Home Blog Page 97

அகமதபாதில் விமானம் விழுந்து பயங்கர விபத்து!

air india flight collapsed in ahmedabad - 2026

அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் AI171 விமானம் (போயிங் 787 டிரீம் லைனர்) 2025 ஜூன் 12 இன்று பிற்பகல் 1:17 மணிக்கு புறப்பட்ட மூன்று நிமிடங்களில், அதாவது 1:38 மணியளவில், கட்டுப்பாட்டை இழந்து மேகானி நகர் என்ற குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 12 ஊழியர்கள் உட்பட 242 பயணிகள் இருந்தனர், அதில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டவர்கள், 7 போர்ச்சுகல் நாட்டவர்கள் மற்றும் ஒரு கனடியர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் கீழே விழுந்து தீப்பிடித்ததால் பெரும் கரும்புகை வெளியேறியது, மேலும் 133 பேர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது..

விமானி, விமானம் ஆபத்தில் இருப்பதைக் குறிக்கும் வகையில் “மே டே” என்ற அவசர சமிக்ஞையை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியதாகவும், அதன் பின்னர் விமானம் தொடர்பை இழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் டேக்-ஆஃப் சமயத்தில் நிகழ்ந்த முதல் விமான விபத்து என குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்தைத் தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது, மேலும் அனைத்து விமான சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டன. இதனால் இண்டிகோ உள்ளிட்ட விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

விமான விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, விமான விபத்து புலனாய்வு பிரிவு சம்பவ இடத்திற்கு விரைந்தது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோரை அகமதாபாத் செல்ல உத்தரவிட்டார்.

பயணிகளின் உறவினர்கள் தொடர்பு கொள்ள ஏர் இந்தியா 1800-5691-444 என்ற எண்ணையும், பிரிட்டன் அரசு 020-7008-5000 என்ற எண்ணையும் அறிவித்தன. மேலும், 011-2461-0843 மற்றும் 96503-91859 ஆகிய எண்களும் அவசர உதவிக்காக வழங்கப்பட்டன

பெண்களை ‘ஓஸி’ என கேலி பேசும் திமுக.,வினர் இனி வெட்டியாக வீட்டில் அமர்வார்கள்!

annamalai in trichy meeting - 2026

”மகளிரை அவமதிக்கும் தி.மு.க., அரசு இனியாவது திருந்தட்டும்” என தமிழக பாஜக., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள் என பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: 

கட்டணமின்றி பஸ்களில் பயணம் செய்யும் மகளிரை ‘ஓசி’ என்று தி.மு.க.,வைச் சார்ந்த ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது. இதற்கு முன், தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடியும்  இதே போன்று பஸ்களில் கட்டணமின்றி பயணிப்போரை ‘ஓசி’ என்று தரம் தாழ்ந்து விமர்சித்ததும், தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்த் ‘ரூ.1000 வாங்கியதால் தானே பளபளனு இருக்கீங்க’ என்று பெண்களைக் கொச்சையாக விமர்சித்ததும், தி.மு.க., மூத்த அமைச்சர் துரை முருகன் ‘அம்மாவுக்கும் ரூ.1000, பொண்ணுக்கும் ரூ.1000’ என சபை நாகரிகமன்றி விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.

மக்கள் நலனை மேம்படுத்தும் போர்வையில் திட்டங்களை அமல்படுத்தி அதன் விளம்பரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும், பின் பயனாளிகளை ‘ஓசி’ என்று கீழ்த்தரமாக விமர்சிப்பதும் தான் திராவிட மாடல் போலும்!

ஒவ்வொரு முறையும் பெண் பயனாளிகளை விமர்சிப்பதில் காட்டும் முனைப்பை ஓட்டை உடைசலாக இருக்கும் பஸ்களை சரிபடுத்துவதிலோ அல்லது அனைத்து மகளிருக்கும் 1000 ரூபாய் கிடைப்பதை உறுதி செய்வதிலோ தி.மு.க., தலைவர்கள் காட்டாதது ஏன்?

