Home Blog Page 1975

ஒரு வார முழுஊரடங்கு: அறிவிப்பால் எகிறிய காய்கறி விலைகள்!

koyambedu
koyambedu

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலைகள் கடுமையாக உயர்ந்தன.

வரும் மே 24, திங்கட் கிழமை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப் படுத்துவதற்காக, ஒரு வாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து ஒரு வார காலத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்க ஏராளமான மக்கள் கோயம்பேடு காய்கறி சந்தையில் குவிந்தனர். இதனாலும் காய்கறிகளின் கையிருப்பு கணிசமாகக் குறைந்ததாலும் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது. காலை 10 மணிக்கு விற்பனை செய்யப் பட்டதில் இருந்து மதியம் 2 மணி அளவில் சுமார் 5 மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப் பட்டது.

மொத்த விற்பனையில் 100 ரூபாய்க்கு விற்பனையான ஒரு பெட்டி தக்காளி, 500 ரூபாயாகவும், வெங்காயம் ஒரு மூட்டை 1500ரூபாயாகவும் உயர்ந்தது.

சில்லறை விற்பனையிலும் அனைத்து காய்கறிகளும் கிலோவிற்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விலை உயர்ந்தது.

குறிப்பாக, 60 ரூபாய்க்கு விற்பனையான கேரட் 120 ரூபாயாகவும், 80 ரூபாய்க்கு விற்பனையான பீன்ஸ் 160 ரூபாயாகவும் உயர்ந்தது. தக்காளி 10 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரை உயர்ந்தது.

ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்களை நியமித்து முதல்வர் உத்தரவு!

stalin in madurai
stalin in madurai

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்,அதை கண்காணிக்க அமைச்சர்களை நியமித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஊரடங்கை கண்காணிப்பது, தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்துவது போன்றவற்றை அமைச்சர்களின் முக்கிய பணியாக இருக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

சென்னை தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

செங்கல்பட்டுக்கு தா.மோ.அன்பரசன்,

மதுரை மாவட்டத்திற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,

சேலம் மாவட்டத்திற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி,

திருப்பூர் மாவட்டத்திற்கு மு.பபெ.சாமிநாதன்,

கோவை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் சக்கரபாணி, க.ராமச்சந்திரன்,

தூத்துக்குடி மாவட்டத்திற்கு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,

திருச்சி மாவட்டத்திற்கு கே.என்.நேரு,

திருநெல்வேலி மாவட்டத்திற்கு தங்கம் தென்னரசு,

ஈரோடு மாவட்டத்திற்கு முத்துசாமி,

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஏ.வ.வேலு,

வேலூர் மாவட்டத்திற்கு துரைமுருகன்,

விழுப்புரம் மாவட்டத்திற்கு பொன்முடி,

கடலூர் மாவட்டத்திற்கு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,

நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கு மெய்யநாதன்,

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஆர்.காந்தி,

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அன்பில் மகேஷ்,

தேனி மாவட்டத்திற்கு ஐ.பெரியசாமி,

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மனோ தங்கராஜ் என அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகா ஸ்பெஷல்: பதர்பேனி!

pathar peni
pathar peni

தேவையான பொருட்கள் :

மைதா – 2 கப்,
எண்ணெய் – கால் கிலோ,
நெய் – 100 கிராம்,
பொடித்த சக்கரை – தேவையான அளவு,
பாதாம் பால் – தேவையான அளவு,
சோடா உப்பு, உப்பு – தலா ஒரு சிட்டிகை,
ரெடிமேட் பாதாம் மிக்ஸ், காய்ச்சிய பால் – தேவையான அளவு

பதர் செய்ய :
அரிசி மாவு – அரை கப்,
நெய் – கல் கப்.

செய்முறை :
பாலை நன்றாக காய்ச்சி வைக்கவும். காய்ச்சிய பாலில் ரெடிமேட் பாதாம் மிக்ஸ் சேர்த்து கலந்து வைக்கவும்.

