Home Blog Page 6208

ரேபரேலி ரயில் விபத்து: உயிரிழப்பு 15 ஆக அதிகரிப்பு

train-derailed-re-bareily உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே இன்று காலை நிகழ்ந்த ரயில் விபத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப் படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே இன்று அதிகாலை ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 15 பேர் உயிரிழந்தனர். இந்த ரயில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து வாரணாசிக்கு சென்று கொண்டு இருந்தது. ரேபரேலி மாவட்டம் பச்ராவன் என்ற இடத்தில் வந்த போது திடீர் என ரயில் தடம் புரண்டு கவிழ்ந்தது. இதில் ரெயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளில் சேர்த்தனர். பச்ரவான் ரயில் நிலையத்தில் சிக்னலுக்காக ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயன்ற போது பிரேக் பிடிக்காமல் சிக்னலை மீறி நிற்க முயன்றதால் இந்த விபத்து நடந்ததாக ரயில்வே தகவல் தொடர்பு அதிகாரி அனில் சக்சேனா தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து காரணமாக ரேபரேலி வழியாகச் செல்லும் ரயில்கள் மாற்று பாதையில் விடப்பட்டன. இந்நிலையில் ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, ரயில்வே போர்ட் தலைவர் உடனே ரே பரேலி பகுதிக்கு விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

பிளஸ் டூ வினாத்தாள் வெளியானதாக புகார்: ஆசிரியர்களிடம் விசாரணை

சேலம்: தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், கணிதத் தேர்வுக்கான தினத்தில், தேர்வு தொடங்கும் முன்னதாக, வாட்ஸ் அப்பில் வினாத்தாள்களை போட்டோ எடுத்து, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அனுப்பி வைத்ததாக,  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புகார் எழுந்தது. இது குறித்து பரவிய தகவலின் அடிப்படையில், தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன், தமிழ்ச்செல்வன் ஆகிய ஆசிரியர்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது. தங்கள் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி சதவிதத்தைக் கூடுதலாக்கிக் காட்ட வேண்டும் என்ற அடிப்படையில் பல பள்ளிகளில் முறைகேடுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பத்தாம் வகுப்பு தேர்வு: மாணவர்கள் பிட் அடிக்க பெற்றோர் உறவினர் சுவர் ஏறி தொங்கி உதவி

cheating-in-exams-bihar ஹாஜிபுர், பீகார்: பீகார் மாநிலம் ஹாஜிபுர், நோவாடா ஆகிய இடங்களில், தங்கள் வீட்டுக் குழந்தைகள் பத்தாம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு பிட் அடிக்க பெற்றோர், உறவினர்களே முயன்றனர். இதற்காக அவர்கள் கையாண்ட வழிமுறை, தேர்வு நடைபெறும் கட்டத்தின் ஜன்னல் மீது ஏறியும், கம்பு கட்டித் தொங்கியும் ‘பிட்’ கொடுத்து உதவினர். பீகாரில் இந்தக் காட்சி ஒன்றும் புதிதல்ல என்றாலும், இந்தமுறை மேலும் கூடுதலாகிவிட்டது. சென்ற முறை 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதும்போது பிடிபட்ட 200க்கும் அதிகமானோர் தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு உதவியதாக 10க்கும் அதிகமான பெற்றோர் கைது செய்யப்பட்டனர். இவ்வளவு இருந்தும், சென்ற முறை தேர்வு எழுதிய 13 லட்சத்து சொச்சம் மாணவர்களில் 75% பேர் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இந்தமுறை பீகார் மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. இதில் 14 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்று  தேர்வு எழுதுகின்றனர். இதில், வைஷாலி மாவட்டத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் நேற்று முன்தினம் தேர்வு நடைபெற்றபோது, பல மாடிகளைக் கொண்ட அந்தத் தேர்வு மைய கட்டத்தைச் சுற்றிலும் ஏராளமான பேர் நின்னர்.  பலர் அந்தக் கட்டடத்தின் மேல் ஏறி ஜன்னல் பகுதியில் நின்று கொண்டு உள்ளே  தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு, ஜன்னல் வழியாக ‘பிட்‘களை வழங்கினர். சிலர் புத்தகத்தின் சில பகுதிகளை அப்படியே கிழித்துக் கொடுத்தனர். ஜன்னல்களில் ஏற முடியாதவர்கள், நீண்ட கம்பின் நுனியில் வைத்து ஜன்னல் வழியாக உள்ளே கொடுத்தார்கள். சிலர் கீழே நின்றபடி ‘பிட்‘ காகிதங்களை சுருட்டி உள்ளே வீசினர். தேர்வு அறைகளில் இருந்த பெரும்பாலான மாணவர்களும் ‘பிட்‘டோடுதான் தேர்வு எழுதினராம்.

