கொரோனா தொடக்க காலத்தில் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்க ‘வந்தே பாரத்’ என்னும் திட்டத்தின் மூலம் இந்தியா சிறப்பு விமானங்களை இயக்கியது.
இதன்பிறகு பல்வேறு நாடுகளுக்கு ஒப்பந்தம் ஏற்பட்டு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியா வெளிநாடுகளுக்கு வழக்கமான பயணிகள் விமான சேவையை இன்னும் தொடங்கவில்லை.
தற்போது ஓமிக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் உள்நாட்டு விமானங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கடந்த ஆண்டில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்பட்ட விமான நிலையங்கள் குறித்து சிரியம் என்ற நிறுவனம் கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.
இந்த பட்டியலில் 96.51 சதவீதத்துடன் ஜப்பானின் இட்டாமி விமான நிலையம் முதல் இடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து ஒரே ஒரு விமான நிலையம் தான் இடம் பெற்றுள்ளது. அது சென்னை விமான நிலையம்தான். இந்த பட்டியலில் சென்னை சர்வதேச விமான நிலையம் 8-வது இடத்தில் உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் 98.32 சதவீதம் சரியான நேரத்திற்கு விமானங்கள் இயக்கப்பட்டதாக சிரியம் நிறுவனம் கூறியுள்ளது.
சென்னை விமான நிலையம் பட்டியலில் 8-வது இடம் பிடித்தது கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். ஏனெனில் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்தது தொடர்கதையாக இருந்தது.
இது ஒரு தடவை; இரண்டு தடவை அல்ல; கிட்டத்தட்ட 80-க்கும் மேற்பட்ட முறை சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்தன.