Home Blog Page 5630

“முக்காலமும் தெரிந்த பெரியவாளால் காப்பாற்றபட்ட அணுக்கத் தொண்டர் ஸ்ரீகண்டன்”.

kanchi periyava - 2026
“முக்காலமும் தெரிந்த பெரியவாளால் காப்பாற்றபட்ட அணுக்கத் தொண்டர்
ஸ்ரீகண்டன்”. (என்னோட நினைவே இருக்காதான்னு நினைச்சேனே,
என்னைப்பத்தி ஞாபகம் வைச்சுண்டது மட்டுமல்லாம, முக்காலமும் தெரிஞ்சு வைச்சுண்டு இப்படிக் காப்பாத்தியிருக்கேளே—ஸ்ரீகண்டன்)

சொன்னவர்-ஸ்ரீகண்டன்.(தொண்டர்)
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-05-11-2015 தேதியிட்ட குமுதம் பக்தி
(பெரிய கட்டுரை -ஒரு பகுதி)

பரமாசார்யா எங்கே போனாலும் அவர் கூடவே ஸ்ரீகண்டனும் போவாராம்.ஒரு சமயம் ஏதோ
காரணத்தால வெளீல போயிருந்த ஸ்ரீகண்டன் மடத்துக்கு வர்றதுக்குள்ளே பெரியவா எங்கேயோ புறப்பட்டுப் போயிட்டாராம்.

‘பெரியவா கூட போகமுடியாம போச்சே… பெரியவா என்னை விட்டுட்டுப் போயிட்டேளே,
எப்பவும் கூடவர்ற நான் இப்போ வரலையே, என்னோட நினைப்பேஉங்களுக்கு கிடையா’தாங்கற
மாதிரி மனசுக்கு தோணினதையெல்லாம் நினைச்சுண்டு மடத்துல ஒரு அறையில் உட்கார்ந்து திருகையில மாவரைச்சுண்டு இருந்தாராம்.

அந்த சமயத்துல மடத்துல இருந்து ஒருத்தர் வேர்க்க விறுவிறுக்க ஒடிவந்து, “நீ என்ன வேலை பண்ணிண்டு இருந்தாலும்,அதை அப்படியே போட்டுட்டு,உடனடியா உன்னைக் கூட்டிண்டு வரச்சொன்னா பெரியவா!” அப்படின்னு சொன்னாராம்.

மாவு படிஞ்சிருக்கற கையை அலம்பிக்கலாம்னு போனவரைக்கூட,”அதெல்லாம் பரவாயில்லை
உடனே வா!”ன்னு வெளியில் அழைச்சுண்டு வந்தாராம் வந்தவர்.

அவா அந்த அறையை விட்டு வெளீல வந்த மறு நிமிஷம், ஸ்ரீகண்டன் உட்கார்ந்துண்டு இருந்த இடத்துக்குப் பக்கத்துல இருந்த தூண் சரிஞ்சு, அந்தக் கட்டடம் அப்படியே நொறுங்கி சாய்ஞ்சுதாம்.ஒரு விநாடி தாமதிச்சிருந்தாலும் என்ன ஆகியிருக்கும்கறதை நினைச்சு ஸ்ரீகண்டன் அப்படியே விக்கிச்சுப்போய் நின்னாராம்.

என்னோட நினைவே இருக்காதான்னு நினைச்சேனே, என்னைப்பத்தி ஞாபகம் வைச்சுண்டது மட்டுமல்லாம, முக்காலமும் தெரிஞ்சு வைச்சுண்டு இப்படிக் காப்பாத்தியிருக்கேளே,பெரியவா என்னை மன்னிக்கணும்னு, அந்த ஞானிமுன்னால படபடக்கப்போய் அவர் நின்னதும், அமைதியா ஒரு புன்னகை மட்டும் பண்ணினாராம் பரமாசார்யா.

17191009 10207817962959127 8598521855278255076 n - 2026

பெரியவா தேடிச் சென்ற பாட்டி !!!

kanchi periyava - 2026

ஒரு அனுஷத்துக்கு மறுநாள் நிறைய பக்தர்கள் தர்சனம் பண்ண வந்தார்கள். அதில் ஒரு வயசான பாட்டி. பெரியவாளை பார்த்து“சர்வேஸ்வரா………..மஹாப்ரபு….” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்.

 

“எப்டி இருக்கான் ஒன் ஸ்வீகாரம்?………”

 

“ஏதோ இருக்கான்………” விட்டேத்தியாக பதில் வந்தது பாட்டியிடமிருந்து.

 

“வயசான காலத்ல ஒனக்கு பிடிப்பே இல்லேன்னியே?………அதான் ஒதவியா இருக்கட்டுமே…ன்னுதான் குடுத்தேன்” முகத்தில் சிரிப்பு!

