December 7, 2025, 1:22 AM
25.6 C
Chennai
Home Blog Page 11

அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்வதில் குளறுபடியா? : விவசாயிகள் கேள்வி!

chozhavanthan paddy farmers protest - 2025

மதுரை மாவட்டத்தின் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொள்முதல் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாக விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது.

நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது விவசாயிகளின் முதுகில் குத்துவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் தொகுதியானது முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பிய முக்கியமான பகுதியாக உள்ள நிலையில் பெரியார் பாசன கால்வாய் மூலம் பேரனை முதல் கள்ளந்திரி வரை சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இந்த நிலையில், வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த ஜூன் மாசம் பெரியார் பாசன கால்வாய் மூலம் விவசாயத்திற்கு திறக்கப்பட்டது .
சோழவந்தான் வாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய விவசாய பகுதிகளான கரட்டுப்பட்டி இரும்பாடி பொம்மன் பட்டி கணேசபுரம் அம்மச்சியாபுரம் கீழ் நாச்சிகுளம் மேல் நாச்சிகுளம் நரிமேடு போடிநாயக்கன்பட்டி நீரேதான் மேட்டு நீரே தான் கட்டக்குளம் ஆண்டிபட்டி தனுச்சியம் அய்யங்கோட்டை உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பகுதிகளில் சுமார் 20,000 க்கும்மேற்பட்ட ஏக்கர் நெல் நடவு செய்து செப்டம்பர் மாதம் அறுவடைக்கு தயாராக இருந்தது.

இந்த நிலையில், அறுவடை செய்த நெல்களை கொள்முதல் செய்வதற்கு தேவையான அளவு கொள்முதல் நிலையங்களை அரசு அமைக்காததால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வந்தனர். இதில், உச்சகட்டமாக கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்களை மூட்டையாகப் பிடிக்கட்டும் அதை குடோன்களுக்கு கொண்டு செல்வதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டிய சம்பவங்களும் அரங்கேறியது.

இதனால், கொள்முதல் நிலையங்களில் சுமார் 20,000 முதல் 30,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்த நிலையில் காணப்பட்டது.
நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்கள் தேக்கம் அடைந்ததால் பல்வேறு பகுதிகளில் வயல்களில் அறுவடை செய்யப்படாமலும் நெல்கள் வயல்களில் காய்ந்த நிலையில் காணப்பட்டது .

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக நெல் வயல்களில் மழைநீர் புகுந்ததால் பல்வேறு இடங்களில் நெல் பயிர்கள் அழுகி சேதம் அடைந்த நிலையில் அதிலும் விவசாயிகள் பெரிய அளவில் நஷ்டம் அடைந்தனர்.

கொள்முதல் நிலையங்களிலும் உள்ள நெல்கள் கொள்முதல் செய்யப்படாத நிலையில் , மழை நீரில் நனைந்து முளைக்கக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு அதன் காரணமாகவும் விவசாயிகள் பல்வேறு நஷ்டங்களுக்கு ஆளாக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, கட்டக்குளம் ஆண்டிபட்டி போடிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்த மத்திய குழுவினர் பாதிக்கப்பட்ட நெல் மாதிரிகளை எடுத்துச் சென்ற நிலையில் அதன் பின்னரும் கொள்முதல் நிலையங்களில் தேங்கிய நெல்களை கொள்முதல் செய்ய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக தற்போது கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டுமென போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளது வேதனையை தருகிறது.

சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கரட்டுப்பட்டி மேல் நாச்சிகுளம் கீழ் நாச்சிகுளம் பொம்மன் பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் சாலை மறியல் செய்தது விவசாயத்திற்கு இந்த அரசு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதற்கு ஒரு சான்றாகவே கூறப்படுகிறது .

மேலும் , கொள்முதல் நிலையங்களிலும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டனர் . கொள்முதல் செய்யும் வரை கொள்முதல் நிலையங்களை விட்டு வீட்டிற்கு செல்ல மாட்டோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உடனடியாக கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்களை கொள்முதல் செய்ய வேண்டும் சேதமடைந்த நெல்களுக்கு உரிய நிவாரணங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் , அதிகாரிகள் இந்த பகுதியில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக்கெடுத்து தொடர்ந்து விவசாயம் செய்வதற்கு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் அவர்களுக்கு உரிய கடன் உதவிகளை வழங்க நடவடிக்கை என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்ட கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்!

annabishekam in madurai - 2025

சோழவந்தானில்..

மதுரை அருகே விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பிரளயநாத சிவன் ஆலயத்தில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, பிரளயநாத சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதில், தொழிலதிபர் எம்.வி.எம். மணி, கவுன்சிலர் வள்ளிமயில், நிர்வாக அதிகாரி ச. இளமதி, கணக்கர் சி. பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி திருக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தென்கரை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை மூலநாதர் சுவாமி திருக்கோவில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது. சிவபெருமானுக்கு பால் தயிர் வெண்ணெய் மஞ்சள் பொடி மா பொடி திரவிய பொடி பன்னீர் இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது

தொடர்ந்து பக்தர்கள் வழங்கிய அரிசி மூலம் அன்ன அபிஷேகம் நடைபெற்று அன்ன அலங்காரத்தில் சிவபெருமான் காட்சி அளித்தார். காய்கறி மாலைகள் அணிவிக்கப்பட்டன. தொடர்ந்து வில்வத்தால் சிறப்பு அர்ச்சனை செய்து தீப ஆராதனை காட்டப்பட்டது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம், பிரதோஷ கமிட்டியினர், செய்திருந்தனர். இதில் முத்துக்குமரன் நகை மாளிகை இருளப்பன்ராஜா, சோலை கேபிள் ராஜா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உசிலம்பட்டி….

உசிலம்பட்டி அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஆனையூரில் அமைந்துள்ளது நூற்றாண்டு பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் திருக்கோவில்,
ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, அன்னாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

31 கிலோ அன்னம் மற்றும் காய்கறிகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன., மீனாட்சியம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன., இந்த அன்னாபிஷேக பூஜையில், உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமபுற பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்., அனைவருக்கும் கோவில் சார்பில் அன்னதானமும் பிரசாதமாக வழங்கப்பட்டது..

