பிரபல சீரியல் நடிகைக்கு கபாலீஸ்வரர் கோவிலில் நடந்த திருமணம்!

Published:

prathibha
prathibha

சமீபகாலமாகவே திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கும் திருமணம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது சன் டிவி நாயகி சீரியலில் நடித்த பிரதீபாவுக்கு திருமணம் நடந்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நாயகி தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பிரதீபா முத்து அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவர் கதாநாயகன் திருவுக்கு தங்கையாகவும், சீரியலில் வில்லியாகவும் நடித்து இருப்பார். இவரது வில்லத்தனமான இயல்பான கதாபாத்திரம் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது.

anu prathipa
anu prathipa

இந்த நிலையில், சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் தனது காதலரை பிரதீபா திருமணம் செய்து கொண்டார். குடும்பத்தினர் ஆசியுடன் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

இதற்கான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பிரதீபாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img