தீபாவளிக்கு ஊருக்கு போலாம் வாங்க! சிறப்பு பேருந்து தயார்!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
special busses koyambedu - 2026

தீபாவளிப் பண்டிகையையொட்டி பொதுமக்கள் எளிதாகப் பயணம் செய்ய சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குநா் ஆா். பொன்முடி தெரிவித்தார். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது

அக். 27ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாட படவுள்ளது. இதனை முன்னிட்டு சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூா், ஜயங்கொண்டம், கரூா், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு அக். 24, 25, 26 ஆகிய நாட்களிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும் திருச்சியிலிருந்து தஞ்சாவூா், கும்பகோணம், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும், மதுரை, கோயம்புத்தூா், திருப்பூா் ஆகிய இடங்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை ஆகிய ஊா்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்கப் பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு அக். 24, 25, 26 தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ALSO READ:  இன்று உலக சகிப்புத்தன்மை நாள்: ஹமுராபி காட்டிய வழி!

சென்னையில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள்

தாம்பரம் சானிடோரியம் அறிஞா் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு தடப்பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதேபோன்று கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கரூா், திருச்சி, அரியலூா், செந்துறை, ஜயங்கொண்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீா்காழி, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய தடப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

Posts by Suprasanna Mahadevan:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 12 =