Home Blog Page 262

ஸ்ரீரங்கம் பக்தரை தாக்கி ரத்தம் வழிய விட்ட ஊழியர்: இந்து முன்னணி கண்டனம்!

hindumunnani - 2026

ஸ்ரீரங்கம் அறநிலையத்துறை ஊழியர்களின் வெறிச்செயல்- கோவிந்தா என்று இறை நாமம் சொன்னவர் மீது தாக்குதல் என்று, இந்துமுன்னணி மாநிலத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

ஸ்ரீரங்கத்தில் தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவர் கருவறை அருகே கோவிந்தா கோவிந்தா என கோசமிட்டு பெருமாளை வணங்கியுள்ளார். அவர் சபரிமலை செல்வதற்கு ஐயப்ப விரதம் மேற்கொண்டு மாலை அணிந்துள்ளார். கோவிந்தா நாமம் எழுப்புவதை கண்ட அறநிலையத் துறை ஊழியர்கள் அவரோடு வாக்குவாதம் செய்து அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ரத்தம் சொட்ட சொட்ட கோவிலுக்குள்ளேயே பக்தர் தரையில் அமர்ந்து கதறி அழும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்து சமய அறளையத்துறைக்கும் அதன் ஊழியர்களுக்கும் பக்தியும் இல்லை, பக்தர்கள் மீது பரிவும் கிடையாது, ஆகம விதிகளும், அடிப்படையும் தெரியாது.

வழிபாட்டுத்தலத்திற்குள் இதுபோல அவமதிப்பதும், அடித்து அச்சுறுத்துவதும் உலகத்தில் எந்த மூலையிலும் பார்க்க முடியாத காட்சியாகும். பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் எனும் பாரதியின் கூற்று நூறு சதவீதம் திராவிட மாடல் ஆட்சிக்கு பொருந்தும்.

திராவிட மாடல் ஆட்சி என்ற பெயரில் பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தடுப்பதற்கு அநியாய கட்டணம் வசூலித்தார்கள்., அப்பட்டமாக ஆகம விதிகளை மீறினார்கள். மடாதிபதிகளை துறவியர்களை அவமதித்தார்கள்.

தற்போது பழனி திருச்செந்தூரில் தொடங்கி ஸ்ரீரங்கம் வரை பக்தர்கள் மீது கொலை வெறி தாக்குதலை அரங்கேற்றி இருக்கிறார்கள். இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

இதற்குக் காரணமான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பக்தருக்கு உரிய இழப்பீடு வழங்கி சகல மரியாதையோடு சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகளை எடுக்க தவறினால் பக்தர்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை இந்து முன்னணி முன்னின்று நடத்தும் என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.

ஸ்ரீரங்கம் கோயிலில் ஆந்திர ஐயப்ப பக்தர் மீது தாக்குதல்: அண்ணாமலை கண்டனம்!

annamalai interview in madurai - 2026
#கோப்பு படம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில், பெருமாள் சந்நிதி முன்பு, ஆந்திர மாநில ஐயப்ப பக்தர் கோயில் பணியாளரால் ரத்தம் வருமளவு தாக்கப்பட்டு, கோயிலில் ரத்தம் சிந்த வைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

ஆந்திராவில் இருந்து 30க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் டிச.12 இன்று காலை 6 மணி அளவில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வழிபட வந்தனர். அப்போது, அவர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி மேலிட ஆந்திர கோயில்களின் வழக்கத்தில் உள்ளபடி, முழக்கமிட்டதாகக் கூறப்படுகிறது. இதனை, பாதுகாப்பு பணியில் இருந்த கோயில் ஊழியர்கள் கண்டித்ததுடன், கோயிலில் சத்தம் எதுவும் போடாமல், அமைதியாக சுவாமியை வணங்கிச் செல்லுமாறு கூறியுள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐயப்ப பக்தர் சென்னா ராவை, கோயில் பாதுகாவலர்கள் கண்மூடித் தனமாகத் தாக்கியதில், அவரது மூக்கு உடைந்து ரத்தம் வழிந்துள்ளது. அந்த இடம் அரங்கநாதருக்கு நிவேதங்கள் வைத்து திரை சேர்த்து பூஜை செய்யக்கூடிய இடம் என்பதால், சந்நிதியில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு பிறகு திறக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், திருச்சி, ஸ்ரீரங்கம் கோயில் சந்நிதியில் ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்கள் தாக்கப்படும் வீடியோ காட்சி ஒன்றை எக்ஸ் சமூக வலைதளத்தில் தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹிந்து தர்மத்தின் மீது நம்பிக்கையில்லாத அரசு ஹிந்து கோயில்களில் இருக்க வேண்டியதில்லை. ஸ்ரீரங்கம் கோயில் புனிதத்தைக் கெடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று கோயில் முன்பு பாஜக., சார்பில் போராட்டம் நடைபெறும். 42 நாட்கள் விரதம் இருந்த ஐயப்ப பக்தர்கள், சபரிமலையில் இருந்து திரும்பியவுடன் ரங்கநாத சுவாமியை வழிபட விரும்பினர். ஸ்ரீரங்கம் கோயில் சந்நிதி முன்பு ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. – என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஆந்திரா பக்தர்கள் கோயில் உண்டியல் மீது கைவைத்து தள்ளியதாலும், கோயில் பணியாளரை தாக்கியதாலும்தான் பிரச்னை ஏற்பட்டதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அனைத்து இந்து பக்தர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில்… இன்று காலை ஐயப்ப பக்தர்களை தாக்கிய இந்து சமய அறநிலைத் துறையின் கையாலாகாததனத்தையும்,இந்து விரோத போக்கையும் கண்டித்து! இன்று‌ (12.12.2023)மாலை 4.00 மணியளவில்! இந்து முன்னணியின் கோட்ட செயலாளர் போஜராஜன் அவர்கள் தலைமையில், விசுவ இந்து பரிசத்தினுடைய தென் மாநில அமைப்பாளர் சேதுராமன்,
மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநகர மாவட்ட தலைவர் S.ராஜசேகரன் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ரங்கா! ரங்கா!! கோபுரம்‌ அருகில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினர்.

ரஜினி பிறந்த நாளென ரதம் இழுத்த ரசிகர்கள்!

rajini birthday rath in thiruparankundram - 2026
#image_title

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, தங்க ரதம் இழுத்த ரஜினி ரசிகர்கள்:

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் 73 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது மதுரை மாவட்ட ரசிகர் மன்றம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவர் பால தம்புராஜ் , முன்னாள் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமரவேல், மாவட்ட செயலாளர் அழகர்,திருப்பரங்குன்றம்
நகரச் செயலாளர் கோல்டன் சரவணன் , அவனி பாலா உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் ரஜினிகாந்தின் 73 வது பிறந்த தினத்தை முன்னிட்டு , திருப்பரங்குன்றம் முருகன் பெயர் முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் தங்க ரதமும் இழுக்கப்பட்டது.

ரஜினிகாந்த், பூர்ண நலத்துடன் வாழ ரசிகர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். கார்த்திகை மாத சோமவாரம் என்பதால், முருகனை தரிசிக்க வந்த ஏராளமான பக்தர்கள் தங்க ரதத்தையும் தரிசனம் செய்தனர்.

அயோத்தி ராமர் கோயிலில்… கருவறை இப்படித்தான் இருக்குமாம்!

srirama janma boomi temple - 2026
#image_title

அயோத்தி ராமர் கோயில் கருவறை படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இதனை ஶ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாக மேற்பார்வை செய்து வருகிறது.

