இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் பிரளய நாதர் விசாக நட்சத்திர சிவன் ஆலயத்தில், பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவை ஒட்டி, இக்கோயில் அமைந்துள்ள நந்திகேஸ்வரர், நரசிம்மர், சனீஸ் வரலிங்கம் , பிரளய நாதர் சுவாமி ஆகியோருக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, சுவாமி, அம்பாள், ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதை, ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
இவ்விழாவில், தொழில் அதிபர் எம். வி. எம். மணி, கவுன்சிலர்கள் எம். மருதுபாண்டியன், எம். வள்ளி மயில், கோவில் நிர்வாக அதிகாரி இளமதி, கணக்கர் சி பூபதி, வசந்த் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல, சோழவந்தான் அருகே தென்கரை மூலநாதர் சுவாமி ஆலயத்திலும், திருவேடகம் ஏடகநாதர் சுவாமி ஆலயத்திலும், மதுரை தெப்பக்குளம் முத்தீஸ்வரர் ஆலயத்திலும், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வர ஆலயத்திலும், மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர் சௌபாக்கிய விநாயகர் ஆலயத்திலும், ஜூபிலி டர்ன் ஞான சித்தி விநாயகர் ஆலயத்திலும் தாசிலா நகர் சித்தி விநாயகர் ஆலயத்திலும் ஜெ.ஜெ. நகர் விநாயகர் ஆலயத்திலும், வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்திலும் பிரதோஷத்தை முன்னிட்டு, சிவபெருமான் அம்பாளுக்கு சிறப்பு அபிஷே அர்ச்சனைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக பக்தர் குழுவினர் செய்திருந்தனர்.
ஆதீனத்தின் சொத்துக்களை ஆக்கிரமிக்க சதி? மடத்தின் பாரம்பரியத்தை இழிவுபடுத்த அறநிலையத்துறை எண்ணமா? என்று கேள்வி எழுப்பி, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார்கோவில் 28வது ஆதீனம் மகாலிங்கம் ஆதீனத்தின் மரபை மீறி தனது விருப்பப்படி ஒரு பெண்ணை பதிவு திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்.
திருமணம் அவரது தனிப்பட்ட விருப்பம் அதுகுறித்து கருத்து கூற ஏதும் இல்லை. ஆனால் அதனை அவர் கையாண்ட விதம் இந்துசமய நம்பிக்கையை அவர் கைவிட்டதை வெளிப்படுத்தியது. திருமணம் முறைப்படி இல்லாமல் சட்ட ரீதியான பதிவு திருமணம் மட்டும் செய்து கொண்டுள்ளது இதனை வெளிப்படுத்துகிறது.
மேலும் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தும் இந்துக்களை குழப்பிடவும், இதற்கு முன்பு திருமணமானவர்கள் ஆதீனமாக இருந்ததாக தவறான கருத்தை கூறினார். திருமணமானவர் வானப்ரஸ்தமாக குடும்ப உறவை துறந்து துறவியாக அந்த ஆதீனத்தின் தலைவராக பொறுப்பேற்று உள்ளார்கள். இவர் கூறியது திருமணம் செய்து இல்லறத்தில் இருந்து யாரும் அதில் செயல்படவில்லை.
மகாலிங்கம் அவர்கள் சூரியனார் கோவில் ஆதீனமாக இருந்தபோதே ஆளும் திமுகவின் துதிபாடியாக செயல்பட்டார். அதன் காரணமாக மற்ற ஆதீனத்தின தலைவர்களுடன் இணக்கமாக செயல்படாமல் அவரது நடவடிக்கைகள் இருந்தன என்பது கவனத்தில் கொள்ள வேண்டும்.
சைவ சமய ஆதீனத்தின் மரபை துறந்தவர் ஆதீனத்தின் தலைவர் என்ற தகுதியை உடனே இழக்கிறார்.
அவரது செயல்பாட்டிற்கு பக்தர்களிடையே எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஆதீனத்தை இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைப்பதாக கடிதம் எழுதியுள்ளார். அதற்கு இவருக்கு எந்த தகுதியும் உரிமையும் இல்லை.
ஆதீன செயல்பாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் மகாலிங்கம் அவர்களின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது.
மேலும் பாரம்பரியமான ஆதீனத்தில் குழப்பம் நிலவும் போது அதனை நிவர்த்தி செய்து அதன் ஆன்மிக செயல்பாடு தொடர்ந்து நடைபெற மற்ற ஆதீன பெரியவர்கள், ஆதீனத்தின் பக்தர்கள், அந்த ஊர் இந்து பெரியோர்கள், இந்து இயக்க தலைவர்கள் ஆகியோர் கலந்து ஆலோசித்து நல்லதொரு வழியை காட்டிட வேண்டும்.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதுபோல இந்து கோவிலில், ஆதீனத்தில் பிரச்சினை என்றால் அரசோ, இந்து சமய அறநிலையத் துறையோ இதில் தலையீடுவது கண்டிக்கத்தக்கது. எப்படி கிறித்தவ முஸ்லிம் மதங்களை சார்ந்த சர்ச் மசூதிகளில் பிரச்சினை ஏற்படும் போது அதில் அரசோ அரசு அதிகாரிகளோ தலையிடுவது இல்லையோ அதுபோல பாரம்பரியமான இந்து சமய முறைகளிலும் அரசு தலையிடக்கூடாது.
தகுதியற்ற முந்தைய ஆதீனமாக இருந்த மகாலிங்கம் கொடுத்த கடிதத்தை அங்கிகாரமாக நினைத்து அரசு ஆதீனத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதை இந்து முன்னணி கடுமையாக எதிர்க்கிறது.
எனவே இந்து முன்னணி முன்னர் கூறிய ஏற்பாட்டின்படி சூரியனார்கோவில் ஆதீனம் தொடர்ந்து செயல்பட மற்ற பாரம்பரிய ஆதீனங்கள் தீர்வுக்கான ஆலோசித்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்கி கேட்டுக்கொள்கிறோம்.
செங்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதியைக் கருதி, தங்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் நடமாடும் ஏடிஎம் பகல் நேரங்களில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதற்கு, செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர். இது தொடர்பாக அச்சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ். ராமன் தெரிவித்தவை…
செங்கோட்டை பிரானூர் பார்டரில் இயங்கும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிக்கும் அதன் மேலாளருக்கும் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர், செங்கோட்டை வட்டார ரயில் பயணிகள், செங்கோட்டை ரயில் நிலைய அலுவலர்கள், செங்கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு மக்கள் அனைவரும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றனர் .
இத்தரப்பினர் அனைவரும் பயன்பெறும் வண்ணம் – த.மெ. வங்கியின் நடமாடும் ஏடிஎம் வாகனத்தை கடந்த இரண்டு நாட்களாக செங்கோட்டை ரயில் நிலையம் முன்பு கொண்டு வந்து சில மணி நேரங்கள் நிறுத்தி வைத்து உதவி செய்தனர். இதனால் ஏராளமான ரயில் பயணிகள், பொதுமக்கள், ரயில்வே ஊழியர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள், டிக்கட் முன்பதிவு செய்ய வந்தவர்கள், அந்தப் பகுதியில் வசிக்கும் அரசு ஓய்வூதியர்கள் அனைவரும் பெரும்பயன் அடைந்தனர்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் செங்கோட்டை ரயில் நிலையத்தில் இயங்கி வந்த கனரா பாங்க் ஏடிஎம் மூடப்பட்டது. பிறகு பொதுமக்கள் ஏடிஎம் இல்லாது அவதியுற்றனர். அண்மையில் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க செய்தித் தொடர்பாளர் ராமன், இந்த டிஎம்பி நடமாடும் ஏடிஎம் பற்றி கேள்விப்பட்டு வங்கி மேலாளரை நேரில் சந்தித்து இந்த நடமாடும் ஏடிஎம்மை செங்கோட்டை ரயில் நிலையத்தில் மதியம் முதல் இரவு வரை நிறுத்துமாறு செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் சார்பில் கடிதம் அளித்து வேண்டினார்.
