கனடா மற்றும் ஐரோப்பியா யூனியன் இணைந்து உலகிலேயே முதல் முறையாக பெண் வெளியுறவு துறை அமைச்சர்கள் கூட்டம் நடத்த உள்ளதாக கனடா வெளியுறவு துறை அமைச்சர் ச்ர்ய்சதியா பிரீலான்ட் தெரிவித்துள்ளார். ஜி7 வெளியுறவு துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய அவர், வரும் செப்டம்பர் மாதம் 21ம் தேதி இரண்டு நாட்கள் இந்த கூட்டம் நடக்க உள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த கூட்டம் குறித்து கனடா அரசு தெரிவிக்கையில், 30 நாடுகளை சேர்ந்த பெண் வெளியுறவு துறை அமைச்சர்களுக்கு இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும். பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்த ஆலோசனை நடத்துவதே இந்த கூட்டத்தின் நோக்கமாகும்.