உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்  பட்டுள்ளார் கேரள முதல்வர் பிணரயி விஜயன்.

திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட கேரள முதல்வர் பிணரயி விஜயன், அவரது மனைவி உள்பட சிலர் சனிக்கிழமை இன்று அதிகாலை 2.30க்கு மேல் சென்னை வந்தனர். கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார் என்று முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று வழக்கமான உடல் பரிசோதனைகள் முடிந்த பின் நாளை திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்வார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending