Astrological symbols and horoscope chart

பஞ்சாங்கம் நவ.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கம் நவ.20 – வெள்ளி

தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

||श्री:|| श्रीरामजयम

ஸ்ரீ: ஸ்ரீராமஜயம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

astrology panchangam rasipalan dhinasari - 2026
astrology panchangam rasipalan dhinasari 3

பஞ்சாங்கம்

கார்த்திகை ~ 4 ( 20.11.2026 ) வெள்ளி கிழமை.
வருடம் ~ பராபவ { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம்~ தக்ஷிணாயணம்
ருது ~ சரத் ருது.
மாதம் ~ கார்த்திகை மாதம் { வ்ருச்சிக மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி~ இரவு 2.58 AM வரை ஏகாதசி பின்னர் த்வாதசி.
நாள் ~ ( ப்ருஹு வாஸரம் ) வெள்ளி கிழமை.
நட்சத்திரம்~ மறுநாள் காலை 4-11 AM வரை உத்தரட்டாதி பின்னர் ரேவதி.
யோகம் ~ வஜ்ரம்.
கரணம் ~ வணிஜை / பத்திரை.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 AM & மாலை 5.00 ~ 6.00 PM.
ராகு காலம் ~ காலை 10.30 AM ~ மதியம் 12.00 NOON.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30 PM.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00 AM.
சூரிய உதயம் ~ காலை 6.14 AM.
சந்திராஷ்டமம் ~ ஸிம்ஹம்.
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்
ஸ்ரார்த்த திதி ~ ஏகாதசி.
இன்று ~ ஸர்வ கைசிக ஏகாதசி.

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
   !!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
   !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..

வெள்ளிக்கிழமை ஹோரை

காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்

பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்

மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

dhinasari panchangam jyothidam - 2026

இன்றைய ராசிபலன்கள் – 20.11.2026


மேஷம்

விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். குழந்தைகள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் அதிகரிக்கும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

அஸ்வினி : அலைச்சல்கள் ஏற்படும்.
பரணி : மாற்றம் ஏற்படும்.
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.

ALSO READ:  பஞ்சாங்கம் நவ.19 - வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

ரிஷபம்

மனதளவில் இருந்த கவலைகள் குறையும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கருத்துக்களுக்கு மதிப்புகள் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை உருவாக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளால் லாபங்கள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆதரவுகள் ஏற்படும். பணியில் இருந்த பொறுப்புகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : கவலைகள் குறையும்.
ரோகிணி : மகிழ்ச்சியான நாள்.
மிருகசீரிஷம் : பொறுப்புகள் குறையும்.


மிதுனம்

வியாபாரம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். சகோதரர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : அனுபவம் ஏற்படும்.
திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


கடகம்

தந்தை வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். மற்றவர்களுக்கு ஆலோசனைகளை கூறுவதில் கவனம் வேண்டும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளால் மாற்றங்கள் ஏற்படும். வெளிநாடு தொடர்பான சிந்தனைகள் மனதில் உண்டாகும். புதிய ஆராய்ச்சி சார்ந்த தேடல்கள் உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

புனர்பூசம் : ஒத்துழைப்பு உண்டாகும்.
பூசம் : கவனம் வேண்டும்.
ஆயில்யம் : தேடல்கள் உருவாகும்.


சிம்மம்

மனதளவில் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை ஏற்படும். செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். நண்பர்களிடத்தில் அதிக உரிமை கொள்வதை தவிர்க்கவும். வரவேண்டிய சில வரவுகள் தாமதமாகும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

மகம் : ஆர்வமின்மை உண்டாகும்.
பூரம் : வரவுகள் தாமதமாகும்.
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.


கன்னி

உடன் பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பழக்க வழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் உயர்வான சூழல் அமையும். பணிபுரியும் இடத்தில் சில ஏற்ற இறக்கங்கள் நிறைந்த சூழல் உண்டாகும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

உத்திரம் : மாற்றம் ஏற்படும்.
அஸ்தம் : ஏற்ற இறக்கமான நாள்.
சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.


துலாம்

உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். அலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தகத்தில் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

ALSO READ:  பஞ்சாங்கம் நவ.22 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

சித்திரை : தேடல்கள் அதிகரிக்கும்.
சுவாதி : மனப்பக்குவம் ஏற்படும்.
விசாகம் : மேன்மை உண்டாகும்.


விருச்சிகம்

நினைத்த பணிகளை முடிப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சமூகம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். தன வருவாயை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். நவீன யுக்திகள் மூலம் வியாபாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
அனுஷம் : ஆர்வம் உண்டாகும்.
கேட்டை : மாற்றமான நாள்.


தனுசு

எழுத்து சார்ந்த துறைகளில் புதுமையான வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களிடம் பொறுமை வேண்டும். வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். கால்நடை சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். வியாபார இடமாற்ற எண்ணங்கள் பிறக்கும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூராடம் : செலவுகள் உண்டாகும்.
உத்திராடம் : ஆர்வமின்மை குறையும்.


மகரம்

விமர்சனப் பேச்சுகளால் செயல்களில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சகோதரர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். சிறிய முதலீட்டில் லாபம் அடைவீர்கள். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

உத்திராடம் : மாற்றம் ஏற்படும்.
திருவோணம் : தன்னம்பிக்கை மேம்படும்.
அவிட்டம் : அலைச்சல் ஏற்படும்.


கும்பம்

பயணங்களால் ஏற்பட்ட சோர்வுகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். நவீன சாதனங்கள் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபார உத்திகளை புரிந்து கொள்வீர்கள். உழைப்பிற்கான மதிப்பு கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : சோர்வுகள் நீங்கும்.
சதயம் : அறிமுகம் ஏற்படும்.
பூரட்டாதி : நம்பிக்கை பிறக்கும்.


மீனம்

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். அலுவலகத்தில் விவேகத்துடன் செயல்படவும். எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. மற்றவர்களின் பொருட்கள் மீது ஈர்ப்பு ஏற்படும். கலைத்துறையில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

பூரட்டாதி : அனுபவம் ஏற்படும்.
உத்திரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.
ரேவதி : முன்னேற்றமான நாள்.


தினம் ஒரு திருக்குறள்

அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).

ALSO READ:  பஞ்சாங்கம் நவ.21 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.


1500x900 1775289 arulmigu nellaiappar temple - 2026

தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11

விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.

விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.


இன்றைய சிந்தனைக்கு…

பெருந்தன்மை என்பது, உன்னால் முடிந்ததை விட, அதிகமாக கொடுப்பது, பெருமை என்பது, உனக்கு தேவையானதை விட, குறைவாக எடுத்து கொள்வது! நீ அன்புடன் செய்யும், சின்ன செயல் கூட, ஒருவரின் வாழ்க்கையில், பெரும் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும், உலகில் அன்பை விட, வலிமையானது எதுவுமில்லை!!
உறவுகளில், யார் முக்கியம் என்பதை, உயிர் அற்ற பணமே, முடிவு செய்கிறது; பணம் கொடுத்து பார், உறவுகள் உன்னை போற்றும், அதை திரும்ப கேட்டுப் பார், மண்ணை வாரி தூற்றும்!!!

Posts by செந்தமிழன் சீராமன்:

6 thoughts on “பஞ்சாங்கம் நவ.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!”

  1. அருமை. பக்கத்திற்கு பக்கம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. உங்கள் தினசரி வெற்றிபெற வாழ்த்துக்கள். ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 3 =