வாடிப்பட்டி…

வாடிப்பட்டி பகுதியில் சிவன் கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதி யில் உள்ள சிவன் கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷே கம் செய்யப்பட்டது. குலசேகரன் கோட்டையில் குலசேகர பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சுந்த ரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகள் செய்து அன்னாபிஷேகமும், மீனாட்சி அம்மனுக்கு அன்னபாவாடை சாற்றப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னாபிஷேக பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதன் ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர். குட்லாடம்பட்டி கொட்டமடைக்கி கண்மாய்கரையின் கீழ் பகுதியில் 36 அடி உயர லிங்க வடிவிலான தியான மண்டபத்துடன் கூடிய அண்ணாமலையார் கோவிலில் நடந்த அன்னாபிஷேகத்தில் லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னாபிஷேக அன்னதானம் வழங்கப்பட்டது. இதன் ஏற்பாடுகளை அண்ணாமலை டிரஸ்டி கோபிநாத் தலைமையில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

சிறுமலை…

குட்லாடம்பட்டி அஞ்சு குழி கண்வாய் சாலையில் சிறுமலை அடிவாரத்தில் தென்னந்தோப்பு பகுதியில் உள்ள லலிதாம்பிகை ஈஸ்வரர் உடனுறை லலிதாம்பிகேஸ்வரி ஆலயத்தில் லிங்கேஸ்வரருக்கு அண்ணா அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் மாலை 5 மணிக்கு பௌர்ணமி விளக்கு பூஜை நடந்தது. இதன் ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

கோட்டைகல் சிவன்கோயிலில்

உசிலம்பட்டி அருகே பழமையான கோட்டைகல் சிவன் கோவிலில் அன்னாபிஷேக தினத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்நாயக்கனூரில் பழமையான கோட்டைகல் சிவன் கோவில் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் ஒவ்வோர் ஆண்டும் விமர்சியாக நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு அன்னாபிஷேகத்தை முன்னிட்டு 15 கிலோ அரிசியால் அன்னம் தயாரிக்கப்பட்டு அன்னத்தினால் லிங்கத்திற்கு அன்னாபிஷேக வைபவம் நடைபெற்றது.

இதில், பூக்கள்,காய்கறிகள், பழங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டது.
தொடர்ந்து, அன்னாபிஷேகத்தில் பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், இப்பகுதியை சுற்றியுள்ள திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கோவிலில் அன்னதானம் நடைபெற்றது.


மகா கும்பாபிஷேகம்.

மதுரை, அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் அருகில் உள்ள அருள்மிகு பத்ரகாளி அம்மன் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஆயிரகணக்கான பக்தர்கள் ஓம்சக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில்
கடந்த 3ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு அனுக்கிரஹ பூஜை விக்னேஸ்வர பூஜை மற்றும் வாஸ்து சாந்தியுடன் முதல் கால யாக பூஜை நடைபெற்றது.
பின்னர் 4ஆம் தேதி காலை 10:30 மணி முதல் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு 3ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. 5ஆம் தேதி காலை 7:45 மணியளவில் நான்காம் கால யாக சாலை பூஜை பூர்ண கூதியுடன் நிறைவு பெற்றது. பின்னர் கும்பங்களில் உள்ள புனித நீர் எடுத்து செல்லப்பட்டு சிலைகளில் புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர், கோவில் நிர்வாகம் சார்பாக 2000 பேருக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

காஞ்சி கோயிலின் பழமையான கட்டிடங்களை இடித்து அட்டூழியம்; இந்து முன்னணி அறப் போராட்டம் நடத்தும்!

kadeswara subramaniam hindu munnani - 2025

காஞ்சீபுரம் அத்திவரதர் கோயிலில் ஆகம விதிகளை மீறி பன்னெடுங்கால பழமையான கட்டிடங்களை இடித்து அட்டூழியம் நடப்பதாகவும் நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டுள்ள அறநிலையத்துறை தக்க நடவடிக்கை இல்லையெனில் அறப்போராட்டம் தொடங்கும் என்றும் இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

400 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகின்ற அத்திவரதர் புகழ்
காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி பெருமாள் கோவில் உலகப் புகழ்பெற்றது.

அத்தையை பெருமைமிகு திருக்கோவிலில் HR&CE துறையின் சட்டவிரோத நிர்வாகம், கோயில் கட்டமைப்புகளை அழித்தல் , பக்தர்களின் உரிமைகளை மீறுதல் மற்றும் ஊழல்கள் மலிந்து கிடக்கின்றன.

  1. உயர் நீதிமன்றத்தின் ‘Status Quo’ உத்தரவை மீறி, அறநிலையத்துறை ஊழியர் ‘செயல் அதிகாரியாக’ சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறார்.
  2. ஆகமம் மற்றும் கட்டமைப்பு விதிகளுக்கு முரணாக, அபாயகரமான சாய்தளம் கட்டப்பட்டு, வரலாற்று சிறப்புமிக்க சாளரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
  3. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொன்மை மிக்க கோவிலின் பணிகளுக்கு இந்திய தொல்பொருள் துறையின் (ASI) ஒப்புதல் பெறவில்லை. அவர்களது வழிகாட்டுதல் இல்லாமல் சீரமைப்புபணிகள் நடத்தப்படுவது அப்பட்டமான விதிமீறல்.
  4. நீதிமன்ற உத்தரவை மீறி புனித தீர்த்தமான அனந்த சரஸ் குளம் மூடப்பட்டுள்ளது. சமீபத்தில் மஹாளயபட்ச அமாவாசை அன்று பக்தர்களுக்கு பெரும் இடையூறுகளை அறநிலையத்துறை ஏற்படுத்தியது.

5 . 2014-இல் நீக்கப்பட்டதாக கூறப்பட்ட ‘கட்டாய தரிசன டிக்கெட்’ மீண்டும் பக்தர்களிடம் விற்கப்படுகிறது.

  1. பக்தர்களிடம் ஊழியர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள்.
    இன்னும் பல வகையிலான அத்துமீறல்களும் நடந்து வருகிறது.

எனவே உடனடியாக ,

  1. சட்டவிரோத செயல் அதிகாரியை உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும்.
  2. அனைத்து சட்டவிரோத கட்டுமானப் பணிகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
  3. அனந்த சரஸ் தீர்த்தக்குளம் பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட வேண்டும்.
  4. கட்டாய தரிசன டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட வேண்டும்.
  5. கோயில் ஊழல் மற்றும் கலைப்பொருட்கள் சேதம் தொடர்பான வழக்குகளில் CBCID மற்றும் Idol Wing போலீசார் விசாரணை நடத்த வேண்டும்.
  6. 1941-ஆம் ஆண்டு நிர்வாகத் திட்டப்படி, தகுதியான அறங்காவலர்களைக் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட வேண்டும்.

