உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிகளில் இன்று நடைபெறும் 3வது போட்டியில், பாகிஸ்தான் – ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி, அரையிறுதியில் இந்தியாவுடன் மோதும் என்பதால், இந்திய ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
‘பாலாஜி பஞ்சரத்ன மாலா’
“பாலாஜி பஞ்சரத்ன மாலா” வலை உதவி.-Right Mantra Sundar.(நேற்றும் இன்றும்) “எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் வாழ்வில் ஏழுமலையானும், மகா பெரியவாளும் நடத்திய நெகிழவைக்கும் நாடகம்!” (இன்று இரண்டாம் பகுதி-2) திரு இந்திராசௌந்திரராஜன் பொதிகையில் 18-03-2015 காலை 07-15க்கு சொல்லிய அற்புத நிகழ்வு. அவர் சொற்பொழிவு 19-03-2015 இதன் இரண்டாம் பகுதி தொடர்ந்தது.) (நேற்று கட்டுரை தொடருகிறது.) அதற்கு பிறகு காரியங்கள் மள மளவென நடக்க ஆரம்பித்தது. திருமலை தேவஸ்தானத்தின் அவசர கூட்டம் மீண்டும் கூட்டப்பட்டு அனைத்து மேற்படி திட்டம் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. ஒரு பக்கம் கோவிலுக்கு வருவாய்… மறுபக்கம் ஆஸ்தான வித்வான் எம்.எஸ். அவர்களுக்கும் வருவாயை குவிக்க கூடிய திட்டம், மறுப்பக்கம் அன்னமாச்சரியாவின் கீர்த்தனைகளை வெளியே கொண்டு வரும் ஒரு உன்னத முயற்சி என்பதால் அப்போது திருமலை தேவஸ்தானத்தின் சேர்மனாக இருந்த, ராமேசன் என்பவர் இதற்கு உடனடி ஒப்புதலும் கொடுத்தார். ஒரு நாள் காலை, பிரசாத், ராமேசன் மற்றும் திருமலை தேவஸ்தானத்தின் இன்ன பிற உயரதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.எஸ். – சதாசிவம் தம்பதிகளின் வாடகை வீட்டுக்கு சென்றனர். முதலில் சதாசிவம் அவர்கள் அறைக்குள்ளிருந்து வெளியே வந்து அனைவரையும் வரவேற்றார். அவரிடம் தாங்கள் கொண்டுவந்திருந்த ஏழுமலையான் படத்தையும் பிரசாதத்தையும் கொடுத்து, வந்த நோக்கத்தை கூறுகின்றனர். “ஐயா.. நம் பாரம்பரியத்தின் பெருமையையும் கட்டிக்காக்க திருமலை தேவஸ்தானம் எடுத்து வரும் அனைத்து முடிவுகளையும் நீங்கள் அறிவீர்கள். அதன் ஒரு பங்காக தற்போது அன்னமாச்சரியாவின் கீர்த்தனைகளை இசைவடிவத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். முதல் கட்டமாக 5 இசைத்தட்டுக்களை (ஒரு தட்டுக்கு 10 பாடல்கள்) வெளியிட முடிவு செய்திருக்கிறோம். எம்.எஸ். அவர்கள் தான் பாடித் தரவேண்டும்.” சற்று யோசித்த சதாசிவம் அவர்கள், “முதற்கண், இப்படி ஒரு வாய்ப்பை எங்களுக்கு கொடுக்க முன்வததற்கு நன்றி. ஆனால் பிரசாத் அவர்களே, எம்.எஸ். அவர்கள் தனக்கு பாண்டித்யம் உள்ள மொழியில் மட்டுமே பாடவிரும்புவார். தெலுங்கில் இதுவரை அவர் பாடியதில்லை. தியாகராஜரின் சில கீர்த்தனைகளை தெலுங்கில் அவர் பாடியிருந்தாலும் சிறு வயது முதலே அவர் அதை பயிற்சி செய்து வந்துள்ளார். ஆனால் அன்ன்மாச்சாரியாவின் கீர்த்தனைகள் அப்படி இல்லையே… இந்த வயதில் அவருக்கு அதை பயிற்சி செய்து பாடுவது கடினம். ஒவ்வொரு கீர்த்தனைக்கும் ஒரு வாரமாவது அவகாசம் வேண்டும். அப்படி பார்த்தால் நீங்கள் கூறும் 50 பாடல்களை பாடி முடிக்க ஒரு வருடமாவது அவகாசம் தேவைப்படும். இந்த வயதில் அவரை நாம் தொந்தரவு செய்வது சரியாக இருக்காது. எனவே திருமலை தேவஸ்தானத்தின் இந்த அரிய வாய்ப்பை ஏற்றுக்கொள்ளமுடியாமைக்குவருந்துகிறேன்”என்றார்.