Home Blog Page 5628

பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டு தெரிவித்த பெண்ணுக்கு மரண தண்டனை!

girl attack image - 2026

லாகூர்:
பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டைத் தெரிவித்த பெண்ணுக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் ரஜன்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஷுமைலா (19) என்பவருக்கு, அவரது உறவினர் கலீல் அகமது என்பவருடன் தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது ஆனால் ஒரு கட்டத்தில், கலீல் அகமது தன்னை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார். இந்த விவகாரம் கிராம பஞ்சாயத்துக்கு வந்தபோது, பஞ்சாயத்து செய்த பெரியவர்கள் ஷுமைலாவின் புகாரை ஏற்க மறுத்து, அவருக்கு மரண தண்டனை விதித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஷுமைலா அந்தக் கிராமத்தில் இருந்து தப்பி, போலீஸ் உதவியை நாடினார். ‘‘நான் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கலீல் அகமது துப்பாக்கி முனையில் என்னை பலாத்காரம் செய்ததால், என்னால் கூச்சலிட முடியவில்லை. ஆனால் பஞ்சாயத்தாரோ, நான் விரும்பித்தான் அவருடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மரண தண்டனை வழங்கி உள்ளனர்’’ என்று புகார் செய்தார்.

இதை அடுத்து, போலீசார் பஞ்சாயத்தார் மீது வழக்குப் பதிவு செய்து, ஷுமைலாவை அரசு மகளிர் இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

மோரா புயல் சின்னம்: 2ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

pampan bridge - 2026

சென்னை :

வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, மோரா புயல் சின்னமாக உருவாகியுள்ளது. இந்தப் புயல் சின்னம் நாளை கரையைக் கடக்க உள்ளது.நாளை தென்மேற்குப் பருவமழை துவங்க உள்ளது. இந்த நிலையில் புயல் சின்னம் உருவாகியுள்ளது.

இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடலூர், நாகை, புதுச்சேரி, எண்ணூர், பாம்பன் ஆகிய துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்தப் புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் தட்பவெப்ப நிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மதுரவாயல் சாலை திட்டம் வண்டலூர் வரை நீட்டிப்பு

maduravoyal flyover - 2026

சென்னைத் துறைமுகம் -மதுரவாயல் வரையிலான பறக்கும் சாலைத் திட்டத்தை மத்திய அரசு வண்டலூர் வரை நீடித்து அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து சென்னை தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட அதிகாரி சுரேந்திரநாத் கூறுகையில், மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் விரைவில் தொடங்கப்படும். அந்த திட்டத்துக்கு மத்திய- மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு சரக்கு சேவை வசதிகளுக்காகவும் இந்த திட்டம் மேலும் 10 கி.மீட்டர் தூரம் வண்டலூர் வரை நீட்டிக்கப்பட உள்ளது. வண்டலூர் வெளி வட்ட சாலையில் நசரத்பேட்டையில் இந்த திட்டம் இணைக்கப்படுகிறது. இதற்காக அனைத்து ஆய்வு பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

ராட்சத தூண்கள், வழித்தடம் அமைக்க ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டு அவை பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டம் வண்டலூர் வரை நீட்டிக்கப்படுவதால் சரக்கு லாரிகளின் பயண நேரம் வெகுவாக குறையும். சரக்கு லாரிகள் எளிதில் துறைமுகம் சென்றடையும் என்று தெரிவித்துள்ளார்

கேரளாவில் மாட்டைக் கொன்று இறைச்சி விநியோகம்: ராகுல் கண்டனம்

rahul gandhi - 2026

புது தில்லி:

