Author: Suprasanna Mahadevan
தென்காசி சுற்றுவட்டாரத்தில் லாபம்!
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் ஸ்ருதி, விஜய் சேதுபதி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படத்தில் விஜய் சேதுபதி இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கலங்கி நின்ற இஸ்ரோ சிவன்! கட்டியணைத்த பிரதமர்!
என்னதான் விண்ணையே ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளாக இருந்தாலும், அவர்களும் உணர்ச்சிகள் மிகுந்த மனிதர்கள்தான் என்பதை இஸ்ரோ தலைவர் உடைந்து உருகியது எடுத்துக் காட்டியது. அதிலும் ஒரு நாளா இரு நாளா, 11 ஆண்டு மிஷன் இது.
சபரிமலைக் கோவிலுக்கு தனிச்சட்டம்.,! கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது!
மேலும் மண்டலபூஜை, மகரவிளக்கு விழாவிற்காக சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஆரோக்கிய சமையல் : கொள்ளு சுண்டல்
கொள்ளு, காராமணி, பச்சைப் பயறு ஆகியவற்றை ஒன்றாக முதல் நாள் இரவு ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் வேக வைக்கவும். பிறகு நீரை வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து… வேக வைத்த கொள்ளு கலவையை சேர்க்கவும். உப்பு போட்டு கிளறவும். கடைசியில் ப்ளாக்ஸ் சீட் பொடியைத் தூவி இறக்கவும்.
அடடே அப்பளக் குழம்பு! அப்புறம் என்ன தூள் பண்ணுவோம்!
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், பருப்பு வகைகள், பெருங்காயத்தூள், கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். பிறகு வடிகட்டிய புளிக் கரைசலை விட்டு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும்.
பிக்பாஸ் சீசன் 3.. யார் வெற்றியாளர்? பாலாஜிஹாசனின் சர்ச்சை!
இது ஒரு புறம் இருக்க, சேலம் ஜோசியர் பாலாஜி ஹாசன் பிக் பாஸ் வெற்றியாளர் யார் என்பதை கணித்து கூறியதாக பல ஊடங்களிலும், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற இணையதளங்களிலும் பரவலாக செய்தி வந்தது.
வாணிகபூரின் ஹாட் பாடல், போட்டோஸ்!
ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப்'ஸ் வார் திரைப்படத்தின் அதிரடி டிரெய்லரை வெளியிட்ட தயாரிப்பாளர்கள் இப்போது படத்தின் முதல் பாடலான குங்கூவை வெளியிட்டுள்ளனர். வீடியோவில் ஹிருத்திக் மற்றும் சிஸ்லிங் வாணி கபூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அபராதம் கேட்ட போலிஸ்! தனது பைக்கை தானே எரித்த இளைஞர்!
தில்லியில் போக்குவரத்து போலீசார் 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் முன்பே இளைஞர் ஒருவர அவரது பைக்கிற்கு தீ வைத்து கொளுத்தியுள்ளார்.புதிய போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அபராதம் வசூலித்து வந்தனர். இந்தநிலையில், தில்லியில் நேற்று ஒருவருக்கு விதியை மீறியதால் போக்குவரத்து போலீசார் ரூ 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதையடுத்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர், தனது இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தினார். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்க முயற்சித்தனர்.அந்த வாகனத்தை கொளுத்தியவர் பெயர் ராகேஷ் என்றும், அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதால், ரூ.11 ஆயிரம் அபராதம் என்று போக்குவரத்து காவலர் எச்சரிக்கை மட்டுமே செய்தனர். அபராத நோட்டீஸ் கூட அளிக்கவில்லை. ஆனால் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர் வாகனத்துக்கு தீ வைத்துள்ளார் என்று காவலர் தரப்பில் கூறியுள்ளனர்.
ககன்யான் திட்டத்திற்கு ஆட்கள் தேர்வு!
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் பிரம்மாண்ட ககன்யான் திட்டத்திற்கு தற்போது ஆள் எடுக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்வு பெங்களூரில் தொடங்கி உள்ளது.அமெரிக்காவின் நாசா உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்து இருக்கிறது. அதேபோல் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களும் விண்ணுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு வருகிறது.இந்த நிலையில் தற்போது இஸ்ரோவும் விண்ணுக்கு மனிதர்களை அனுப்ப முடிவெடுத்து உள்ளது.இஸ்ரோவின் இந்த திட்டத்திற்கு ககன்யான் திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் விண்வெளியில் சென்று இந்திய வீரர்கள் மூலம் ஆராய்ச்சி நடத்தப்படும். ஆனால் விண்ணில் எங்கு எப்படி சென்று ஆராய்ச்சி செய்வார்கள் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதன் மூலம் இந்தியா முதன்முதலாக மனிதர்களை சுயமாக விண்ணுக்கு அனுப்ப உள்ளது.இந்த திட்டத்தின் மூலம் 3 பேரை விண்ணுக்கு அனுப்ப மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டம் மூலம் 3 பேர் ஏழு நாட்கள் விண்ணில் இருப்பார்கள். ஏழு நாட்கள் அவர்கள் விண்ணில் ஆராய்ச்சி செய்ய இருக்கிறார்கள். யாரை விண்ணுக்கு அனுப்ப போகிறார்கள் என்பது குறித்தும் இவர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.இதற்கான தேர்வுதான் தற்போது பெங்களூரில் நடந்து வருகிறது. இந்த தேர்வுக்கான புகைப்படத்தை தற்போது இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய விமானப்படை வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவ சோதனை தற்போது நடைப்பெற்று வருகிறது.அதன்படி பெங்களூரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோஸ்பேஸ் மெடிசின் அமைப்பில் இந்த சோதனை நடந்து வருகிறது. இதில் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு அதன்பின் ரஷ்யாவில் முழுமையாக பயிற்சி அளிக்கப்படுவார்கள். அதன்பின் இவர்கள் விண்ணுக்கு அனுப்பப்படுவார்கள். ரஷ்யாவில் லியாசான் பயிற்சி மையத்தில் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
டீ அச்சா ஹை! பழி தீர்த்த இந்திய இராணுவம்!
விசாரணைக்குப் பிறகு அவர்களின் வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்தது இந்திய ராணுவம். அதில் தனது பழைய பகையை தீர்க்கும்வகையில் அந்தச் சம்பவம் இருந்தது. அபிநந்தன் டீ குடித்துக்கொண்டு வீடியோவில் பேசியதுபோல் தீவிரவாதிகளையும் டீ கப்புடன் பேச வைத்திருந்தனர் இந்திய ராணுவத்தினர்.
இறந்தவரின் உடலுக்கு சர்ச்சையிடும் சர்ச்!
இதனால், ஜோசப் குடும்பத்தார் மட்டுமின்றி கேரள மக்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இறந்து போன ஒருவரை நிம்மதியாக அடக்கம் செய்த பிறகும், விடாமல் துரத்துவது நியாயமற்ற செயல் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
கட்சிக்கு அடிபணிய காக்கி உடை அணியவில்லை! கேரள போலிஸ் அதிகாரி!
சினிமா படங்களில் வரும் போலீஸ் ஹீரோவைப் போல, யாருக்கும் மரியாதை செலுத்த நான் போலீஸ் வேலைக்கு வரல. நான் வந்ததே என் கடமையைச் செய்யவும், சட்டம் ஒழுங்கை காப்பாற்றவும் போலீஸ் சீருடை அணிந்துள்ளேன்.
