Home Blog Page 6297

பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து விவாதிக்க பிப்.22ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்

parliamentபுதுதில்லி: மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் பிப்.23-ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் வரும் பிப்.22-ம் தேதி நடக்கிறது. மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் பிப்/23-ம் தேதி துவங்கி மேம மாதம் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாள் காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் உரையும், அதற்கு அடுத்த இரண்டு நாட்கள், குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதங்களும் நடைபெறும். இந்தக் கூட்டத் தொடரில் நிலக்கரிச் சட்டம், இன்சூரன்ஸ் துறையில் நேரடி அன்னிய முதலீடு, நிலம் கையகப்படுத்துதல் சட்டம் உள்ளிட்ட 6 அவசரச் சட்டங்கள நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. வரும் பிப்ரவரி 26-ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கலாகிறது. பிப்.27ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். குறிப்பாக மிகவும் எதிர்பார்க்கப் படும் பொது பட்ஜெட்டினை வரும் பிப்.28-ம் தேதி நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்கிறார்.

சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது: அரேபிய மத குரு கிளப்பிய சர்ச்சை

muslimguruரியாத்: பூமி சூரியனைச் சுற்றவில்லை; சூரியன் தான் பூமியைச் சுற்றுகிறது என்ற புதிய சர்ச்சையை அரேபிய மதகுரு கிளப்பியுள்ளார். பூமி சுற்றுகிறது. அது சூரியனை வட்ட வடிவில் சுற்றி வருகிறது என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். அதை உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் அது உண்மையல்ல என சவுதி அரேபியா மதகுரு ஒருவர் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். ஷேக் பந்தர் அல்-ஹைபாரி என்ற அந்த மதகுருவிடம் பூமியைப் பற்றி மாணவர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், பூமி சுற்றவில்லை. ஆடாமல் அசையாமல் ஓரிடத்தில் அப்படியே நிற்கிறது. ஆனால், பூமியை சூரியன்தான் சுற்றி வருகிறது; நாம் அனைவரும் சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் சீனா செல்வதாக வைத்துக் கொள்வோம். அப்போது நடுவானில் விமானம் நிறுத்தப்பட்டால் சீனா தானாகவே நம்மை நோக்கி வர வேண்டும். எதிர் திசையில் பூமி சுழல்வதாக இருந்தால் விமானம் சீனாவைச் சென்றடைய முடியாது. ஏனென்றால் சீனாவும் சுழல்கிறதே! என்றார். மதகுருவின் இந்த அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. [su_youtube url=”https://www.youtube.com/watch?v=ZVPmp-g4WlE”]

வெற்றிச் சின்னமாக ஸ்டம்ப்களை இனி யாரும் எடுத்துச் செல்ல முடியாது!

dhony கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றவுடன் அணி வீர்ர்கள் ஸ்டம்பை நினைவுச் சின்னமாக எடுத்துச் செல்வது வழக்கம். இந்த விஷயத்தில், இந்திய கேப்டன் தோனிக்கு இது ஒரு பழக்கமாகவே இருந்துள்ளது. அவர், வெற்றியின் நினைவாக இவற்றை சேகரிப்பது வழக்கம். அது போன்ற பழக்கத்தில், கடந்த ஞாயிறன்று பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை வெற்றிக்குப் பின்னர் தோனி ஸ்டம்ப்களின் மேலிருக்கும் பயில்ஸ்ஸில் ஒன்றை நினைவாகப் பாதுகாக்க எடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த நடுவர் இயன் கோல்ட், தோனியிடம் ஒரு சில வார்த்தைகளைப் பேச பயில்ஸை அவர் மீண்டும் அதே இடத்தில் வைத்து விட்டார். இதற்குக் காரணம், அவை மிகவும் விலை உயர்ந்தவையாக இப்போது உள்ளன என்பதே. இப்போது பயன்படுத்தப்படும் ஸ்டம்ப்கள் எல்.இ.டி. ஹை-டெக் ஸ்டம்ப்கள். இதன் விலை சுமார் ரூ.24 லட்சம். 2 பயில்ஸ்களின் விலை சுமார் ரூ.50,000. எனவே வெற்றியின் நினைவாக ஸ்டம்ப்களையோ, அல்லது பயில்ஸ்களையோ எடுத்துச் செல்ல ஐசிசி-யிடமிருந்து சிறப்பு அனுமதி பெறவேண்டும்.

