
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன. சமீபத்திய நாட்களில் குரங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த வீடியோவில் ஒரு குட்டி குரங்கையும் அதன் தாயையும் காண முடிகின்றது. இந்த வீடியோவை ஒரு முறை பார்த்தால், மீண்டும் மீண்டும் பார்க்காமல் இருக்க முடியாது. இதை பார்க்க பார்க்க ஆசையாக உள்ளது.
இந்த வீடியோ வைரல் ஆகி, சில மணி நேரத்தில் லட்சக்கணக்கானோர் இதை பார்த்துள்ளனர். இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.
சில நொடிகளே கொண்ட இந்த குரங்கு வீடியோ (Monkey Video) வைரலாகி வருகிறது. இதில் ஒரு குட்டி குரங்கு கிளை விட்டு கிளை தாவுவதை கற்றுக்கொள்கிறது. வேடிக்கை பார்த்துக்கொண்டும், மரக்கிளையில் தொங்கியபடியும் அந்த குரங்கு வேடிக்கையாக பல வேலைகளை செய்கிறது.
அந்த குட்டி குரங்கின் தாயும் அருகில் இருக்கிறது. குட்டி குரங்கை அம்மா குரங்கு பல்வெறு விதமாக உற்சாகப்படுத்துகின்றது.
தாய் குரங்கு தனது குட்டி குரங்கை தடவிக்கொடுத்தும், தலை மேல் பரிவாக கை வைத்தும், தான் அதனுடன் ஆதரவாக இருப்பதை உறுதி படுத்துகிறது.
குரங்கு தாவி குத்தித்து கலாட்டா செய்வதை காணும் தாய் குரங்கு, மகிச்சியடைந்து குட்டி குரங்கிற்கு பல முறை முத்தமிடுவதையும் வீடியோவில் காண முடிகின்றது.
குட்டி குரங்கின் மீது தாய் குரங்கு காட்டும் பாசமும், தாய் குரங்கின் மீது குட்டி குரங்கு காட்டும் அன்பும், காண்பவர்களை, தங்களை மறந்து நெகிழ வைக்கிறது. குட்டி குரங்கின் செயல்கள் தாய் குரங்கை பாசத்தால் பூரித்துப்போக வைக்கின்றன.
இந்த வீடியோ சமூக ஊடக (Social Media) தளமான இன்ஸ்டாகிராமில் monkeyjungleclub என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். வீடியோவை பார்த்துக்கொண்டே இதன் பின்னணி இசையைக் கேட்பதும் நன்றாகவே உள்ளது.