Home Blog Page 122

ஒப்புமை இல்லா உயர்வு! பட்டொளி வீசும் பாரதத்தின் புகழ்!

pm modi us visit 2025 - 2026

வரவேற்ற அமெரிக்கா….

நம் இந்திய பிரதமரின் அமெரிக்க சுற்றுப்பயணத்தை பலரும் எதிர்ப்பார்த்த தருணத்தில் அவர் பிரான்ஸ் வழியாக அமெரிக்கா சென்றார்.முன்னதாக பிரான்ஸில் நடைபெற்ற AI தொழில்நுட்ப பண்புகள் குறித்தான கருத்தரங்கில் அவர் தெரிவித்த கருத்துகள் பலராலும் சிலாகிக்கப்பட்டது.

சீனாவின் மென்பொருள் அசூர வளர்ச்சியை மேற்கோள் காட்டி அவர்களுடைய டீப் ஸீக் செயலியை அவரவர் தேவை மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றம் செய்து பயன் படுத்தும் விதமாக செயல்படுத்த அல்லது அதற்கு மாற்றீடாக நம் தரப்பில் இருந்து முழு வீச்சில் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றிருக்கிறார் அவர், என்கிறார்கள்.

இது முடிந்து அங்கேயே அதாவது பிரான்ஸிலேயே கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சையை சந்தித்து பேசினார்.

பிரான்ஸில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து விரிவாக பின்னர் பார்ப்போம்.

அங்கு இருந்து நேராக அமெரிக்கா சென்ற அவர் தற்போது உள்ள உலக அரசியல் சூழலை நன்கு அவதானித்து அதற்கேற்ப காய்களை நகர்த்த ஆரம்பித்தார்.அமெரிக்க புலனாய்வு துறைகளின் உச்ச பட்ச அதிகாரத்தில் நம் இந்திய வம்சாவளியை சேர்ந்த துல்சி கப்பார்டை தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த சமயத்தில் அவரை சந்தித்தார். இவரை இந்த பதவிக்கு கொண்டு வர பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். செனட் சபையில் பெரும்பான்மை பலம் பெற்ற போதிலும் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் இவரை தான் இந்த ஒட்டுமொத்த அமைப்பிற்கு தலைவராக கொண்டு வர ஒற்றை காலில் நின்றது, சாதித்தும் காட்டியது.

இது ஒரு புறம் இருக்க… இங்கு நம் இந்திய புலனாய்வு துறையினருக்கு ஒதுக்கும் நிதியில் இவ்வாண்டு பட்ஜெட்டில் முதல் முறையாக குறைத்து இருந்தார்கள் என்பதை நம்மில் எத்தனை பேர் கவனத்தில் கொண்டோம் என்பது தெரியவில்லை.

ஆக இது வெறுமனே சம்பிரதாய சந்திப்பு இல்லை என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்..

அடுத்ததாக நம் இந்திய பிரதமர் விவேக் கணபதி ராமசாமியை அவருடைய மாமனாருடன் சேர்த்து சந்தித்தார். இவர் தான் அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் நின்றார். டொனால்ட் ட்ரம்ப்பிற்காக விட்டு விட்டு நகர்த்தும் சென்றார். கேட்காமலேயே இதனை செய்ததால் டொனால்ட் ட்ரம்ப் இவருக்கு மிக முக்கியமான பொறுப்பு கொடுத்திருக்கிறார்.

ஒட்டுமொத்த அமெரிக்க அரசாங்க அலுவலர்களை மறுசீரமைப்பு செய்யும் முக்கிய பணி அவருக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான இடங்களில் பணியாளர்களை AI தொழில்நுட்ப பண்புகளை கொண்டு மாற்றீடு செய்யவும் அவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது. இதனை அவர் எலான் மஸ்க் உடன் இணைந்து செய்ய பணிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்ததாக நம் இந்திய பிரதமர் எலான் மஸ்க்கை அவருடைய குடும்பத்தினருடன் சந்தித்தார். மிக நீண்ட நேர சந்திப்பு என்றால் அது இது தான் என்கிறார்கள். பின்னர் மஸ்க் அமெச்சு பணியாளர்களுடனும் சேர்ந்து இந்த பேச்சு வார்த்தை நீண்டது.

முன்னதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக்கேல் வால்ட்ஸ் மற்றும் அவர் குடும்பத்தினர் தான் நம் இந்திய பிரதமரை வரவேற்றிருந்தனர். நம் இந்திய சுப்பிரமணியம் ஜெய்சங்கர் வகிக்கும் பதவிக்கு இணையானது இந்த செயலர் பதவி.