அதனை ஏற்று, வங்கி மேலாளரும் உடனடியாக நடவடிக்கை எடுத்து கடந்த இரண்டு நாட்களாக மொபைல் ஏடிஎம் வேனை செங்கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்த ஏற்பாடு செய்தார். ஆதரவை பொறுத்தே இந்த சேவை தொடரும் என்றும் டிஎம்பி வங்கி மேலாளர் கூறினார். அனைவரும் ஆதரவளிக்க வேண்டுகிறோம்! என்று குறிப்பிட்டார்.
மதுரை மாவட்டக் கோயில்களில், இம் மாதம் 15-ல் அன்னாபிஷேகம்!
மதுரை மாவட்ட கோவில்களில், இம்மாதம் 15- ஆம் தேதி வெள்ளிக் கிழமை, ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
ஆண்டு தோறும், ஐப்பசி பவுர்ணமி அன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி, இம்மாதம் 15- ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு, மதுரை மாவட்டத்தில் கோயில்களில் அன்னாபிஷேகம் சிவனுக்கு நடைபெறுகிறது. இதை ஒட்டி, சிவபெருமானுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அதை அடுத்து, அன்னா அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து, சிவபெருமான் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதை அடுத்து, பக்தர்களுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு, கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்படும்.
இரவு, சிவன் மீது செய்யப்பட்ட அன்னா அபிஷேகத்தை, கோயில் சிவாச்சாரியார்கள் தட்டில் வைத்து ஊர்வலமாக சென்று, நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
அதே போல, மதுரை மாவட்டத்தில், சோழவந்தான் சிவன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு, அன்னா அபிஷேகம் நடைபெறுகிறது. இதே போல, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் ஆலயம், இம்மையில் நன்மை தருவார் திருக்கோவில், பழைய சொக்கநாதன் திருக்கோவில், மதுரை அண்ணாநகர் சர்வேஸ்வர ஆலயம் , மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர் சௌபாக்கிய விநாயகர் ஆலயம், சித்தி விநாயகர் ஆலயம், வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயம் , மதுரை ரிங் ரோடு ஜே. ஜே. நகர், விநாயகர் ஆலயம் ஆகிய கோள்களில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு, அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். சோழவந்தான் அருகே, திருவேடகம் ஏடகநாதர் சுவாமி ஆலயம், பெண்களை மூலநாதர் சுவாமி ஆலயம், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், துவரிமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் ஆகிய கோவில்களிலும் ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு, சிவனுக்கு அன்னா பிஷேகம் நடைபெறுகிறது.
ஐப்பசி உத்திரட்டாதி.. இன்று என் தாயாரின் ஜன்ம நட்சத்திரம்! அடியேனும் உத்திரட்டாதிதான்! மாசி உத்திரட்டாதி!
என் தாயார் காலை வேளையில் சமையலறையில் சிலவற்றை உரக்கச் சொல்லிக் கொண்டே சமைப்பதை சிறு வயதில் கேட்டிருக்கிறேன். அப்படிப் பதிந்தவைதான் ஞானசாரம், பிரமேயசாரம், ஸப்தகாதை எல்லாம்! விளாஞ்சோலைப் பிள்ளை பிள்ளை லோகாச்சாரியார் திருவடிகளே சரணம் என முடிப்பார்.
அப்போது பொருள் புரிந்தெல்லாம் அவை ஏறவில்லை… ஆனால் பொருள் புரிந்த போது, வேறெதுவும் ஏறவில்லை!
ஒரு வெண்பா… அம்பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரங்க சம்பந்தம் காட்டித் தடைகாட்டி – உம்பர் திவம்என்னும் வாழ்வுக்குச் சேர்ந்த நெறிகாட்டும் அவனன்றோ ஆசா ரியன்.
வெண்பா இலக்கணமெல்லாம் உள் புகுந்த பின்னாளில், எல்லாமே வெண்பாவாகப் பதிந்தது. பொருள்..? மிக அருமை!
மேற்கண்ட பாடலின் பொருள்… “அந்த ரங்கனுக்கும், இந்த ஜீவனுக்குமுள்ள அந்தரங்க சம்பந்தத்தைக் காட்டி, இந்த ஜீவன் அந்த மாயனை அடையாதிருக்கும் தடையைக் காட்டி, தடை தகர்த்து இந்த ஜீவன் அந்த தேவனைச் சேரும் வாழ்க்கையைக் காட்டும் அவன் அன்றோ நம் ஆசாரியன்..!”
இப்பேர்ப்பட்ட ஏழு ரத்தினங்களாகிய ஸப்தகாதையை அளித்தருளியவர் விளாஞ்சோலைப் பிள்ளை!
14ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ரத்தினம்.. குலத்தாழ்ச்சி எனும் விஷம், அனந்தையிற் கண் வளரும் அமுதை அடையத் தடையாய் நின்றது இவருக்கு! ஆட்சி அதிகாரத்திற் கைக்கொண்டோர் திருவனந்தையிற் தடையாயிருந்தாலும், ஆசாரியனாகிற பிள்ளை லோகாசாரியர் அன்னாரை அரவணைத்தார். அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருகழைத்து உபதேசம் நல்கினார்.
அந்த பந்தம், அழகாய் இந்த ஏழு காதையாய் உருப் பெற்றது! ஆசார்யனாகிற விளாஞ்சோலைப் பிள்ளையின் திருநட்சத்திரமாகிற இன்றைக்கு அடியேன் தெண்டனிடுகிறேன்… இவ்வாசார்யனுடைய தனியனையும் தமிழையும் இச்செவியில் புகுத்திட்ட அடியேன் அன்னையின் திருவடிக்கும் சேர்த்தே!
ஸப்தகாதை: ஏழு வெண்பாக்கள்! (பொருளே தேவைப்படாத அழகுத் தமிழ்ப் பா… காலம் கடந்தும் நம் கையிற் தவழும் தமிழ்… அதுதான் சீரிளமைச் செந்தமிழ் !
அம்பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரங்க சம்பந்தங் காட்டித் தடைகாட்டி – உம்பர் திவமென்னும் வாழ்வுக்குச் சேர்ந்தநெறி காட்டும் அவனன்றோ ஆசாரியன். * அஞ்சு பொருளும் அளித்தவன் பால் அன்பிலார் நஞ்சில் மிகக்கொடியர் நாம் சொன்னோம் – நஞ்சுதான் ஊனை முடிக்கும துயிர் முடிக்கும் என்று ஈனமிலார் சொன்னார் இவை * பார்த்த குருவின் அளவில் பரிவின்றிச் சீர்த்தமிகு ஞானம் எல்லாம் சேர்ந்தாலும் – கார்த்தகடல் மண்ணின்மேல் துன்புற்றும் அங்குமே தேங்காமல் நண்ணுமே கீழா நரகு. * தன்னை இறையைத் தடையைச் சரநெறியை மன்னு பெருவாழ்வை ஒரு மந்திரத்தின் – இன்னருளால் அஞ்சிலுங் கேடோட ளித்தவன் பாலன்பிலார் நஞ்சிலும் கேடு என்றிருப்பன் நான்* * என் பக்கல் ஓதினார் இன்னார் எனும் இயல்வும் என்பக்கல் நன்மை எனும் இயல்வும் – மன்பக்கல் சேவிப்பார்க் கன்புடையோர் சன்ம நிரூபனமும் ஆவிக்கு நேரே அழுக்கு. * அழுக்கென்று இவை அறிந்தேன் அம்பொன் அரங்கா ஒழித்தருளாய் உள்ளில் வினையைப் – பழிப்பிலா என்னா ரியர்க்காக எம்பெரு மானார்க்காக உன்ன ருட்க்காக உற்று. * தீங்கேது மில்லாத தேசிகன் தன் சிந்தைக்குப் பாங்காக நேரே பரிவுடையோர் – ஓங்காரத் தேரின்மேல் ஏறிச் செழுங்கதிரின் ஊடுபோய் சேருவரே அந்தாமந் தான்.