 

பிடிப்பு இருக்கட்டும்…..ன்னு குடுத்தாராம்! சுற்றி இருந்தவர்கள் முகத்திலும் சிரிப்பு.

 

“சரி………ஒன் ஒடம்பு எப்டி இருக்கு?………”

 

“ஏதோ இருக்கேன்….பெரியவா அனுக்ரகம்…மழை பெஞ்சா, ஆத்துல முழுக்க ஒரேயடியா ஒழுகறது….அதை கொஞ்சம் சரி பண்ணிக் குடுத்தா, தேவலை பெரியவா”

 

என்னது? சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்தனர்! மோக்ஷத்தை தரவல்ல பராசக்தியிடம் எப்படிப் பட்ட விண்ணப்பம்!

 

“இந்த ஊர்ல மழையா ! காஞ்சிபுரந்தான் காஞ்சு போயிருக்கே!…….” மறுபடியும் கிண்டல் சிரிப்பு.

 

“இல்லையே….இப்போ ரெண்டு நாள் முன்னால பெஞ்ச மழைல கூட ஒழுகித்தே!…….”

 

“அப்டியா! சரி ஏற்பாடு பண்றேன்…..” பாட்டி நகர்ந்தாள். இத்தனை உரிமையோடு பெரியவாளிடம் பேசும் அந்த பாட்டி, எட்டு வயசில் திருமணமாகி விதவை ஆனவள். கணவர் வழியில் ஏராளமான சொத்து! ஒரு பெண்ணிடம் இத்தனை சொத்து இருக்க சொந்தக்காரர்கள் விடுவார்களா? அதே சமயம் தன்னிடம் வரவேண்டிய ஜீவன் ஒரு நாயாக இருந்தால் கூட பகவான் விட்டு வைப்பானா?

 

பெண்ணுக்கு விவரம் கொஞ்சம் நன்றாக தெரிந்திருந்ததால், சற்று சுதாரித்துக் கொண்டாள். காஞ்சிபுரத்துக்கு எதேச்சையாக வந்தவள், “தன் சொத்துக்கள் அத்தனையும் காமாக்ஷிக்கு!” என்று சொல்லிவிட்டாள். பெரியவா எவ்வளவோ மறுத்தும், கடைசியில் அந்த பெண்ணின் அன்பான பிடிவாதம் வென்றது. எனவே அவளுக்கு மடத்துக்கு சொந்தமான வீடு ஒன்றை தங்கிக்கொள்ள குடுத்துவிட்டார். அல்லும் பகலும் பெரியவாளை தர்சனம் பண்ணும் பாக்யம் ஒன்றே போதும் என்று பரம த்ருப்தியுடன், பணத்துக்கு துளியும் முக்யத்வம் குடுக்காத ஒரு ஆத்மாவை பெரியவா அல்லும் பகலும் ரக்ஷித்தார்.

 

பாட்டியோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவரிடம் சில பிரமுகர்கள் வந்து ஒரு தட்டில் ஏதே பத்திரிகையை வைத்தார்கள். சிரித்துக் கொண்டிருந்த முகம் சட்டென்று மாறியது…….

 

“என்னது இது?”

 

“காமாக்ஷி அம்மன் ப்ரம்மோத்சவ பத்திரிகை……….”

 

“கலெக்டருக்கு குடுத்தாச்சா?”

 

“குடுத்துட்டோம். பெரியவா”

 

“இவாளுக்கு?” என்று பக்கத்தில் அமர்ந்திருந்த மற்ற ரெண்டு பெரியவாளையும் காட்டி கேட்டார்.

 

“குடுத்தாச்சு. பெரியவா……”

 

“ஓஹோ…சரி. எல்லார்க்கும் குடுத்துட்டு, இவன் மடத்த விட்டு எங்கேயும் போக மாட்டான்….ன்னுட்டு கடேசில போனாப் போறதுன்னு எனக்கும் ஒரு பத்திரிகை கொண்டு வந்தேளாக்கும்?”

 

ருத்ர முகம்!

 

“இல்லை…..அது வந்து……பெரியவா” நிர்வாகிகள் எச்சில் கூட முழுங்க முடியாமல், கால்கள் நடுங்க நின்றனர்.

 

“………கேட்டுக்கோங்கோ! மடத்து சம்ப்ரதாயம்..ன்னு ஒண்ணு இருக்குன்னாவது தெரியுமோ? பத்திரிகை மொதல்ல எங்க தரதுன்னு தெரியுமோல்லியோ? எல்லா சம்பிரதாயத்தையும் மீறி நடந்துண்டா எப்டி? நீ எத்தனை வர்ஷமா இங்க இருக்கே?” குண்டுகளாக துளைத்தன! பெரியவா பத்திரிகையை தொடவே இல்லை! மடத்து நிர்வாகிகள் நடுங்கிப் போய்விட்டனர்.

