Author: Dhinasari Reporter
Breaking News
மதுரை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் துணிக் கடைகள் அடைப்பு!
மதுரை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் அடைக்கப்பட்ட துணிக் கடைகள்.. மக்கள் கூட்டத்தை தவிர்க்க..!
சென்னையில் இருந்து பைக்கில் சுரண்டைக்கு வந்த பெண்! கிராமமே சீல் வைப்பு!
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சென்னையிலிருந்து பைக்கில் வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்ட நிலையில், கிராமம் சீல் வைக்கப்பட்டு உச்சக்கட்ட கண்காணிப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது.
இறந்து போன ஒரு வயது குழந்தை! முகத்தைக் கூட பார்க்க முடியாமல் சாலையில் கதறிய தந்தை!
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவர், தனது ஒரு வயது குழந்தையின் இறப்பு செய்தி அறிந்து, சாலையிலேயே கதறி அழுத புகைப்படம் கல் நெஞ்சையும் கரைக்கும் வகையில் அமைந்தது
தமிழகத்தில் புதிதாக 477 பேருக்கு கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் இன்று புதிதாக 477 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதால், மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆயிரம் குடும்பங்களுக்கு நலத் திட்ட உதவி வழங்கிய செங்கோட்டை அதிமுக., நகரச் செயலர் கிருஷ்ணமுரளி!
செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகளை நகரச் செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா வழங்கினார்.
நெல்லை மாவட்டத்தில் 40 பேருக்கு இன்று கொரோனா உறுதி!
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 40 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் மகராராஷ்ட்ர மாநிலத்தில் இருந்து வந்தவர்கள்.
சிமிண்ட் விலை உயர்வு! மதுரையில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்!
மதுரை: மதுரையில் சிமிண்ட் விலை ஏகத்துக்கும் உயர்ந்திருக்கிறது. ஆட்கள் இல்லை. ஆயினும் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.
திருமழிசை சந்தையில் குறைவு! வெளியில் பல மடங்கு உயர்வு! காய்கறி விலையால் பொதுமக்கள் அதிர்ச்சி!
சென்னையில் திருமழிசை சந்தையை விட பல மடங்கு அதிகமான விலைக்கு காய்கறிகள் விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு… பத்தாயிரத்தைக் கடந்தது!
இன்று ஒரே நாளில் 11,672 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று மட்டும் 359 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 2,599 ஆக உயர்ந்துள்ளது.
நாளை முதல் மீண்டும்… டாஸ்மாக்!
அரசு மதுபான கடைகள் மே 16 நாளை முதல் திறக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் அறிவித்துள்ளது
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை திறப்பு! கலர் கலரா டோக்கன்! என்றைக்கு என்ன டோக்கன் தெரியுமா?
அதன்படி, சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட 7 வண்ணங்களில் மது வாங்க டோக்கன் வழங்கப்படும் என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.
திங்கள் முதல் அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கும்: தமிழக அரசு!
அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் 3 குழுக்களாக பிரித்து வாரத்தில் 6 நாட்கள் பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
