திருமணம் என்றாலே சடங்குகள், சம்பிரதாயங்கள், ஆட்டம், பாட்டம் என கோலாகலமாக களைக்கட்டும். மணமகன், மணமகளுக்கு இநத் தருணம மறக்க முடியாத நிகழ்வாக அமையும்.
அந்த தருணத்தில் ருசிகரமான சம்பவங்கள், எதிர்பாராத நிகழ்வுகள் என பல சர்ப்ரைஸ் காத்திருக்கும். அதுப்போன்ற வீடியோ ஒன்று தான் தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த வீடியோவில் மணமேடையில் மணமக்கள் இருவரும் போட்டோ எடுத்து கொண்டுள்ளனர். அப்போது டார்பன் கட்டிய சிறுவன் ஒருவர் மணமகளுக்கு அருகே நின்று கொண்டிருந்து அவரை பார்த்து ரசித்து சிரித்து கொண்டே இருக்கிறார்.
இதை கவனித்த மணமகளும் அந்த சிறுவனை பார்த்து அருகில் வர அழைக்கிறார். அந்த சிறுவன் வெட்கத்துடன் மணமகளை பார்த்து மீண்டும் சிரிக்கிறான்.
இந்த வீடியோ பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற திருமணத்தில் எடுக்கப்பட்டது போல் உள்ளது. சிறுவனின் தோற்றமும் மணமகளின் அலங்காரமும் பஞ்சாப் மாநில பாரம்பரிய முறைப்படியே உள்ளது. அந்த சிறுவனின் தோற்றமும் மணமகளின் ரியாக்ஷனும் பார்ப்தற்கு மிகவும் க்யூட்டாக உள்ளது.
மணமேடையில் கணவர் அருகில் இருக்கும் போதே நடந்த இந்த க்யூட்டான சேட்டை வீடியோவை பலர் லைக் செய்துள்ளனர். மணமகள் அழைத்தும் அந்த சிறுவன் அவர் அருகில் செல்லாமல் சிரித்து கொண்டே இருப்பது பார்க்கும் பலரின் மனதை கவர்ந்துள்ளது.