December 7, 2025, 2:08 AM
25.6 C
Chennai
Home Blog Page 12

மதுரை காமராஜ் பல்கலை ஆசிரியர் சங்கம் இரவிலும் தொடர் போராட்டம்!

madurai kamaraj university staffs protest1 - 2025

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலமுறை பதவி உயர்வு வழங்ககோரி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இரவிலும் தொடர் போராட்டம்:

மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் இன்று காலை 10 மணி முதல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகம் முன்பு தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினர்.

இதனால், பல்கலைக்கழக பதிவாளர் அறை முன்பு கைகளில் பதாகைகளுடன் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினர். இதில், பெண் பேராசிரியர்கள்
உட்பட 50 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் கூறுகையில் 2022 ம் வருடம் முதல் காலமுறை பதவி உயர்வை வலியுறுத்தி பதிவாளர், உயர்கல்வித் துறை செயலாளர், பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் சுந்தரவல்லி உள்ளிட்டோரிடம் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் , தகுதியுடைய பலருக்கும் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு உள்ளிட்ட எந்த பலன்களும் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, காமராஜர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கியுள்ளோம்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இந்த தொடர் உள்ளிருப்பு போராட்டம் கோரிக்கை நிறைவேற்றும் வரை தொடரும் என கூறி பேராசிரியர்கள் இரவிலும் போராட்டத்தை தொடர்கின்றனர்.

மழையில் நனைந்து வீணாகும் நெல்மூட்டைகள்; விவசாயிகள் குமுறல்!

chozhavanthan paddy bags in rain1 - 2025

சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள 5000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாக கூடிய சூழ்நிலை இருப்பதாக விவசாயிகள் குமுறல்.

மத்திய குழுவினர் ஆய்வு செய்து சென்ற பின்பும் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி கருப்பட்டி அம்மச்சியாபுரம் கட்டக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் குவியல்கள் மற்றும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாக கூடிய சூழ்நிலை இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாத நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மழையில் நனைந்த நெல் குவியல்களை மத்திய குழுவினர் கட்டக்குளம் ஆண்டிபட்டி போடிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்து நெல்மாதிரிகளை சேகரித்து சென்றனர்.

இந்த நிலையில், மத்திய குழுவினர் ஆய்வு செய்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆன நிலையில் வாடிப்பட்டி சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாமல் தேங்கியுள்ளது இதனால் மழை பெய்யும் பட்சத்தில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகும் சூழ்நிலை இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், தினசரி ஆயிரம் முட்டை கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் கூறி வந்த நிலையில் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். ஆகையால் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் குவியல்கள் மற்றும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு சில கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்த நெல் குவியல்களை மறுபடியும் உலர வைத்து காயப்போடும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஆகையால், ஏக்கருக்கு பத்தாயிரம் முதல் 20 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை உடனடியாக வழங்க வேண்டும் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் குவியல்கள் மற்றும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

One India, Great India: The Legacy of Ekta Diwas!

0
sardar vallabhbhai patel - 2025

Every year on October 31, the nation pauses to honour one of its tallest leaders — Sardar Vallabhbhai Patel, the Iron Man of India. His vision, courage and statesmanship transformed a fragmented subcontinent into a single, united country. The day is observed as Ekta Diwas or National Unity Day, a tribute not only to Patel’s leadership but also to the enduring idea of India — diverse yet indivisible.

image - 2025

The Man Who Forged a Nation

When India won independence in 1947, celebration came with an enormous challenge. The British left behind more than 560 princely states, each with its own ruler and aspirations. The dream of a united India could have easily collapsed into chaos and division.

At that critical moment, Sardar Patel stepped forward as the architect of national integration. With a rare blend of firmness and diplomacy, he persuaded most rulers to accede to India, while dealing decisively with those who resisted. His handling of Hyderabad, Junagadh and other difficult regions showed a combination of restraint, tact and iron will.

image 1 - 2025

Patel’s success was not just administrative; it was visionary. He believed that political unity was the foundation upon which India’s social and economic progress would stand. Without his leadership, the India we know today — stretching from Kashmir to Kanyakumari — might never have taken shape.

The Meaning Behind Ekta Diwas

image 2 - 2025

Ekta Diwas is not a mere date on the calendar. It is a reminder of the values that bind us as a nation. It urges every Indian to remember that our strength lies in our unity, not in our divisions. The observance of the day across schools, institutions and offices — through runs for unity, cultural programs and pledges — is a symbolic reaffirmation of the principle Patel stood for: India first, always.

But beyond ceremony, the essence of Ekta Diwas lies in reflection. In a nation as vast and diverse as ours — with its multitude of languages, religions and customs — unity does not mean uniformity. It means the willingness to stand together despite differences, and to see in that diversity our greatest strength.

Relevance in a Changing India

More than seven decades after independence, the message of Ekta Diwas feels as relevant as ever. The challenges facing India today are different from those of 1947, yet they echo the same theme — the need to stay united amidst complexity.

image - 2025

Regionalism, communal divides and political polarization continue to test our collective spirit. But the idea of “Ek Bharat, Shreshtha Bharat” — One India, Great India — remains the guiding light. It reminds us that India’s greatness lies not in sameness, but in its ability to hold together countless differences through shared values and mutual respect.

The Statue of Unity in Gujarat, standing tall at 182 meters, is more than a monument. It is a message in stone — that one man’s determination can shape a nation’s destiny. It stands as a daily reminder of Patel’s belief that India’s unity was not a gift, but an achievement won through vision and resolve.

The Living Legacy of Patel

Patel’s legacy cannot be confined to the pages of history. It lives in the very structure of India — in its civil services, its federal framework, and its national character. His emphasis on discipline, duty and national interest continues to guide public life.
He once said, “Manpower without unity is not a strength unless it is harmonized and united properly.” His words hold a mirror to our times, when rapid progress and technological change must still be rooted in a sense of common purpose. Unity, for Patel, was not an abstract idea — it was the lifeblood of a strong and stable democracy.

image 3 - 2025

One India, Great India

To celebrate Ekta Diwas is to celebrate the idea of nationhood that transcends all barriers — caste, creed, language or region. It calls upon every citizen to rise above narrow loyalties and commit to the larger ideal of India.

As we mark this day each year, we must remember that unity must be nurtured. It is a daily act of responsibility — in how we treat each other, how we respect diversity, and how we place the nation above self-interest.

Sardar Vallabhbhai Patel gave us a demographically united India. The task of keeping it strong, inclusive and vibrant rests with us. The spirit of Ekta Diwas reminds us that only a united India can truly be a great India — One India, Great India.

ஒரே பாரதம், உன்னத பாரதம்: தேசிய ஒற்றுமை தினத்தின் முழக்கம்!

sardar vallabhbhai patel - 2025
image - 2025

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31ம் தேதி அன்று, நாட்டின் உயரிய தலைவர்களில் ஒருவரான, இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேலை கௌரவிக்கும் விதமாக அவருடைய பிறந்த நாளை கொண்டாடுகிறது.  அவரது தொலைநோக்குப் பார்வை, துணிச்சல் மற்றும் அரசியல் திறன் ஆகியவற்றல்தான், துண்டு துண்டாகக் கிடந்த ராஜ்ஜியங்கள் இணைந்து, ஒன்றுபட்ட ஒரே நாடாக நம் நாடு மாறியது. எனவே தான், அவரது பிறந்த நாளான இந்நாளில், ஏக்தா திவஸ் அதாவது தேசிய ஒருமைப்பாட்டு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது, இது, வல்லபபாய் படேலின் தலைமைத்துவத்துக்கு மட்டுமல்ல, இந்தியா பன்முகத்தன்மை கொண்ட ஒரே நாடு, என்றும் பிரிக்க முடியாதது என்ற நீடித்த யோசனையை நிலைநிறுத்துகிறது.  

ஒரு தேசத்தை உருவாக்கிய மாமனிதர்: 

1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது, ​மிகப் பெரும் சவாலுடன் தான் சுதந்திரத்தைக் ​கொண்டாட வேண்டியிருந்தது. ஆங்கிலேயர்கள் 560 க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்களை விட்டுச் சென்றனர். ஒவ்வொன்றும் அதன் சொந்த ஆட்சியாளர்களையும் அவர்களுக்கே உரிய விருப்பங்களையும் கொண்டிருந்தன. அந்தச் சூழ்நிலையில், ஒன்றுபட்ட இந்தியா எனும் கனவு, எளிதில் குழப்பத்திலும் பிரிவினையிலும் சரிந்திருக்கக்கூடும்!