கடந்த ட்ரம்ப் ஆட்சி காலத்தில் இந்த பதவியில் மைக் பாம்பியோ இருந்தார். டொனால்ட் ட்ரம்ப் மீது கைது நடவடிக்கைகளெல்லாம் நடந்த சமயத்தில் இவரை அடுத்த அதிபர் தேர்தலில் நிற்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ட்ரம்பே அவற்றில் இருந்து மீண்டு வந்து அதிபர் தேர்தல் போட்டியில் கலந்து கொண்டு தற்போது அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டும் இருக்கிறார். ஆனால் மைக் பாம்பியோ ஓரம் கட்டப்பட்டு விட்டார்.

டொனால்ட் ட்ரம்ப் உடனான சந்திப்பிற்கு பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர் பங்களாதேஷ் குறித்தான கேள்விக்கு, அதாவது அங்கு நடைபெற்ற ஆட்சி மாற்றத்தில் அமெரிக்க பங்கு குறித்து நேரிடையாக ட்ரம்பிடம் கேள்வி கேட்க…. அதெல்லாம் இவர் பார்த்து கொள்வார் என நம் இந்திய பிரதமரை கை காண்பித்து சொன்னார் டொனால்ட் ட்ரம்ப்.

பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்னுமாப்போலே மொத்த அமெரிக்க விஜயமும் வெற்றியா தோல்வியா என்பது இதிலிருந்தே தெரிந்து கொள்ள வேண்டியது என்கிறார்கள் உலக அரசியல் பார்வையாளர்கள். அதில் விஷயம் இல்லாமல் இல்லை என்பது தான் சமாச்சாரமே.

— ஜெய் ஹிந்த். ஸ்ரீராம்


மோடிக்காக விலகிக் கொண்ட அமெரிக்கா!

வங்காளதேசத்தில் இருந்து மோடிக்காக அமெரிக்கா விலகிக் கொள்ளும் என்கிறார் டொனால்ட் ட்ரம்ப். மோடிக்காக வங்காளதேசத்தில் இருந்து விலகிக் கொள்கிறோம் என்று ட்ரம்ப் அறிவித்து மீண்டும் வங்காளதேசத்தை இந்தியாவின் கைக்குள் அடக்கி இருக்கிறார்.

ஒரு நாட்டின் அரசியலில் நுழைந்து அந்த நாட்டை தங்களின் அதிகாரத்தில் கொண்டு வந்த அமெரிக்கா, அந்த நாட்டில் இருந்து இன்னொரு நாட்டின் பிரதமருக்காக விட்டு விலகிக் கொள்கிறோம் என்று அறிவித்து இருப்பது அமெரிக்க வரலாற்றில் இதுதான் முதல் முறை..

வங்காளதேச ஆட்சி அரசியலில் இருந்து அமெரிக்கா மோடிக்காக விலகிக் கொள்ளும் என்று அறிவித்து இருக்கிறது. எந்தவித பஞ்சாயத்தும் இன்றி இனி
வங்காளதேசம் இந்தியாவிடம் சரண்டைந்து விடும்.

இந்த நேரத்தில் 1987ல் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கையின் அதிபர் ஜெயவர்தனாவை மிரட்ட இந்திய ராணுவத்தை அனுப்பி இலங்கையை இந்தியாவிற்கு ஆதரவாகக் கொண்டு வர ராஜீவ் காந்தி என்கிற கோமாளி பிரதமர் மேற்கொண்ட நடவடிக்கையை நினைத்துப் பார்க்கிறேன்..

சிங்களர் தமிழர் பிரச்சனையை முன் வைத்து இலங்கைக்குச் சென்ற இந்திய ராணுவத்தை அதே சிங்களர்களும் தமிழர்களும் ஒன்று சேர்ந்து வெளியே போங்கள் இது எங்களுக்கு இடையே உள்ள பங்காளி சண்டை என்று கூறி இந்திய அமைதி காக்கும் படையை துரத்தி விட்டதை நினைவு கொள்கிறேன்.

ராஜீவ் காந்தியின் முட்டாள்தனத்தினால் இலங்கையில் இந்திய ராணுவம் நுழைந்து சுமார் 4000 வீரர்களை பலி கொடுத்து ஆயிரக்கணக்கான வீரர்களுக்கு படுகாயங்கள் இந்தியாவிற்கு ஆயிரக்கணக்கான கோடி பண இழப்பு. இதைவிட தமிழ்ப் பெண்களை இந்திய ராணுவம் கற்பழித்தது கொலை செய்தது என்று பழிபாவங்களைப் பெற்று இந்தியாவின் பெயர் உலக அளவில் நாறிப்போனது.