தற்போது ராமர் கோயில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் விழா ஜனவரி 22, 2024-ல் நடைபெற உள்ளது, விழாவில் பிரதமர் மோடி மற்றும் நாடு முழுவதிலும் இருந்து 10,000க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்நிலையில் கோயில் கருவறை புகைபடங்களை ராம் மந்திர் அறக்கட்டளை செயலாளர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அப்புகைபடத்தில் கருவறையின் உள்பகுதி வட்ட வடிவில் பிரம்மாண்ட தூண்களும், நடுவில் ராமர் சிலையை வைக்கப்பட உள்ள பீடமும், அதன் மேல் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகளில் ராமர் சிலை ஒளிரும் வகையில் அழகுற காட்சியளிக்கிறது.

இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.


அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதை


அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 நிலம் தொடர்பான வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். அதேசமயம், முஸ்லிம்களுக்குத் தனியாக 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளது உச்ச நீதிமன்றம். அந்த வழக்கு கடந்த பாதை குறித்து சற்று திரும்பிப் பார்க்கலாம்.

1528: முகலாய அரசர் பாபரின் படைத்தளபதி மிர் பாகியால் கோவிலை இடித்து அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது.

1857 : முதல் சுதந்திர போராட்ட புரட்சி வீரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முகலாய பேரரசர் பகதூர் ஷா தலைமையில் போராடிய போது ஹிந்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒற்றுமை ஏற்படுத்தும் வகையில் ராம ஜென்ம பூமியே ஹிந்துக்கள் வசம் ஒப்படைக்கும் தீர்மானம் முடிவானது. ஹிந்துக்கள் சார்பில் ராம சந்திரதாஸ் என்பவரும் முஸ்லிம்கள் தரப்பில் அமீர் அலி என்பவரும் இந்த சமாதான ஒப்பந்தத்திற்கு காரணமாக இருந்தனர். இதனால் பயந்து போன ஆங்கிலேயர்கள் நிரந்தரமாக ஹிந்து முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக அவர்கள் இருவரையும் கைது செய்து தூக்கிலிட்டு கொன்றது.

1885: பாபர்மசூதி-ராமஜென்ம பூமி இடத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் எனக் கோரி பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் மகந்த் ரகுபிர்தாஸ் மனுத் தாக்கல் செய்தார். அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

1949: சர்ச்சைக்குரிய இடத்தின் மைய மண்டபத்தில் ராமர், சீதா, லட்சுமணன் சிலைகள் வைக்கப்பட்டன.

1950: ராமர் சிலைகளை வழிபட அனுமதிக்கக் கோரி பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் கோபால் சிம்லா விஷாரத் மனுத்தாக்கல் செய்தார். மேலும் பரமஹன்ஸா ராமச்சந்திர தாஸ் தொடர்ந்து அங்கு வழிபாடு நடத்தவும் மனுத்தாக்கல் செய்தார்.

1959: சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி நிர்மோகி அகாரா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 நிலம் தொடர்பான வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். அதேசமயம், முஸ்லிம்களுக்குத் தனியாக 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த பிரச்சினைக்கு இன்று தீர்வு கண்டுள்ளது உச்ச நீதிமன்றம். அந்த வழக்கு கடந்த பாதை குறித்து சற்று திரும்பிப் பார்க்கலாம்.

உத்தரப் பிரதேச சன்னி மத்திய வக்பு வாரியம், சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி வழக்குத் தொடர்ந்தது.

1961 டிச 18 : பனிரெண்டு ஆண்டுகளில் நீர்த்து போக வேண்டிய வழக்கை ஒரு தினத்திற்கு முன்பாக வழக்கில் சன்னி வக்ப் போர்டு தன்னை ஒரு வாதியாக இணைந்து கொண்டது. தேவகி நந்த அகர்வால் ராம் லாலா சார்பாக இடத்திற்கு உரிமை கூறி வழக்கு தொடுக்கிறார்.

1980 : பிரயாகையில் கூடிய விஷ்வ ஹிந்து பரிஷத்-ன் அகில பாரத பொது குழு கலந்து பேசி அயோத்தி பிரச்சனையை கையில் எடுக்கிறது.

1984 : நாடு முழுமைக்கும் அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு போரட்டங்களை நடத்துகிறது. அயோத்தி பிரச்னையை மக்களிடம் கொண்டு செல்ல ராமர் ரத யாத்திரை, ராம ஜோதி யாத்திரை, பாதுக யாத்திரை என பல்வேறு போராட்டங்களை முன்னேடுகிறது.

1986, பிப்.1: இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் சர்ச்சைக்குரிய இடத்தில் வழிபாடு நடத்த உள்ளூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

1989, ஆக.14: சர்ச்சைக்குரிய இடத்தில் இருக்கும் நிலையே தொடர வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நாடாளு மன்ற தேர்தல் முடிவில் பாரதிய ஜனதா கட்சி 89 உறுப்பினர்களுடன் வி பி சிங் தலைமையிலான மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரித்தது. உத்தரப்ரதேசத்தில் முலயாம்சிங் தலைமையிலான ஜனதா தள அரசும் பீகாரில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான அரசும் பதவி ஏற்கிறது.

குஜராத்தின் சோமநாத புறத்திலிருந்து அயோத்தி நோக்கி பனிரெண்டு மாநிலங்கள் வழியாக ராம பிரான்-க்கு ஆலயம் அமைக்க கோரி ரத யாத்திரையை எல் கே அத்வானி துவங்குகிறார். நாடு முழுவதும் ராமனுக்காக எழுந்த மக்கள் ஆதரவை தொடர்ந்து பீகார் மாநிலம் சமஸ்தி பூரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

இறுதியில் அயோத்தி நோக்கி சென்ற லட்சகணக்கான கரசேவகர்கள் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டு கரசேவகர்கள் திருப்பி அனுப்பட்டனர். கரசேவைக்கு குறிக்கப்பட்ட நாளன்று அயோத்தியில் காக்கா குருவி கூட பறக்காது என இறுமாப்பில் இருந்த முலயாம் சிங்-ன் கனவில் மண்ணை அள்ளி போட்டு லட்சகணக்கான கரசேவகர்கள் அயோத்தியில் குவிந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் சர்ச்சைக்குரிய கட்டடத்தின் மீது ஏறி காவி கொடியை நட்டனர். மசூதி போன்ற கட்டடத்தின் மூன்று கும்பங்களையும் உடைத்து சிதைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பல்லாயிரக்கணக்கான கரசேவகர்கள் ராம பக்தர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1992, டிச.6: சர்ச்சைக்குரிய இடத்தில்  திரும்பவும் கரசேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து டிச 2ம் தேதி அயோத்தி சம்மந்தமான வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிமன்றம் வேண்டுமென்றே தீர்ப்பை தள்ளி வைத்தது. இதனால் வெகுண்டு எழுந்த கரசேவகர்கள் அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை, கரசேவகர்கள் இடித்து தள்ளினர். காலை 11 மணிக்கு துவங்கிய அவ்ர்களின் ஆவேச போராட்டம் எவ்வித ஆயுதமுமின்றி  கட்டடம் நிர்முலமாக்கபட்டது. கரசேவகர்களால் பூஜித்து கொண்டு செல்லப்பட்ட செங்கற்களால் தற்காலிக கட்டடம் கட்டப்பட்டு அதில் கடவுள் ராம் லாலா ஸ்தாபனம் செய்யப்பட்டார். அப்போது உ.பி.யில் ஆட்சியில் இருந்த கல்யாண் சிங் தலைமையிலான பாஜக அரசு கலைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள்.