விளாஞ்சோலைப் பிள்ளை – குறித்த சுஜாதா தேசிகன் – சமூக வலைத்தள பதிவு கீழே…
ஸ்ரீ வைஷ்ணவப் பெயர்களில் பல தகவல்கள் பொதிந்துள்ளது. அவை பெரும்பாலும் ஆழ்வார்களுடைய அருளிச் செயல்களுடன் சம்பந்தம் பெற்றிருக்கும்.
குலசேகர ஆழ்வார் “கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே” என்று ஆசைப்படுகிறார். கோனேரி என்பது திருவேங்கடத்தில் உள்ள திருக்குளத்தின்(ஏரி) பெயர். திருக்கோட்டியூர் நம்பிகள் சிஷ்யை ’திருக்கோனேரி தாஸ்யை’ என்ற திருநாமத்துடன் விளங்கினார். இந்த அடியார் ’திருவாய்மொழி வாசகமாலை’ என்ற நூலை நமக்குக் கொடுத்துள்ளார்.
“குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன்” என்ற பாசுரம் பலருக்குத் தெரிந்திருக்கும். திவ்ய பிரபந்தத்தில் பல இடங்களில் “குன்றம் ஏந்தி” என்ற சொல் வருகிறது, இது ஆச்சரியம் இல்லை, ஆனால் “குன்றம் ஏந்தி பாகவதர்” என்று ஒருவரின் பெயர் இருந்திருக்கிறது.
”’குன்றம் ஏந்தி’ என்ற பெயரா ? என்று நமக்குத் தோன்றும். உயர்ந்த கட்டிடங்கள் மேல் சாதாரணக் கம்பிக்கு ‘இடி தாங்கி’ என்று பெயர் இருக்கும் போது உயர்ந்த பாகவதருக்கு ’குன்றம் ஏந்தி’ என்று இருப்பதில் என்ன வியப்பு ?
பிள்ளைலோகாசாரியாரின் சிஷ்யர் ஒருவரின் பெயர் ’விளாஞ்சோலைப் பிள்ளை’. அவருடைய கதை தான் இன்று பார்க்க போகிறோம்.
விளாம் சோலை நிறைந்த தோட்டத்தில் வசித்து வந்ததால் இவருக்கு இந்த பெயர். இவர் கேரளாவில் திருவனந்தபுரம் பக்கம் ஆறனூர் என்ற கிராமத்தில் ஈழவர் என்ற தாழ்ந்த குலத்தில் பிறந்தவர். தாழ்ந்த குலம் என்பதால் பத்மநாப பெருமாளை சேவிக்க ( திருப்பாணாழ்வார் காவிரிக்கரையில் இருந்தே சேவித்தது போல ) இவர் கோயிலுக்குள் செல்லாமல், விளா மரங்கள் நிறைந்த சோலையில் இருந்த ஓர் உயர்ந்த தென்னை மரம் மீது தினமும் ஏறி அங்கிருந்து அனந்தபத்மநாபனின் விமானம் தெரிய அதைத் தரிசனம் செய்வது வழக்கம்.
ஸ்ரீ வைஷ்ணவ நெறியை ஏற்க குலப்பிறப்பு தடை இல்லை. இவர் திருவரங்கம் வந்து பிள்ளைலோகாசாரியாரிடம் அடிபணிந்தார். இவருக்குப் பிள்ளைலோகாசாரியார் ’நலம் திகழ் நாராயண தாஸர்’ என்ற திருநாமத்தைச் சூட்டினார்.
‘விளாம் சோலை பிள்ளை’ சேர தேசத்தவர்(கேரளா). குலசேகர ஆழ்வாரும் அதே தேசம் அதனால் பெருமாள் திருமொழியில் வரும் “நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே” என்ற பாசுர வரிகளில் வரும் பெயரையே அவருக்குச் சூட்டினார் என்று நினைக்கிறேன். இதில் என்ன வியப்பு என்றால் அந்த பாசுரத்தின் பொருள் அப்படியே நிறைவேறியது. எப்படி என்று சொல்லுகிறேன்.
நலம் திகழ் நாராயண தாஸர் பிள்ளைலோகாசாரியாரின் சிஷ்யராக அவருடைய காலஷேப கோஷ்டியில் இடம்பெற்று, அவர் உபதேசித்த ஸ்ரீ வசனப் பூஷணத்துக்கு இவர் ஒருவரே அதிகாரியாகவும் ஆனார்.
பிள்ளைலோகாசாரியார் துலுக்க படையிடமிருந்து நம்பெருமாளைக் காத்து ஜ்யோதிஷ்குடிக்கு சென்று அங்கே பரம பதிக்கும் முன் ஸ்ரீ வசனப் பூஷணத்தைத் திருவாய்மொழி பிள்ளைக்குப் பிற்காலத்தில் உபதேசிக்குமாறு பணித்தார்.
ஆசாரியரின் ஆசையை நிறைவேற்றுவது தானே சிஷ்யரின் கடமை. மீண்டும் சேர நாட்டுக்குச் சென்று திருவாய்மொழி பிள்ளையின் வருகைக்குப் பல காலம் அங்கே விளம் சோலையில் காத்துக்கொண்டு இருந்தார்.
பல காலம் கழித்து திருவாய்மொழிப் பிள்ளை திருவனந்தபுரத்துக்கு அனந்தபத்மநாபனைச் சேவித்து, விளாஞ்சோலைப் பிள்ளையின் திருவடி தொழ அவரை தேடிக்கொண்டு சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை வியக்கச் செய்தது.
விளாஞ்சோலை பிள்ளை தன் ஆசாரியரான பிள்ளைலோகாசாரியாரை தன் மனத்தில் நிறுத்தித் தியானித்துக்கொண்டு இருக்க, அவருடைய திருமேனியில் சிலந்திகள் வலை பின்னி சமாதி நிலையில் காட்சி கொடுத்தார்.
திருவாய்மொழிப் பிள்ளை அவர் திருவடிகளில் தண்டம் சமர்ப்பித்துக் கைகூப்பி எதிரே நின்றார். விளாஞ்சோலைப் பிள்ளை கண்களைத் திறந்த போது அவருடைய கடாக்ஷத்துடன் மனதில் வீற்றிருந்த பிள்ளை லோகாசாரியர் கடாக்ஷமும் திருவாய்மொழிப் பிள்ளைக்குக் கிடைத்தது.
வெகுகாலமாக திருவாய்மொழிப் பிள்ளையின் வருகைக்காகக் காத்துக்கொண்டு விளாஞ்சோலை பிள்ளை உள்ளம் பூரித்து அவருக்கு ஸ்ரீவசன பூஷணத்தின் அர்த்த விசேஷங்களை உபதேசித்து அருளினார். ஞான பரிமாற்றத்துக்குக் குலம் தடை இல்லை என்ற தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருமாலை “கொடுமின் கொண்மின்” என்ற பாசுர விளக்கம் அங்கே நடந்தேறியது.