ராஜீவ் காந்தி என்கிற கோமாளி பிரதமர் தன்னுடைய வல்லமையைக் காட்ட இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி கேவலப்பட்டதையும் இப்பொழுது உள்ள வங்காளதேச பிரச்சனையையும் நினைத்துப் பார்க்கிறேன். அமெரிக்காவின் டீப் ஸ்டேட் பாலிடிக்சால் வங்காளதேச அரசியல் மாறி ஆட்சி மாற்றம் நிகழ்ந்து. இந்திய ஆதரவு பிரதமர் ஷேக் ஹசினாவை இந்தியாவிற்கு துரத்தி விட்டார்கள். அதற்கு பிறகு அமெரிக்க அடிமையான முகம்மது யூனிஸ் ஆட்சியில் வங்காளதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள்.
இதனால் இந்துக்களைக் காப்பாற்ற வங்காளதேசத்திற்கு இந்திய ராணுவம் செல்ல வேண்டும் என்று ஏகப்பட்ட குரல்கள் இந்தியாவில் ஒலித்தது.

மோடியை நிறைய பேர் கிண்டல் செய்தார்கள்.மோடி ராஜீவ் காந்தி இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பியது மாதிரி வங்காளதேசத்திற்கு இந்திய ராணுவத்தை அனுப்பி இருக்க முடியும். இதனால் என்ன விளைவுகள் நிகழும் என்பதை யாரும் அறிய முடியாது.

ஒரு வேளை 1990 ல் இலங்கையில் இருந்து இந்திய ராணுவம் அங்கு இருந்த ஏகப்பட்ட இழப்புகளுடன் கெட்ட பெயருட ன் துரத்தப்பட்ட வரலாறு மீண்டும் நிகழலாம்.

ஒரு பிரச்சனையை மோடி எந்த அளவிற்கு ஆராய்ந்து தீர்க்கிறார் என்பதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்த அறிவிப்பில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
வங்காளதேசத்தில் நுழைந்து அங்கு பிரச்சனையை உருவாக்கிய அமெரிக்காவையே இப்பொழுது அங்கு இருந்து விலகிக் கொள்கிறோம் என்று இப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பை வைத்து அறிவித்து மிக அற்புதமாக வங்காளதேச பிரச்சனையை தீர்த்து வைத்து இருக்கிறார் மோடி.

— விஜயகுமார் அருணகிரி

திரிச்சி பேசிய சிவா! திருச்சி அடிச்ச நிர்மலா சீதாராமன்!

nirmala seetharaman trichy siva - 2026

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கும் இடையே வார்த்தை மோதலால் நாடளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

நேற்று மாநிலங்களவையில் மத்திய பட்ஜெட் விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் குறித்து விவாதித்தார். அப்போது திமுக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் திமுக., உறுப்பினர்கள் கூச்சலிட்டு நிதி அமைச்சரைப் பேச விடாமல் நடந்து கொண்டதால், நிர்மலா சீதாராமன் சற்று ஆவேசம் அடைந்து, “நான் பதில் சொல்வேன். அதைக் கேட்க வேண்டியது உங்கள் கடமை.” என்றார். 

மத்திய அரசு தமிழ் நாட்டுக்கு என்ன செய்தது? என்று நாடாளுமன்ற திமுக எம்.பிக்கள் கேள்வியை எழுப்பிய நிலையில்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவேசமாக பதிலளித்தார். 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நோக்கி திமுக எம்.பி திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அவர், “மதுரை, கோயம்புத்தூர் மெட்ரோ திட்டங்களை தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டது. அதற்கு எந்த பதிலும் வரவில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், சர்வசிக்ஷ அபியான் திட்டங்களுக்கான நிலுவைத் தொகை இன்னும் வரவில்லை. PMAY திட்டத்துக்கான தொகையையும் மத்திய அரசு கொடுக்கவில்லை. குறைந்தபட்சம் இந்த 2 மெட்ரோ திட்டங்களை பற்றியாவது சொல்லுங்கள்” என்று கேள்வி எழுப்பினார்.

திருச்சி சிவா கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “நான் சிலவற்றை சொல்லி பேச ஆரம்பிக்க நினைத்தேன், ஆனால் அதை பிறகு சொல்கிறேன். ரூ.63,246 கோடி மதிப்பில் மெட்ரோ திட்டம் 2ம் கட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது, இதில் 65% நிதி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் ஜனவரி 20,2019ல் தொடங்கி வைக்கப்பட்டது. ரூ.30,000 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. மேலும் முந்தைய மற்றும் தற்போதைய ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் இதை சொல்லியுள்ளனர்.