கேரளாவில் மாட்டைக் கொன்று இறைச்சி விநியோகம் செய்த காங்கிரஸ்காரர்களுக்கு ட்விட்டரில் கடுமையாகக் கண்டனம் தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதை தடை செய்து சட்டத் திருத்தம் கொண்டு வந்தது மத்திய அரசு. விவசாயக் காரணங்களுக்காக மட்டுமே மாடுகளை விற்க, வாங்க சட்டத்தில் புதிய விதிமுறைகளை கொண்டு வந்தது மத்திய அரசு. இந்தத் தடை அறிவிப்பு நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறைச்சி விற்பனையாளர்கள், தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிவிடும் என அச்சம் தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்களும் இந்த தடை அறிவிப்புக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதனிடையே நேற்று கேரளாவில் பல்வேறு இடங்களில் மாட்டுக் கறி திருவிழா நடைபெற்றது. இதை தொடர்ந்து கன்னூரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளைஞர் பிரிவினர் மக்களின் கண் முன்பு மாட்டைக் கொன்று அதன் இறைச்சியை விநியோகித்தனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு ட்விட்டரில் கடுமையான கண்டங்களை முன்வைத்துள்ளார் ராகுல் காந்தி. “சிந்தனையற்ற, காட்டுமிராண்டித்தனமான இந்தச் செயலை காங்கிரஸும் நானும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று கோபப்பட்டிருக்கிறார் அவர்.

 

திருவாரூர் ஆழித் தேரோட்டம் தொடங்கியது: விநாயகர் தேர் சாய்ந்ததால் பரபரப்பு

thiruvarur aazi ther - 2026

திருவாரூர்:
புகழ் பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து பக்திப் பெருக்குடன் இழுத்தனர்.

திருவாரூர் தியாகராஜர் ஸ்வாமி கோயிலில் ஆழித் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. புகழ் பெற்ற திருவாரூர் தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவாரூரில் குவிந்தனர். ஆரூரா…. தியாகேசா… என்று முழக்கமிட்டபடி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கீழ வீதியில் இருந்து தொடங்கிய ஆழித் தேரோட்டம் 4 மாடவீதிகளில் வலம் வருகிறது.

இன்று காலை தமிழக அமைச்சர் காமராஜ், ஆட்சியர் நிர்மல்ராஜ் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ் விழாவில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் பங்கேற்றார். 92 அடி கொண்ட ஆழித்தேரோட்டம் ஆசியாவிலேயே மிக உயரமானதாகும்.

முன்னதாக, இந்த ஆழித் தேரோட்டத்தை ஒட்டி, நேற்று விநாயகர், சுப்ரமணியர் தேரோட்டம் நடந்தது. விநாயகர் தேரின் மேல் அலங்கரிக்கப்பட்ட கட்டுமானப் பகுதி சரிந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலை 5:30க்கு நிலையில் இருந்து புறப்பட்ட விநாயகர் தேர், கீழ வீதி, தெற்கு வீதி வழியாக வலம் வந்து, மேல வீதிக்குத் திரும்பியது. அப்போது, அலங்கரிக்கப்பட்ட தேரின் மேல் கட்டுமானப் பகுதி லேசாக தேரின் வலதுபுறம் சாய்ந்தது. உடனடியாக தேர் நிறுத்தப்பட்டு, இரும்புக்கம்பி மற்றும் கயிற்றைக் கொண்டு சரிந்த கட்டுமானப் பகுதி இழுத்துக் கட்டப்பட்டது. இரண்டு மணி நேர தாமதத்துக்குப் பின் மீண்டும் விநாயகர் தேர் வடம் பிடிக்கப்பட்டு முற்பகல் 10:45க்கு நிலைக்கு அருகில் நிறுத்தப்பட்டது.

ஆழித் தேர் புனரமைக்கப்பட்ட போது, விநாயகர் தேர் புதுப்பிக்கப்படவில்லை. விநாயகர் தேர் பழமையானது என்பதால் தேரில் விரிசல் ஏற்பட்டு கட்டுமானப் பணி சாய்ந்துள்ளது என பக்தர்கள் தெரிவித்தனர். விநாயகர் தேர் சாய்ந்ததால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

“என்ன கேட்டது கிடைச்சுதா? -பெரியவா (பிரசாதப் பையை தொலைத்த பெண்மணியிடம்)

