ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்வது எப்படி?

209

IMG 20190709 124923 - 2026ரேஷன் கடையில் பதிவு செய்ய உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்ய ரேஷன் கடையில் பதிவு செய்ய முடியாது. மண்டல அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என உங்கள் ரேஷன் கடைக்காரர் கூறுவார்.

ஆனால் அது தேவையில்லை. 1967 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தமிழுக்கு ஒன்றை அழுத்தவும் அடுத்து குடும்ப அட்டை வைத்திருப்பவரா என்பதற்கு 2 ஐ அழுத்தினால் சேவை அதிகாரி உங்களுடன் பேசுவார். அவர் உங்கள் ரேஷன் கார்டில் மேலே உள்ள எண்ணை கேட்பார். (எ.கா. 005/w/ 33657778) என்ற எண்ணை சொல்லவும்.

IMG 20190709 122710 - 2026பின்னர் குடும்ப அட்டையில் உள்ள ஒருவரின் ஆதார் எண்ணை கேட்பார். அதையும் தெரிவிக்க வேண்டும். நீங்கள் போன் செய்வதற்கு முன் ரேஷன் கார்டையும், ஆதார் கார்டையும் கையில் வைத்திருக்க வேண்டும். இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொன்னவுடன் நீங்கள் விரும்பிய மொபைல் நம்பரை பதிவு செய்யலாம். அல்லது நம்பரை மாற்றலாம்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

அடுத்த இரண்டு நிமிடங்களில் உங்கள் மொபைல் எண் ஆக்டிவேட் ஆகிவிடும். இதற்காக நீங்கள் வேகாத வெயிலில் மண்டல அலுவலகம் சென்று நிற்க வேண்டாம்.

IMG 20190709 122510 - 2026இதேபோல் ரேஷன் கடையில் நீங்கள் ஆதார் அட்டை மட்டும் தான் பதிவு செய்திருப்பீர்கள். ஆனால் போட்டோ கொடுத்திருக்க மாட்டீர்கள். அதனால் உங்களுக்கு ஸ்மார் கார்டு வராது. போட்டோவை மொபைல் ஆப் மூலமாகவோ அல்லது TNEPDS என்ற இணைதளம் மூலமாகவோ மட்டுமே அப்லோடு செய்ய முடியும். அதன் பிறகுதான் ஸ்மார்ட் கார்டு பிரிண்ட் செய்வார்கள்.

IMG 20190709 122452 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.