பாதுகாப்பு வழித்தடம் அறிவிக்கப்படும் போது, பிரதமர் மோடி முதல்முதலாக தமிழ்நாட்டிற்கான வழித்தடத்தை அறிவித்தார். உத்தரபிரதேசத்திற்கே அதன்பிறகு தான் அறிவிக்கப்பட்டது. விருதுநகரில் PM மித்ரா மெகா டெக்ஸ்டைல் பார்க் அறிவிக்கப்பட்டது. 2019ல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இவ்வாறு பதில் சொல்லிக் கொண்டிருந்த போது, இடையில்  திருச்சி சிவா குறுக்கிட்டதால்,  இருவருக்கும்  இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது.  தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், “முதலில் நான் சொல்ல நினைத்ததை இப்போது சொல்கிறேன். எதை எடுத்தாலும் மோடி அரசின் தவறு என்றே சொல்லிக் கொண்டு ஒரு நெரேடிவ் செய்து வருகிறார்கள், 

நான் 2 உதாரணங்களைச் சொல்ல விரும்புகிறேன். அவர்கள் சுட்டிக்காட்டும் ஒவ்வொரு சம்பவத்தின் போதும் அவர்கள் எங்கே இருந்தார்கள்? அப்போது காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்தார்கள்…. – என்று நிர்மலா சீதாராமன் சொன்ன போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரைப் பேச விடாமல் குறுக்கிட்டு திமுக எம்.பிக்கள் கூச்சலிட்டனர். 

இதை அடுத்து கோபமடைந்த நிர்மலா சீதாராமன், “பொறுங்கள்.. நீங்கள் இப்படி என்னை குறுக்கிட்டு தடுக்கக் கூடாது. இதை நான் சொல்வேன். நான் உங்களுக்கு பதில் சொல்கிறேன். அதைக் கேட்க வேண்டியது உங்கள் கடமை. சம்பந்தமில்லாத விஷயங்களை நான் பேசுவதாக அவர்கள் சொல்வதால் நான் தமிழில் பேசினேன். திமுகவினர் காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்த போதுதான் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது. அதை மீண்டும் கொண்டு வந்ததற்கு பிரதமர் மோடிதான் காரணம். திருச்சி சிவா சீனியர் உறுப்பினர். அவரை நான் மதிக்கிறேன்.  கொள்கை வேறுபாடுகள் பற்றி நிறைய பேசியிருக்கிறோம். இது எப்போதும் நடப்பது தான்” என்றார். 

இப்படி தமிழகத்தைச் சேர்ந்த இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட இந்த விவாதம் காரணமாக நாடாளுமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

சங்கரன்கோவில் பகுதி புத்த ஆலயம் நோக்கி புத்த பிக்குகள் ‘அமைதி’ நடைபயணம்!

bhudha pitchu walk in sankarankoil - 2026

மதுரை காந்தி மியூசியத்திலிருந்து சங்கரன் கோவில் புத்தக் கோவிலுக்கு அமைதிக்கான நடை பயணத்தில் புத்த பிக்குகளுடன் சேர்ந்து புறப்பட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் பிகார், ஒடிஸா, அருணாசல பிரதேசம், டெல்லி உள்பட சில இடங்களில் உலக அமைதி புத்த கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்
தொடர்ச்சியாக, தென்னிந்தியாவில் தமிழகத்தில் உள்ள சங்கரன்கோவில் பகுதியில் வீரிருப்பு கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி இக்கோபுரம் கடந்த 25 ஆண்டுகளாக கட்டப்பட்டு தற்போது பணிகள் ஆனது முடிவடைந்துள்ளது. வரும் 21 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. 2000 -ஆம் ஆண்டு புத்தர் கோயில் கட்டப்பட்டு, அதன் அருகே கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை தமுக்கம் மைதானம் அருகே அமைந்துள்ள காந்தியின் நினைவு அருங்காட்சியகத்திற்கு 18 நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள், மதுரை காந்தி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செய்தனர், தொடர்ந்து புத்த மத வழிபாட்டில் ஈடுபட்டு இறைவழிபாடு நடத்தி பேருந்தில் சென்று அங்கிருந்து நடைபெறமாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோயிலில் புதிதாக 5 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட புத்த கோயிலுக்கு சென்று வழிபட உள்ளனர்.

இதில் , கனடா, லண்டன், அமெரிக்கா, போலந்து, ஸ்ரீலங்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 18 நாடுகளைச் சேர்ந்த நாட்டவர்கள் பங்கேற்றனர்.
50க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் இஸ்தானிஜி தலைமையில் இன்று காந்தி மியூசியம் வந்தனர். அவர்களை காந்தி மியூசியம் செயலாளர் நந்தாராவ், பொருளாளர் வழக்கறிஞர் செயலாளர் செந்தில் குமார், காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன். மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு உட்பட பலர் வரவேற்றனர்.

இது குறித்து, பேசிய புத்த பிக்கு லீலாவதி கூறுகையில், “உலகில் அமைதியை பரப்ப வேண்டும் என்பதற்காக இந்த நடை பயணத்தை மேற்கொள்கிறோம்.
இதில் 18 நாடுகளைச் சேர்ந்த புத்த மதத்தை பின்பற்றக் கூடியவர்கள் பங்கேற்றுள்ளனர். இன்றைய தினம் காந்தி அருங்காட்சியகத்தில் வழிபாடு நடத்தி நடை பயணமாக செல்ல இருக்கின்றனர்.

