இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.
அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது
திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்ற சில நிமிடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை; கோவிலுக்குள் புகுந்த மழை நீரால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்!
இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.
அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது
இந் நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து நேற்று முதல் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.
மதுரை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு மனமில்லை, மேல்முறையீடு சென்று விட்டாலே அதை காண்பித்து தீபம் ஏற்ற விடாமல் தடுக்க பார்க்கிறார்கள்,
தமிழகத்தின் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் என்பது, லோக் பவன் எனும் பெயர் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அதாவது, 'மக்கள் மாளிகை’ எனப்படும். இந்தப் பெயர் மாற்றம் அதிகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ளதாக
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சிறுநீரகப் பாதிப்பு உள்ளானவர்கள் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளைக் குறைத்துக் கொள்வதும், வேண்டியளவு நீர், சோடியம் (உணவில் சேர்க்கும் உப்பு) மற்றும் புரதங்களை
இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.
அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது
திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்ற சில நிமிடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை; கோவிலுக்குள் புகுந்த மழை நீரால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்!
இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.
அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது
இந் நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து நேற்று முதல் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.
மதுரை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு மனமில்லை, மேல்முறையீடு சென்று விட்டாலே அதை காண்பித்து தீபம் ஏற்ற விடாமல் தடுக்க பார்க்கிறார்கள்,
தமிழகத்தின் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் என்பது, லோக் பவன் எனும் பெயர் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அதாவது, 'மக்கள் மாளிகை’ எனப்படும். இந்தப் பெயர் மாற்றம் அதிகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ளதாக
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சிறுநீரகப் பாதிப்பு உள்ளானவர்கள் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளைக் குறைத்துக் கொள்வதும், வேண்டியளவு நீர், சோடியம் (உணவில் சேர்க்கும் உப்பு) மற்றும் புரதங்களை
‘ அறிவும் நோக்கமும் செயற்கை நுண்ணறிவு (ஏ ஐ – Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் . அறிவை கணிணியும் நோக்கத்தை மனிதர்களும் தீர்மானிப்பார்கள் . ‘ இது பிரதமர் நரேந்திர மோடி தொழில் நுட்பம் குறித்து கூறியுள்ள தொலைநோக்கு பார்வை. இது காந்திய மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை (ஏ ஐ) பயன்படுத்தி எதிர்காலத்தை நாம் வடிவமைக்கும் போது நாம் உருவாக்கும் இயந்திரங்கள் எவ்வளவு அறிவு உள்ளதாக இருக்கிறது என்பது மட்டுமே அதன் சிறப்பை கூறாது. மாறாக எந்த அளவுக்கு அது தார்மீக ரீதியில் செயல்படுகிறது என்பதுதான் அதன் சிறப்பைச் சொல்லும்.
‘ மனிதனைப் போன்ற ‘ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏ ஐ) என்று நாம் பேசும்போது மனிதன் இயல்பாகவே நன்நெறிகளை கொண்டவனாகவும் மென்மையானவனாகவும் நியாயமானவனாகவும் இருப்பதாக நாம் கற்பனை செய்து கொள்கிறோம். இந்த பார்வை முழுமையானது அல்ல. மானுடம் என்பது நல்லதும் கெட்டதும், கருணையும் குரூரமும், தர்க்க அறிவும் உணர்ச்சி உந்துதலும் என இரண்டும் கலந்தது. மனிதனை பிரதி/ போலி செய்வதாக (ஏ ஐ )வடிவமைப்பது என்றால் அவனிடம் உள்ள நல்லவற்றையும் குறைகளையும் சேர்த்தே உருவாக்கும் ஆபத்து உள்ளது.
இதற்கு மாறாக , தெய்வீக ஆணையின்படி உருவான , இயற்கையில் இரண்டுக்கும் இடையே சமநிலை உள்ளது. அது நடுநிலையாக, பக்க சார்பு அற்று, முறையான தர்க்கத்தின் அடிப்படையில் இயங்குகிறது. அந்த சமநிலை தடுமாறும் போது, அது இயற்கையால் ஏற்படுவது அல்ல மனிதனின் குறுக்கீட்டினால் உருவாவது , பேரழிவு ஏற்படுகிறது. ஏ ஐ வளர்ந்து வரும்போது இயற்கை அதை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாகிவிடும். இயற்கை அந்த சவாலை எப்படி எதிர்கொள்ளும் என்பதை இப்போதே கணிக்க முடியாது. அது மட்டும் அல்ல அது மர்மமானதும் கூட.
எனவே , மனித நடத்தையை போலி செய்வதாக நாம் ஏ ஐ வடிவமைக்க கூடாது. அதை சீரிய அறிவுடனும் மானுட விழுமியங்களில் சிறந்தவற்றை பிரதிபலிப்பதாகவும் கவனத்துடன் வடிவமைக்க வேண்டும். அறிவு இந்த சமன்பாட்டில் ஒரு பகுதிதான். நோக்கம் தான் அதற்கு உரிய அர்த்தத்தை அளிப்பது. மனித நன்னெறிகள் தான் குறிக்கோளை தீர்மானிக்க வேண்டும்.