ஒரு பாத்திர த்தில் மைதா மாவை போட்டு அதனுடன் உப்பு, சோடா உப்பு… இவற்றை 100 கிராம் நெய் சேர்த்து

சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பூரி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

மற்றொரு பாத்திர த்தில் அரிசி மாவை கால் போட்டு அதனுடன் கால் கப் நெய் விட்டு பேஸ்ட் போல் ஆக்கவும்.

பிசைந்த மைதா மாவை சப்பாத்தி கல்லில் தோய்த்து 6 அப்பளமாக இட்டு,

ஒவ்வொரு அப்பளம் மீதும் அரிசி மாவு – நெய் கலவையை நன்கு பரவலாக பூசி அடுக்கி,

பாய் போல் சுருட்டி, 4 ஆக நறுக்கிக் கொள்ளவும். மீண்டும் இந்த மாவை லேசாக தேய்த்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கொதிக்க ஆரம்பித்த வுடன் உருட்டி வைத்த வற்றை போட்டு சிவக்க பொரித் தெடுக்கவும்.

பரிமாறும் போது அதன் மேலே பொடித்த சக்கரை தூவி, கரைத்து பாதாம் மிக்ஸ் பாலை ஊற்றி பரிமாறவும்.
சூப்பரான பதர் பேனி ரெடி.

வயிற்று புண் அகற்றும் பாசிப்பயிறு பானகம்!

Algae drink
Algae drink

பாசிப்பயறு பானகம்

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு – 1/2 கப்
கருப்பட்டி அல்லது வெல்லம் – தேவையான அளவு
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
சுக்குப்பொடி – 1 சிட்டிகை (விருப்பப்பட்டால்)

செய்முறை:

ஒரு வாணலியில் பாசிப்பயறை போட்டு வாசனை வரும்வரை வறுக்க வேண்டும்.
பிறகு அதை ஆற வைத்து மிஷினில் போட்டு நைஸாக அரைத்து தேவையான அளவு நீர் ஊற்றி, ஏலக்காய் பொடி, சுக்குபொடி மற்றும் சுவைக்கேற்றாற்போல் வெல்லம் போட்டு பருகினால் சுவையாக இருக்கும்

ஆர்.எஸ்.எஸ் சேவாபாரதி சார்பில் கோவையில் கொரோனா தனிமைப்படுத்தல் மையம் தொடக்கம்!

covai rss
covai rss

கோவையில் ஆர்.எஸ்.எஸ் சேவா பாரதி சார்பில் கோவை GN மில் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொரோனா தனிமைப்படுத்தல் மையம் தொடங்கப்பட உள்ளது.

covai rss1
covai rss1

350 படுக்கை வசதிகளோடு 25 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், 6 நர்ஸ்கள், 2 டாக்டர்கள் உடன் செயல்பட உள்ளது. இது ஆரம்ப நிலை அறிகுறி பாதிப்பு உள்ளவர்கள் தங்க வசதி உள்ளது. அத்துடன், ஆக்சிஜன் குறைபாடு ஏற்படாமல் இருக்க வளாகத்தில் ஆக்சிஜன் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது.

covai rss2
covai rss2

இந்த தனிமைப் படுத்தல் முகாம், முழுக்க முழுக்க இலவசமாக செயல்பட உள்ளது என்றும், உணவு தங்குமிடம் அனைத்தும் இலவசம் என்றும் தேவையானோர் இதை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அதன் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

covai rss3
covai rss3

RSS started a 350-bed Covid Care Center in Kongunadu Arts and Science College at Coimbatore, Tamil Nadu. Needy people can take admission from tomorrow.

seva2
சேவாபாரதி தமிழ்நாடு சேலம் மாவட்டம் சார்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு வேஷ்டி, துண்டு, சர்ட் மற்றும் மளிகை பொருட்கள் 50 நபர்களுக்கு வழங்கப்பட்டன.

sevabharathi works2
சேவாபாரதி தமிழ்நாடு வடபழனி மாவட்டம் மற்றும் சக்தி அன்பு இல்லம் சார்பாக கோயில் பூஜாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

2 வது ஆண்டாக உபியில் தெரியும் இமயமலை! வைரல் புகைப்படங்கள்!

himalaya
himalaya

தொடர்ந்து 2-வது ஆண்டாக உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து இமய மலைச் சிகரங்களைப் பார்க்க முடிகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது.