ஃபேஸ்புக் மூலம் காதலித்து திருமணம்: பணம் பறித்து ஏமாற்றியதாக பெண் மீது கணவர் புகார்

facebook_twitter_crime சென்னை: ஃபேஸ்புக் மூலம் பழகி காதலித்துத் திருமணம் செய்து கொண்டு, பணம் பறித்து ஏமாற்றி மாயமான மனைவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கணவர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். தி.நகர் ஜி.என்.செட்டி தெருவில் வசிப்பவர் கார்த்திகேயன். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் கடந்த 2009 ம் ஆண்டு சென்னை ஆணழகன் பட்டம் வென்றுள்ளார். அதே பகுதியில் உடற்பயிற்சிக் கூடம் ஒன்றை நடத்தி வருகிறார். கார்த்திகேயன், பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்தப் புகார் மனுவில், “கடந்த 2013-ம் ஆண்டு பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த திருப்பூர் வேலம்பாளையத்தை சேர்ந்த பெண்ணுடன் எனக்கு ஃபேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. குடும்பத்தினர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் சொந்த ஊருக்குச் சென்ற அவர், மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார். திடீரென ஒரு நாள் என்னை செல்போனில் தொடர்பு கொண்ட அவர், ‘எனக்கு உன்னுடன் வாழப் பிடிக்கவில்லை. எனக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயமாகிவிட்டது’ என்று கூறினார். அவர் என்னிடம் ரூ. 2.50 லட்சம் வரை ஏமாற்றியிருக்கிறார். பேஸ்புக் மூலம் இளைஞர்களை ஏமாற்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்தப் புகார் குறித்து, பாண்டி பஜார் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி வந்த இலங்கை அதிபர் சிறீசேன கோயிலில் சுவாமி தரிசனம்

திருமலை: இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் சிறீசேன, இன்று காலை திருமலை திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. சிறீசேனவின் வருகையையொட்டி திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்தது. திருப்பதி தரிசனம் முடித்த பின்னர் அவர் சிறப்பு விமானத்தில் இலங்கை திரும்பினார். maithripala-sirisenaஇலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன 4 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்தார். தில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். பின்னர், மனைவி உட்பட 24 பேர் குழுவுடன் பீகார் மாநிலம் புத்த கயாவுக்குச் சென்றார். அங்கே மகாபோதி ஆலயத்தில் புத்தருக்கு ஞானம் கிடைத்த போதி மரத்தின் கீழ் நின்றவாறு சுமார் 15 நிமிடம் பிரார்த்தனை செய்தார். மகாபோதி ஆலயத்தில் 1 மணி நேரமாக பல்வேறு பிரார்த்தனைகளை மேற்கொண்ட அவர், பின்னர் அருகில் உள்ள இலங்கை மடத்துக்குச் சென்றார். அங்கு மகாபோதி கோயில் நிர்வாகம் சார்பாக அவருக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.

பட்டாசு வெடித்ததில் சென்னை விமான நிலைய ஓடு பாதை அருகே தீ விபத்து

chennai-airport-runwayசென்னை பட்டாசுகள் வெடித்ததில், சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதை அருகே புல்வெளியில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில், விமான ஓடு பாதை அருகே விமானங்கள் வந்து சேரும் போதும் விமானம் கிளம்பிச் செல்லும் போதும் அருகே பறக்கின்ற பறவைகளை அச்சுறுத்தி விரட்டுவதற்காக பட்டாசுகள் வெடிக்கப்படும். இது வழக்கமான செயல்தான். இன்று கோயம்புத்தூரில் இருந்து வந்த தனியார் ஜெட் விமானம் ஒன்று தரை இறங்குவதற்கு முன்பாக இது போன்று பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளது. அப்போது, விமான ஓடுபாதை அருகே இருந்த காய்ந்த புற்களில் பற்றிய தீ, காற்று பலமாக வீசியதால் வேகமாகப் பரவியது. இதை அடுத்து ஓடுபாதையில் ஜெட் விமானம் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. 3 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்த பின்னர் விமானம் அதன் நிறுத்தப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது என அதிகாரிகள் கூறினர்.