அதிகார மமதையில், எளிய மக்களை எள்ளி நகையாடி ஏளனப்படுத்துவது ஏற்புடையதல்ல! மகளிரை அவமதிக்கும் தி.மு.க., அரசு இனியாவது திருந்தட்டும். – என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை தெரிவித்திருப்பதாவது…

பேருந்தில் டிக்கெட் கட்டணமின்றி பயணம் செய்யும் நமது தாய்மார்களை, ஓசி என்று ஏளனம் செய்த திமுக அமைச்சர் ஒருவர், இன்று அமைச்சர் பதவியிழந்து, வீட்டில் உட்கார்ந்திருக்கிறார். தற்போது, ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு மகாராஜன், மீண்டும் நமது தாய்மார்களை, ஓசி என்று அவமானப்படுத்தியிருக்கிறார்.

மக்கள் நலத் திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்படுவது, மக்களின் வரிப்பணத்தில்தானே, கோபாலபுரத்தில் உங்கள் தலைவர் சேர்த்து வைத்த பணத்திலா செயல்படுத்துகிறீர்கள்? எங்கிருந்து வருகிறது இந்த ஆணவமும் திமிரும்?

வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணமா? மத்திய நிதி அமைச்சகம் சொல்வது என்ன?

upi 1 - 2026

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது என்று, மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. செய்தி ஊடகங்களின் தவறான தகவல்களுக்கு எதிராக அமைச்சகம் விளக்கத்தினை வெளியிட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படும்” என சமூக ஊடகங்களில் பரவிய தகவல் தவறானது என்றும், அனைத்து வங்கி கணக்குகள் மற்றும் வணிக கணக்குகளுக்கும் பரிவர்த்தனை கட்டணம் (MDR) எதுவும் விதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

அண்மையில் ஊடகங்கள் சிலவற்றில் வெளியான செய்திகளில், ₹2,000 அல்லது ₹3,000க்கும் மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணக்கள் வசூலிக்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது. இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்ட நிலையில், மத்திய அரசு இந்தத் தகவல் உண்மையல்ல என்று அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.

இது குறித்து நிதி அமைச்சகம் கூறியது:

“UPI பரிவர்த்தனை முறையில் எந்தவிதமான கட்டணமும் இன்றைய நிலவரப்படி விதிக்கப்படவில்லை. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் அரசின் திட்டம் தொடர்ந்து செயல்படும்.”

NPCI (நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா) தரவுகளின்படி, மாதத்திற்கு 100 கோடிக்கும் மேற்பட்ட UPI பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய கட்டணமில்லாத முறையே இந்த வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

60 ஆண்டுகளுக்குப் பின் நடந்த உசிலை புகழீஸ்வர ஐயனார் கோயில் கும்பாபிஷேகம்!

madurai spiritual news pugazheeswara aiyanar kumbabishekam - 2026

புகழீஸ்வர ஐயனார் கோயிலில் கும்பாபிஷேகம்!

மதுரை, உசிலம்பட்டி அருகே புகழீஸ்வர அய்யனார் கோவிலில் 60 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் வெகுவிமர்சியாக நடைபேற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போலியம்பட்டியில் அமைந்துள்ள புகழீஸ்வர அய்யனார் திருக்கோவிலில் 60 ஆண்டுகளுக்கு பின் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, புதிதாக அர்த்த மண்டபத்துடன் கோவில் கோபுரம் எழுப்பி இன்று கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக கணபதி ஹோமத்துடன் துவங்கிய யாக சாலை பூஜையில் நான்கு கால யாக பூஜைகள் செய்து சிவாச்சாரியார்கள். கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து, மூல ஸ்தானத்தில் உள்ள புகழீஸ்வர அய்யனார், பூர்ணக்கலா, புஸ்பக்கலா சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில், உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக தரிசனம் செய்தனர்., விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விழா கமிட்டியினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

திரௌபதையம்மன் ஆலய பிரஹமோத்ஸவ விழா!