1993, ஏப்.3: சர்ச்சைக்குரிய இடத்தைக் கைப்பற்றுவதற்காக அயோத்யா சட்டம் உருவாக்கப்பட்டது.

இந்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்மாயில் பரூக்கி உள்பட அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஏராளமானோர் மனுத்தாக்கல் செய்தனர்.

1994, அக்.24: இஸ்லாமாயில் பரூக்கி தொடர்ந்த வழக்கில், மசூதி இஸ்லாம் மதத்தின் ஒரு பகுதி அல்ல என்று தீர்ப்பு வழங்கியது.

2002, ஏப்: சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்று வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது.

2003, மே 13: கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் எந்தவிதமான மதரீதியான நடவடிக்கைகளும் நடத்தக் கூடாது என்று அஸ்லாம் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

2010, செப் 30: அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகியோர் மூவரும் 2:1 என்ற அளவில் பிரிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது

2011, மே 9: அயோத்தி நில வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

2017, மார்ச் 21: அயோத்தி வழக்கில் அனைத்துத் தரப்பிலும் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டது.

2017, ஆக.7: 1994-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீரப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

2018, பிப்.8: அயோத்தி வழக்கில் மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் தொடங்கியது.

2018, ஜூலை 20: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது.

2018, செப்.27: மசூதி இஸ்லாம் மதத்தின் ஒரு பகுதி அல்ல என ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற மறுப்பு தெரிவித்தது. அக்டோபர் 29-ம் தேதி முதல் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் எனத் தெரிவித்தது.

2018, அக்.29: ஜனவரி மாதத்தின் முதல் வாரத்திலிருந்து வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும். அந்த அமர்வு விசாரணையை முடிவு செய்யும் என்று நீதிமன்றம் தெரிவித்தது

2018, டிச 24: 2019, ஜனவரி 4-ம் தேதியில் இருந்து மனுக்கள் மீதான விசாரணை தொடங்கும் என்று உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது.

2019, ஜன.4: அயோத்தி வழக்கில் எந்த அமர்வு விசாரிக்கும் என்பது குறித்து ஜனவரி 10-ம் தேதி அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

2019, ஜன.8: அயோத்தி மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் எஸ்.ஏ.போப்டே, என்.வி.ரமணா, யு.யு.லலித், டி.ஒய் சந்திரசூட் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க அமைத்தது.

2019, ஜன.10: இந்த வழக்கில் இருந்து நீதிபதி யு.யு.லலித் தான் விலகிக்கொள்வதாக அறிவித்ததையடுத்து, ஜனவரி 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

2019, ஜன.25: அதன்பின் புதிய அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இதில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்ஏ.நசீர் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.

2019, ஜன.29: அயோத்தியில் உண்மையான உரிமையாளர்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்கர் நிலத்தை திரும்ப அளிக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அனுமதி கோரியது.

2019, பிப்.26: அயோத்தி வழக்கில் சமரசப் பேச்சுக்கு பரிந்துரைப்பது குறித்து மார்ச் 5-ம் தேதி முடிவு எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

2019, மார்ச் 8: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எப்எம் கலிபுல்லா தலைமையில் வாழும் கலை இயக்குநர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் பஞ்சு ஆகியோர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் சமரசக் குழுவாக அமைத்தது.

2019, ஏப்.9: அயோத்தியில் உண்மையான நில உரிமையாளர்களிடம் நிலத்தை ஒப்படைப்பது தொடர்பாக மத்திய அரசின் மனுவுக்கு எதிராக நிர்மோகா அஹாரா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.

2019, மே 9 : சமரசக் குழுவினர் தங்களின் இடைக்கால அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

2019,மே 10: ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் சமரசப் பேச்சுவார்த்தையை முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2019, ஜூலை 11: சமரசப் பேச்சின் நிலவரம் குறித்து உச்ச நீதிமன்றம் அறிக்கை கேட்டது.

2019, ஜூலை 18: சமரசப் பேச்சு தொடரலாம் என்றும், ஆகஸ்ட் 1-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2019, ஆக.1: உச்ச நீதிமன்றத்தில் சமரசக் குழுவினர் தங்களின் அறிக்கையைத் தாக்கல் செய்தனர்

2019, ஆக.2: ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் நாள்தோறும் அயோத்தி வழக்கில் விசாரணை நடக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

2019, ஆக.6: அயோத்தி வழக்கில் நாள்தோறும் விசாரணையைத் தொடங்கியது.

2019, அக். 4: அக்டோபர் 17-ம் தேதிக்குள் விசாரணை முடிக்கப்படும். நவம்பர் 17-ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது

உ.பி. மாநில வக்பு வாரியத் தலைவருக்கு தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது

2019, அக்.16: அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

2019, நவ. 9: அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், நிலம் மத்திய அரசின் பொறுப்பில் இருக்கும். முஸ்லிம் தரப்பினருக்கு 5 ஏக்கர் நிலம் தனியாக மசூதி கட்ட உ.பி. அரசு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மிச்சங்! மாடலே… இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? மனசிருந்தா பதில் சொல்லுங்க!

michung cyclone effect - 2026
#image_title

சென்னையை உலுக்கிப் போட்ட மிச்சங் புயலின் கொடூரத்தையும், அரசின் செயலற்ற தன்மையையும் சொல்லி, கேள்வி எழுப்பியிருக்கிறார் ஒரு சாமானியப் பெண். இதற்கு அரசுத் துறைகள் என்ன பதில் தரப் போகின்றன?!

முகாம்களுக்கு போக விரும்பாதவர்கள் மொட்டை மாடியில் வாட்டர் டாங்க் நிழலில் இரவும் பகலுமாகக் கிடந்த கதை எந்த ஆட்சியாளருக்காவது தெரியுமா?

பெண் குழந்தைகள் அந்த நேரத்தில் வீட்டுக்குத் தூரமாக நாப்கின்கள் கிடைக்காமல் தவித்தது உங்களுக்குத் தெரியுமா?

முதல் தளத்தில் தண்ணீர் வந்ததோடு பாம்புகள் ஆமைகள், வந்ததை நீங்கள் அறிவீர்களா?

நீரின் அழுத்தம் மிகுதியில் பாத்ரூம் சிங் வழியாகவும் வீட்டுக்குள் தண்ணீர் வந்து கொஞ்சம் நஞ்சம் காய்ந்து கிடந்த மேல் தளமும் நாற்றத்துடன் கூடிய ஈரமானதை நீங்கள் அறிவீர்களா?

தண்ணீர் மட்டம் குறையக் குறைய கரப்பான் பூச்சிகளும் கட்டெறும்புகளும் வீடு முழுதும் சுற்றித்திரிந்து குழந்தைகள் தூங்க பயந்ததும் உங்களுக்குத் தெரியுமா?

படகுகளில் கொண்டு வந்து கொடுக்கப்பட்ட தண்ணீரை குடிக்கவே முடியாமலும் பாத்-ரூம் போக வேண்டிய சூழல் ஏற்படுமோ என்று பயந்து தண்ணீர் இல்லாமல் தொண்டையை மட்டும் நனைத்துக் கொண்ட கதை உங்களுக்குத் தெரியுமா?