மறுபடியும் ஆரம்பித்த இடத்திற்கே பிரச்னை வந்து சேர, பிரசாத் மனமுடைந்தார்.அங்கே டேபிளில் இருந்த இவர் கொடுத்த ஏழுமலையான் படத்தை விரக்தியுடன் பார்ப்பதை தவிர அவருக்கு வேறு ஒன்றும் தோன்றவில்லை. அந்த நேரம் தான் எம்.எஸ். அவர்கள் அறையிலிருந்து வெளியே வந்தார்.அனைவரும் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். “அடடா… உட்காருங்க… உட்காருங்க…” என்று பதறியபடி கூறிய எம்.எஸ். அங்கே இருந்த ஏழுமலையான் பாடத்தை பார்த்து புன்னகைத்தார். அதற்கு பிறகு நடந்தது உணர்சிக் காவியம். ஏழுமலையான் படத்தை எடுத்து தனது கைகளில் வைத்துக்கொண்டு பார்த்த இசைக்குயில் கிட்டத்தட்ட ஒரு நிமிடம் கண்கள் மூடி பிரார்த்தனை செய்தார். கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக பெருகி ஓடியது. தனது தலையை அவனது திருப்பாதத்தில் வைத்து, “ஸ்ரீனிவாசா என்னை ஆசீர்வதிக்க இத்தனை தூரம் வந்தாயோ?” அவர் அப்படி உணர்ச்சி போங்க கூறியதே மீராவின் பாடலை போல இருந்தது. என்ன ஒரு குரல், என்ன ஒரு பக்தி? மெய்சிலிர்த்தது அங்கிருந்த அனைவருக்கும். எம்.எஸ்.ஸின் அந்த செயல் சரணாகதி தத்துவத்தை பரிபூரணமாக அனைவருக்கும் உணர்த்தியது. அந்த குரலுக்குள் தான் எத்தனை சோகம்…? இவருக்கு இப்படி ஒரு நிலையா? ஸ்ரீனிவாசா… என்று அனைவரும் சிந்தித்தபடி இருந்தார்கள். எம்.எஸ்.ஸின் பாடலை கேட்டப்படியே வளர்ந்த பிரசாத்துக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. இருப்பினும் யாரும் பார்த்துவிடக்கூடாதே என்று அடக்கிக்கொண்டு நின்றார். சதாசிவம் தேவஸ்தான நிர்வாகிகள் வந்த நோக்கம் உட்பட நடந்த அனைத்தையும் தனது மனைவியிடம் எடுத்துக் கூறினார். “இது ஆண்டவனாக என்னை தேடி வந்து கொடுக்கும் வாய்ப்பு. இதற்காக எந்த ஒரு சிரமத்தையும் நான் சந்திக்க தயாராக இருக்கிறேன். ஏழுமலையானுக்கு சேவை செய்ய கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் நான் விடமாட்டேன்” என்றார் உறுதியுடன். அவரது மனவுறுதி கண்டு அனைவருக்கும் சிலிர்த்தது. நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனையில், எம்.எஸ். அவர்களுக்கு ஏகப்பட்ட பாடல்களை கொடுத்து அவரை இந்த வயதில் ஒரேயடியாக சிரமப்படுத்தவேண்டாம்… அதற்கு பதில் அன்னாமச்சாரியாவின் கீர்த்தனைகளை கொண்டு முதலில் ஓரிரு தட்டுக்களை வெளியிடலாம்… பாக்கியை வேறு சில மகான்களின் கீர்த்தனைகளை எம்.எஸ். அவர்களுக்கு பரிச்சயமான சமஸ்கிருதத்தில் வெளியிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அன்னமாச்சார்யாவின் கீர்த்தனைகளுடன் கணேச பஞ்சரத்னம், மதுராஷ்டகம், கீத கோவிந்தம், நாம் ராமாயணம், ஹனுமான் சாலீசா, லக்ஷ்மி அஸ்டோத்திரம், வெங்கடேச கரவலம்ப ஸ்தோத்திரம், கோவிந்தாஷ்டகம், கனகதார ஸ்தோத்திரம், துர்கா பஞ்சரத்னம், ரங்கநாத கத்யம், துவாதச ஸ்தோத்திரம், சிவாஷ்டகம் ஆகியவற்றை பாடி பதிவு செய்வது என்று முடிவானது. இதற்கு பிறகு தான் முக்கியமான கட்டமே வந்தது. மேற்படி பாடல்களை பாட இசைக்குயிலுக்கு எவ்வளவு தருவது? இது பற்றியசிந்தனைவந்ததுமேபிரசாத்துக்குபடபடப்புதொற்றிக்கொண்டுவிட்டது.