வழக்கமாக இமயமலைக்கு அருகிலுள்ள மாநிலங்களில் இருந்து இமயமலையை காண முடியாது. பனிமூட்டம், காற்று மாசுபாடு போன்ற காரணங்களால் காண முடியாத நிலை இருந்தது.

ஆனால் கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுச்சூழல் மாசுபாடு குறைந்து உ.பி.யின் பல்வேறு நகரங்களில் இருந்து இமயமலைச் சிகரங்களைக் காண முடிந்தது.

இந்நிலையில் 2-வது ஆண்டாக தற்போது உ.பி.யின் சஹாரன்பூரில் இருந்து இமயமலைச் சிகரங்களை காண முடிகிறது.

இந்த நகரிலிருந்து இமயமலைச் சிகரங்கள் வெறும் கண்களால் பார்க்க முடிகிறது. உ.பி.யின் வேறு சில நகரங்களில் இருந்து இமயமலைச் சிகரங்கள் தெரிகின்றன.

சஹாரன்பூரைச் சேர்ந்த டாக்டர் விவேக் பானர்ஜி என்பவர் இந்த புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

இதுகுறித்து விவேக் பானர்ஜி கூறும்போது, ‘இது ஓர் அரிய காட்சி. இமயமலை சிகரங்களை சஹாரன்பூர் வடக்குப் பகுதியில் இருந்து வெறும் கண்களிலேயே காண முடிகிறது. மிகவும் தெளிவாக சிகரங்கள் தெரிகின்றன. 30 முதல் 40 வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற காட்சிகள் இங்கு தெரிந்ததாம்.

தற்போது அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுவால் அந்தக் காட்சிகள் தெரிவதில்லை. தற்போது சிகரங்கள் தெரிந்ததால் அதை படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தேன்’ என்றார்.

அரசு ஊழியரும், சஹரன்பூரைச் சேர்ந்த ஒரு அமெச்சூர் புகைப்படக் கலைஞருமான துஷ்யந்த் குமார் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ யிடம், மே 20 அன்று நகரத்திலிருந்து இமயமலையின் படங்களை கிளிக் செய்ததாக தெரிவித்தார்.

“சூரிய அஸ்தமன நேரத்தில், இமயமலையின் கங்கோத்ரி, யமுனோத்ரி மற்றும் பாண்டர்பஞ்ச் வீச்சு ஒளிரும் மற்றும் தெளிவாகத் தெரிந்தன. கடந்த ஆண்டும், ஏப்ரல் மாதத்தில் இந்த வீச்சு மலைகள் இங்கிருந்து தெரிந்தன. சஹரன்பூரிலிருந்து இமயமலையைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, ”என்று துஷ்யந்த் குமார் ANI இடம் கூறினார்.

ஆண்மையைப் பெருக்கும் இயற்கை வயாகரா!

Drumstick flower
Drumstick flower

சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர்.
முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.

இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று.
இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர்.

இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.
முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.

முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.

முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.

முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

கர்ப்பப் பை பிரச்னை, கருமுட்டைக் குறைபாடு, குழந்தையின்மைப் பிரச்னைகளுக்கு முருங்கைப் பூ நல்ல பலனளிக்கும்.

