உட்கார்ந்திருப்பது புகை பிடிப்பதை விட மோசமானது: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஆலோசனைகள் கட்டுரைகள் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

IMG 20180320 WA0000 - 2026

புகை பிடிப்பதால் பல்வேறு நோய்கள் வருகிறது என்று கூறி பார்த்திருக்கின்றோம். ஆனால் ஒரே இடத்தில் 6 மணி நேரத்திற்கு மேல் உட்கார்ந்திருப்பது ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பதைவிட மோசமானது என்று ஆய்வு ஒன்று கூறுகின்றது. வெகுநேரம் உட்கார்ந்தே இருப்பதால் கொலஸ்ட்ரால், கொழுப்பு அதிகரித்து இதயநோய்க்கு வழிவகுப்பதாக அந்த ஆய்வு மேலும் கூறுகின்றது. மேலும் அதிக நேரம் உட்கார்ந்திருப்பவர்களை சர்க்கரை நோயும் எளிதில் பிடித்து கொள்கிறது.

ஐடி உள்பட பல அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் கிட்டத்தட்ட 8 மணி நேரம் உட்கார்ந்து கொண்டே பணிபுரிவதால் கைநிறைய சம்பளம் வாங்குவது மட்டுமின்றி நோய்களை வாங்கி கொண்டு வருகின்றனர். இதனை தவிர்த்திட அவ்வப்போது எழுந்து சிறுசிறு உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அதிக நேரம் உட்கார்ந்தே பணி செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன தெரியுமா?

1. ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை எழுந்து ஓரிரு நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்ய வேண்டும்

2. ஒரு சிறிய வேலை, அல்லது சந்திப்பு என்றால் எழுந்து நின்றே முடிந்தவரை முடிக்கலாம்

3. ஒருசில பணிகளை நடந்து கொண்டே செய்ய முடியுமா? என்று பாருங்கள்

4.உட்கார்ந்து கொண்டிருக்கும்போது நேரம் கிடைக்கும்போது சிறுசிறு உடற்பயிற்சிகளை செய்யலாம்

5. அவ்வப்போது பொழுது போக்கு மையத்திற்கு சென்று உடற்பயிற்சி அல்லது விளையாட்டில் ஈடுபடுங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.