இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
லெபனானில் பயங்கரவாத இயக்கத் தலைவன் ஹசன் நஸ்ருல்லாவிற்கு தமிழகத்தில் அஞ்சலி.
தமிழகத்தில் மீண்டும் தலை தூக்குகிறதா இஸ்லாமிய பயங்கரவாதம்!
தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C.சுப்ரமணியம் அறிக்கை!
இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:
லெபனான் நாட்டில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவனான ஹசன் நஸ்ருல்லா இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், பயங்கரவாதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை மிர்சாகிப் பேட்டை பள்ளிவாசல் முன்பு பேனர் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.இது கடும் கண்டனத்திற்குரிய செயலாகும்.
1992 ஆம் ஆண்டு முதல் லெபனானில் பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதி மறைவிற்கு மதக் கலவரத்தை தூண்டும் வகையில் வாசகங்களுடன் சென்னையில் பேனர் வைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி மற்றும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய செயலாகும்.
இச்செயலை செய்தவர்களை தமிழக அரசும் உளவுத்துறையும் உடனடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மீர் சாகிப் பேட்டைக்கு அருகில் உள்ள ராயப்பேட்டையில் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்ப் -உத் -தஹீர் அமைப்புக்கு ஆட்களை சேர்த்து பயிற்சி மையம் அமைத்த செய்தி அம்பலமானதை அடுத்து தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.
இதைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு ஆதரவான நபர்கள் இந்த பகுதியில் இருக்கலாம் என விசாரணை நடைபெற்று வருகிறது.
மசூதி வாசலில் இஸ்லாமிய பயங்கரவாதிக்கு அஞ்சலி பேனர் வைக்கப்பட்டுள்ளது என்றால் ஜமாத்தின் ஆதரவு இல்லாமல் செய்திருக்க வாய்ப்பில்லை. எனவே மசூதியை நிர்வகிக்கும் ஜமாத் நிர்வாகிகளையும் காவல்துறை நுண்ணறிவு பிரிவு கண்காணிக்க வேண்டடியது அவசியமென தோன்றுகிறது.
உலகத்தின் எந்த நாட்டில் பயங்கரவாத செயல்கள் நடந்தாலும் அதில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள சில அமைப்புகள் செயல்படுகின்றன. அது மட்டுமன்றி வெளிநாடுகளில் பயங்கரவாதிகள் கொல்லப்படும் போது அதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு குரல் தமிழகத்திற்கு நல்லதல்ல.
2011 ஆம் ஆண்டு ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட போது சென்னையில் உள்ள மசூதியில் தொழுகை நடந்தது குறிப்பிடத்தக்கது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு ஆள் சேர்க்கும் நிகழ்வுகளும் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதை ஆரம்பத்திலேயே தமிழக ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாத காரணத்தினால் ஏற்கனவே சார்பு ஆய்வாளர் வில்சன் உட்பட பல உயிர்களை இழந்துள்ளோம்.
2014 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் என அச்சிடப்பட்ட டி ஷர்ட் அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அவர்களது இருபதுக்கும் மேற்பட்ட சமூக வலைத்தள கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது.அவர்கள் அனைவரும் சிறுவர்கள் என்ற காரணத்திற்காக விடுவிக்கப்பட்டனர்.
2019 ஆம் ஆண்டு இலங்கை தலைநகர் கொழும்பில் தேவாலயத்தில் நடைபெற்ற மாபெரும் குண்டு வெடிப்பு நிகழ்த்திய பயங்கரவாதிகளுக்கும் தமிழகத்தில் உள்ள பயங்கரவாதிகளுக்கும் உள்ள தொடர்பு கண்டறியப்பட்டது. அவர்களது அலைபேசி உரையாடல்களும் கண்டுபிடிக்கப்பட்ட பின்பும் கூட பயங்கரவாதிகள் மிக சுலபமாக தமிழகத்தில் சுற்றி திரிந்து வருவதாக சொல்லப்படுகிறது..
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலஸ்தீன இஸ்ரேல் போர் நடைபெற்ற போது சில முஸ்லிம் அமைப்புகள் பாலஸ்தீன கொடியுடன் தமிழகத்தின் பல பகுதிகளில் வலம் வந்தனர். இதையும் தமிழக உளவுத்துறை கவனிக்க தவறியது.
அதேபோல கர்நாடகாவில் நடைபெற்ற ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பிற்கும் தமிழகத்தில் உள்ள பயங்கரவாதிகளோடு நெருங்கிய தொடர்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.NIA இவர்களை எல்லாம் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தது. ஆனால் தமிழக உளவுத்துறையோ உறங்கிக் கொண்டிருந்தது.
பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் நபர்களை கவனிக்க தவறியதால் தான் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி வருவது கண்கூடு.
மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜிவாஹிருல்லா அவர்கள் பாலஸ்தீனத்தில் கொல்லப்பட்ட ஹசன் நஸ்ருல்லாவிற்கு போராளிகள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று பேசி உள்ளதையும் இந்து முன்னணி பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது .அனைத்து மதத்தினரும் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறதா ? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் .
மண்டியிட்டு வாழ்வதை விட சத்தியத்திற்காக நிமிர்ந்து நின்று மடிவது மேல் என்ற வாசகங்களுடன் இறந்து போன பயங்கரவாதிக்கு சென்னையில் பேனர் வைத்தவர்கள் யார் ? அவர்களது பின்னணி என்ன என்பதைப் பற்றியும் முழுமையாக தமிழக அரசும் உளவுத்துறையும் விசாரிக்க வேண்டும் .அவர்களுக்கு ஆதரவாக யார் பேசினாலும் அவர்களையும் கைது செய்ய வேண்டும்.
இனி இது போன்ற பயங்கரவாத ஆதரவு சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.
தமிழகத்தில் 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி நடத்த அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பில் அரசுக்கு சில கேள்விகளையும் நீதிமன்றம் எழுப்பியுள்ளது.
விஜயதசமியை முன்னிட்டு வரும் 6ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளில் நேற்றைய விசாரணையின் போது 42 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தமிழக அரசும், போலீசாரும் கண்ணாமூச்சி ஆடுவதாக கடும் அதிருப்தி தெரிவித்தது. மேலும், நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்றும், தி.மு.க., பவள விழாவுக்கு மட்டும் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வழங்கியது எப்படி என்றும் சரமாரியாக கேள்விகளை எழுப்பியது.
ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி முடிவு எடுத்து இன்று தெரிவிக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 42 இடங்களுடன் கூடுதலாக மேலும் 10 இடங்களுக்கு அனுமதி தரப்படுவதாகவும், 6 இடங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தமிழக அரசின் சாபில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து நிபந்தனைகள் அடிப்படையில் மொத்தம் 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி அளித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
இது குறித்து அவர் பிறப்பித்த உத்தரவில், குறிப்பிட்ட மதத்தினர் வாழும் பகுதி, கொள்கை மாறுபாடு கொண்ட மக்கள் வசிக்கும் பகுதி என்று கூறி ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி மறுக்கக் கூடாது. நிபந்தனைகளுடன் 6 இடங்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 58 இடங்களிலும் பேரணிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. எந்தப் புதிய நிபந்தனைகளையும் விதிக்கக்கூடாது. எதிர்காலத்தில் ஆர்.எஸ். எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க மறுக்கக்கூடாது என்று தனது உத்தரவில் குறிப்பிட்டார்.
புகழ்பெற்ற பல தலைமை நீதிபதிகளை கொண்ட நம் இந்திய நீதித்துறையில் நீதிபதிகள் சிலர் மட்டுமே தத்தம் சுயசரிதையை எழுதி இருக்கிறார்கள்.
அவர்களுள் நீதியரசர் திரு. M .C . சாக்ளா (CHAGLA), சுதந்திரமெய்திய பின் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். “Roses in டிசம்பர்” என்ற பெயரில் தனது சுயசரிதத்தை எழுதியவர்.
அவரது பதவிக் காலத்தில் முதல்வராய் இருந்தவர் திரு. மொராஜி தேசாய் அவர்கள். தலைமை நீதிபதி என்பவர் தனித்து இயங்குவது என்பது கடினம். நிர்வாக ரீதியிலான பலதரப்பட்ட விஷயங்களுக்கு தீர்வு காணவேண்டும். வரவு – செலவு அனுமதி, முன் மொழியப்பட்ட நியமனங்கள், அங்கீகாரங்கள் என்பனவற்றில் அவர் தனித்து செயல்படுவதென்பது கடினம்.
எனவே நிர்வாக ரீதியிலான விஷயங்களுக்கு தாமதமின்றி தீர்வு காண, கடிதங்கள் பரிமாற்றம், கோப்புகளில் குறிப்பு அனுப்புவது என்பவற்றை விடுத்து நீதித்துறையும், அரசாங்கமும் நேரிடையாக அமர்ந்து ஆலோசனை செய்தால் உடனுக்குடன் தீர்வை எட்ட முடியும் என்று ஒன்றுசேர கருதியதால் நீதிபதி திரு.சகலா வும் முதல்வர் திரு. மொராஜியும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் சந்தித்துக் கொண்டனர்.
#image_title
ஞாயிறு தோறும் மதிய உணவிற்கு முதல்வர் தலைமை நீதிபதி இல்லம் செல்வார். உணவிற்குப் பின் நீதித்துறையும், அரசும் சேர்ந்து தீர்வு காணப்பட வேண்டிய விஷயங்கள் கொண்ட கோப்புக்களுடன் அமர்வார்கள். இந்த அமர்வில் பலதரப்பட்ட விஷயங்களுக்கு அரை மணி நேரத்திற்குள் தீர்வு எட்டியாகிவிடும் என்பதை நீதிபதி பதிவிட்டிருக்கிறார்.