ஏ ஐ – யில் இப்போது மொழியியல் நுண்ணறிவு மாதிரிகளும் ( Large Language Models – எல் எல் எம் ) தர்க்க – கணித நுண்ணறிவு மாதிரிகளும் ( Large Reasoning Models – எல் ஆர் எம் ) வேகமாக மாறிக்கொண்டே இருக்கும் சூழல் நிலவுகிறது. எல் எல் எம் – பேசுதல், எழுதுதல், படித்தல் விஷயத்தை செறிவாகவும் கச்சிதமாகவும் வடிவமைப்பதிலும் , எல் ஆர் எம் – வடிவங்கள், உறவுகள், தொடர்புகள், தர்க்க ரீதியாக சிக்கலை தீர்ப்பது – பண்பாட்டு அறிவுடனும் பொதுவான தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு சிக்கலான முடிவெடுப்பதில் சிறந்து வருகின்றன. எல் எல் எம் இயந்திரத்தின் திறனையும் எல் ஆர் எம் வழிமுறைகளின் பின்னணியையும் தீர்மானிக்கின்றன. இதன் அடுத்த கட்டமாகிய நன்னெறிகளுடன் பொறுப்பு கூறும் மாதிரிகளை ( Ethical Responsibility Models – இ ஆர் எம்) பன்முக தன்மையும் தார்மீகமும் உடைய நம்முடைய பண்பாட்டின் அடிப்படையில் உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
டெல்பி அறநெறி தொகுப்பில் உள்ள மிலேட்டசை சேர்ந்த தேல்சின் (கிரேக்க தத்துவவாதி) ‘ எல்லாவற்றிலும் அளவோடிருத்தல் ‘ என்ற தத்துவத்தையே இது எதிரொலிக்கிறது. ஏ ஐ யைப் பொறுத்தவரையில் தொழில்நுட்பத்தை அதிகமாகவோ குறைவாகவோ பயன்படுத்தாமல் அளவாக, கட்டுப்பாடோடு பயன்படுத்துவதை குறிக்கிறது. ஏ ஐ ஒட்டுமொத்த வளர்ச்சியை ஆதிக்கம் செய்யவோ அல்லது வாய்ப்பை தவற விட்டதாகவோ இருக்கக் கூடாது என்பதே அளவோடு இருத்தல் என்பதன் பொருளாகும்.
இதோடு தொடர்புடையது இன்னொரு டெல்பி கூற்று. ‘சபதம் எடுங்கள் ;அழிவு நெருங்கிவிட்டது ‘ என்பதே அது . (எதையும் வலுவான சொற்களிலும் நம்பிக்கையுடனும் உறுதிப்படுத்துபவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது என்று இதற்கு பொருள். இது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் கூற்றாக பொதுவாக கருதப்படுகிறது) இந்த கூற்று அவநம்பிக்கைக்கு பதிலாக எச்சரிக்கை அளிப்பதாகவே கருத வேண்டும். ‘ செயல்படு , ஆனால் நெடுநோக்குடன் செயல்படு. உயரமாக எழும்பு ஆனால் அடித்தளத்தை உறுதிப்படுத்து. உறுதிமொழி/ சபதம் கூறு, ஆனால் விழிப்போடு கூறு ‘ என்று இது நமக்கு அறிவுறுத்துகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனைகளும் நிதி ஆயோக்கின் திட்டமிடலும் மேற்கண்ட பண்புகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இதன் அடிப்படையில் தான் ஏஐ தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் செயல்பாடுகள் உள்ளன. இது ஆழ்ந்த சிந்தனையையும் தார்மீகத்தையும் இந்திய கலாச்சார பண்புகளையும் அடிப்படையாகக் கொண்டது. ஏ ஐ தொழில்நுட்பம் பொருளாதரத்தை , சமுதாயங்களை, மக்களை மாற்றி அமைக்கின்ற வேளையில் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் வெளியிட்ட கருத்து சிறந்த வழிகாட்டியாக உள்ளது. ‘ செயற்கை நுண்ணறிவை அதன் தொழில்நுட்பத் திறனை கொண்டு மட்டுமே மதிப்பிடக் கூடாது. மாறாக அதன் நன்னெறிகளைக் கொண்டு மதிப்பிட வேண்டும் , ‘ என்று சொல்லியுள்ளார்.
பிரதமர் மோடி ஏ ஐ பயன்பாட்டில் தார்மீகத்தை வலியுறுத்தியது மகாத்மா காந்தியின் கொள்கையான அகிம்சையை எதிரொலிக்கிறது. ஏ ஐ தொழில்நுட்பத்தை பற்றிய இந்தியாவின் செயல் திட்டம் பொறுப்புணர்வு , பாதுகாப்பு , மனித மாண்பு என்ற மூன்றையும் அடித்தளமாக கொண்டது. வளர்ந்து வரும் ஏ ஐ தொழில்நுட்பம் உலகளாவிய நன்னெறிகளில் நங்கூரமிட்டு இருக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி உலக அரங்கில் உறுதிப்பட கூறியுள்ளார். அவரது பேச்சு வழிகாட்டுவதாக மட்டுமில்லை , தொழில்நுட்பம் மனிதநேயத்தை அழிப்பதாக இல்லாமல் உயர்த்துவதாக , தொழில் நுட்பத்துக்கும் மனித இனத்திற்கும் மோதலை தவிர்த்து இணக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த கண்ணோட்டத்தின் படி ஏ ஐ தொழில்நுட்பம் தொல்லை தருவதாக இல்லாமல் தர்மத்தின் அடிப்படையிலான முன்னேற்றத்தை கொண்டு வருவதாக அமையும்.