பல இடங்களில் சாலைகள் மோசமாக இருப்பதால், சாலைகள் நன்றாக உள்ள இடத்திலிருந்து நடை பயணமாக தென்காசி, சங்கரன்கோவில் அமையப் பெற்ற புத்த கோயிலுக்கு சென்று 17ஆம் தேதி வழிபாடு நடத்த உள்ளோம். இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும்”, என கேட்டுக் கொண்டார்.

மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

madurai mattuthavani arch demolished - 2026

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து – பொக்லைன் ஆப்ரேட்டர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

அருகில் நின்று கொண்டிருந்த ஒப்பந்ததாரர் படுகாயம் . அலட்சியமாக இடிப்பு பணிகளை மேற்கொண்ட மாநகராட்சி நிர்வாகம்.

ஐந்தாம் உலக தமிழ் மாநாட்டை முன்னிட்டு 1981 ஆம் ஆண்டு ஜனவரி நான்காம் தேதி மதுரை மாநகருடைய கிழக்கு நுழைவாயில் பகுதியான மாட்டுத்தாவணி பகுதியில் நக்கீரர் தோரண வாயில் கட்டிடம் கட்டப்பட்டிருந்தது.

தற்போது மாட்டுத்தாவணி பகுதியில் பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையம் பல்வேறு வணிக நிறுவனங்கள் உருவான நிலையில் மாட்டுத்தாவணி சாலை விரிவாக்க பணிகளும் நடைபெற்றுள்ளது.

இதில், நாள்தோறும் நக்கீரர் தோரண வாயில் உள்ள சாலை வழியாக பல்லாயிரக்கணக்கான வாகனங்களும் ஆயிரக்கணக்கான பேருந்துகளும் கடந்து செல்லும் நிலையில் தோரணவாயில் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகவும் அதனை அகற்ற வேண்டும் என கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் முன்பாக உள்ள நக்கீரர் தோரண வாயில் மற்றும் கே.கே.நகர் மாவட்ட நீதிமன்றம் அருகேயுள்ள தோரணவாயில் ஆகிய இரண்டு தோரண வாயில்களையும் இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் , மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள நக்கீரர் தோரணவாயில் கட்டிடத்தை இடிக்கும் பணியானது நேற்று இரவு தொடங்கியது. அப்போது ஆங்காங்கே சாலைகளில் போக்குவரத்து செல்லவும், பொதுமக்ககள் நடமாடவும் தடை விதிக்கப்பட்டு தடுப்புகள் வைத்து போக்குவரத்து காவல்துறை மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, மாநகராட்சி சார்பில் ஒப்பந்ததாரர் மூலமாக நக்கீரர் தோரணவாயில் இடிப்பதற்காக இரண்டு பொக்லைன் இயந்திரம் மூலமாக இடிக்கும் பணி நடைபெற்றது. அப்போது ,தோரண வாயில் ஒருபுறம் உள்ள தூணின் அருகே பொக்லைன் இயந்திர ஆப்ரேட்டர் இடித்த போது திடீரென தோரணவாயில் தூண் இடிந்து பொக்லைன் இயந்திரத்தில் விழுந்தது.

இதில், பொக்லைன் ஆப்ரேட்டரான மதுரை மாவட்டம் உலகாணி அருகேயுள்ள பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த நாகலிங்கம் என்ற இளைஞர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், பொக்லைன் இயந்திரத்தின் அருகே நின்று கொண்டிருந்த ஒப்பந்ததாரரான மதுரை சம்பக்குளத்தைச் சேர்ந்த நல்லதம்பிக்கு காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இதனையடுத்து, பொக்லனை இயந்திரத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த நாகலிங்கத்தின் உடலானது 3 மணி நேரத்திற்கு பின்பாக கிரேன்கள் மூலமாக தோரண வாயில் தூண்கள் அகற்றப்பட்ட பின்பு பொக்லைன் இயந்திரத்தில் சிக்கியிருந்த உடல் மீட்கப்பட்ட பின்னர் அவரது உடலானது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டது .

பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தக்கூடிய பிரதான சாலையில் உள்ள பிரம்மாண்டமான தோரண வாயில் கட்டிடத்தை இடிக்கும் பணியின் போது உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதால் இதுபோன்று விபத்து ஏற்பட்டு ஒரு இளைஞர் பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவம் நடந்து விட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர் .

