
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய கூகுள் பிளேஸ்டோர் மட்டுமின்றி தெரியாத ஆதாரங்களில் இருந்து அடிக்கடி செயலிகளை பதிவிறக்கம் செய்கிறார்கள்
அதில் உள்ள செயலிகள் பல தனிப்பட்ட தகவல்களை திருடக்கூடும் என்பதாலும், ஹேக்கர்கள் சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடக்கூடும் என்பதாலும் கூகுள் நிறுவனம் அவ்வப்போது ஆபத்தான செயலிகளை நீக்கி வருகிறது..
அந்த வகையில், சமீபத்தில் கூகுள் ப்ளே ஸ்டோரில் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யக்கூடிய 8 ஆபத்தான செயலிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை மிகவும் ஆபத்தானது என்றும் சைபர் பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது..
எனவே உங்கள் மொபைலில் இதுபோன்ற ஆப்ஸ் ஏதேனும் நிறுவப்பட்டிருந்தால், உடனடியாக அவற்றை நீக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த 8 செயலிகள் மூலம் Clast 82 என்ற மால்வேர் ஸ்மார்ட்போனிற்குள் நுழைந்து, உங்கள் வங்கி தொடர்பான தகவல்களை திருடலாம் என்றும் இதனால் உங்கள் வங்கிக்கணக்கில் உள்ள பணத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், இது மூன்றாம் தரப்பினருக்கு உங்கள் மொபைல் சாதனத்திற்கான தொலைநிலை அணுகலை வழங்குகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது..
இந்த செயலிகள் மூலம் உங்கள் போனில் இருக்கும் பேங்கிங் செயலிகளை எளிதாக அணுக முடியும். எனவே இந்த செயலிகளை உடனடியாக அன் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் இந்த செயலிகளை அன்இன்ஸ்டால் செய்யவும், உங்கள் வங்கிச் செயலி மற்றும் வங்கிக் கணக்குடன் தொடர்புடைய கடவுச்சொல்லையும் மாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆபத்தான 8 செயலிகள் :
Cake VPN (com.lazycoder.cakevpns)
Pacific VPN (com.protectvpn.freeapp)
eVPN (com.abcd.evpnfree)
BeatPlayer (com.crrl.beatplayers)
QR/Barcode Scanner MAX (com.bezrukd.qrcodebarcode)
Music Player (com.revosleap.samplemusicplayers)
tooltipnatorlibrary (com.mistergrizzlys.docscanpro)
QRecorder (com.record.callvoicerecorder).