
நவரத்தின புலாவ்
தேவையான பொருட்கள்
கேரட் – 2
பீன்ஸ் – 15
கோஸ் – 50 கிராம்
ஸ்வீட் கார்ன் – 50 கிராம்
குடை மிளகாய் – ஒன்று
வெங்காயத்தாள் – 4
பச்சை மிளகாய் விழுது – 2 தேக்கரண்டி
மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டி
பாதாம் – 5
முந்திரி – 10
கிஸ்மிஸ் – 10
உப்பு – தேவையான அளவு
நெய் – 3 தேக்கரண்டி
பாஸ்மதி அரிசி சாதம் – அரை கிலோ
செய்முறை
காய்கறிகளை மிக மெல்லியதாக நறுக்கி வைக்கவும். பாதாம் முந்திரியை உடைத்து வைக்கவும். ஸ்வீட் கார்னை ஆவியில் வேக வைத்து வைக்கவும்.
கடாயில் நெய் விட்டு காய்கறிகளை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும். பின் உடைத்து வைத்துள்ள முந்திரி, பாதாம், கிஸ்மிஸ் சேர்த்து வதக்கவும்.
காய்கள் பாதி வெந்ததும் பச்சை மிளகாய் விழுது, வேக வைத்த பேபி கார்ன், உப்பு சேர்த்து வதக்கவும்.
கடைசியாக வேக வைத்த உதிரியான பாஸ்மதி அரிசி, மிளகுத்தூள் தூவி கிளறி பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து பரிமாறவும்.