 

ஆம். தவறுதானே?

 

“எப்டி வரணுமோ அப்டி வாங்கோ” திரும்பி நடந்தவர்களை, “ஒரு நிமிஷம் ……..” நிறுத்தினார்.

 

“நீ எங்கே குடியிருக்கே?”

 

“வடக்கு சன்னதிப் பக்கம் ஒரு ஆத்துல…….”

 

“அங்க வேற ரெண்டு மூணு வீடு இருந்ததே…”

 

“அங்க சுப்புராமன் இருக்கார்……”

 

பெரியவாளுக்கோ எந்தெந்த வீடு, யார் யார் இருக்கிறார்கள் எல்லாம் அத்துப்படி!

 

“சுப்புராமன்தான் மேல போயிட்டாரே……அவரோட வாரிசுகள் மடத்ல வேலை செய்யறாளா என்ன?”

 

“இல்லை……….”

 

“மடத்ல வேலை செய்யறவாளுக்குத்தான் நாம வீட்டை குடுத்திருக்கோம். இங்க வேலை செய்யாதவாளுக்கு எதுக்கு வீடு? நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு தெரியாது! நாளைக்கு மறுநாள், இந்த பாட்டி அந்த வீட்டுக்கு குடி போகணும் !..டேய்! நாளன்னிக்கு நல்ல நாளா…ன்னு பாரு”

 

“ஆமா பெரியவா நல்ல நாள்தான்”

 

“அப்போ சரி. இந்த பாட்டி நாளன்னிக்கு அந்தாத்துக்கு போறதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ”

 

பெரியவா சங்கல்பம் நிறைவேறியது!

 

இதற்கப்புறம் மூன்று மாசம் கழித்து காமாக்ஷி கோவிலில் தர்சனம் பண்ணிவிட்டு சன்னதி தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த பெரியவா, சட்டென்று ஒரு வீட்டின் முன் நிற்கிறார்.

 

பின்னால் வந்து கொண்டிருந்த பக்தர் குழாம் குழம்பியது. ஒரு பக்தரிடம், ”ரெண்டு மூணு நாளா பாட்டியை காணும்…..உள்ள போய் பாரு. ஒடம்புக்கு கிடம்புக்கு முடியலையோ என்னவோ…..”

 

உள்ளே….ஏழ்மையான எளிமையான வாஸம். ஒரே ஒரு குமுட்டி அடுப்பு. ரெண்டே ரெண்டு பாத்ரம். வேறு எதையுமே காணோம். பாட்டி ஒரு ஓரத்தில் முடங்கிக் கிடக்கிறாள். பக்தர் மெதுவாக பாட்டியிடம் பெரியவா வாசலில் நிற்கும் விஷயத்தை சொன்னதுதான் தாமதம்! தடாலென்று எழுந்து, தன் நார்மடியை சரி பண்ணிக் கொண்டு ஓடோடி வருகிறாள்.

 

இரைந்து…….”சர்வேஸ்வர……மஹாப்ரபு…….நீயே என்னைத் தேடிண்டு வந்துட்டியா?” என்று அலறிக் கொண்டு பெரியவா பாதத்தில் விழுந்தாள். மூன்று முறை வலம் வந்து நமஸ்கரித்தாள். இதை உண்மையான பக்தனும் பகவானும் மட்டுமே அனுபவிக்க முடியும்.

 

தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் வந்து தர்சனம் பண்ணுகிறார்கள். ஆனால், தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை பூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால், பகவானால் தாங்க முடியாமல், தானே அவர்களைப் பார்க்க வந்துவிடுவான். அந்த பாட்டிக்கு கிடைத்த பாக்யம் எல்லோருக்கும் கிடைக்குமா? தன்னையே­ பெரியவாளிடம் முழுவதுமாக அர்ப்பணித்தவர்களுகு மட்டுமே நிச்சயம் கிடைக்கும்.

பதிவு: Raja

APNSwami has been conferred “Abhinava Desika Keertiratna


APNSwami க்கு “அபிநவ தேசிக கீர்த்திரத:” என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

மாடுகளை பலியிட தடை; இறைச்சிக்காக விற்கவும் தடை: மத்திய அரசின் அசத்தல் விதிமுறைகள் முழு விவரம் இதோ!