அங்குஅவர்கள்வந்ததன்காரணமேஅதுதான்என்பதால்அனைவருக்கே சற்று படபடப்பாக இருந்தது. “அம்மா… நீங்கள் ஏழுமலையானுக்கு பாட ஒப்புக்கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி. மேற்கொண்டு நாம் தொடர்வதற்கு முன்பு, உங்களுக்கு தரவேண்டிய பணத்தை பற்றி பேச….” இவர் சொல்லி முடிப்பதற்குள் இசைக்குயில் குறுக்கிட்டார். “என்னது பணமா? ஏழுமலையானுக்கு நான் செய்யும் சேவைக்கு பணம் பெறுவதா? ஐயோ…கனவிலும் நான் அதை நினைத்துப் பார்த்ததில்லையே? எனக்கும் ஏழுமலையானுக்கு இடையே பணம் என்பதே கூடாது. ஒரு நையா பைசா கூட நான் இதற்கு பெறமாட்டேன்” என்றார் நா தழுதழுத்தபடி. [I]வேண்டியதைத் [I]தந்திட வேங்கடேசன் என்றிருக்க வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். மகா பெரியவா சொன்னது நினைவுக்கு வந்தது. “இது மிகவும் சென்ஸிட்டிவான விஷயம். பார்த்து பக்குவமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வை. நீ அவர்களுக்கு உதவி செய்யவே இந்த திட்டத்தை தீட்டியிருகிறாய் என்று தெரிந்தால் நிச்சயம் அவர்கள் நிராகரித்துவிடுவார்கள்.” இதற்கே இப்படி என்றால, உதவி செய்யத்தான் இந்த திட்டமே என்றால், நிச்சயம் ஒப்புக்கொள்ளவேமாட்டார்கள். பிரசாத்துக்கு இதயத் துடிப்பு அதிகரித்தது. வியர்வை பெருக்கெடுத்தது. ஏழுமலையான் மீது பாரத்தை போட்டுவிட்டு பிரசாத் ஆரம்பித்தார். “அம்மா.. நீங்கள் சொல்வதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் சேவைக்கும் ஏழுமலையானுக்கும் இடையே நிச்சயம் நாங்கள் வரமாட்டோம். ஆனால் ஒன்றை நீங்கள் மனதில் கொள்ளவேண்டும். திருமலை தேவஸ்தானம் இதை யாருக்கும் இலவசமாக தரப்போவதில்லை. திருமலையிலும் நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் இந்த இசைத்தட்டுக்களை விற்பதற்கு விரும்புகிறோம். இதன் மூலம் தேவஸ்தானம் மேற்கொள்ளும் பல பணிகளுக்கு போதிய வருவாய் கிடைக்கும். அதில் ஒரு சிறு பகுதியை உங்களுக்கு தரவிரும்புகிறோம். அதற்கு உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது.” “உங்களை போன்ற ஒரு உன்னதமான ஆத்மாவிடம் இருந்து இப்படி ஒரு சேவையை இலவசமாக பெற்றுகொண்டு நாங்கள் பொருளீட்டி பிற்காலத்தில் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நாங்கள் விரும்பவில்லை. மேலும் தேவஸ்தானத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் ஏழுமலையானுக்கு சேவை செய்யும் சேவகனாகவும் நான் அவனுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அவன் ஆலயத்தில் நடைபெறும் ஒவ்வொன்றுக்கும் நான் அவனுக்கு பதில் சொல்லவேண்டும். மேலும் இப்படி தொகுப்பு வெளியிடப்படவேண்டும் என்பது அவன் விருப்பமே அன்றி எங்களுடையது அல்ல. ஆகையால் தான் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்.” “உங்களுக்கு மகன் போன்ற ஸ்தானத்தில் இருந்து நான் சொல்கிறேன். ஏதாவது தவறாக பேசியிருந்தால் என்னை மன்னிக்கவேண்டும்” என்றார். சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லைவெல்லுஞ்சொல் இன்மை அறிந்துஎன்னும் குறளுக்கு எடுத்துக்காட்டாய்அமைந்திருந்தது அவரது தீர்க்கமான வார்த்தைகள். அதை நிராகரிக்க எவராலும் முடியவில்லை. சில நிமிடங்கள் அனைவரும் மெளனமாக உணர்ச்சி பெருக்கோடு இருந்தனர். கடைசியில் எம்.