இராமானுச நூற்றந்தாதியில் அமுதனார் கூறும் வஞ்ச முக்குறும்பு பிராமணர்களுக்கு ஓர் இடராக இருக்கிறது. இவை சிறிதும் இல்லாத தம்மைத் தாழ்ந்தவர்களாக நினைத்துக்கொள்பவர்கள் உயர்ந்த பிறப்பினர் என்பதற்கு ஆழ்வார்களில் திருப்பாணாழ்வாரும், ஆசாரியர்களில் விளாஞ்சோலைப் பிள்ளை, மாற நேரி நம்பியும் சிறந்த எடுத்துக்காட்டுகள்.
விளாஞ்சோலைப் பிள்ளையிடம் உபதேசம் பெற்று அவரிடம் விடைபெற்றுக்கொண்டு திருவாய்மொழிப் பிள்ளை ஆழ்வார் திருநகரியை அடைந்து தன் பிள்ளைலோகாசாரியாரின் ஆசைகளை நிறைவேற்றினார்.
அதே சமயம் திருவனந்தபுரத்தில் ஓர் அதிசயம் நடந்தது. ஒரு நாள் நம்பூதிரிமார்கள் அனந்தபத்மநாபனுக்குத் திருவாராதனம் செய்துகொண்டு இருக்க, விளாஞ்சோலைப் பிள்ளை கோபுரம் வாசல் வழியாக உள்ளே நுழைந்து பெருமாள் கர்பகிரஹத்தில் இருக்கும் மூன்று வாசலில், திருவடிக்கு முன் இருக்கும் வாசல் பக்கம் வந்து நின்றார்.
இதைக் கண்ட நம்பூதிரிகள், ஒரு தாழ்ந்த குலத்தவர் கோயில் உள்ளே வந்துவிட்டார் என்று அந்த கால வழக்கப்படி சந்நிதி கதவுகளைத் தாழிட்டு கோவிலைப் பூட்டிவிட்டு வெளியே வந்தார்கள்.
கோயில் வாசலில் விளாஞ்சோலைப் பிள்ளை சிஷ்யர்கள் சிலர் காத்துக்கொண்டு இருந்தார்கள். விசாரித்ததில் விளாஞ்சோலைப் பிள்ளை பிள்ளைலோகாசாரியாரின் திருவடியில் சேர்ந்துவிட்டார். அவருடைய சரமத் திருமேனிக்குக் கோயில் மாலை திருப்பரிவட்டம் வேண்டி நின்று கொண்டு இருந்தார்கள்.
இதைக் கண்ட நம்பூதிரிகளுக்கு வியப்பு. சற்றுமுன் கோயிலில் உள்ளே நடந்த அதிசயத்தை விவரித்தார்கள். திருவரங்கம் பெரியபெருமாள் திருவடியில் திருப்பாணாழ்வார் சேர்ந்தது போல, அனந்தபத்மநாபனின் திருவடியில் ‘நலம் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவரே!’ என்ற குலசேகரரின் திருவாக்கு ஆசாரியரான பிள்ளைலோகாசாரியாரின் அருளால் நிறைவேறியது!
இந்த செய்தியைக் கேள்விப்பட்ட திருவாய்மொழிப் பிள்ளை விளாஞ்சோலைப் பிள்ளைக்குச் சரமக் கைங்கரியங்களைப் பெரியநம்பி எப்படி மாற நேரி நம்பிக்கு நிறைவேற்றினாரோ அது போல நிறைவேற்றினார்.
இன்று ஐப்பசியில் உத்திரட்டாதி விளாஞ்சோலைப் பிள்ளை திருநட்சத்திரம்.
இந்தியா தென் ஆப்பிரிக்கா இரண்டாவது டி20 ஆட்டம் – டர்பன்– 10.11.2024
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இந்திய அணியை(20 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 124, திலக் வர்மா 20, அக்சர் படேல் 27, ஹார்திகபாண்ட்யா 39, ஜெரால்ட் கோயட்சி, ஜேன்சன், சிம்லனி, மர்கரம், பீட்டர் தலா ஒரு விக்கட்)தென் ஆப்பிரிக்க அணி (19 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 128, ஸ்டப்ஸ் 47, ஹென்றிக்ஸ்24, கோயட்சி 19, ரிக்கிள்டன் 13, வருண்5/17, ரவி பிஷ்னோய் 1/21, அர்ஷதீப் சிங் 1/41)3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் நான்குடி20 ஆட்டங்கள் கொண்ட தொடரை ஆடுவதற்காகச் சென்றிருக்கிறது. அதில் இரண்டாவது ஆட்டம்இன்று கபரைகா நகரில் நடந்தது. பூவாதலையா வென்ற தென் ஆப்பிரிக்க அணித்தலைவர்மர்க்ரம் இந்திய அணியை மட்டையாடச் சொன்னார்.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக்ஷர்மா (5 பந்துகளில் 4 ரன்) மற்றும் சஞ்சு சாம்சன் (மூன்று பந்துகளில் பூஜ்யம்ரன்) இருவரும் முதல் இரண்டு ஓவர்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தனர். சூர்யகுமார்யாதவ் (9 பந்துகளில் 4 ரன்) நாலாவது ஓவரிலும் திலக் வர்மா (20 பந்துகளில்20 ரன்) 8ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர் திலக் வர்மா, அக்சர் படேல் (21பந்துகளில் 27 ரன்) ஹார்திக் பாண்ட்யா (ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 39 ரன்)மூவர் மட்டுமே சுமார் 86 ரன்கள் இந்திய அணிக்காகச் சேர்த்தனர்.
இதன் பின்னர் வந்த வீரர்களானரிங்கு சிங் (11 பந்துகளில் 9 ரன்), அர்ஷ்தீப் சிங் (6 பந்துகளில் 7ரன்), ஆகியோர் சொற்ப ரன்களே சேர்த்தனர். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கட் இழப்பிற்கு124 ரன்கள் சேர்த்தது.
இதற்கு பதிலாக தென் ஆப்பிரிக்க அணி ஆடவந்தபோதுஅதன் தொடக்க வீரர்களான ஹென்றிக்ஸ் (21 பந்துகளில் 24 ரன்) மற்றும் ரிக்கிள்டன்(11 பந்துகளில் 13 ரன்) நல்ல தொடக்கம் தந்தனர்.
அணித்தலைவர் மர்கரம் (8 பந்துகளில்3 ரன்) ஆறாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது களமிறங்கிய ஸ்டப்ஸ் இறுதிவரை ஆடி(41 பந்துகளில் 47 ரன்) அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இந்தியப் பந்துவீச்சாளர்களில்வருண் சக்ரவர்த்தி நாலு ஓவர்கள் வீசி, 17 ரன் கொடுத்து, 5 விக்கட் வீழ்த்தினார்.
களம் சுழல் பந்து வீச்சிற்கு சாதகமானதாக இருக்கவில்லை. இருப்பினும் அக்சர் படேலை கடைசி இரண்டு ஓவர்களை வீசச் செய்திருந்தால் இந்திய அணிக்கு வேற்றி வாய்ப்பு இருந்திருக்கலாம்.தென் ஆப்பிரிக்க அணியில், வருண் பந்து வீசிக்கொண்டிருந்தபோது புத்திசாலித்தனமாககிளாசன், டேவிட் மில்லர் ஆகியோருக்குப் பதிலாக ஜேன்சனை மட்டையாட களமிறக்கினார்கள்.