ஆண்மை அதிகரிக்கும் தாது, முருங்கைப்பூவில் அதிகம் இருக்கிறது. நன்கு காய்ச்சிய பசுவின் பாலில், முருங்கைப்பூக்களை போட்டு தினமும் குடித்து வந்தால், தாது பலம் பெறும்.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். நீர்த்துப்போன விந்து கெட்டியாகும் . இதை இயற்கையின் வயாகரா எனக்கூறலாம். முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

​ஆண்மை கோளாறு
குழந்தையின்மை பிரச்சனையில் ஆண்களும் பாதிப்பை கொண்டிருக்கிறார்கள். ஆண்களுக்கு உண்டாகும் கோளாறுகளை நீக்கவும், அல்லது வராமல் தடுக்கவும் முருங்கைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வர வேண்டும். ஆண்மை கோளாறு இருப்பவர்கள் முருங்கைப்பூவை எப்படி சாப்பிடவேண்டும் என்று தெரிந்துகொள்வொம்.

எப்படி எடுத்துகொள்வது
முருங்கைப்பூவை சுத்தம் செய்து நிழலில் காயவைத்து எடுக்கவும். அவை நன்றாக காய்ந்ததும் அதை மிக்ஸியில் பொடியாக்கி கண்ணாடி பாட்டிலில் வைத்து தினமும் காலை இரண்டு டீஸ்பூன் தேனில் ஒரு டீஸ்பூன் அளவு முருங்கைப்பூ பொடியை சேர்த்து குழைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்கோளாறுகள் நீங்கும்.

​விந்து முந்துதல் பிரச்சனைக்கு
தாம்பத்திய வாழ்க்கையின் போது ஆண்கள் சந்திக்கும் மற்றொரு முக்கியமான பிரச்சனை விந்துமுந்துதல். விந்து முந்துதல் பிரச்சனையால் தாம்பத்திய வாழ்க்கையில் குறைபாட்டை கொண்டிருக்கும் ஆண்களுக்கு சிறந்த தீர்வாக இருக்க கூடியது முருங்கைப்பூ பாதாம் சேர்த்த பால்.

எப்படி எடுத்துகொள்வது
4 அல்லது 5 பாதாமை 8 மணி நேரம் நீரில் ஊறவிடவும். அதை தோல் உரித்து வைக்கவும். முருங்கைப்பூவை சுத்தம் செய்து கைப்பிடி அளவு எடுத்து தோல் உரித்த பாதாமுடன் சேர்த்து அம்மியில் மைய அரைக்கவும். இதை ஒன்றரை டம்ளர் பசும்பாலில் சேர்த்து ஒரு டம்ளராக சுண்டும் வரை வைத்திருந்து இனிப்புக்கு நாட்டு சர்க்கரை அல்லது பனங்கருப்பட்டி சேர்த்து கொடுக்கவும். ஒரு மண்டலம் வரை குடித்து வர வேண்டும். தினமும் இரவில் கொடுக்கலாம். சில வாரங்களிலேயே நல்ல பலன் கிடைக்கும்.

​விந்தணுக்கள் உற்பத்திக்கு
விந்தணுக்களின் எண்ணிக்கை குறையாமல், வீரியம் குறையாமல் வேகம் குறையாமல் ஆரோக்கியமாக இருந்தால் ஆண்மை தன்மையும் சீராக இருக்கும். குழந்தைப்பேறில் குறைபாடு இருக்காது. அதே நேரம் தற்போது குழந்தையின்மை பிரச்சனையின் போது ஆண்களுக்கு குறைபாடு கண்டறியப்பட்டால் அது பெரும்பாலும் ஆண்களின் விந்தணுக்கள் குறைபாடே காரணமாக சொல்லப்படுகிறது. இந்த விந்தணுக்களை தரமாக மாற்ற உற்பத்தியை பெருக்க முருங்கைப்பூவை கொடுக்கலாம்.

