஆதரவாளருமான பொட்டு சுரேஷ் கொலை
மதுரையில் கடந்த 2013–ம் ஆண்டு செய்யப்பட்டார்.

அந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அட்டாக் பாண்டி 2½ ஆண்டுகளுக்குப் பிறகு மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிமன்ற காவல் முடிவடைந்ததையொட்டி நேற்று மாலை பாளையங்கோட்டைசிறையில் இருந்தபடியே காணொலிக் காட்சி மூலம் மதுரை 4–வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் அட்டாக் பாண்டியை போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை மேலும் 15 நாட்கள் காவலில் வைக்கும்படி நீதிபதி (பொறுப்பு) பால்பாண்டி உத்தரவிட்டார்.

அவர் மீது கடத்தல், கொலை, கொள்ளை, ஆயுதம் கடத்தல் போன்ற 20–க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அவரை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்க சுப்பிரமணியபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கோட்டைச்சாமி மதுரை மாநகர காவல் ஆணையர் சைலேஷ்குமாருக்கு பரிந்துரை செய்தார்.

அவரது பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மாநகர போகாவல் ஆணையாளர், அட்டாக் பாண்டியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளார். இதற்கான உத்தரவு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பாளையங்கோட்டை சிறைக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக 27 விரைவு ரயில்கள் ரத்து

 

தமிழகத்தில் பெய்து வந்த கனமழை காரணமாக தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் பல விரைவு ரயில்கள் கடந்த சில நாட்களாக ரத்து செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில்ஆந்திர மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் சென்னை சென்டிரல் மற்றும் தெற்கு ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் 27 விரைவு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

தமிழகத்தில் மழை குறைந்து தற்போது ஆந்திர மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், தெற்கு ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் இருந்து வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் 27 ரயில்கள் 18-11-2015 இன்று ரத்து செய்யப்படுகின்றன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்தாவது :-

”சென்னை சென்டிரல்-ஜம்முதாவி அந்தமான் எக்ஸ்பிரஸ் ரயில் (16031), சென்னை சென்டிரல்-விஜயவாடா ஜங்சன் சதாப்தி எக்ஸ்பிரஸ் (12077), சென்னை சென்டிரல்-ஹவுரா எக்ஸ்பிரஸ் (12842), சென்னை சென்டிரல்-அகமதாபாத் நவஜீவன் எக்ஸ்பிரஸ் (12656), சென்னை சென்டிரல்-ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரயில் (12603), சென்னை-சென்டிரல் ஐதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ் (12759), சென்னை சென்டிரல்-டெல்லி கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ் (12615), சென்னை சென்டிரல்-ஹவுரா மெயில் (12840), சென்னை சென்டிரல்-கூடுர் பயணிகள் ரயில் (57239), சென்னை சென்டிரல்-மும்பை சி.எஸ்.டி. எக்ஸ்பிரஸ் (11042), சென்னை சென்டிரல்-மும்பை சி.எஸ்.டி. மெயில் (11028). ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இதேபோல், சென்னை எழும்பூர்-தாதர் எக்ஸ்பிரஸ் (12164), சென்னை எழும்பூர்-காச்சிகூடா எக்ஸ்பிரஸ் (17651), சென்னை எழும்பூர்-காக்கிநாடா போர்ட் சேர்கார் எக்ஸ்பிரஸ் (17643), புதுச்சேரி-டெல்லி எக்ஸ்பிரஸ் (22403), புதுச்சேரி-புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் (12897), புதுச்சேரி-ஹவுரா எக்ஸ்பிரஸ் (12868), விழுப்புரம்-காரக்பூர் (22604), மன்னார்குடி-திருப்பதி எக்ஸ்பிரஸ் (17408), ராமேஸ்வரம்-மண்டுவாடி (15119), ஆலப்புழை-தன்பத் டாடா எக்ஸ்பிரஸ் (13352), திருவனந்தபுரம்-ஐதராபாத் சபரி எக்ஸ்பிரஸ் (17229), எர்ணாகுளம்-பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் (22816), கன்னியாகுமரி-நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641), நாகர்கோவில்-பெங்களூர் எக்ஸ்பிரஸ் (17236), மங்களூர்-காச்சீகூடா எக்ஸ்பிரஸ் (17605), சென்னை சென்டிரல்-ஹவுரா சிறப்பு ரயில் (02848) ஆகிய 27 விரைவு ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சூறாவளி காற்றில் 120 வீடுகள் சேதம்

 

திருநெல்வேலி மாவட்டம்சங்கரன்கோவில் அருகே உள்ள ஜமீன்இலந்தைகுளம் கிராமத்தில் நேற்று மதியம் லேசான மழை பெய்ய தொடங்கியது. இந்த நிலையில் மாலை 4 மணியளவில் பயங்கர சூறாவளி வீசியது.

இந்த சூறாவளி காற்றில் அப்பகுதியில் உள்ள நடுத்தெரு, கீழத்தெரு, பிள்ளையார் கோவில் தெருக்களில் இருந்த 120–க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன.

மேலும் அப்பகுதியில் உள்ள 5க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. ஏராளமான மரங்கள் கீழே விழுந்தது. நூற்றுக்கும் அதிகமான வாழை மரங்கள் காற்றில் சாய்ந்தன. சூறாவளியால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் ஜமீன் இலந்தைகுளம் கிராமம் இருளில் மூழ்கியது.