மதுரை சௌராஷ்ட்ரா தர்மராஜா சபைக்கு பாக்கியமான ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் 141வது ஆண்டு ஸ்ரீ மகாபாரத 67வது ஆண்டு பிரஹமோத்ஸவ வைகாசி பெருவிழா அக்னி வசந்த விழா, சௌராஷ்ட்ரா ஹை ஸ்கூல் மைதானத்தில் அக்னி வசந்தம் பூக்குழி இறங்குதல் இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதில், 40 பக்தர்கள் பூக்குழி இறங்கி வந்தனர். விழா குழுவினர் ஏற்பாட்டில், நடைபெற்றது. தலைவர் ஜே டி ஹரி ராம் காரியதரிசிகள் மோதிலால் வாசுதேவன் வழக்கறிஞர் ஸ்ரீராம் ஜெகதீஷ் முத்துக்குமாரசாமி அவர்கள் பக்தர்கள் திரளாக வந்து அம்மனின் அருளாசி பெற்றுக் கொண்டார்கள்.

சக்தி ஆலயத்தில் சிவபெருமான் சிறப்பு பூஜை!

மதுரை அண்ணாநகர், வைகை காலனி கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சக்தி மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இக் கோயிலில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர், பாலமுருகன், சத்ய சாயி பாபா ஆகியோர்களுக்கு சிறப்பு பூஜைகளை, அர்ச்சகர் கோபாலகிருஷ்ணன் செய்தார். இதையடுத்து, கோயில் சார்பில் பக்தர்களுக்கு பால், பஞ்சாமிர்தம் சர்க்கரைப் பொங்கல் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை , ஆலய நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

சொக்கையா சுவாமி மடத்தில் பௌர்ணமி பூஜை அன்னதானம்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகில் சொக்கையா ஜீவசமாதி மடத்தில் பௌர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. இந்த பூஜையையொட்டி, சொக்கையா சுவாமி விநாயகர் முருகன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகளுடன் அலங்காரம் செய்யப்பட்டது. இதில், கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதன் பூஜை மற்றும் ஏற்பாடுகளை சொக்கையா சாமி மட நிர்வாகத் தலைவர் மணிகண்டன் செய்திருந்தார்.

இனி, தத்கால் டிக்கெட் எடுக்க ஆதார் இணைப்பு அவசியம்!

railway news - 2026
#image_title

ஆதாரை இணைத்தால் மட்டுமே இனி தத்கால் டிக்கெட் எடுக்க முடியும் என்று, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே பயனர்கள் இனி, ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும்.

ஜூலை 1ம் தேதி முதல் ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்ட பயனர் மட்டுமே தத்கால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளதால், பயனர்களுக்கு விரைவில் டிக்கெட் உறுதியாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்வே தத்கால் டிக்கெட் திட்டத்தில் புதிய மாற்றங்கள் கொண்டு வந்துளது ரயில்வே அமைச்சகம். இதன்படி, ஆதார் எண் டிக்கெட் பதிவுகளுக்கு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் 01 ஜூலை 2025 முதல் அமலுக்கு வருகிறது.

இந்திய ரயில்வே தத்கால் டிக்கெட் (Tatkal) திட்டத்தில் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, கீழ்க்காணும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஜூலை 1 முதல், IRCTC இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் தத்கால் பயணச்சீட்டு முன்பதிவு ஆதார் உறுதிப்படுத்திய பயனர்களால் மட்டும் முன்பதிவு செய்யலாம். 2025 ஜூலை 15 முதல், ஆதாருடன் OTP அடிப்படையிலான உறுதிப்பாடு கட்டாயமாகும்.