பாகிஸ்தான் 213க்கு ஆட்டமிழப்பு: ஆஸ்திரேலியாவுக்கு எளிய இலக்கு

உலகக் கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் காலிறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின. முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்வதாகக் களம் இறங்கி முதலில் ஆடியது அந்த அணி, துவக்கத்தில் தடுமாறியது. முதல் இரண்டு விக்கெட்கள் 24 ரன்களைக் கடப்பதற்குள் விழுந்துவிட்டன. இதனால், அணியின் ரன் வேகம் பெரிதும் மட்டுப் பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷேஷாத் 5 ரன்னிலும், அஹ்மத் 10 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். சொஹெல் 41 ரன் எடுத்தார். இதுதான் இன்று அணியில் எடுக்கப் பட்ட அதிக பட்ச ஸ்கோர். அடுத்து மிஸ்பா உல் ஹக் 34 ரன் எடுத்தார். பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆல் ரவுண்டர் அப்ரிதி 15 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 23 ரன் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். இதனால் பாகிஸ்தான் அணி 213 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு மிக எளிய இலக்காக 214 ரன்னை நிர்ணயித்தது.

குர்-ஆனை எரித்ததாகக் கூறி இளம்பெண் எரித்துக் கொலை

afgan-lady குர்-ஆனை எரித்ததாகக் கூறப்பட்ட இளம்பெண் ஒருவர் அடித்து உதைக்கப்பட்டு, தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டார். ஆஃப்கானிஸ்தான் காபூலில் மசூதி அருகே, 27 வயது இளம்பெண் பார்குந்தா, இஸ்லாமிய புனித நூலான குர்-ஆனை எரித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தப் பெண்ணை அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கொடூரமாக அடித்துள்ளனர். அந்தப் பெண்ணை உதைத்து, கல், கம்புகளால் கொடூரமாக அடித்துள்ளனர்.  பின்னர் அந்தப் பெண்ணை ஆற்றின் ஓரத்தில் போட்டு எரித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனிடையே இந்தச் சம்பவத்துக்கு மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தப் பெண்ணின் பெற்றோர் கூறுகையில், அவர் கடந்த 16 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார் என்றுள்ளனர். இதனிடையே, அந்த இளம்பெண்ணைத் தாக்கியவர்களில் 4 பேரைக் கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களைத் தேடி வருவதாகவும் கூறியுள்ளனர். [su_youtube url=”https://www.youtube.com/watch?v=KHmTBzigeWQ”]

ரேபரேலி அருகே ரயில் விபத்து: 6 பேர் உயிரிழப்பு

train-derailed-re-bareily உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே இன்று அதிகாலை ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். இந்த ரயில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து வாரணாசிக்கு சென்று கொண்டு இருந்தது. ரேபரேலி மாவட்டம் பச்ராவன் என்ற இடத்தில் வந்த போது திடீர் என ரயில் தடம் புரண்டு கவிழ்ந்தது. இதில் ரெயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளில் சேர்த்தனர். பச்ரவான் ரயில் நிலையத்தில் சிக்னலுக்காக ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயன்ற போது பிரேக் பிடிக்காமல் சிக்னலை மீறி நிற்க முயன்றதால் இந்த விபத்து நடந்ததாக ரயில்வே தகவல் தொடர்பு அதிகாரி அனில் சக்சேனா தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து காரணமாக ரேபரேலி வழியாகச் செல்லும் ரயில்கள் மாற்று பாதையில் விடப்பட்டன.

போக்குவரத்துத் தொழிலாளர் 3ம் கட்ட பேச்சுவார்த்தை

சென்னை: அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் ஊதிய ஒப்பந்தத்துக்கான மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை வெள்ளிக்கிழமை இன்று நடைபெறுகிறது. போக்குவரத்து ஊழியர் 12-ஆவது ஊதிய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகப் பயிற்சி மையத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 11-ஆம் தேதி 42 தொழிற்சங்கத்தினரிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. மார்ச் 2-ஆம் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தையும், 12-ஆம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டன. இந்த இரண்டு பேச்சுவார்த்தையும் சுமுகமாக முடிந்தது. நிதி தொடர்பான பிற கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவில் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. இன்று காலை 10 மணிக்கு இந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியது.