அடுத்து உடுத்துவதற்குக் கூட உள்ளாடைகளோ அல்லது ஆடைகளோ இன்றி கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் ஒரே ஆடை அணிந்து அல்லாடிய கதை உங்களுக்குத் தெரியுமா?

தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளிகள், கல்யாண மண்டபங்களில் ஆண்கள் குடித்து விட்டு அந்நியப் பெண்களை பாலியல் சீண்டல் செய்ததும் உங்களுக்குத் தெரியுமா?

கஷ்டப்பட்டு வாங்கி வைத்திருந்த வாஷிங்மெஷின், பிரிட்ஜ், டூவீலர் அடுப்பு இனி அனைத்துமே மீண்டும் வாங்க வேண்டிய நிலைதான் உங்களுக்குத் தெரியுமா?

வடிகால் பணிகள் முடிந்தது என்பதை நம்பியதால்தானே தைரியத்துடன் அந்த இரவில் தூங்கப் போனோம். ஆனால் நீங்கள் இப்படிப்பட்ட பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றாமல் இருந்திருந்தால் கூட, கொஞ்ச நஞ்ச பொருட்களையாவது காப்பாற்றி இருப்போமே! நீங்கள் செய்தது பச்சை நம்பிக்கை துரோகம் என்பதையாவது நீங்கள் அறிவீர்களா?

ஒவ்வொரு அம்மாவும் தன் குழந்தையை சாப்பிடு சாப்பிடு என்று தான் கெஞ்சுவாள். ஆனால் “தயவுசெய்து சாப்பிடாதே, சாப்பிட்டால் இயற்கை உபாதைக்கு என்ன செய்வாய்?” என்று பயமுறுத்தி உள்ளுக்குள் அழுது தீர்த்த அவலம்தான் உங்களுக்குத் தெரியுமா?

ஹெலிக்காப்டர் மேலே பறந்த போதெல்லாம் ஒரு போர்வையைத் தூக்கிப்போட மாட்டார்களா என்று மொட்டை மாடியில் குடும்பத்தோடு நின்று கையை ஆட்டி ஏமாந்த கதையும் உங்களுக்குத் தெரியுமா?

இயற்கை இடர்களை தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும் தான்! ஆனால் முன் எச்சரிக்கை செய்யாமல் இப்படிப் போனதை நினைத்து ஒவ்வொரு மனிதரும் வருந்தும் கதைதான் உங்களுக்குத் தெரியுமா?

குடும்பத் தலைமையில் ஆண்கள் இருக்கும் வீடுகளாவது பரவாயில்லை. பெண்கள் மட்டும் இருந்து கொண்டு, உதவிக்கு ஆளின்றி ஒண்டியாய்த் தவித்து உருக்குலைந்த கதைதான் உங்களுக்குத் தெரியுமா?

வெள்ள நீர், தரைத் தளத்தை நிரப்ப மூன்று மணி நேரத்திற்கும் மேலாக எடுத்துக் கொண்டது. ஆனால் முதல் தளத்தை நிரப்ப மூன்று விநாடிகள் கூட எடுத்துக் கொள்ளவில்லையே! இதாவது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?

இனியும் நீங்கள் தரும் உதவித் தொகையோ அல்லது நிவாரணப் பொருளோ எதுவாயினும் போய் வாங்குவதற்குக் கூட வாகனம் ஏதுமில்லை என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?

ஐந்து நாட்கள் மின்சாரம் இல்லாமல் பாம்புகள் எந்த அறையில் பதுங்கி இருக்கிறதோ, கரப்பான் பூச்சிகள் எங்கிருந்து பறந்து வருகிறதோ என்று பயந்து பயந்து, மொட்டை மாடியிலேயே வெட்ட வெளியில் ஒரு புடவையை விரித்துப் படுத்துவிட்ட பாட்டைத்தான் நீங்கள் அறிவீர்களா?

சொல்லப் போனால் இனி வீட்டை விட்டு வெளியில் போக வேண்டுமெனில், போட்டுக்கொள்ள ஆடைகள் மட்டுமின்றி, காலுக்கு செருப்புகள் கூட இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

குளியலறையில் இருந்தெல்லாம் அந்தக் குழாய்களின் வழியாக முடிகளும் குப்பைகளும் வந்து சிக்கிக் கொண்டு, நீர் வெளியேற வழியின்றி மேலும் அடைந்து போய்விட்டதைத்தான் நீங்கள் அறிவீர்களா?

இனியும், நாங்களே சம்பாதித்து ஏதேனும் வாங்கிக் கொண்டாலும் கூட, இந்த ஐந்து நாட்கள் பட்ட அவலத்தை, மனவலியை, புத்திக்குள்ளிருந்து போக மறுக்கும் அதிர்ச்சியைத்தான் நீங்கள் உணர்வீர்களா?

நிவாரணம் என்று அறிவித்தவுடன் இந்த வலிகளெல்லாம் நிவாரணம் கண்டு விடுமா?! நீங்கள் செய்த நம்பிக்கைத் துரோகத்துக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?!

புயல் நிவாரணம் மத்திய அரசு வழங்கிய நிலையில்… மாநில அரசின் பங்கு இல்லாதது ஏமாற்றம்!

bjp annamalai - 2026
#image_title

மிக்ஜாம் புயல் நிவாரணம், மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில், மாநில அரசின் பங்கு ஒன்றுமில்லாதது ஏமாற்றத்துக்கு உள்ளாக்குகிறது என, தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கை:

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியாக, ரூபாய் 10,000 வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், வெறும் 6,000 ரூபாய் மட்டுமே நிவாரண நிதியாக அறிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, பேரிடர் மேலாண்மை நிதியாக, தமிழக அரசுக்கு ரூபாய் 450 கோடி வீதம் இரண்டு தவணைகளில், ரூபாய் 900 கோடி நிதி வழங்கியுள்ளது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதி, மத்திய அரசு வழங்கியுள்ள இந்த பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்துதான் வழங்கப்படுகிறது என்ற நிலையில், மாநில அரசின் பங்கு ஒன்றுமில்லாமல், வெறும் ரூபாய் 6,000 மட்டுமே நிவாரண நிதி என்ற அறிவிப்பு பொதுமக்களை ஏமாற்றத்துக்குள்ளாக்குகிறது.

கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி அன்று, மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில், பேரிடர் நிவாரண நிதியாக பொதுமக்களுக்கு, உடைகள் இழப்பீடாக ஒரு குடும்பத்துக்கு ரூ. 2,500 மற்றும் உடமைகள் இழப்பீடாக ரூ. 2,500 மற்றும் ஒரு வாரத்துக்குக் குறைவான மருத்துவமனையில் தங்கி பெறும் சிகிச்சைக்கு ரூ. 5,400 வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. தமிழக பாஜக, இதன் அடிப்படையில்தான் ரூ. 10,000 நிவாரண நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியது.