அந்த வகையில் சூர்யகுமாரின் கேப்டன்சி இன்று சரியில்லை எனக் கூறவேண்டியுள்ளது,
அமெரிக்க தேர்தல் முடிவுகள் வந்து 4 நாட்களாகியும் அங்கே கலவரம் வெடிக்கவில்லை. ஏன்??? டிரம்ப்புடன் டீல் போட்டுவிட்டதா டீப் ஸ்டேட்??
2016 – 2020 காலக் கட்டத்தில் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த போது, அமெரிக்காவில் தொடர்ந்து பிரச்சினைகளை ஏற்படுத்தியது டீப் ஸ்டேட். பிளாக் லைஃப்ஸ் மேட்டர்ஸ் கலவரம் நினைவிருக்கும். பல மாகாணங்கள் தீக்கிரையாயின.
‘2024இல் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதி ஆனால், மீண்டும் கலவரத்தைத் தூண்டும் டீப் ஸ்டேட்’ என்று பலரும் கணித்திருந்தார்கள். என்றாலும், இது வரை எந்த சப்தமும் இல்லை.
வழக்கம் போல சி.என்.என் உள்ளிட்ட ஊடகங்கள் டிரம்ப்புக்கு எதிராக புலம்பி வந்தாலும், அவர்களது வியூவர்ஷிப் ரொம்பவே குறைந்திருக்கிறது. பலரும் மஸ்க்கின் எக்ஸ் பக்கத்தில் வரும் செய்திகளை / பதிவுகளை நம்புகிறார்கள்.
“வாக்காளர் / அடையாள அட்டை தேவையில்லை” என்று சொல்லி, சட்ட விரோத குடியேறிகளையும் வாக்களிக்க வைத்த சில டெமாக்ரட் மாநிலங்களில் மட்டுமே கமலா வென்றிருப்பது குறிப்பிடத் தக்கது.
டிரம்ப்பு தேர்தலில் clean sweep செய்திருக்கிறார். Swing state ஏழையும் வென்றிருக்கிறார் டிரம்ப்.
அமெரிக்க மக்கள் பெருவாரியாக ஆதரவளித்ததால் டீப் ஸ்டேட் அடக்கி வாசிக்கிறதா? தேர்தலுக்கு முன்பே வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட பல டீப் ஸ்டேட் ஊடகங்கள் கமலாவை எண்டார்ஸ் பண்ணாமல் ஒதுங்கி நின்றது, அவர்கள் மக்களின் தீர்ப்பை உணர்ந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
தேர்தல் முடிவு வந்ததிலிருந்து சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள்:
1, டிரம்ப் சொன்னதை ஏற்று, இஸ்ரேல் விரோத கத்தார் அரசு தன் நாட்டிலிருந்த ஹமாஸ் பயங்கரவாத தலைவர்களை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டிருக்கிறது.
2, அதே போல ஈரானும் ‘டிரம்ப்பின் அமெரிக்காவுடன் சமரசம் செய்ய தயார்’ என்று கூறியிருக்கிறது.
3, டிரம்ப் விரோதக் கருத்துகளைப் பேசி வந்த ஐரோப்பிய ஒன்றியம், சமாதானக் கொடி தூக்கியிருக்கிறது, ‘டிரம்ப்பின் அமெரிக்காவிடமிருந்து இனி எரிபொருள் வாங்குவோம்’ என்று.
4, ரஷ்யாவின் புட்டின் வழக்கம் போல வரவேற்றிருக்கிறார்.
5, சீனா மௌனம்.
6, தேர்தல் முடிவுகள் வந்ததும் அவர் பேசிய மூன்று தலைவர்கள்: பாரத பிரதமர் மோதி ஜீ, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு, சவுதி இளவரசர் முஹமது பின் சல்மான்.
7, செலன்ஸ்கிக்கு நோட்டீஸ் கொடுத்தாகிவிட்டது: ‘மேற்கொண்டு பணம் தர மாட்டோம். ஐரோப்பாவிடம் வேண்டுமானால் உதவி வாங்கிக் கொள். சமாதானமாகப் போ ரஷ்யாவுடன்’.
8, இது வரை டிரம்ப்புக்கும் பாரதத்துக்கும் எதிராக ஓவராக கம்பு சுத்திய ஹிலரி கிளிண்டன் / கிளிண்டன் ஃபௌண்டேஷன் இனி ‘ஆக்டிவ் பாலிடிக்ஸ்’ பண்ணப் போவதில்லை என்று செய்தி.
9, ஹிலரியின் செல்லப்பிள்ளை – வங்க தேசத்தின் முகமது யூனுஸ் – வங்க தேசத்தை விட்டு ஓடிவிட்டதாக வதந்திகள் உலவுகின்றன. மண்ட பத்திரம்.
10, என்ன செய்வதென்று தெரியாமல் ரவுன் வின்சி திண்டாட்டம்.
11, ‘ஜஸ்டின் டுருடோவின் அப்பன் பியர் டுருடோ இல்லை. ஃபிடல் காஸ்டிரோ தான்’ என்று தன் புத்தகத்தில் எழுதிய டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது டுருடோவுக்கு டென்ஷன். தனிக் குழு அமைத்திருக்கிறது டுருடோ அரசு – டிரம்ப் அட்மினுடன் இணைந்து செயல் புரிய. (நீ இனி என்ன பிடுங்கினாலும் பயனில்லை டுருடோ).
12, தேர்தல் முடிவுகள் வந்ததிலிருந்து டீப் ஸ்டேட் கைத்தடி பன்னுன் உள்ளிட்ட காலிஸ்தானிகள் சப்தத்தைக் காணோம்.
>>> டிரம்ப் பதவி ஏற்க இன்னும் 2 மாதங்களுக்கு மேல் இருந்தாலும், டிரம்ப்பின் transition team இப்பொழுது முதலே பைடன் அட்மினுடன் வேலை பார்க்க ஆரம்பித்திருப்பதால், பைடன் ஓனர்களான டீப் ஸ்டேட் தன் இஷ்டத்துக்கு அரசின் பாலிஸிகளில் விளையாட முடியாது என்கிறார்கள். எனவே, டிரம்ப் இன்னும் பதவி ஏற்கவில்லை என்றாலும், இப்போதே பாதி ஜனாதிபதி தான் என்று தோன்றுகிறது. அதனால் தான் உலகத் தலைவர்கள் பலரும் பைடனுடன் பேசாமல் டிரம்ப்புடன் பேசிவருகிறார்கள்!!!
டியர் டிரம்ப், அந்த காலிஸ்தானி பயல்களை சிறையில் அடைக்கவும். நன்றி.
இத்தை இங்கே பதிவிடுவதற்கே மனமில்லைதான்! ஆனால் பதிவிடாமலும் இருக்க முடியவில்லை! நான் பேஸ்புக்கில் ஏதாவது கனமான விஷயங்கள் பதிவு செய்தால், அதற்கு ஒற்றைச் சொல்லில் பதில் கருத்துப் பதிவிட்டுவிட்டு, கைபேசியில் அழைத்துவிடுவார்… அரை மணி நேரத்துக்கும் குறையாமல் ஒவ்வொரு முறையும் பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்பார். என் கருத்து, அதற்கு அவர் தரும் விளக்கம் அல்லது புரிந்து கொண்ட விதம், உலகியல் நடப்பு, ஆன்மிக அணுகுமுறை என்று பலவாறாக இருக்கும்!
