Author: ரம்யா ஸ்ரீ
சமூக விரோதிகளை களை எடுக்கவே துணை ராணுவம்?: பதறும் திருமுருகன் காந்தி
இதுகுறித்துப் பேசிய மே 14 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ''தமிழின அழிப்பிற்கான முதல் அறிகுறியாக காவிரி டெல்டாவில் துணை ராணுவம் இறக்கப்பட்டிருக்கிறது' என்று கூறியுள்ளார்.
சிதம்பரம் பல்கலை.,யில் பயங்கரம்: ஒருதலையாய் காதலித்து இளம்பெண் கழுத்தை அறுத்த இளைஞர் கைது!
சிதம்பரம்: சிதம்பரத்தில் அதிர்ச்சியூட்டும் விதமாக, பல்கலையில் பயின்று வந்த இளம் பெண் ஒருவர் இளைஞர் ஒருவரால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மயங்கிச் சரிந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
காவிரி தொடர்பில் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்; பதிலில்லை: முதல்வர்
சேலம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவதற்காக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்; ஆனால் இதுவரை பதில் வரவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஓவியாவுக்கு பிறந்த நாள்!: ஸ்பெஷல் டிபி வைக்கணுமாம்!
அழகிய இதயம் படைத்த பெண்ணுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்... இப்படிச் சொல்லியிருப்பவர் விஜய் சேதுபதி.
நீதிபதியை விமர்சித்த தங்க.தமிழ்ச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நீதிபதி பதில்!
சென்னை: 11 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் குறித்த தீர்ப்பை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட தீர்ப்பை விமர்சித்த தங்க.தமிழ்ச் செல்வன் மீது நடவடிக்கை கோரி முறையிட்டதற்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்று பதில் அளித்தார் நீதிபதி.
தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும்; நீட் தேர்வு நாளான மே 6ம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்க சிபிஎஸ்இக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திக் திக் திகிலில் தினகரன்..! அதுவும் இதுபோல் ஆனால்..? ஆதரவாக வந்த அந்த 18 பேர் கதி..?
இரு வழக்குகளும் வேறுவேறு பெஞ்ச் என்பதால், வேறு தன்மை கொண்டது என்பதால், அதில் தாங்கள் தலையிட முடியாது என்று கூறினர். எனவே, 18 பேர் குறித்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வரலாம் என்று தினகரன் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
பத்திரிகை சுதந்திரம்: 138வது இடத்தில் இந்தியா!
இப்பட்டியலில் இரண்டாவது முறையாக நார்வே முதலிடத்தைப் பிடித்துள்ளது. பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் 139வது இடத்தைப் பெற்றுள்ளது. வடகொரியா, எரித்திரியா, துர்க்மெனிஸ்தான், சிரியா மற்றும் சீனா ஆகியவை கடைசி இடங்களில் உள்ளன.
நீதிபதியை நீக்க நாக்கை நீட்டி மூக்குடைபட்ட காங்கிரஸ்!
இதெல்லாம் சாதாரண மக்களுக்குத் தெரிய வேண்டும். அப்படித் தெரிய வைத்தால் தான் மதவாத, கேவல, கொள்ளைக்கார அரசியலை நடத்தி வரும் காங்கிரஸின் முகத் திரை கிழியும்.
பழனி உத்ஸவர் சிலை முறைகேட்டை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க உத்தரவு!
பழனி உத்ஸவர் சிலை முறைகேடு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஆணை பிறப்பித்த நீதிபதி சுவாமிநாதன், ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசாரே இதை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை அடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மு.க.ஸ்டாலினால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து பாத்திமா பாபு என்ன சொல்கிறார்?
தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்தபோது, 'சித்திரப்பாவை' எனும் தொடரில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தேன். தூர்தர்ஷன் நடைமுறைப் படி தொடரில் நடித்து முடிக்கும் வரை செய்தி வாசிக்க முடியாது. இதனால், நான் அந்த காலகட்டத்தில் செய்தி வாசிக்கவில்லை.
காங்கிரஸில் இருந்தாலும் இஸ்லாமியரே; சல்மான் குர்ஷித்தின் ரத்தக்கறை கருத்து!
காங்கிரசில் இருந்து கொண்டு, சர்ச்சைக்குரிய அயோத்தி கட்டட இடிப்புக்கு பாஜக.,வை மட்டுமே குற்றம் சுமத்திப் பேசி வந்த காங்கிரஸார், இப்போது, அதில் தங்கள் பங்கும் இருப்பதை ஒப்புக் கொண்டு பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