இந்த சந்திப்பானது சாக்ளா குடும்பத்தாரை ஞாயிறு தோறும் சைவர்களாக ஆக்கியது. அசைவம் என்பது தனக்கு உணர்ச்சிபூர்வமான விஷயம் அல்ல என்றும், தனக்காக அவர்கள் உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் இல்லை என்பதையும் முதல்வர் அழுத்தமாகச் சொன்ன போதிலும், ஒரு எளிமையான , சுவையான உணவை உட்கொண்ட பின் திரு. மொராஜி அவர்களை சமாளிப்பதும், கையாளுவதும் சுலபமாக இருந்ததால், சைவம் சமைப்பதில் தனக்கொரு சுயநலம் இருந்ததாகக் குறிப்பிடுகிறார் நீதிபதி.
முதல்வருக்கும் நீதிபதிக்கும் பங்காட்டத்தில் (கார்ட்ஸ்) நாட்டம் இருந்தது. ஒரு முறை சீட்டாடும் விருப்பத்தை மொராஜி சொல்ல நீதிபதியோ மறுத்துவிட்டார்.
காரணம் : பணையம் வைத்து ஆடும் பழக்கத்தில் தனக்கு உடன்பாடில்லை என முதல்வர் சொல்ல, பணையம் வைக்காமல் ஆடுவதில் தனக்கு உடன்பாடில்லை என்றார் நீதிபதி!
சிறு வயதில் நிறைய புத்தகங்களை என் பெற்றோர் எனக்கும், என் சகோதரர்களுக்கும் அறிமுகப்படுத்தியதாலும், அந்த நாட்களில் மின்னணு கெஜட்டுகள் இல்லாததாலும் இன்றும் வாசிப்பு என்ற பழக்கமே எங்களிடம் வழக்கமாய் உள்ளது.
என்திருமணத்திற்கு பிறகு மஹாராஷ்டிராவிற்கு சென்றதும் கொஞ்சம் எழுதத் தொடங்கினேன். பின்னர் ‘தி ஹித்வாத்’ என்னும் ஆங்கில நாளிதழில் ஆசிரியருக்கு கடிதம் எழுதத் தொடங்கினேன். முதல் கடிதம் வந்து எட்டு மாதங்களில் ‘தி ஹித்வாதின்’ வர்தா அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளராய் சேர்ந்தேன். மராட்டி மற்றும் ஹிந்தி மொழிகளில் இருந்து வரும் செய்திகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டுமாய் இருந்தது.
முதல் நாள் அனுப்பிய ரிப்போர்ட்டுகள் மறுநாள் பிரசுரிக்கப்பட்டதால் திருப்தி கிடைத்தது. எனக்கு மிகவும் சீனியரான எங்கள் பகுதியிலிருந்து செல்லும் செய்திகளை கவனித்து பிரசுரிக்கும் ஒரு மேடம் ,” மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை. நமக்கு தெரிந்த வார்த்தைகளோடு விளையாட வேண்டும், ஆனால், அந்த வார்த்தைகளின் பொருளை மாற்றி விடக்கூடாது.
அந்தந்த மொழியின் தனித்துவம், செய்தி நடக்கும் இடத்தின் தனித்துவம், செய்தியில் சொல்லப்படுகின்ற நபரைப் பற்றிய குறிப்பு முதலியவை மொழிப்பெயர்ப்பாளர் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும், ” என்றார். அவரது வார்த்தைகளில் இருந்த உண்மையானது என்னுடைய தினசரி அலுவலக வேலையில் புரிந்தது.
பின்னர் வர்தா நகரத்தின் ரிப்போர்ட்டராக நியமிக்கப்பட்டேன். அப்போது, தகவல் தெரிவிப்பவர் கூறும் கருத்துகளானது ( மராட்டியிலோ, ஹிந்தியிலோ) இருக்கும். அதனை எனக்குப் புரியும் விதத்தில் தமிழிலோ, ஆங்கிலத்திலோ குறிப்பெடுத்துக் கொள்ளும் போது, சுவாரஸ்யமாகவே இருந்தது. நம் தமிழ்நாட்டின் பத்ம பூஷன் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பை நான் உள்ளூர் பத்திரிகையாளர்களுக்கு மொழிபெயர்த்து சொன்னதும் நல்ல அனுபவமாய் இருந்தது.
தன் பெயரில் செய்திகள் வர வேண்டும் என்பதே ஒவ்வொரு ரிப்போர்ட்டரின் லட்சியமாய் இருக்கும். இரண்டு வருடங்களுக்கு பிறகு ஆச்சர்ய வினோபா பாவே அவர்கள் மராட்டிய மொழியில் எழுதிய ‘கீதாயி’க்காக உருவாக்கப்பட்ட வர்தாவின் ‘கீதாயி மந்திர்’ பற்றிய ரிப்போர்ட் என் பெயரில் வெளிவந்தது.
என் கணவருக்கு அவருடைய சிறிய வயதில் ஆச்சார்ய வினோபா பாவே (மராட்டியில்-பேரு=தமிழில் கொய்யாப் பழம்) கொடுத்தாராம். அதனால், அன்று என் கணவர், ” ஆச்சார்யாஜி, எனக்கு பேரு கொடுத்தார், உனக்கு பேர் கொடுத்தார்,” என்றார். பின்னர், பல ரிப்போர்ட்டுகள் என் பெயரில் வெளிவந்தன.
வர்தா மாவட்டத்தில் உள்ள எட்டு தாலுக்காவில் இருந்த 50-க்கும் மேற்பட்ட நிருபர்களின் ரிப்போர்ட்டுகளை மொழிபெயர்க்கும், எடிட் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
குடும்பத்தினரின் ஓத்துழைப்பு, நிருபர்களின் உதவி, அலுவலகத்தில் உள்ளவர்களின் வழிகாட்டல், வாசகர்கள் கொடுத்த ஆதரவு போன்ற விஷயங்களே எனக்கு உறுதுணையானது.
இதற்கிடையில் 2016, 2017, 2018 ஆகிய வருடங்களில் மூன்று சங்கங்கள் ‘பத்திரிக்கையாளராக’ என்னை கௌரவித்தன.
முன்னாள் ராஷ்டிரபதி பிரணப் முகர்ஜி, முன்னாள் மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபடன்வீஸ், மத்திய அமைச்சர் நிதின் காட்கரி அவர்களின் ஒரு நிகழ்ச்சி வர்தாவில் நடந்த போது செய்தி சேகரிக்க நான் சென்றது, ஒரு மகிழ்ச்சியான தருணம்.
வர்தா மாவட்டத்தில் மக்கள் செய்தி தொடர்பாளராய் இருந்த அதிகாரி என்னுடைய ரிப்போர்ட்டுகளை மாநில அளவிலான பரிசுக்காக 2017-ஆம் வருடம் அனுப்பினார். ஆனால், பரிசுக் கிடைக்கவில்லை.
பின்னர், நாக்பூரில் தலைமை அலுவலகத்தில் சப்-எடிட்டராய் சேர்ந்தேன். ஏழு மாவட்ட செய்திகளை ( மராட்டி – ஹிந்தி) மொழிபெயர்த்தும், ஆங்கிலத்தில் வரும் செய்திகளை எடிட் செய்தும், பேஜ் செட்டப் (Page Setup) செய்தும், அருமையாய் என் வேலையை ரசித்தேன்.
என் டெஸ்கில் இருந்தவர்களும் மிகவும் உதவி செய்தனர். நாக்பூர் முனிசிபல் கார்ப்பரேஷனால் பராமரிக்கப்படும் நாக்பூரில் உள்ள லதா மங்கேஷ்கர் கார்டனின் அவல நிலையை படம் பிடித்தும், அதனைப் பற்றிய ஒரு ரிப்போர்ட்டு எழுதினேன். அந்த ரிப்போர்ட்டானது மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நடந்த அன்று வெளியானது ஒரு மறக்க முடியாத அனுபவம்.
மொழிபெயர்க்கப்பட்ட ஒரு தகவலை வைத்தே அந்த மொழிபெயர்ப்பாளரின் திறமையை அறிந்து விடலாம், என்பார் என் சக பத்திரிகையாளர் ஒருவர்.
இப்பொழுதெல்லாம் கூகுள் மொழிபெயர்ப்பு இருப்பதால் மொழிபெயர்ப்பு என்பது சுலபமாகி விட்டதே அன்றி மொழிபெயர்ப்பானது ‘மொழிப் பெயர்ப்பாகி’ விட்டது என்பதே கசப்பான உண்மை. நபர்களின் அடைமொழியைக் கூட மொழிபெயர்ப்பு செய்து விடுகிறது, கூகுள். இசைத் தென்றல் என்பதற்கு ‘ம்யூசிக் ப்ரீஸ்’ என்றும் என்னுடைய கடைசிப் பெயரான ‘சாரி’ யை ஹிந்தியில் ‘சாடி’ என்றும் மொழிபெயர்ப்பு செய்கிறது. இப்படி பல உதாரணங்கள்.
மொழிபெயர்ப்பாளரின் மொழி வளம், எழுத்தாற்றல் போன்ற பல விஷயங்களும் மொழிபெயர்ப்புக்கு இன்றியமையாதது என்பதே நிதர்சனமான உண்மை.
இந்தியா- வங்கதேசம் இரண்டாவது டெஸ்ட் – கான்பூர் – நான்காம் நாள் – 30.09.2024
முனைவர்கு.வை. பாலசுப்பிரமணியன்
வங்கதேசம் முதல் இன்னிங்க்ஸ் 233 (மோமினுல்107*, பும்ரா 3-50, ஆகாஷ் தீப் 2-43) இரண்டாவது இன்னிங்க்ஸ் (இரண்டு விக்கட்இழப்பிற்கு 26 ரன்)(ஜாகிர் 10, ஷத்மான் 7*, அஷ்வின் 2-14) இந்தியஅணி முதல் இன்னிங்க்ஸ் 285 க்கு 9 டிக்ளேர்டு (ஜெய்ஸ்வால் 72, ராகுல் 68, மெஹிதி 4 -41, ஷகிப் 4-78). இந்திய அணி 26 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டபிறகு இன்று நான்காம் நாள் கிரிக்கெட் விளையாடப்பட்டது.வேகமாக ரன் அடித்த இந்தியாசில டெஸ்ட் சாதனைகளை முறியடித்தது. ரோஹித் ஷர்மா தனது ஒயிட்-பால்கிரிக்கெட் டெம்ப்ளேட்டை நீட்டினார்.
