
கரிசாலங்கண்ணி துவையல்
தேவையான பொருட்கள்
3/4 அ 1 கப் கரிசலாங்கண்ணி கீரை
1 சிகப்பு மிளகாய்
1 Tsp உளுத்தம் பருப்பு
8 மிளகு
4 பற்கள் பூண்டு
1/4 Tsp கொத்தமல்லி விதை
1 Tsp நல்லெண்ணெய்
1/2 Tsp உப்பு
சின்ன கோலி குண்டு அளவு புளி
செய்முறை :
கீரையை கழுவி தண்ணீரை வடித்து சிறிது ஆற விடவும். அடுப்பில் வாணலியை வைத்து 1/2 tsp எண்ணெய் விட்டு சிகப்பு மிளகாய், உளுத்தம் பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்தெடுக்கவும்.
அதிலேயே மிளகு மற்றும் மல்லியை வறுத்துக்கொள்ளவும்.
தனியே எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் மேலும் 1/2 tsp எண்ணெய் விட்டு கீரையை வதக்கிக் கொள்ளவும்.
ஆறியபின் மிக்சியில் மற்ற பொருட்களுடன் சேர்த்து மைய அரைத்தெடுக்கவும். பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சாதத்தில் 1 tsp துவையல் சேர்த்து நல்லெண்ணெயுடன் கலந்து சாம்பார் மற்றும் பிடித்தமான பொரியல் அல்லது முருங்கைக்காய் சாம்பார் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் மிக ருசியாக இருக்கும்.