இருபத்தைந்து வருட நட்பு! விஜயபாரதம் இதழில் நான் இருந்த போது சிறுகதை கேட்டுத் தொடங்கிய தொடர்பு! இதழின் தன்மைக்கு ஏற்ப சிறுகதைகளை எழுதுவார். கதையின் ஓட்டமும் முடிவும் இதழின் நோக்கத்தையும் புரியவைத்திருக்கும். அதனால் அவரிடம் கதையின் கருத்தோட்டத்தைக் குறித்த மாற்றத்தைக் கோரி ஒருநாளும் போன் செய்ததில்லை! ஆனால், அவரது கையெழுத்து…! ரொம்பவே கடினம், புரிந்து கொள்வதற்கு! அசுர வேகத்தில் எழுதித் தள்ளியிருப்பதை அனுமானிக்க முடியும்! சில இடங்களில் எழுத்து கணிக்கவியலாததாக இருக்கும். போன் செய்து கேட்டால் தெளிவு கிடைக்கும். இப்படியே தொடர்புகள் நீண்டு, நான் கலைமகள் நிறுவனத்தில் மஞ்சரி இதழாசிரியராகப் பணியில் இருந்த போது, கீழாம்பூர் அவர்கள் இவரது கதையை என்னிடம் கொடுப்பார், சார் உங்களுக்கு தான் புரியும், இந்தாங்கோ… என்பார். அச்சுக் கோத்து வந்ததில், பிழை திருத்திக் கொடுப்பேன். இது அவரின் கையெழுத்தைப் படித்துக் கொள்ள நானே ஏற்படுத்திக் கொண்ட ஒருவிதப் பயிற்சி என்று நினைத்துக் கொள்வேன்!
அடிக்கடி அலுவலகப் பக்கம் வருவார். சந்திப்புகள் சுவாரஸ்யமானதாக இருக்கும். திருச்சி, நெல்லை, மதுரை, சென்னை என் வாழ்வின் நெருங்கிய நகரங்கள். அவற்றில் என் மதுரையின் மதுர அனுபவங்களைச் சொல்வேன். அலுக்காமல் கேட்பார். தன் அனுபவங்களைச் சொல்வார். அவரது வீட்டுக்கு மூன்று முறை சென்றிருக்கிறேன். ஒரு முறை கீழாம்பூர் அழைத்துச் சென்றார். தினமணியில் இருந்த போது ஒரு முறை சென்றேன்.ஒரு முறை உடன் அமர்ந்து உணவு உண்டிருக்கிறேன். அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில்தான் அழகிரியின் வீடு என்று கைகாட்டப்பட்டு செல்லும் வழியை அப்போது மனத்தில் உள்வாங்கிக் கொண்டேன்!
2005ல் கலைமகளும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய சிறுகதைப் பட்டறையின் போது ‘உருவகக் கதைகள்’ என்ற உத்தியைப் பற்றி உரையாற்றினேன். எழுத்தாளனின் கற்பனைத் திறனும் கருத்தோட்டமும் விலங்குகளை முன்னிட்டுக் கொண்டு எப்படியெல்லாம் கதையாக வெளிவந்திருக்கிறது என்ற என் வாசிப்பின் வெளிப்பாட்டை வெகுவாக ரசித்துக் கேட்டார். (இணைக்கப் பட்ட இந்தப் படத்தில் அவரது முகபாவமே அதைக் காட்டும்!) தான் அந்த உருவகத்தையே தனித்துவமாய்க் கொடுக்காமல் வெகுஜனக் கதைகளினூடே சேர்த்துக் கொடுப்பதைப் பற்றி தனிப்பட்ட உரையாடலில் உதாரணங்களுடன் சொன்னார். ரசித்தேன்.
2008ல் என் இளைய சகோதரி திருமண வரவேற்பு மதுரையில்! பத்திரிகை அனுப்பி விட்டு, போனில்தான் அழைத்தேன்! நேரில் சென்று அழைக்க அன்று போதில்லை! அப்போது நான் விகடனில் இருந்தேன். அழைப்பை ஏற்று வந்து, உடனிருந்து மணமக்களை வாழ்த்தி, உணவருந்தி, நட்பை கௌரவித்தார். (அப்போது எடுக்கப்பட்ட படம்தான் இங்கே பதிவிட்டிருப்பது)
வைணவத்தின் பேரில் அவருக்கு தனி கவனமும் பெரு விருப்பும் இருந்தது. ஆழ்வார் ஆசார்யப் பெருமக்கள், அரங்கன் கதை, ஏழுமலையான், கள்ளழகர் என்றெல்லாம் அவ்வப்போது போனில் கதைப்பார். தன் அமானுஷ்யக் கதைகளின் பின்னோட்டத்தை இவற்றினூடே புகுத்தித் தன் கற்பனையைச் சொல்லி, என் கருத்தையும் கேட்பார். சிலவற்றில், நான் மரபை மீற வேண்டாமே என்று மறுத்துரைப்பேன். அதற்கு தன்னாலான விளக்கம் கொடுப்பார். அப்படியான சத்சங்கமாகவே அந்தத் தொலையுணர் உரையாடல் தொடர்ந்திருக்கும்!
அந்தப் பாசத்தால் தானோ என்னவோ, நட்பையும் கடந்து ஒரு படி முன் வந்து, எனக்கான குடும்பத்தை அமைத்துத் தருவது என்ற எண்ணத்தில் எனக்காகப் பெண் பார்க்கும் படலத்திலும் தலை நீட்டினார், அவரின் குடும்ப உறவுகளில் தலைகாட்டி! ஆனால் என் தலையில் எழுதப் பட்டிருப்பதை, பாவம்… அவரால் படிக்க முடியவில்லை!
தொழில்நுட்ப உலகில் அப்டேட் ஆக இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். இணையத்தின் நுணுக்கங்களை விரித்துக் கேட்பார். சொல்வேன். என் இதழியல் அலுவலகப் பணிகளின் அழுத்தங்களை உணர்ந்தவராய் அன்யோன்யமாகப் பேசுவார். அதில் அன்பும் அக்கறையும் மிகுந்திருக்கும்! அது ஒரு பத்திரிகை ஆசிரியருக்கும் எழுத்தாளருக்குமான உறவுநிலைகளைக் கடந்து உள்ளார்ந்து சென்றிருக்கும். எத்தனையோ எழுத்தாளர்களை என் வாழ்வில் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்திரா சௌந்தர்ராஜன் என்ற இந்த எழுத்தாளனைப் போன்ற அன்யோன்ய ஆத்மாவை இதுவரை அடியேன் உணர்ந்திலேன்! செயலிழப்பில் சிக்கித் தவிக்கும் என் இதயத்தின் பலவீனத்தை அறிந்து எத்தனையோ ஆறுதலும் தேறுதலும் எனக்களித்தார்! தன் இதயத்துடிப்பின் குரலையும் அவர் சற்றே உள்ளார்ந்து கேட்டிருக்கலாம்! என்ன செய்வது..? மர்ம தேசங்கள் நம் வசம் இல்லையே!
இந்திரா செளந்தரராஜன் அவர் வசிக்கும் மதுரையில் அவரது இல்லத்தில் காலமானார் என்ற செய்தி திடீரென ஹொசூரிலிருந்து, லா.ச.ரா. சப்தரிஷி மூலம் எனக்குக் கிடைத்தது.
இந்திரா செளந்தரராஜனின் நெருங்கிய நண்பரான எழுத்தாளர் க்ளிக் ரவியைத் தொடர்பு கொண்டு செய்தியை உறுதிப் படுத்திக் கொண்டேன்.
அதற்குள் தொலைக்காட்சி அலைவரிசைகளில் செய்தி இடம்பெறத் தொடங்கி விட்டது.