ஐ.ஆர்.சி.டி.சி.யும், பயண முகவர்களும் OTP அடிப்படையில்தான் டிக்கெட் வெளியிட முடியும்! அதிகாரபூர்வ PRS கவுன்டர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற முகவர்கள் பயனர் மொபைலுக்கு அனுப்பப்படும் OTPயை உறுதிப்படுத்திய பின்பே தத்கால் பயணச்சீட்டு முன்பதிவு வழங்க முடியும். இது 2025 ஜூலை 15 முதல் நடைமுறைக்கு வரும்.

முதற் 30 நிமிடங்கள் முகவர்கள் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய முடியாது! அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், தத்கால் பயணச்சீட்டுகளை அதன் திறப்பு நேரத்திலிருந்து முதல் 30 நிமிடங்களுக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

குளிர்சாதன வகைகளுக்கு: காலை 10:00 மணி முதல் 10:30 மணி வரை
சாதாரண வகைகளுக்கு: காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரை

இந்த கட்டுப்பாடு நேரடியாக பொதுமக்களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு கிடைக்கும் வாய்ப்பை அதிகரிக்கவே செய்யப்படுகிறது.

தமிழாளுநர் – தமிழக ஆளுநர்!

governor book presenting - 2026

தமிழாளுநர்

தமிழ் வாழ்க என்று வாயொலி எழுப்பிவிட்டு, தமிழ்ப் பண்பாட்டை அழிக்க முயலும் அரசியல்வாதிகளுக்கு மாற்று மருந்தாக வாய்த்திருக்கிறார் நமது தமிழக ஆளுநர் மேதகு திரு. ஆர்.என். ரவி அவர்கள். தமிழ், தனது தாய்மொழியாக இல்லாதபோதிலும், தமிழின் மேன்மையை உணர்ந்து, அதன் செழுமையை உள்வாங்கி, அதன் உள்ளார்ந்த உயிரோட்டத்தைத் தனது பேச்சின் மூலம் பிறருக்கும் பாய்ச்சுகின்ற இந்த மேதை, தமிழகத்தின் ஆளுநர் மட்டுமல்ல, உண்மையிலேயே “தமிழாளுநர்” தான்! தமிழை நன்கு கையாளுகிறார் அல்லவா!

இந்தத் தமிழாழுளுநருடன் மேடையில் அமர்ந்து, அவரது முன்னிலையில் பேசுகின்ற வாய்ப்பு எனக்கு கடந்த 9-ஆம் தேதி, தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் வைகாசி விசாகப் பெருநாளன்று மாலை கிடைத்தது.

அதே தினத்தில் விசாகம் முடிந்து அனுஷமும் பிறந்து விடுகிறது. ஆகையால் தமிழர் மரபுப்படியான வைகாசி அனுஷ தினத்தில் “திருவள்ளுவர் பிறந்த திருநாள்” விழாவுக்கு திருவள்ளுவர் திருநாள் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

அன்புச் சகோதரர் ஸ்ரீ டிவி திரு. பால. கௌதமன், வழக்கம்போல் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்ததுடன் “திருக்குறளில் நிதி மேலாண்மை” என்ற தலைப்பில் நான் சிற்றுரை நிகழ்த்த ஏற்றமிகு வாய்ப்பையும் தந்தார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

நிகழ்வின் உச்சகட்ட சிறப்பு, சிறப்பு விருந்தினர் ஆளுநர் திரு. ஆர்.என். ரவியின் சிறப்புரை. தமிழின் மீதும் தமிழ் வேதமான திருக்குறள் மீதும் அவர் கொண்டிருக்கும் மதிப்பும், பேரார்வமும், பெருஞானமும் அவரது பேச்சில் வெளிப்பட்டுப் பொங்கிப் பிரவாகித்தது. அனைவருக்கும் புரியும் எளிமையான, அதேநேரத்தில் நேர்த்தியான ஆங்கிலத்தில் அவர் உரை நிகழ்த்தினாலும், 10-க்கும் மேற்பட்ட திருக்குறள் பாக்களை ஆங்காங்கே பொருத்தமாக சரியான தமிழ் உச்சரிப்புடன் அவர் மேற்கோள் காட்டியது மெய்சிலிர்க்க வைத்தது. அதுவும் “துண்டுச்சீட்டு” இல்லாமல் இந்தக் குறள்களை சரளமாக அவர் கூறிய விதம், ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு தமிழின் மீதும், திருக்குறளின் மீதும் அவர் கொண்டிருக்கும் உண்மையான பக்தியையும் பறைசாற்றியது.