அவர் 11 பந்துகளில் 23 ரன்களை விளாசினார், மற்ற இந்திய வீரர்களும்இதே போல அதிரடி ஆட்டத்தைப் பின்பற்றினர். அந்த அணுகுமுறையால் அவர்கள்ஆடவர் டெஸ்டில் அதிவேகமாக 50, 100, 150, 200 மற்றும் 250 ரன்களை பதிவு செய்தனர், மேலும் பங்களாதேஷ் 233 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு, அவர்களின் முதல் இன்னிங்ஸை வெறும் 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தனர்.
முதல் நாள் ஆட்ட முடிவில் 35 ஓவருக்கு வங்கதேசஅணி மூன்று விக்கட் இழப்பிற்கு 107 ரன் எடுத்திருந்தது. அடுத்த இரண்டு நாட்களும் ஆட்டம்மழையாலும் ஈரமான ஆடுகளத்தாலும் நடக்கவில்லை. இன்று நான்காம் நாள் வங்கதேச அணியின் முதல்விக்கட் (முஷ்ஃபிகுர் ரஹிம்) 41ஆவது ஓவரில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து லிட்டன் தாஸ் ஐம்பதாவது ஓவரில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஐம்பத்தி ஆறாவதுஓவரில் அஷ்வின் ஷாகிப் அல் ஹசனை ஆட்டமிழக்கச்செய்தார். அதற்கடுத்த நாலு விக்கட்டுகளும்70ஆவது ஓவரில் இருந்து 75ஆவது ஓவருக்குள் விழுந்தன. வங்கதேச அணி 233 ரன்களுக்கு அனைத்துவிக்கட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸை ஆடவந்தபோதுரோஹித் ஷர்மா டி20 மேட்ச் ஆடும் மூடில் இருந்தார். இந்திய அணி 19 பந்துகளில் 50 ரன்எடுத்தது. ரோஹித் ஷர்மா 11 பந்துகளில் 23 ரன் எடுத்து அவுட் ஆனார்.
முன்னதாக, இந்தியாவுக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல்ஆகியோர் முறையே 141.17 மற்றும் 158.13 என்ற விகிதத்தில் அரைசதங்களைஅடித்தனர், இந்திய பந்துவீச்சாளர்களுக்கு டெஸ்டின் இறுதி நாளின் இறுதி நாளின் இறுதி நேரத்தில் வங்காளதேசத்தின் பேட்டர்களை மற்றொரு ஷாட் கொடுத்தனர்.
மெஹிடிஹசன் மிராஸ் மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஆகியோர்தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் பின்னர் இந்திய அணி 62 பந்துகளில்100 ரன்; 112 பந்துகளில் 150 ரன்; 148 பந்துகளில் 20 ரன்; 183 பந்துகளில் 250 ரன் –இவையனைத்தும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி இன்று நிகழ்த்திய சாதனைகளாகும்.
9 விக்கட் இழப்பிற்கு 285 ரன் எடுத்திருந்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதனால் வங்கதேச அணி சுமார் 45 நிமிடங்களுக்கு இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடவந்தது.
பும்ரா, ஆகாஷ்தீப் இருவரும் சிறப்பாக பந்துவீசினர்.ஆனால் அஷ்வின் இரண்டு விக்கட்டுகள் எடுத்தார். ஆட்டநேர முடிவில் 11 ஓவர்களுக்கு வங்கதேசஅணி இரண்டு விக்கட் இழப்பிற்கு 26 ரன் எடுத்திருந்தது. இதனால் இந்திய அணி 26 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
உலக இதய தினத்தை முன்னிட்டு மதுரை அப்போலோ மருத்துவமனையின் வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி வெற்றிகரமாக மதுரையில் நடந்தேறியது.
உலக இருதய தினத்தை முன்னிட்டு, மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவ மனை, நடத்திய மாபெரும் விழிப்புணர்வு வாக்கத்தான் மதுரையில் நடைபெற்றது. இருதய நலம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் நோக்குடன் இந்த வாக்கத்தான் நடைபெற்றது. இந்த நடை பயிற்சியில், 2000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
காலை 6 மணி அளவில் மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கல்லூரியில் தொடங்கிய வாக்கத்தான் காலை 8.30 மணி அளவில் அப்போலோ மருத்து வமனையில் நிறைவடைந்தது. இந்த நடைபயிற்சி 3 கி.மீ. மற்றும் 5 கி.மீ. என இரண்டு வழித்தடங்களில் நடைபெற்றது. வாக்கத்தானில் அனைத்து வயதினரும் பங்கேற்றனர்.
வாக்கத்தான் நிகழ்ச்சியை கொடி அசைத்து துவக்கி வைத்தார் மதுரை அப்போலோ மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி .பி.நீலக் கண்ணன். நிகழ்வின் முக்கிய அம்சமாக, மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் இருதய நல சிகிச்சை மருத்துவர்கள் டாக்டர். வே.ஶ்ரீதர், டாக்டர். சி. விவேக் போஸ், டாக்டர்.பி.சுப்புராமகிருஷ்ணன், டாக்டர்.எம். ரங்க மணிகண்டன், பொது அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர். பெனட் ராஜ் மோகன் சிறுநீரக சிகிச்சை நிபுணர் டாக்டர். அருண் பிரசாத் சிறப்புரையாற்றினார்கள்.
இருதய நலத்தைப் பராமரிப்பதற்கான ஆலோசனைகளை மருத்துவ நிபுணர்கள் வழங்கினர். நீண்ட ஆயுளுக்கு இருதய நலம் அவசியமானது. இதைப் போன்ற நிகழ்ச்சிகள் ஆரோக்கியமாக இதயத்தைப் பராமரிக்க பாதுகாப்பு பராமரிப்பு, சரிவிகித உணவு, சீரான உடற்பயிற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பொதுமக்களின் நினைவில் நிறுத்துவதாக அமையும் என்றனர். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பின்பற்ற வேண்டிய பழக்க வழக்கங்கள், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மற்றும் இருதயப் பரிசோதனைகளின் முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் எடுத்துரைத்தனர்.
எலும்பியல் சிகிச்சை மருத்துவர் டாக்டர்.ஜான் பென்னி, மருத்துவ சேவைகளின் இணை இயக்குநர் டாக்டர்.பிரவீன் ராஜன் மார்கெட்டிங் பொது மேலாளர் மணிகண்டன் ஆகியோரும் நிகழ்வை உடன் இருந்து சிறப்பித்தனர்.
அப்போலோ மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி திரு. பி. நீலக்கண்ணன் பேசுகையில், “இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள இருதய நோயாளிகளுக்கு ஆரோக்கியம் குறித்த நம்பிக்கையையும் அவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சையையும் வழங்கும் வகையில் நமது மருத்துவர்கள் அப்போலோவை தேசிய சிறப்பு மையமாக மாற்றியுள்ளனர். இதுவரை 200,000 க்கும் மேற்பட்ட இருதய அறுவை சிகிச்சைகள் மற்றும் 300,000 ஆஞ்சியோபிளாஸ்டிகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன.
இருதய பைபாஸ் அறுவை சிகிச்சைகளில் குறிப்பிடத்தக்க வகையில் 99.6% வெற்றி விகிதத்தை நாங்கள் அடைந்துள்ளோம், அவற்றில் 91% க்கும் அதிகமானவை இருதய அறுவை சிகிச்சைகளாக செய்யப்பட்டுள்ளன. இது உலகளாவிய சராசரி வெற்றி விகிதத்தை சுமார் 98% ஐ விட அதிகமாக உள்ளது, இது இருதய நல சிகிச்சையில் எங்கள் தனித்துவத்தையும் மற்றும் மருத்துவ சிறப்பையும் நிரூபிக்கிறது.
எங்கள் மருத்துவர்கள் மற்றும் இருதயவியல் குழுவின் இந்த குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்பிற்கும் நிபுணத்துவத்திற்கும் எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்க விரும்புகிறேன். எங்கள் மருத்துவர்களின் இந்த தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் மூலம் அப்போலோ மருத்துவமனையின் இருதய நல சிகிச்சை சிறந்த தேசிய மற்றும் சர்வதேச மையமாக எங்களை நிறுவியுள்ளது.” என்றார்.
வாக்கத்தானில் பங்கேற்றவர்களுக்கு டி-சர்ட், பை, மெடல்கள், சான்றிதழ்கள் மற்றும் பானங்கள் வழங்கப்பட்டது.
மனதின் குரல், 114ஆவது பகுதி ஒலிபரப்பு நாள்: 29.09.2024 ஒலிபரப்பு : சென்னை வானொலி நிலையம்
தமிழில் / குரல் : ராமஸ்வாமி சுதர்ஸன்
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் உங்களோடு இணைய, மீண்டுமொரு சந்தர்ப்பம். இன்றைய பகுதி என்னை உணர்ச்சியிலாழ்த்துவது, பழைய நினைவுகள் என்னைச் சூழ்ந்து விட்டன. ஏன் தெரியுமா? நம்முடைய மனதின் குரலுக்கு பத்து வயதாகி விட்டது; பத்தாண்டுகள் முன்பாக மனதின் குரல் அக்டோபர் 3ஆம் தேதியன்று, விஜயதசமி நன்னாளன்று தொடங்கப்பட்டது. அந்த நாள் எத்தனை புனிதமான நாள்!!! இது இயல்பாக அமைந்த ஒன்று.