இந்த சூறைக்காற்றுக்கு அப்பகுதியை சேர்ந்த ராமாத்தாள் (80)செல்லத்தாய் (60)சண்முகையா (50) சண்முகத்தாய்
(வயது 45), சின்ன முத்தம்மாள் (50), ராமாத்தாள் (60), கருப்பாயி (55), ஆச்சியம்மாள் (60)ஆகிய 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

பலத்த காயம் அடைந்த ராமாத்தாள் (80) என்பவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு நெல்லை
கோட்டாட்சியர் பெர்மிவித்யா விரைந்து சென்று சேதமான இடங்களை பார்வையிட்டார்.

அனைவரும் அப்பகுதியில் உள்ள சமுதாயநலக்கூடம் மற்றும் பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர் களுக்கு அங்கு உணவுகள் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் ஆகியோர் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினர்.நேற்று இரவு ஜமீன் இலந்தை குளம் கிராமத்திற்கு ஜென ரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது

இந்த நிலையில் ஜமீன் இலந்தைகுளத்தில் உள்ள பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட இடங்களை வட்டாட்சியர் சிவக்குமார் பார்வையிட்டார். அப்பகுதி பஞ்சாயத்து தலைவர் வண்ண கருப்பசாமியிடம் மேலநீலிதநல்லூர் ஒன்றிய குழுத்தலைவர் முருகையா, நிவாரண நிதியாக ரூ.1 லட்சம் வழங்கினார்.

சூறை காற்றினால் சாய்ந்த மின் கம்பங்களை 50 பேர் கொண்ட மின் ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

2–வது நாளாக இன்றும் சமுதாயநலக்கூடம், பள்ளி யில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. .

திருச்சி மாநகரில் மக்கள் நலக் கூட்டணி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

திருச்சி மாநகரில் நவம்பர் 25 ஆம் தேதி மக்கள் நலக் கூட்டணியின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்கப் பொதுக்கூட்டத்தை டிசம்பர் 12 ஆம் தேதி அன்று மதுரையில் பெரும் சிறப்புடன் வெற்றிகரமாக நடத்துவது குறித்தும், அடுத்த கட்டசெயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவும் கூட்டணியின் அங்கங்களான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய நான்கு கட்சிகளின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், நவம்பர் 25 ஆம் தேதி அன்று திருச்சி மாநகரில் தனியார் விடுதி கூட்ட அரங்கத்தில் காலை 10 மணி தொடங்கி,மாலை 6 மணி வரை நடைபெறும்.

மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் அதில் பங்கேற்பார்கள். அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

கனமழை காரணமாக ஆந்திர மாநிலம் கடப்பாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 5 குழந்தைகள் பலி

ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கடப்பாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 5 குழந்தைகள் பலியாகினர்.

வங்க கடலில் தமிழகத்தின் அருகே நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திர கடலோர பகுதியில் நேற்று நிலைகொண்டு இருந்தது. இது தொடர்ந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாக ஆந்திராவில் நெல்லூர், சித்தூர் மற்றும் கடப்பா ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டு உள்ளனர். சில இடங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

சில இடங்களில் மழை வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப்பொட்டலங்கள் போடப்பட்டன. மழை, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் சுமார் 14 ஆயிரம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன நெல்லூர், கடப்பா, திருப்பதி நகரங்களில் பல குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. நூற்றுக்கும் அதிகமான குளங்களில் உடைப்பு ஏற்பட்டதால், விளைநிலைங்களில் தண்ணீர் புகுந்தது. சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் மழைக்கு 5 பேர் பலியாகினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடப்பாவில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 5 குழந்தைகள் பலியாகினர்.

தமிழக அரசு பேருந்தை மது போதையில் ஓட்டிய ஓட்டுநர்

தேனி மாவட்டம் போடியில் இருந்து வேளாங்கண்ணி சென்ற அரசுப் பேருந்தில் பணியில் இருந்த ஓட்டுநர் மது போதையில் தாறுமாறாக ஓட்டியதால் பயணிகள் அலறியதை அடுத்து பயணி ஒருவரே மாற்று ஓட்டுநராக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போடி பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 3.45 மணிக்கு வேளாங்கண்ணிக்குச் சென்ற போடி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை கட்டுப்பாட்டில் உள்ள பேருந்தை, வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் மதிப்புராஜா என்பவர் ஓட்டிச் சென்றார்.

மது போதையில் இருந்த மதிப்புராஜா, போடியில் இருந்து தடுமாறியவாறு தாறுமாறாகபேருந்தை ஓட்டிச் சென்றதாகக் சொல்லப்படுகிறது. தேனி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது, அவர் நிதானத்தை இழந்து பேருந்தை தாறுமாறாக ஓட்டியதால், பயணிகள் அலறியுள்ளனர். இதையடுத்து பேருந்தில் குடும்பத்துடன் பயணம் செய்த தேனியைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் சுல்தான் இப்ராஹிம், மாற்று ஓட்டுநராக மாறி பேருந்தை தொடர்ந்து ஓட்டிச் சென்றார். போதையில் இருந்த மதிப்புராஜா வத்தலகுண்டில் இறக்கிவிடப்பட்டுள்ளார். தொடர்ந்து பேருந்தை திண்டுக்கல்லுக்கு ஓட்டிச் சென்ற சுல்தான் இப்ராஹிம், பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகப் பணி மனையில் பேருந்தை நிறுத்திவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அரசுப் போக்குவரத்துக் கழக தேனி மண்டல மேலாளர் ஆனந்தனிடம் கேட்டதற்கு, பேருந்து ஓட்டுநர் மது போதையில் இருந்ததால், மாற்று ஓட்டுநர் மூலம் பேருந்து இயக்கப்பட்டது. போதையில் இருந்த ஓட்டுநர் மதிப்புராஜாமீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.