மனவுறுதியை வலியுறுத்தும் “எண்ணிய எண்ணியாங்கு…” குறளில் தொடங்கி, அமைச்சு, படை குறித்த குறள் அறிவுரைகளையும் அதற்கேற்ற வகையில் “சிந்தூர் நடவடிக்கை” அமைந்த சிறப்பையும் எடுத்துரைத்து, குறள் காட்டும் வழியில் மத்திய மோடி அரசின் செயல்திட்டங்கள் இருப்பதையும் சிலாகித்து, உலகம் முழுவதிலும் பல்கலைக்கழங்களில் “திருக்குறள் இருக்கை” ஏற்படுத்தும் பிரதமர் திரு. மோடியின் முயற்சிகளையும் பாராட்டி, உலக சகோதரத்துவத்துக்கு சனாதன தர்மமும் திருக்குறளும் எடுத்தியம்பும் கருத்துகளையும் விளக்கிக் கூறி, திருவள்ளுவர் ஒரு ரிஷி என்று நிறுவினார் ஆளுநர் திரு. ரவி.

தமிழர் பண்பாட்டுக்கு மாறான மேலைக் கலாசார காலண்டர் அடிப்படையில் ஜனவரி15-இல் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுவதை இடித்துரைத்து, பண்டைத் தமிழ் மரபுப்படி வைகாசி அனுஷத்தின்போதுதான் கொண்டாட வேண்டும் என்று தமிழக ஆளுநர் விடுத்த கோரிக்கையை உண்மைத் தமிழர்கள் உணர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

விழாவில், அனன்யா ஃபவுண்டேஷனில் இலவச டியூஷன் பயிலும் பள்ளிக் குழந்தைகள், திருக்குறள் பாக்களுக்கு அபிநயம் பிடித்து ஆடிய பரதநாட்டியம் வெகு சிறப்பு. சிறப்புரை ஆற்றியபின் கிளம்பிய ஆளுநர், திருக்குறள் பாரதநாட்டியம் என்று அறிந்ததும் திரும்பிவந்து அவையில் அமர்ந்து முழு நடனத்தையும் கண்டு ரசித்து, குழந்தைகளைப் பாராட்டியது மேலும் சிறப்பு.

இந்நிகழ்வைத் தொடர்ந்து வைகாசி அனுஷம்தான் திருவள்ளுவர் பிறந்த நாள் என்பதை விளக்கும் வில்லுப்பாட்டையும், விமரிசையாக, அனன்யா ஃபவுண்டேஷன் மாணவச் செல்வங்கள் நடத்திக் காட்டினர். வரலாற்று, இலக்கியத் தரவுகளுடன் இந்த வில்லுப்பாட்டுக்குப் பள்ளிக் குழந்தைகளைத் தயார்படுத்திய அன்புச் சகோதரர் திரு. வெங்கடாத்ரி மிகுந்த பாராட்டுக்கு உரியவர்.

இவ்விழாவில், “சம்ஸ்கிருத பாரதி” திரு. ராமசந்திரன் அவர்கள், திருக்குறள் கருத்துகள் சம்ஸ்கிருதம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் எதிரொலிப்பதை உரிய சான்றுகளுடன் ரத்தினச் சுருக்கமாக எடுத்துரைத்தது மேலும் ஒரு சிறப்பு.