டிஜிட்டல் இந்தியா திட்டம் சத்யாகிஹகம் அல்லது உண்மையின் துடிப்பாக இருக்கிறது . அது வெளிப்படை தன்மையையும் பொறுப்புணர்வையும் வளர்கிறது . தவறான , பொய்யான செய்திகளையும் தரவுகளை தவறாக பயன்படுத்துவதையும் தடுக்க கூடியதாக தொழில்நுட்ப கட்டமைப்பை மோடி அரசு ஏற்படுத்தி உள்ளது. தார்மீக நெறிகளின் மீது கட்டமைக்கப்படும் ஏ ஐ தொழில்நுட்பம் நவீன கால சத்தியாகிரகம் என்றே கருத வேண்டும்.
சுதேசி கொள்கை -?உள்நாட்டு தயாரிப்பு – என்ற மோடியின் செயல்திட்டம் ‘ ஏ ஐ தொழில்நுட்பத்தை இந்தியாவுக்காக , இந்தியாவிலேயே தயாரிப்போம் ‘ என்பதாக உள்ளது. 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜி பி யூ – கிராபிக் செயலாக்க அலகுகள் , உள்நாட்டிலேயே தயாரான அடிப்படை கட்டமைப்பு, தரவுகளின் தேசிய தளம் ஆகியவை எண்ம தற்சார்பை உறுதி செய்வதாக இருக்கிறன. ஆத்ம நிர்பார் என்பது உற்பத்தி துறையில் மட்டுமாக சுருங்கி விடாமல் எண்ம கட்டமைப்பிலும் இறையாண்மையை விரிவாக்குவதாக உள்ளது. ஏ ஐ தொழில்நுட்பத்தில் மேற்கத்திய நாடுகளும் சீனாவும் ஆதிக்கம் செய்து வந்த நிலையில் தொழில்நுட்ப அடிமைத்தனத்திற்கு புதிய இந்தியாவில் இடமில்லை என்ற தெளிவான செய்தியை உலகுக்குச் சொல்லி உள்ளது.
‘ அனைவருக்குமான ஏ ஐ தொழில்நுட்பம் ‘ என்ற மோடியின் கூற்று வெறும் கோஷமல்ல. அறிவை ஜனநாயக படுத்துவதற்கான உறுதிமொழி. கிராமப்புற மக்களும் சிறப்பான மருத்துவ கவனிப்பை தரும் இ – சஞ்சீவினி , தரவுகளின் அடிப்படையில் செயல்பட விவசாயிகளுக்கு உதவிடும் அக்ரி ஸ்டாக் , பன்மொழிகளை கொண்ட இந்தியாவில் மொழிகளால் பிரிவினை ஏற்படாமல் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த பாஷிணி போன்றவை அந்த உறுதி மொழியின் வெளிப்பாடுகள்.
கடையனுக்கும் கடைத்தேற்றம் என்று காந்திஜி வழி மொழிந்தது வெறும் பேச்சாக இல்லாமல் அரசின் திட்டங்களாலும் இணைய தொடர்புகளாலும் நடைமுறையில் சாத்தியமாகியுள்ளது . சர்வோதய கொள்கை என்பது கற்பனையல்ல நிதர்சனத்தில் சாத்தியம் என்பதை காட்டியுள்ளது எண்ம பொதுப் பயன்பாடு. ஜன்தன் (வங்கி கணக்கு) முதல் ஆயுஸ்மான் பாரத் வரை, நேரடி பலன் பரிமாற்றம் முதல் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் வரை என ஏ ஐ தொழில்நுட்பத்தை நவீனமாகவும் நன்னெறிகளுடனும் பயன்படுத்த முடியும் என்பதை இந்தியா செயலில் காட்டியுள்ளது.
‘ ஏ ஐ தொழில்நுட்பம் செல்வமும் செல்வாக்கும் கொண்டவர்களுக்கு மட்டுமே என்பதாக இல்லாமல் ஒவ்வொரு இந்தியனின் குரலாக , இந்திய மொழிகளிலேயே ஓங்கி ஒலிக்க வேண்டும் ‘ என்று மோடி மிகச் சரியாகச் சொன்னார் . அவர் சொன்னபடியே ஏ ஐ தொழில்நுட்பம் அளவில் பெரியதாக இருப்பது மட்டுமல்ல பயனுள்ளதாகவும் இருக்கிறது.
காந்தியின் அபரிக்ரஹா (பேராசையின்மை) மற்றும் எளிமையை டிஜிட்டல் இந்தியா திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. அரசின் ஏ ஐ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் கருவிகள் பயன்பாட்டுக்கு உகந்தவை யாகவும் ,எளிமையாகவும், குறைந்த வாய்ப்புகள் உள்ள சூழ்நிலையில் கூட செயல்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆதாரை அடிப்படையாகக் கொண்டு சேவைகள், ஒரு சொடுக்கில் பல சேவைகள் என்பது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பலருக்கும் நன்மை செய்வதாக உள்ளன.
