Home Blog Page 6213

“ஒற்றுமையும் அன்பும்” (பெரியவாளின் புரட்சி கருத்து)

“ஒற்றுமையும் அன்பும்” (பெரியவாளின் புரட்சி கருத்து) இவ்வார கல்கி.

9caee5bec77d7d2052f7de2c550db634 - 2026

இப்போது ஊருக்கு ஊர், பேட்டைக்குப் பேட்டை பஜனை கோஷ்டி இருக்கிறது. இந்த கோஷ்டிக்காரர்களே வார வழிபாட்டையும் மற்ற பரோபகார காரியங்களையும் எடுத்து நடத்த வேண்டும். ச்ரத்தையாக உழைக்க கூடியவர்கள், பண விஷயத்தில் நாணயமாக இருக்கக் கூடியவர்கள், ‘இவர்கள் சுத்தமானவர்கள்’ என்று ஸமூஹத்துக்கு நம் பகமாக இருக்கிறவர்கள் ஒரு பத்து பேர் அங்கங்கே சேர்ந்துவிட்டால் போதும். ஊர் உலகத்தில் ஒரு குறைவில்லாமல் பொதுநலக் காரியங்கள் ஜாம்ஜாம் என்று நடந்துவிடும். பணியில் சேர்கிறவர்கள், பணியால் பயனடைகிறவர்கள் (Benefi-ciaries) இரண்டிலும் ‘ஜாதி’ என்ற அம்சமே இருக்கக் கூடாது. பணக்காரன் ஏழை, படித்தவன்-படிக்காதவன் எல்லோரும் ஒன்றுசேர்ந்து செய்கிற முறையில் இது ஒன்றிலாவது நேராகவோ, மறைமுகவோ ‘கம்யூனல் ரெப்ர ஸென்டேஷன்’ (ஜாதிவாரிப் பிரதிநிதித்வம்) இல்லாமல் காரியம் நடக்க வேண்டும். ஜாதிகளையெல்லாம் ஒன்றாக்க வேண்டும் என்று ஆரம்பித்தால்தான் சண்டை ஜாஸ்தியாகிறது! ஆரியன்-திராவிடன் பேதமில்லை என்று சொல்லி ஸௌஜன்யத்தை உண்டாக்க வேண்டும் என்று நல்லெண்ணத்தோடு ஆரம்பித்தால் கூட, உடனே இதற்கு ஹிஸ்டாரிகலாக (சரித்திரபூர்வமாக), எத்னாலாஜிகலாக (இன-இயல்-ரீதியில்) ஆக்ஷேபணைகள் வந்து ஒரே வாதச் சண்டையாகிறது! ஆனதால் வர்தத்தால் ஒற்றுமையை ஸ்தாபிக்க யத்தனம் செய்யமால், ஒற்றுமைக்காகப் பாடுபடுகிறோம் என்றுகூட இல்லாமல், இப்படிப் பல பொதுக் காரியங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லாரும் சேர்ந்து அவற்றைச் செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் ஸௌஜன்யமும் உண்டாகிவிடும். 295603_479182172136829_1054166438_n

டாஸ் வென்று இந்தியா முதல் பேட்டிங்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் காலிறுதிப் போட்டியில் இந்தியா வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி, எம்.சி.ஜி. எனப்படும் மிகப் பழைமையான மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி மிகவும் முக்கியம் வாய்ந்த போட்டி என்பதால், மிகவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். இதை அடுத்து இந்திய அணி முதலில் களம் இறங்கியது.

“எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் வாழ்வில் ஏழுமலையானும், மகா பெரியவாளும் நடத்திய நெகிழவைக்கும் நாடகம்!”

