வ்யாக்ரீவதிஷ்டதி ஜரா பரிதர்ஜயந்தி
முதுமையும் அதிலிருக்கும் கஷ்டங்களையும் யாராலும் தவிர்க்க முடியாது. அதிலிருந்து தப்பிக்கவும் முடியாது.
ரோகாச்ச சத்ரவ இவ ப்ரஹரந்தி தேஹம்
இந்த சரீரம் வியாதிகளால் பயமுறுத்தப்படுகிறது. வியாதிகளைக் கண்டு பயமில்லை என்று யாராலும் கூற முடியாது.
வியாதிகளே இல்லாத மனிதனைப் பார்ப்பது மிகவும் துர்லபம். அப்படி இருக்கையில் மனிதனுக்கு எங்கே சாசுவதமான சுகம் இருக்கிறது?
மரணம், மீண்டும் வேறொரு தாயின் வழியாகப் பிறப்பு என இப்படியே சுற்றிக் கொண்டிருந்தால் எங்கே சந்தோஷத்தை அனுபவிப்பது?
இந்த பிறப்பு-முதுமை-இறப்பு என்னும் சக்கரத்தில் மீண்டும் மீண்டும் சுற்றிக்கொண்டேயிருக்கும் ஒரு வலையில் நாம் விழுந்துவிட்டோம், இதுதான் பந்தம் ஆகும்.
யாருக்கு இந்தப் பந்தம் இருக்கிறது? இது உடம்பிற்கா அல்லது ஆத்மாவிற்கா? இது உடம்பிற்குத்தான். ஆத்மாவிற்கு பந்தம் என்றும் இல்லை.
ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்