image 1 - 2025

அந்த இக்கட்டான தருணத்தில், சர்தார் வல்லபபாய் படேல் தேசிய ஒருங்கிணைப்பின் சிற்பியாகத் திகழ்ந்தார். உறுதிப்பாட்டுடன் கூடிய ராஜதந்திரத்தின் கலவையாக, பெரும்பாலான சுதேச ஆட்சியாளர்களை இந்தியாவுடன் இணையும்படி அவர் வற்புறுத்தினார். அதே நேரத்தில் எதிர்த்தவர்களுடன் தீர்க்கமாகவும் நடந்து கொண்டார். ஹைதராபாத், ஜூனாகத் மற்றும் பிற முரண்டுபிடித்த பகுதிகளை இணைப்பதில் அவர் கையாண்ட விதம், அவரை இரும்பு மனிதராக வெளிப்படுத்தியது. கட்டுப்பாடு, ராஜதந்திரம், இரும்பைப் போன்ற மன உறுதி ஆகியவற்றின் கலவையை அது வெளிச்சமிட்டுக் காட்டியது. 

படேலின் வெற்றி, வெறும் நிர்வாக ரீதியாக மட்டுமல்ல; அது தொலைநோக்குப் பார்வை கொண்டது. இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அரசியல் ஒற்றுமை இருக்கும் என்று அவர் நம்பினார். அவரது தலைமை இல்லாமல், இன்று நாம் காணும் இந்தியா – காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை – ஒருபோதும் ஒரு முழுமையான வடிவத்தைப் பெற்றிருக்காதுதான்!

தேசிய ஒற்றுமை தினத்துக்குப் பின் உள்ள அர்த்தம்!

image 2 - 2025

தேசிய ஒற்றுமை தினம் என்பது நாட்காட்டியில் வெறும் ஒரு தேதி மட்டுமல்ல, இது ஒரு தேசமாக நம்மைப் பிணைக்கும் மதிப்புகளை நினைவுறுத்துகிறது. நமது பலம் நமது ஒற்றுமையில்தான் உள்ளது, நமது பிரிவுகளில் அல்ல என்பதை ஒவ்வோர் இந்தியரையும் நினைவில் கொள்ளுமாறு இந்த தினம் வலியுறுத்துகிறது. பள்ளிகள், நிறுவனங்கள், அலுவலகங்களில் – ஒற்றுமைக்கான ஓட்டங்கள், கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் உறுதிமொழிகள் மூலம் – இந்தியா எனும் நாடுதான் முதலில்; என்றும் எப்போதும்! – எனும் படேல் நிலைநாட்டிய கொள்கையின் அடையாளமாக மீண்டும் உறுதிப்படுத்துவதே இந்த நாளைக் கொண்டாடுவதன் பொருள்!

ஆனால் விழாவுக்கு அப்பால் பார்க்கும்போது, இந்த ஒற்றுமை தினத்தின் சாராம்சம், அதன் பிரதிபலிப்பில் உள்ளது. நம்முடையதைப் போன்ற பரந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் – அதன் பல மொழிகள், மதங்கள் மற்றும் பழக்கவழக்கங்களுடன் – ஒற்றுமை என்பது ஒரு சீரான தன்மையைக் குறிக்காதுதான்! வேறுபாடுகள் பல இருந்தபோதும், ஒன்றாக நிற்கவும், அந்த ப்பன்முகத்தன்மையில் நமது மிகப்பெரிய பலத்தைக் காணவும் விரும்புகிறோம் என்பதே இதன் பொருள்!

மாறிவரும் இந்தியாவில் பொருத்தம்

image - 2025

சுதந்திரம் பெற்று ஏழு பத்தாண்டுகளுக்கு மேல் ஆகியும், ஒற்றுமை தினத்தின் செய்தி எப்போதும் போலவே பொருத்தமானதாக உணரப்படுகிறது. இன்று இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் 1947 இல் எதிர்கொண்ட சவால்களிலிருந்து வேறுபட்டவைதான். இருந்தாலும் அவை, சிக்கலான தன்மைகளுக்கு மத்தியில் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்த ஒரே கருப்பொருளை எதிரொலிக்கின்றன.

பிராந்தியவாதம், வகுப்புவாத பிளவுகள், அரசியல் ரீதியாக பிளவுபடுத்தும் தன்மை ஆகியவை நமது கூட்டுறவு உணர்வைத் தொடர்ந்து சோதனைக்கு உள்ளாக்குகின்றன. ஆனால் “ஒரே பாரதம், உன்னத பாரதம்”,  ஒரே இந்தியா, சிறந்த இந்தியா என்ற கருத்து, வழிகாட்டும் ஒளியாக உள்ளது. இந்தியாவின் மகத்துவம் வெறும் ஒற்றுமையில் இல்லை, மாறாக பகிர்ந்தளிக்கப்பட்ட மதிப்புகள் மற்றும் பரஸ்பர மரியாதை மூலம் எண்ணற்ற வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைக்கும் திறனில் உள்ளது என்பதை  நமக்கு நினைவூட்டுகிறது.