புது தில்லி:

மிருகவதைக்கு எதிராக புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதன்படி, நாடு முழுதும் இறைச்சிக்காக மாடுகள், காளை, எருமை, பசுமாடு, ஒட்டகம் ஆகியவற்றை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நோக்கில் மாடுகளை விற்கக் கூடாது. விவசாயிகள் மட்டும் சந்தைகளில் மாடுகளை விற்கலாம்.

cattle trafficking 3 - 2026
இதற்கு வருகிறது ஒரு விடிவு காலம்: இறைச்சிக்கு மாடுகளைக் கொண்டு செல்ல மத்திய அரசு தடை!

கருவுள்ள பசுக்களை வாகனங்களில் அடைத்துக் கொண்டு செல்லக் கூடாது. சந்தைக்கு கால்நடைகள் கொண்டு செல்லப் படும்போது துன்புறுத்தக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் புதிய அறிவிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. மிருக வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து இந்தப் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் படி,
இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது. சந்தைகளில் விவசாயத் தேவைகளுக்காக மட்டுமே மாடுகளை விற்கவோ, வாங்கவோ செய்யலாம்.

கசாப்புக் கடைகள், இறைச்சி தேவை கருதி பசு, ஒட்டகம், காளை, எருமை மாடுகளை வாங்கவோ, விற்கவோ கூடாது.

வயதில் குறைந்த கால்நடைகளை சந்தைக்குக் கொண்டுவரக் கூடாது. இவற்றை சந்தைக்குக் கொண்டு வருவோர் அதன் உரிமையாளர் கையெழுத்துடன் கூடிய ஒப்புதலுடன் வர வேண்டும். விலங்கின் உரிமையாளர் முகவரி, போட்டோ அடையாள அட்டை நகல் ஆகியவை அவசியம்.

கால்நடையின் அடையாளங்களை தெரியப்படுத்த வேண்டும்
இறைச்சித் தேவைக்காக கால்நடை சந்தைக்குக் கொண்டுவரப்படவில்லை என உறுதிப்படுத்த வேண்டும்.

கால்நடையை வாங்குபவரின் அடையாள அட்டை நகல், முகவரி உள்ளிட்ட விவரம் கொடுக்கப்பட வேண்டும்.

விவசாயத் தேவைக்காகவே கால்நடை வாங்கப்படுகிறது என்ற தகவலை உறுதி செய்யத் தேவைப்படும் ஆதாரங்களைப் பெறவேண்டும்

கால்நடையை வாங்குவோர் அடுத்த 6 மாத காலத்திற்குள் அதை விற்பனை செய்யமாட்டேன் என்று உறுதியளிக்க வேண்டும். அடுத்த ஆறுமாத காலத்துக்கு அந்த ஆவணங்களைப் பராமரிக்க வேண்டும். சோதனை செய்யும் அதிகாரியிடம் இந்த ஆவணங்களை தேவைப்படும் போது காட்ட வேண்டும்.

கால்நடையை வாங்கியவர் அதை இறைச்சிக்காக கசாப்புக்கடைக்கு விற்பனை செய்யக் கூடாது. மாநில அரசின் கால்நடை பாதுகாப்பு சட்டங்களை மதித்து நடக்க வேண்டும்.

மதம் தொடர்பான விழாக்களில் இந்தக் கால்நடைகளை (மாடு, எருமை, ஒட்டகம், காளை) பலியிடக்கூடாது.

மாநில அரசின் சட்ட விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு வேறு மாநிலங்களுக்கு இந்தக் கால்நடைகளை விற்பனை செய்யக் கூடாது.

கால்நடை சந்தையில் நடைபெறும் விற்பனையின்போது அதுகுறித்து 5 நகல்கள் எடுத்து வைக்கப்பட வேண்டும்.
ஒன்று விற்பனையாளரிடமும், இரண்டாவது வாங்கியவரிடமும், 3வது நகல் வாங்கியவர் வாழும் தாலுகா அலுவலகம், 4வது நகல் மாவட்ட தலைமை கால்நடை அலுவலர், 5வது நகல் கால்நடை சந்தை கமிட்டியிடம் என ஐந்து நகல்கள் இருக்க வேண்டும்.

ஸ்ரீராமாநுஜர் இருபது

ramanujar - 2026

ஸ்ரீராமாநுஜர் இருபது

எம்பெரு மானார்க்கே தோய்ந்த இதயத்துச்
செம்பொருள் நாட்டம் சமைந்ததுவால் – நம்பெருமாள்
ஈந்தவருள் ஈண்டு திருவருளாம் என்றிங்குப்
போந்த இருபதுவெண் பா.

*

தெண்ணீர பொன்னித் திரைகலங்கும் காலத்தே
உண்ணீர்மை ஊட்ட உலகிதனைக் – கண்ணீரால்
காத்த குணவாளன் கோத்தநெறி கூர்வதினால்
பூத்துவரும் புத்துலகு பார்.