மதுரையில் சகாயம் தீவிர விசாரணை: குவாரி அதிபர்கள் மூவர் நாளை ஆஜராக சம்மன்

மதுரை: மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக அரசுக்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமித்தது. அதன்படி அவர் மதுரை மாவட்டத்தில் முகாமிட்டு கிரானைட் முறைகேடு குறித்து தீவிர விசாரணையை நடத்தி வருகிறார். 6 கட்ட விசாரணை முடிந்த நிலையில் தனது இறுதி கட்ட விசாரனையை கடந்த 16–ந்தேதி தொடங்கினார். அதன்படி கிரானைட் குவாரி அதிபர்களை விசாரிப்பதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பினார். அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட குவாரி அதிபர்களின் வக்கீல்கள் நேரில் ஆஜராகி சகாயத்திடம் தங்களது விளக்கத்தை தெரிவித்தனர். நேற்று பி.ஆர்.பி., சிந்து உள்பட 4 கிரானைட் நிறுவனங்களின் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி தங்களது விளக்கத்தை மனுவாக சகாயத்திடம் கொடுத்தனர். அதில் கிரானைட் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதால் தங்களால் விரிவாக பதில் அளிக்க முடியாது என்று கூறி சில விளக்கத்தை மட்டுமே மனுவில் தெரிவித்து இருந்தனர். இன்று காலை கோரமண்டல் கிரானைட் நிறுவனம் சார்பில் அந்த நிறுவனத்தின் வக்கீல் சகாயத்திடம் ஆஜராகி விளக்கத்தை அளித்தார். இதேபோல் எம்.எஸ். கிரானைட் நிறுவன மேலாளர் கோகுல் தங்களது விளக்கத்தை சகாயத்திடம் தெரிவித்தார். இதேபோல் நாளை கிரானைட் முறைகேடு தொடர்பாக பதில் அளிக்குமாறு முன்னாள் மத்திய மந்திரி அழகிரியின் மகன் துரைதயாநிதி இயக்குநராக இருந்த ஒலிம்பஸ் கிரானைட், பி.ஆர். கிரானைட் உள்பட 3 நிறுவனங்களின் அதிபர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கன் அணியை 105 ரன்னில் வீழ்த்தியது வங்கதேசம்

ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் இன்று நடைபெற்ற உலகக் கோப்பை லீக் சுற்று ஆட்டத்தில், வங்கதேச அணி, ஆப்கானிஸ்தான் அணியை 105 ரன்னில் வீழ்த்தியது. முதலில் ஆடிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 267 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரகுமான் 71 ரன்னும், ஷகிப் அல் ஹசன் 63 ரன்னும் எடுத்தனர். அந்த அணி 50ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 267 ரன் எடுத்தது. தொடர்ந்து 268 ரன் என்ற இலக்கை நோக்கித் துரத்திய ஆப்கன் அணி, இரட்டை இலக்கத்தைத் தாண்டுவதற்குள் துவக்கத்திலேயே 3 விக்கெட்களை இழந்தது. இதனால் அணியின் ரன் எடுக்கும் வேகம் மட்டுப் பட்டது. இருப்பினும் நடு வரிசையில் சமியுல்லா 42 ரன்னும், நபி 44 ரன்னும் எடுத்தனர். இறுதியில் அந்த அணி 42.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 162 ரன் எடுத்து தோல்வி அடைந்தது.

சென்னையில் தடம் புரண்ட பறக்கும் ரயில்: கடற்கரை-வேளச்சேரி ரயில் சேவை பாதிப்பு!

Mundakakanni-Koil-Mylapore சென்னை: சென்னையில் பறக்கும் ரயில் சேவை வழித் தடத்தில் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் கடற்கரை – வேளச்சேரி இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையேயான ரயில் பாதையில் கடற்கரையில் இருந்து பூங்காநகர் ரயில் நிலையம் வரை தரை வழியாகச் செல்லும். பின்னர் மேலே செல்லும் வகையில் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பூங்காநகர் ரயில் நிலையத்தின் தரைப் பகுதியில் பயணிகள் ரயில் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் கடற்கரை – வேளச்சேரி வழித் தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தண்டவாளத்தில் இருந்து ரயில் விலகிய பகுதியில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெற்கு ரயில்வே மண்டல மேலாளர் பி.கே. மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

உதகை அருகே ஆட்கொல்லி புலி சுட்டுக் கொலை

tigerஉதகை: நீலகிரி மாவட்டம், பாட்டவயல் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் ஒருவரை புலி ஒன்று தாக்கியது. இதில் படுகாயமடைந்த அந்தப் பெண், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இந்நிலையில், அந்தப் புலி குறித்த அச்சம் அப்பகுதி மக்களிடம் அதிகரித்தது. ஏற்கெனவே கடந்த வருடத்தில் பிப்ரவரி மாதம் இதே போல் புலி ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டது. இதேபோல், இந்தப் புலியையும் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் புலியைப் பிடிக்க 10 அதிரடிப்படை பிரிவுகள் செயல்பட்டு வந்தன. இத்தகைய சூழ்நிலையில், கூடலூர், பிதர்காடு பகுதியில் பதுங்கியிருந்த ஆட்கொல்லி புலியை அதிரடிப்படையினர் இன்று சுட்டுக் கொன்றனர்.