இந்தியாவின் ஏ ஐ தொழில்நுட்ப வளர்ச்சி திட்டங்கள் பிரதமர் மோடியின் தலைமையில் மட்டுமல்ல அவருடைய நேரடி கண்காணிப்பில் செயல்படுத்தப்படுகின்றன. தேசிய புள்ளியல் மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியா துறைகள் மூலமாக செயல்படுத்தப்படும் அந்த திட்டங்கள் தொழில்நுட்ப பயிற்சி மட்டுமன்றி அதற்கு அப்பாலும் செல்கின்றன. தார்மீகத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது , கணிணி நிரல் உருவாக்குபவர்களை மாற்றத்திற்கு வித்திடுபவர்களாக கருதி ஊக்குவிப்பது ஆகியவை அதில் அடங்கும். ஏ ஐ பயன்படுத்தி உருவாக்கப்படும் திட்டங்களும் கருவிகளும் காந்தியின் தவமான தீவிர சுய கட்டுப்பாடு மற்றும் மற்றவர்களுக்காக தன்னை ஒருக்கிக் கொள்ளுதலின் வடிவங்களாக இன்று உள்ளன.
21 ஆம் நூற்றாண்டில் , காந்தியின் ராட்டை ஒதுங்கி மின்மாற்றி களுக்கும் ஜி பி யூ க்களுக்கு வழிவிட்டு இருக்கலாம். ஆனால் அவரது கொள்கைகள் காலத்தை வென்று நிற்பவை. சுரண்டல் அல்ல நன்னெறி , லாபம் அல்ல சமுதாயம் , பிரம்மாண்டம் அல்ல எளிமை என்ற காந்தியின் ஆன்மீக சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டது பிரதமர் நரேந்திர மோடியின் ஏ ஐ வளர்ச்சிக்கான தொலைநோக்கு.
சத்யாகிரக போராட்டத்தின் மூலம் இந்தியா தன் ஆன்மாவை மீட்டதே இருபதாம் நூற்றாண்டு கண்டது. உண்மையின் அடிப்படையில் விழிப்புணர்வுடன் எதிர்காலத்தை வடிவமைத்து வருவதை 21ம் நூற்றாண்டு காண இருக்கிறது. இந்தியாவின் ஏ ஐ எதிர்காலம் வெறும் அறிவை மட்டுமே சார்ந்தது அல்ல . அது நீதியானதும் நியாயமானதும் கூட. அது வெறும் தொழில்நுட்ப தேர்வு மட்டுமல்ல மாறாக பண்பாட்டை முன்னிறுத்துவது.
நன்றி : பிசினஸ் கார்டியன்
கட்டுரையாளர் தொழில்நுட்ப வல்லுநர் , எழுத்தாளர் , கின்னஸ் விருது பெற்றவர்.
செங்கோட்டை- தாம்பரம்- செங்கோட்டை இடையே இயங்கும் 20681/20682 சிலம்பு அதிவிரைவு ரயிலில் தற்காலிகமாக 7 பெட்டிகள் இணைத்து 24 பெட்டிகள் கொண்ட ரயிலாக கடந்த 2023 முதல் இயங்கி வருகிறது. அதனை மேலும் 6 மாதங்களுக்கு(2026 ஏப்ரல் வரை) 24 பெட்டிகளுடன் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் முதல் காரைக்குடி வரை முதலில் இயக்கப்பட்டு பின்னர் இந்த ரயில் மானாமதுரை வரை நீடித்து இப்போது சென்னை தாம்பரம் செங்கோட்டை இடையே இயங்கும் சிலம்பு அதிவேக ரயில் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்பட்டு வருகிறது இந்த ரயிலில் 16 பெட்டிகள் மட்டும் முதலில் இயக்கப்பட்டு வந்தது
தற்போது பயணிகள் கூட்டம் மிக அதிக அளவில் இருப்பதால் 24 பெட்டிகளாக தற்காலிகமாக இயக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரயில் பெட்டிகளில் அனைத்திலும் பெரும்பாலும் பயணிகள் கூட்டம் 100 சதவீதம் உள்ளது.
இதனால் பயணிகளின் நலன் கருதி தற்காலிகமாக இந்த ரயிலில் ஏழு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயிலில் தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதால் இந்த ஏழு பெட்டிகளும் தொடர்ந்து ஏப்ரல் 2026 வரை நீடித்து இயக்கப்படும் என தென்னக ரயில்வே தற்போது அறிவித்துள்ளது.
இந்த ரயிலில் பயணிகள் அதிகம் விரும்பி பயணிப்பதால் வாரத்தில் மூன்று நாள் இயங்கும் இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என தென்காசி விருதுநகர் சிவகங்கை திருச்சி புதுக்கோட்டை மாவட்ட பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்
அலங்காநல்லூர் மற்றும் குமாரம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் தனியாருக்கு நெற்களை விற்பனை செய்யும் விவசாயிகள்:
நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் 2000 திற்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடை செய்த நெல்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாம்.
விரைவில், நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம், தண்டலை, கோட்டைமேடு, கல்லணை, மெய்யப்பன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் முதல் போக சாகுபடி சுமார் 2000 ஏக்கர் அளவில் விளைந்து தற்போது அறுவடை ஆகி வருகிறது .
கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சில நாட்களாக அறுவடை நடை பெறாமல் இருந்த நிலையில், தற்போது தீபாவளிக்கு பின்பாக ஆங்காங்கே வெயில் அடிக்கும் சூழ்நிலையில் பல்வேறு பகுதிகளில் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் , அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததாலும், தொடர்ந்து அவ்வப்போது , மழை பெய்து வருவதாலும் விவசாயிகள் தங்கள் விளைவித்த நெற்களை காப்பாற்ற முடியாமல் தனியாருக்கு விற்று வருகின்றனர்.