“ஒரு புனிதத் தலத்தில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்படுவதும், ஆகம மரபுகள் அழிக்கப்படுவதும், பக்தர்கள் துன்புறுத்தப்படுவதும் மிகவும் வருந்தத்தக்கது,”
ஆகவே அரசு தலையிட்டு
கோயிலின் புனிதத்தையும், பக்தர்களின் உரிமைகளையும் காக்க
தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது.

நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அத்திவரதனாகிய் தேவராஜ சுவாமி கோவிலைக் காக்க மக்கள், பக்தர்கள் ஆதரவுடன் அறப் போராட்டத்தை இந்துமுன்னணி கையிலெடுக்கும்.

ஊர் நன்மை வேண்டி, சோழவந்தானில் கோலாட்ட ஜோத்திரை!

chozhavanthan kolattam2 - 2025

மதுரை, சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் மகளிர் பக்த குழு சார்பாக உலக மற்றும் ஊர் நன்மை வேண்டி கோலாட்ட ஜோத்ரை நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் உலக நன்மை மற்றும் ஊர் நன்மை வேண்டியும் மண்வளம் சிறக்க மழை வளம் சிறக்க வேண்டியும்
கோலாட்ட ஜோத்ரை நடைபெற்றது.

ஐப்பசி அமாவாசை அடுத்த அதாவது தீபாவளி மறுநாள் அன்று மண் எடுத்து பசுவும் கன்றும் செய்து அதற்கு முன்பாக தினந்தோறும் கோலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

பத்தாவது நாள் நிறைவாக இரட்டை அக்ரஹார மகளிர் குழு சார்பாக நடைபெற்ற கோலாட்ட நிகழ்ச்சியில் இளம் சிறுவனை கிருஷ்ணனாக பாவித்து முன் செல்ல கோலாட்ட நிகழ்ச்சி பாடலுடன் நடைபெற்றது.

இதில் 50க்கும் மேற்பட்ட இரட்டை அக்ரஹார மகளிர் குழுவினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கோலாட்ட நிகழ்வில் பங்கேற்றனர். தொடர்ந்து முளைப்பாரி கரைக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது அன்னதானம் நடைபெற்றது.

இஸ்ரோ வெற்றிகரமான வரலாற்று சாதனை!

LVM3 M5 CMS 03 MISSION Launch sriharikotta - 2025

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து LVM3-M5 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட 4,410 கிலோ எடை கொண்ட CMS-03 செயற்கைக் கோள் வெற்றிகரமாக புவிவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

பழைய GSAT-7 தகவல் தொடர்பு செயற்கைக்கோளின் ஆயுட்காலம் முடிந்ததால், அதற்கு மாற்றாக இந்த CMS-03 செயல்படும். இது GSAT-7R என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு, கடல்சார் தகவல் தொடர்பு திறன்களை இது பெருமளவில் மேம்படுத்தும். குறிப்பாக, இந்திய கடற்படையின் செயல்பாடுகளுக்கு உதவும். அதிக அலைவரிசை மற்றும் வாய்ஸ், டேட்டா மற்றும் வீடியோ தொடர்புக்கான மேம்பட்ட பாதுகாப்பான இணைப்புகளை வழங்கவும் இது உதவ உள்ளது.

பாரதத்தின் மிகப்பெரிய செயற்கைக்கோள்

பாரதத்தின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சிஎம்எஸ்-03 உடன் எல்விஎம்- 3 எம் 5 ராக்கெட் நவ.2 ஞாயிறு மாலை 5.26 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இஸ்ரோ, 4,410 கிலோ எடை கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சிஎம்எஸ்-03 ஐ விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட் டவுன் நவ.1 மாலை தொடங்கியது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து நவ.2 மாலை 5.26 மணிக்கு எல்விஎம் 3- எம்5 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதனையடுத்து விஞ்ஞானிகள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இதன்பின்னர் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசியபோது…

சிஎம்எஸ் -03 செயற்கைக்கோள் திட்டமிட்ட நேரத்தில் திட்டமிட்ட பாதையில் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்தத் திட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 50 விண்வெளித்திட்டங்களை செயல்படுத்த பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் தகவல் தொடர்புக்காகவும், இந்திய கடற்பரப்பு உள்ளிட்ட கடல்பிராந்தியங்களை கண்காணிக்கவும் பயன்படும். அடுத்த 15 ஆண்டுகளுக்கு தகவல்களை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பல புதிய தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தன்னிறைவு இந்தியாவுக்கு மற்றுமொரு உதாரணமாக உள்ளது. இந்த செயற்கைக்கோள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகள்.

செயற்கைக்கோள் ஏவப்படும் வரையில் பல்வேறு சவால்கள் மற்றும் கடினமான நேரங்களை நாம் எதிர்கொண்டிருந்தோம். பருவநிலை நமக்கு சாத்தியம் இல்லாமல் இருந்தது. ஆனால், இதனை நாம் சவாலாக எடுத்துக் கொண்டதுடன் ஒருவருக்கு ஒருவர் ஊக்கமளித்து, மோசமான வானிலை நிலவிய போதும், செயற்கைக்கோள் திட்டத்தை பிரம்மாண்டமாகவும், வெற்றிகரமாகவும் ஆக்கி உள்ளோம் – என்றார்.

பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘நமது விண்வெளித்துறை நம்மை தொடர்ந்து பெருமை அடையச் செய்கிறது. இந்தியாவின் அதிக எடை கொண்ட தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான சிஎம்எஸ்-03யை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். நமது விண்வெளி விஞ்ஞானிகளால் இயக்கப்படும் நமது விண்வெளித்துறை சிறந்து விளங்குவதற்கும், புதுமைக்கும் அடையாளமாக மாறியுள்ளது பாராட்டத்தக்கது. அவர்களின் வெற்றி நாட்டின் முன்னேற்றத்தை மேம்படுத்தி எண்ணற்றவர்களுக்கு அதிகாரத்தை அளித்துள்ளது எனக் கூறியுள்ளார்.