எஸ். அந்த சூழ்நிலையின் இறுக்கத்தை உடைத்தார். “ஏழுமலையான் விருப்பம் அதுதான் எனும்போது நான் என்ன செய்ய… உங்கள் வாய்ப்பை ஏற்றுகொள்கிறேன்” என்றார். பிரசாத் ஏழுமலையான் படத்தை நன்றிப் பெருக்குடன் பார்த்தார். மேலும் சில விவாதத்திற்கு பிறகு அனைத்தும் இறுதி வடிவம் பெற்றது. இப்போது மற்றொரு முக்கிய கட்டம்.ஆல்பத்திற்கு என்ன பெயர் வைப்பது? உடனடியாக இசையரசியிடமிருந்து பதில் வந்தது “பாலாஜி பஞ்சரத்ன மாலா” அடுத்து, எச்.எம்.வி. நிறுவனத்துடன் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒப்பந்தம் செய்துகொண்டது. ஒப்பந்தப்படி உடனடியாக ரூ.4 லட்சம் எம்.எஸ்.அவர்களின் பெயர்லும் ரூ.2 லட்சம் திரு.சதாசிவம் அவர்களின் பெயரிலும், ரூ.1 லட்சம் எம்.எஸ்.-சதாசிவம் தம்பதிகளின் மகள் ராதா விஸ்வநாதன் அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. (அவரும் இந்ததொகுப்பைஉருவாக்கும்முயற்சியில்பங்கெடுத்துக்கொண்டமையால்.)மேற்படி தொகை வைப்புத் தொகையாக (FD) வைக்கப்பட்டு அவர்கள் விரும்பும்வரை அதிலிருந்து கிடைக்கும் வட்டி அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தவறாமல் செல்வது போல ஏற்பாடு செய்யப்பட்டது. பிரபல கர்நாடக இசைக்கலைஞர் நெடுனுரி கிருஷ்ணமூர்த்தி கீர்த்தனைகளை வடிவமைத்து .இசையமைத்து தர, 1980 ஆம் ஆண்டு ‘பாலாஜி பஞ்சரத்னா மாலா’ வெளியிடப்பட்டது. அப்போதைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள் அதை வெளியிட்டார். இரண்டாம் தொகுப்பை திருமதி.இந்திரா காந்தி வெளியிட்டார். அதுவரை இந்திய இசை வரலாற்றில் இருந்த அனைத்து சாதனைகளையும் பாலாஜி பஞ்ச ரத்னா மாலா முறியடித்தது. 1998 ஆம் ஆண்டு எம்.எஸ். அவர்களுக்கு நம் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா தந்து கௌரவிக்கப்பட்டார். ஆனால் அதை பார்க்க சதாசிவம் அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. ஒரு வருடத்துக்கு முன்பு 1997 ஆம் ஆண்டு அவர் அமரரானார். எம்.எஸ். அவர்கள் மட்டும் இல்லையெனில், நமது மகான்களின் பல அற்புதமான கீர்த்தனைகளும் பாடல்களும் பரவாமலேயே போயிருக்கும். கோடிக்கணக்கனோர் இல்லங்களில் நித்தமும் சுப்ரபாதம் பாடி ஏழுமலையானை துயில் எழுப்பிக்கொண்டிருந்த, தனது குரலாலும் இசையாலும் எண்ணற்ற ரசிகர்களின் இதயங்களில் வாழ்ந்துகொண்டிருந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் 2004 ஆம் ஆண்டு நம்மை விட்டு பிரிந்து ஏழுமலையான் மலர்ப்பாதத்தை அடைந்தார். செப்டம்பர் 16 எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் பிறந்த நாள். தனக்கு துன்பம் வந்த நிலையிலும் இறைவனிடம் எதையுமே எதிர்பாராமல்,சங்கீதமே தன் மூச்சு என்று வாழ்ந்து வந்த அந்த இசையரசியின் புகழ் காற்றுள்ள வரையில் இந்த பூமியில் நிலைத்திருக்கும்