இதனிடையே, விபத்து நடைபெற்ற பகுதிக்கு மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் நேரில் வந்து பார்வையிட்டார். விபத்து நடைபெற்ற பகுதியில் பொதுமக்கள் வருவதை தடுக்கும் வகையில் முழுவதிலும் காவல்துறை சார்பில் தடுப்புகள் அமைக்கப் பட்டிருந்தன. மேலும், சென்னை செல்லக்கூடிய வாகனங்கள் மாற்று சாலை மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன.

மதுரையில் மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையம் முன்பாக தோரண வாயில் இடிக்கும் பணியின் போது தோரணவாயில் தூண் இடிந்து விழுந்த விபத்தில் பொக்லைன் இயந்திர ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து, புதூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னைக்கு முதல் ஏசி புறநகர் ரயில்! டிக்கெட் விலை ‘அம்மாடியோவ்’!

ac rail for chennai - 2026

சென்னை ரயில்வே கோட்டத்துக்கு ஐசிஎஃப்-பில் முதல் ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணி நிறைவு

சென்னை தெற்கு ரயில்வேயில், சென்னை ரயில்வே கோட்டத்துக்கான முதல் ஏசி மின்சார ரயில் தயாரிக்கும் பணி ஐசிஎஃப்-பில் நிறைவடைந்துள்ளது.

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தின் விரைவுப் பாதையில் ஏ.சி. மின்சார ரயில் இயக்க ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே கடந்த 2019-ம் ஆண்டு பரிந்துரை செய்தது.

இதையடுத்து, ஏசி மின்சார ரயில்களை தயாரித்து வழங்க சென்னை ஐசிஎஃப்-க்குரயில்வே வாரியம் உத்தரவிட்டது. அதன்படி, 12 பெட்டிகள் கொண்ட ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணி கடந்த மாதம் தொடங்கி, நடைபெற்று வந்தது. இந்நிலையில், இப்பணி தற்போது நிறைவடைந்துள்ளது.இதுகுறித்து ஐசிஎஃப் அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை ஐசிஎஃப்.-பில் 12பெட்டிகள் கொண்ட புது வகை ஏசி மின்சார ரயில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தயாரிக்கப்படுகின்றன. மும்பை உள்ளிட்ட இடங்களில் தற்போது ஏசி மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கிடையே, சென்னைக்கு 2 ஏசி மின்சார ரயில் தயாரிக்கரயில்வே வாரியம் உத்தரவிட்டது.

தற்போது, முதல் ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணி முடிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் முழுமையாக குளிர்சாதன வசதி கொண்டது. மொத்தம் 12 பெட்டிகள் உள்ளன.

இந்த ரயிலில் அமர்ந்தபடி 1,116 பேரும், நின்றுகொண்டு 3,798 பேரும் என மொத்தம் 4,914 பேர் பயணிக்க முடியும். அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. தானியங்கி கதவுகள், ஜிபிஎஸ். அடிப்படையிலான தகவல் வசதி மற்றும் அறிவிப்பும் உள்ளன. அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் இருக்கும். இந்த ரயில் தெற்கு ரயில்வேயிடம் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த ஏசி மின்சார ரயில், சென்னை ரயில்வே கோட்டத்துக்கான முதல் ரயிலாகும். சென்னை கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில் இந்த ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற மின்சார ரயில்களை விட இதில் கட்டணம் அதிகமாக இருக்கும் என்று ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையைப் போல் கணக்கிட்டால் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் செல்வதற்கு அனேகமாக 95 ரூபாய் இருக்கும் என்று யூகங்கள் பரவலாக எழுந்துள்ளன. இன்னும் கட்டணம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

india vs england odi - 2026

இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது ஒருநாள் ஆட்டம் – அகமதாபாத் – 12 பிப்ரவரி 2025

இங்கிலாந்து அணி படுதோல்வி

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இந்திய அணி (356, ஷுப்மன் கில் 112, ஷ்ரேயாஸ் ஐயர் 78, விராட் கோலி 52, கே.எல். ராகுல் 40, அதில் ரஷீத் 4/64, மார்க் வுட் 2/45, ஓவர்டன், மகமூத், அட்கின்சன் தலா ஒரு விக்கட்) இங்கிலாந்து அணியை (34.2 ஓவர்களில் 214, அட்கின்சன் 38, டாம் பேண்டன் 38, பென் டக்கட் 34,  ஜோ ரூட் 24, பில் சால்ட் 23, ஜாஸ் பட்லர் 34, ஹாரி ப்ரூக் 31, அர்ஷதீப் சிங் 2/33, ஹர்ஷித் ராணா 2/31, அக்சர் படேல் 2/22, ஹார்திக் பாண்ட்யா 2/38, வாஷிங்க்டன் சுந்தர், குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கட்) 142 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவா தலையா வென்ற இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் ஜாஸ் பட்லர் முதலில் பந்துவீசத்தீர்மானித்தார். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் முகமது ஷமி, ஜதேஜா, வருண் சக்ரவர்த்தி ஆகியோருக்குப் பதிலாக அர்ஷதீப் சிங், வாஷிங்க்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் விளையாடினர்.