எப்படி எடுத்துகொள்வது
முருங்கைப்பூ – 10
பாதாம் பிசின் – சிறு துண்டு
பாதாம் பருப்பு – 3
சாரைப்பருப்பு – 1 டீஸ்பூன்

பாதாம் பிசினை 10 மணி நேரம் ஊறவைத்தால் அவை பொங்கி நுங்கு போன்று வளர்ந்திருக்கும் அதை இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்துகொள்ளவும். 10 மணி நேரம் வரை ஊறவைத்த பாதாம் பருப்பை தோல் உரித்து அதனுடன் பத்து நிமிடம் ஊறவைத்த சாரப்பருப்பு, முருங்கைப்பூ சேர்த்து மைய அரைத்து பாலில் கலந்து ஒன்றரை டம்ளர் ஒரு டம்ளராக வரும் வரை கொதிக்க வைத்து அதில் கலந்து இனிப்புக்கு நாட்டு சர்க்கரை அல்லது பனங்கருப்பட்டி கலந்து குடித்துவந்தால் இயற்கையாகவே விந்தணுக்கள் கெட்டிப்படும். அதிகரிக்கும்.

​கருவுறுதலை ஊக்குவிக்க
குழந்தைப்பேறை எதிர்பார்க்கும் தம்பதியர் இருவருமே முருங்கைப்பூ உணவில் சேர்க்கலாம். இவை எதிர்கொள்ளும் கருவின் பலத்தை உறுதி செய்ய கூடும். ஆரோக்கியமான தம்பதியருக்கு குழந்தைப்பேறில் கால்தாமதம் உண்டாகும் போது இவை உதவும்.

எப்படி எடுத்துகொள்வது
முருங்கைப்பூ – 1 கப்,
சாம்பார் வெங்காயம் – 1 கப்,
வரமிளகாய்-2
உப்பு , நல்லெண்ணெய்/ நெய் – தேவைக்கு

முருங்கைப்பூவை சுத்தம் செய்து ஒன்றிரண்டாக நறுக்கி வைக்கவும் சாம்பார் வெங்காயத்தை தோலுரித்து ஒன்றிரண்டாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் / நெய் விட்டு தாளிப்பு பொருள்கள் சேர்த்து வெங்காயம் , முருங்கைப்பூ சேர்த்து நன்றாக வதக்கி பச்சை வாசனை போனதும் இறக்கவும். இதை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் கருவுறுதல் தாமதிமில்லாமல் உடனடியாக உண்டாக கூடும்.

உடல் சூட்டை தணிக்கவும் முருங்கைப்பூ பயன்படுகிறது. இதை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால், சூடு தணியும். பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கை கட்டுப்படுத்தவும் முருங்கைப்பூ பயன்படுகிறது. முருங்கைப்பூ சாறு, மேகநோயை தணிக்க உதவுகிறது. இதை, துவையல் செய்தும் சாப்பிடலாம்.

மறதியை போக்கவும், நினைவாற்றல் பெருகவும் பயனுள்ள மருந்தாக முருங்கைப்பூ உள்ளது. தேர்வு நெருங்கி வரும் வேளையில், குழந்தைகளுக்கு முருங்கைப்பூ பொரியல் செய்து கொடுப்பது நல்லது. முருங்கைப்பூவில் அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அத்துடன் பனங்கல்கண்டு கலந்து, தினமும் காலை, மாலை என இரு வேளையும் குடித்து வந்தால், நினைவாற்றல் பெருகும்.

நாவின் சுவையின்மையை மாற்றும் தன்மை கொண்டது. முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.
தொடர்ந்து கம்ப்யூட்டரில் பணியாற்றி வருபவர்கள், அலுவலக ஊழியர்கள் பலருக்கு, 40 வயதிற்கு மேலாகி விட்டால், கண்ணாடி அணியாமல் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டு விடும். பேப்பர் படிக்கக்கூட அவர்களால் முடியாது. இதை, வெள்ளெழுத்து பிரச்னை என்று கூறுவர். இவர்களுக்கு முருங்கைப் பூ, நல்ல பயன் தரும்.