ஜிப்மர் மருத்துவ கல்லூரி நுழைவுத்தேர்வு
புதுபொலிவுடன் வீரபாண்டிய கட்டபொம்மன்
தற்போது வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் திரையில் வெளிவரவுள்ளது. இப்படத்தின் முன்னோட்ட வெளியீடு நாளை சத்தியம் திரையரங்கு வளாகத்தில் நடைப்பெறவுள்ளது. நடிகர் சிவகுமார், கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் ராம்குமார், நடிகர் பிரபு, நடிகர் விக்ரம் பிரபு ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொள்கின்றார். மேலும் பல திரை பிரபலங்களும் விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்று காவியத்தின் சாதனை சில துளிகள்! முதன்முதலில் சிவாஜி நாடக மன்றம் மூலமாக இத்திரைக்காவியத்தை 116 தடவைக்கு மேல் நாடகமாக அரங்கேற்றம் செய்து அதன் மூலம் வசூலான தொகையை கொண்டு பல பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நன்கொடையாக அளித்தார். 16-05-1959 ஆம் ஆண்டு தென்னக மெங்கும் திரையிடப்படுவதற்கு 6 நாட்கள் முன்னரே 10-05-1959 ஆம் நாளன்று இங்கிலாந்து நாட்டின் தலைநகரம் லண்டனில் சிறப்புக்காட்சியாக திரையிடப்பட்டது. இச்சிறப்புக் காட்சியில் லண்டன் வாழ் தமிழ் மக்கள் கலந்து கொண்டு களிப்புற்றனர். விழாவிற்கு தலைமை ஏற்றவர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் சகோதரியும் நம் நாட்டின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர் என்ற சிறப்பு பெற்ற திருமதி. விஜயலட்சுமி பண்டிட் ஆவார். 1960 ஆம் ஆண்டு எகிப்து நாட்டின் தலைநகரம் கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய ஆப்பிரிக்கத் திரைப்படவிழாவில் ஆசியாவின் சிறந்த நடிகர் என்ற பட்டத்தை சிவாஜி கணேசன் பெற்றார். மேலும் சிறந்த இசை, சிறந்த திரைப்படம் என மூன்று உயரிய விருதுகளை வாங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். இரு பெரிய கண்டங்கள் உள்ளடக்கிய விழாவில் விருது வாங்கிய முதல் தமிழ்ப்படமாகவும், முதல் இந்தியப்படமாகவும், முதல ஆசியத்திரைப்படமாகவும் வீரபாண்டிய கட்டபொம்மன் திகழ்கிறது. கெய்ரோவில் 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத்திரைப்பட விழாவில் எகிப்து அதிபர் நாசரால் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. பின்னர் அவர் இந்தியா வந்தபோது பாரதப் பிரதமர் நேருவின் அனுமதி பெற்று நடிகர்திலகம் சென்னையிலுள்ள சிறுவர்கள் திரையரங்கத்தில் (கலைவாணர் அரங்கம்) அதிபர் நாசரை வரவழைத்து மிகப்பிரம்மாண்டமான விழா எடுத்து சிறப்பித்தார். அணிசேரா நாடுகளின் முக்கியமான தலைவர் நாசரை சிறப்பித்த பெருமை இந்தியதிரைப்பட வரலாற்றில் நடிகர் திலகத்தையே சேரும். தனக்கு உலக அளவில் அங்கிகாரம் கிடைக்க காரணமாக இருந்த கட்டபொம்மனுக்கு அவர் தூக்கிலடப்பட்ட இடத்தை 1971ல் கயத்தாரில் 47 சென்ட் நிலம் வாங்கி கட்டபொம்மனுக்கு சிலையும், நினைவுச்சின்னமும் எழுப்பினார். 1999 ஆம் ஆண்டு இந்த இடத்தை முறைப்படி தமிழக அரசிடமே ஒப்படைத்தார்.