அத்துடன் திருக்குறள் பரப்பும் தொண்டில் சிறப்புற்று விளங்கும், தேனி சித்பவானந்தர் ஆசிரமத்துக்கு தமிழாகரர் சாமி. தியாகராசன் விருது, ஆளுநர் பொற்கரங்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஆசிரமத்தின் சார்பில் சுவாமி ஞானசிவானந்தர் இந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியை ஜெயந்தி ஐயங்கார் நேர்த்தியாகத் தொகுத்து வழங்கினார். அன்புச் சகோதரர் திரு. செங்கோட்டை ஸ்ரீராம், நன்றி நவின்று, நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

(குறிப்பு: நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, சிறப்பாக நடத்திய ஸ்ரீடிவி குழுவினர் சார்பில், ஆளுநருக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட நூல்களில், திரு. செங்கோட்டை ஸ்ரீராமின் “தமிழர் ஞான மரபில் திருவள்ளுவர்” மற்றும் அடியேன் எழுதிய “பொருள் தரும் குறள்” ஆகிய நூல்களும் இடம்பெற்றிருந்ததால் எனக்கு இரட்டை மகிழ்ச்சி.)

  • பத்மன்

காரியாப்பட்டி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து; இருவர் உயிரிழப்பு!

sivakasi fire works accident - 2026

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா,வடகரை கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் சுமார் 175 பேர் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று புதன்கிழமை பட்டாசு ஆலை தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர்.

இதில் தண்டியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா (38), கல்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த செளன்டம்மாள் (54) W/o ரவி (40)ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் தண்டியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் (40) Wlo முருகன் கணேசன் (50) S/o ஆண்டி முருகன் S/o செல்லப்பன் (45) ஆகிய 3 பேர் காயமடைந்தனர்.

காயம் அடைந்தவர்களை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். பட்டாசாலை வெடி விபத்து நடந்த இடத்தில் காரியாபட்டி தீயணைப்பு துறையினர் இறந்த நபர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் சம்பவ இடத்தில் அருப்புக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏசியின் வெப்ப நிலை: மத்திய அரசு கட்டுப்படுத்துவது ஏன்?

air conditioner ac handling - 2026

வீட்டில் ஏர் கண்டிஷனர் வைத்திருப்பது ஒரு காலத்தில் ஆடம்பரமான விஷயமாக கருதப்பட்டது. ஆனால் புவி வெப்பமயமாதல் காரணமாக இப்போது ஏசி என்பது ஒவ்வொரு வீடு மற்றும் வணிக வளாகத்திலும் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.

இந்த நேரத்தில்தான் ஏசி பயன்படுத்துவதில் புதிய நடைமுறையை கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு.

மத்திய அரசு திட்டம்

வீடுகள், வணிக வளாகங்களில் தற்போது பயன்படுத்தப்படும் ஏசி-க்களில் குறைந்தபட்சமாக 16 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வரை நமக்கு தேவையான வகையில் வெப்ப நிலையை வைத்துக் கொள்ளலாம் என்ற வசதி இப்போது இருக்கிறது.

இதை மாற்றி குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்ஷியஸ் அளவு மற்றும் அதிகபட்சமாக 28 டிகிரி அளவுக்கு இடையே மட்டுமே வெப்ப நிலையை வைத்துக்கொள்ளும் வகையில் மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர்லால் கட்டார் இதை தெரிவித்துள்ளார்.

வீட்டில் நமக்கு வசதியான வெப்ப நிலையில் ஏர் கண்டிஷனரை பயன்படுத்துகிறோம். இதில் மத்திய அரசு ஏன் தலையிட வேண்டும் என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.

ஆனால், நாட்டின் மின் பயன்பாட்டை வைத்து பார்க்கும்போது இதில் அரசுக்கு ஏற்பட்டுள்ள கவலைக்கான காரணத்தை அறிந்துகொள்ள முடியும்.

இந்தியாவைப் பொறுத்தவரை கோடைக் காலங்களில்தான் மின் தேவை அதிகமாக இருக்கிறது. இதற்கு காரணம் ஏர் கண்டிஷனர்கள்.