குஜராத்தில் 182 மீட்டர் உயரத்தில் உயரமாக நிற்கும் ஒற்றுமை சிலை, வெறும் ஒரு நினைவுச்சின்னம் என்பதை விட அதிகம்! கல்லில் வடிக்கப்பட்ட அந்தச் செய்தி – ஒரு மனிதனின் உறுதிப்பாடு ஒரு நாட்டின் விதியை வடிவமைக்க முடியும் என்பது. மேலும், இந்தியாவின் ஒருமைப்பாடு என்பது ஒரு பரிசல்ல, மாறாக தொலைநோக்கு மற்றும் உறுதிப்பாட்டின் மூலம் வென்ற சாதனை எனும் வல்லபபாய் படேலின் நம்பிக்கையின் தினசரி நினைவூட்டலாக இந்தச் சிலை நின்று கொண்டிருக்கிறது. 

படேலின் வாழும் மரபு

image 3 - 2025

படேலின் மரபு, வெறும் நம் வரலாற்றின் பக்கங்களுக்குள் மட்டுமே நின்றுவிட முடியாது. அது இந்தியாவின் கட்டமைப்பிலேயே வாழ்கிறது! அதன் குடிமைப் பணிகள், அதன் கூட்டாட்சிக் கட்டமைப்பு மற்றும் அதன் தேசியத் தன்மை ஆகியவற்றிலான. ஒழுக்கம், கடமை, தேசிய நலன் மீதான அவரது முக்கியத்துவம்  போன்றவை, பொதுவாழ்வைத் தொடர்ந்து வழிநடத்துகிறது.

“ஒத்திசைந்து முறையாக ஒன்றுபட்டால் ஒழிய, ஒற்றுமைப்படாத மனிதவளம்  பலம் அற்றது” என்று அவர் ஒருமுறை கூறினார். விரைவான முன்னேற்றமும் தொழில்நுட்ப மாற்றமும் இன்னும் பொதுவான நோக்கத்தில் வேரூன்ற வேண்டிய நமது காலத்திற்கு, அவரது வார்த்தைகள் ஒரு கண்ணாடி! ஒற்றுமை என்பது, படேலுக்கு வெறும் ஒரு சுருக்கமான கருத்தோட்டம் அல்ல,  அது ஒரு வலுவான மற்றும் நிலையான ஜனநாயகத்தின் உயிர்நாடி.

ஒரே பாரதம், உன்னத பாரதம் 

ஒற்றுமை தினத்தைக் கொண்டாடுவது என்பது சாதி, மதம், மொழி அல்லது பிராந்தியம் போன்ற அனைத்து தடைகளையும் தாண்டிய, தேசியத்தின் கருத்தைக் கொண்டாடுவதாகும். குறுகிய விசுவாசங்களைத் தாண்டி உயர்ந்து இந்தியாவின் பெரிய இலட்சியத்திற்கு உறுதியளிக்க ஒவ்வொரு குடிமகனையும் இது அழைக்கிறது.

ஒவ்வோர் ஆண்டும் இந்த நாளை நாம் குறிக்கும் போது, ​​ஒற்றுமை என்ற இந்த உணர்வு மேலும் வளர்க்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்! நாம் ஒருவரை ஒருவர் எவ்வாறு நடத்துகிறோம், பன்முகத்தன்மையை எவ்வாறு மதிக்கிறோம்,  தேசத்தை சுயநலன் கடந்து எவ்வாறு வைக்கிறோம் என்பதில். இது பொறுப்புணர்வுள்ள நித்தியப்படியான செயல் ஆகிறது!

சர்தார் வல்லப பாய் படேல், கலாசார மரபு ரீதியில் ஒன்றுபட்டிருந்த பாரதத்தை,  அரசியல் ரீதியாக ஒன்றுபட்ட ஒரு நாடாக நமக்கு அளித்தார். அதை வலுவானதாவும்,  துடிப்புள்ளதாகவும் வைத்திருக்கும் பணி நம்மிடம் உள்ளது. ஒன்றுபட்ட இந்தியா மட்டுமே, உண்மையிலேயே ஒரு சிறந்த இந்தியாவாக இருக்க முடியும் என்பதே ஒற்றூமை தினத்தின் உணர்வு!  ஒரே இந்தியா, உன்னத இந்தியா என்பதை இந்த உணர்வு நமக்கு நினைவூட்டும்! 

