பாம்புகள் வந்து போகும் இடங்களில் பாம்பின் தோல் அங்காங்கே இருப்பதைக் கண்டிருப்போம், அதாவது இதனை பாம்பு சட்டை என்பார்கள், பாம்பு தன் தோலை உரித்துப் போட்டிருக்கும்.
பொதுவாக பாம்பின் உடலை சுற்றி உட்தோல், வெளி தோல் என இரண்டு பகுதிகள் இருக்கும். வெளித்தோலை ஒப்பிடும்போது உட்தோலானது மிகவும் மென்மையானது. வெளித்தோல் மிகவும் கடினமான ஓன்று. பாம்பு தரையில் ஊர்ந்து செல்லும் போது அதன் உடலில் காயங்கள் ஏற்படாமல் இருக்கவே இந்த வெளித்தோல் பயன்படுகிறது.
இந்த வெளித்தோலானது நாட்கள் செல்ல செல்ல மிகவும் கடினமானதாக மாறி பாம்பின் பார்வையை குறைத்து விடுகிறது. இதனாலயே பாம்பு தனது தோலை உரிக்கிறது. தோல் அறிந்த பிறகு மீண்டும் வெளித்தோல் உருவாகிறது. இப்படி ஆண்டுக்கு மூன்றுமுறை தனது வெளித்தோலை உரிக்கிறது பாம்பு.
பாம்பு தோல் உரிப்பதை கண்டிருக்கிறீர்களா? கீழே உள்ள வீடியோ காட்சியில் பாம்பு தனது தோலை உரிக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இதற்கு ஒரு மனிதர் உதவி செய்கிறார்.