
இந்திய டேபிள் டென்னிஸ் முன்னாள் வீரரும், புகழ்பெற்ற பயிற்சியாளருமான சென்னையை சேர்ந்த வி.சந்திரசேகர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை மரணம் அடைந்தார்.
தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்க தலைவராக இருந்த 64 வயது சந்திரசேகருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
1976-ம் ஆண்டு முதல் 1983-ம் ஆண்டு வரை தமிழகத்தின் தலைசிறந்த வீரராக விளங்கிய சந்திரசேகர் 3 முறை தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
அத்துடன் 1982-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் அரைஇறுதி வரை முன்னேறினார். அந்த ஆண்டில் சிறந்த வீரருக்கான அர்ஜூனா விருதையும் பெற்றார்.