திருப்பரங்குன்றம் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்ற பக்தர்களுக்கு இந்து முன்னணி அழைப்பு!

hindumunnani
hindumunnani

நீதிமன்றத்தின் உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்ற பக்தர்களுக்கு இந்து முன்னணி அறைகூவல் விடுப்பதாக அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

கார்த்திகை தீபத்திருவிழா தமிழகத்தின் பாரம்பரிய திருவிழாவாகும். அதிலும் முருகன் திருத்தலங்களில் விசேஷமாக கொண்டாடுவதுடன் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது மரபு ஆகும்.

அதன் அடிப்படையில் முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தின் மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக நடந்து வந்தது.

இரண்டாம் உலகப் போரின்போது பாதுகாப்பு காரணம் கருதி பிரிட்டீஷ் அரசாங்கம் அந்த தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை தடுத்துள்ளது. அதன் காரணமாக கோவிலின் முகப்பில் உள்ள இறந்தவர்களுக்காக தீபம் ஏற்றும் மோட்ச தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியுள்ளார்கள். தேசம் சுதந்திரம் அடைந்த பிறகும் கூட இந்த நடைமுறை மாறி பழைய பாரம்பரியம் காக்கப்படவில்லை.

இதனை மாற்ற வேண்டும் என்றும், தீபத் தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்து முன்னணி பல ஆண்டுகளாக மக்கள் போராட்டமாக நடத்தி வருகிறது.

இந்து முன்னணியின் மாநிலத் தலைவராக இருந்த அமரர் மாவீரன் அட்வகேட் ராஜகோபாலன் பல ஆண்டுகள் தொடர்ந்து போராட்டத்திற்கு தலைமையேற்று போராடினார். மேலும் சட்டரீதியான போராட்டமும் நடத்தி மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றத்தின் உத்தரவையும் பெற்றார்.

ஆனால் துரதிருஷ்டமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி பல ஆண்டுகள் ஆகியும் கோவில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் நீதிமன்ற உத்தரவையையும் மதிக்கவில்லை, பக்தர்களின் உணர்வுகளையும் ஏற்காமல் அலட்சியம் செய்து வருகிறது.

இந்நிலையை மாற்ற முருக பக்தர்கள் எல்லா தலங்களிலும் கார்த்திகை தீபத்தை கொண்டாடுவது போல முருகனின் முதல்படை வீடாகத் திகழும் திருப்பரங்குன்றம் மலைமீதான தீபத்தூணில் திருகார்த்திகை தீபத்தை ஏற்றிடுவோம் வாருங்கள் என்று இந்து முன்னணி அறைகூவல் விடுக்கிறது.

வழிபாடு நமது உரிமை. அதிலும் சட்டத்தின்படி நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. திருகார்த்திகை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை கோவில் நிர்வாகம் அலட்சியப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

எனவே வருகின்ற திருக்கார்த்திகை தினத்தில் திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றிட முருக பக்தர்கள் பெருந்திரளாக வருகைதர வேண்டுகிறோம்.

தீபத்தூணில் தீபம் ஏற்றி நமது பாரம்பரிய திருவிழாவை கொண்டாடுவோம். இதற்கு முருகன் அடியார்கள், ஆன்மீக குழுக்கள், பாதயாத்திரை குழுக்கள், காவடி குழக்கள், ஆன்மீக பெரியோர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்..

உசிலம்பட்டி: தேவர் ஜயந்தி விழா!

usilampatti devar gurupooja - 2025

உசிலம்பட்டியில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் பி.கே. மூக்கையாத் தேவர் திருவுருவ சிலைகளுக்கு மேல் மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்டன மற்றும் மின் விளக்கு படங்களுடன் ஜொலித்தன- இதனை, இளைஞர்கள் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பலர் சமூகத் தளங்களில் பதிவிட்டனர்.

தேவர் ஜயந்தியை முன்னிட்டு இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 63 வது குருபூஜை விழாவும் 118 வது ஜெயந்தி விழாவும் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை,தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களை இணைக்கும் மையப் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் பி.கே. மூக்கையாத் தேவர் திருவுருவ முழு வெண்கல சிலைகள் அமைந்துள்ளது.