77134 693849987312454 1034041963 n 1 - 2026

“என்ன கேட்டது கிடைச்சுதா? -பெரியவா (பிரசாதப் பையை தொலைத்த
பெண்மணியிடம்) (யாருக்கு
எது கிடைக்கணும்னு இருக்கோ, அதை
என்னதான் முயற்சி பண்ணினாலும் தடுக்க முடியாது.
கிடைக்காதுன்னு இருக்கிறதை தக்கவைச்சுக்கவும்
முடியாது. இதே மாதிரி ஒரு சம்பவம்)


கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-21-04-2016தேதியிட்ட குமுதம் பக்தி
(பெரிய கட்டுரை -ஒரு பகுதி)

ஒரு சமயம் ரொம்ப தொலைவுல இருக்கிற ஊர்ல
இருந்து வசதி உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவா சிலர்,
மகாபெரியவாளை தரிசனம் பண்ண வந்திருந்தா.
ஆசிர்வாதம் பண்ணி கற்கண்டும்,குங்குமமும் தந்த
மகாபெரியவா அவாகிட்டே ஒரு விஷயத்தைச்
சொன்னார்.

“நீங்க இங்கேர்ந்து புறப்படறச்சே வழியில் யாராவது
நோயாளியைப் பார்த்தேன்னா,அவாளுக்கு உங்களால்
முடிஞ்ச உபகாரத்தைப் பண்ணிட்டுப் போங்கே!” அப்படின்னார்.

“சரின்னு தலையை ஆட்டிட்டு வழக்கம்போல
பிரசாதத்தை வாங்கிண்டு புறப்பட்டா எல்லாரும்.
மடத்தோட வாசலைத் தாண்டறதுக்குள்ளே,ஆசார்யா சொன்னது மறந்துபோயிடுத்து
அவாளுக்கு. அதனால யாருக்கும் எந்த உதவியும் பண்ணாம ரயிலேறி நேரா ஊருக்குப்
போய்ச்சேர்ந்துட்டா.

அங்கே போனதும், பெரியவா தந்த பிரசாத குங்குமத்தை
எடுத்து சுவாமி மாடத்துல வைக்கலாம்னு பையைத்
தேடினப்பதான் தெரிஞ்சுது, பையையே எங்கேயோ
தொலைச்சுட்டோம்கறது.அதுல பிரசாதம் மட்டுமில்லாம
கிட்டத்தட்ட ரெண்டாயிரம் ரூபாய் பணமும் வைச்சிருக்கா
அவா. அது அந்தக் காலத்துல ரொம்ப பெரிய தொகை.

அப்போதான் யோசிச்சிருக்கா. அடடா,பரமாசார்யா சொன்னபடி உதவி பண்ணாம வந்துட்டோமே,
அதான் இப்படியெல்லாம் நடந்திருக்குன்னு. சரி அவசரத்துல
மறந்துட்டோம். தெரியாம பண்ணிட்டோம்னு பரமாசார்யாகிட்டேயே மனசார வேண்டிப்போம்.
அவரே பையைத் திரும்ப கிடைக்க வைப்பார், அப்படின்னு தீர்மானம் செஞ்சா. அதே
மாதிரி வேண்டிண்டா.

ரெண்டு மூணு நாள் ஆச்சு. தபால்ல ஒரு கவர் வந்தது,
அவா ஆத்து முகவரிக்கு. என்னவா இருக்கும்னு
பிரிச்சுப் பார்த்தா,உள்ளே அவா தொலைச்ச பை இருந்தது
அவசர அவசரமா பணம் இருக்கான்னு பார்க்க, பையைக்
குடைஞ்சா. ஊஹூம், உள்ளே மகாபெரியவா தந்த பிரசாதமும் கூடவே ஒரு கடுதாசியும்
மட்டும் இருந்தது.

“உங்கள் பையை வீதியில் பார்த்தேன்.அதில் உங்கள் முகவரி அட்டையும்
இருந்தது.உரியவரிடம் சேர்த்து விடலாம் என்றுதான் எடுத்தேன்.ஆனால் திடீரென்று
என் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக
உங்கள் பையில் இருந்த பணத்தை எடுத்துக்கொள்ளவேண்டியதாகிவிட்டது
மன்னிக்கவும்.பையில் இருந்த பிரசாதத்தை இத்துடன்
அனுப்பி இருக்கிறேன்!” கடிதத்தைப் படித்தார்கள்.