ஃபார்ம்யார்ட் சரணவன் வெளியிடும் “மனதில் ஒரு மாற்றம்”
பாம்யார்ட் S.சரவணன் வெளியிடும் இப்படத்தை கோட்ராக் பிலிம்ஸ் சார்பில் K.பொட்டால்முத்து தயாரித்திருக்கிறார். ‘‘இப்படம் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வாலிப பருவத்தில் ஏற்படுகிற இந்தவேதியல் மாற்றம், அவர்களை பொருத்தவரையிலும் அது ஒரு திருவிழா. ஆனால் இந்த திருவிழாஎத்தனை பெற்றோர்களால் அங்கீகரிக்கப்படுகிறது என்று கேட்டால் நூற்றுக்கு தொண்ணுற்றொன்பதுசதவிகிதம் நிராகரிக்கப்படுகிறது என்று தான் பதில் வரும். ஆகவே, எல்லோராலும் கொண்டாடப்டுகிற ஒருவிஷயம்தான் திருவிழா. ஒரு சாரருக்கு சந்தோஷத்தையும், மற்றொரு சாரருக்கு துக்கத்தையும்கொடுப்பதற்கு பெயர் திருவிழாவே அல்ல. [su_youtube url=”https://www.youtube.com/watch?v=HpjA3Z5vPaQ&feature=youtu.be”] இதுவரையிலும் காதல் ஒரு அமிர்தமாகவும் அருமருந்தாகவும் தான், புத்தகங்களிலும்,திரைக்கதையிலும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த காதல் என்ற அமிர்தத்தால், அருமருந்தால்ஏற்படுகிற பக்க விளைவை இந்த ‘‘மனதில் ஒரு மாற்றம்” திரைப்படத்தின் மூலம் பட்டவர்த்தனமாக பதிவுசெய்திருக்கிறோம். இந்த ‘‘மனதில் ஒரு மாற்றம்” திரைப்படத்தை பார்க்க ஒரு காதல் ஜோடி வந்தார்கள் என்றால்படம் முடிந்து வெளியே போகும் போது அவர்கள் மனதிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டு தெளிவான மனநிலையோடு அவரவர் வீட்டிற்கே செல்வார்கள் என்று நம்புகிறோம். புகையிலை புற்று நோயை உண்டாக்கும், குடி குடியைக் கெடுக்கும், உடல் நலத்திற்கு தீங்கானதுஎன்ற இந்த எச்சரிக்கைகள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது போல் காதலில் ஏற்படுகிறகொலைகள், தற்கொலைகள் போன்ற பல தீய செயல்களை தடுக்க இந்த ‘‘மனதில் ஒரு மாற்றம்’’திரைப்படம் இன்றைய இளைய சமுதாயத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நாங்கள்நம்புகிறோம். இந்த மனதில் ஒரு மாற்றம் திரைப்படம் இளைஞர்களால் மட்டும் இன்றி பெற்றோர்களாலும்கொண்டாடப்படும் ஒரு சிறந்த திருவிழாவாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.’’என்கிறார் டைரக்டர் ஜனா வெங்கட். இவர் இயக்குநர் சு.பார்த்திபன் அவர்களின் குருகுலத்தில் சினிமா கற்றவர் மற்றும் சாமிஅவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இவர் இயக்கிய குறும்படம் “வின்னிங் ஸ்டார்” 2004-ம்ஆண்டு கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் நடந்த குறும்பட விழாவில் திரையிடப்பட்டது. அடுத்ததாக 2007-ல் இவர் இயக்கிய “அப்பா என் செல்லம்” குறும்படமும் பாராட்டு பெற்றது. அதேபோல்இப்போது இயக்கி இருக்கும் “மனதில் ஒரு மாற்றம்” படமும் எல்லோராலும் பாராட்டப்படும் எனநம்புகிறார். இப்படத்தில் மதன் கதாநாயகனாகவும் ஸ்பூர்த்தி கதாநாயகியாகவும் அறிமுகம் ஆகின்றனர். இவர்களுடன் ஆதவன், டான்ஸ் மாஸ்டர் ஜானி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். வல்லினம் படத்திற்காக சென்ற ஆண்டின் சிறந்த படத் தொகுப்பாளராக தேசிய விருது பெற்றV.J..சாபு ஜோசப் இப்படத்தில் படத் தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஒளிப்பதிவாளர் சாய் நந்தா. மேலும் இவர் மறைந்த ஒளிப்பதிவு மேதை அசோக்குமார் மற்றும்ஹாஜீஅனுமோல் ஆகியோர்களிடம் பணியாற்றியவர். இசையமைப்பாளராக ஸ்ரீசாஸ்தா. இவருடைய அப்பா பூபதி அவர்கள் மலையாளத்தில்நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். கலை இயக்குநர் மயில்கிருஷ்ணன், இயக்குநர் பாலாஜி சக்திவேல் படங்களுக்கு கலைஇயக்குநராக பணியாற்றியவர். பாடல் ஆசிரியர்கள் – அண்ணாமலை, உவரி சுகுமார், தென்றல் ராம்குமார் ஆகியோர் பாடல்கள்எழுதியுள்ளார்கள். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
