இந்தியா-வங்கதேசம்முதல் டெஸ்ட் போட்டி – சென்னை- 19.09.2024
முனைவர்கு.வை.பாலசுப்பிரமணியன்
அஸ்வின் – ஜடேஜா அற்புதமான ஆட்டம்
இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்(அஷ்வின் ஆட்டமிழக்காமல் 102, ஜடேஜா ஆட்டமிழக்காமல் 86, ஜெய்ஸ்வால் 56, மஹ்மூத்4-58)
இந்திய கிரிக்கெட் அணி வலுவான அணி. ரோஹித்ஷர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் அனுபவம் மிக்க பேட்டர்கள். எனவே வங்கதேசத்து அணியைஊதித் தள்ளிவிடுவார்கள் என்ற நினைப்பு பலருக்கு இந்தியாவில் இருந்திருக்கலாம். வங்கதேசஅணி இப்போதுதான் வலிமையான பாகிஸ்தான் அணியை அவர்களது நாட்டிலேயே டெஸ்ட் பொட்டிகளில்தோற்கடித்துவிட்டு வந்திருக்கிறது. இந்திய அணி நீண்ட நாட்களாக டெஸ்ட் போட்டி விளையாடவில்லைஎனவே வங்கதேச அணி எளிதில் தொடரை வெல்லும் என்ற பேச்சுக்கள் அந்தப்பக்கத்தில் எழாமல்இல்லை.
இன்று நடந்த சென்னை சேப்பாக்கம் டெஸ்டில்முதல் நாளில் பல தப்புத்தாளங்கள் நிகழ்ந்தன. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின்சமீபத்திய ஆதிக்கம் உறுதியாக இருந்தது. வெளிநாட்டு அணிகள் இந்திய பேட்டர்களுடன் போட்டியிடலாம்ஆனால் அவர்களின் கீழ்-மிடில் ஆர்டரை விஞ்சும் ஆழம் அந்த அணிகளிடத்து இல்லை. டெஸ்ட்போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன் 38 வயதை எட்டிய சென்னையைச் சேர்ந்த ரவிச்சந்திரன்அஷ்வின், அவரோடு சென்னை சூப்பர் கிங் ரவீந்திர ஜடேஜா இருவரும் வங்கதேச அணிக்கு தங்கள்திறமையைக் காண்பித்தார்கள். அவர்கள் முதல் நாளை ஸ்டைலாக தொடங்கி, 6 விக்கெட் இழப்புக்கு144 ரன்களில் இருந்து இந்தியாவை உடையாத 195 ரன் பார்ட்னர்ஷிப் மூலம் மீட்டனர்.
ஏறக்குறைய பிரிக்க முடியாத இரண்டு சுழல்இரட்டையர்களில், அஸ்வின் தனது ஆறாவது டெஸ்ட் சதத்தை அடித்த போது, அந்த நாளில் சிறந்தபேட்டராக இருந்தார். அவரதி பேட்டிலிருந்து கிளம்பிய ஒலியில் இருந்து சக சென்னை மக்கள்பிரமிப்பில் ஆழ்ந்தனர். மைதானத்தில் ஒரு பாட்டி இரண்டு டம்ளர்களைத் தட்டிக்கொண்டு அஶ்வினைப்பாராட்டியது காணக்கண்கொள்ளாக் காட்சியாகும். ஜடேஜா 86 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கையில்இன்றைய நாளின் ஆட்டம் முடிந்தது.
இந்திய அணியின் ஏழாவது விக்கெட் ஜோடி அவர்களின்இதயங்களை உடைப்பதைப் பார்க்கும் வலி வங்காளதேசத்திற்கு புதியதாக இருக்காது. ஏழு ஆண்டுகளுக்குப்பிறகு முதன்முறையாக, இந்தியாவோடு விளையாடும் ஒரு டெஸ்டில் அந்த அணி பந்து வீசத் தேர்வுசெய்தது. இந்தியாவும் அப்படித்தான் செய்திருப்போம் என்றார் ரோஹித். ஆடுகளத்தின் தயாரிப்புமழையால் தடைபட்டதால் அல்ல: இந்த சற்று பச்சையான, ஈரமான ஆடுகளம் பந்து வீச்சுக்கு ஏற்றதுஎன நினைத்ததால்.
தள்ளாட்டம்-சீம் லைன் மற்றும் லெங்த் பந்துவீச்சாளர்,ஹசன் மஹ்முத், மென்மையான சீம் அசைவு மூலம் டாப் ஆர்டரை சிதைத்தார். இந்தியா 3 விக்கெட்டுக்கு34 ரன்களில் இருந்து சுருக்கமாக மீண்டது. ஆனால் பங்களாதேஷ் இரண்டாவது அமர்வில் மேலும்மூன்று விரைவான விக்கெட்டுகளை வீழ்த்தியது.