ஆசார்யா குடுத்த பிரசாதம் திரும்பக் கிடைச்சுது
சந்தோஷமா இருந்தாலும், பணம் திரும்பக்
கிடைக்கலையேங்கற வருத்தம் அவாளுக்குள்ளே
இருந்தது.கொஞ்சநாள் கழிச்சு மறுபடியும் ஆசார்யாளை
தரிசனம் பண்ண வந்தா அந்தக் குடும்பத்தினர். அவாளோட
முறை வந்ததும், பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினா.

“என்ன கேட்டது கிடைச்சுதா? அப்படின்னு அந்தக் குடும்பத்
தலைவியைப் பார்த்து கேட்டார் மகாபெரியவா.

“இல்லை பெரியவா..பையும் பிரசாதமும் மட்டும்தான் கிடைச்சுது. பணம் போனது
போனதுதான்!” அவசர அவசரமா சொன்னார் அவாள்ல ஒருத்தர்.

“இல்லையே.பணத்தைப்பத்தி கேட்கலையே..பிரசாதப் பை
கிடைச்சா போதும். பணம் உதவி பண்ணினதா இருந்துட்டுப்
போகட்டும்னுதானே வேண்டிண்டா?” பெரியவா சொல்லி முடிக்கறதுக்கு முன்னாலயே,
“ஆமாம்.நான் அப்படித்தான் வேண்டிண்டேன்.பெரியவாளோட ஆணைப்படி யாருக்கோ
உதவினதா இருக்கட்டும்னு நினைச்சுண்டேன்”
தழுதழுக்கச் சொன்னா, அந்தப் பெண்மணி.

ஏழை நோயாளியோட சிகிச்சைக்கு இவாளோட பணம்
போய்ச்சேரணும்கறதை முன்கூட்டியே எப்படித்
தீர்மானிச்சார்? பிரசாதம் திரும்பக் கிடைக்கணும்னு
வேண்டிண்டவாளுக்கு அதை எப்படி திருப்பிக் கிடைக்க
வைச்சார்? இதெல்லாம் பரமாசார்யாளுக்கு மட்டுமே
தெரிஞ்ச பரம ரகசியம்.

டாஸ்மாக்போராட்டத்தை பயனுள்ளதாக்கிய பெண்கள்

tasmak - 2026

மேலப்பாவூரில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை 25 நாட்களுக்குள் நிரந்தரமாக
மூடப்படும் என்று அளித்த வாக்குறுதி படி கடை மூடப்படாததால் பொதுமக்கள்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாவூர்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூரில் டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ளது.
ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த கடையில் சுற்று வட்டார பகுதியில்
இருந்து ஏராளமானோர் வந்திருந்து மது குடித்து வருகிறார்களாம். தற்போது
பாவூர்சத்திரம் பகுதியில் பெரும்பாலான மதுக்கடைகள் பொதுமக்களின் போராட்டத்தால்
மூடப்பட்டு விட்டதால் மேலப்பாவூரில் உள்ள குறிப்பிட்ட மதுகடைக்கு வரும்
குடிமகன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது இதனால்
கடையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே.2ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட
பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தென்காசி தாசில்தார் அனிதா மற்றும்
போலீசார் முன்னி;லையில் 25 நாட்களுக்குள் மதுக்கடை நிரந்தரமாக மூடப்படும் என
எழுத்துப்பூர்வமாக டாஸ்மாக் சூப்பர்வைசர் தங்கராஜ் எழுதி கொடுத்துள்ளார்.
தற்போது 25 நாட்கள் கடந்தும் வாக்குறுதி அளித்தப்படி கடை மூடப்படாததால்
அப்பகுதி மக்கள் திரண்டு வந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள்
பணியும் பாதிக்கக் கூடாது ,அதே சமயம் போராட்டமும் வெற்றி பெற வேண்டும்
என்றெண்ணி பெண்கள் போராட்டக் களத்தில் பீடி சுற்றிக்கொண்டு போராட்டத்தையும்
பயனுள்ளதாக்கினர் இதற்கிடையே மேற்கண்ட கடையை அருகில் உள்ள
சடையப்பபுரத்திற்கு மாற்ற அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். ஆனால் அந்த பகுதி
மக்களும் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்ததால் கடை மாற்றம் செய்யமுடியவில்லை.
எனவே இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று
பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கீழப்பாவூரில் ஓரே நாள் இரவில் 3 இடங்களில் திருட்டு, எஸ்.பி. நேரில் ஆய்வு