இந்த ஆண்டு முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் அதிகப்படியான நெல் விளைந்துள்ள சூழ்நிலையில் தனியார் கமிஷன் கடைகளில் விவசாயிகள் அனுப்பும் நெல்லுக்கு மிக குறைவான விலையே கேட்கின்றனர். ஏற்கனவே மிக அதிக அளவு செலவு செய்து விளைவித்த நெல்லை மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் , விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுகிறது.
ஆகையால், அலங்காநல்லூர் பகுதி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் மேலும் நெல்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என்று அந்தப் பகுதி விவசாயிகள் பொதுமக்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே, அலங்காநல்லூர் குமாரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை காரணமாக நெற்ப்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ள நிலையில், தற்போது கொள்முதல் நிலை ம் திறக்காததால், நெல்லை அறுவடை செய்ய முடியாமல் தனியாருக்கு விற்கவேண்டிய அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளது. வேதனையை ஏற்படுத்துவதாக இந்த பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.
சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு முன்னோட்டமாக சக்திவேல் வாங்கும் விழா நடைபெற்றது.
கந்த சஷ்டி திருவிழாவையொட்டி, சூரபத்மனை சம்ஹாரம் செய்வதற்காக திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து சக்திவேல் பெற்றார்.
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 22-ந் தேதி காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. கந்த சஷ்டி விழாவிற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி மிளகு துளசி, பால் உள்ளிட்டவைகளை ஒரு வேளை மட்டுமேசாப்பிட்டு கடும் விரதம் இருந்து வருகிறார்கள்.
பக்தர்கள் அனைவரும் கோவிலிலே தங்கி இருந்து தினமும் இரு வேளை சரவணப் பொய்கையில் நீராடி கிரிவலம் வந்து முருகப்பெருமானை வழிப்பட்டு வருகிறார்கள். திருவிழாவையொட்டி, தினமும் ஒரு வேளை (காலையில்) யாகசாலை பூஜையும், காலை 11 மணிக்கும், மாலை 5 மணிக்குமாக தினமும் இரு வேளை சண்முகார்ச்சனையும், தினமும் இரவு 7 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி -தந்ததொட்டி விடையாற்றி சப்பரத்தில் அமர்ந்து திருவாட்சி மண்டபத்தினை 6 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 26ந் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் கோவிலுக்குள் ஆலய பணியாளர்கள் திருக்கண் மண்டபத்தில் கோவர்த்தன அம்பிகையிடம் இருந்து முருகன் சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்வாக சூரபத்மனை வெல்லுவதற்காக சத்திய கிரிஸ்வரர் முன்னிலையில் முருகப் பெருமான் தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் சக்திவேல் பெறும் நிகழ்ச்சியாக “வேல் வாங்குதல்”கோலாகலமாக நடைபெற்றது.
இதனையொட்டி அங்கு ஏராளமாக பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முத்தாய்ப்பாக நாளை (27-ந்தேதி திங்கட்கிழமை) மாலை 6 மணியளவில் மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் அருகே சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு விமர்ச்சியாக நடைபெறுகிறது.
சூரசம்ஹாரம் கேள்வி நிகழ்வில் மதுரை மட்டுமல்லாது பிற ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். நாளை மறுநாள்28-ந்தேதி காலையில் கிரிவலப்பாதையில் சட்டத் தேர் பவனியும், மாலையில் பாவாடை தரிசனமும், கருவறையில் முருகப் பெருமானுக்கு தங்க கவசம் அலங்காரமும் நடைபெறுகிறது .விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ப.சத்யபிரியா பாலாஜி, கோவில் துணை ஆணையர் சூரிய நாரயணன், அறங்காவலர்கள் வ.. சண்முகசுந்தரம். நா. மணிச்செல்வன் மற்றும்கோவில் சிவாச்சாரியார்கள். கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
இதே போல, மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை மூலநாத சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழாவில் முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சுவாமி கோவிலில் 14 ஆம் ஆண்டு கந்தசஷ்டி பெருவிழா கடந்த வாரம் புதன்கிழமை காப்பு கட்டுகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலை ஸ்ரீ முருகப்பெருமான் திருக்கோவில் உள் பிரகாரத்தில் வலம் வந்து அம்பாளிடமிருந்து வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிர்வேட்டுக்கள் மேளதாளங்கள் முழங்க பிரகாரத்தை சுற்றி வலம் வந்து வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு அன்னதானம் நடைபெற்றது. தொடர்ந்து, திங்கட்கிழமை மாலை சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி திருக்கோவில் முன்பாக நடைபெறுகிறது.
மதுரை கோயில்களில் கந்த சஷ்டி விழா.
மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில், கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது.
மதுரை அண்ணாநகர் சர்வேஸ்வர ஆலயம், சித்தி விநாயகர், வரசித்தி விநாயகர், செல்வ விநாயகர், கோமதி புரம் ஜூப்பிலி டவுன் ஞான சித்தி விநாயகர் கோயில்களில் இந்த சஷ்டி, முருகனுக்கு சிறப்பு அபிஷேக, அர்ச்சணைகள் நடைபெற்றது.