          ஆட்டத்தின் தொடக்கத்திலேயெ இந்திய அணியின் தொடக்க வீரர், அணித்தலைவர் ரோஹித் ஷர்மா ஒரு ரன் எடுத்து இரண்டாவது ஓவர் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஷுப்மன் கில் (102 பந்துகளில் 112 ரன், 14 ஃபோர் 3 சிக்சர்) மற்றும் அடுத்து களம் இறங்கிய விராட் கோலி (55 பந்துகளில் 52 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினார்கள். அதன் பின்னர் வந்த அனைத்து இந்திய வீரர்களும் ரன்ரேட் குறையாமல் ஆடினர்.

ஷ்ரேயாஸ் ஐயர் (64 பந்துகளில் 78 ரன், 8 ஃபோர், 2 சிக்சர்) கே.எல். ராகுல் (29 பந்துகளில் 40 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) ஹார்திக் பாண்ட்யா (17 ரன்) அக்சர் படேல் (13 ரன்), வாஷிங்க்டன் சுந்தர் (14 ரன்), ஹர்ஷித் ராணா 913 ரன்) என அனைவரும் சிறப்பாக ஆடினர். இறுதியில், இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 356 ரன் எடுத்தது.

          இரண்டாவதாக ஆடவந்த இங்கிலாந்து அணியின் தொடக்கம் மிகவும் பிரமாதமாக இருந்தது. பவர்ப்ளே ஓவர்களான முதல் 10 ஓவர்களில் அந்த அணி 2 விக்கட் இழப்பிற்கு 84 ரன் எடுத்திருந்தது. பில் சால்ட் (21 பந்துகளில் 23 ரன்), பென் டக்கட் (22 பந்துகளில் 34 ரன்), டாம் பேண்டன் (41 பந்துகளில் 38 ரன்), ஜோ ரூட் (29 பந்துகளில் 24 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். ஹாரி ப்ரூக் (19 ரன்), அட்கின்சன் (19 பந்துகளில் 38 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடியபோதும் இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் இங்கிலாந்து அணி 34.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 214 ரன்கள் எடுத்தது. 

இதனால் இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

          ஆட்ட நாயகனாக ஷுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியுடன் இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்தத் தொடர் வெற்றி சாம்பியன் ட்ராபி ஆடப்போகும் இந்திய அணிக்கு ஒரு மகத்தான ஊக்கம் தரும் வெற்றியாக அமைந்துள்ளது. 

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

hindu munnani protest in sankarankoil - 2026

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம்; 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

திருப்பரங்குன்றம் போராட்டத்திற்காக சங்கரன்கோவிலில் இந்து முன்னணி தென்காசி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தனது நெசவு பட்டறையில் தொழில் செய்து கொண்டிருந்தபோது வலுக்கட்டாயப்படுத்தி பிடித்து இழுத்து தள்ளி காயப்படுத்தி கைது செய்த சங்கரன்கோவில் தாலுகா காவல் ஆய்வாளர் மாதவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சங்கரன்கோவில் தேரடி திடலில் இந்துமுன்னணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில், இந்து முன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன், தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க மாநில துணைத்தலைவர் மாரிமுத்து, சங்கரன்கோவில் நகர ஐய்யப்ப சேவா சங்கத் தலைவர் எம் எஸ்.மணி ஆகியோர் முன்னிலையில், இந்துமுன்னணி நிர்வாகிகள் கோட்டச்செயலாளர் ஆறுமுகசாமி மணிகண்டன், பால்ராஜ் , குளத்தூரான் , உலகநாதன் , பெரியகாசிபாண்டியன் , மாரியப்பன், கார்த்திகேயன் , மாணிக்கம் , சிவா ஆறுமுகம் , வழக்கறிஞர் ஈஸ்வரன், பாஜக நிர்வாகிகள் முப்பிடாதி விக்னேஷ், வீரக்குமார் , ராமச்சந்திரன் , ராஜதேவேந்திரன் , குருசாமி மற்றும் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

crime

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீது விசாரணை தேதி மீண்டும் ஒத்திவைப்பு. பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு.