295603_479182172136829_1054166438_n10464395_10202990041086451_8952509341741983225_n “எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் வாழ்வில் ஏழுமலையானும், மகா பெரியவாளும் நடத்திய நெகிழவைக்கும் நாடகம்!” (இன்று முதல் பகுதி-1) திரு இந்திராசௌந்திரராஜன் பொதிகையில் 18-03-2015 காலை 07-15க்கு சொல்லிய அற்புத நிகழ்வு. அவர் சொற்பொழிவு 19-03-2015 இதன் இரண்டாம் பகுதி தொடர்கிறார்) (வலையில் கிடைத்த ஒரு பொக்கிஷம்-கட்டுரை மிகப் பெரிதாக இருப்பதால் இரண்டு நாள் தொடரும்) தன்னையே அனுதினமும் துதித்து வந்த ஆனால் தன்னிடம் எதையுமே எதிர்பாராமல் வாழ்ந்து வந்த தன் உன்னத பக்தை இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் வாழ்வில் அந்த ஏழுமலையானும் காஞ்சி மகாபெரியவாவும் நிகழ்த்திய நெஞ்சை உருகவைக்கும் நாடகம் இது. “அன்புள்ள பிரசாத், ஆசிகள். உதாரணத் தம்பதிகளாக திகழ்ந்து வரும் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியும் சதாசிவமும் தற்போது தீவிரமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களுக்கு உடனடியாக ஏதேனும் உதவி செய்யவேண்டும். ஏதாவது திட்டம் வகுத்து அவர்கள் தங்கள் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.” 1979 ஆம் ஆண்டு வாக்கில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அப்போதைய செயல் அதிகாரியாக இருந்த பி.வி.ஆர்.கே.பிரசாத் அவர்களுக்கு காஞ்சி பரமாச்சாரியாரிடமிருந்தும் புட்டபர்த்தி சத்யா சாய்பாபாவிடமிருந்தும் மேற்படி தகவல் அடங்கிய தந்தி வந்தது. ஹிந்து சமயத்தின் இருபெரும் சிகரங்களாக திகழ்ந்த இவர்களின் மேற்கூறிய வரிகள் எவரையுமே ஒருகணம் அசைத்துப் பார்த்துவிடும் எனும்போது பிரசாத் எம்மாத்திரம்? அதிர்ச்சியில் உறைந்தார். ஆனால், பிரசாத்துக்கு தந்தியை யார் அனுப்பியிருக்கிறார்கள் என்பதில் அதிர்ச்சியில்லை. அதில் கூறப்பட்டிருந்த விஷயம் தான் அதிர்ச்சியளித்தது. “என்ன ஆச்சு எம்.எஸ். அம்மாவுக்கு… அதுவும் காஞ்சி பெரியவர் சாய்பாபா இரண்டுபேருமே தலையிடுற அளவுக்கு நிலைமைமோசமா?” மனம் பதைபதைத்தது. அது மட்டும் இல்லை எம்.எஸ்.க்கு உதவி செய்ய ஏன் பிரசாத் அவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்? பல கேள்விகள். இசையரசி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மிக்கு உலகம் முழுதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தங்களது அபிமான பாடகிக்கு இப்படியொரு பிரச்னை என்றால் அவர்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள். ஆனால், எம்.எஸ். அவர்கள், தான் கேட்காமல் தானாக வரும் எந்த உதவியையும் பெறவிரும்பமட்டார்கள். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே அல்லவா? யாரிடமும் எந்த உதவியும் பெற எம்.எஸ். அவர்கள் விரும்பாத இப்படிப்பட்ட சூழ்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் உடனடியாக ஏதேனும் செய்து, எம்.எஸ். அவர்களின் நெருக்கடியை போக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதற்கு முன்பு திருமலை தேவஸ்தானம் இது போன்ற அசாதாரண சூழ்நிலைகள் பலவற்றை சந்தித்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையை கையாள பிரசாத்தை தவிர பொருத்தமான ஆள் வேறு யாரும் கிடையாது. எனவே தான் பிரசாத்திடம் இந்த பொறுப்பை ஒப்படைத்தார் காஞ்சி பெரியவர். சரி… எம்.எஸ். அம்மாவுக்கும் சதாசிவத்துக்கும் என்ன ஆச்சு? உடனடியாக சென்னையில் உள்ள தனது நம்பிக்கைக்குரியவர்களை வைத்து பிரசாத் ஒரு ரகசிய விசாரணையில் இறங்கினார். அதில் அவருக்கு கிடைத்த தகவல் என்னவென்றால் : எம்.எஸ்.சுப்புலட்சுமி, சதாசிவம் தம்பதிகள் தங்களது கல்கி எஸ்டேட்டை விற்றுவிட்டு வள்ளுவர் கோட்டம் அருகே ஒரு வாடகை வீட்டில் குடியேறியிருக்கின்றனர் என்பதே. கல்கி பத்திரிக்கையை திரு.சதாசிவம் நடத்திவந்த காலகட்டம் அது. எதிர்பாராதவிதமாக பத்திரிக்கை நஷ்டத்தில் மூழ்க, தங்களது கடன்களை அடைக்க, இப்படியொரு முடிவை (கல்கி எஸ்டேட்டை விற்பது) அத்தம்பதிகள் எடுக்க நேர்ந்தது. எம்.எஸ்.அம்மாவின் மிகப் பெரிய ரசிகரான திரு.பிரசாத்தை இத்தகவல் துயரத்தில் ஆழ்த்தியது. கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டே தனது அலுவலகத்தில் உள்ள ஏழுமலையான் படத்தின் முன்பு நின்று, “ஹே…ஸ்ரீனிவாசா…. உன் பஜனைகளையும் கீர்த்தனைகளையும் பக்தியுடன் உலகின் மூளை முடுக்குகளிலெல்லாம் சென்று பாடி வந்தவர் எம்.எஸ். அவர்கள். அவருக்கு தனது இறைபணியில் மிகவும் உறுதுணையாக இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவந்தவர் சதாசிவம் அவர்கள்.” “உலகம் முழுதும் எம்.எஸ்.அம்மா பல நிகழ்சிகள் நடத்தியிருக்கிறார். அவர் என்ன தொகை கேட்டாலும் கொட்டிக்கொடுக்க பலர் தயாராக இருந்தபோது, எனக்கு இவ்வளவு வேண்டும் என்று கேட்க்காமல், அவருக்கு என்ன தரப்படுகிறதோ அதைக்கொண்டு அமைதியாக மனநிறைவாக வாழ்ந்துவந்தவர் எம்.