இதோடு கூடவே, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதியன்று நாம் மனதின் குரலின் பத்தாண்டுகளை நிறைவு செய்யும் அதே வேளையிலே, நவராத்திரி புண்ணிய காலத்தின் முதல் நாளுமாகவும் இருக்கும். மனதின் குரலின் இந்த நீண்டநெடிய பயணத்திலே பல கட்டங்களை என்னால் மறக்க இயலாது. மனதின் குரலில் கோடிக்கணக்கான நேயர்கள் நம்முடைய இந்தப் பயணத்தின் போது கூட்டாளிகளாக இருந்தார்கள், தொடர்ந்து எனக்குத் தோள் கொடுத்தும் வந்தார்கள். தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் தகவல்களை எனக்குத் திரட்டித் தந்தார்கள். மனதின் குரலின் நேயர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியின் உண்மையான சூத்திரதாரிகள். காரசாரமான விஷயம் இல்லையென்று சொன்னால், எதிர்மறை விஷயங்கள் இல்லையென்று சொன்னால், அந்த விஷயமோ, நிகழ்ச்சியோ அதிக கவனத்தைப் பெறாது என்று பொதுவாகவே ஒரு கருத்து உண்டு. ஆனால் ஆக்கப்பூர்வமான தகவல்களுக்காக நாட்டுமக்களிடத்திலே எத்தனை தாகம் இருக்கிறது, ஆக்கப்பூர்வமான கருத்துக்கள், உத்வேகமளிக்கக்கூடிய எடுத்துக்காட்டுகள், நம்பிக்கையூட்டக்கூடிய சம்பவங்கள் ஆகியவற்றை மக்கள் எத்தனை பேரார்வத்தோடு அரவணைத்துக் கொள்கிறார்கள் என்பதை மனதின் குரலின் வெற்றி நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
சகோரப் பறவை என்று ஒன்று உண்டு, இது மழைநீர்த்துளிகளை மட்டுமே பருகி உயிர் வாழுமாம். மக்களும் கூட இந்த சகோரப் பறவையைப் போலவே, தேசத்தின் சாதனைகளையும், மக்களின் சமூகரீதியான சாதனைகளையும் எந்த அளவுக்கு பெருமிதத்தோடு செவி மடுக்கிறார்கள் என்பதையெல்லாம் நாம் மனதின் குரலில் பார்த்தோம். மனதின் குரலின் பத்தாண்டுக்காலப் பயணம் எப்படிப்பட்டதொரு மாலையைத் தயாரித்திருக்கிறது என்று சொன்னால், இதன் ஒவ்வொரு பகுதியிலும் புதிய காதைகள், புதிய உயர்வுகள், புதிய ஆளுமைகள் இணைந்து கொண்டே வருகின்றன. நமது சமூகத்தின் சமூக உணர்வோடு கூட அரங்கேறும் செயல்களுக்கு மனதின் குரல் வாயிலாக கௌரவம் கிடைக்கிறது. அந்த வேளையிலே மனதின் குரலுக்காக வந்திருக்கும் கடிதங்கள் என் நெஞ்சையும் கூட பெருமிதத்தில் விம்மச் செய்கின்றன. நம்முடைய தேசத்திலே தான் எத்தனை திறமைசாலிகள் இருக்கின்றார்கள்!! அவர்களிடம் தேசம் மற்றும் சமூகத்திற்கு சேவை புரிய வேண்டும் என்று எத்தனை தாகம் இருக்கிறது!! சுயநலமற்ற தன்மையோடு சேவை செய்ய இவர்கள் தங்களுடைய வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணம் செய்கின்றார்கள்.
இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வேளையிலே என்னுள்ளும் ஆற்றல் பொங்குகிறது. மனதின் குரலின் இந்த மொத்தச் செயல்பாடும் என்னைப் பொறுத்த வரையில் எப்படிப்பட்டதென்றால், இது ஆலயம் சென்று இறைவனை வழிபடுவதற்கு ஒப்பானது. மனதின் குரலின் ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு சம்பவத்தையும், ஒவ்வொரு கடிதத்தையும் நான் நினைத்துப் பார்க்கும் போது, மக்களாகிய மகேசர்கள் எனக்கு இறைவனாரின் வடிவங்கள், அவர்களை நான் தரிசனம் செய்கிறேன் என்றே நான் உணர்கிறேன்.
நண்பர்களே, நான் இன்று தூர்தர்ஷன், பிரசார்பாரதி மற்றும் ஆல் இண்டியா ரேடியோவோடு தொடர்புடைய அனைவரையும் பாராட்டுகிறேன். இவர்களுடைய தீவிரமான முயற்சிகள் காரணமாகவே மனதின் குரலின் இந்த மகத்துவம் நிறைந்த கட்டத்தை நாம் எட்ட முடிந்திருக்கிறது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியைக் காட்சிப்படுத்திவரும் பல்வேறு தொலைக்காட்சி சேனல்கள், மண்டலத் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும் நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனதின் குரல் வாயிலாக நாம் எந்த பிரச்சனைகளை எழுப்பினோமோ, ஊடக நிறுவனங்கள் இவற்றை ஒரு இயக்கமாகவே மாற்றினார்கள். நான் அச்சு ஊடகத்திற்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன், இவர்கள் தாம் இதனை வீடுகள்தோறும் கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.
அதே போல யூடியூபர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன், இவர்கள் தாம் மனதின் குரல் தொடர்பாக பல நிகழ்ச்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை 22 மொழிகளோடு கூடவே, 12 அயல்நாட்டு மொழிகளிலும் கேட்க முடிகிறது. தங்களுடைய பிராந்திய மொழியிலே மனதின் குரலைக் கேட்பதாக மக்கள் என்னிடத்திலே கூறும் போது எனக்கு மிக உவப்பாக இருக்கிறது.
மனதின் குரல் நிகழ்ச்சியை ஆதாரமாகக் கொண்ட ஒரு வினா-விடை போட்டி நடைபெற்றுவருவது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். இதிலே யார் வேண்டுமானாலும் பங்கெடுத்துக் கொள்ளலாம். Mygov.in தளத்திற்குச் சென்று, நீங்கள் இந்தப் போட்டியில் பங்கெடுக்கலாம், மகத்துவம் வாய்ந்த இன்றைய இந்தத் தருவாயில், நான் மீண்டுமொரு முறை உங்கள் அனைவரின் நல்லாசிகளையும் வேண்டுகிறேன்.
பவித்திரமான மனத்தோடும், முழுமையான அர்ப்பணிப்பு உணர்வோடும், இதைப் போன்றே பாரதநாட்டு மக்களுக்கு நான் வாழ்த்துப்பா பாடிக் கொண்டே இருக்க வேண்டும். தேசத்தின் சமூகசக்தியை நாமனைவரும் இதைப் போன்றே கொண்டாடிக் கொண்டே இருக்க வேண்டும் – இதுவே இறைவனிடத்திலே என்னுடைய வேண்டுதல், மக்களாகிய மகேசர்களிடம் என் பிரார்த்தனை.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, கடந்த சில வாரங்களாகவே தேசத்தின் பல்வேறு பாகங்களில் கடும்மழை பெய்துவருகிறது. நீர் சேமிப்பு எத்தனை மகத்துவம் வாய்ந்தது, நீரைச் சேமித்து வைப்பது எத்தனை அவசியமானது என்பதை இந்த மழைக்காலம் நமக்கு அறிவுறுத்துகிறது. மழைக்கால நாட்களில் சேமிக்கப்படும் நீரானது, நீர் தட்டுப்பாடு மாதங்களில் மிகவும் உதவிகரமாக இருக்கிறது, இது தான் ‘Catch the Rain‘ மழைநீரைச் சேமிப்போம் போன்ற இயக்கங்களின் உணர்வாகும். நீர் பாதுகாப்பு தொடர்பாக பலர், பல புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்று. இப்படிப்பட்டதொரு முயற்சியைத் தான் உத்திரபிரதேசத்தின் ஜான்சியில் நம்மால் காண முடிகிறது. ஜான்சி புந்தேல்கண்டில் இருப்பதும், அங்கே நீர்த்தட்டுப்பாடு எத்தனை கடுமையானது என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இங்கே ஜான்சியிலே, சில பெண்கள், குராரி நதிக்குப் புத்துயிரூட்டி இருக்கிறார்கள்.
இந்தப் பெண்கள் சுயவுதவிக் குழுவோடு இணைந்தவர்கள், ஜல் சஹேலி, அதாவது நீர்த் தோழிகளாகி, இந்த இயக்கத்திற்குத் தலைமையேற்று நடத்தினார்கள். உயிரிழந்து போன குராரி நதியை இந்தப் பெண்கள் எவ்வாறு காப்பாற்றினார்கள் என்பதை உங்களால் கற்பனை கூட செய்து பார்க்க இயலாது. இந்த நீர்த்தோழிகள், சாக்குகளில் மணலை நிரப்பி, தடுப்பணைகளை ஏற்படுத்தினார்கள், மழைநீர் வீணாகாமல் தடுத்தார்கள், நதியை நீரால் நிரம்பச் செய்தார்கள். இந்தப் பெண்கள் பலநூறு நீர்நிலைகளை உருவாக்கி, அவற்றைப் புத்தாக்கம் செய்யப் புரிந்தார்கள். இதன் காரணமாக இந்தப் பகுதியிலே மக்களுக்கு இருந்த நீர் பிரச்சனை தொலைந்துபோனது, மக்களின் முகங்களிலே மகிழ்ச்சி மீண்டது.
நண்பர்களே, ஒரு புறத்திலே பெண்சக்தி நீர்சக்தியை மேம்படுத்துகிறது என்றால், வேறோர் புறத்தில் நீர்சக்தியும் கூட பெண்சக்தியைப் பலப்படுத்துகிறது. மத்திய பிரதேசத்தின் இரண்டு பெரிய கருத்தூக்கமளிக்கக்கூடிய முயற்சிகள் பற்றிய தகவல் கிடைத்தது. இங்கே டிண்டௌரியின் ராய்புரா கிராமத்திலே ஒரு பெரிய குளத்தை நிறுவியதால், நிலத்தடி நீரின் மட்டம் கணிசமாக உயர்ந்தது. இதனால் ஆதாயம் இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்களுக்குக் கிடைத்தது.