கடற்படை, ராணுவ பயன்பாட்டுக்காக இந்த செயற்கைக்கோள் ரூ.1,600 கோடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடற்படை தகவல் தொடர்பு மற்றும் கடலோர பாதுகாப்புக்கு இது ஊக்கம் அளிக்கும். இந்திய கடற்படைக்காகவும், அதற்கு தேவையான கருவிகளுடன் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்ட அதிநவீன ராக்கெட் இதுவாகும். அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் என்பதால், எல்விஎம் 3- எம்5 ராக்கெட் பாகுபலி ராக்கெட் என அழைக்கப்படுகிறது.

இந்திய நிலப்பரப்பில் மல்டி பேண்ட் தொலைதொடர்பு சேவைகள், அதிக அலைவரிசை மற்றும் வாய்ஸ், டேட்டா மற்றும் வீடியோ தொடர்புக்கான மேம்பட்ட பாதுகாப்பு இணைப்புகள், கடல்சார் கண்காணிப்பை மேம்படுத்தும், கடற்படை கட்டளை மற்றும் கட்டுப்பாட்டை வலுப்படுத்த இது உதவும். சிஎம்எஸ் -03 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதை கடற்படை அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் நேரில் வந்து பார்த்தனர்.

இந்த சிஎம்எஸ்3 செயற்கை கோளின் எடை 4400 கிலோ. இஸ்ரோ இதுவரை தயாரித்த அதிக எடையுள்ள செயற்கை கோள் ஜிசாட்11 அது 5800 கிலோ பிரெஞ்சு தயாரிப்பு ஏவுகணை மூலம் ஏவப்பட்டது.

சீனா செலுத்திய அதிக எடையுள்ள செயற்கைக்கோள் ஷாஜின்20 அது 8000 கிலோ எடையுள்ளது. அமெரிக்கா செலுத்திய அதிக எடையுள்ள செயற்கைக்கோள் ஜுப்பிடர்3 அது 9200 கிலோ எடையுள்ளது. சோவியத் ரஷ்யா காலத்திலே செலுத்திய செயற்கைக்கோள் புரோட்டான் தான் மிக அதிக எடையுள்ளது 17,000 கிலோ. அந்த வகையில் நாம் இன்னும் இருமடங்கு சக்தியை கூட்டவேண்டும்.

இதுவே ஆளிருக்கும் பயணம் என்றால் அமெரிக்காவின் ஆர்டிமிஸ் ஓரியான் 25,000 கிலோ ஐரோப்பாவின் ஏடிவி5 20,000 கிலோ என இருக்கிறது.
1972 இல் ஏவப்பட்ட அப்பல்லோ16 இன் எடை 52,000 கிலோ. இந்த இலக்கை இஸ்ரோ விரைவில் எட்டும்!

உலகக் கோப்பை வென்று இந்திய மகளிர் அணி அசத்தல்; மக்கள் கொண்டாட்டம்; குவியும் வாழ்த்துகள்!

women world cup won by indian team2 - 2025

ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி முதல் உலககோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.இந்திய அணி மகளிர் உலகக் கோப்பையை வென்றதால், மைதானத்தில் இந்திய அணியின் வீராங்கனைகள், ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்…

indian women cricket team won cup - 2025

இந்திய மகளிர் அணி முதன்முறையாக ஐசிசி உலகக் கோப்பை வென்று புதிய வரலாறு படைத்தது. ஷைபாலி வர்மா (87), தீப்தி சர்மாவின் (58 ரன், 5 விக்கெட்) அசத்தல் ஆட்டம் கைகொடுக்க, இறுதிப் போட்டியில் 52 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டி வரை முன்னேறிய தென் ஆப்ரிக்கா துரதிர்ஷ்ட வசமாக தோல்வியைத் தழுவியது.  

இந்தியா மற்றூம் இலங்கையில் பெண்களுக்கான ஐ.சி.சி., உலகக் கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் போட்டிகள் நடைபெற்றன. இதன் இறுதிப் போட்டி, நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின.  மழையால் போட்டி 2 மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. எனினும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை. இந்நிலையில், ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் லாரா வால்வார்ட் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, ஷைபாலி வர்மா ஜோடி சிறப்பான தொடக்கம் அளித்தது. முதல் விக்கெட்டுக்கு 104 ரன் சேர்த்த போது டிரையான் பந்தில் ஸ்மிருதி (45) ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடிய ஷைபாலி, 49 பந்தில் அரைசதம் எட்டினார். ஷைபாலி (87 ரன், 2 சிக்ஸ், 7 ஃபோர்) கைகொடுத்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் (24), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (20), அமன்ஜோத் கவுர் (12) ஆகியோர் பெரிதும் ஆடவில்லை.  எனினும் மறுமுனையில் அசத்திய தீப்தி சர்மா, அரைசதத்தைக் கடந்தார். ரிச்சா கோஷ் 34 ரன்கள் சேர்க்க, கடைசி பந்தில் தீப்தி 58 ரன் எடுத்திருந்த நிலையில் ‘ரன்-அவுட்’ ஆனார். இந்திய அணி 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 298 ரன் எடுத்தது.

கொடுக்கப்பட்ட இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்க அணியில் தஸ்னிம் பிரிட்ஸ் (23), சுனே லஸ் (25)  பெரிதும் கைகொடுக்கவில்லை. மரிஜான்னே காப் (4), சினாலோ ஜப்தா (16) என சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, தென் ஆப்ரிக்க அணி 148 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது. எனினும் மறு முனையில் கேப்டன் லாரா வால்வார்ட் அபாரமாக ஆடினார். அவருடன் ஜோடி சேர்ந்த டெர்க்சன் அந்த அணிக்கு நம்பிக்கை அளிக்க, ஆறாவது விக்கெட்டுக்கு 61 ரன் சேர்த்த நிலையில், தீப்தி சர்மா பந்தில் டெர்க்சன் (35) போல்டானார். கேப்டன் லாரா ஒருநாள் போட்டியில் தனது 11வது சதத்தை அடித்தார்.  எனினும் அவர் தீப்தி சர்மாவின் பந்தில் 101 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதை அடுத்து இந்திய அணிக்கு நம்பிக்கை பிறந்தது.  டிரையான் (9), நாடின் டி கிளார்க் (18) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க  தென் ஆப்ரிக்க அணி 45.3 ஓவரில், 246 ரன்னுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தீபதி சர்மா 5 விக்கெட் எடுத்து ஜொலித்தார்.