இந்த பூவை, நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் பார்வைத்திறன் அதிகரிக்கும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.

முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி, தினமும் காலை, மாலை என இரு வேளையும் குடித்து வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, பார்வைக் கோளாறுகள் நீங்கும். அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும். அவர்கள், முருங்கைப் பூவை கஷாயம் செய்து தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

உடல்சூடு தணிய

சிலருடைய உடம்பில் அதிகப்படியான சூடு இருந்து கொண்டே இருக்கும். உடலைத் தொட்டால் காய்ச்சல் அடிப்பது போல காணப்படும். அத்தகையவர்கள் ஒரு கைப்பிடியளவு முருங்கைப் பூக்களைச் சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டியளவு அளவு பசு நெய் விட்டு வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து காலை வேளை மட்டும் குடித்து வந்தால் ஏழே நாட்களில் உடல் சூடு தணிந்து சம அளவை அடையும்.

முருங்கைப் பூவை அரைத்து வீக்கங்கள் மீது பற்றுப்போடலாம். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கைப் பூவை மென்று விழுங்கலாம்.

கண் வலிக்கு

இரவு நேரத்தில் முருங்கைப் பூவை நீரில் ஊறவைத்து மறுநாள் காலை பூவின் சாறை 2 துளிகள் வீதம் கண்களில் விட கண் வலிகள் நீங்கும். விரை வீக்கம் சுருங்க முருங்கைப் பூவை அவித்து விரை மீது மூன்று நாட்கள் கட்டினால் நீர் வற்றி சுருங்கி விடும்.

வயிற்று வலிக்கு

பிரண்டை, முருங்கைப் பூ, பொடியாக நறுக்கப்பட்ட தேங்காய் மூன்றையும் வகைக்குக் கைப்பிடியளவு எடுத்து மூன்றையும் ஆவியில் வேகவைத்து அம்மியில் வைத்து நசுக்கிப் பிழிந்து சாறு எடுத்துக் குடித்து விட்டால் வயிற்றுவலி நின்றுவிடும்.

ஹிந்துகளுக்கு உதவ விசுவ ஹிந்து பரிஷத் வேண்டுகோள்!

westbengal
westbengal

வங்காளத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஹிந்து சமுதாயத்திற்கு உதவ, ஆதரவு மற்றும் மறுவாழ்வு அளிக்க நாட்டு மக்கள் முன்வருமாறு வி.எச்.பி அழைப்பு விடுத்துள்ளது.

‘மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பிறகான ஹிந்துக்கள் மீதான திட்டமிட்ட வன்முறை தாக்குதல்களில்
11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் வீடற்றவர்களாகியுள்ளனர். 40,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 142 பெண்கள் மனிதாபிமானமற்ற செயல்களுக்கு ஆளானார்கள். 5,000 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன. 7 இடங்களில், ஹிந்துக்களின் வசிப்பிடங்கள் புல்டோசர்களால் இடித்துத் தள்ளப்பட்டு அங்கு இரவோடு இரவாக மசூதிகள் கட்டப்பட்டுள்ளன.

கஸ்வா-இ-ஹிந்த் ஜிஹாதிகள் ஹிந்துக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர். 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் பட்டியல் சாதியினர்மற்றும் பட்டியல் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மீது 1,627 தாக்குதல்கள் நடந்தன. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாக மாறி அசாம், ஒடிசா மற்றும் ஜார்க்கண்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

பட்டியல் சமூக மக்களை குறிவைத்து மட்டுமே இந்த தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கொடூரமான வன்முறை 1947 ல் பாரத
பிரிவினையையின்போது நிகழ்ந்த வன்முறை, படுகொலைகளை
நினைவூட்டுகிறது மேற்கு வங்க ஆளுநர் பாதிக்கப்பட்டவர்களின்
துன்பங்களை நேரில் கேட்டு நிலைமையின் கொடூரத்தை
அறிந்தார். அப்போது அவர், ‘என் மாநில மக்கள் வாழ வேண்டிய
கட்டாயத்தில் உள்ளனர்’ என்று குரல் தழுதழுக்க ஆளுனர் கூறினார்.