பாரோர் பலரோய்ந்து பானாள் விளக்கானார்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் காதலித்த
ஏரார் எதிராசர் எங்கள் கதியானார்
ஓரார் எவரிதனை ஓர்ந்து.

ஓர்ந்து உவப்புற்றார் உத்தமர்க்கே ஆளானார்
சோர்ந்து தவிப்புற்றால் செய்வதெவன் – சீராரும்
செந்நெல் கவரியிடும் சங்கத் தமிழ்ச்செல்வர்
இந்நாளில் இன்புற்றார் ஈண்டு.

ஈண்டு புலர்ந்ததுவோ ஈருலகம் ஒன்றாமோ
மீண்டும் சிறந்திடுமோ மாநெறியும் – நீண்டதன்
தாளால் உலகளந்த தண்மைதான் இவ்வுலகில்
வாளா விருந்திடுமோ தான்.

தானாய்த் திரிவார் தறுகண்மை யால்தரணி
பான்மை இழந்த பசப்பறவே – பூன்றநற்
பொற்குணத்தான் சிற்குணத்தின் செம்மை புலத்தி
நற்குணர்த்தும் ஏந்தலவன் நூல்.

நூல்நுவன்ற மாட்சியோ மால்பயின்ற நெஞ்சதோ
ஆல்துயின்ற சேய்வயிற்றில் அண்டமெல்லாம் ஆன்றபோல்
கால்பயின்ற திக்கெலாம் கார்பயின்ற ஓரருள்
கோல்பயின்று நின்றதாம் கோயில்.

கோயில் மணவாளர் கொள்ளைகொளும் நெஞ்சத்தை
வாய்மொழியில் தாமிழந்தார் வார்த்தைக்கே – ஆயும்
அறிவுடையார் அந்தண்மை ஆளும் தமிழில்
செறிவுடையார் செய்தவமே தாம்.

தாமுகந்த தெவ்வுருவம் நன்றாய்த் தமருக்கே
தோமற்ற ஓருருவில் தோன்றியிவண் – தாமாய்த்
திரமாய்த் திருவரங்கம் தீர்ந்த நிலையாய்
வரம்தரும் வான்குரு வந்து.

வந்தார் வருகவென்று வாராரும் வந்துவப்ப
செந்தமிழ்க் கோதையும் செப்பினாள் – அந்தமிலா
ஆர்வத் தமிழ்க்காதல் ஆன்றமறை அண்ணர்தாம்
ஓர்ந்திட்ட திட்டம் உரை.

உரைகொள் திருமொழிகள் உள்ளுவக்கும் ஈடால்
உரைசால் திருவாய் மொழிக்கே – கரைகடந்த
அன்புற்றார் ஆன்றதமிழ்ச் சொல்லுற்றார் சிந்தையினில்
மன்னிடவே இங்குற்றார் மீண்டு.

மீண்டுவந்த ஊமன் மொழிந்திட்ட வார்த்தையே
யாண்டும்கொள் நெஞ்சேநீ யெவ்விடத்தும் – பாண்டவர்க்காய்த்
தேர்நடத்தும் தாமோ தரனார்ப் பெருவார்த்தை
நேர்நடத்தும் ஆசிரியன் நன்று.

நன்றுரைத்தான் தீந்தமிழைத் தெய்வ மொழியென்றான்
மன்றுரைத்து மண்ணுலகில் மன்னவைத்தான் – என்னுரைப்போம்
கன்றுரைத்த கால்மாற்றும் தீங்குழலார் கண்ணற்கே
அன்பூறும் பண்புடையோ மால்.

மாலாகி நெஞ்சம் மகிழ்ந்திடவே மன்னுதமிழ்க்
கோலோச்சும் கொள்கைத்தாய்க் கொண்டாட்டம் – வேலோச்சும்
வீசுவிழி மாதர் விறல்நேச மாமல்லர்
ஆசறவே கொண்டான்தான் ஆள்.

ஆட்கொண்டான் ஓரரங்க மாளிகையை அன்புகொண்டே
ஆட்கொண்டான் ஊமைதனை ஆர்கழலால் – வேட்டிருந்த
மாமறையோர் கூரேசர் மன்னும் சொலவுகற்றார்
காமுறுவர் கல்லா நெறி.

நெறிநின்ற நின்மலர்க்கே போயொளித்துக் காட்டில்
முறிவெண்ணை உண்டொளிக்கும் பத்தி – வெறிகமழும்
நம்மாழ்வார் சொல்லாரும் நற்பொருளே நாட்டியெழும்
அம்மாநல் பாடியத்தின் மாண்பு.

மாண்புறுநல் சிந்தை மகிதலத்தின் வாழ்ச்சிக்கே
சேண்குன்ற நாடர் சிறந்தவரம் – பாண்மிழற்றும்
வண்டூது போதலரும் வாய்ப்பினால் வாய்மொழிக்குள்
கண்டுழாய்க் கோலம் பயில்.