மேலும், மத்திய அரசின் அதே சுற்றறிக்கையில், நெற்பயிர் உள்ளிட்ட பயிர்வகைகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 17,000 எனவும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்களுக்கு, ஹெக்டேருக்கு ரூ. 22,500 எனவும், மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 8,500 எனவும், சேதமடைந்த குடிசை வீடுகளுக்கான இழப்பீடு ரூ. 8,000 ஆகவும், எருது, பசு உள்ளிட்ட கால்நடைகள் இழப்பீடு ரூ. 37,500 எனவும், வெள்ளாடு, செம்மறி ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு ரூ. 4,000 எனவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தது. அனைத்து மாநிலங்களும், பேரிடர் காலங்களில், இழப்பீடாக இந்தத் தொகையையே மக்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், திமுக அரசு, தாங்கள் ஏதோ நிவாரண நிதியை தற்போது உயர்த்தியிருப்பது போல, தவறான தகவல் அளித்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு வழங்கியுள்ள பேரிடர் மேலாண்மை நிதியை மட்டுமே பொதுமக்களுக்கு நிவாரணமாக அறிவித்திருக்கிறாரே தவிர, மாநில அரசின் பங்கு என்று எதுவுமே இல்லை.

எனவே, அறிவித்துள்ள ரூ.6,000 நிவாரண நிதியை, ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், வழக்கம்போல, திமுக கட்சியினர் தலையீடு இல்லாமல், டோக்கன் வாங்க வேண்டும் என்று பொதுமக்களை திமுக நிர்வாகிகள் வீட்டுக்கு அலைக்கழிக்காமல், முறையாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறோம்.

பல மொழிகளில் கவிதை வாசித்து பாரதிக்கு ஒரு கவிதாஞ்சலி!

bharathiar - 2026

பாரதியார் பிறந்த நாளன்று நடைபெற்ற பன்மொழி புலவர் சபையில், மலையாளம், கன்னடம், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கவிதைகளை வாசித்து, பாரதியின் பல மொழி ஒருமைப்பாட்டு சிந்தனைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

மகாகவிக்கு அஞ்சலி

  • ஜெயஸ்ரீ எம்.சாரி, நாந்தேட்

இந்திய அரசு நம் பாட்டரசன் சுப்ரமணிய பாரதியின் பிறந்த நாளை ‘பாரதிய பாஷா திவஸ்’ (இந்திய மொழி தினமாக) கொண்டாடி வருகிறது. பல மொழிகளை அறிந்த முண்டாசு கட்டிய கவிஞனின் பிறந்த நாளை இந்திய மொழி தினமாக கொண்டாடுவது சாலச் சிறந்ததாக உள்ளது.

பிற மொழிகளில் உள்ள நல்ல விஷயங்கள், நல்ல ஆசிரியர்களின் படைப்புகளை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க வேண்டும். தமிழிலும் நல்ல நூல்களை இயற்ற வேண்டும் என்ற பாரதியின் கூற்றிலிருந்தே அவர் பல மொழிகளில் ஆர்வம் கொண்டவராகவும், பிற மொழிகளையும் மதிப்பவராகவும் விளங்கினார் என்று அறிய முடிகிறது.

நாம் நம் பாரதியைப் பற்றியோ அவர்தம் கவிதைகளை சபைகளில் வாசிக்கும் போதோ சபையினர் அவருக்கும் கொடுக்கும் மரியாதையை பார்க்கும் போது ஒரு தமிழச்சியாக எனக்கு ஒரு செருக்கு வருகிறது என்பதே உண்மை.

உதாரணமாக, ஹைதராபாத் நகரத்தில் இருந்து இயங்கி வரும் காவிய காமுதி அகில உலக பன்மொழிப் புலவர்கள் குழுமத்தினால் ஒவ்வொரு மாதமும் ‘ஆன்லைனில்’ புலவர்கள் சபை நடத்தப்பட்டு வருகிறது.

நான் 30 மாதங்களாக அந்நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளேன். தமிழில் என் கவிதையை அதில் வாசித்து வந்துள்ளேன். கடந்த வருடம், பாரதியின் பிறந்த நாளன்று பன்மொழி புலவர்கள் சபை நடத்தப்பட்டது. ஆங்கிலம் தவிர வேறு மொழியில் கவிதையை வாசிப்பவர்கள், அவர்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தோ அல்லது கவிதைகளின் சாரத்தையோ ஆங்கிலத்தில் விளக்குவர்.

பாரதியின் பிறந்த நாளன்று நடந்த நிகழ்ச்சியில் நான் பாரதியாரால் மனிதனின் கடமையாய் கூறப்பட்டுள்ள ‘பிறர் துயர் தீர்த்தல்’ மற்றும் ‘பிறர் நலம் வேண்டுதல்’ – இந்த இரண்டு பண்புகளையும் எடுத்துக் கூறினேன்.

இந்த இரண்டு பண்புகளும் எக்காலத்திற்கும் ஏற்றமுடையதாய் இருப்பதனாலும், பூமியைப் போன்றே பாரதியும் பாகுபாடு பார்ப்பதில்லை என்று கூறி, அவரது வழியில் நடப்பதே நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும் என்று கூறினேன்.

பின்னர் பின்வரும் என் கவிதையை பன்மொழிப் புலவர்களின் முன்னால் வாசித்தேன்.

“பாரில் பிறந்தோர் யாவருக்கும் பாங்காய் சொந்தமான பூமியாம்;
பூமியோ பார்ப்பதில்லை
பாகுபாடு, பாரதியோ தூற்றுகிறார் பாகுபாட்டை;
பாகுபாடற்ற சமுதாயத்திலே விளையுமாம் பிறர்நலம் வேண்டும் பண்பே;
பண்பை பின்பற்றி செல்கையிலே பிறர்துயர் தீர்த்தலும் பழகிடுமாம்;
பழகிய விதையின் பழங்களாக பண்பட்ட சந்ததியும் பிறந்திடுமாம்;
பிறப்பின் பெருமையை உணர்ந்தே பாரதிக்கு பெருமை சேர்ப்போமே;
சேர்ந்தே நாமும் பாரதிக்கு செழுமையாய் அஞ்சலி செலுத்துவோமே!!”.

இந்நிகழ்ச்சியில் மலையாளத்தின் புலவரே சிறப்பு விருந்தினராய் இருந்ததால் அவர் என் கவிதையை ரசித்து பாராட்டினார். அந்நிகழ்ச்சியில் பங்குகொண்ட பலரும் நம் மகாகவியின் புகழினை அறிந்திருந்ததை என் கவிதைக்கு அவர்கள் வழங்கிய பாராட்டிலிருந்து அறிய முடிந்தது. அன்று, அதுவே நம் பாரதிக்கு அளித்த அஞ்சலியாக என்னால் உணரப்பட்டது.

மொழிகளுக்கு அப்பாற்பட்டு மனங்களில் இன்றும் வாழும் மாமனிதன், மகாகவி அவன்!!

Article 370 controversy is over, now it’s POJK to be liberated: Alok Kumar

0
jammu kashmir 370 legacy - 2026

A press statement by Vishva Hindu Parishad National spokesperson Vinod Bansal as follows

Article 370 controversy is over, now it’s POJK to be liberated: Alok Kumar:

Welcoming Supreme court judgement on Article 370, the Int’l working president and senior advocate Shri Alok Kumar said that today’s decision of the Honorable Supreme Court on Article 370 is like a tribute of a grateful nation to the supreme sacrifice of Dr. Shyama Prasad Mukherjee.

Today’s judgement underlines that the Letter of Accession signed by Maharaja Hari Singh in 1947-48 was final, valid and irrevocable. Jammu and Kashmir has always been and will always be an integral part of India.