மதுரை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், கந்த சஷ்டியை முன்னிட்டு பாலமுருகனுக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேக, அர்ச்சணைகள், பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இக் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை 9.15..மணிக்கு பாலமுருகனுக்கு தயிர் அன்னப் பாவடை அபிஷேகம் நடைபெறுகிறது.
இதேபோல், மதுரை அருகே சோழவந்தான் விசாக நட்சத்திர விளங்கும் பிரளயநாத சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டியை முன்னிட்டு பாலமுருகனுக்கு, தொழிலதிபர் எம்.வி.எம்.மணி, கவுன்சிலர்கள் மருதுபாண்டியன், வள்ளிமயில் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர் இளமதி, கணக்கர் சி. பூபதி மற்றும் ஆலயம் பணியாளர்கள் செய்து இருந்தனர். மதுரை அருகே திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், குமரன் கோயில்களில் இந்த சஷ்டி விழா நடைபெற்றது.
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சிவனடியார்களோடு இந்து முன்னணி திருவாசகம் பாடி போராட்டம் நடத்தினர்.
தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் கடந்த வாரம் திருவாசகம் பாடிய சிவனடியார்களிடம் பணம் செலுத்த வலியுறுத்தி அவதூறாக பேசி வெளியேற்றியதாக கருதி, அறநிலையத்துறை செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திதென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு சிவனடியார்கள் மற்றும் இந்து முன்னணி யினர் ஆர்ப்பாட்டம் நடத்த வந்திருந்தனர்.
போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு கூடிய நூற்றுக்கணக்கான இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் சிவனடியார்கள் அங்கிருந்து புறப்பட்டு இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் தலைமையில், இந்துமுன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன், தென்காசி மாவட்ட சிவனடியார் திருக்கூட்ட ஒருங்கிணைப்பாளர் கயிலை கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம் சென்றனர்.
அங்கு காசி விஸ்வநாதரை சிவாயநம நாமாவளி பாடி வலம் வந்துபலீபீடம் அருகில் அமர்ந்து திருவாசகம் பாடினர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது கடந்த வாரம் சிவனடியார்களை அவதூறாகப் பேசி வெளியேற்றிய திருக்கோவில் நிர்வாகத்தினர் யாரும் தடுக்கவில்லை.
பல ஆண்டுகளாக நடை பெற்றுவரும் வழக்கம் போல் திருவாசகம் பாடுவோம் என்றும் தடுத்தால்போராட்டம் நடத்துவோம் என்றும் சிவனடியார் பெருமக்களோடு இந்து முன்னணி உறுதுணையாக நிற்கும் என மாநிலத் துணைத் தலைவர் பேசினார்.
நிகழ்ச்சியில் இந்து முன்னணி தென்காசி மாவட்ட துணைத் தலைவர் இசக்கிமுத்து, மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட செயலாளர்கள் பால்ராஜ், குளத்தூரான், உலகநாதன், ஆறுமுகம், கார்த்திகேயன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவா, மாரியப்பன், பெரியகாசி, திருமலை, மாரிமுத்து, ஈஸ்வரன் தென்காசி நகரத் தலைவர் நாராயணன், செங்கோட்டை நகர தலைவர் மாசானம் செங்கோட்டை ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து, சுரண்டை நகர தலைவர் நாராயணன், தென்காசிநகர செயலாளர் சொர்ணசேகர் பாலாஜி நகர செயற்குழு உறுப்பினர் மணி, சிவனடியார் திருக்கூட்டத்தைச் சார்ந்த சத்தியபாமா உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செங்கோட்டையில் இருந்து ராஜபாளையம் விருதுநகர் மதுரை பழனி, பாலக்காடு, மங்களூரு, உடுப்பி, கோவா வழியாக மும்பைக்கு ஒரு புதிய ரயில் சேவையை அறிமுகப்படுத்துமாறு தெற்கு ரயில்வேக்கு நெல்லை விருதுநகர் தென்காசி மதுரை மாவட்ட மக்கள் பயணிகள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
தற்போது மதுரையிலிருந்து மும்பைக்கு இயக்கப்படும் ரயில்கள் பெரும்பாலும் சென்னை, ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா, குண்டக்கல் போன்ற மத்திய இந்திய வழித்தடங்கள் வழியாகவோ அல்லது திருநெல்வேலி, கோட்டயம், எர்ணாகுளம் போன்ற கிழக்கு/மத்திய கேரளா வழியாகவோ செல்கின்றன.
செங்கோட்டை -மதுரை – மும்பை (மேற்கு கடற்கரை) வழித்தடத்தின் முக்கியத்துவம்:
நேரடி இணைப்பு: மதுரை மற்றும் பழனி போன்ற முக்கிய ஆன்மீகத் தலங்களை கேரளாவின் பாலக்காடு மற்றும் கர்நாடகாவின் மங்களூரு, உடுப்பி, கோவா போன்ற இந்தியாவின் முக்கிய சுற்றுலா மற்றும் வர்த்தக மையங்களுடன் நேரடியாக இணைக்கிறது.
மேற்கு கடற்கரை ரயில்வேயின் பயன்பாடு: இந்த வழித்தடம் மேற்கு கடற்கரை ரயில்வேயின் முழுத் திறனையும் பயன்படுத்த உதவுகிறது. இது மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா மற்றும் கேரளாவின் பல முக்கிய நகரங்களுக்கு இடையே எளிதான இணைப்பை வழங்கும்.