மேலும், ‘மேற்கு வங்கம் ஹிந்துக்களுக்கு ஒரு எரிமலையாக
மாறிவிட்டது’ என்று சொல்லும் அளவிற்கு ஆளுனர் தள்ளப்பட்டார்.
கொடுமைகளைத் தடுக்க, தேசிய மனித உரிமைகள் ஆணையம்
(என்.எச்.ஆர்.சி), பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையம்
(என்.சி.எஸ்.சி), தேசிய பெண்கள் ஆணையம் (என்.சி.டபிள்யூ)
மற்றும் குழந்தைகள் உரிமைகளுக்கான தேசிய ஆணையம்
(என்.சி.பி.சி.ஆர்) போன்ற பல சட்டரீதியான அமைப்புகளும்
கோரியுள்ளன. நமது தேசத்தின் தர்மத்தைப் பாதுகாக்க போராடி
வரும் மேற்கு வங்க ஹிந்து சமுதாயத்துடன் முழு நாடும் துணையாக நிற்க வேண்டும். அவர்களுக்கு அனைத்து விதத்திலும் உதவ நாம் தயாராக இருக்க வேண்டும்.

வீடு இழந்த ஹிந்துக்களுக்காக வீடுகள் கட்டிக்கொடுப்பது,
சூறையாடப்பட்ட வீடுகளை புனரமைத்தல், மீள்குடியேற்றம்,
அனாதைக் குழந்தைகளுக்கு வாழ்க்கைகான ஏற்பாடுகள் செய்தல், காயமடைந்தவர்களுக்கான மருத்துவ உதவிகள், ஹிந்துக்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய்யான வழக்குகளை எதிர்த்துப் போராடுவது, பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் தொழில்களை மீண்டும் தொடங்க உதவுதல், உடைக்கப்பட்ட கோயில்களை புனரமைத்தல், இந்த வன்முறையில் உயிரிழந்த ஹிந்துக்களைச் சார்ந்தவர்களுக்கு உதவுதல், ஹிந்து சமுதாயத்தின் தடுப்பு மற்றும் வலிமைமிக்க சக்தியை உருவாக்குதல் போன்ற பல பணிகள் நம் முன் உள்ளன.

பேரழிவைச் சந்தித்த நம் ஹிந்து சொந்தங்களுக்காக இது
போன்ற பல பணிகள் இங்கு மேற்கொள்ளப்பட வேண்டும்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட இவர்கள் தற்போது கொர ோனா
தொற்றுநோயையும் எதிர்த்துப் போராடி வருகின்றனர்.
கொர ோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்வதில் நாம்
அனைவரும் குடிமக்கள் நாடு முழுவதும் ஈடுபட்டுள்ளோம்;
இந்த பேரழிவுகளிலிருந்து மேற்கு வங்கத்தை நாம் காப்பாற்ற
வேண்டும்’ என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மத்திய
பொதுச்செயலாளர் மிலிந்த் பராண்டே தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் உள்ள நமது ஹிந்து சொந்தங்களுக்கு
உதவ நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம்.

அதற்கான வங்கி விவரங்கள்:

Bank Account Details
(1) Vishva Hindu Parishad, A/c no: 04072010017250, Bank:
Punjab National Bank, Branch: Basant Lok, New Delhi, IFSC code:
PUNB 0040710, PAN: AAATV0222D, (80 G Not available)

(2) Bharat Kalyan Pratisthan
A/c No.: 04072010019960, Bank:
Punjab National Bank, Branch: Basantlok, New Delhi, IFSC Code:
PUNB 0040710, PAN: AAATB 0428P

மனைவியுடனான அந்தரங்க வீடியோவை மச்சினனுக்கு அனுப்பிய கணவன்!