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக யூடியூப் திவ்யா, கார்த்திக் ஆனந்த், சித்ரா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆறு பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சித்ரா திவ்யா ஆகிய இருவரும் விருதுநகர் சிறைச்சாலையிலும் கார்த்திக் ஆனந்த் ஆகிய இருவர் மதுரை சிறைச்சாலையிலும் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு பேருடைய நீதிமன்ற காவல் நீட்டிப்பதற்காக இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் போக்ஷோ நீதிமன்றத்திற்கு கார்த்திக் ,ஆனந்த் ஆகிய இருவர் மட்டும் காவல்துறையில் அழைத்து வந்தனர். திவ்யா ,சித்ரா ஆகிய இருவரும் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக கலந்து கொண்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திவ்யா ஆனந்த் கார்த்திக் ஆகிய மூவரின் தங்களுக்கு ஜாமீன் கேட்டு மனு செய்துள்ள நிலையில் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு ஓத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் திவ்யா கார்த்திக் ஆக இருவரிடமிருந்து பணம் பறிக்க முயற்சி செய்வதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சித்ராவின் ஜாமீன் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேற்பார்வையாளர் திட்டியதால் மருத்துவமனை ஒப்பந்த தூய்மைப் பணியாளர் தற்கொலை முயற்சி!

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்பார்வையாளர் திட்டியதால் மருத்துவமனை ஒப்பந்த தூய்மைப்பணியாளர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்பார்வையாளர் ஜெயசுதா திட்டியதால் மருத்துவமனை ஒப்பந்த தூய்மைப்பணியாளர் சீதாலட்சுமி சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

சிவகாசி அருகே சோரம்பட்டியைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி (35).
இவர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிறிஸ்டல் என்ற தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரை நிறுவன மேற்பார்வையாளர் ஜெயசுதா அடிக்கடி திட்டுவாராம். இதனால் அவர் மனமுடைந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில்,
இவர் நேற்று இரவு பணியில் இருந்தார். காலை பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டுக் கொண்டு இருந்தார்.

இந்நிலையில் இன்று மீண்டும் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே கொண்டு வந்த சாணி பவுடரை மருத்துவமனையில் வைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

sand mafia in virudhunagar - 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கனிமவளக் கொள்ளையை தடுக்க தவறிய வட்டாட்சியர் உள்ளிட்ட ஏழு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இ‌.குமாரலிங்கபுரம் ஜவுளி பூங்கா அமையவுள்ள இடத்திற்கு அருகில் பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் விவசாய பயன்பட்டிற்கு களிமண் எடுக்க அனுமதி பெற்றுக்கொண்டு சுமார் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி கிராவல் மண்ணை கொள்ளையடித்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனுக்கு புகார் கிடைத்துள்ளதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார். ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியர் தனி குழு மூலமாக அப்பகுதியில் நடத்திய ஆய்வில் அங்கு பெரிய அளவில் கனிமவள கொள்ளை நடந்துள்ளதும்,

அதற்கு வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடந்தையாக இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கனிம வள கொள்ளையை தடுக்க தவறியதாக சாத்தூர் வட்டாட்சியர் ராமநாதன் 4 வருவாய் துறை அதிகாரிகள், நீர்வளத்துறை உதவி பொறியாளர் மற்றும் வேளாண்மை துறை உதவி வேளாண் அலுவலர் உள்ளிட்ட 7 அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

sabarimala iyappan sannidhi opened - 2026
#image_title

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜைகள் நாளை தொடங்குகின்றன. இதை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை இன்று பிப்12 மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரூ ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்தார். இன்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

நாளை அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், நெய்யபிஷேகம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகள் தொடங்கும். இரவில் படி பூஜையும் நடைபெறும். வரும் 17ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.

கேரளா வனப்பகுதியில் தற்போது கடும் வெயில் வாட்டில் எடுத்து வரும் நிலையே பம்பை சபரிமலையில் வெயில் மிக அதிக அளவில் இருந்தது இதனால் சபரிமலை வரும் பக்தர்கள் வாகனங்களை தொடர்ந்து பம்பையில் நிறுத்தவும் பம்பையில் நீராடவும் குடிநீர் வசதி மருத்துவ வசதி உட்பட மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தேவர்சம்போடு செய்து கொடுத்துள்ளது மேலும் பக்தர்களுக்கு ஐந்து நாட்களிலும் அன்னதானம் வழங்கப்படும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை பம்பை பகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண குள்ளார் அணைகுல்லார் அணை‌இன்று (12) திறக்கப்பட்டது.இதனால் பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

பத்தனம்திட்டா – சபரிமலை கும்பமாச பூஜையின் ஒரு பகுதியாக பம்பாவில் போதுமான நீர் மட்டத்தை உறுதி செய்வதற்காக, கக்காடு சீதாத்தோடில் உள்ள கே.எஸ்.இ.பி (அணை பாதுகாப்பு பிரிவு) நிர்வாகப் பொறியாளருக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ். பிரேம்கிருஷ்ணன் அனுமதி அளித்துள்ளார்.

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.