sp kpr - 2026

கீழப்பாவூரில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 3 இடங்களில் திருட்டு
நடந்துள்ளது. ரூ.72 ஆயிரம் ரொக்கம் மற்றும் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை
போலீசார் தேடி வருகின்றனர்

கீழப்பாவூர் மெயின்பஜாரை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (72). இவரது தம்பிகள்
நரசிங்கம் (50, சேதுராமசாமி (47) இவர்கள் மூன்று பேரும் சகோதரர்கள் ஒரே
வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர் இவர்கள் வீட்டு
திருமணத்திற்காக வாங்கி வைத்த 30 பவுன் நகை, வெள்ளிப் பாத்திரங்கள், மற்றும்
ரூ.45 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பூஜை அறையில் உள்ள பீரோவில்
வைத்திருந்துள்ளார்கள் சனிக்கிழமை இரவு அனைவரும் தங்களது அறைகளில்
தூங்கிக்கொண்டிருந்துள்ளனர், வீட்டின் மொட்டை மாடி வழியே வீட்டிற்குள் நுழைந்த
கொள்ளையர்கள் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த அறையை வெளிப்பக்கம் பூட்டி விட்டு
திறந்தே இருந்த பூஜை அறையில் நுழைந்து பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகை, 15
கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.45 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்று
விட்டனர் காலையில் எழுந்து பார்த்த போது நகை, ரொக்கம் திருட்டு போனது கண்டு அதி
ர்ச்சியடைந்த சங்கரநாராயணன் குடும்பத்தினர் பாவூர்சத்திரம் போலீஸில்
புகார் செய்தனர்
மேலும் புதுஅம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லெட்சுமணன் (45) மின்
வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு
குடும்பத்துடன் கோயம்புத்தூருக்கு சென்று இருந்தராம். சனிக்கிழமை இரவு
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க கதவை
உடைந்து உள்ளே பீரோவில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் தங்க
சங்கிலியை திருடிவிட்டு சென்று விட்டனராம்.

இதே போல் சப்பாணி முத்து முதலியார் தெருவில் பாலசுப்பிரமணியன் (59) மகள்
சுமித்ரா. என்பவர் ஹோமியோபதி நடத்தி வருகிறார் சனிக்கிழமை இரவு கிளினீக்கை
பூட்டி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார் காலையில் சென்று பார்த்த போது கிளினீக்கின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே மேஜையில் இருந்த ரூ.7 ஆயிரம் ரொக்கம் மற்றும் அவரது சான்றிதழ்கள் திருடி போய் இருந்தனவாம்.

இது குறித்தும் பாவூர்சத்திரம் போலீஸில் புகார் அளித்துள்ளனர் ஒரே நாள் இரவில் கீழப்பாவூரில்
அடுத்தடுத்து 3 இடங்களில் திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த நெல்லை மாவட்ட எஸ்.பி அருண்சக்தி குமார் கொள்ளை சம்பவம் நடந்த இடங்களை நேரில் பார்வையிட்டார் உடன் ஆலங்குளம் டிஎஸ்பி சங்கு மற்றும் பாவூர்சத்திரம்
சப்-இன்ஸ்பெக்டர் ஹபிபுல்லா மற்றும் காவலர்கள் உடனிருந்தனர் இச் சப்பவங்கள்
குறித்து பாவூர்சத்திரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை எதிரொலி: காஷ்மீரில் பதற்றம்; கடையடைப்பு

 

kashmir curfew stone pelting - 2026

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் நேற்று நடைபெற்ற இரு வேறு துப்பாக்கிச் சண்டையில் 8 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் தளபதி சப்ஸர் பாட் உயிரிழந்தார்.