Due to some political misunderstandings, the then political leadership had given a special status to Jammu and Kashmir through Article 370. The Parliament of India had watered down this Article. But still there were some questions due to the pendency of this case. They have been cleared after today’s verdict.

We are confident that the speedy development in Jammu and Kashmir will continue to grow at this pace.

Now the only unfinished agenda in Jammu and Kashmir is the liberation of Pak-Occupied-Kashmir from the clutches of Pakistan. We are confident that a strong India and a determined Government will be able to free the POK soon.

பாரதியின் வாக்கில் சனாதனம்!

bharathiar - 2026

கட்டுரை: பத்மன்

“சனாதனம்” – இன்று பலர் வாயில் விழுந்து சங்கடப்படுகின்ற சொல்லாக மாறிவிட்டது. இதில் தெளிவு கிடைக்க, மகாகவி பாரதியின் வாக்கினிலே சனாதனம் பற்றிக் கூறப்பட்டுள்ள கருத்துகளைக் காண்போம். “மகாளி கண்ணுற்றாள் ஆகாவென்று எழுந்ததுபார் யுகப்புரட்சி!” என்று ரஷ்யப் புரட்சியை வாழ்த்தியதன் மூலம், தமிழுக்குப் புரட்சி என்ற புதுச் சொல்லைத் தந்த புதுமையாளர் பாரதி. அதேநேரத்தில் பழம் பெருமையையும் போற்றுபவர். அதனால்தான் “பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர், இந்நினைவு அகற்றாதீர்” என்று நமக்கு அன்புக் கட்டளையிட்டார். ஆனால், அந்த நினைவை அகற்றத்தான் பல தீய சக்திகள் இன்று போர் தொடுக்கின்றன.

சனாதனம் என்ற சொல்லுக்கு தொன்றுதொட்டு வருகின்ற நன்மரபு என்று பொருள். அது நமக்கு வழிகாட்டும் வெளிச்சம். சனாதனத்தில் தவறில்லை. ஆயினும், அதைப் பின்பற்றும் சிலரிடம் தவறு இருக்கிறது, அதனைத் திருத்த வேண்டுமே தவிர, சனாதனத்தையே ஒழிக்க நினைப்பது, வேர்களை வெட்டத் துடிக்கும் மூடத்தனத்தின் மணிமகுடம். உடலிலே ஓர் நோவு ஏற்பட்டுவிட்டது என்பதற்காக உடலையே வெட்டி எறிந்துவிட முடியுமா? நோயைத்தானே விரட்ட வேண்டும்! எலி புகுந்துவிட்டது என்பதற்காக வீட்டைக் கொளுத்துவார்களா?

எது சனாதனம்? “ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அன்னியர் வந்து புகலென்ன நீதி, ஒருதாயின் வயிற்றில் பிறந்தோர் தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ?” என்றார் பாரதியார். “உயர் ஜென்மம் இத்தேசத்தில் எய்தினராயின் வேதியராயினும் ஒன்றே, அன்றி வேறு குலத்தினர் ஆயினும் ஒன்றே” என்றும் பாடியுள்ளார். இந்தச் சகோதர மனப்பான்மையைக் கொடுத்திருப்பது சனாதனம். “ஹிமாலயம் சமாரப்ய யாவதிந்து சரோவரம் யம் தேவம் நிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே” என்கிறது ரிக் வேதம். இதனையே “வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்” என்று புறநானூற்றின் வரிகள், பாரத நாட்டின் வடக்குத் தெற்கு எல்லைகளாக வகுத்துக் கூறுகின்றன. இவற்றை அடியொற்றி காலச்சூழலுக்குத் தகுந்த வண்ணம் “சேதமில்லாத ஹிந்துஸ்தானம் இதை தெய்வம் என்று கும்பிடடி பாப்பா” என்றும்,. “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்றும் பாடினார் மகாகவி. இவ்விதம் தாய்நாட்டைத் தெய்வமாகப் போற்றுதல் சனாதனம். நாட்டைப் போற்றுவதையே மதத்தின் முதல் அடையாளமாகக் கொண்டிருப்பது நம் சனாதனம். ஆகையால்தான் பாரத மாதா என்கிறோம். தமிழ்த் தாய் என்று மொழியைத் தாய்க் கடவுளாகக் காண்பதும் இந்தச் சனாதனக் கண்ணோட்டமே.

சாதியை நம் சனாதனம் போதிக்கவில்லை. அனைவரும், அனைத்துமே ஆண்டவனின் அம்சம் என்பதே நம் சனாதனம். இதைத்தான் “காக்கை குருவி எங்கள் சாதி நீள்கடலும் வானும் எங்கள் கூட்டம் நோக்குமிடமெல்லாம் நாமின்றி வேறில்லை நோக்க நோக்கக் களியாட்டம்” என்றும், “யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் தீது நன்மையெல்லாம் உன் தெய்வ லீலையன்றோ” என்றும் மகாகவி பாடினார். காக்கை சிறகினில்கூட நந்தலாலாவின் கரிய நிறத்தைக் கண்டார். “காண்பதெல்லாம் கடவுள்” என்ற சனாதனக் கருத்தை உள்வாங்கியதன் வெளிப்பாடே இந்த வைர வரிகள்.

நந்தனாரைச் சாதி பார்த்து பிரித்தது சமூகக் கொடுமை. அவரையே நாயன்மாராக உயர்த்தி வணங்குவதே நம் சனாதனம். பிராமணர் என்பது பிறப்பின் அடிப்படையில் அமைந்த சாதி அல்ல, அடையக்கூடிய தகுதி நிலை என்பதுதான் சனாதனம். இதை நாற்குலம், பிராமணன், ஜாதிபேத வினோதங்கள் ஆகிய கட்டுரைகளில் விவரித்துள்ளார் மகாகவி பாரதியார். பிராமணன் யார் என்ற கட்டுரையில் “வஜ்ர ஸூசி” என்ற உபநிஷதத்தில் பிராமணன் யார் என்று விளக்கப்பட்டிருப்பதை இவ்விதம் விண்டுரைக்கிறார்: “உயிராலோ, உடம்பாலோ, பிறப்பாலோ, அறிவாலோ, செய்கையாலோ, தர்மகுணத்தினாலோ ஒருவன் பிராமணன் ஆகிவிட மாட்டான். இரண்டற்றதும், உள்ளும் புறமுமாய் நிறைந்திருப்பதும் அனுபவத்தால் உணரக்கூடியதுமான இறுதிப் பொருளை நேருக்கு நேராக அறிந்து, காம, குரோத, லோப குற்றங்கள் நீங்கியவனாக வாழ்கிறோனோ அவனே பிராமணன். பிராமணன் ஆக நினைப்போர் மேற்சொன்ன தகுதிகளை அடைய முயற்சி செய்க” என்று கூறியுள்ளார் பாரதியார். இதை நடைமுறையிலும் சாதிக்கத்தான் கனகலிங்கத்துக்குப் பூணூல் போட்டு வேத உபதேசம் செய்தார்.

