Breaking News
இன்னும் 2 நாள்… தென்மேற்கு பருவமழை தென் தமிழகத்தில் தொடங்கும்…
சென்னை: அடுத்த 2 நாட்களில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடங்கிய தென்மேற்கு பருவ மழை, தென் தமிழகப் பகுதிகளில் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: கடும் பாதுகாப்பு சோதனை!
பாலத்தின் அருகிலுள்ள பகுதிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து, தொடர்பு கொள்ளப்பட்ட தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொழுது பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய என்கவுண்டர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிகண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் 2ஆம் கட்ட விரிவாக்க கட்டுமான பணிகளுக்கு, இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆணையத்துக்கு முழு அதிகாரமும் உண்டு: உச்ச நீதிமன்றம் உறுதிப் படுத்தியுள்ளது: முதல்வர்
நடுவர் மன்றத் தீர்ப்பில் உள்ள அத்தனை அம்சங்களையும் அப்படியே செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. உச்ச நீதிமன்றமே இறுதியானது. அதன் பின்னும் அதில் சந்தேகம் எழுப்பினால் என்ன செய்வது
இது நல்ல யுத்தி. நமக்கே உரித்தான யுக்தி -மய்யத்தலைவர் கமல்ஹாசன்
இது நல்ல யுத்தி. நமக்கே உரித்தான யுக்தி. நம் உறுப்பினர்கள் கையில் மட்டுமே இது போன்ற செயலி இருக்கிறது.
செயலி என்பது மக்கள் நலன் கருதி, நாட்டை செதுக்க வல்ல நல்ல உளியாக இது இருக்கும் என நம்புகிறேன்.
பழனி கோவில் சிலை முறைகேடு: முன்னாள் உதவி ஆணையர், நகை மதிப்பீட்டாளர் கைது
திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் உள்ள ஐம்பொன் சிலை மோசடி வழக்கில் கோயில் முன்னாள் உதவி ஆணையர், நகை மதிப்பீட்டாளர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.பழனி முருகன் கோவிலில், புதிதாக ஐம்பொன்னாலான சிலை செய்ய...
தேனி அருகே சிராஸ்தார் வீட்டில் ரூ.5 லட்சம் 25 பவுன் கொள்ளை
தேனி அருகே அன்னஞ்சி யில் சிராஸ்தார் வீட்டில் 5 லட்சம் பணம் மற்றும் 25 பவுன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.தேனி அருகே உள்ள அன்னஞ்சி என்ஜிஓ காலனி யில் வசித்து வருபவர்...
கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் நீர் வரத்து சீரானதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளனர்.கடந்த 10 நாட்களாக நீர்வரத்து அதிகமாக இருந்ததன் காரணமாக சுற்றுலா...
மர்ம நபர்கள் டீக்கடைக்குள் புகுந்து தாக்குதல்; பெண்கள் இருவர் உயிரிழப்பு
இந்நிலையில், சாகுல் ஹமீது மருமகள் மதினா பேகத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.
திருமாவளவனை திருப்பியனுப்பிய பொம்மிநாயக்கன்பட்டி மக்கள்..!
தேனி: கலவரம் நடந்து இரு வாரங்கள் கடந்த நிலையில், ஏதோ நெருக்குதலால் தங்கள் பகுதியைக் காண வருவதாகக் கூறி, விடுதலைக் கட்சித் தலைவர் திருமாவளவனை ஊருக்குள் விட மறுத்தனர் பொம்மிநாயக்கன்பட்டி மக்கள்.
டிஎன்எஸ்டிசி.,யில் நிதி நெருக்கடி: மதுரை கோட்டத்துடன் இணைகிறது நெல்லை கோட்டம்!
தமிழ்நாட்டிலேயே நெல்லையில்தான் பஸ்கள் மோசமாக பராமரிக்கப் படுகின்றன என்று கூறப்படுகிறது. மற்ற மண்டலங்களில் இருந்து கழித்துக் கட்டிய பேருந்துகளை நெல்லைக்கு அனுப்பி வைத்து விடுவார்கள் என்றும், இங்கே இயக்கப்படும் 90 சதவீத பேருந்துகள் காலாவதியானவை என்றும் கூறப் படுகின்றன.