இந்தியாவில் சுமார் 100 மில்லியன் ஏர் கண்டிஷர்கள் பயன்படுத்தப்படுவதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதோடு ஆண்டுதோறும் புதிதாக 15 மில்லியன் ஏர் கண்டிஷனர்கள் வாங்கப்பட்டு வீடு மற்றும் வணிக வளாகங்களில் பொருத்தப்படுவதாகவும் இந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

50 கிகாவாட்ஸ் மின்சாரம்

கோடை காலத்தில் ஏர் கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதற்காக மட்டும் சுமார் 50 கிகாவாட்ஸ் மின்சாரம் செலவழிக்கப்படுவதாக கூறும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையின் புள்ளிவிவரம்.

இதில் பலரும் அதீத குளிர்ச்சிக்காக 16 டிகிரி செல்ஷியஸ் அளவில் ஏர் கண்டிஷனர்களை பயன்படுத்துவதால் மின் தேவையின் அளவு மேலும் அதிகரிப்பதாக கூறுகிறது.

மாறாக ஏர் கண்டிஷனர்களின் வெப்ப நிலையை 1 டிகிரி செல்ஷியஸ் வரை கூட்டி வைத்தால் மின் தேவையில் 6 சதவீதம் வரை சேமிக்கலாம் என்றும் அந்த புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

ஏர் கண்டிஷனர்களின் வெப்ப நிலையில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதன் மூலம், 2035-ம் ஆண்டுக்குள் 60 கிகாவாட்ஸ் வரை மின்சாரத்தை சேமிக்க முடியும் என்றும், அதனால் புதிய மின் நிலையங்களுக்கான 7.5 டிரில்லியன் ரூபாய் முதலீட்டை சேமிக்க முடியும் என்றும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வை மேற்கோள் காட்டி மத்திய அரசு தெரிவிக்கிறது.

கடந்த கோடைக் காலத்தில் நாட்டின் மொத்த மின் தேவையின் அளவு 250 கிகாவாட்டாக இருந்தது. அது இந்த ஆண்டில் 270 கிகாவாட்டாக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதிலும் ஏசியின் பயன்பாடு முக்கிய பங்கை வகிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டே ஏர் கண்டிஷனர்களின் குறைந்தபட்ச வெப்ப நிலையை 20 டிகிரி செல்ஷியஸாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

22 டிகிரி செல்ஷியஸ்தான் நல்லது

அரசின் கட்டுப்பாடுகள் ஒருபுறம் இருக்க, 22 டிகிரி செல்ஷியஸ் முதல் 28 டிகிரி செல்ஷியஸ் வரையிலான வெப்பநிலையில் ஏசியைப் பயன்படுத்துவதுதான் உடல் நலனுக்கு நல்லது என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வீட்டுக்குள் 22 டிகிரிக்கு குறைந்த வெப்பநிலையில் இருந்துவிட்டு பின்னர் வெளியில் வந்தால் 35 டிகிரி செல்ஷியஸுக்கும் அதிகமான வெப்ப நிலையை உங்கள் உடல் தாங்காது.

அதனால் முடிந்தவரை 22 டிகிரி செல்ஷியஸுக்கு அதிகமான வெப்பநிலையை ஏசியில் செட் செய்துகொள்வது நல்லது என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.

உடல்நிலைக்கு நல்லதோ இல்லையோ, குறைந்த அளவுக்கு ஏசியைப் பயன்படுத்தினால், அது உங்கள் பர்ஸுக்கு நல்லது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். இதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்

  • இளங்கோவன் திருநாவுக்கரசு

சென்னையில் அதிகரிக்கப்படும் மின் வாகன சார்ஜிங் நிலையங்கள்!

ev charging centres in chennai - 2026

மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், தனியார் சார்ஜிங் மையங்கள் மற்றும் ரயில்வே துறையுடன், இப்போது சென்னை மாநகராட்சியும் சார்ஜிங் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.  

