Kuthuraivali arisi kichadi
Kuthuraivali arisi kichadi

குதிரைவாலி அரிசி கிச்சடி
தேவையான பொருட்கள்
1.5 கப் குதிரைவாலி அரிசி
1டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெய்
1/2டீஸ்பூன் கடுகு
1டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
1டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு
3பச்சை மிளகாய்
1காய்ந்த மிளகாய்
1 கொத்து கருவேப்பிலை
1வெங்காயம்
1தக்காளி
1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1 கேரட்
1/2 கப் பச்சை பட்டாணி
தேவைக்கேற்ப உப்பு

செய்முறை
வெறும் வாணலில் குதிரைவாலி அரிசியை வறுத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியதும் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

பின்பு அதில் தக்காளி சேர்த்து வதக்கி பொடியாக நறுக்கிய கேரட் மற்றும் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும். அதில் தேவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

வறுத்த அரிசியை நன்கு அலம்பி 3.5 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில், மிதமான தீயில் 5 விசில் விடவும்

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

குக்கரில் விசில் அடங்கியதும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி சிறிது கொத்தமல்லி இலை தூவி சட்னியுடன் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending