இவர்களின் இந்த முடிவுக்கு… மக்களின் எதிர்ப்பே காரணம்!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
sterlite dmk
sterlite dmk

அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருமித்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன்பு, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் திமுக., கம்யூனிஸ்ட் பாதிரி கும்பல்கள் இந்த முடிவுகளுக்கு கடுமையாக எதிர்ப்புகளைத் தெரிவித்தார்கள். ஆதரவு தெரிவித்தவர்கள் மீது சிலர் சேர்ந்து கொண்டு தாக்குதல் கூட நடத்தினார்கள்.

இப்போது, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து ஆக்சிஜன் தயாரிக்கலாம் என்று, எல்லா கட்சியும் எப்படி சம்மதித்தார்கள்?!

நாதர்ஸ் திருந்திட்டான்னா? என்று கவுண்டமணி மாதிரி மனசுக்குள் கேள்வி வரலாம்!

ஆக்சிஜன் தயாரிக்கக் கூட ஸ்டெர்லைட்டை திறக்கக் கூடாது என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்தது மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது என்பதே உண்மை!

தூத்துக்குடி மக்களே கூட உயிர் காக்கும் ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட்டை திறக்கக் கூடாது என்ற போராட்டத்தை ஆதரிக்கவில்லை. சமூக ஊடகங்களிலும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மக்கள் முழக்கமிட தொடங்கினர்.

இதையெல்லாம் பார்த்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு திமுக கம்யூனிஸ்ட் ஏன் அதிமுக அரசு கூட மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து விடக் கூடாது ஆக்சிஜன் கிடைக்கவில்லை எனில் மக்களிடையே மிகப்பெரிய எதிர்வினை ஏற்படும் என அஞ்சியே ஸ்டெர்லைட்டை திறக்க சம்மதித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் திறப்பு மக்கள் சக்தியின் மிகப்பெரிய வெற்றி~!

  • கா.குற்றாலநாதன், நெல்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.