சப்ஸர் பாட் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரின் தெற்கு, மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் வன்முறைகளை தடுக்கவும் அங்கு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த சிவில் சர்வீஸ் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனந்த்நாக், புல்வாமா, சோபியான் நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

முன்னர், தெற்கு காஷ்மீரில் மறைந்திருந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி புர்ஹான் வானியை கடந்த ஆண்டு ஜூலை 8-ம் தேதி பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து சுட்டுக் கொன்றனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிரிவினைவாத அமைப்புகள் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டன. இதனால் பல மாதங்களாக காஷ்மீரில் வன்முறை நீடித்தது.

புர்ஹான் வானியை அடுத்து ஹிஸ்புல் முஜாஹிதீன் புதிய தளபதியாக சப்சார் அகமது பட் பொறுப்பேற்றார். அவரது தலைமையில் பயங்கரவாதிகள் பல்வேறு சதித் திட்டங்களை கட்டவிழ்த்து விட திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் காஷ்மீரின் டிரால் பகுதியில் உள்ள சொய்மோ கிராமத்தில் சப்சார் உள்பட ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்கள் முகாமிட்டிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து நேற்று முன்தினம் இரவு அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர்.

பாதுகாப்புப் படையினரைக் கண்டதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். நேற்று அதிகாலை வரை நீடித்த இந்த சண்டையின்போது ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி சப்சார் அகமது பட் உள்ளிட்ட 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், பாரமுல்லா மாவட்டத்தில், ராம்பூர் என்ற இடம் அருகே எல்லைக்கு அப்பால் இருந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பயங்கரவாதிகளின் சதித் திட்டத்தை எல்லை பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர். இதில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதனிடையே சப்சார் அகமது பட் கொல்லப்பட்ட தகவல் பரவியதும் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் மற்றும் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கனாபால் உள்பட தெற்கு காஷ்மீரில் 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் கல்வீச்சு சம்பவங்கள் நடை பெற்றன. அவர்களை பாதுகாப்புப் படையினர் விரட்டி அடித்தனர். எனினும் பீதியடைந்த பொதுமக்கள் பலர் அலுவலகங்களில் இருந்து அவசரமாக வீடு திரும்பினர். பள்ளிகளும் முன்கூட்டியே மூடப்பட்டு மாணவர்கள் வீடு திரும்பினர். கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. வதந்தியை தடுப்பதற்கு இந்தப் பகுதிகளில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் நாளை திங்கள்கிழமை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரிவினைவாதிகள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமையன்று முழு வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் காஷ்மீரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மருந்து கொள்முதலில் ரூ.300 கோடி ஊழல்: கேஜ்ரிவால் மீது புதிய புகார்

arvind kejriwal 1 - 2026
புது தில்லி:

தில்லி மாநில அரசில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கபில் மிஸ்ரா. இவர், தில்லி முதல்வர் கேஜ்ரிவால் மீது அடுத்தடுத்து பல்வேறு புகார்களை பகிரங்கமாகக் கூறினார். இதனால் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், சக அமைச்சர் ஒருவரிடம் இருந்து கேஜ்ரிவால் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாகவும் குற்றம்சாட்டினார். இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் தில்லி மாநில அரசு மீது மேலும் சில புகார்களை அவர் கூறினார்.

இது தொடர்பாக கபில் மிஸ்ரா செய்தியாளர்களிடம் பேசும்போது, “தில்லி மாநில அரசின் மருத்துவமனைகளுக்கு மாநில சுகாதாரத்துறை ரூ.300 கோடிக்கு மருந்துகளை கொள்முதல் செய்தது. இவற்றை அரசு மருத்துவமனையின் மருந்தகங்களுக்கு அனுப்பி வைக்காததால் அவை காலாவதியாகி விட்டன. இதேபோல் சுகாதாரத்துறையில் பணி நியமனங்கள், பணியிட மாறுதல் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. இந்த 3 புகார்களின் மீதும் விரைவில் வழக்குப்பதிவு செய்வதற்கான உத்தரவுகளைப் பெறுவேன்” என்றார்.