பயின்றும் துயின்றும் பயந்தும் புலர்ந்தும்
செயிர்க்கும் உயிர்கட்கே சேமம் – நயக்கின்ற
தாயாய்த் தமப்பனாய் எல்லாம் திருமாலாய்
ஆய்ந்துரைத்தான் ஐயன் இனிது.

இனிதாகும் இவ்வுலகு அவ்வுலகும் நன்றே
புனிதராய்ப் போந்தார் பொலிய – மனிதரே
வாழ்ந்தார் எனநயக்கும் விண்ணும் வரக்கண்டு
வாழ்த்தும் முதல்தாய்ப் பொலிவு.

பொலிந்தது பூதூர் புகழ்மலி கச்சி
பொலிந்தது பொன்னரங்கம் வேங்கடம் பூத்துப்
பொலிந்தது பூமி புலர்ந்தது வாழ்வு
பொலிந்தது பாரத நாடு.

நாடுவார் நாற்பயன் தேடுவார் நன்மையே
கூடுவார் கோயின்மை கொள்ளுவார் – பாடிய
சேண்பொருள் சிந்தை அருளிச் செயலதாம்
கோனெதி ராசர்தம் காப்பு.

  • கவிதை: ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்

தூத்துக்குடி தி.மு.க மாவட்டச் செயலாளர் என். பெரியசாமி காலமானார்


தூத்துக்குடி தி.மு.க மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான தூத்துக்குடி என்.பெரியசாமி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது
78.

என்.பெரியசாமி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தூத்துக்குடி மாவட்டத்தின்
தி.மு.க செயலாளராக இருந்தவர். தி.மு.க தலைவர் கருணாநிதியால், முரட்டு பக்தன் என அழைக்கப்பட்டவர். முன்னாள் அமைச்சரும் தற்போதைய தூத்துக்குடி எம்.எல்.ஏ-வுமான கீதா ஜீவனின் தந்தை.

கடந்த சில மாதங்களாகவே, உடல்நலம் குன்றியிருந்த பெரியசாமி சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர்
காலமானார்.

அவரது உடல் இன்று தூத்துக்குடிக்குக் கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது.

அவரது இறுதிச்சடங்கில், திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொள்வார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியின் ‘காலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!


ரஜினி நடிக்கவிருக்கும் ‘காலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை
வெளியாகியுள்ளது.

கபாலி படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணி மீண்டும்
இணைந்துள்ள படம் காலா. ரஜினியின் 164வது படமாக உருவாக உள்ள இப்படத்தை
ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன்
இசையமைக்கிறார். படத்தின் தலைப்பை இன்று காலை படக்குழுவினரால்
அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

தலைப்பு வெளியானதைத் தொடர்ந்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6
மணிக்கு வெளியிடப்போவதாக இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்திருந்தார்.

அதன்படி, ‘காலா’ படத்தின் 2 பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை அவர் வெளியிட்டார். ஒரு
போஸ்டரில் ரஜினி முகத்தில் ரத்தக்கறையுடனும், காயங்களுடனும் கோபத்துடன்
இருப்பதுபோல் இருக்கிறது. மற்றொரு போஸ்டரில் மும்பை தாராவி பின்னணியாக வைத்து,
நடுவில் சாதாரண லுங்கியுடன், கூலிங் கிளாஸ் அணிந்துகொண்டு ஜீப்பின் மீது
அமர்ந்துகொண்டு இருப்பதுபோல் வெளியிட்டுள்ளனர்.

‘காலா’ படத்தின் 2 பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் தற்போது இணையதளங்களில் வைரலாக
பரவி வருகின்றன.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே 28-ந் தேதி தொடங்கவிருக்கிறது. முதற்கட்ட
படப்பிடிப்பு மும்பையிலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும்
நடத்தவிருக்கிறார்கள்.

“துக்கிரிப் பாட்டி ராமநாமப் பாட்டியான சம்பவம்”

kanchi periyava - 2026
“ஒன்னோட ஊர்ல இருக்கிற பிள்ளையாருக்கு ஏன் ராம
பிள்ளையார்ன்னு பேர் வந்தன்னு நோக்குத் தெரியுமோ?
(2)ஒன்னோட ஊர்ல துக்கிரிப் பாட்டிங்கற பேர்ல ஒரு பாட்டி
இருந்தது நோக்கு தெரியுமோ”-(பெரியவா கேட்ட இரண்டு
கேள்விகளும் அவரே சொன்ன பதில் விளக்கமும்.)