பொருளாதார ஊக்கம்: இந்த ரயில் சேவை, வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்களின் போக்குவரத்துத் தேவைகளை மேம்படுத்தி, தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு கடற்கரை மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்.
தெற்கு ரயில்வே இந்தக் கோரிக்கையின் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, மேற்கு கடற்கரை வழியாக மும்பைக்கான இந்த புதிய மற்றும் விரைவான ரயில் சேவையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு திடீர் ஆய்வு பணியை மேற்கொள்ள வந்த தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர்க்கு செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது. செங்கோட்டை ரயில் நிலையத்தின் வளர்ச்சிகள் குறித்து மனுக்களும் வழங்கப்பட்டன.
இது குறித்து செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறியபோது… செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் 25/10/25 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு வருகை புரிந்த தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா அவர்களிடம் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அளித்தோம். அதில் குறிபிப்ட்டிருந்த முக்கிய அமசங்கள் இவைதான்…
(1) மீட்டர் கேஜ் கால கட்டத்தில் சேரன்மாதேவி , கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம் பாவூர்சத்திரம் தென்காசி செங்கோட்டை ஆரியங்காவு தென்மலை புனலூர் கொட்டாரக்கரை வழியாக இயக்கப்பட்ட திருநெல்வேலி – கொல்லம் & கொல்லம் – திருநெல்வேலி ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். முடிந்தால் இந்த ரயில்களை திருவனந்தபுரம் வரை இயக்க வேண்டும்.
(2)தற்போது புனலூர் வரை இயங்கும் கன்னியாகுமரி – புனலூர்- கன்னியாகுமரி ரயில்களை தென்காசி வரை நீட்டிக்க வேண்டும்.
(3) கடந்த வாரம் புனலூர் செங்கோட்டை வழியில் இயங்கும் மின்வழித்தட மின்சார இன்ஜின்களின் உந்துதலுக்கு மின்சக்தி அளிக்கின்ற புனலூர் தொடர்வண்டி மின்மாற்றி துணை நிலையம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. எனவே மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் MEMU மின் ரயில்களை எர்ணாகுளம்/ திருவனந்தபுரம்/கொல்லம் இவற்றில் இருந்து மதுரை/ திருநெல்வேலி/ திருச்செந்தூர்/ தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு இயக்க வேண்டும்.
(4) கடந்த பல மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்ட தாம்பரம்- திருவனந்தபுரம் – தாம்பரம் 3E ஏசி வாராந்திர ரயில்களை ( வழி திருச்சி மதுரை விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் தென்காசி செங்கோட்டை புனலூர் கொல்லம்) மீண்டும் வரும் நவம்பர் மாத நடுவிலிருந்து பிப்ரவரி 2026 வரை சபரிமலை ஐயப்ப சீசனை ஒட்டி இயக்க வேண்டும். மக்கள் நலன் கருதி இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு தூங்கும் வசதி பெட்டிகளும், முன் பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட வேண்டும்.
(5) செங்கோட்டை- கோயம்புத்தூர் இடையே பகல் நேர ரயில்களை இயக்க வேண்டும். இந்த திட்டம் இயலாது போனால் மதுரை – கோயம்புத்தூர்- மதுரை ரயில்களை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்.
(6)தாம்பரம் – செங்கோட்டை , செங்கோட்டை- தாம்பரம் இடையே முன்பதிவு இருக்கை வசதிகள் & முன் பதிவில்லா இருக்கைகள் வசதிகள் கொண்ட தீபாவளி சிறப்பு ரயில்கள் அண்மையில் இயக்கப்பட்டன. சென்னை சென்ட்ரல் – திருப்பதி இடையே ஓடிய சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் அண்மையில் LHB பெட்டிகளாக மாற்றப்பட்டன. இந்த ரயிலின் பழைய ICF பெட்டிகளை வைத்தே தாம்பரம் – செங்கோட்டை- தாம்பரம் தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
தற்போது செங்கோட்டை – சென்னை இடையே தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் மதுரை திருச்சி விருத்தாசலம் விழுப்புரம் வழியாக பகல் நேர ரயில்கள் இல்லை. எனவே இந்த சப்தகிரி ரயிலின் பழைய ICF பெட்டிகளை பயன்படுத்தி செங்கோட்டை – தாம்பரம்- செங்கோட்டை இடையே வாரம் மும்முறை,பகல் நேர விரைவு ரயில்களை ,தீபாவளி சிறப்பு ரயிலின் வழித்தடத்திலேயே இயக்கிட வேண்டுகிறோம்.
(7) தற்போது வாரம் மூன்று நாட்கள் செங்கோட்டையில் இருந்து இயங்கும செங்கோட்டை – தாம்பரம் – செங்கோட்டை சிலம்பு விரைவு ரயில்களையும் , திருநெல்வேலி வழியாக இயக்கப்படும் செங்கோட்டை-தாம்பரம்- செங்கோட்டை அதி விரைவு ரயில்களையும் விரைவில் தினசரி இயங்கும் ரயில்களாக்க ஆவன செய்ய வேண்டும்.