இதன் முதல் கட்டமாக சென்னையில் 9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் இணைந்து மேற்கொண்ட சாத்தியக்கூறு ஆய்வுகள் நிறைவு பெற்றுள்ளன.

சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க 9 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

2 வாரத்தில் டெண்டர் கோரப்பட்டு விரைவில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள்:

1) பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோயில் பார்க்கிங்,
2) பெசன்ட் நகர் கடற்கரை பார்க்கிங்,
3) அம்பத்தூர், மங்கல் ஏரி பார்க்கிங்,
4) தியாகராயர் நகர், மாநகராட்சி மைதானம் பார்க்கிங்,
5) தியாகராயர் நகர், சோமசுந்தரம் மைதானம்,
6) செம்மொழிப் பூங்கா, ஆயிரம் விளக்கு,
7) மெரினா கடற்கரை பார்க்கிங்,
8) அண்ணாநகர், போகன் வில்லா பூங்கா,
9) மயிலாப்பூர், நகேஸ்வரா ராவ் பூங்கா.

ரயில் நிலையங்களில் மின் வாகன சார்ஜிங் மையங்கள்

ரயில் பயணிகளின் வசதிக்காக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் அமைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஏற்கெனவே உள்ள சார்ஜிங் வசதிகளை மேம்படுத்தவும், சில ரயில் நிலையங்களில் புதிதாக அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வரும் நிலையில் சிந்தாதிரிப்பேட்டை, மூர்மார்க்கெட், கலங்கரை விளக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி, கோட்டூர்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அடுத்து, செங்கல்பட்டு, திரிசூலம், தரமணி, சென்னை கடற்கரை, ஆவடி, கிண்டி ஆகிய ரயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

சென்னை முழுவதும் உள்ள 28 முக்கிய ரயில் நிலையங்களில் புதிய சார்ஜிங் மையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “பயணிகள் வசதிக்காக அனைத்து ரயில் நிலையங்களிலும் மின்சார இருசக்கர வாகனம் மற்றும் கார்களுக்கு சார்ஜிங் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சிந்தாதிரிப்பேட்டை, சென்ட்ரல் உள்ளிட்ட சில ரயில் நிலையத்தில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கை மின்சார வாகனங்கள் பயன்படுத்தும் பயணிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். விரைவில் இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்” என்றனர்.

இனி ஏசி.,யை இப்படித்தான் பயன்படுத்த முடியும்!

air conditioner ac handling - 2026

ஏசி பயன்பாட்டில் முக்கிய மாற்றம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.

ஏசி பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஏசி-க்களில் குறைந்த பட்ச வெப்ப நிலையை 20 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மாற்ற உள்ளதாக மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் தற்போது பயன்படுத்தப்படும் ஏசி-க்களில் குறைந்தபட்சமாக 16 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் வரை மாற்றியமைக்கும் வசதி உள்ளது.

இந்த நிலையில், ஏசி-க்களில் வெப்பநிலை அளவீட்டை ஒழுங்குபடுத்துவதற்கான குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்குமாறு மாற்றியமைக்க உள்ளதாக மத்திய அமைச்சர் மனோகர் லால் கடடார் தெரிவித்துள்ளார்.

20 டிகிரி செல்சியஸுக்குக் குறைவான அளவையோ, 28 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாகவோ ஏசி-க்களில் இனி அளவை மாற்ற முடியாது. இந்த குறைந்த பட்ச அல்லது அதிக பட்ச அளவீடுகளுடன் தான் ஏசி.,க்கள் விற்பனைக்கு வருமாம்.

இது வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பயன்படுத்தப்படும் ஏசி-க்களுக்கு மட்டுமன்றி கார்களில் பயன்படுத்தப்படும் ஏசி-க்களுக்கும் பொருந்தும் வகையில் இருக்கும்.

பருவநிலை மாற்றம், அதிகரித்துவரும் வெப்பநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், மின்சாரத் தேவையைக் கட்டுப்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் மனோகர்லால் கட்டார் தெரிவித்தார்.