இந்நிலையில் , இச்சிலைகளுக்கு உசிலம்பட்டி சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் மற்றும் உசிலம்பட்டி நகர் பகுதி வணிகர்கள் சங்கத்தினர், கடை வியாபாரிகள் சங்கத்தினர், ஆட்டோ ஓட்டுநர்கள், பூ மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் மாலை அணிவித்தும் பால்குடம் எடுத்து வந்து பால் அபிஷேகம் செய்து மரியாதை செலுத்த உள்ளனர்.

மேலும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு மேல் வண்ண விளக்குகளால் அலங்கரித்து அமைக்கப்பட்டும் வண்ண விளக்குகளால் புகைப்படங்களுடன் ஜொலிக்கின்றன. இதனை,
உசிலம்பட்டி சுற்றியுள்ள இளைஞர்கள் கண்டுரசித்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். மேலும், உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசியல் கட்சியினர் மரியாதை

உசிலம்பட்டியில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தேமுதிக சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் பி.கே. மூக்கையாத் தேவர் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தேவர் ஜெயந்தி முன்னிட்டு இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 63 வது குருபூஜை விழாவும் 118 வது ஜெயந்தி விழாவும் கொண்டாடப்படு வருகிறது.

இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் பி.கே. மூக்கையாத் தேவர் திருவுருவ முழு வெண்கல சிலைகளுக்கு தேமுதிக சார்பில், மதுரை மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் ரவிச்சந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில், மாவட்ட விவசாய அணி செயலாளர் கருமாத்தூர் பாண்டி, நகரச் செயலாளர் அசோகன், ஒன்றிய செயலாளர் சமுத்திரபாண்டி, மாவட்டத் துணைச் செயலாளர் சுரேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் வில்லாணி செல்வம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வாசகராஜா, தொட்டப்பநாயக்கணூர் கிளைச் செயலாளர் போத்திராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வேடம் அணிந்த மாணவர்கள்:

உசிலம்பட்டியில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு யுகேஜி பள்ளி மாணவி தேவர் வேடமிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் பி.கே. மூக்கையாத் தேவர் திருவுருவ சிலைகளுக்கு மரியாதை செலுத்திய நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

usilampatti devar statue1 - 2025

தேவர் ஜெயந்தி முன்னிட்டு இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 63 வது குருபூஜை விழாவும் 118 வது ஜெயந்தி விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் பி.கே. மூக்கையாத் தேவர் திருவுருவ முழு வெண்கல சிலைகளுக்கு உசிலம்பட்டி சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் மற்றும் பல்வேறு சங்கத்தினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உசிலம்பட்டி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஷ்மிகா என்ற யுகேஜி மாணவி தேவர் வேடம் அணிந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு மரியாதை செலுத்திய நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தாய்லாந்தில் இருந்து மதுரைக்கு விமானத்தில் ரூ.8 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்; 2 பேர் கைது!

crimes scene - 2025

மதுரை விமான நிலையத்தில் தாய்லாந்திலிருந்து கொழும்பு வழியாக மதுரை விமான நிலையம் வந்த இரு பயணிகளிடம் ரூ8 கோடி மதிப்பிலான 8 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மதுரைக்கு வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் கடத்தல் பொருள் வருவதாக வந்த தகவலை எடுத்து சுங்கலாக்கா வான் நுண்ணறிவு பிரிவு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த இரு பயணிகளிடம் சோதனை மேற்கொண்டதில், அவர்கள் கொண்டு வந்த உடமையில் இருந்து 4 கிலோ மதிப்புள்ள இரண்டு பார்சல்களில் எட்டு கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. சர்வதேச மதிப்பில் எட்டு கோடி ரூபாய் ஹைட்ரோ போனிக் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சக்கரா பள்ளியை சேர்ந்த காதர் மைதீன் (வயது 26) மற்றும் சென்னையைச் சேர்ந்த, ரபிக் மகன் சாகுல் ஹமீது(வயது 50) ஆகிய இருவர் மீதும் கஞ்சாவை கடத்தி வந்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்த சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் அவர்களை கைது செய்தனர்.

2026ல் அதிமுக., ஆட்சிக்கு பிள்ளையார் சுழி; மதுரையில் சசிகலா ஆதரவு போஸ்டரால் பரபரப்பு!

sasikala poster in madurai1 - 2025

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் கலந்து கொள்ள மதுரை வரும் வி.கே. சசிகலாவை வரவேற்று மதுரை அதிமுக தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்களால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரையில் அதிமுக பொதுச்செயலாளர் இடம் படி பழனிசாமிக்கு எதிராக சசிகலா ஆதரவாளர்களால் ஓட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
2026 இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட அதிமுகவில் காட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் .