போட்டி தொடங்கும் முன், இந்திய அணி வீராங்கனைகள் அணிவகுத்து நிற்க, பாடகி சுனிதி சௌகான் தேசிய கீதம் பாடினார்.  2024 ‘டி-20’ உலகக் கோப்பைவென்று தந்த அன்றைய இந்திய கேப்டன் ரோகித் சர்மா போட்டியைக் காண வந்திருந்தார். அதுபோல், இந்தப் போட்டியைக் காண சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட வீரர்களும் வந்திருந்தனர்.  அவரே தொடக்கத்தில் வெற்றியாளருக்கு வழங்கப்படும் உலகக் கோப்பையை மைதானத்திற்குள் கொண்டு வந்தார்.

இந்தியாவின் ஹர்மன்பிரீத் கௌர், ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) ‘நாக்-அவுட்’ போட்டியில் அதிக ரன் குவித்தவர் ஆனார். இதுவரை 4 இன்னிங்சில், 331 ரன் எடுத்துள்ளார். அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் (330 ரன், 6 இன்னிங்ஸ்) உள்ளார்.

உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 39.50 கோடி பரிசு வழங்கப்பட்டது. 2வது இடம் பிடித்த தென் ஆப்ரிக்காவுக்கு ரூ. 19.50 கோடி பரிசு கிடைத்தது. பி.சி.சி.ஐ., சார்பில் ரூ. 125 கோடி பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில், கபில்தேவ் கடந்த 1983ல் இந்திய ஆண்கள் அணிக்கு  முதன்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தார். பின்னர்,  எம்.எஸ்.தோனி 2007ல் ‘டி-20’  2011ல் உலகக் கோப்பை, 2013ல் சாம்பியன்ஷிப் ட்ராஃபி பெற்றுத் தந்தார். பின்னர் ரோகித் சர்மா 2024ல் ‘டி-20’ உலகக் கோப்பை வென்றார். தற்போது மகளிர் கிரிக்கெட்டில் சாதித்துள்ள இந்திய அணியின் ஹர்மன்பிரீத் கௌர் கேப்டனாக கோப்பையைப் பெற்றுத் தந்துள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து:

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு கிடைத்த அற்புதமான வெற்றி. இறுதிப் போட்டியில் அவர்களின் செயல்திறன் மிகுந்த திறமை மற்றும் நம்பிக்கையால் குறிக்கப்பட்டது. போட்டி முழுவதும் அணி விதிவிலக்கான குழுப்பணி மற்றும் விடாமுயற்சியைக் காட்டியது. எங்கள் வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள். இந்த வரலாற்று வெற்றி எதிர்கால சாம்பியன்களை விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்கும் – என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் கோப்பை வென்றதை அடுத்து நாடு முழுவதும் பொதுமக்கள் உற்சாகத்தோடு கொண்டாடி மகிழ்கின்றனர். சமூகத் தளங்களில் பெரும் ஆதரவுடன் தங்கள் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியான தகவல்களையும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

குருவுக்குக் காணிக்கை

கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன், தங்கள் பயிற்சியாளரான குருவின் காலில் விழுந்து வணங்கி, அணியாக, தங்களது வெற்றிக் கோப்பையைக் காணிக்கை ஆக்கினர்.

women cricket team1 - 2025

இந்திய அணியின் பயிற்சியாளர் அமோல் மஜும்தார். இமயம் அளவுக்கு உயர
இவ்வளவு திறமைகள் இருந்தும் இப்படியும் அதிர்ஷ்டம் இல்லாத ஆளா என்று பலரும் வியந்த மனிதர். 1990களில் துவங்கி 2000களிலும் அதிகம் புகழப்பட்டவர்.

தனது முதலாவது ரஞ்சி டிராபி போட்டியில், ஹரியானா அணிக்கு எதிராக பாம்பே அணி சார்பில் 260 ரன்கள் குவித்து உலக சாதனையுடன் 1994ல் கிரிக்கெட்டில் அதிரடி எண்ட்ரி கொடுத்தவர். அதன் பிறகு உள்ளூர் போட்டிகளில் ஒவ்வோர் ஆண்டும் மலை அளவுக்கு ரன்கள் குவித்தவர். “புதிய டெண்டுல்கர்”… “அடுத்த சச்சின்”… என்று புகழப்பட்டார். எனினும் இந்திய அணியில் இடம்பெறாமலே இருந்தது இவரது பெயர்.

2013 வரை இந்திய ஃபர்ஸ்ட் கிளாஸ் டொமாஸ்டிக் கிரிக்கெட்டில் 171 போட்டிகள் விளையாடி, 48.13 ஆவரேஜில், 11,167 ரன்கள் குவித்தார். இதில் 30 செஞ்சுரி 60 பிஃப்டி அடித்திருக்கிறார். இவர்தான் இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற சாம்பியன்களான இந்திய பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளர்! கடந்த 2 வருடங்களாக இந்திய அணியினரை பட்டை தீட்டிய அமோல் மஜும்தார் இன்னொரு செயலையும் செய்தார். அது இப்போது பாராட்டப்பட்டு வருகிறது.

லீக் மேட்ச்களில் அதிரடியாக ரன்கள் குவித்த ஓபனிங் பேட்டர் பிரதிகா ராவல் காயம் அடைய, அவரால் நடக்கவே முடியாது என்ற நிலை. அரை இறுதிப் போட்டிக்கு முன்பு திடீர் என ஏற்பட்ட இந்த நெருக்கடியைச் சமாளிக்க, சாதாரணமாக இந்தப் போட்டிகளை வீட்டில் அமர்ந்து டிவியில் பார்த்துக்கொண்டு இருந்த ஷிஃபாலி வர்மாவை அழைத்து வந்து, நேராக அரை இறுதியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கினார். முதல் போட்டியில் அவர் 10 ரன்னில் ஆட்டம் இழந்தாலும், மனம் தளராமல் நம்பிக்கை வைத்து அவரையே இறுதிப் போட்டியிலும் தொடக்க ஆட்டக்காரராகக் இறக்கினார். 78 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து, பந்துவீச்சில் 2 விக்கெட்டும் வீழ்த்தி, தன் மீது பயிற்சியாளர் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றினார் ஷிஃபாலி வர்மா. இப்போது பயிற்சியாளர் அமோல் மஜும்தாருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


