வரும் செவ்வாய்க்கிழமை திமுக அவசர செயற்குழு கூட்டம்

சற்றுமுன் தமிழகம்

07 Aug10 dmk - 2026திமுக அவசர செயற்குழு கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இது தொடர்பாக, திமுக பொதுச்செயலர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை கலைஞர் அரங்கில் திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் நடக்கும் என்றும் இதில் செயற்குழு உறுப்பிர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த கூட்டத்தில், பொதுக்குழு கூட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் என தெரிகிறது. பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவது பற்றி பேசப்படலாம் என தெரிகிறது. திமுக.,வின் அவசர செயற்குழு எதற்கு என்பது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திமுக செயற் தலைவர் ஸ்டாலின், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கவே அவசர செயற்குழு கூட்டம். கருணாநிதி நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்தவும், பார்வையாளர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.