(துக்கிரிப் பாட்டி ராமநாமப் பாட்டியான சம்பவம்)

​கட்டுரையாளர்-நிவேதிதா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
நன்றி-சக்தி விகடன்(இவ்வாரம்)
06-06-2017 தேதியிட்ட இதழ்

ஒருமுறை காஞ்சிபுரத்துக்கு அருகில் இருக்கும்
கிராமத்தில் இருந்து ஒரு பக்தர் மகா பெரியவாளைத்
தரிசிக்க வந்திருந்தார்.அந்த பக்தர் எந்த ஊரில் இருந்து
வந்திருக்கிறார் என்பத விசாரித்துத் தெரிந்துகொண்ட
மகா பெரியவா;

“ஒன்னோட ஊர்ல ராம பிள்ளையார் கோயில்ங்கற பேர்ல
ஒரு பிள்ளையார் கோயில் இருக்கோன்னோ?”
என்று கேட்டார்.

பக்தருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. காரணம்,,அவருக்குத்
தெரிந்து மகா பெரியவா அந்த ஊருக்கு விஜயம்
செய்திருப்பதாக நினைவில்லை.ஆச்சர்யம் அடங்காமலே.
“ஆமாம் பெரியவா, நீங்க சொல்றாப்போல ராம பிள்ளையார்
கோயில்ங்கற பேர்ல ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு”
என்று சொன்னார்.

“அந்தக்கோயில் பிள்ளையாருக்கு ஏன் ராம பிள்ளையார்ன்னு
பேர் வந்தன்னு நோக்குத் தெரியுமோ?”மகானின் அடுத்த கேள்வி
பெரியவாளே சொல்லட்டும் என்று அந்த பக்தர் அமைதியாக
இருந்தார்.

பெரியவாளே தொடர்ந்து, “சரி,ஒன்னோட ஊர்ல துக்கிரிப்
பாட்டிங்கற பேர்ல ஒரு பாட்டி இருந்தது நோக்கு தெரியுமோ”
என்று அடுத்த கேள்வியையும் கேட்டார்.

அந்த பக்தர்,”அப்படி ஒரு பாட்டி இருந்ததா கேள்வி” என்றார்.

“ஒன்னோட ஊர்ல இருக்கிற பிள்ளையார் கோயில்லதான்
அப்பல்லாம் ராம நாமப் பாராயணம் நடக்கும்.அதனாலதான்
அந்தப் பிள்ளையாருக்கு ராம பிள்ளையார்ங்கற பேர்
வழக்கத்துல வந்துடுத்து. இப்ப துக்கிரிப் பாட்டியைப் பத்தி
சொல்றேன் கேட்டுக்கோ” என்ற பெரியவா தொடர்ந்து
துக்கிரிப் பாட்டியைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.

“ஒன்னோட ஊர்ல ஒரு பாட்டி இருந்தா. அவளோட சின்ன
வயசுலயே புருஷன் காலகதியாயிட்டதால, ஊரெல்லாம்
அவளை, ‘துக்கிரி,துக்கிரி’ என்று ஏசியது.கடைசியில
துக்கிரிங்கற பேரே அந்தப் பொண்ணுக்கு நெலைச்சுடுத்து.
அவளும் தன்னோட விதியை நொந்தபடி சதா காலமும்
ராம நாம ஜபம் செய்து பகவானின் நெனைப்பாகவே’இருந்தா
காலப்போக்கில அந்தப் பொண்ணுக்கும் வயசாகி.
பாட்டியாகிட்டா.அப்பவும் ஊர்ல இருக்கிறவங்க அவளை
துக்கிரிப் பாட்டின்னுதான் துரத்திக்கிட்டிருந்தாங்க.

இப்படி இருக்கறச்சே,ஒருநாள் அந்த ஊர்ல இருக்கிற
முக்கிய பிரமுகரோட பையனுக்கு திடீர்னு வயத்து வலி
வந்துடுச்சு. எத்தனையோ வைத்தியம் பார்த்தும்
குணமாகலை அந்த பிரமுகருக்கோ ஒரே கவலையா
போயிடுத்து. விஷயத்தைக் கேள்விப்பட்ட அந்தப் பாட்டி
மத்தவங்க என்ன சொல்வாங்களேன்னெல்லாம்
கவலைப்படாம, கையில் விபூதி சம்படத்தை எடுத்துண்டு
நேரா அந்தப் பிரமுகரோட வீட்டுக்குப் போயிட்டா.
(சம்புடம் சம்பூடம்-என்றும் வழக்கு)

