October 17, 2021, 12:24 am
More

  ARTICLE - SECTIONS

  சவுரியே வேண்டாம் அவுரி இருந்தால்..!

  avuri - 1

  அவுரி முழுத்தாவரமும் கசப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் காரப் பண்பும் கொண்டது. இலைகள், வீக்கம், கட்டி முதலியவற்றைக் கரைக்கும், விஷத்தை முறிக்கும், உடலைத் தேற்றும், மலமிளக்கும், வயிற்றுப் புழுக்களைக் கொல்லும், உடலைப் பலமாக்கும்.தலை முடியைக் கருப்பாக்கும், மாலைக்கண் நோயைக் குணமாக்கும்.

  வேர் விஷத்தை முறிக்கும். கூந்தல் தைலங்களில் வேர் மற்றும் இலைகள் முக்கியப் பொருளாகச் சேர்க்கப்படுகின்றன.

  அவுரி சிறுசெடி வகையைச் சார்ந்தது, பயிரிடப்படுபவை, புதர்ச்செடிகள் போல அடர்த்தியாக வளர்ந்திருக்கும். இலைகள் ஆழ்ந்த பச்சை நிறமானவை. இந்தியா மற்றும் வங்காள தேசத்தில் பெருமளவு இயற்கையாக விளைகின்றது.

  நீலநிறச் சாயம் இதன் வேர் மற்றும் இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. அவுரியின் இலை மற்றும் வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

  இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் தாதுப் பொருட்களை மருத்துவ ரீதியாக சுத்தம் செய்வதற்கு இது மிகச் சிறந்த தாவரமாக உபயோகிக்கப்படுகின்றது.

  காணாக்கடி, ஒவ்வாமை, தோல் நோய்கள் குணமாக பசுமையான அவுரி இலை ஒரு கைப்பிடியளவு சேகரித்துக் கொள்ள வேண்டும், அத்துடன், சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து, 2 டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து, 1 டம்ளராக காய்ச்சி வடிகட்டிக் குடித்துவர வேண்டும். இவ்வாறு தினமும் இரண்டு வேளைகள் 7 நாட்கள் வரை செய்து வர வேண்டும்.

  மஞ்சள் காமாலை தீர அவுரி இலைகளை அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு, ஒரு டம்ளர் காய்ச்சிய வெள்ளாட்டுப்பாலில் கலக்கி, வடிகட்டி அதிகாலையில் குடித்துவர வேண்டும்.

  மூன்று நாட்கள் இவ்வாறு செய்ய வேண்டும். பாம்புக்கடிக்கு முதலுதவி சிகிச்சை: அவுரிஇலையைப் பசுமையாக அரைத்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிடக் கொடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பினால் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும்.

  வெள்ளைப்படுதல் குணமாக அவுரி வேர், யானை நெருஞ்சில் இலைகள் சம எடையாக எடுத்துக் கொண்டு, அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, மோரில் கலந்து காலையில் 10 நாட்கள் வரை சாப்பிட வேண்டும்.

  அவுரிகற்பம்: அவுரி, மஞ்சள் கரிசாலை, வெள்ளைக் கரிசாலை, குப்பைமேனி, கொட்டைக்கரந்தை, செருப்படை ஆகியவற்றின் இலைகளை சம அளவாகச் சேகரித்து, நிழலில் காயவைத்து, தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில், ஒரு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர பெண்களுக்கான முறையற்ற மாதவிடாய் சரியாகும்.

  மேலும், வயிற்றுப்பூச்சிகள், கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினைகளும் விலகும். காலை, மாலை வேளைகளில் 45 நாட்கள் வரை தொடர்ச்சியாகச் சாப்பிடலாம்.

  இதன் இலையை அரைத்து, தோல் நோய்கள் சிரங்குகளுக்கு பூச குணமாகும். இலையை அரைத்து, விளக்கெண்ணெயுடன் கலந்து, சிறு குழந்தைகளின் தொப்புளை சுற்றி தடவ, மலக்கட்டு நீங்கும்.

  அவுரி வேரை நன்றாக அரைத்து, நெல்லிக்காய் அளவு அரை ஆழாக்கு பசுவின் பாலில் கலக்கி, வடிகட்டி, தினம் ஒரு வேளை என, எட்டு நாள் தர, சிலந்தி, எலி முதலியவையின் விஷம் நீங்கும்.

  முடி கொட்டும் பிரச்னை உள்ளவர்கள் பயன்படுத்தும் தைலங்களில், கரிசாலை, நெல்லிக்காய், இவைகளுடன் அவுரியும் சேர்க்கப்படுகிறது.

  கேசத்தின் நிறத்தை மாற்றும் சக்தி உள்ள மூலிகை. கப, வாத நோய்களைத் தீர்க்கும். வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லும். நோய்களில் உதரம் என்னும் வயிறு வீக்கம், மண்ணீரல் நோய்களை நீக்கும். உடல் எடை குறைதல் பிரச்னை தீர, அவுரி வேரை பசும் பாலில் கலந்து பருக வேண்டும்.

  முடி பிரச்னைக்கு தீர்வு
  இலையை அரைத்து, கொட்டைப்பாக்கு அளவு வெள்ளாட்டுப் பாலில் கலந்து அருந்த கல்லீரல் நோய்கள் தீரும். தினம் ஒரு வேளையாக, மூன்று நாட்கள் அருந்த வேண்டும். இதன் இலையை அரைத்து, தோல் நோய்கள் சிரங்குகளுக்கு பூச குணமாகும்.

  இலையை அரைத்து, விளக்கெண்ணெயுடன் கலந்து, சிறு குழந்தைகளின் தொப்புளை சுற்றி தடவ, மலக்கட்டு நீங்கும். அவுரி வேரை நன்றாக அரைத்து, நெல்லிக்காய் அளவு அரை ஆழாக்கு பசுவின் பாலில் கலக்கி, வடிகட்டி, தினம் ஒரு வேளை என, எட்டு நாள் தர, சிலந்தி, எலி முதலியவையின் விஷம் நீங்கும்.

  முடி கொட்டும் பிரச்னை உள்ளவர்கள் பயன்படுத்தும் தைலங்களில், கரிசாலை, நெல்லிக்காய், இவைகளுடன் அவுரியும் சேர்க்கப்படுகிறது. கேசத்தின் நிறத்தை மாற்றும் சக்தி உள்ள மூலிகை. கப, வாத நோய்களைத் தீர்க்கும்.

  வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லும். நோய்களில் உதரம் என்னும் வயிறு வீக்கம், மண்ணீரல் நோய்களை நீக்கும். உடல்எடை குறைதல் பிரச்னை தீர, அவுரி வேரை பசும் பாலில் கலந்து பருக வேண்டும்.

  பெண்களுக்கு நல்லது
  பல்லில் உள்ள கிருமிக்கு, நீலியின் வேரைக் கடித்துத் துப்ப தீரும். கடைகளில் விற்கப்படும், நீலி பிருங்காதி தைலம், நீலின் யாதி கிருதம், நீலி காதி தைலம் ஆகியவற்றில், இதன் பயன்பாடு அதிகம். தீயால் ஏற்பட்ட கொப்புளங்களை சரியாக்க, அவுரி பயன்படும். வெளுத்த முடிக்கு இயற்கையாக கருப்பாக்க இந்த நீலி பயன்படும்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,140FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,559FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-