சபரிமலை மகரவிளக்கு பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

sabarimala aiyappa concluding pooja - 2025

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல கால பூஜைகள் வரும் நவ 17ம் தேதி முதல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு 16ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நடை திறந்த பின்னர் அடுத்த ஒரு வருடத்திற்கான புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜை காலத்திற்கான வெர்ச்சுவல் க்யூ ஆன்லைன் முன்பதிவு இன்று நவம்பர் 1 முதல் தொடங்கியுள்ளதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

மறுநாள் (17ம் தேதி) முதல் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயிலில் புதிய மேல்சாந்திகள் நடை திறந்து பூஜைகளை நடத்துவார்கள். அன்று முதல் நெய்யபிஷேகம் உள்பட பூஜைகள் தொடங்கும். டிசம்பர் 27ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும். இந்நிலையில் மண்டல கால தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

பக்தர்கள் sabarimalaonline.org என்ற இணையதளத்தில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம். வண்டிப்பெரியார் சத்திரம், எருமேலி, நிலக்கல், பம்பா ஆகிய இடங்களில் உடனடி முன்பதிவு கவுண்டர்களும் செயல்படும். ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பேருக்கும், உடனடி கவுண்டர்கள் மூலம் 20 ஆயிரம் பேருக்கும் முன்பதிவு செய்யலாம்.

பக்தர்கள் மரணமடைந்தால் இன்சூரன்ஸ் தொகை வழங்கும் திட்டத்துக்கு நிதி சேகரிப்பதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து ரூ. 5 கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது கட்டாயம் அல்ல. இந்த இன்சூரன்ஸ் பலனை அடைவதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் ஆவணங்கள் தேவைப்படுவதால் பக்தர்கள் முடிந்தவரை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முயற்சிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.

சபரிமலை மண்டல-மகரவிளக்கு யாத்திரை தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், திருவிதாங்கூர் தேவசம்போர்டு (TDB) இன்னும் மெய்நிகர் வரிசை முன்பதிவு முறையைத் திறக்கவில்லை என பக்தர்கள் கூறுகின்றனர்.

இந்த தாமதம் பக்தர்கள் மத்தியில், குறிப்பாக பிற மாநிலங்களிலிருந்து பயணம் செய்பவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் அவர்களால் தங்கள் பயணத் திட்டங்களை உறுதிப்படுத்த முடியவில்லை.

மண்டல காலம் நவம்பர் 17 ஆம் தேதி தொடங்கும். சடங்கு சடங்குகளுக்காக கோயில் நவம்பர் 16 ஆம் தேதி மாலை 5 மணிக்குத் திறக்கப்பட்டு டிசம்பர் 27 வரை திறந்திருக்கும்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, ஜனவரி 14, 2026 அன்று வரும் மகரவிளக்கு விழாவிற்காக டிசம்பர் 30 ஆம் தேதி சன்னதி மீண்டும் திறக்கப்படும். யாத்திரை காலம் இறுதியாக ஜனவரி 20 ஆம் தேதி முடிவடையும்.

சபரிமலையில் தரிசனம் செய்ய மெய்நிகர் வரிசை முன்பதிவு கட்டாயமாகும். இந்த போர்டல் இன்னும் செயல்படாததால்,

பல பக்தர்கள் – குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா, ஒடிசா – தங்கள் ரயில் டிக்கெட்டுகள் மற்றும் பிற பயண ஏற்பாடுகளை முன்பதிவு செய்வதற்கான தெளிவுக்காக காத்திருக்கிறார்கள்.
ஆனால் இன்று காலையில் முன்பதிவு செய்யமுடியாத நிலையில் பக்தர்கள் தவித்தனர்.கடந்த ஆண்டைப் போலவே, பக்தர்களின் தினசரி வரம்பு 70,000 ஆக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், காவல்துறை மற்றும் பிற துறைகளுடன் கலந்துரையாடிய பிறகு இறுதி வரம்பு முடிவு செய்யப்படும். பாதுகாப்பு மற்றும் கூட்ட மேலாண்மையை மேம்படுத்த, தினசரி யாத்ரீகர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜை காலத்திற்கான வெர்ச்சுவல் க்யூ ஆன்லைன் முன்பதிவு நவம்பர் 1 முதல் தொடங்கியது என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. இன்று நவம்பர் 1 முதல் மெய்நிகர் வரிசை முன்பதிவுகளைத் தொடங்க வாரியம் திட்டமிட்டுள்ளதாக தேவஸ்தானத் தலைவர் பி.எஸ். பிரசாந்த் தெரிவித்தார்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த சபரிமலை மண்டல பூஜை தரிசனம் மெய்நிகர் வரிசை முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

சபரிமலை மண்டல-மகரவிளக்கு யாத்திரை காலத்தில் தரிசனத்திற்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு இன்று (01/11/25) மாலை 5 மணிக்கு தொடங்கியது

sabarimalaonline.org என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.

ஒரு நாளில் 70,000 பக்தர்கள் இந்த வாய்ப்பைப் பெறலாம்.

வண்டிபெரியார் சத்திரம், எருமேலி, நிலக்கல் மற்றும் பம்பாவில் ஸ்பாட் புக்கிங் கிடைக்கும்.

ஒரு நாளைக்கு 20,000 பேர் ஸ்பாட் புக்கிங் மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது.

பாரம்பரிய உணவுத் திருவிழா; பலவகை உணவுகள்… அசத்திய பள்ளி!

shcool food festival in usilampatti - 2025

உசிலம்பட்டியில் அரசு உதவிபெறும் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழாவில் பலவகையான உணவுகள் வைத்து அசத்திய பள்ளி!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வண்ணாரப்பேட்டை தெருவில் அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி, பள்ளியில் பயிலும் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதற்காக பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களே பாரம்பரிய உணவுகளை தயாரித்து பாரம்பரிய உணவுத்திருவிழாவில் இடம்பெறச் செய்தனர்.

இதில் பாரம்பரிய உணவுகளான கம்மகூழ், கேப்பiகூழ், முளை கட்டிய பாசிப்பயிறு, கடலைப்பருப்பு, கேப்பை புட்டு, மோர்குழம்பு, கேரட், வெண்டைக்காய், உள்ளிட்ட பலவகையான காய்கறிகள் உள்ளிட்டவைகளை வைத்து பின் பள்ளி குழந்தைகளுக்கு பரிமாறினர்.

இதில், வட்டாரக் கல்வி அலுவலர் தேவி முன்னிலை வகித்தார், பள்ளி தலைமையாசிரியர் மதன்பிரபு வரவேற்று பேசினார். உசிலம்பட்டி எம்.எல்.ஏ .
அய்யப்பன் பங்கேற்று பள்ளி குழந்தைகளுக்கு உணவுகளை வழங்கினார்.