எஸ். இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தனக்கு கிடைத்த வருவாயை பெரும்பாலும் அவர் தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் பல்வேறு தர்ம காரியங்களுக்கே திருப்பி கொடுத்தவர். யாருக்கு வரும் இப்படி ஒரு மனது? அவருக்கு இப்படி ஒரு பிரச்னை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் நீ என்ன செய்யப்போகிறாய் பாலாஜி?ஏன் இப்படி அமைதியாக இருக்கிறாய் ? இது உனக்கே சரியாகப் படுகிறதா?” (1963 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் எம்.எஸ்.அவர்களின் குரலில் வெங்கடேச சுப்ரபாதத்தை வெளியிட்டனர். மணவாள மாமுனிகளின் சிஷ்யராக விளங்கிய காஞ்சிபுரத்தை சேர்த்த பிரதிவாதி பயங்கரம் அனந்தாச்சாரியார் என்பவரால் 14 ஆம் நூற்றாண்டு இயற்றப்பட்டது இந்த வெங்கடேச சுப்ரபாதம். இந்த பாடலின் விற்பனை மூலம் தனக்கு வரும் ராயல்டி அனைத்தையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வரும் வேத பாட சாலைக்கே கிடைக்கும்படி செய்துவிட்டார் எம்.எஸ். என்பது குறிப்பிடத்தக்கது.) “சுவாமி… மானமே பெரிதென்று வாழும் உத்தம தம்பதிகள் அவர்கள். யாரிடமும் எந்த உதவியும் எதிர்பார்க்க மாட்டார்கள். கேட்கவும் மாட்டார்கள். உன்னிடம் கூட. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீ எப்படி எம்.எஸ். அவர்கள் இனி சராசரி வாழ்க்கையை வாழ்வார் என்று எதிர்பார்க்கலாம்? எனக்கு உண்மையில் அவர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. ஏழுமலையானே… நீ தான் தலையிட்டு உடனடியாக அந்த திவ்ய தம்பதிகளுக்கு ஏதேனும் உதவிடவேண்டும்!”இப்படி ஸ்ரீனிவாசனிடம் மனமுருக வேண்டிக்கொண்டார் பிரசாத். அடுத்து ஒரு நொடியை கூட வீணாக்காது, உடனடியாக திருமலை தேவஸ்தானத்தின் அவசர கூட்டத்தை கூட்டினார் பிரசாத். கூட்டத்தில் எம்.எஸ். அவர்களுக்கு எந்த விதத்தில் உதவ முடியும் என்று ஆலோசிக்கப்பட்டது. ஒரு மித்த குரலில் அனைவரும் சொன்னது இதைத்தான். “சார்… எம் எஸ்.- சதாசிவம் தம்பதிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையை கண்டு நாங்கள் வருந்துகிறோம். உங்களுக்கே தெரியும் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள் தான் நம் தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வான். அவர் ஏற்கனவே நமது தேவஸ்தானத்தின் பல சிறப்புக்களை கௌரவங்களை பெற்றுவருகிறார். எங்கள் எல்லாருக்கும் அவரது இந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்ய விரும்பினாலும், நம்மால் எதுவும் செய்யமுடியாது என்றே நினைக்கிறோம். நாமாக எந்தவொரு முடிவையும் தன்னிச்சையாக எடுக்கமுடியாது. மேலும் அறநிலையத்துறைக்கு நாம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம்!” என்றனர். கோடிக்கணக்கான மக்களை தனது இசையால் மகிழ்விக்கும் இசையரசிக்கு உடனடியாக ஏதேனும் செய்தே தீரவேண்டிய ஒரு சிக்கலான சூழ்நிலையில் இப்படி பிரச்னை மேலும் சிக்கலாகிறதே… என்று பிரசாத் தவித்த சூழ்நிலையில்… ஏழுமலையான் தலையிட்டான். எம்.எஸ். அவர்களின் வாழ்க்கையில் ஏழுமலையான் எந்தளவு சம்பந்தப்பட்டுள்ளான் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. வணக்கத்திற்குரிய அந்த தம்பதிகளுக்கு உடனடியாக எதுவும் செய்ய முடியவில்லையே என்று மிகவும் மனமுடைந்த நிலையில் அன்று மாலை ஏழுமலையானை தரிசிக்க பிரசாத் செல்கிறார். வழக்கமாக பணிமுடிந்து வீட்டுக்கு செல்வதற்கு முன்பு ஏழுமலையானை தரிசித்துவிட்டு செல்வது அவர் வழக்கம். ஏழுமலையானை தரிசித்துவிட்டு வெளியே வரும்போது நடந்த அந்த நிகழ்ச்சி இந்திய இசைத்துறையில் மிகப்பெரிய புரட்சிக்கு வித்திட்ட ஒன்று. அப்படி என்ன நடந்தது எப்படி நடந்து? அவர் வெளியே வரும்போது பிரகாரத்தின் ஓரத்தில் எங்கிருந்தோ வந்த ஏழை பக்தர்கள் சிலர் அன்னமாச்சாரியாவின் கீர்த்தனைகளை மனமுருக பாடிக்கொண்டிருந்தனர். எம்.எஸ். அவர்களை பற்றிய சிந்தனையிலேயே நடந்து வந்துகொண்டிருந்த திரு.பிரசாத், அவர்களை கடந்து செல்லும்போது, யாரோ தன்னை தடுப்பது போல ஒரு கணம் உணர்ந்து அங்கு நின்றார். அந்த பஜனைக் கோஷ்டி ஊனையும் உள்ளத்தையும் உருக்கும்படி பாடிக்கொண்டிருந்ததனர். இவருக்கு நாடி நரம்பெல்லாம் சிலிர்த்தது. ஒரு சில நிமிடங்கள் அவர்கள் பாடுவதை கேட்ட திரு.பிரசாத் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டார். மெலிதாக ஒரு புன்னகை புரிந்தார். அதை கண்டு ஏழுமலையான் புன்னகை புரிந்தான். ஏழுமலையான் புன்னகை புரிந்ததால் ஒட்டுமொத்த திருமலையும் புன்னகைத்தது. அது மட்டுமா நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்ச பூதங்களும் புன்னகை புரிந்தன. அந்த புன்னகை தான் எம்.எஸ். அவர்களின் பிரச்னையை தீர்க்க உதவியதோடல்லாமல், இந்திய கிளாசிக்கல் இசை வரலாற்றில் ஒரு அற்புதமான வரலாற்றை செதுக்கியது. எம்.எஸ். அவர்களுக்கு ‘பாரத் ரத்னா’ கிடைக்கவும் காரணமாக அமைந்தது. அடுத்த நாள் காலை, பிரசாத் காஞ்சி புறப்பட்டார். அங்கு நடமாடும் தெய்வமாக திகழ்ந்த மகா பெரியவரை சென்று தரிசித்தார். அவர் முன்பு பவ்யமாக பணிந்து “சுவாமி… எம்.