65 என்பது காலமாகிற வயதல்ல. இன்னும் நிறைய எழுதவும் பேசவும் திட்டங்கள் வைத்திருந்தார்.
ஆனால் இயற்கையின் திட்டம் வேறுமாதிரி அமைந்து விட்டது.
என்றாலும் இறுதி நாள் வரை வற்றாத ஊற்றெனத் தன்னுள் பொங்கிய எழுத்தைப் பதிவு செய்துவிட்டுத்தான் போயிருக்கிறார்.
அவர் சோம்பேறி அல்ல. ஓயாத உழைப்பாளி. நாள்தோறும் எழுதுபவர்.
அவரை எப்போது முதன்முதலில் சந்தித்தேன் என்று யோசித்தேன்.
ஆனந்தவிகடன் பரிசு பெற்ற மனிதன் என்ற அற்புதமான நாவலை எழுதிய ஏ.எஸ். ராகவன் பல ஆண்டுகளுக்கு முன்னால் காலமானபோது அவர் குடும்பத்தினரிடம் துயரம் விசாரிக்கப் போயிருந்தேன்.
அங்குதான் இந்திரா செளந்தரராஜனை முதன்முதலாகப் பார்த்தேன். ஏ.எஸ். ராகவனின் நெருங்கிய உறவினர் அவர் என்பதைப் புரிந்துகொண்டேன்.
அவரைக் கடைசியாக எப்போது சந்தித்தேன் எனவும் யோசித்தேன்.
சென்னையைச் சார்ந்த நங்கநல்லூரில் மகாசுவாமிகள் சரணாலயம் எழுப்பப் பட்டுள்ளது. ஜி.ஆர். மாமா என்பவர் அதன் பின்னணியில் இயங்குகிறார்.
அண்மையில் அங்கு நடைபெற்ற விழாவில் பேச நானும் இந்திரா செளந்தரராஜனும் இன்னும் சிலரும் அழைக்கப் பட்டிருந்தோம். அங்குதான் அவரை நான் கடைசியாகச் சந்தித்தது.
தளர்ந்திருந்தார். வயதை மீறிய முதுமை அவரிடம் தென்பட்டது. சில உடல்நலப் பிரச்னைகள் அவருக்கு இருந்தன என்பதை இப்போது அறிகிறேன்.
அமுதசுரபியில் அவரது சிறுகதைகளை வாங்கிப் பிரசுரித்திருக்கிறேன்.
சிறுகதை வெளிவந்ததும் மறக்காமல் நன்றி தெரிவித்துக் குறுஞ்செய்தி அனுப்புவார். அவரது பண்பாட்டை மனத்தில் மெச்சிக் கொள்வேன்.
கண்ணதாசன், ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, சோ போன்ற சிலர் எழுத்து பேச்சு என இரண்டு கலைகளிலும் தேர்ச்சியுடன் திகழ்ந்தவர்கள்.
அந்த வரிசையில் சேர வேண்டிய இன்னொரு பெயர் இந்திரா செளந்தரராஜன்.
மேலே சொன்னவர்கள் அரசியல் மற்றும் இலக்கியம் பேசினார்கள் என்றால் இவரோ முற்றிலும் ஆன்மிகத்தோடு தன் பேச்சின் எல்லையை வரையறுத்துக் கொண்டார்.
இன்று அவரைப் போன்ற ஆன்மிகப் பேச்சாளர்கள் நிறையத் தேவைப்படுகிறார்கள்.
சுஜாதா, பாலகுமாரன் போல இவருக்கும் ஒரு பெரிய வாசகர் வட்டம் உண்டு. இவரது மகாசுவாமிகள் பற்றிய உரைகளுக்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு.
ஆவிக்கதை, மர்மக்கதை என்றெல்லாம் கொஞ்சம் இவர் எழுதினாலும் அந்தச் சின்னச் சிமிழில் இவரை அடைத்துவிட இயலாது.
உண்மையில் பி.வி.ஆர்., மகரிஷி போன்றோரைப் போல ஒரு சிறந்த சமூக நாவலாசிரியராகவே இவரை மதிப்பிட வேண்டும்.
தான் அவ்விதம் மதிப்பிடப் படுவதைத்தான் அவர் விரும்பினார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
ஒருமுறை மதுரையில் வசிக்கும் நெல்லை பாலு அவர்கள் ஒரு சொற்பொழிவுக்காக என்னை அழைத்தபோது நான் மதுரை சென்றேன்.
அப்போது என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட இந்திரா செளந்தரராஜன் தன் இல்லம் வருமாறு அன்புடன் அழைத்தார்.
நான் போனபோது அவர் வீட்டினர் அளித்த விருந்துபசாரம் மறக்க இயலாதது. அவர் மனைவியையும் வெளிதேசத்திலிருந்து அங்கு வந்திருந்த அவர் மகளையும் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தேன்.
தான் எழுதுவது மாடியில்தான் என்று சொல்லி என்னை அங்கு அழைத்துச் சென்றார். அவரின் கிருஷ்ண ஜாலம் என்ற புத்தகத்தையும் அன்பளிப்பாக வழங்கினார்.
அவரைப் பற்றிய இன்னும் பல எண்ணங்கள் மனத்தில் அலைமோதுகின்றன.
மலர்ந்த முகமும் எப்போதும் அன்பு மயமாகப் பேசும் பேச்சுமாக வாழ்ந்து மறைந்த அவர் நினைவுகள் என்றும் என் மனத்தில் மணம் வீசிக் கொண்டிருக்கும். அவர் தம் எழுத்துகளில் வாழ்வார்.
நடிகர் டெல்லி கணேஷ் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் இரங்கலும், நேரில் அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் டெல்லி கணேஷ் (80) வயது மூப்பு மற்றும் உடல் நிலை மோசமடைந்த காரணத்தால் சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி கணேஷ் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
குணச்சித்திர நடிகராவும், காமெடி நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம்வந்த டெல்லி கணேஷ் 1944 ஆகஸ்டு 1ல் நெல்லை மாவட்டத்தில் பிறந்தார். அவருடைய பூர்வீகம், தற்போதைய தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு. டெல்லி கணேஷுக்கு சகோதரர்கள் 9 பேர், சகோதரிகள் இருவர்.
இவர் முதலில் விமானப்படையில் வேலை செய்தார். பத்தாண்டுகள் பணியில் இருந்து, பின்னர் கலைத்துறையில் ஈடுபாடு கொண்டு, அப்பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, நாடகங்களில் நடித்தார். நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டிருந்த போதிலும், டெல்லி தட்சிண பாரத நாடக சபாவில் நடிகராக இருந்த இவர், ‘டெல்லி’ கணேஷ் என பெயர் பெற்றார்.
1976ல் இயக்குநர் கே.பாலச்சந்தரின் ‘பட்டின பிரவேசம்’ என்னும் படத்தில் அறிமுகமானார். பின்னர் கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் நடித்து மிரட்டினார். சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காம ராஜன், தெனாலி, அவ்வை சண்முகி உள்ளிட்ட பல்வேறு படங்களில் தனது யதார்தமான குணசித்திர நடிப்பால் தனக்கென தனி இடம்பிடித்தார். ரஜினிகாந்த் உடன் இவர் நடித்த ஸ்ரீ ராகவேந்திரர் படத்தில் ராகவேந்திரரின் சீடராக அப்பணாச்சாரியர் என்ற கதாபாத்திரத்தில் வெகு இயல்பாக நடித்தார். அது ஆன்மிக உலகில் அவருக்கு என தனி மரியாதையைப் பெற்றுத் தந்தது.