தத்வமஸி என்பது வேத மகா வாக்கியம், இதன் உட்பொருளை, தனது “புதிய ஆத்திசூடி”யில் “தெய்வம் நீ என்று உணர்” என எளிமையாகவும் தெளிவாகவும் பாரதியார் எடுத்துரைத்துள்ளார்.. “அறிவே தெய்வம்” என்ற கவிதையிலே, “சுத்த அறிவே சிவமென்று கூறும் சுருதிகள் கேளீரோ. பல பித்த மதங்களிலே தடுமாறி பெருமை அழிவீரோ?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதே கவிதையில், “வேடம் பல்கோடி ஓர் உண்மைக்கு உளவென்று வேதம் புகன்றிடுமே ஆங்கோர் வேடத்தை உண்மையென நீர் கொள்வீரென வேதம் அறிகிலதே” என்றும் பாடியிருப்பார். “ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி” என்கிறது ரிக் வேதக் கருத்தின் விளக்கம் இந்தக் கவிதை வரிகள்.

என் கடவுளைத்தான் நீ வணங்க வேண்டும் என்று சனாதனம் சொல்வதில்லை, வழிபாட்டுச் சுதந்திரம் உனக்கு உண்டு, ஆனால் அதற்காகப் பிறர் நம்பிக்கையைப் பழிக்காதே என்பதுதான் சனாதனம் காட்டுகின்ற வழி. இதை, “யாரைத் தொழுவது” என்ற தலைப்பிலான கட்டுரையில் பாரதியார் விளக்கியுள்ளார். “பல தேவராக வணங்காமல் ஒரே மூர்த்தியாய் உபாசனை செய்ய ஹிந்து மதம் இடம் கொடுக்கிறது. சித்தத்தை ஒருமுகப்படுத்த இந்த பக்தி எளிய வழி- ஆனால் இதர தெய்வங்களை விஷயம் தெரியாமல் பழித்தால் வேத விரோதம்” என்கிறார். ஆனால், இதர தெய்வங்களைப் பழிக்கத்தான் அன்னிய மதங்கள் பெரும்பாலும் வலியுறுத்துகின்றன. அதற்கு அடிவருடிகளாக இருப்பவர்கள் கூறுவதுதான் சனாதன ஒழிப்பு.

“இனி” என்ற தலைப்பிலான கட்டுரையில் கோவில் எதற்காக என்பதற்கும் பாரதியார் விளக்கம் கொடுத்துள்ளார். “கடவுள் எங்கும் இருக்கிறாரே அவரை ஏன் ஓரிடத்தில் கூடித் தொழ வேண்டும் என்றால் ஜனங்களிடம் ஒற்றுமை ஏற்படுவதற்காக. கவனி! அண்ட பகிரண்டங்கள் எல்லாவற்றையும் உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடரே நம்மைச் சூழும் அநந்த கோடி ஜீவராசிகளாக நின்று சலிக்கிறது (இயங்குகிறது). இதுதான் வேதத்தின் கடைசியான கருத்து – ‘தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்’ என்பது முன்னோர் கொள்கை. எல்லாம் ஓர் உயிர். ஒன்றுகூடிக் கடவுளை வணங்கப் போகுமிடத்து, மனிதரின் மனங்கள் ஒருமைப்பட்டு, தமக்குள் இருக்கும் ஆத்ம ஒருமையை அவர்கள் தெரிந்துகொள்ள இடம் உண்டாகுமென்று கருதி முன்னோர் கோவில் வகுத்தார்கள். ஆயினும், கல்லில் மாத்திரம் தெய்வம் இருக்கிறது என்று நம்பி நம்மைச் சூழ்ந்திருக்கும் ஜனங்களிடம் தெய்வம் இல்லை என்று நம்பலாமா?

“கவனி! நல்ல பச்சைத் தமிழில் சொல்கிறேன். ஆணாகிய நீ கும்பிடுகிற தெய்வங்களில் பெண் தெய்வம் எல்லாம் உன் தாய், மனைவி, சகோதரி, மகள் முதலிய பெண்களிடத்தே வெளிப்படாமல் (வெளியே தெரியாமல்) இதுவரை மறைந்து நிற்கும் பராசக்தியின் மகிமையைக் குறிப்பிடுகின்றன. அம்மன் தாய். அவளைப் போலவே நம்முடைய பெண்கள், மனைவி, சகோதரி, மாதா முதலியோர் ஒளிவீச நாம் பார்க்க வேண்டும் என்பது குறிப்பு.

ஆண் தெய்வமெல்லாம் நீ, உன் பிதா, உன் சகோதரர், உன் மகன், உன்னைச் சேர்ந்த ஆண் மக்கள் அடைய வேண்டிய நிலைமையைக் குறிப்பிடுகின்றன. சிவன் நீ, சக்தி உன் மனைவி; விஷ்ணு நீ, லக்ஷ்மி உன் மனைவி; பிரம்மா நீ, ஸரஸ்வதி உன் மனைவி. இதைக் காட்டி மிருக நிலையில் இருந்து மனிதரைத் தேவ நிலையில் கொண்டுசேர்க்கும் பொருட்டாக ஏற்பட்ட தேவப் பள்ளிக்கூடங்களே கோவில்களாம்” என்கிறார். இதுதான் கோவிலை உருவாக்கிய நம் முன்னோர்களின் சனாதன தர்மம். ஆயினும் சனாதன எதிர்ப்பாளர்களைப் போலவே அதன் ஆதரவாளர்களும் இந்த உட்கருத்தை உணர்ந்துகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது!

பாரத ஜாதி என்ற கட்டுரையில் “கிறிஸ்தவர்களோ, முகமதியர்களோ, பார்ஸிக்களோ எங்கிருந்து வந்து எந்த இஷ்ட தெய்வத்தைக் கொண்டாடினாலும் பாரத பூமியிலே பிறந்து வளர்ந்து இதையே சரணாகக் கொண்ட மனிதர்களை பாரத ஜாதி என்று கணக்கிட வேண்டும். இது பிரிக்க முடியாதது அழிவில்லாதது இதற்கு ஆதாரமும் மூலபலமும் யாதெனில் ஆரிய சம்பத்து. அதாவது நமது மூதாதையரின் அறிவும் அந்த அறிவின் பலன்களும்” என்கிறார் மகாகவி பாரதியார். இவ்வாறு இந்த நாட்டைப் போற்றுகின்ற அனைவரையும் அரவணைக்கச் சொல்கிறது நமது சனாதனம்.

எவை எல்லாம் ஆரிய சம்பத்து? “நமது வேதம், நமது சாஸ்திரம், நமது ஜனக்கட்டு (மக்கள் சமுதாயம்), நமது பாஷைகள், நமது சிற்பம், கவிதை, சங்கீதம், நாட்டியம், நமது தொழில் முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், இராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குள், ஆண்டாள் திருமொழி ஆகிய அனைத்தின் பொதுப் பெயர் ஆரிய சம்பத்து” என்றும் விளக்கம் அளித்துள்ளார். இதே கட்டுரையில், “ஆரிய சம்பத்திலே துருப்பிடிக்க இடம் கொடுத்தால் பாரத ஜாதியை செல் அரித்துவிடும்” என்றும் எச்சரித்துள்ளார். அவ்வாறு செல் அரிக்க வேண்டும் என்று எண்ணும் நச்சுக் கருத்தாளர்கள் நடத்துவதுதான் சனாதன எதிர்ப்பு மாநாடு.