எஸ். அம்மாவை பற்றிய தங்கள் தந்தி கிடைத்தவுடன், எனக்கு என்னவோ போலாகிவிட்டது. உடனடியாக தேவஸ்தானத்தின் அவசர கூட்டத்தை கூட்டி உறுப்பினர்களிடம் ஆலோசனை கேட்டேன். எந்தவொரு உருப்படியான யோசனையும் தோன்றவில்லை. மிகுந்த மன சஞ்சலத்துடன் மாலை எழுமலையானை தரிசிக்க சென்றேன். நான் வெளியே வரும்போது எங்கிருந்தோ வந்த ஏழை பக்தர்கள் சிலர் பிரகாரத்தில் அமர்ந்தபடி அன்னமாச்சாரியாவின்கீர்த்தனைகளைபாடிக்கொண்டிருந்தனர். அவர்களது அபாரமான குரல் வளமை மற்றும் நேர்த்தியான இசையால் வயப்பட்ட நான் ஏனோ தெரியவில்லை அதுவரையில் இருந்த குழப்பம் நீங்கப் பெற்றேன். அந்த நேரம் தான் எம்.எஸ். அவர்களுக்கு உதவிட ஒரு அபாரமான திட்டம் தோன்றியது. உடனே உங்களை சந்தித்து ஆலோசித்து செயல்படுத்த வந்திருக்கிறேன்!” என்றார். பரம்பொருளுக்கு தெரியாதா என்ன நடந்தது என்ன நடக்கப்போகிறது பிரசாத் என்ன தன்னிடம் சொல்லப் போகிறார் என்று., இருப்பினும் எதுவுமே தெரியாதவர் போல, நீ மேலே சொல்லு என்பது போல சைகை செய்தார் காஞ்சி முனிவர். பிரசாத் தொடர்ந்தார் “ஏழுமலையான் மீது பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அற்புதமான கீர்த்தனைகளை அன்னமாச்சாரியா இயற்றியிருக்கிறார். அவற்றில் ஒரு சில தான் ஒலி வடிவில் வெளிவந்துள்ளன. இன்னும் வெளியே வரவேண்டிய பல மாணிக்கங்கள் அதில் உள்ளன. தேவஸ்தானம் இதற்கு முன்பு அவற்றை வெளியே கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால் அது முழுமை பெறவில்லை.” “என்னுடைய திட்டம் என்னவென்றால், திருமலை தேவஸ்தானம் சில அரிய கீர்த்தனைகளை அடையாளம் கண்டு, எம்.எஸ். அவர்களை தேவஸ்தானம் சார்பாக நான் சென்று சந்தித்து தேவஸ்தானதிற்காக அந்த கீர்த்தனைகளை பாடித்தரும்படி கேட்டுக்கொள்ளப்போகிறேன். இதுவரை தியாகராஜரின் கீர்த்தனைகளை தான் எம்.எஸ். அவர்கள் பாடியிருக்கிறார்கள். அன்னமாச்சாரியாவின் கீர்த்தனைகளை அல்ல.” “என்னுடைய திட்டத்திற்கு நிச்சயம் எம்.எஸ். அம்மா ஒத்துழைப்பார்கள். திருமலைக்கு விஜயம் தரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தினமும் அந்த இசைத்தட்டுக்களை விற்பதன் மூலம் தேவஸ்தானத்திற்கு எக்கச்சக்க வருவாய் கிடைப்பதோடல்லாமல், எம்.எஸ். அவர்களுக்கும் ராயல்டி மூலம் போதிய பணம் கிடைக்கும். இப்படி ஒரு வாய்ப்பு அந்த குடும்பத்திற்கு மறுபடியும் கிடைப்பது மிகவும் கடினம். எனவே எம்.எஸ். அம்மாவும் அதற்கு ஒப்புக்கொள்வார்கள் என்றே கருதுகிறேன்.” என்றார் பிரசாத். பிரசாத் சொன்னதை கேட்டு மெலிதாக புன்னகைத்த மகா பெரியவா “பிரசாத், இறைவன் தன்னை எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் எந்த விதத்தில் வேண்டுமானாலும் வெளிப்படுத்திக்கொள்வான். அவன் அந்தர்யாமி. உனக்கு முன் அந்த ஏழைப்பாடகர்களைப் போன்று தோன்றியது அந்த எழுமளையானாகக் கூட இருக்கலாம். அவர்கள் உன்னைத் தவிர வேறு யார் கண்களுக்கும் புலப்படாத அவன் உருவாக்கிய கண்கட்டு வித்தையாக கூட அது இருக்கலாம். ஏன் மனித வடிவம் எடுத்து வந்த கந்தர்வர்களாகக் கூட அவர்கள் இருக்கலாம். மொத்தத்தில் உன் மனக்குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வந்து தெளிவான ஒரு வழியை காட்ட ஏழுமலையான் நடத்திய நாடகமாக கூட அது இருக்கலாம். நீ அந்த பகுதியை தாண்டிச் சென்றவுடன் அவர்கள் மறைந்து இருக்கலாம். யாருக்கு தெரியும்?” என்றார் மர்ம புன்னகை புரிந்தபடி. பரமாச்சாரியார் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பிரசாத்துக்கு பேச்சு மூச்சே வரவில்லை. “இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் அனைத்திற்கும் காரண காரியம் உண்டு. தனக்காக எதையும் எதிர்பார்க்காமல் பல வருடங்களாக தொண்டாற்றி எம்.எஸ்.ஸுக்கு நடக்கும் அனைத்தையும் ஆண்டவன் கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பானா என்ன? அவன் நடத்தும் நாடகத்திற்கு நம்மை கருவியாக பயன்படுத்திக்கொள்கிறான் என்பதே உண்மை. அறியாமையால் அவனை ஒன்றும் சொல்லாதே!” சாட்சாத் அந்த ஆதிசங்கரரின் மறு அவதாரம் என்றே போற்றப்பட்ட மகா பெரியவரின் பாதங்களில் மீண்டும் விழுந்தார் பிரசாத். பிரசாத்தை ஆசீர்வதித்த பரமாச்சாரியார் “உன் யோசனை அற்புதமானது. எம்.எஸ்.ஸுக்கு உலகம் முழுதும் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். தங்கள் அபிமான பாடகிக்கு ஒரு சிறு பிரச்னை என்றால் கோடி உதவிக்கு ஓடிவருவார்கள். ஆனால், எம்.எஸ்.- சதாசிவம் தமபதிகள் மற்றவர்களை போல அல்ல. யாரிடமிருந்து எதையும் அவர்கள் பெறவிரும்பமாட்டார்கள். இதுவரையிலும் தங்களுக்கு தேவையானதை தாங்களே தான் சம்பாதித்துக்கொண்டார்களே தவிர, ஆண்டவனிடம் கூட அவர்கள் எதுவும் கேட்டதில்லை. எனவே அவர்களுக்கு உதவி செய்ய நீ விரும்புவது போல காட்டிக்கொள்ளாமல் இந்த திட்டத்தை அவர்களிடம் கொண்டு செல். நீ அவர்களுக்கு உதவி செய்யவே இந்த திட்டத்தை தீட்டியிருகிறாய் என்று தெரிந்தால் நிச்சயம் அவர்கள் நிராகரித்துவிடுவார்கள். இது மிகவும் சென்ஸிட்டிவான விஷயம். பார்த்து பக்குவமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வை”பரமாச்சாரியார் ஆசீர்வதிக்க காஞ்சி மடத்திலிருந்து வெளியே வருகிறார் பிரசாத். (நாளை கட்டுரை தொடரும்)