இங்கே சாரதா ஆஜீவிகா சுயவுதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு மீன்வளர்ப்பு என்ற புதிய தொழில் கிடைத்தது. இந்தப் பெண்கள் மீன் அங்காடியைத் தொடக்கினார்கள், இங்கே மீன்களை விற்று தங்களுடைய வருமானத்தைப் பெருக்கியும் கொண்டார்கள். மத்திய பிரதேசத்தின் சத்தர்பூரைச் சேர்ந்த பெண்களின் முயற்சியும் மிகவும் பாராட்டுக்குரியது. இங்கே இருக்கும் கோம்ப் கிராமத்தின் பெரிய குளம் வற்றத் தொடங்கிய போது, பெண்கள் இதற்குப் புத்துயிர் அளிக்கும் சவாலை மேற்கொண்டார்கள். ஹரி பகியா சுயவுதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள், குளத்திலிருந்து பெரிய அளவில் தூர்வாறி, குளத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த வண்டலை வளமற்ற நிலத்தில் கொட்டி அங்கே பழமரங்களைத் நட்டார்கள்.
இந்தப் பெண்களின் உழைப்பால் குளத்தில் நீர் நிறைந்ததோடு, பயிர்களின் அறுவடையும் கணிசமாக உயர்ந்தது. தேசத்தின் பல்வேறு இடங்களிலும் நடந்தேறிவரும் நீர் சேமிப்பின் இத்தகைய முயற்சிகள், நீர்த்தட்டுப்பாட்டை எதிர்கொள்ள மிகவும் உதவிகரமாக இருக்கும். நீங்களும் கூட உங்கள் அக்கம்பக்கத்தில் இப்படிப்பட்ட முயற்சிகளில் கண்டிப்பாக ஈடுபடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு முழுக்க உண்டு.
#image_title
என் மனம்நிறை நாட்டுமக்களே, உத்தராகண்டின் உத்தரகாசியில் இருக்கும் ஒரு எல்லைப்புறக் கிராமத்தின் பெயர் ஜாலா. இங்கிருக்கும் இளைஞர்கள் தங்களுடைய கிராமத்தைத் தூய்மையானதாக வைக்க, புதிய முயற்சி ஒன்றைத் தொடங்கியிருக்கின்றார்கள். இவர்கள் தங்களுடைய கிராமத்திலே தன்யவாத் பிரக்ருதி அல்லது இயற்கைக்கு நன்றி என்ற பெயரிலான இயக்கம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வருகின்றார்கள்.
இதன்படி, கிராமத்தில் தினமும் இரண்டு மணிநேரம் வரை துப்புரவுப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கிராமத்தின் வீதிகளில் இறைந்து கிடக்கும் குப்பைகளை ஒன்று திரட்டி, இவற்றை கிராமத்திற்கு வெளியே குறிப்பிட்டதொரு இடத்தில் கொண்டு சேர்க்கின்றார்கள். இதனால் ஜாலா கிராமம் தூய்மையானதாக ஆகிறது, மக்களிடம் விழிப்புணர்வும் உண்டாகி வருகின்றது. இப்படி கிராமங்கள்தோறும், வீதிகள்-குடியிருப்புப் பகுதிகள் தோறும், தங்கள் இடங்களிலே நன்றி இயக்கத்தைத் தொடக்கினால், எத்தனை பெரிய மாற்றத்தை நம்மால் ஏற்படுத்திவிட முடியும்!!
நண்பர்களே, தூய்மை தொடர்பாக புதுச்சேரியின் கடற்கரைப் பகுதியிலும் கூட பலமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கே ரம்யா அவர்கள், மாஹே நகராட்சி மற்றும் இதன் அருகிலே இருக்கும் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் குழு ஒன்றை ஏற்படுத்தி வழிநடத்தி வருகிறார். இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள், தங்கள் முயற்சிகள் வாயிலாக மாஹே பகுதியை, குறிப்பாக இங்கே இருக்கும் கடற்கரைப் பகுதிகளை முழுமையான வகையிலே தூய்மையானதாக ஆக்கி வருகிறார்கள்.
நண்பர்களே, இங்கே நான் இரண்டு முயற்சிகளைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன் ஆனால், நமக்கருமே நாம் பார்த்தோமென்றால், தேசத்தின் அனைத்து பாகங்களிலுமே தூய்மை தொடர்பாக ஏதாவது ஒரு வித்தியாசமான முயற்சி அரங்கேறி வருவதைக் கண்டிப்பாக நம்மால் காண முடியும். சில நாட்களுக்குப் பிறகு அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று தூய்மை பாரத் மிஷனின் பத்தாண்டுகள் நிறைவடைய இருக்கின்றன. இதனை பாரத சரித்திரத்தின் இத்தனை பெரிய மக்கள் இயக்கமாக மாற்றியிருக்கும் அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தின் போது நாம் பாராட்டு தெரிவிக்க வேண்டும். தன் வாழ்க்கை முழுவதும் தூய்மை என்ற நோக்கத்திற்காகத் தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்த காந்தியடிகளுக்கு இது மெய்யான சிரத்தாஞ்சலிகளாகும்.
நண்பர்களே, இன்று இந்த தூய்மை பாரத இயக்கத்தின் வெற்றி காரணமாகவே ‘Waste to Wealth’ கழிவிலிருந்து செல்வம் என்ற மந்திரம் அனைவருக்கும் பிடித்தமானதாகி இருக்கிறது. மக்கள் ‘Reduce, Reuse மற்றும் Recycle’ கழிவுகளைக் குறைப்பீர், மீள்பயன்படுத்துவீர், மறுசுழற்சி செய்வீர் என்பது குறித்து மக்கள் பேசத் தொடங்கி விட்டார்கள், இதன் எடுத்துக்காட்டுகளை இயம்ப ஆரம்பித்து விட்டார்கள். கேரளத்தின் கோழிக்கோட்டிலே ஒரு அருமையான முயற்சி பற்றி எனக்குத் தெரிய வந்தது. இங்கே 74 வயதான சுப்பிரமணியன் அவர்கள், 23,000த்திற்கும் மேற்பட்ட நாற்காலிகளை சீர்செய்து, இவற்றை மீள்பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கிறாராம். மக்கள் இவரை ரெட்யூஸ், ரீயூஸ், ரீசைக்கிள், அதாவது ட்ரிப்பிள் ஆர் சேம்பியன் என்றும் அழைக்கிறார்களாம். இவருடைய இந்த வித்தியாசமான முயற்சிகளின் வெளிப்பாடுகளை கோழிக்கோடு சிவில் ஸ்டேஷன், பொதுப்பணித்துறை மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கழகம் போன்ற நிறுவனங்களின் அலுவலகங்களில் காண முடியும்.
நண்பர்களே, தூய்மை தொடர்பாக நடந்துவரும் இயக்கத்தில் நாம் அதிகபட்ச மக்களை இணைக்க வேண்டும், இந்த இயக்கம் மட்டுமே, ஏதோ ஒரு நாளோ, ஓர் ஆண்டோ நடந்து முடிந்துவிடும் இயக்கமல்ல; இது பல யுகங்களாகத் தொடர்ந்து செய்யப்படக்கூடிய பணியாகும். தூய்மை என்பது நமது இயல்பாகவே ஆகும் வரையில் இந்தப் பணி தொடரும். நீங்களும் உங்கள் குடும்பத்தார், நண்பர்கள், அண்டை அயலார் அல்லது சக ஊழியர்களோடு இணைந்து தூய்மை இயக்கத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று நான் உங்கள் அனைவரிடத்திலும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். தூய்மை பாரத இயக்கத்தின் வெற்றியின் பொருட்டு நான் உங்களனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மனம்நிறை நாட்டு மக்களே, நமது மரபு-பாரம்பரியம் குறித்து நம்மனைவருக்கும் பெருமை உண்டு. வளர்ச்சியோடு சேர்ந்து மரபும் என்று நான் எப்போதுமே கூறி வந்திருக்கிறேன். இதன் காரணமாகவே, சில நாட்கள் முன்பு எனது அமெரிக்கப் பயணத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சம் குறித்து பல செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. மீண்டும் ஒருமுறை நமது தொனமையான கலைப்படைப்புகள் நாடு மீண்டிருப்பது தொடர்பாக நிறைய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக உங்களனைவரின் உணர்வுகளையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, மேலும் மனதின் குரல் நேயர்களுக்கும் இதைப் பற்றி பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
நண்பர்களே, எனது அமெரிக்கப் பயணத்தின் போது அமெரிக்க அரசாங்கம் பாரதத்திடம் கிட்டத்தட்ட 300 தொன்மையான கலைப்படைப்புக்களைத் திருப்பிக் கொடுத்தது. அமெரிக்க குடியரசுத் தலைவர் பைடன் அவர்கள், பெரும் இணக்கத்தை வெளிப்படுத்தி, டெலாவேரில் உள்ள தன்னுடைய தனிப்பட்ட இல்லத்தில் இவற்றில் சில கலைப்படைப்புக்களை என்னிடத்தில் காட்டினார். திருப்பிக் கொடுக்கப்பட்ட கலைப்படைப்புக்கள், சுடுமண்பாண்டம், கல், யானையின் தந்தம், மரம், வெண்கலம், செம்பு போன்றவற்றால் ஆனவையாக இருந்தன.