Pornography
Pornography

மனைவியின் அந்தரங்க போட்டோக்களை அவரது சகோதரனுக்கு அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

25 வயதான பெண் ஒருவர், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வசித்து வந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், கல்யாணம் ஆன நாள் முதல் அந்த பெண்ணின் கணவன் வீட்டார் அவரிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல், அந்த பெண்ணின் பெட் ரூமில் கேமேரா ஒன்றை அவருக்கு தெரியாமல் வைத்து அவரின் அந்தரங்க படங்களை எடுத்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த கணவனின் வரதட்சனை கொடுமை தாங்க முடியாத அந்த பெண் தனது கணவர் மீது அங்குள்ள காவல் நிலையம் ஒன்றில் அவர் மீது புகார் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில், அந்தக்கனவர் அந்த பெண்ணின் வரதட்சணை புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டியுள்ளார்.

பின்னர், அவரது மனைவியோட நெருக்கமாக இருந்த போது எடுத்த படங்களை அவரின் சகோதரனுக்கு அனுப்பி, அவரின் வரதட்சணை புகாரை வாபஸ் பெற வில்லையென்றால் இந்த படங்களை சமூக ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டினார்.

ஆனால் அந்த பெண், மீண்டும் இது குறித்து போலீசாரிடம் புகாரளித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளாடையில் வைத்து தங்கம் பதுக்கல்! சுங்கத்தால் பறிமுதல்!

gold
gold

அண்மை காலத்தில் வெளிநாட்டில் இருந்து தங்கக் கடத்தல் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.

துபாயில் இருந்து சென்னை திரும்பிய 8 விமானப் பயணிகள், தங்கள் உள்ளாடைகள் உட்பட பல விதங்களில் 9 கிலோ தங்கத்தை மறைத்து கொண்டு வந்தது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

துபாயில் இருந்து தங்கக் கடத்தல் தொடர்ந்து அதிகரிப்பதை கருத்தில் கொண்டு சென்னை சுங்கத் துறை அதிகாரிகள் அதி தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

வளைகுடா நாடான (Gulf country) துபாயில் இருந்து வந்த எட்டு பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

அந்தப் பயணிகள் எமிரேட்ஸ் விமானம் ஈ.கே 544 (Emirates flight EK 544) வழியாக சென்னை வந்தனர். அவர்கள் பதற்றமாக இருப்பதைக் கண்ட அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. அவர்களிடம் விசாரணை செய்தபோது, முன்னுக்கு பின்னாக பதிலளித்துவிட்டு விரைந்து செல்ல முயன்றனர்.

பயணிகளின் பொருட்களை பரிசோதித்ததில் பிளாஸ்டிக் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க பேஸ்ட், அவர்களின் ஜீன்ஸ் மற்றும் உள்ளாடைகளில் பதுக்கி வைத்திருந்த தங்கம் என தங்கக் கடத்தல் விவகாரம் அம்பலமானது.

அவர்களிடம் இருந்து 9 கிலோ அளவிலான 24 காரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது

இந்தத் தங்கத்தின் மதிப்பு4.5 கோடி ரூபாயாகும். பயணிகளிடம் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்கம் கைப்பற்றப்பட்டு, சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக சென்னையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எங்கும் யாரும் சுதந்திரமாக சென்று வர முடியாது.

இந்த நிலையிலும் பயப்படாமல் தங்கக் கடத்தல் நடைபெறுவது அதிர்ச்சியளிப்பதாக மூத்த விமான சுங்க அதிகாரிகள் கூறுகின்றனர். அதோடு, சர்வதேச விமானங்களின் சேவையும் குறைவாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.