3 கிராமங்களில் அம்மா தி்ட்ட முகாம் :

மார்ச் 20 ஆம் தேதி 3கிராமங்களில் அம்மா திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
20ம் தேதி நெல்லை மாவட்டத்தில் 3 வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம்கள்  நெல்லை வட்டத்திற்குட்பட்ட நாரணம்மாள்புரம் பகுதி 1,சங்கரன்கோவில் வட்டத்திற் குட்பட்ட  நாலந்துலா, அம்பாசமுத்திரம் வட்டத்திற்குட்பட்ட முக்கூடல் ஆகிய கிராமங்களில் நடைபெறவுள்ளது.
எனவே பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு  உதவித்தொகை மற்றும் சான்றிதழ்கள், ரேஷன்கார்டுகள், மனைப்பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் தொடர்பான மனுக்களை கொடுத்து பயன்பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

போலீஸ்காரர்கள் போலீஸ் வேலையை மட்டும் செய்ய வேண்டும்: டிஐஜி முருகன்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்த தொடர் கொ லை சம்பவங்கள் எதிரொலியாக டிஐஜியாக பொறுப்பு வகித்த சுமித்சரண் மற்றும் நெல்லை, தூத்துக்குடி எஸ்பிக்கள் நரேந்திரன் நாயர், துரை ஆகியோர் அதிரடியாக மாற்றப்பட்டனர்.