நீதித் துறை நடுவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: போலீஸார் விசாரணை

நாகப்பட்டினம் அருகே நீதித் துறை நடுவர் (மாஜிஸ்திரேட்) மீது மர்ம நபர்கள் தாக்கியது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வேதாரண்யம் உரிமையியல், குற்றவியல் நீதிமன்ற நடுவர் லதா, கூடுதல் பொறுப்பாக நாகப்பட்டினம் மாவட்ட நீதித் துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பதவியையும் வகித்து வருகிறார். புதன் நேற்று காலை பணிக்கு வந்தவர் மாலை பணி முடிந்து வீட்டுக்கு காரில் திரும்பினார். காரில் ஓட்டுநர் சதீஷ்குமார், உதவியாளர் தனபால் உடன் இருந்தனர். வேளாங்கண்ணி பேராலயம் சென்று விட்டு, வேதாரண்யம் செல்லும் வழியில் பிராதபராமபுரம் என்னும் இடத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர், மாஜிஸ்திரேட் வந்த கார் கண்ணாடிகளையும் உடைத்து நடுவரை கட்டையாலும், ஓட்டுநரை கையாலும் தாக்கிவிட்டு தப்பினர். இதில் காயமடைந்த மாஜிஸ்திரேட் லதா, வேளாங்கண்ணி அரசு மருத்துவமனையிலும், பின்னர், மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். தலையில் காயமடைந்ததால் அவருக்கு 6 தையல் போடப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் லதாவை மாவட்ட நீதிபதி சிவக்குமார் சந்தித்து விவரம் கேட்டறிந்தார். தொடர்ந்து மாஜிஸ்திரேட் லதா அளித்த புகாரின் அடிப்படையில் ஆயுதங்களால் தாக்குதல், கொலை முயற்சி, கும்பலாக சேர்ந்து ஆயுதங்களுடன் தாக்குதல், வழிமறித்து தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கீழையூர் போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய முஸ்லிம்கள் தேசபக்தி மிக்கவர்கள்: ராஜ்நாத் சிங்

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் தேசப்பற்று மிக்கவர்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பயங்கரவாத ஒழிப்பு குறித்த சர்வதேசக் கருத்தரங்கம் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்தக் கருத்தரங்கில் அவர் பேசியபோது, “வேற்றுமையில் ஒற்றுமை’ காணும் நாடாக விளங்குவதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது. உலகிலேயே இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக, அதிக அளவில் முஸ்லிம்கள் வசிப்பது நம் நாட்டில்தான். இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் தேசப்பற்று மிக்கவர்கள். அடிப்படைவாதக் கொள்கைகள் அவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது. மேலும், பயங்கரவாதம் என்பது இந்திய முஸ்லிம்களுக்கு அன்னியமான ஒரு விஷயம். எனவேதான் இந்திய முஸ்லிம்களை ஐ.எஸ். தீவிரவாதிகளால் ஈர்க்க முடியவில்லை. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சொற்ப எண்ணிக்கையிலேயே இந்திய இளைஞர்கள் இணைந்ததாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் சில இளைஞர்கள் அந்த அமைப்பிலிருந்து திரும்பி வந்துவிட்டனர் என்றார் அவர்.

காஷ்மீர்: காவல் நிலையத்தில் பயங்கரவாதிகள் சுட்டதில் போலீஸார் 3 பேர் உயிரிழப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் காவல் நிலையத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் போலீசார் 3 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படையினர் 9 பேர் காயம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் ராஜ்பாக் காவல் நிலையத்திற்குள் காலை 6 மணி அளவில் காவல் நிலையத்திற்குள் ராணுவ உடையில் புகுந்த பயங்கரவாதிகள் 3 பேர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் போலீசார் 3 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் இரவு ஜம்மு காஷ்மீரில் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், பாதுகாப்புப் படை மற்றும் மாநில போலீசார் விரைந்து சென்று, சுற்றி வளைத்தனர். அங்கே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்புப் படை குவிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு-பதான்கோடே நெடுஞ்சாலை மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொலை செய்யப்பட்டான் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.