பின்னர் அஷ்வின் இந்திய அணியின் பேட்டிங்கைஓட்டத் தொடங்கினார். அவரோடு ஜடேஜா இணைந்தார். அவர்களிடமிருந்து ஒரு புதிய விளையாட்டுவெளிப்பட்டது. அதுவரை மஹ்மூத் இந்தியாவைக் கட்டுப்படுத்தினார். தஸ்கின் அகமது மற்றும்நஹித் ராணா ஆகியோர் புதிய பந்தை மிகக் குறுகியதாகவோ அல்லது மிகவும் முழுதாகவோ வீசியபோதும்,மஹ்மூத் தவறில்லை. ரோஹித் ஷர்மா ஸ்டெம்புக்கு வெளியே வீசப்பட்ட பல பந்துகளைத் தவிர்த்தார்.இருப்பினும், மஹமூதின் பந்து ஒன்றினை இரண்டாவது ஸ்லிப்புக்கு எட்ஜ் செய்தார். ஷுப்மான்கில் லெக் சைடில் ஒரு ஃப்லிக் ஆட கேட்ச் ஆனார். ஆனால் அவர் தனது எட்டு பந்துகளில் ஒருபோதும்எளிதாக உணரவில்லை. விராட் கோலி முழு நோக்கத்துடன் வெளியே வந்தார், ஆனால் உடலில் இருந்துஒரு எட்ஜ் ஆனது; கேட்ச் பிடிக்கப்பட்டது அவர் வெளியேறினார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பந்த்,(இவர் கிட்டத்தட்ட 700 நாட்களுக்குப் பின்னர்தனது முதல் டெஸ்டில் விளையாடினார்), சில அலட்சிய பந்துவீச்சுக்கு எதிராக நான்காவதுவிக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர். ஜெய்ஸ்வால் தனது எட்டாவது அரை சதம் அடித்தார்.பந்த் ஆபத்தானவராகத் தோன்றத் தொடங்கினார். மதிய உணவிற்குள் இந்தியா அந்த முயற்சியைமுறியடித்தது. மதிய உணவிற்குப் பிறகு, பந்த் ஒரு கட் ஷாட்டின் மூலம் ஆட்டமிழந்தார்.தொடர்ந்து மஹ்மூதுக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது.
டாஸ்கினும் ராணாவும் ஒரு சிறந்த அமர்வில்கலந்து கொண்டனர். முதல் அமர்வைப் போல் இல்லை என்றாலும், பந்து இன்னும் ஸ்விங்க் ஆனது,மேலும் அவர்கள் நல்ல நீளத்தில் பந்துவீசுவதன் மூலம் ஒரு கடுமையான சோதனையை வழங்கினர்.ராணா இறுதியில் கூடுதல் வேகத்தில் ஜெய்ஸ்வாலை ஆட்டமிழக்கச் செய்தார், மேலும் அமைதியானதோற்றமுடைய கே.எல். ராகுல் ஷார்ட் லெக்கில் ஜாகிர் ஹசனின் அசத்தலான கேட்சுக்கு விழுந்தார்.
மெஹிதி ஹசன் மிராஸ் ராகுலின் அந்த பெரியவிக்கெட்டைப் பெற்றிருக்கலாம் என்றாலும், சுழற்பந்து வீச்சாளர்கள் பொதுவாக பங்களாதேஷ்கேப்டன் நஜ்முல் ஹசனுக்கு எந்தக் கட்டுப்பாட்டையும் வழங்கத் தவறினர். உண்மையில், அவர்செயல்பட ஒரு முழுமையான தாக்குதல் இல்லை. மஹ்மூத் அவர்களை முதல் அமர்வில் தனித்து விளையாடினார்,மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் ஒன்றாகச் செயல்பட்டபோது, அவர்களை புதியதாக வைத்திருக்கும்ஸ்பின்னர்கள் அவர்களிடம் இல்லை.
எல்லாவற்றையும் சொல்வது எளிது, ஆனால் 6 விக்கெட்டுக்கு144 என்ற நிலையில், அணியின் ஸ்கோரை மீட்டெடுப்பது மிகவும் சிரமம். அஸ்வின் பெரிய ஆரவாரத்துடன்மைதானத்தில் நடந்தவுடன் அப்பணியைத் தொடங்கினார். அஸ்வின் மற்றும் ஜடேஜா மூலம் பல மீட்புநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அஷ்வின் பின் காலில் நின்று ஆடினார். பவுன்ஸின் உச்சியில்பந்துகளை சந்தித்தார்; மற்றும் கவர்கள் மற்றும் ஸ்கொயர் லெக் மூலம் அவற்றை நொறுக்கினார்.ஜடேஜா பழைய பாணியில் விளையாடினார்.
பந்து மென்மையாக மாறியதும், ஓட்டங்கள் பாயத்தொடங்கியதும், களம் விரிக்க வேண்டியிருந்தது. அண்மை ஃபீல்டர்கள் எல்லைக்கோட்டருகே செல்லவேண்டியதாயிற்று. சுழற்பந்து வீச்சாளர்கள் எளிதாக பவுண்டரிகளை வழங்கினர். பல இடங்களில்இருவரும் ஒருவரை ஒருவர் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டனர். அஸ்வின் ராணாவின் வேகத்தைஸ்லிப்களுக்கு மேல் நான்கு ரன்களுக்கு உயர்த்தியபோது, ஜடேஜா பாராட்டினார். ஜடேஜாவின்ஒரு பிளாட் ஸ்லாக்-ஸ்வீப்பில் அஸ்வின் பாராட்டை திரும்பி அளித்தார்.
ஆட்டம் முடிவடைய ஆறு நிமிடங்களுக்கு முன்பு,அஸ்வின் 108 பந்துகளில் தனது சதத்தை எட்டினார், இதனால் சொந்த நகரத்தின் கூட்டத்தை மகிழ்ச்சியில்ஆழ்த்தினார். ஜடேஜா 80களில் நுழைய அதே ஓவரில் ஒரு ஃபோர் அடித்துக் கொண்டாடினார். ஆட்டம் இன்னம் முடிந்துவிடவில்லை. நாளை பாக்கியிருக்கிறது என்பதை நினைவூட்டினார்.