2ஆம் ஆண்டு ஸ்ரீ வஸந்த நவராத்திரி மஹாத்ஸவம்
வேதஸம்மேளனம் / 2ஆம் ஆண்டு ஸ்ரீ வஸந்த நவராத்திரி மஹாத்ஸவ ஆஹ்வான பத்திரிக்கை
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹரின் அனுக்ரஹத்தையும் ஸ்ரீ ஜகத் குருக்களின் அனுக்ரஹத்துடன் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அனுக்ரஹத்துடனும் பரனூர் மஹாத்மா ஸ்ரீஸ்ரீஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகளின் அனுக்ரஹத்தோடும் மற்றும் மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் ஆசியோடும் அனைத்து உலகையும் காப்பாற்றிக் கொண்டிருக்கம் வேதங்களை நாம் காப்பாற்றும் வகையில், பல வேத சாகைகளை பாராயணமாகவும், வேதங்களில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது? என்ற கருத்துக்களையும் ஜனங்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவும், தவித்யார்த்திகளுக்கு ஊக்கத்தை கொடுப்பதற்காகவும், வேதவித்வான்களை கெளரவிப்பதற்காகவும் மேற்படி டிரஸ்டு மூலமாக வேதஸம்மேளனம் 7 நாட்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தை மகத்தான பாக்யமாக கருதி ஆஸ்திகர்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு தங்களால் இயன்றவரை தாராளமான முறையில் பணம், பொருள் மற்றும் சரீர கைங்கர்யங்களை செய்து, வேத பாஷ்ய உபன்யாஸங்களை கேட்டு, வேதபாராயணங்களை காது குளிரகேட்டு, ஸகல ஹோமங்களிலும் கலந்துகொண்டு ஸ்ரீ வேதமாதாவின் அனுக்ரஹத்தையும் பெற்று எல்லாவித நன்மைகளை அடையவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். நாள்: 25-03-2015 முதல் 31-03-2015 வரை 7 நாட்கள் நடைபெறும் இடம்: G.K. ஷெட்டி விவேகானந்தா வித்யாலயா, அம்பத்தூர், சென்னை- 600 053. ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹ அனுக்ரஹா டிரஸ்டு (பதிவு) எண்20, ஹாஸ்பிட்டல் ரோடு ஸத்யபுரம், அம்பத்தூர், சென்னை-600 053 செல்:9444207063
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குயான் யிவ் குறித்த தகவல் வதந்தி!: சிங்கப்பூர் அரசு
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குயான் யிவ் மரணம் அடைந்து விட்டதாக இணைய தளத்தில் பரவிய செய்தி வதந்தி என்று சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் விடுதலை பெற்று புதிய நாடாக உருவாகக் காரணமாக அமைந்தவர்களில் முக்கியமான ஒருவர் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குயான் யிவ் (91). இவர், கடந்த சில நாட்களாக நுரையீரல் அழற்சி நோயினால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் பிப்ரவரி 5இல் இருந்து சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அண்மையில் அவரது உடல் நிலை மோசமானது. இந்நிலையில் இவர் நேற்று இரவு மரணம் அடைந்து விட்டதாக சிங்கப்பூரில் இயங்கும் ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டது. இதையடுத்து அதைப் பின்பற்றி பல வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. ஆனால், தற்போது சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம், முன்னாள் பிரதமர் லீ மரணம் அடையவில்லை என செய்தி வெளியிட்டு தெளிவு படுத்தியுள்ளது. மேலும் இவ்வாறு வதந்தி பரப்பியவர்கள் யார் என கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படியும் போலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
காஷ்மீர் அரசில் இருந்து பாஜக வெளியேறும்: அமித் ஷா எச்சரிக்கை
காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்படாவிட்டால் காஷ்மீர் அரசில் இருந்து பா.ஜ.க, வெளியேறும் என பா.ஜ.க, தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பாஜக., தொண்டர்களிடம் பேசிய அவர், தேசிய நலனில் பா.ஜ.க, ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது என்று கூறினார். மேலும், இந்நாட்டு மக்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். அவர்கள் எங்களிடம் மிகப் பெரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தி அங்கு அமைதியைக் கொண்டு வருவதற்காகவே பிடிபி அரசுக்கு ஆதரவு அளித்துள்ளோம். அது நடக்காவிட்டால் அந்த ஆதரவை விலக்கிக் கொள்ள பா.ஜ.க, தயங்காது… இவ்வாறு தொண்டர்களிடம் பேசியபோது, கட்சித் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அஞ்சல் ஊழியர் கோரிக்கைக்கு இ.கம்யூ. ஆதரவு
சென்னை: அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைக்கு இந்திய கம்யூ. ஆதரவு அளிப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், கிராமப்புறங்களில் பணிபுரிந்து வரும் அஞ்சல்துறை ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் 10ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் காரணமாக அஞ்சல் விநியோகம் நடைபெறாததால் உரியவர்களுக்கு, உரியகாலத்தில் கடிதங்களும், அஞ்சல்களும் கிடைக்கப் பெறாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 நாட்களாக நடைபெறும் அஞ்சல்துறை ஊழியர்களின் போராட்டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களின் கடிதப் போக்குவரத்துக்கு தனியார் துறைக்கு தள்ளிவிடப்படுகின்றனர். மத்திய அரசு ஊழியர் விரோதப்போக்கை உடனடியாக கைவிடவேண்டும். அஞ்சல்துறை இயக்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் கிராமப்புறப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணவும் ஊதியம், வேலை தொடர்பாக பரிசீலிக்க தனி நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்பதையும் ஏற்று போராட்டத்திற்கு தீர்வுகண்டு, கிராமப்புற அஞ்சல் பிரிவு மேம்பட்ட முறையில் செயல்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது என கூறப்பட்டுள்ளது.
அரையிறுதியில் இந்திய அணி: 109 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது
மெல்பர்ன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் வங்க தேச அணியை இந்திய அணி 109 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்த வெற்றி, இந்த உலகக் கோப்பையில் தொடர்ச்சியான 7 வது வெற்றி என்பது மட்டுமல்ல, 7 முறையும் எதிரணியை அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த வெற்றியின் மூலம், இந்திய கேப்டன் தோனி, அணியை வழிநடத்தி தனது 100வது ஒரு நாள் வெற்றியைப் பெற்றுள்ளார். முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 302 ரன் எடுத்தது. இதில் குறிப்பிடத் தக்க விஷயம், ரோஹித் சர்மாவின் 137 ரன்னும், ரெய்னாவின் 65 ரன்னும்தான். பின்னர் 303 ரன் என்ற இலக்கைக் கொண்டு விளையாடத் தொடங்கிய வங்க தேச அணி, 45 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 193 ரன் எடுத்தது. தமிம் இக்பால் 25 ரன்னும் சர்கார் 29, சபிர் ரஹ்மான் 30 ரன்னும் நஸில் ஹுசைன் 35 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதை அடுத்து வங்க தேச அணி காலிறுதியில் தோற்று வெளியேறியது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டார். நாளை ஆஸ்திரேலிய – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, இந்திய அணியுடன் அரை இறுதிப் போட்டியில் மோதும்.