குறும்படங்கள், டிவி நெடுந்தொடர்கள், வெப் சீரிஸ்களிலும் நடித்து அசத்தினார். அண்மையில் திரைக்கு வந்த ரத்னம், அரண்மனை 4, இந்தியன் 2 ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். 1994ல் கலைமாமணி விருது உள்பட பல்வேறு திரைத்துறை சார்ந்த விருதுகளைப் பெற்றுள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றிய நிலையில், வழக்கம் போல தனது வீட்டில் மகனுடன் பேசிவிட்டு தூங்கச் சென்றவருக்கு தூக்கத்திலே உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு திரையுலகத்தினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த டெல்லி கணேஷ்க்கு தங்கம் என்ற மனைவியும், லட்சுமி, சாரதா என இரு மகள்களும், மகாதேவன் என்ற மகனும் உள்ளனர்.
தலைவர்கள் இரங்கல்
நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
”புகழ்பெற்ற திரைப்பட ஆளுமை டெல்லி கணேஷ் மறைவு வருத்தமளிக்கிறது. அசாத்தியமான நடிப்புத் திறமையால் ஆசிர்வதிக்கப்பட்டவர் டெல்லி கணேஷ்.
ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அவர் கொண்டுவந்த நடிப்பின் ஆழம் மற்றும் தலைமுறைகளைக் கடந்து பார்வையாளர்களைக் கவரும் திறமையாலும் டெல்லி கணேஷ் நினைவுகூரப்படுவார். நாடகத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். டெல்லி கணேஷை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்” எனப் பதிவிட்டுள்ளார்.
Deeply saddened by the passing of the illustrious film personality, Thiru Delhi Ganesh Ji. He was blessed with impeccable acting skills. He will be fondly remembered for the depth he brought to each role and for his ability to connect with viewers across generations. He was also…
“திரு. டெல்லி கணேஷ் அவர்கள், தனது ஒப்பற்ற பன்முகத் திறமையால், எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, எல்லைகளைக் கடந்து சினிமா மற்றும் நாடக உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். நிரப்ப முடியாத அளவுக்கு அவரது மறைவு மிகவும் கடினமான வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி!” – ஆளுநர் ரவி
பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட இரங்கல் செய்தி:
தமது இயல்பான நடிப்புத் திறனால், ஏற்றுக் கொண்ட அனைத்துக் கதாபாத்திரங்களிலும், மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி, உலகெங்குமுள்ள தமிழ் மக்களின் அன்பைப் பெற்ற திரு. டெல்லி கணேஷ் அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். திரு. டெல்லி கணேஷ் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் வெளியிட்ட இரங்கல்
தமிழ், ஹிந்தி தெலுங்கு போன்ற மொழிகளில் 400- க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முத்திரை பதித்த மூத்த நடிகர் திரு டெல்லி கணேஷ் அவர்கள் நூற்றாண்டின் மிகச்சிறந்த நடிகர்களுள் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது இழப்பு தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிற்கே ஒரு பேரிழப்பாகும். “கலைமாமணி” திரு டெல்லி கணேஷ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். – ஆர்வி உதயகுமார் (தலைவர்) | ம பேரரசு (பொதுச்செயலாளர்)| சரண் (பொருளாளர்)
சமூகத் தளங்களில் பதிவான கருத்துகளில் ஒன்று
நடிகர் டெல்லி கணேஷ் இறந்துவிட்டார் என்பதை விட, சுமார் 15 ஆண்டுகள் இந்த தேசதின் வான்படை பைலட்டாக நின்று காவல் இருந்த அந்த டெல்லி கணேஷ் எனும் முன்னாள் விமானபடை வீரன் காலமாகிவிட்டார் என்பதே சரியானது
1962ல் இருந்து 1974 வரை அவர் இந்திய விமானபடையில் இருந்தார், அதன் பின்பே விருப்ப ஓய்வு பெற்று கலை உலகம் பக்கம் வந்தார்
தமிழக நடிகர்களிலே ராணுவ தொடர்பு உடையவரும் விமானம் இயக்க தெரிந்தவரும் அவர் ஒருவர்தான்
ஆனால் மிக எளிமையான மனிதர், எப்போதும் எங்கும் வெகு எளிமையாக தெரிந்தவர், அகம்பாவமோ நிறைய அறிந்த்வார் எனும் அலட்டலோ எங்கும் இராது
நெல்லை மாவட்டம் வல்லநாடு எனும் ஊரில் 1944ல் பிறந்தார், கல்லூரி படிப்பு முடிந்து ராணுவம் சென்றார்
11985ல் இருந்து அவரின் சினிமா பயணம் தொடங்கிற்று, நாயகன், முதலான படங்களில் அவர் தன் அபார நடிப்பினை வெளிபடுத்தினார், புதுகவிதை போன்றவை எப்போதும் நினைவில் நிற்பது
அவரின் சினிமா தாண்டி சிலாகிக்க வேண்டிய விஷயம் இரண்டு உண்டு
முதலாவது அவரின் கோவில் பணி , வல்லநாடு பக்கம் பல ஆலயங்களுக்கு அள்ளி கொடுத்தார், பெரிய அடியாராக அள்ளி கொடுத்தார் ஆனால் பெயர் வராமல் பார்த்து கொண்டார்
ஆம், அவரால் பயனடைந்த கோவில்கள் ஏராளம் உண்டு, மனிதர் வாய்விட்டு ஒரு இடமும் சொன்னதில்லை
இரண்டாவது எங்கு சென்றாலும் அந்த நெல்லை மண்ணின் அடையாளத்தோடு இருந்தார், கோவில்பட்டியினை தாண்டிவிட்டாலே தாங்கள் பிரிட்டிஷ் அரசகுடும்பமென நினைந்து தன் தோற்றம், பேச்சு, அடையாளமெல்லாம் மாற்றுவோர் மத்தியில் அவர் கடைசிவரை நெல்லையின் இயல்பான தமிழில் பேசினார்
அந்த மண்ணையும் மக்களையும் மரபையும் நேசிக்காமல் அது சாத்தியமில்லை
இப்படியானவர்கள் வெகுசிலர்தான், எத்தனையோ வருட டெல்லி வாசம் அதுவும் இந்தி ஆங்கிலம் கலந்த டெல்லி வாசம், எந்த தமிழ் என புரியாத சென்னை வாசம் என அவர் சொந்த ஊரை விட பல்லாண்டுகள் அதிகம் வெளியிடத்தில் இருந்தும் கடைசிவரை தன் மண்ணின் அடையாளத்தை விடவில்லை
அவரிடம் மிக மிக போற்றபட வேண்டிய குணம் அதுதான்
அவர் படங்களை பார்க்கும் போதெல்லாம் நெல்லை பக்கம் காணும் வெகுளியான ஆனால் பாசமான முகங்கள் நினைவுக்கு வரும், இனி அப்படியான பல முகங்களில் டெல்லி கணேசும் நினைவுக்கு வருவார்
பால்லையா போலவே மிக இயல்பான நடிப்பினை, அலட்டிகொள்ளாத ஆனால் ஆழமான அதே நேரம் வெள்ளந்தியான நடிப்பினை நெல்லை மண்ணின் அடையாளமாக தந்தவர் டெல்லி கணேஷ்
நாட்டுக்கும், க்லைதுறைக்கும் செய்த சேவையினை விட அவர் ஆலயங்களுக்கு செய்தது அதிகம், அந்த பரமாத்மா அந்த ஆத்மாவுக்கு நித்திய இளைபாற்றியினை கொடுக்கட்டும்