February 15, 2025, 3:04 PM
30.7 C
Chennai

PFI: வெளியுலகம் அறியாத அதிர்ச்சி தரும் பயிற்சிகள்; பாடம் வனம் தந்த பாடம்!

பாடம் வனமும்  PFI யின் தொடர்பும்

2021 ஆம் ஆண்டில் கேரளாவின் பத்தனந்திட்டா மாவட்டத்தில் உள்ள பாடம் வனப் பகுதியில் இருந்து ஜெலட்டின் குச்சிகள், கம்பிகள் போன்ற வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட பின் அடர்ந்த வனப் பகுதியான பாடம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிகழ்விற்கு பிறகு  பாடம் காடு என்றாலே அடிப்படைவாத அமைப்பான PFI தான் மக்கள் நினைவிற்கு வந்தது. தன்னை ஒரு சமூக சேவை அமைப்பு என்று அடிக்கடி கூறிக்கொள்ளும் PFI இன் நோக்கங்கள் குறித்து இது மீண்டும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

கேரளாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், PFI நடத்திய ஒற்றுமை அணிவகுப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, PFI உறுப்பினர்களின் தற்காப்பு பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட 4000 லத்திகள்/தடிகள் வனத்துறையினரால் கண்டெடுக்கப் பட்டன. 2013 ஆம் ஆண்டில், கேரளாவின் நாரத் என்ற இடத்தில் நடைபெற்ற  PFI பயிற்சி முகாமில் இருந்து இதேபோன்ற லத்திகள்/தடிகள், வெடிபொருட்கள் மற்றும் ஜிகாதி இலக்கியங்கள் கண்டெடுக்கப்பட்டன. 

இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. பாடம் காட்டை PFI ஒரு பாதுகாப்பான மறைவிடமாக பயன்படுத்தி வருகிறது. நாரத் வழக்கில் தொடர்புடைய ஓர் அதிகாரி, இதைப் பற்றி கூறுகையில், பயிற்சியைத் தவிர, PFI யின்  ஹிட் ஸ்குவாட் உறுப்பினர்கள் தங்கள் எதிரிகளைத் தாக்கும்போதும், ​​கொலை செய்யும் போதும் அல்லது மதிப்பாய்வு செய்யும் போதும் பயன்படுத்தப்படும் வாகனங்களை அங்குஅக்காக பிரித்து உருமாற்றுவதற்கும் பாடம் வனப் பகுதியைப் பயன்படுத்துகிறார்கள் என்று கூறினார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாடம் வனப் பகுதியில் மீண்டும் சோதனை நடத்தியதில் பெட்ரோல் டேங்க், என்ஜின் உதிரிபாகங்கள், ஹெட்லைட் உள்ளிட்ட உடைந்துபோன பைக் உதிரிபாகங்கள்  கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் அவரது இந்தக் கூற்று முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த 6 மாதங்களில் மட்டும் பாடம் பகுதியில் இருந்து 15க்கும் மேற்பட்ட இறந்த சாம்பார் மான்களின் சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன. இது தொடர்பாக விசாரணை அதிகாரி கூறுகையில், குழுவாக தாக்குவதில் தேர்ச்சி பெற PFI இன் தாக்குதல் பயிற்சியின் ஒரு பகுதியாக இது இருக்கலாம் என்று கூறினார். 

பாடம் காட்டுப் பகுதியில் பாஜகவை சேர்ந்த ராகுலின் ரத்தத்தின் தடயங்களை போலீஸார் கண்டுபிடித்தனர். ராகுல் காணாமல் போனதற்கும்  பிஎஃப்ஐ அமைப்புக்கும் தொடர்பு  இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது, போலீசாரிடமிருந்து தப்பிக்க பல வழிகள் இருந்தும் PFI இயக்கத்தைச் சார்ந்த ஆஷிக், பாடம் காட்டுப் பாதையைத் தேர்ந்தெடுத்தது பல சந்தேகங்களை எழுப்புகிறது. இந்தச் சம்பவங்கள் அனைத்தும் PFIக்கு பாடம் வனப்பகுதி பாதுகாப்பான புகலிடமாக மாறியிருப்பதை தெளிவாகச்  சுட்டிக் காட்டுகிறது.

பாடம் வனப்பகுதியை சேர்ந்த வன அதிகாரி ஒருவர் கூறுகையில் , வழக்கமான பணியின் நிமித்தமாக பாடம் வனப்பகுதிக்குள் நுழைய முயன்ற வன அதிகாரிகளை PFI ஐ சேர்ந்தவர்கள் கடந்த ஓராண்டில்  மட்டும் 10க்கும் மேற்பட்ட சமயங்களில் மிரட்டியிருக்கிறார்கள். காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க, PFI, அவர்களது உறுப்பினர்களின் குடும்பங்களை காடுகளின் எல்லைகளில் குடியமர்த்தியது. இவர்களின்  விசுவாசத்திற்கு ஈடாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களின் உரிமைப் பத்திரங்கள் கொடுக்கப்  படும் என்றும் நிலத்தின் மீது  ஆதிக்கம் செலுத்துவதற்கான உரிமையும் கொடுக்கப்படும் என்றும் சொல்லி அவர்களை மூளைச் சலவை செய்துள்ளது. 