ஆர்வத்துடன் வாங்கி சென்ற பள்ளி குழந்தைகள் பாரம்பரிய உணவுகளை ருசித்து சாப்பிட்டனர். இதில், உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் சுரேந்திரகுமார் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி தான் துரோகி; திமுக.,வின் பி டீம்! திமுக., வெற்றி பெற டீல் செய்கிறார்: டிடிவி தினகரன் ஆவேசம்!

ttv dinakaran in chozhavanthan meeting1 - 2025

தேர்தல் ஆயுதம் விஜயா – போர்க்களத்தில் தான் ஆயுதத்தை எடுக்க முடியும் – அந்த ஆயுதத்தை 3 மாதம் பொறுத்திருந்து தேர்தலில் பாருங்கள் என டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மதுரை சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார். முன்னதாக, செங்கோட்டையன் மீதான நடவடிக்கை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசுகையில் அண்ணன் செங்கோட்டையன் அவர்கள் 72 -ல் புரட்சித்தலைவர் கட்சி ஆரம்பித்த நாளிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்.கட்சியில் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.
அதிமுகவின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் , பசும்பொன்னில் தங்களை சந்தித்தது அரசியல் ரீதியான நிகழ்ச்சி இல்லை.

ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா பசும்பொன் வரும்போது எல்லாம் செங்கோட்டையன் அம்மாவின் பாதுகாப்பிற்காக கட்சி சார்பாக அங்கு வருவார். ஜெயலலிதாவின் அரசியல் சுற்றுப்பயணத்தின் பாதுகாப்பில் செங்கோட்டையன் முக்கிய பங்கு ஆற்றியவர். நாங்கள் மூவரும் சந்தித்ததை அரசியல் நிகழ்வாக பார்க்கவில்லை.

2 மாதங்களுக்கு முன்பே எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.சேவல் சின்னம் தொடங்கி தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்.
எம்ஜிஆர் கால தொண்டர்களில் சட்டமன்ற உறுப்பினராக உள்ள மூத்த நிர்வாகி.
கட்சிக்கு எதிராக செங்கோட்டையன் எந்த நடவடிக்கையும் இல்லை.ஒன்றாக சேர வேண்டும் என எங்களிடம் போனில் மட்டுமே பேசினார்.

துரோகத்தை வீழ்த்தவே ஒன்றிணைந்தோம். அவர் அரசியல் ரீதியாக பசும்பொன்னில் செங்கோட்டையன் ஒன்றுமே பேசவில்லை. இரட்டை இலை பலவீனப்படும் வகையில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். தன் நலத்திற்காக கட்சியை அழிக்க குரங்கு கையில் கொடுத்த பூமாலையாக மாற்றி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

துரோகத்தை வீழ்த்துவதற்கு மூவரும் ஒன்றாக இணைந்திருக்கிறோம் என்றுதான் சொன்னேன் நான். செங்கோட்டையன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை.
கங்காரு குட்டியை மடியில் கட்டிப்பிடித்தது இருப்பது போல எடப்பாடி பழனிச்சாமி பதவியை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வர எடப்பாடி பழனிச்சாமி வழி வகுக்கிறார். மற்றவர்களை பார்த்து துரோகி என கூறும் தகுதி கூட எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை.

கொள்ளிக்கட்டையை எடுத்து தலையில் சொரிந்து கொண்டது போல் எடப்பாடி செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி உள்ளார். எங்களை நேரில் சந்திக்கும் தைரியம் கூட எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடையாது. எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கிய பழனிசாமி துரோகியா ? நாங்கள் துரோகியா?

அவர் முதல்வராக அவருக்கு ஆதரவு வழங்கிய 18 சட்டமன்ற உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி துரோகியா? நாங்கள் துரோகியா
ஹிட்லர் போன்ற மனப்பான்மையில் உள்ள பழனிச்சாமி துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அது பழனிசாமிக்கு தான் கொடுக்க வேண்டும்.

பதவி கொடுத்த சசிகலாவை துரோகி என்கிறார் எடப்பாடி பழனிசாமி.
திமுகவின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த நான் துரோகியா. எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமர வைத்த நாங்கள் துரோகியா. நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது எடப்பாடிக்கு எதிராக இருந்த அதிமுகவினர் அனைவரையும் ஒருங்கிணைத்து வாக்களிக்க வைக்க காரணமாக இருந்த நாங்கள் துரோகிகளா?

ஹிட்லர் போன்ற மனப்பான்மையில் செயல்படும் எடப்பாடி பழனிசாமி துரோகத்தை பற்றி எல்லாம் பேசக்கூடாது. இத்தேர்தலில் உறுதியாக தென்தமிழ்நாட்டு மக்கள் உரிய பாடத்தை எடப்பாடி பழனிசாமிக்கு கற்பிப்பார்கள். மோசமான தோல்வியை எடப்பாடி பழனிசாமி சந்திக்க போகிறார்.

தகுதியில்லாத பழனிசாமி தகுதி உள்ள மூத்த நிர்வாகிகளை நீக்குகிறார்.
2021ல் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வர எடப்பாடி பழனிசாமி தான் காரணம்.
எங்களை பி டீம் என்கிறார்கள்.2024ல் நாடாளுமன்ற தேர்தலில் டம்மி வேட்பாளர்கள் போட்டு திமுகவின் வெற்றிக்கு காரணம். ஜெயலலிதா என்னை நீக்கினார்கள். என்னை துணைப் பொதுச்செயலாளர் என்னை ஏற்றுக்கொண்டு எனக்காக தொப்பி சின்னத்தில் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
அமமுக எடுக்கும் ஆயுதத்தை வரும் தேர்தலில் பாருங்கள்.

எங்களோடு ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க
தேவர் அவர்களின் குருபூஜைக்கு வந்ததால், கட்சியிலிருந்து கொங்கு நாட்டு தங்கம் செங்கோட்டையன் அவர்களை கட்சியில் இருந்து நீக்கிய துரோகத்தின் உருவம் பழனிச்சாமிக்கு தென் தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் தேர்தலில் பதில் அளிப்பார்கள்.

