ஒரே இன்னிங்க்ஸ்… 10 விக்கெட் … மடமடவென வீழ்த்திய சாதனையாளர்!

Reporters Diary அடடே... அப்படியா? இந்தியா லைஃப் ஸ்டைல் விளையாட்டு
10wickets - 2026

19 வயதுக்குட்பட்டோருக்கான கூச் பேகர் தொடரில் மனிப்பூரைச் சேர்ந்த ரெக்ஸ் சிங் என்ற வீரர், எதிரணியின் அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் எதிரணியின் அனைத்து விக்கெட்களையும் ஒரே பவுலர் வீழ்த்துவது மிகவும் அபூர்வமான ஒன்று! டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது மிகவும் அபூர்வமான சாதனையாகவே பார்க்கப்படும். ஆனால் அந்த சாதனையை மணிப்பூரைச் சேர்ந்த 18 வயது இடதுகை மித வேகப் பந்துவீச்சாளரான ரெக்ஸ் சிங் செய்துள்ளார்.

அருணாசலப் பிரதேசத்திற்கு எதிரான கூச் பேகர் போட்டித் தொடரில் வெறும் 11 ரன்களை மட்டுமே கொடுத்து 10 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்…இதே போன்றதொரு சாதனையை ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற சிகே நாயுடு 23 வயதிற்கானக் கோப்பைத் தொடரில் பாண்டிச்சேரியை சேர்ந்த சிதாக் சிங் என்பவர் மணிப்பூருக்கு எதிராக நிகழ்த்தினார்.

ரெக்ஸ் சிங் நிகழ்த்திய சாதனையின்… வீடியோ இங்கே…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.