இவற்றில் பல 4000 ஆண்டுகள் பழைமையானவை. 4000 ஆண்டுகள் பழைமையானவை தொடங்கி, 19ஆம் நூற்றாண்டு வரையிலான கலைப்படைப்புகளை அமெரிக்க திரும்பக் கொடுத்திருக்கிறது. இவற்றில் பூ ஜாடி, கடவுளர்களின் சுடுமண் திருவுருவங்கள் அவற்றின் பட்டைகள், ஜைன தீர்த்தங்கரர்களின் திருவுருவங்களைத் தவிர, பகவான் புத்தர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவுருவங்களும் அடங்கும். திரும்பக் கொடுக்கப்பட்ட பொருட்களில் பல்வேறு அளவுகளில் விலங்கினங்களும் இருக்கின்றன. ஆடவர் பெண்டிர் வடிவிலான ஜம்மு கஷ்மீரத்தின் சுடுமண்ணோடுகள் மிகவும் சுவாரசியமானவையாக இருந்தன. இவற்றில் செம்பாலான பிள்ளையாரின் மூர்த்தங்களும் இருந்தன, இவை தென்னாட்டைச் சார்ந்தவை. திரும்பக் கொடுக்கப்பட்ட பொருட்களில் அதிக எண்ணிக்கையில் பகவான் விஷ்ணுவின் படங்களும் இருந்தன. இவை முக்கியமாக, வட மற்றும் தென் பாரதத்தோடு தொடர்புடையவை.
இந்தக் கலைப்படைப்புகளைப் பார்க்கும்போது, நமது முன்னோர்கள் எந்த அளவுக்கு நுணுக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது. கலை தொடர்பாக அவர்களிடத்திலே ஆச்சரியமான புரிதல் இருந்தது. இவற்றில் பல கலைப்படைப்புகள் கடத்தப்பட்டவை, பிற சட்டவிரோதமான முறைகளில் தேசத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டவை.
இவை கடுமையான குற்றங்கள், ஒருபுறத்திலே நம்முடைய மரபைச் சிதைப்பது போன்றதாகும்; ஆனால் ஒரு விஷயம் சந்தோஷமளிப்பது என்னவென்றால், கடந்த பத்தாண்டுகளில், இப்படிப்பட்ட பல கலைப்படைப்புகள், நமது பல தொன்மையான மரபுச் சின்னங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. இந்தத் திசையில், இன்று, பாரதம் பல நாடுகளோடு இணைந்து பணியாற்றி வருகிறது. நமது மரபின் மீது நாம் பெருமிதம் கொள்ளத் தொடங்கும் போது தான் உலகமும் அதனை மதிக்கும் என்பதே என் நம்பிக்கை என்பதோடு, இதன் விளைவாகவே இன்று உலகின் பல நாடுகள் நம் நாட்டிலிருந்து வெளிச்சென்ற இப்படிப்பட்ட கலைப்படைப்புக்களை நமக்குத் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
எனதருமை நாட்டுமக்களே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் எந்த மொழியைக் கற்றுக் கொள்ள முடியும் என்று எந்த ஒரு சிறுவனிடத்திலும் வினவினால், தாய்மொழி என்றே விடை வரும். நம்முடைய தேசத்திலே சுமார் 20,000 மொழிகளும், வழக்குமொழிகளும் இருக்கின்றன, இவையனைத்தும் யாரோ ஒருவருக்குத் தாய்மொழியாக இருக்கின்றன. சில மொழிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவானதாக இருக்கலாமானாலும், அந்த மொழிகளைப் பாதுகாக்க இன்று வித்தியாசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டிஜிட்டல் புதுமைபுகுத்தல் துணையோடு சந்தாலி மொழிக்கு புதிய அடையாளம் அளிக்கும் இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. சந்தாலி மொழி நமது தேசத்தின் பல மாநிலங்களில் வசிக்கும் சந்தால் பழங்குடியினச் சமுதாய மக்களின் மொழியாக இருக்கிறது. பாரதம் தவிர, வங்கதேசம், நேபாளம், பூடான் ஆகிய இடங்களிலும் கூட சந்தாலி மொழி பேசும் பழங்குடி சமூகத்தார் இருக்கின்றார்கள்.
சந்தாலி மொழிக்கான இணையவழி அடையாளத்தை உருவாக்க, ஒடிஷாவின் மயூர்பஞ்ஜ்ஜில் வசிக்கும் ராம்ஜீத் டுடு அவர்கள் ஒரு இயக்கத்தைத் தொடங்கியிருக்கின்றார்கள். ராம்ஜீத் அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் டிஜிட்டல் தளத்தில், சந்தாலி மொழியோடு தொடர்புடைய இலக்கியத்தைப் படிக்க இயலும், சந்தாலி மொழியில் எழுத இயலும். சில ஆண்டுகள் முன்பாக ராஜ்மீத் அவர்கள் கைப்பேசியைப் பயன்படுத்தத் தொடங்கிய போது, தனது தாய்மொழியிலே தகவல்களை அனுப்ப முடியவில்லையே என்று வருந்தினார். இதன் பிறகு சந்தாலி மொழியின் எழுத்துருவான ‘ஓல் சிகி’யில் தட்டச்சு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தார். தனது சில கூட்டாளிகளின் துணையோடு இவர் ‘ஓல் சிகி’யில் தட்டச்சு செய்யும் நுட்பத்தை மேம்படுத்தினார். இன்று இவருடைய முயற்சிகள் காரணமாக சந்தாலி மொழியில் எழுதப்பட்ட கதைகள் கட்டுரைகள் எல்லாம் இலட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்து வருகின்றன.
நண்பர்களே, நமது உறுதிப்பாடும், சமூகப் பங்களிப்பும் சங்கமிக்கும் போது, ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் அற்புதமான விளைவுகள் மலர்கின்றன. இதற்கான புத்தம்புது எடுத்துக்காட்டுத் தான், ‘அன்னையின் பெயரில் ஓர் மரம்’ – இந்த இயக்கம் அற்புதமான இயக்கமாக மிளிர்ந்திருக்கிறது, மக்களின் பங்களிப்புக்கான இப்படிப்பட்டதொரு எடுத்துக்காட்டு உள்ளபடியே உத்வேகம் தரவல்லது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக தொடங்கப்பட்ட இந்த இயக்கம் தேசத்தின் அனைத்து மூலைகளிலும் இருக்கும் மக்களின் பங்களிப்பின் துணையோடு ஒரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. உத்தர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தானம், தெலங்கானா மாநிலங்கள் இலக்கிற்கும் விஞ்சிய எண்ணிக்கையில் மரங்களை நட்டு சாதனைகளைப் படைத்திருக்கின்றன. இந்த இயக்கத்தின்படி உத்தர பிரதேசத்தில் 26 கோடிக்கும் மேற்பட்ட மரங்களும், குஜராத்தில் 15 கோடிக்கும் மேற்பட்ட மரங்களும், ராஜஸ்தானத்தில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 6 கோடிக்கும் அதிகமான மரங்களும் நடப்பட்டிருக்கின்றன. தேசத்தின் ஆயிரக்கணக்கான பள்ளிகளும் கூட இந்த இயக்கத்தில் விறுவிறுப்பாக கலந்து கொண்டன.
நண்பர்களே, நமது தேசத்திலே மரம்நடும் இயக்கத்தோடு தொடர்புடைய ஏராளமான எடுத்துக்காட்டுகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு எடுத்துக்காட்டுத் தான் தெலங்காணாவின் கே.என். ராஜஷேகர் அவர்களுடையது. மரம்நடுவதில் இவருக்கு இருக்கும் தீவிர முனைப்பு நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. சுமார் நான்கு ஆண்டுகள் முன்பாக இவர் மரம்நடும் இயக்கத்தைத் தொடங்கினார். ஒவ்வொரு நாளும் ஒரு மரம் நடுவது என்று இவர் தனக்குத் தானே தீர்மானித்துக் கொண்டார்.
இந்த உறுதிப்பாட்டை இவர் மிகத் தீவிரமான விரதம் போன்றே கடைப்பிடித்து, 1500க்கும் மேற்பட்ட மரங்களை இதுவரை நட்டிருக்கிறார். மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், இந்த ஆண்டு ஒரு விபத்துக்கு ஆளான பிறகும் கூட இவர் தனது உறுதிப்பாட்டிலிருந்து சற்றும் தளரவில்லை. இப்படிப்பட்ட அனைத்து முயற்சிகளையும் நான் இதயப்பூர்வமாகப் பாராட்டுகிறேன். அன்னையின் பெயரில் ஓர் மரம் என்ற இந்த பவித்திரமான இயக்கத்தோடு கண்டிப்பாக நீங்களும் இணைய வேண்டும் என்பதே நான் உங்களிடம் விடுக்கும் வேண்டுகோள்.
எனதருமை நாட்டுமக்களே, நமதருகே இருப்போர் சிலர், பேரிடர்க்காலங்களில் தங்கள் பொறுமையை இழப்பதில்லை, மாறாக அதிலிருந்து கற்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு பெண்ணின் பெயர் சுபஸ்ரீ. இவர் தனது முயற்சியின் துணையால், கடினமான மற்றும் மிகவும் பயனுள்ள மூலிகைகளால் ஒரு அற்புதமான பூங்காவை உருவாக்கி இருக்கிறார். இவர் தமிழ்நாட்டின் மதுரையில் வசிப்பவர். இவர் தொழில்ரீதியாக ஆசிரியையாக இருந்தாலும், மருத்துவத் தாவரங்களின்பால் இவருக்கு அலாதியான பிரியம் இருக்கிறது. இவருடைய இந்த ஈடுபாடு, 1980களில் தொடங்கியது; ஒரு முறை இவருடைய தந்தையாரை நச்சுப்பாம்பு ஒன்று தீண்டிய போது, பாரம்பரியமான மூலிகைகள்-தாவரங்களைக் கோண்டு உடல்நலம் மீட்சி பெறுவதில் உதவிகரமாக இருந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பாரம்பரியமான மருத்துவத் தாவரங்களைப் பற்றிய தேடலைத் தொடக்கினார் இவர். இன்று மதுரையின் வரிச்சியூர் கிராமத்தில் இருக்கும் இவருடைய வித்தியாசமான மூலிகைப் பூங்காவிலே 500க்கும் மேற்பட்ட அரியவகை மூலிகைச் செடிகள் இருக்கின்றன. தனது இந்தப் பூங்காவைத் உருவாக்க இவர் தீவிரமாக உழைக்க வேண்டியிருந்தது.