தென் தமிழ்நாட்டில் மிகப் பெரிய தோல்வியை எடப்பாடி பழனிசாமி சந்திப்பார்.
தேவர் ஜெயந்திக்கு வந்ததற்காக செங்கோட்டையனை நீக்கியதற்காக தென் தமிழக மக்கள் அதனை தங்களுக்கு நேர்ந்த அவமானமாக கருதுகிறார்கள்.உறுதியாக இந்த தேர்தலில் அது எதிரொலிக்கும்.

எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி விதிகள் பழனிச்சாமிக்கு தெரியாதா?
விதிகளையே திருத்தி கேவலப்படுத்தியவர் பழனிசாமி. விதிகளையே புறந்தள்ளியவர் விதியை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?

எங்களை பி டீம் என்று சொல்லும் பழனிச்சாமி தான் 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணமானவர். இந்த தேர்தலில் பழனிச்சாமியின் துரோகம் வீழ்த்தப்படும். கொடைநாடு கொலை வழக்கை பற்றி பேசினாலே பழனிச்சாமி பதறுவார். பதறுகிறார்.

அரக்கர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது அழிவை சந்திப்பார்கள் கடைசியில் சூரசம்ஹாரம் நடக்கும் (எடப்பாடிக்கு) எடப்பாடி பழனிச்சாமி வீழ்த்துவதற்கு நாங்கள் ஜனநாயக முறையில் எடுக்கப் எடுக்கப் போகும் ஆயுதத்தை பொறுத்திருந்து பாருங்கள்.

எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்துவதற்கு ஆயுதமாக (விஜயை) கையில் எடுப்பீர்களா என்ற கேள்விக்கு போர்க்களத்தில் தான் ஆயுதத்தை எடுக்க முடியும். அந்த ஆயுதத்தை 3 மாதம் பொறுத்திருந்து தேர்தலில் பொறுத்திருந்து பாருங்கள் என , டிடிவி தினகரன் பதில் அளித்தார்.

என் உயரம் எனக்குத் தெரியும்: அண்ணாமலை பளீச்!

அண்ணாமலை இன்று திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த போது பேசியவை, சமூகத் தளங்களில் பேசுபொருளானது. சில விஷயங்களை நேரடியாகச் சொல்லியும், சில விஷயங்களை அவர் சொல்லாமல் மறைமுகமாகவும் சொல்லியிருக்கிறார்.

  1. தமிழகத்தில் சுத்தமான நேர்மையான அரசியலை கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கையில தான் இருக்கிற வேலையை விட்டுட்டு பாஜக வில் சேர்ந்தேன். அப்படிப் பட்ட அரசியலை கொடுக்கக் கூட்டணி அமையும் படி மோடி செய்வார் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருக்கிறேன்.”

(இதன் மூலம் தற்போதைய கூட்டணி சுத்தமான நேர்மையான ஆட்சியைக் கொடுக்கக் கூடிய கூட்டணி இல்லை என்று மறைமுமாகச் சொல்கிறார்.)

2)”தலைவர்களிடம் கொடுத்த வாக்குறுதிக்குக் கட்டு பட்டு சபை நாகரிகம் கருதி சில நேரங்களில் என்னுடைய மனசாட்சிக்கு எதிராகப் பேசியிருக்கிறேன்”

(அதாவது எடப்பாடி பழனிச்சாமி அண்ணன் தான் கூட்டணி வேட்பாளர். அவரை முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்க உயிரைக் கொடுத்து உழைப்போம் என்று அண்ணாமலை சொன்னது தலைமையின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு சொன்ன வார்த்தைகள் மட்டுமே.)

3)”நான் அதிமுகவைப் பற்றி விமர்சிக்காமல் சும்மா இருந்தாலும் என்னைப் பற்றி அதிமுகவினர் விமர்சித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு. லட்சுமண ரேகையை அவர்கள் மீறக் கூடாது”

(இதன் மூலம் எடப்பாடியின் அல்லக்கைளை மட்டுமல்லாமல் நேரடியாக எடப்பாடியையும் எச்சரிக்கிறார் அண்ணாமலை. எடப்பாடியின் அடிவருடிகள் சிலரை வைத்து, அண்ணாமலைக்கு எதிராகக் குரைக்க விடுபவர் எடப்பாடி தான் என்பதை மறைமுகமாக்ச் சொல்கிறார். இந்த கபட நாடகத்தில் திராவிட பாஜக.,வுக்கும் பங்கு உண்டு என்பதை அனைவரும் அறிவர்.)

4)” இன்னும் ஒன்னு ரெண்டு மாதத்தில் நேர்மையான கூட்டணி அமையும் என்ற நம்பிக்கையுடன் கட்சியின் தொண்டனாகக் காத்திருக்கிறேன். அமையா விட்டால் விலகிச் சென்று என்னுடைய விவசாய வேலையில் இறங்கி விடுவேன்”

(இது பாஜக தலைமைக்கும் மோடிக்கும் அவர் அனுப்பும் செய்தி)

5)”சாதாரண விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவன் நான்.
Back up இல்லாத என்னைப் போன்றவர்கள் எப்படி தனிக்கட்சி துவங்க முடியும்? நமக்கு ஒத்து வரவில்லையென்றால் கச்சியிலிருந்து விலகி சமூக சேவை செய்யும் அமைப்பை ஏற்படுத்தி மக்களுக்காக உழைக்கலாமே, சேவை செய்யலாமே?

(அதாவது நான் இந்த எதிமுக & திபாஜக கூட்டத்துக்கு விட்டுக் கொடுத்து விட மாட்டேன். அப்படி எல்லாம் என்னைச் சாதாரணமாக நினைக்க வேண்டாம்.ஏதாவது ஒரு வகையில் களத்தில் நிற்பேன்.)

6)”பதவி என்பது வெங்காயம் மாதிரி. பதவியை வாங்கிக் கொண்டு “லெட்டர் பேடை” வைத்துக் கொண்டு பதவியைச் சொல்லிக் கொண்டு காரில் போக நான் அரசியலுக்கு வரவில்லை.”

(இது திபாஜக கூட்டத்துக்கு அண்ணாமலை கொடுத்திருக்கும் சிறப்பான “டோஸ்”)

ஆக இப்போதிருக்கும் தேர்தல் கூட்டணி ” சும்மா ” தான் என்று தெரிகிறது. அண்ணாமலையின் விருப்பமான சுத்தமான நேர்மையான கூட்டணி அமைய வேண்டும். அதில் எதிமுக., வுக்கு இடம் இருக்கக் கூடாது.

K Shanmugananda (Modi rajyam)