சமூக வலைத் தளங்களில் வைரலாகும் 2.0 ட்ரெய்லர்! 80 லட்சம் பார்வைகள்!
நவம்பர் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #2Point0TrailerLaunch மற்றும் #2Point0TrailerDay ஹேஷ்டேக்குகள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது! இது வரை 80 லட்சம் பார்வைகள் கடந்து சென்றுள்ளது யுடியுபில்!
பாக்யராஜ் ராஜினாமா ஏற்க மறுப்பு: திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக தொடர்கிறார்!
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாக்யராஜ் ராஜினாமா செய்த நிலையில், அவரது ராஜினாமாவை ஏற்க மறுத்து கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
பாவம் பாக்யராஜ்… பலிகிடா ஆனதுதான் மிச்சம்! நேர்மையின் விலை ராஜினாமா!
இந்த விவகாரத்தில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்குள்ளேயே பலமான தாக்குதல்களை எதிர்கொண்டு, சர்ச்சை ஏற்பட்டதால், தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக பாக்யராஜ் கூறியுள்ளாராம். இது நேர்மை விரும்பிகளை பலத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
இதான் சர்கார்…! திருட்டுக் கதையை பட்டவர்த்தனமா சொல்லியாச்சு!
ஒத்தை ஓட்டில் சர்கார் அமைந்த விதம் இதுதான்! என்பதுடன் இரண்டரை மணி நேரத்துக்குள் ஒரு சர்கார் அமையும் விதத்தை பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடும் ரசிகனுக்காக, மற்ற சூட்சுமமான சீன்களை எல்லாம் கே பாக்யராஜ் தன் டைரக்சன் டச்சுடன் சொல்லவில்லை என்பதால், நாமும் இங்கே பதிவு செய்யவில்லை!
திருட்டு கதை சர்காருக்கு திருட்டுத்தனமா எக்ஸ்ட்ரா கட்டணம் வசூலிப்பதை தடுக்க கண்காணிப்பு குழு!
மதுரை: மதுரையில் சர்கார் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப் பட்டுள்ளது.
வைரமுத்து குறிப்பிட்ட அந்த ‘50 கேஜி தாஜ்மஹாலுக்கு’ வயது 45!
முன்னாள் உலக அழகி நடிகை ஐஸ்வர்யாராய் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். நடிகை ஐஸ்வர்யா ராயின் 45ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.
யோவ்.. நீ தட்டிவுட்ட செல்போன் வெல 19 ஆயிரம் ரூவாய்யா.. புலம்பும் இளைஞன்!
இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார், படக்கென அந்த இளைஞரின் செல்போனை ஓங்கி தட்டி விட்டார். அந்த வேகத்தில் செல்போன் அந்த இளைஞரின் கையில் இருந்து படு வேகமாக கீழே விழுந்து உடைந்தது. இதனால் அதிர்ச்சியில் இருந்து மீளாத அந்த இளைஞர் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தார்.
ரசிகன் கொடுக்குற இடம்.. தலைகால் புரியாம ஆடுறீங்க..! சிவகுமாருக்கு சாரு நிவேதிதா பதில்!
சிவகுமார், உலகில் உள்ள ஒரு எழுத்தாளன் இப்படிப்பட்ட திமிர்த்தனமான செயலைச் செய்ய மாட்டான். அது அவனுடைய wisdom. உங்களையெல்லாம் சினிமாவை மதமாகக் கொண்டாடும் தமிழர்கள் ஐவரி டவரில் உட்கார வைத்திருப்பதால் தலைகால் புரியாமல் ஆடுகிறீர்கள்.
மேடையில் – நீ உனக்காக வாழ்; மற்றவர்க்காக அல்ல: நிஜத்தில்- பெருவாரியான மக்கள் நினைப்பதால் வருத்தம்: சறுக்கிய சிவகுமார்!
தட்டி விட்டது மிகத் தவறு!முதலில் சால்ஜாப்பு சொனார்.பிறகு இப்போது மற்றவர்கள் வருத்தப் படுகிறார்கள் என்பதற்காக தாம் வருத்தம் தெரிவித்தல் என்பது, ஒரு ஏமாற்று வேலை. நடிப்புதான்! என்று கூறுகின்றனர் சிலர்.
சமரச சர்கார் அமைத்தார் விஜய்! ஆரம்பமே ‘ஆட்ட’காசம்!
இப்படியாக ஆரம்பமே ஆட்டம்காணும் விதமாக அட்டகாசமாக வெளிவருகிறது விஜய் அமைக்கப் போகும் சர்கார்!
சர்கார் கதை வருணுடையது; ஒப்புக் கொண்ட ஏ.ஆர்.முருகதாஸ்! வழக்கு வாபஸ்!
சென்னை: சர்கார் கதை வருண் ராஜேந்திரனுடையதுதான் என்று ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக் கொண்டதால், சர்கார் - வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
வி.ஐ.பி.யை இப்படி செல்பி எடுக்குறது சரியா? #சிவகுமாரின்_விளக்கம்
மதுரை: மதுரையில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில், இளைஞர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றார். அதை கவனித்த சிவகுமார் அந்த இளைஞரின் செல்போனை தட்டி விட்டார். இந்த வீடியோ பதிவு இன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. பலரும் சிவகுமாரை வசை பாடித் தீர்த்தனர்.