ஒவ்வொரு தாவரத்தையும் தேடித்தேடி இவர் தொலைதூரங்களுக்குப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார், தகவல்களைத் திரட்டி இருக்கிறார், பலமுறை மற்றவர்களிடம் உதவிகளையும் கோரியிருக்கிறார். கோவிட் காலத்தில், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கக்கூடிய மருத்துவ மூலிகைகளை மக்களுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறார். இன்று இவருடைய இந்த மூலிகைப் பூங்காவைக் காண தொலைவான பகுதிகளிலிருந்தும் பலர் வருகிறார்கள். இவர் அனைவருக்கும் மருத்துவத் தாவரங்களைப் பற்றிய தகவல்களையும், அவற்றின் பயன்பாடுகளைப் பற்றியும் விளக்குகிறார். சுபஸ்ரீ அவர்கள், பலநூறு ஆண்டுகள் நமது கலாச்சாரத்தின் அங்கமாக விளங்கும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார். அவருடைய மூலிகைப் பூங்காவானது, நமது கடந்தகாலத்தை, வருங்காலத்தோடு இணைக்கிறது, அவருக்கு நம்முடைய பலப்பல நல்வாழ்த்துக்கள்.
நண்பர்களே, மாறிவரும் காலத்திலே வேலைகளின் தன்மையும் மாறிக்கொண்டே வருகிறது, புதியபுதிய துறைகள் உருவாகி வருகின்றன. எப்படி கேமிங், அனிமேஷன், ரீல் மேகிங், திரைப்படத் தயாரிப்பு அல்லது போஸ்டர் தயாரிப்பு இவை போன்று. இவற்றிலே ஒன்றில் உங்களுடைய திறமையை நன்கு சிறப்பாக உங்களால் வெளிப்படுத்த முயன்றால், உங்கள் திறன்களுக்கு மிகப்பெரிய மேடை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
நீங்கள் ஒரு வாத்தியக்குழு-பேண்டோடு தொடர்புடையவராகவோ, சமுதாய வானொலிக்காகப் பணியாற்றுபவராகவோ இருந்தால், உங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது. உங்களுடைய திறமை மற்றும் படைப்புத்திறனை மேம்படுத்த பாரத அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், ‘Create in India’ ‘இந்தியாவில் படைப்போம்’ என்ற கருத்திலான 25 சவால்களைத் தொடங்கி இருக்கிறது.
இந்தச் சவால்கள் உங்களுக்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். சில சவால்கள் இசை, கல்வி மற்றும் Anti-Piracy எனப்படும் படைப்பாற்றல் களவுக்கு எதிரான நடவடிக்கைகளின் மீதும் கவனம் செலுத்துவதாக இருக்கின்றது. இந்த ஏற்பாட்டில் பல தொழில்சார் அமைப்புக்களும் பங்கெடுக்கின்றன, இவை இந்த சவால்களுக்குத் தங்களுடைய முழு ஒத்துழைப்பையும் அளிக்கவிருக்கின்றன. இவற்றில் கலந்து கொள்ள நீங்கள் wavesindia.org என்ற இணையத்தளத்தில் நுழையவும். நாடெங்கிலும் இருக்கும் படைப்பாளிகளிடம் என்னுடைய சிறப்பான வேண்டுகோள், நீங்கள் கண்டிப்பாக இதிலே கலந்து கொள்ளுங்கள், உங்களுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்துங்கள்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, இந்த மாதம் மேலும் ஒரு மகத்துவமான இயக்கத்தின் பத்தாண்டுகள் நிறைவடையவிருக்கிறது. இந்த இயக்கத்தின் வெற்றியில், தேசத்தின் பெரிய தொழில்கள் தொடங்கி, சிறிய கடைக்காரர்கள் வரை பலரின் பங்களிப்பும் அடங்கி இருக்கிறது. நான் இந்தியாவில் தயாரிப்போம் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறேன். இன்று ஏழைகள், மத்தியத்தட்டு மக்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், இந்த இயக்கத்தால் மிகுந்த ஆதாயம் அடைந்து வருகின்றார்கள்.
இந்த இயக்கத்தால் அனைத்து வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்கும் தங்களுடைய திறன்கள்-திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பம் கிட்டியிருக்கிறது. இன்று பாரதம் தயாரிப்பின் சக்திபீடமாக ஆகி வருகிறது, தேசத்தின் இளைஞர்சக்தி காரணமாக உலகெங்கிலுமுள்ளோர் பார்வையும் நம்மீது தான் குவிந்திருக்கிறது. வாகனத்தயாரிப்பாகட்டும், ஜவுளிகளாகட்டும், விமானங்களாகட்டும், மின்னணுப்பொருட்களாகட்டும், பாதுகாப்புத் தளவாடங்களாகட்டும், அனைத்துத் துறைகளிலும் தேசத்தின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
தேசத்தில் அந்நிய நேரடி முதலீடும் தொடர்ந்து அதிகரித்து வருவதும் கூட நமது இந்தியாவில் உருவாக்குவோம் என்பதின் வெற்றிக்குப் பரணி பாடுகிறது. இப்போது நாம் முக்கியமாக இரண்டு விஷயங்களின் மீது கவனம் செலுத்தி வருகிறோம். முதலாவதாக, தரம் – அதாவது நமது தேசத்தில் தயாரிக்கப்படுபவை உலகத்தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். இரண்டாவதாக உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுத்தல், அதாவது அந்தந்த வட்டாரங்களில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச ஊக்கமளிக்கப்பட வேண்டும்.
மனதின் குரலில் நாம் #MyProductMyPride குறித்தும் விவாதித்திருக்கிறோம். உள்ளூர்ப் பொருட்களுக்கு ஊக்கமளிக்கப்படுவதால், நாட்டுமக்களுக்கு எந்த வகையில் ஆதாயம் ஏற்படுகிறது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டையும் முன்வைக்கிறேன்.
மஹாராஷ்டிர மாநிலத்தின் பண்டாரா மாவட்டத்தில் ஜவுளிக்கென ஒரு பண்டைய பாரம்பரியம் உண்டு. பண்டாரா டஸர் சில்க் ஹேண்ட்லூம். டஸர் வகை பட்டு தனது பிரத்யேகமான வடிவமைப்பு, வண்ணம் மற்றும் உறுதிக்காக பெயர் போனது. பண்டாராவின் சில பாகங்களில் 50க்கும் மேற்பட்ட சுயவுதவிக் குழுக்கள் இதைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் பெண்களின் பங்களிப்பு மிகப்பெரியது. இந்தப் பட்டு விரைவாக அனைவரின் கவனத்தையும் கவரத் தொடங்கியிருக்கிறது, உள்ளூர் சமூகங்களின் அதிகாரப் பங்களிப்புக்கு வழிவகை செய்கிறது, இது தானே இந்தியாவில் உருவாக்குவோம் என்பதன் உணர்வு!!
நண்பர்களே, பண்டிகைகளின் இந்தப் பருவத்தில் நீங்கள் மீண்டும் உங்களுடைய பழைய உறுதிப்பாட்டை மறந்துவிட வேண்டாம். எந்த ஒன்றை நீங்கள் வாங்க நேர்ந்தாலும், அது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருளாக இருக்க வேண்டும், எந்த ஒரு பரிசுப் பொருளை நீங்கள் அளித்தாலும், அது இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். ஏதோ மண்அகல் விளக்குகளை வாங்குவது மட்டுமே உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்பதாக ஆகாது.
உங்கள் பகுதியில் தயாரிக்கப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் அதிகபட்ச ஊக்கமளித்து, அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எந்த ஒரு பொருளாக இருந்தாலும், அதை உருவாக்குவதில் இந்திய தொழிலாளி-கைவினைஞரின் வியர்வை சிந்தப்பட்டிருந்தால், பாரத நாட்டுப் பொருள்களால் தயாரிக்கப்பட்டதாக இருந்தால், அது நம்முடைய பெருமிதம், இந்த கௌரவத்தை, இந்தப் பெருமிதத்தை நாம் எப்போதும் கொண்டாடுவோம்.
நண்பர்களே, மனதின் குரலின் இந்தப் பகுதியில் உங்களோடு இணைந்து பயணித்தது மிகவும் சுகமாக இருந்தது. இந்த நிகழ்ச்சியோடு உங்களை இணைத்துக் கொண்டு, உங்களுடைய கருத்துக்கள்-ஆலோசனைகளைக் கண்டிப்பாக அனுப்பி வையுங்கள். உங்களுடைய கடிதங்கள்-கருத்துக்கள்-தகவல்களுக்காக நான் எப்போதும் காத்திருப்பேன். சில நாட்கள் கழித்து பண்டிகைகளின் காலம் தொடங்க இருக்கிறது.
நவராத்திரி தொடங்க இருக்கிறது, அடுத்த இரண்டு மாதங்கள் வரை பூஜைகள்-வழிபாடுகள், விரதங்கள்-பண்டிகைகள், உற்சாகம்-உல்லாசம் என நாலாபுறங்களிலும் இந்தச் சூழல் பரவியிருக்கும். நான் வரவிருக்கும் பண்டிகைகள் அனைத்திற்குமான நல்வாழ்த்துக்களை உங்களனைவருக்கும் தெரிவிக்கிறேன். நீங்களும், உங்கள் குடும்பத்தாரோடு இணைந்து, அனைத்துப் பண்டிகைகளையும் நன்கு கொண்டாடுங்கள், ஆனந்தத்தை அனுபவியுங்கள், மற்றவர்களையும் உங்கள் மகிழ்ச்சியில் கலந்து கொள்ளச் செய்யுங்கள். அடுத்த மாதம் மனதின் குரலில் மேலும் புதிய விஷயங்களோடு உங்களை வந்து சந்திக்கிறேன். உங்களனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
சாத்தூர் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியில் சேர்ந்த கந்தசாமி(50) என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை நாக்பூர் உரிமம் பெற்று சாத்தூர் அருகே கீழஒட்டம்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் 48-க்கும் மேற்பட்ட அறைகளில் 80-க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பட்டாசு ஆலையில் தீபாவளிக்கு தேவையான சிறிய ரகம் முதல் உயர் ரகம் வரை ஒரு கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு ஆலையில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை 6.45 மணியளவில் இந்த பட்டாசு ஆலையில் ஒரு அறையில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி சத்தம் மற்றும் அதிர்வு சாத்தூர், சிவகாசி, ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை உள்ளிட்ட 30 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது.
இதையடுத்து தகவலறிந்த சாத்தூர்,சிவகாசி,வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள்,பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் பட்டாசு ஆலைக்கு விரைந்தனர்.ஆனால் பட்டாசுகள் தொடர்ந்து பயங்கர சத்தத்துடன் வெடித்துக் கொண்டிருந்ததால் தீயணைப்பதிலும்,மீட்பு பணியிலும் தொய்வு ஏற்பட்டது.
சுமார் 5 மணி நேரத்திற்கு பின்னர் தீயணைப்புத் தண்ணீரை ஊற்றி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் உள்ள ஐந்து அறைகள் தரைமட்டமாகின. மேலும் 10-க்கும் மேற்பட்ட அறைகள் சேதம் அடைந்துள்ளனர்.
இந்த வெடிவிபத்து அதிகாலை நேரம் ஏற்பட்டதால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என இதுவரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் வெடி விபத்தில் வெடித்து சிதறிய கற்கள் பட்டாசு ஆலை அருகே உள்ள கீழஒட்டம்பட்டி காலணி பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட வீடுகள்,மேற்கூரை,வீட்டின் கதவு சுவர்கள் விரிசல் உள்ளிட்டவைகள் சேதமடைந்துள்ளன.
இதனால் இப்பகுதி குடியிருப்பு வாசிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பட்டாசு மீட்பு பணிகள் முடிந்த பின்னர் வீடுகள் சேதம் அடைந்தவர்கள் பட்டாசு ஆலையின் முன்பாக செல்லும் சாலையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிாகரிகளிடம் பாதிக்கபட்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அதிகாரிள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர்.மேலும் இதுகுறித்து சாத்தூர் நகர் போலீஸார் ஆலை உரியமையாளர் கந்தசாமி, மேலாளர் சரவணன் மற்றும் பேர்மென் ஆகிய மூவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மேலாளர் சரவணனை மட்டும் கைது செய்துள்ளனர்.
வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:
அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வீடு வாங்கிய குறிப்பிட்ட மாதத்தில், குடியிருப்போர் நலச்சங்கத்தை உருவாக்கி, பதிவு செய்வது அவசியமாகும்.
இச்சங்கத்தை உருவாக்க குறைந்தபட்சம் 4 உரிமையாளர்களாவது இருத்தல் வேண்டும். சங்க துணை விதிகளை உருவாக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஒவ்வொன்றும் நிர்வாகக் குழுவை நியமிக்க வேண்டும்.
பழைய கட்டிங்களை மறுகட்டுமானம் செய்ய குடியிருப்பில் இருக்கும் ஒரு பகுதியினரின் கோரிக்கையின் பேரில் சிறப்பு கூட்டத்தை கூட்டலாம். கட்டிடத்தில் இருந்து யாரேனும் வெளியேற மறுத்தால் அந்த நபரை போலீஸ் துணையுடன் சங்கம் வெளியேற்றலாம்.
விதிகளின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இணையதளத்தை சம்பந்தப்பட்ட துறை உருவாக்குதல் வேண்டும்.
விதிகளை செயல்படுத்தும் அதிகாரிகளாக பதிவுத்துறை அந்தந்த மாவட்ட பதிவாளர்கள் செயல்படுவார்கள். துணை பதிவுத்துறை தலைவர்கள் மேல்முறையீட்டு அதிகாரிகளாக இருப்பார்கள்.
அடுக்குமாடிக் குடியிருப்பில்… இவை எல்லாம் கூடாது!
குடியிருப்போரை தொல்லை செய்யும் வகையில் ஒலி எழுப்பக் கூடாது.
விளம்பரம் உள்ளிட்ட போஸ்டர்களை சங்கத்தின் அனுமதியின்றி வைக்கக் கூடாது.
ஜன்னல் மற்றும் பால்கனியில் துணி காயவைப்பது பிறருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது.
சங்கத்தின் அனுமதியில்லாமல் பொது நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது
இப்படித்தான் இருக்க வேண்டும்!
உள்ளாட்சி விதிமுறைகளுக்கு உட்பட்டே செல்லப்பிராணி வளர்க்க வேண்டும்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் இருக்கும் பொது இடங்களில் குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும்.
மின்சார இணைப்பு, அலைபேசி நிறுவுதல், டிவி ஆன்டனா, ஏசி உள்ளிட்டவற்றுக்கு சுவர்கள் மற்றும் மேல்தளத்தின் மூலம் வயர்களை இழுக்க சங்கத்தினரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். – இவை உள்ளிட்ட விதிமுறைகள் அதில் இடம் பெற்றுள்ளன.
சிவகங்கை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி விற்பனையில் நடப்பாண்டிற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.93.00 இலட்சம் இலக்கீட்டினை எய்துவதற்காகவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் ஒவ்வொருவரின் பங்களிப்பு இருந்திடல் வேண்டும் என சிறப்பு தள்ளுபடி விற்பனையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், துவக்கி வைத்துப் பேசினார்.
சிவகங்கை மாவட்டம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இன்றைய தினம் (28.09.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் குத்து விளக்கேற்றி வைத்து, சிறப்பு தள்ளுபடி விற்பனையினை துவக்கி வைத்து தெரிவிக்கையில், கோ-ஆப்டெக்ஸ் என, அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 1935-ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு, தொடர்ந்து 89 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது. இந்தியாவிலுள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் திகழ்வதற்கு நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் பேராதரவும்தான் முக்கிய காரணம் ஆகும்.
கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் 30% சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. பண்டிகையை முன்னிட்டு பல வண்ணங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் பலவித வடிவமைப்புகளின் மென்பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் நவீன காலத்திற்கு உகந்தமான இரகங்கள் தீபாவளி பண்டிக்கைக்காக தருவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப இரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஆர்கானிக் புடவை இரகங்கள் விற்பனைக்கு உள்ளது.
இதுதவிர, பாரம்பரிய ரகங்களை புதுப்பிக்கும் விதமாக காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருப்புவனம் பட்டு சேலைகள், கோவை மென்பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், கைத்தறி சுங்குடி சேலைகள், காஞ்சி காட்டன், செட்டிநாடு காட்டன், கோவை கோரா காட்டன் சேலைகள், சேலம் காட்டன் சேலைகள், பரமக்குடி காட்டன் சேலைகள், திண்டுக்கல் காட்டன் சேலைகள் மற்றும் அருப்புக்கோட்டை காட்டன் சேலைகள் புதிய வடிவில் ஏராளமாக தருவிக் கப்பட்டுள்ளன.
மேலும், நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாக காட்டன் சட்டை இரகங்கள் / லினன் சட்டைகள், லினன் மற்றும் பருத்தி (Linen/Cotton) சட்டைகள், லுங்கிகள் மற்றும் வேட்டிகள் உள்ளன. மேலும், மகளிருக்காக சுடிதார் ரகங்கள், நைட்டிகள் மற்றும் குர்தீஸ்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வாடிக்கையாளர்களுக்காக தருவிக்கப்பட்டுள்ளது.
அரசுத்துறையின் பணியாளர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாளர்கள் ஆகியோர் கைத்தறி ஆடைகளை வாங்கும் பொழுது, உற்பத்தி திறன் அதிகரிக்கும். அதேபோல் பொதுமக்களும் கைத்தறி ஆடைகளை பயன்படுத்தும் பொழுது, நெசவாளர்களின் வளர்ச்சி அதிக நிலையை எட்டும். தற்பொழுது, தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்படும் ஆடைகளில் அந்த பணியாளர்கள் பெயர் மற்றும் முன்அனுபவம் குறித்த பதிவுகளுடன் வெளிவருகின்றன. இதன்மூலம் ஆடை தயாரிப்பவருக்கு அங்கீகாரம் கிடைப்பதுடன் பொருட்களின் தரம் குறித்தும் மக்கள் எளிதாக தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.
நம் ஒவ்வொருவரின் ஆதரவு கரமும், அவர்களின் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியாகும். எனவே கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு ஒவ்வொருவரின் பங்களிப்பு இருந்திடல் வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டிற்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் சிவகங்கை, காரைக்குடி ஆகிய இரண்டு விற்பனை நிலையத்திலும் தீபாவளி விற்பனை ரூ.66.78 இலட்சம் விற்பனை செய்யப்பட்டு, முழுவதுமாக இலக்கீடு ஏய்தப்பட்டுள்ளது. அதேபோன்று, 2024-2025 நடப்பாண்டிற்கு விற்பனை குறியீடாக ரூ.93.00 இலட்சம் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான விற்பனையும் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி இரகங்களை மின்வணிக வலைதளமான www.cooptex.gov.in என்ற இணையதளத்தில் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
எனவே, கடந்தாண்டை போலவே, இந்தாண்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கீடை விட அதிக அளவில் விற்பனை மேற்கொண்டு, மாவட்டத்திற்கு பெருமை தேடி தர அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மண்டல மேலாளர் (கூ/பொ) செந்திவேல், மேலாளர் முல்லைகொடி மற்றும் கோ-ஆப்டெக்ஸ் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.