விழுப்புரம் டிஐஜி முருகன் நெல்லை சரக டிஐஜியாகவும், அதே மாவட்டத்தில் பணியாற்றிய எஸ்பி விக்ரமன் நெல்லை எஸ்பியாகவும் நியமிக்கப்பட்ட னர். இன்று காலை டிஐஜி முருகன், எஸ்பி விக்ரமன் ஆகியோர் நெல்லையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நெல்லை டிஐஜியாக பொறுப்பேற்றுள்ள முருகன், 1997ல் போடி, சிவகாசியில் டிஎஸ்பியாகவும், திண்டுக்கல், தூத்துக்குடியில் ஏடிஎஸ்பி, தொடர்ந்து திருவாரூர் மாவட்ட எஸ்பியாகவும் பணியாற்றினார். பின்னர் சென்னையில் கீழ்ப்பாக்கம், மாதவரம் ஆகிய இடங்களில் துணை கமிஷனராக பணியாற்றினார். தொடர்ந்து சிபிஐயில் 5 வருடங்கள் பணியாற்றினார். பின்னர் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக டிஐஜியாக பணியாற்றினார்.
நெல்லையில் இன்று டிஐஜி யாக பொறுப்பேற்ற பின் முருகன்  கூறியதாவது: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்த சம்பவங்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொண்ட பின்புதான் எதுவும் சொல்ல முடியும். போலீஸ்காரர்கள் போலீஸ் வேலையை மட்டும் செய்ய வேண்டும். எஸ்ஐ, இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பிக்கள் அவரவர்கள் வேலையை சரியாக செய்ய வேண்டும். காவல்துறை யில் பணியாற்றுபவர்கள் அவர வர் பணியை சட்டத்திற்குட் பட்டு கடமையுடன் செய்தால் எந்த பிரச்னையும் ஏற்படாது.

 

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்கள் இந்த்ரதனுஷ் இயக்கத்தின் கீழ் தேர்வு

சென்னை: தமிழ்நாட்டில் கோயம்பத்தூர், காஞ்சிபுரம், மதுரை, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய எட்டு மாவட்டங்களில் மத்திய அரசு இந்திரதனுஷ் இயக்கம் – 201 கீழ் தேர்வு செய்துள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்வதை இடையில் நிறுத்திய அல்லது தடுப்பூசியே போடாத குழந்தைகளை அதிக அளவில் கொண்டுள்ள 28 மாநிலங்களின் 201 மாவட்டங்கள் முதல் கட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.  இந்த இயக்கத்தின் முதல் கட்டமாக மார்ச் 2015 முதல் ஜூன் 2015 வரை நான்கு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும். இரண்டு வயதிற்கும் குறைவான குழந்தைகளும் கர்பிணி பெண்களும் இதன் கீழ் பயன் அடைவர். முதன்மை சுகாதார செயலரின் தலைமையின் கீழ் நோய் தடுப்பிற்கான மாநில செயல்படை மாவட்டங்களில் இந்த இயக்கத்தின் வளர்ச்சியை கண்காணித்து உதவும். பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் முதன்மை சுகாதார செயலர் மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குனர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கானொலி காட்சி மூலம் இது குறித்து விளக்குவர். இதன் பிறகு வருங்கால முகாமிற்கான தயார் நிலைக் குறித்து மறு ஆய்வு கானொலி காட்சி நடைப்பெறும். மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் நோய் தடுப்பிற்கான மாவட்ட செயல்படை வட்டங்கள் / நகர்ப்புற பகுதிகளில் இந்த இயக்கத்தின் வளர்ச்சியை கண்காணித்து, உதவும். தலைமை சுகாதார அலுவலர் தலைமையில் அனைத்து வட்டார சுகாதார அலுவலர்கள்  திட்டமிடுதல் மற்றும் அறிக்கை செயல்பாடு குறித்த மாவட்ட அளவிலான தயார் நிலைக் கூட்டம் நடைபெறும். வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையின் கீழ் நோய் தடுப்பிற்கான வட்டார செயல்படை வட்டாரங்களில் இந்த இயக்கத்தின் வளர்ச்சியை கண்காணித்து உதவும். அங்கன்வாடி, ஆஷா சகோதரிகள் போன்ற சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். 2014ல் இந்தியாவின் நோய் தடுப்பு சதவீதம் 65 சதவீதமாக இருந்தது. இதனை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 90 சதவீதமாக மாற்றுவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். தடுப்பூசி போட்டுக் கொள்வதை இடையில் நிறுத்திய அல்லது தடுப்பூசியே போடாத குழந்தைகள், குழந்தைப் பருவ நோய், ஊனம், மரணம் வரும் தருவாயில் உள்ள குழந்தைகள் ஆகியோர் இந்திராதனுஷ் இயக்கத்தின் சிறப்பு நோய் தடுப்பு முகாம்கள் மூலம் பயன்பெறுவர். தொண்டை தொற்று நோய், கக்குவான் இருமல், டெட்டனஸ், காசநோய், போலியோ, அம்மை, மஞ்சள்காமாலை ஆகிய ஏழு உயிர் கொல்லி நோய்களுக்கு இந்திரதனுஷ் இயக்கத்தின் கீழ் தடுப்பூசி போடப்படும். கூடுதலாக, ஜப்பானிய மூளைக்காய்ச்சல், இமோபிளஸ் இன்புளுன்சா பி நோய்களுக்கு நாட்டின் தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்கள் / மாநிலங்களில் தடுப்பூசிகள் போடப்படும். கர்பிணி பெண்களுக்கு டெட்டனஸ்கான தடுப்பூசியும் போடப்படும்.