2026- இல் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்க சின்னம்மா பிள்ளையார் சுழி போட வேண்டும் . திக்கின்றி தவிக்கும் அதிமுக தொண்டர்களின் “ஒளிவிளக்கே”

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் 118 வது பிறந்த தின விழாவும் 63 வது குருபூஜை விழாவும் நடைபெறுகிறது.

இதில், அரசியல் கட்சியினர் பல்வேறு தரப்பினர் கலந்து கொள்கின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி கே சசிகலா பசும்பொனில் நடைபெறும் தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்கிறார். அவரை வரவேற்கும் விதமாக , மதுரை மாவட்ட அதிமுக சார்பில் வரவேற்கும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் பரபரப்பான வாசகங்கள் இடம் பெற்றுள்ளன .

தற்போது, அதிமுக எடப்பாடியின் கட்டுப்பாடில் உள்ள நிலையில் வி கே சசிகலா ஆதரவாளர்கள் பரபரப்பு போஸ்டரால் மேலும் சர்ச்சை எழும்பியுள்ளது .
மதுரை சேர்ந்த உமாபதி என்ற அதிமுக பிரமுகர் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் பின்வரும் வாசகங்கள் இடம்பெற்று சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

மதுரை விமான நிலையம் பெருங்குடி மண்டல நகர் சிந்தாமணி சந்திப்பு சாலை விரகனூர் சாலை சிவகங்கை சந்திப்பு சாலைபரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் ஆகிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
2026 இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட அதிமுகவில் காட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் !!

2026 இல் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்க சின்னம்மா பிள்ளையார் சுழி போட வேண்டும் !!. சமீப காலமாக அதிமுகவில் அமைதியாக இருந்த நிலையில் சசிகலா ஆதரவுகளால் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் மீண்டும் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

கந்த சஷ்டி விழா முருகன் திருக்கல்யாண உத்ஸவம்!

murugan kayanam in chozhavanthan1 - 2025

சோழவந்தான் தென்கரை கோயிலில் திருக்கல்யாணம்:

சோழவந்தான் அருகே, தென்கரை அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழாவில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத ஸ்வாமி திருக்கோவிலில் 14 ஆம் ஆண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த வாரம் புதன்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, தினந்தோறும் வள்ளி தேவசேனா முருகப் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்யப்பட்டு வந்தன. பக்தர்களின் விண்ணத்திறும் கோஷத்துடன் சூரசம்காரம் நடைபெற்றது.

தொடர்ந்து, முருகப்பெருமான் ஸ்ரீ வள்ளி தேவசேனா திருக்கல்யாணம் நடைபெற்றது. கோவிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் கணபதி பூஜை உடன் தொடங்கி பூர்ணாஹூதியுடன் நிறைவுற்ற யாகம் நடைபெற்றது. தொடர்ந்து,
ஸ்ரீ வள்ளி தேவசேனா முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

தொடர்ந்து, மாலை மாற்றுதல் சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கமிட்டியாளர்கள் திருக்கோவில் நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

இதேபோல், திருவேடகம் ஏலவார்குழலி உடனுறை ஏடகநாத சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. சண்முகருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்று பாவாடை நெய் வைத்தியம் முடிந்து வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாணமும் இரவு சுவாமி திருவிதி உலாவும் நடைபெற்றது திருவேடகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள்
கலந்து கொண்டனர்.


உசிலம்பட்டியில் திருக்கல்யாணம்!

usilampatti murugan thirukalyanam - 2025

உசிலம்பட்டி திருமுருகன் திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாண வைபோகம் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் அமைந்துள்ள திருமுருகன் திருக்கோவிலின் கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட்டு வருகிறது, இந்த கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று நடந்த நிலையில், இன்று இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபோகம் பக்தர்கள் படைசூழ இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கோவிலில் வள்ளி தெய்வானையுடன் சிலையாக காட்சி தரும் திருமுருகன் சுவாமிக்கு சிவாச்சாரியார்கள் யாக சாலை பூஜைகள் செய்து பக்தர்களின் அரோகரா கோசங்களுடன் திருமண வைபோகம் செய்து வைத்தனர்.
மாங்கல்யம் சூட்டப்பட்டு, மாலைகளும் மாற்றப்பட்டது, தொடர்ந்து ,
தீபாராதனை காண்பிக்கப்பட்டது, இந்த திருமண வைபோகத்தில் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு திருமுருகன், வள்ளி, தெய்வாணை திருமணத்தை கண்டு ரசித்தனர். அனைவருக்கும் கோவில் நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் அன்னதானமும் வழங்கப்பட்டது.