அந்தப் பையனோட பக்கத்துல உட்கார்ந்துண்டு ராம
நாமத்தை ஜபித்தபடி இருந்தா. ஜபம் முடிஞ்சதும்,
சம்புடத்துல இருந்து விபூதியை எடுத்து அந்தப் பையனோட
நெத்தியிலயும்,வயத்துலயும் பூசிவிட்டா. விபூதியைப்
பூசிவிட்ட கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அந்தப் பையனோட
வயத்து வலி கொறைஞ்சு மெள்ளச் சிரிக்க ஆரம்பிச்சான்.
அந்தப் பிரமுகர் மட்டுமில்லாம,ஊர்ஜனங்க எல்லோருக்கும்
ஆச்ச்ர்யமா போயிடுத்து.ராம நாமம் ஜபிக்கும் அந்தப்
பாட்டியைப் போய் துக்கிரிப் பாட்டின்னு
சொல்லிட்டுருந்தோமேன்னு எல்லோரும் ரொம்பவே
வருத்தப்பட்டாங்க.

அதுக்கப்புறம் ஊர்ல இருக்கிற அத்தனை பேரும் அந்தப்
பாட்டியைத் தாங்கு தாங்குன்னு தாங்குனாங்க.புருஷங்காரன்
போனதுக்கப்பறம் மனசை அலைபாயவிடாமல் ராம
நாமத்தை ஜபம் செய்துண்டு இருந்ததுனாலதான், பிரமுகர்
பையனோட வியாதியை சொஸ்தப்படுத்தவும், அதனால
ஊர் மக்களோட மதிப்பையும் அன்பையும் பெற முடிஞ்சது.”

“நீயும் தொடர்ந்து ராம நாமத்தை ஜபம் பண்ணிக்கிட்டே இரு”
என்று சொல்லி ஆசீர்வதித்துப் பிரசாதம் கொடுத்து
அனுப்பினார்.

246400 479182102136836 1433845875 n - 2026i

அயோத்தி வழக்கு: மே 30ல் அத்வானி உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சம்மன்!

ayodhya disputed babri building demolished - 2026

புது தில்லி:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி கட்டட இடிப்பு வழக்கில் மே 30-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி, மே 20-ம் தேதி முதல் சிறப்பு நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. இதில், பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி, ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்யாண் சிங் ஆகியோர் மீதான விசாரணையும் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு கல்யாண் சிங் தவிர, மற்றவர்களுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. வழக்கு விசாரணையை இரண்டு ஆண்டுகளுக்கு முடிக்க வேண்டும் என்பதால் சாட்சிகள், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் யாரும் அதிக வாய்தா பெற்று கால தாமதம் செய்ய வேண்டாம் என்றும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

காரை மறித்து 4 பெண்கள் ஒரு கும்பலால் பலாத்காரம்: தடுக்க முயன்றவர் படுகொலை

Women gang raped man killed in up - 2026

உ.பி.யில் உள்ள புலந்த்சாஹர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரை வழிமறித்து அதிலிருந்த 4 பெண்களை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இதைத் தடுக்க முயன்ற அக் குடும்பத்தைச் சேர்ந்த ஆண் நபரை அக்கும்பல் படுகொலை செய்தது. பின்னர் அவர்களிடம் இருந்து நகை, பணம் உள்ளிட்ட பொருட்களைத் திருடி தப்பிச் சென்றது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உள்ளூர் எம்.எல்.ஏ.வும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்து கூறப்படுவதாவது… ஜேவாரில் இருந்து புலந்த்சாஹர் நோக்கி ஒரு குடும்பத்தினர் காரில் சென்றனர். வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் புலந்த்சாஹர் தேசிய நெடுஞ்சாலையில் அவர்களது வாகனம் வந்தபோது வாகனம் திடீரென நின்றது. அந்த வாகனத்தை 6 பேர் கொண்ட கும்பல் சூழ்ந்துகொண்டது. வாகனத்தில் இருந்தவர்களை கீழே இறக்கிய அந்த கும்பல், 50 வயது பெண் உள்பட 4 பெண்களை பலாத்காரம் செய்தது. இதைத் தடுக்க முயன்ற நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து, அவர்களிடமிருந்த நகை, பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றது. தப்பிச் சென்ற அக்கும்பலை கைது செய்ய போலீஸ் தனிப்படை அமைத்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு இதே போல் ஒரு சம்பவம் நடந்தது. உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த குடும்பத்தினர் தங்களது உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஷாஜஹான்பூருக்கு காரில் சென்றனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் தில்லி கான்பூர் நெடுஞ்சாலையில் புலந்த்சாஹர் என்ற இடத்தில் அவர்களது காரை கொள்ளை கும்பல் வழிமறித்து, காரில் இருந்த இரு ஆண்களை கயிற்றால் கட்டி, தாயையும் (35) அவரது 14 வயது மகளையும் ஆள் இல்லாத பகுதிக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது. தற்போது மீண்டும் அதேபோல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.