ஆபாசப் படம் பார்த்த நீதிபதிகள் 3 பேர் நீக்கம்

இங்கிலாந்தில் 3 நீதிபதிகளும் நீதிமன்ற பதிவாளர் ஒருவரும் தங்களது அதிகாரபூர்வ கம்ப்யூட்டரில் ஆபாசப் படம் பார்த்ததாக புகார் எழுந்தது. மாவட்ட நீதிபதி டிமோத்தி பவுல்ஸ், குடியேற்றப் பிரிவு நீதிபதி வாரன் கிரான்ட், மாவட்ட துணை நீதிபதி பீட்டர் புல்லக், பதிவாளர் ஆன்ட்ரூ மாவ் ஆகியோர் இந்தப் புகாரில் சிக்கினர்.இவர்கள் மீது நீதிபதிகளின் நடத்தை தொடர்பான விசாரணைக் குழு விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் நான்கு பேரும் ஆபாசப் படம் பார்த்தது உறுயானது. இதையடுத்து, 3 நீதிபதிகளும் நீக்கப் படுவதாக விசாரணைக் குழு அறிவித்துள்ளது. ஆனால், விசாரணை முடிவடைவதற்கு முன்பே பதிவாளர் ஆன்ட்ரூ மாவ் ராஜினாமா செய்து விட்டார். ஆயினு, நான்கு பேரும் குழந்தைகளின் ஆபாசப் படத்தையோ, சட்ட விரோதமானதையோ பார்க்கவில்லை என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. இருப்பினும் அவர்கள் செய்ததுமன்னிக்க முடியாதது என்றும் அந்த விசாரணைக் குழு கூறியுள்ளது.

காஞ்சனா 2

[Best_Wordpress_Gallery id=”9″ gal_title=”Kanchana-2″]

வெற்றி நாயகனாக வலம் வந்தும் தோல்வியின் சோகத்தில் வெளியேறிய சங்ககரா

  sangakkara உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆனால், பல போட்டிகளில் வெற்றி நாயகனாக வலம் வந்தவர், இந்தத் தொடரில் முதல் நபராக 500 ரன்களைக் கடந்தவர், இந்தப் போட்டியில் தனியாளாக நின்று அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தவர் என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் சங்ககரா, தோல்வியடைந்த மனவருத்ததில் இன்று வெளியேறினார். இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி முதலில் விளையாடி அனைத்து விக்கெட்களையும் இழந்து 133 ரன் மட்டுமே எடுத்தது. இதில் 7 பேர் சுழற்பந்துக்கு ஆட்டமிழந்தனர். சங்ககரா மட்டுமே 45 ரன் எடுத்தார். பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 18 ஓவரில் வெற்றிக்குத் தேவையான 134 ரன்னை ஒரு விக்கெட் மட்டுமே இழந்து பெற்றது. இந்த உலகக் கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து தாம் ஓய்வு பெறப்போவதாக சங்ககரா முன்னர் அறிவித்திருந்தார். ஆனாலும் அவர் முதல் நபராக 500 ரன் இந்த உலகக் கோப்பைத் தொடரில் பெற்று சாதனை படைத்தார். இந்நிலையில், அவர் தனது ஓய்வு முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அணித் தலைவரும் ரசிகர்களும் கேட்டுக் கொண்டனர். இது குறித்து எந்த பதிலும் சங்ககரா கூறவில்லை என்றாலும், இன்றைய போட்டியில் அவர் ஒற்றை ஆளாக இலங்கையை நல்ல ஸ்கோர் எடுக்க வைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இருப்பினும் தோல்வியே கிடைத்தது.

உடன்குடி மின் திட்ட ஒப்பந்தபுள்ளி முறைகேட்டு விசாரணைக்கு கருணாநிதி வலியுறுத்தல்!