பிற வனப்பகுதிகளுக்கு 2021 ஜனவரி முதல் வாரத்திலேயே தீயணைப்பு காவலர்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 15ம் தேதி வரை வனத் தீ கண்காணிப்பாளர்களை பணியமர்த்துவதை தாமதப்படுத்தியது கேரள வனத்துறையினரின் மிகப்பெரிய தவறு.

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) தன்னை PFI இன் அரசியல் பிரிவு என்று கூறிக் கொள்கிறது. 2020ல் நடந்த பெங்களூரு பஞ்சாயத்து தேர்தலிலும் பின்னர் நடந்த தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலிலும் சில இடங்களில் வெற்றியும் பெற்றனர். SDPI கட்சியினர் கேரளா மற்றும் பீகார் சட்டசபை தேர்தல்களிலும் வேட்பாளர்களை நிறுத்தினார்கள். 

மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரணமாகத் தெரிந்தாலும், சமீபத்தில் பாடம் வனப் பகுதியில் இருந்து, வெடிபொருட்கள், உடைந்து போன பைக் பாகங்களுடன் SDPI கொடியும் கிடைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை எற்படுத்துகிறது. SDPI ஆனது PFI இன் அரசியல் பிரிவு என்றால், PFI இன் சட்ட விரோத ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பயிற்சி கொடுக்கும் இடத்தில் SDPI என்ன செய்து கொண்டிருந்தது? மேலும்  விசாரணையில்   பல உண்மைகள்  வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இது போன்ற அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதற்கு முன் அவர்களின் பின்புலம் நோக்கம் முதலியவற்றை தெரிந்து அறிந்து செயல்பட வேண்டும் என்பதை மட்டும் நிச்சயமாகக் கூறலாம். மதத்தின் பேரை சொல்லிக்   கொண்டு தீவிரவாதிகள் ஆட்சிக்கு வரும்  போதெல்லாம், அவர்கள் பேரழிவை நிகழ்த்தியுள்ளார்கள் என்பதை தான்  வரலாறு நமக்குக் கற்பித்துள்ளது. மற்றவர்களின் தவறிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, நம் நாட்டை பாதுகாப்பான இடமாக மாற்றுவோம்.

ஓய்வுபெற்ற CIA அதிகாரி ஜான் வில்கின்ஸ் ஒரு நேர்காணலில், 9/11 தாக்குதலுக்கு முன்னர் அதற்கான பல அறிகுறிகள் தெரிந்தும் அதை அமெரிக்கா அலட்சியப்படுத்திவிட்டது என்றார். இதே தவறை இந்திய மண்ணில் செய்யாமல், தென் மாநிலமான கேரளாவையும், ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரு பேரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும். 

அறிகுறிகளுக்கு பதிலளிக்க வேண்டிய நேரம் இது.   இதுவும் அதுபோன்ற அறிகுறி எனில் அதை முழுமையாக ஆராய்ந்து, அதை வேரறுக்க வேண்டிய நேரம் இது.  

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஒப்புமை இல்லா உயர்வு! பட்டொளி வீசும் பாரதத்தின் புகழ்!

அங்கு பிரச்சனையை உருவாக்கிய அமெரிக்காவையே இப்பொழுது அங்கு இருந்து விலகிக் கொள்கிறோம் என்று இப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பை வைத்து அறிவித்து

திரிச்சி பேசிய சிவா! திருச்சி அடிச்ச நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கும் இடையே வார்த்தை மோதலால் நாடளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஒப்புமை இல்லா உயர்வு! பட்டொளி வீசும் பாரதத்தின் புகழ்!

அங்கு பிரச்சனையை உருவாக்கிய அமெரிக்காவையே இப்பொழுது அங்கு இருந்து விலகிக் கொள்கிறோம் என்று இப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பை வைத்து அறிவித்து

திரிச்சி பேசிய சிவா! திருச்சி அடிச்ச நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கும் இடையே வார்த்தை மோதலால் நாடளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து

சென்னைக்கு முதல் ஏசி புறநகர் ரயில்! டிக்கெட் விலை ‘அம்மாடியோவ்’!

சென்னை ரயில்வே கோட்டத்துக்கு ஐசிஎஃப்-பில் முதல் ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணி நிறைவு

IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

இதனால் இந்திய அணி 142 ரன் கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

Entertainment News

Popular Categories