ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி! வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்!

indian hockey team for tokyo olympics - 2026

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

தகுதிப் போட்டிகளில் விளையாடி 12 அணிகள் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தேர்வு பெற்றுள்ளன. அவை குரூப் A & B என இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் Aஇல் அர்ஜெண்டைனா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, ஸ்பெயின் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் Bஇல் பெல்ஜியம், கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒலிம்பிக்கில் ஒரு பிரிவில் இருந்து நான்கு அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். எனவே காலிறுதிக்கு முன்னேறுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. காலிறுதியில் யாரை எதிர்கொள்கிறீர்கள் என்பதைப் பொருத்து முன்னேறிசெல்வது இருக்கும். காலிறுதியில் சிறப்பான ஆட்டம், அரையிறுதிக்கு செல்லும் உத்தரவாதத்தை அளிக்கும். இதற்கு குழுநிலைப் போட்டிகளை லேசாக எடுத்துக் கொள்ளலாம் எனப் பொருளல்ல. ஒரு பிரிவின் எல்லா போட்டிகளிலும் வென்று முதலிடத்தை பிடித்தால் காலிறுதியில் நீங்கள் இரண்டாவது பிரிவில் இருந்து குறைந்த தரவரிசை கொண்ட அணியை எதிர்கொள்வீர்கள். இது நமக்கு சாதகமாக இருக்கும்,

இந்திய ஹாக்கி அணி 2020இல் நன்றாக இருந்தது. இரண்டு போட்டிகளில் இந்தியா நெதர்லாந்தை தோற்கடித்தது. இதன் பின்னர், உலக சாம்பியனும், உலகின் முதல் தரவரிசை அணியுமான பெல்ஜியத்திற்கு எதிரான இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றிபெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 4 – 1 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்தது. ஆனால் போட்டியின் கடைசி 15 நிமிடத்தில், இந்தியாவின் அதிரடியான தாக்குதல் ஆட்டம் காரணமாக இரண்டு கோல்கள் போடப்பட்டன. இது அணியின் செயல்திறனில் முன்னேற்றத்தைக் காட்டியது. இந்தப் பந்தயத்தில் இந்தியா வெற்றிபெற முடியவில்லை. ஆனால் இரண்டாவது போட்டியில் நன்மை கிடைத்தது. அதில் அணி 2 – 2 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்ற பின்னர் பெனால்டி ஷூட்அவுட்டில் இந்தியா வென்றது.

இது 2016க்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் வெற்றியாகும். அதே நேரத்தில், இந்த ஆண்டு ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவை தோற்கடித்ததன் மூலம், இந்தியா தனது தயார் நிலையை உறுதி செய்தது. இந்த விஷயங்கள் அனைத்தும் இந்த முறை அணியை வெற்றிமேடையை நோக்கி அழைத்துச் செல்லும் வாய்ப்பை சுட்டுகின்றன. திறமையும் அதிர்ஷ்டமும் சரியான நேரத்தில் கைகொடுக்க வேண்டியதுதான் பாக்கி.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

இப்போதிருக்கும் இந்திய ஹாக்கி அணி 2016, 2018 ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை, 2017 ஆசிய தங்க கோப்பை மற்றும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சீரிஸ் கோப்பையையும் வென்றுள்ளது. இம்முறை அனுபவமும் இளமையும் கொண்ட ஹாக்கி அணியை தேர்வு செய்து அனுப்பியுள்ளது. ஜப்பான் ஒலிம்பிக்கில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணியுடன் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், நியூசிலாந்து மற்றும் ஜப்பான் இடம்பெற்று இருக்கிறது.

இந்திய ஹாக்கி அணி விவரம்

கோல் கீப்பர்: பிஆர் ஸ்ரீஜேஷ்

தடுப்பாட்ட வீரர்கள்: ஹர்மன்ப்ரீத் சிங் (அணித்தலைவர்), ருபிந்தர் பால் சிங், சுரேந்தர் குமார், அமித் ரோஹிதாஸ், பிரேந்திரா லக்ரா

நடுக்கள வீரர்கள்: ஹர்திக் சிங், மன்ப்ரீத் சிங், விவேக் சாகர் பிரசாத், நீலகண்டா சர்மா, சுமித்.

முன்கள வீரர்கள்: சம்ஷேர் சிங், தில்ப்ரீத் சிங், குர்ஜான்த் சிங், லலித் குமார் உபாத்யாய, மந்தீப் சிங்

பயிற்சியாளர்: கிரஹாம் ரீட்; மேலாளர் அர்ஜுன் ஹாலப்பா

போட்டிகளின் தேதி, நேரம்

ALSO READ:  ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

டோக்கியோ ஒலிம்பிக் 2020க்கான ஹாக்கிப் போட்டிகள் நடைபெறும் நேர அட்டவணை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆண்கள் ஹாக்கி போட்டிகள்தேதிநேரம் (இந்திய நேரம்)
இந்தியா vs நியூசிலாந்துஜூலை 24காலை 6:30
இந்தியா vs ஆஸ்திரேலியாஜூலை 25மாலை 3
இந்தியா vs ஸ்பெயின்ஜூலை 27காலை 6:30
இந்தியா vs அர்ஜென்டினாஜூலை 29காலை 6
இந்தியா vs ஜப்பான்ஜூலை 30மாலை 3
ஆண்கள் காலிறுதிஆகஸ்ட் 1
ஆண்கள் அரையிறுதிஆகஸ்ட் 3
பதக்கப் போட்டிகள்ஆகஸ்ட் 5
பெண்கள் ஹாக்கி போட்டிகள்தேதிநேரம்
இந்தியா vs நெதர்லாந்துஜூலை 24மாலை 3
இந்தியா vs ஜெர்மனிஜூலை 26மாலை 3:30
இந்தியா vs கிரேட் பிரிட்டன்ஜூலை 28காலை 6:30
இந்தியா vs அயர்லாந்துஜூலை 30காலை 6
இந்தியா vs தென்னாப்பிரிக்காஜூலை 31காலை 6:30
பெண்கள் காலிறுதிஆகஸ்ட் 2
பெண்கள் அரையிறுதிஆகஸ்ட் 4
பதக்கப் போட்டிகள்ஆகஸ்ட் 6

indian hockey team for tokyo olympics1 - 2026

மகளிர் ஹாக்கி

டோக்கியாவில் அடுத்த மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வீராங்கனைகள் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் புதிதாக 8 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். கேப்டனாக ராணு ராம்பால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

வீராங்கனைகள் பெயர்ப் பட்டியல் விவரம் – ராணி ரம்பால் (அணித் தலைவர்), சவிதா, நிஷா, நேகா, சுஷிலா, நன்ஜோத் கவுர், சலிமா, நவ்னீத், வந்தனா, லால்ரெம்சியாமி, சர்மிளா, தேவி, கட்டாரியா

இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னர், 1980ஆம் ஆண்டு மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இந்திய மகளிர் அணி ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Entertainment News

Popular Categories