சென்னை: உடன்குடி மின் திட்டத்தில் விடப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை மேற்கொண்டால் பல்வேறு உண்மைகள் வெளிவரும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: ”தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் மத்திய அரசு நிறுவனமான பாரதமிகு மின் நிறுவனம் (பி.எச்.இ.எல்.) மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து 8,362 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு யூனிட்டுகள் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமும் அனுமதி பெற்று, நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து, 22–2–2009 அன்று “உடன்குடி பவர் கார்பரேஷன் லிமிடெட்” நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்று, அதன் பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்திலே அமைந்தது. அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், உடன்குடியில் பி.எச்.இ.எல். நிறுவனமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தை முழுவதுமாக 2012ஆம் ஆண்டு ரத்து செய்து விட்டு, தமிழக மின் வாரியம் மட்டும் தனித்தே அந்த திட்டத்தை தொடங்கப்போவதாகவும், 660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு யூனிட்டுகள் அமைக்கப்படுமென்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 24–2–2012 அன்று அறிவித்தார். இதற்காக டெண்டர் விடும் பணிகள் 2013ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்டன. இதில் மத்திய அரசு பொது நிறுவனமான பி.எச்.இ.எல்., மற்றும் சீனாவை சேர்ந்த மூன்று நிறுவனங்கள் உட்பட நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த மின் நிலையத்திற்காக திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள 700 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம், மின் வாரியத்திற்கு உரிமை மாற்றமும் செய்யப்பட்டது. தனியாருக்கு சொந்தமான 250 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டார்கள். 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொழில்நுட்ப புள்ளி ஒப்பந்தம் திறக்கப்பட்டதில், சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனமும், ‘பெல்’ (பி.எச்.ஈ.எல்.) நிறுவனமும் தேர்ந்தெடுக்கப்பட்டன. தொழில்நுட்ப புள்ளி ஒப்பந்தம் திறக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் விலைப்புள்ளி ஒப்பந்தம் திறக்கப்பட வேண்டும். ஆனால் நீண்ட இழுபறிக்கு பின், 2014ஆம் ஆண்டு நவம்பரில் தான் விலைப்புள்ளி திறக்கப்பட்டது. இதில் பி.எச்.இ.எல். மற்றும் சீனா நிறுவன டெண்டர்கள் மட்டும் பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்பட்டது. அதிகாரிகள் ஒரு முடிவும், அரசு ஒரு முடிவும் தெரிவித்ததால், அந்த டெண்டரை யாருக்கு முடிவு செய்வது என்பதில் குழப்பம் கடந்த ஓராண்டு காலமாக நீடிப்பதாக சொல்லி வந்தார்கள். மின் வாரிய அதிகாரிகள் தேர்வு செய்த நிறுவனத்திற்கு, பணி ஆணை வழங்க, தமிழக அரசுக்கு விருப்பமில்லை என்று கூறப்பட்டது. உடன்குடி டெண்டர் பற்றிய கோப்புகளை தலைமைச்செயலகத்தில் உள்ள அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகளிடமிருந்து பெற்று, எரிசக்தி துறைச்செயலர் அலுவலகத்தில் பரிசீலித்திருக்கிறார்கள். மின் வாரிய அலுவலகத்தில் 13–3–2015 அன்று மாலையில் நடைபெறுவதாக இருந்த இயக்குனர் குழுக்கூட்டமும், தலைமைச்செயலகத்திற்கு மாற்றப்பட்டு, அங்கே அந்த கூட்டம் நடைபெற்றிருக்கிறது. அந்த கூட்டத்தில் மின்வாரிய இயக்குனர்களை அனுப்பி விட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டும் கலந்து பேசி, உடன்குடி மின் நிலைய கட்டுமான பணிக்கு ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட டெண்டரை ரத்து செய்து விட்டு, புதிதாக டெண்டர் வெளியிட அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக ஏடுகளில் செய்தி வெளிவந்துள்ளது. டெண்டர் ரத்து செய்யப்பட என்ன காரணம்? “10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத இந்த டெண்டரை ரத்து செய்யவும்” என்று வலியுறுத்தல் வந்தது தான் காரணமா? இந்த இரண்டு நிறுவனங்களும் ஒப்பந்த புள்ளி விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்பதால் அவை ரத்து செய்யப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. ஒப்பந்த புள்ளி விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்றால் ஒப்பந்த புள்ளி திறக்கப்பட்டு இவ்வளவு மாதங்கள் முடிவெடுக்காமல் காலதாமதம் ஏன் செய்தார்கள்? உடனடியாக அறிவித்திருக்கலாம் அல்லவா? உடன்குடி அனல் மின்நிலைய கட்டுமான பணிகளை, 2013ல் தொடங்கி, 2017ல் முடிக்க, மின் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டனர். அதனால் 1,320 மெகா வாட் மின்சாரம் கிடைக்க வாய்ப்பு இருந்தது. தற்போது அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு விட்ட காரணத்தால், புதிதாக டெண்டர் விட்டு, அது யாருக்கு என்பது முடிவாகி, கட்டுமான பணிகள் முடிவுற்று மின்சாரம் கிடைக்க மேலும் நான்காண்டுகள் தாமதமாகும். திட்டச்செலவும் தற்போது 10,121 கோடி ரூபாயிலிருந்து 15 ஆயிரம் கோடி ரூபாயாக அ.தி.மு.க. அரசின் கடும் தாமதம் காரணமாக ஏற்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டில் டெண்டர் கோரப்பட்டது. அது எப்போது திறக்கப்பட்டது? திறக்கப்பட்ட பிறகு எத்தனை மாதங்களாகின்றன? ஏன் இந்த தாமதம்? தாமதத்திற்கு யார் பொறுப்பு? இந்த தாமதத்திற்கு மின் துறை அமைச்சரும், சில குறிப்பிட்ட அதிகாரிகளும் தான் காரணம் என்பது உண்மையா? தனியார் நிறுவனங்களிடமிருந்து கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதில் காட்டப்படும் உற்சாகம் தான் தாமதத்திற்கும், இறுதியில் ரத்து செய்ததற்கும் காரணம் என்று சொல்லப்படுவது உண்மையா? இதனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு கோடி ரூபாய்? இந்த இழப்புக்கு யார் காரணம்? மின்சார வாரியமா? தலைமைச்செயலக உயர் அதிகாரிகளா? தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை முறைப்படி நிறைவேற்றியிருந்தால் தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது அல்லவா? அவ்வாறு மின் பற்றாக்குறை ஏற்பட்டதால் தானே, வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை தமிழக அரசு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது? மக்கள் மத்தியில் இந்த கேள்விகளுக்கெல்லாம் விளக்கமளித்திட தமிழக அரசு முன் வருமா? இந்த ஒரு டெண்டரில் மட்டும் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விருப்பு, வெறுப்பற்ற விசாரணை நடத்தப்பட்டால் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்; இந்த அரசினர் அதைச்செய்வார்களா?”