வில்லாபுரத்தில் சஷ்டி திருக்கல்யாணம்:

murugan thirukalyanam in madurai temples1 - 2025

மதுரை, வில்லாபுரம் சங்கவிநாயகர் திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவினை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது .

மதுரை வில்லாபுரம் தங்க விநாயகர் திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்தது கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழாவினை முன்னிட்டு சூரசம்ஹார விழா மற்றும் திருக்கல்யாண வைபவங்கள் நடைபெறும். அதேபோல், இந்த ஆண்டும் கந்தசஷ்டி விழாவின் இறுதி நாளாக திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்கவிநாயகர் கோவில் அறக்கட்டளைத் தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும்நிர்வாகிகள் செந்தில்குமார் , கருணாநிதி, சந்திரசேகர், அனுசியா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் . உற்சவர் முருகன் வள்ளி தெய்வானைக்கு 16 வகை வாசனை திரவியங்கள் அபிஷேகம் செய்யப்பட்ட இந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கோவில் அர்ச்சகர்கள் முருகன் மற்றும் மணமகளாக தேவசேனா இருந்து திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்தபின் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .

கந்தசஷ்டி நிறைவு நிகழ்வு: குன்றத்து குமரன் சட்டத் தேரில் பவனி!

kundrathu kumaran sattather bavani1 - 2025

மதுரை: “அரோகரா”கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து தரிசனம் செய்தனர்.

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான
திருப்பரங்குன்றம், கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நாளையொட்டி முருகப் பெருமான் சட்டத் தேரில் எழுந்தருளினார்.

சுப்பிரமணிய சுவாமி சட்டதேரில் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க சட்டத் தேரின் வடம் பிடித்து தரிசனம் செய்தனர்.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 22-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றது.
திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளாக கடந்த 26-_ந் தேதி அன்று “சக்தி வேல் வாங்குதலும் ” 27-ந் தேதி (நேற்று)சூரசம்ஹார லீலையும் நடைபெற்றது.

திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று( 28-ந்தேதி) காலையில்
தேரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி, கோவில் வாசல் முன்பு சட்டத் தேர் அலங்கரிக்கப்பட்டு தயார்நிலையில் நின்றது.

இதனையடுத்து, கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு விசேஷ பூஜையும் சர்வ அலங்காரமும் தீப ஆராதனையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தங்கமயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து தன் இருப்பிடத்திலிருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்டு சட்டத் தேரில் காலை 8.32 மணிக்கு எழுந்தருளினார்.

இந்த நிலையில், காப்புக்கட்டி கடந்த 6 நாட்களாக விரதம் இருந்து வந்த பக்தர்கள் திரளாக குவிந்து இருந்து சட்டத் தேரினை வணங்கிவடம் பிடித்து இழுத்தனர் .
காலை 8.50 மணிக்கு நிலையில் இருந்து சட்டத் தேர் வலம் நோக்கி நகர்ந்ததுசன்னதி தெரு, கீழ ரத வீதி, பெரிய ரத வீதி வழியாக 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டகிரிவலப் பாதையில் சட்டத் தேர்மெல்ல , மெல்ல ஆடி அசைந்து வலம் வந்தது பக்தர்களுக்கு கண் கொள்ளா காட்சியாக இருந்தது.

சட்ட தேரில் இருந்தபடியே முருகப் பெருமான் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தேரோட்டத்தில் பக்தர்கள் எழும்பிய “அரோகரா”கோஷங்கள் மலை முழுவதும் எதிரொலித்தது. இதற்கிடையில் மேலரதவீதி, சன்னதி தெரு வழியே பக்தர்கள் வெள்ளத்தில்தேர்வலம் வந்து 10.45 மணிக்கு நிலைக்கு வந்தது அப்போது பக்தர்கள் “, கந்தனுக்கு அரோகரா கந்த சஷ்டி முருகனுக்கு என்று பக்தி கோஷங்கள் எழும்பி பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, கோவிலுக்குள் தங்கி விரதமிருந்த பக்தர்கள் தங்களது கைகளில் கட்டி இருந்த காப்பை கழற்றி விட்டு தங்களது வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

திருவிழாவின் முத்தாய்ப்பாக பாவாடை தரிசனம் மற்றும் தங்ககவசம் சாத்துப்படி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.