இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசியதால், பேட்ஸ்மேன்கள் திருதிருவென விழித்தனர்.
நேற்று முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. கேப்டன் ஜோ ரூட்டும், ஜென்னிங்சும் விளையாடிக் கொண்டிருந்தனர். 17ஆவது ஓவரை ரவிச்சந்திரன் அஸ்வின் வீசினார். அப்போது விக்கெட் கீப்பராக இருந்த தினேஷ் கார்த்திக், தமிழில் யோசனைகளைக் கூற இங்கிலாந்து வீரர்கள் குழம்பி போயினர். டேய் டேய் வேற மாதிரி டா நீ. போடுறா மாமா.. என அஸ்வினை தமிழிலேயே தினேஷ் கார்த்திக் புகழ, இங்கிலாந்து வீரர்களோ ஒன்றும் புரியாமல் குழம்பி நின்றனர்.