ஆர்ய என்பது இனத்தைக் குறிப்பதல்ல. உயர்ந்த, மேலான என்ற பொருள் கொண்டது என்பதைத் தெளிவாக அறிந்தவர் பாரதி. ஆகையால்தான் அச்சம் கொண்டவன் ஆரியனல்லன், ஆரிய நாட்டில் நாரியரும் நரசூரியரும் சொல்லும் வீரிய மந்திரம் வந்தே மாதரம் என்றெல்லாம் பாடியுள்ளார். பாரதி கூறும் ஆரிய சம்பத்தில் ஒன்று பகவத் கீதை. அதை வன்முறை நூல் என்கிறார்கள் சனாதன எதிர்ப்பாளர்கள். பகவத் கீதைக்கு பாரதி எளிய விளக்கம் அளித்துள்ளார். அதன் முன்னுரையில், “துரியோதனாதிகள் பாவச் சிந்தனைகள், அர்ஜுனன் ஜீவாத்மா, கிருஷ்ணர் பரமாத்மா- பாவச் சிந்தனைகளைக் கொன்றொழிக்குமாறு ஜீவாத்மாவுக்குப் பரமாத்மா போதிப்பதே கீதை. துறவு மாத்திரமே மோக்ஷத்தக்கு வழியில்லை இல்லறமும் ஏற்றதே என்பதே கீதையின் சாராம்சம். வீட்டில் இருந்தபடியே உறவினர்களுக்கும் பிறருக்கும் உபகாரம் செய்தபடி, மனுஷ்ய இன்பங்களை நேர்மையாக அனுபவித்துக்கொண்டு, கடவுளை உபாசனை செய்து ஜீவன் முக்தராய் வாழ்வதை கீதை போதிக்கிறது. ஸர்வமிதம் பிரஹ்ம – உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற வேதத்தின் கொள்கையை நிறுவுவதே கீதை” என்று பகவத் கீதையின் நோக்கத்தை பாரதியார் விவரித்துளார். எல்லாம் கடவுள்மயம் என்ற இந்தக் கோட்பாடுதான் சனாதனம்.

தத்துவம் என்ற கட்டுரையில் கணபதி என்ற துணைத்தலைப்பின் கீழ் பாரதி கூறியிருப்பதை ஒவ்வொரு சனாதனியும் நினைவில் நிறுத்த வேண்டும்: ”ஒன்றே மெய்ப்பொருள்; அதனை ரிஷிகள் பலவிதமாகச் சொல்லினர் என்று வேதமே சொல்லுகிறது கடவுளின் பல குணங்களையும் சக்திகளையும் பலமூர்த்திகளாக்கி வேதம் உபாஸனை செய்கிறது. வேதகாலம் முதல் இன்று வரை ஹிந்துக்கள் தம் தெய்வங்களை மாற்றவில்லை. வேதம் எப்போது தொடங்கிற்றோ, யாருக்கும் தெரியாது. கிரேக்க, எகிப்திய, பாபிலோனிய தெய்வங்களெல்லாம் காலத்தில் மறைந்து போயின. ஹிந்துக்களுடைய தெய்வங்கள் அழியமாட்டா. இவை எப்போதும் உள்ளன” என்றுள்ளார் தீர்க்கதரிசியான மகாகவி பாரதியார். ஆகையால் சனாதனத்தை ஒழிக்க நினைப்பவர்கள்தான் ஒழிந்து போவார்கள் என்பதை திடப்படுத்திக் கொள்வோம்.

பரோபகார்த்தம் இதம் சரீரம் (பிறருக்கு உதவவே இவ்வுடல்) என்ற வேத வாக்கை “ஊருக்கு உழைத்திடல் யோகம்” என்று மொழிந்தவர் பாரதி. “யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா” (எங்கே பெண்கள் போற்றப்படுகிறார்களோ அங்கே தெய்வங்கள் மகிழ்ச்சியுடன் விளங்கும்) என்ற மனுஸ்மிருதியின் அடியொற்றி, “பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா” என்று ஆனந்தக் கூத்தாடியவர் பாரதி. சனாதனத்தின் அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை அதாவது ஆண்-பெண் சமத்துவத்தை, “ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே” என்று வாழ்த்தியவர் பாரதி. “சர்வம் இதம் பிரஹ்ம” என்ற வேதவாக்கை, “எல்லோரும் ஓர் நிறை” என்று ஓங்கி உரைத்தவர் பாரதி. இதுபோன்ற உயர்ந்த கருத்துகளைக் கூறுகின்ற நாடு பாரதம் என்பதால்தான் “பாரத நாடு பார்க்கெல்லாம் திலகம், நீரதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர்” என்றும் கட்டளையிட்டுள்ளார்.

பாரத நாட்டின் உன்னதப் பாரம்பரியமான சனாதனத்தை மகாகவி பாரதி, தமது பல்வேறு கவிதைகளாலும், கட்டுரைகளாலும் விவரித்துள்ளார். அனைவருக்குள்ளும் தெய்வத்தைக் காணுதல், சாதி பேதம், வர்க்க பேதம், பாலினப் பாகுபாடு இவற்றைக் கடந்து அன்பு செலுத்துதல், இயற்கையைப் போற்றுதல், அனைத்து மனிதர்களையும் தெய்வ நிலைக்கு உயர்த்துதல் – இதுதான் சனாதனம். இந்த சனாதனத்தைப் போற்றுவோம். இதை வேரறுப்போம் என்றெழும் சூளுரைகளைச் சுட்டெரிப்போம். அதுமட்டுமல்ல, “எல்லோரும் அமரநிலை எய்தும் வழிமுறையை இந்தியா உலகுக்கு அளிக்கும்” என்ற பாரதியின் வாக்கை நனவாக்கும் வகையில் நமது சனாதனத்தின் மாண்பை உலக நாடுகளிலும் மலரச் செய்வோம்.

ஜெய் ஹிந்த்! வந்தே மாதரம்! பாரத அன்னை வெல்க!

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள்; தரிசனம் ஒரு மணி நேரம் அதிகரிப்பு!

sabarimalai nadai open - 2026
#image_title

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ள நிலையில், தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் மண்டல காலம் நடந்து வரும் நிலையில், பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு வாயிலாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

நேர அளவின்படி முன்பதிவு வழங்கியதாக தேவசம்போர்டு கூறுகிறது. ஆனால், மூன்று நாட்களாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நிலக்கல்லுக்கு, 10 கி.மீ., முன்பே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அங்கு இரண்டு மணி நேரம் காத்திருந்த பின் பம்பை வருகின்றனர். பம்பையிலும் நான்கு மணி நேரம் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.

அதன் பின், அப்பாச்சிமேடு, மரகூட்டம் பகுதியில் உள்ள ஷெட்டுகளில் தடுத்து நிறுத்தி, சரங்குத்தி பாதையில் ஆறு கியூ காம்ப்ளக்ஸ் கட்டடங்களில் பல மணி நேரம் காக்க வைக்கப்பட்ட பின், சன்னிதானம் செல்ல முடிகிறது. இதனால் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதைத்தொடர்ந்து, தரிசன நேரத்தை அதிகரிக்க முடியுமா என்று தந்திரியிடம் கேட்டு கூறும்படி, தேவசம்போர்டுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. முதலில் மறுப்பு தெரிவித்த தந்திரி மகேஷ் மோகனரரு, பின், தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேச்சு நடத்திய பின், மாலையில் ஒரு மணி நேரம் கூடுதலாக நடை திறப்பதற்கு ஒப்புதல் அளித்தார்.

இதன்படி, மதியம், 1:00 மணிக்கு அடைக்கப்படும் நடை, நேற்று முதல் மாலை, 4:00 மணிக்கு பதிலாக, 3:00 மணிக்கு திறக்கப்பட்டது. இதன் வாயிலாக தினமும், 18 மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.