மனதின் குரல் (127ஆவது பகுதி) ஒலிபரப்பு நாள்: 26-10-2025 தமிழில்/குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். நாடு முழுவதிலும் இப்போது பண்டிகைக்காலக் குதூகலம் நிரம்பி இருக்கிறது. நாமனைவரும் சில நாட்கள் முன்னர் தாம் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினோம், பெரும் எண்ணிக்கையில் மக்கள் இப்போது சட்பூஜையில் சுறுசுறுப்பாகி வருகிறார்கள். வீடுகளில் டேகுவா தின்பண்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது. பல இடங்களில் கரையோரங்கள் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சந்தைகளில் மினுமினுப்பு நிரம்பி வழிகிறது. அனைத்து இடங்களிலும் சிரத்தை, நேசம் மற்றும் பாரம்பரியத்தின் சங்கமம் தென்படுகிறது. சட் பண்டிகையின் விரதம் அனுஷ்டிக்கும் பெண்கள் அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் பக்தியோடு இந்தப் பண்டிகைக்கான முஸ்தீபுகளில் ஈடுபட்டு வருவதே கூட மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது.
நண்பர்களே, சட் எனும் பெரும்பண்டிகைக் கலாச்சாரம், இயற்கை மற்றும் சமூகத்திற்கு இடையேயான ஆழமான ஒற்றுமையைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. சட்பூஜையின் போது நதிக்கரைகளில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் ஒன்றாக இணைகிறார்கள். இந்தக் காட்சி பாரத சமூகத்தின் ஒற்றுமைக்கான மிக அழகான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. நீங்கள் தேசம் மற்றும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால், கண்டிப்பாக சட் உற்சவத்தில் கலந்து கொள்ளுங்கள். ஒரு வித்தியாசமான அனுபவத்தை நீங்கள் உணர்வீர்கள். நான் சட் அன்னைக்கு என் வணக்கத்தைக் காணிக்கையாக்குகிறேன். நாட்டுமக்கள் அனைவருக்கும், குறிப்பாக பிஹார், ஜார்க்கண்ட் மற்றும் பூர்வாஞ்சல் மக்களுக்கு சட் பெரும் பண்டிகைக்கான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, பண்டிகைகளின் இந்தச் சந்தர்ப்பத்தில் நான் உங்கள் அனைவரின் பெயரிலும் ஒரு கடிதம் வரைந்து என் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறேன். தேசத்தின் எந்தச் சாதனைகள் காரணமாக பண்டிகைகளின் பகட்டு மேலும் அதிகரித்துள்ளதோ, அவை பற்றி நான் இந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறேன். நான் வரைந்த கடிதத்துக்கு பதில் அளிக்கும் வகையில் நாட்டின் பல குடிமக்கள் தங்களுடைய கருத்துக்களை அனுப்பியிருக்கிறார்கள். உண்மையிலேயே ஆப்பரேஷன் சிந்தூர், அனைத்து இந்தியர்களின் இதயங்களையும் பெருமிதத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஒரு காலத்தில் மாவோயிச பயங்கரவாத இருள் சூழ்ந்திருந்த பகுதிகளில் கூட இந்த முறை சந்தோஷ தீபங்கள் ஏற்றப்பட்டன. அந்த மாவோயிச பயங்கரவாதம் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள், இது அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நமனாக ஆகியிருந்தது.
ஜிஎஸ்டி சேமிப்புக் கொண்டாட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் பெரும் உற்சாகம் காணப்பட்டது. இந்த முறை பண்டிகைகளின்போது மேலும் ஒரு இனிமையான விஷயத்தைப் பார்க்க முடிந்தது. சந்தைகளில் சுதேசிப் பொருட்கள் வாங்குவது பலமாக அதிகரித்திருந்தது. எந்த சுதேசிப் பொருட்களைத் தாங்கள் வாங்கியிருந்தார்கள் என்பதை இந்த முறை எனக்கு மக்கள் கடிதங்கள் வாயிலாகத் தெரிவித்திருந்தார்கள்.
நண்பர்களே, சமையல் எண்ணெய்ப் பயன்பாட்டில் பத்து சதவீதம் குறைத்துக் கொள்ளுங்கள் என்று நான் உங்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தேன், இது தொடர்பாகவும் உங்கள் ஆக்கப்பூர்வமான வெளிப்பாடுகளைப் பார்க்க முடிந்தது.
நண்பர்களே, தூய்மை மற்றும் தூய்மை தொடர்பான முயற்சிகள் தொடர்பாகவும் ஏராளமான செய்திகள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. நான் பல்வேறு நகரங்களின் சம்பவங்கள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்கிறேன், இவை மிகவும் உத்வேகம் அளிக்கவல்லவை. சத்திஸ்கட்டின் அம்பிகாபூரிலே, நெகிழிக் குப்பையை அகற்றும் ஒரு வித்தியாசமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அம்பிகாபூரில் குப்பைக் கஃபே நடத்தப்படுகிறது. இது எப்படிப்பட்ட கஃபே என்றால், இங்கே குப்பைக்கழிவுகளைக் கொண்டு சேர்த்தால், வயிறார உணவு கொடுக்கப்படுகிறது. யாரேனும் ஒருவர் ஒரு கிலோ நெகிழிக் குப்பையைக் கொண்டு சேர்த்தால், அவருக்கு பகலுணவோ, இரவு உணவோ கொடுக்கப்படுகிறது. யாரேனும் அரை கிலோ நெகிழிக் கழிவுகளைக் கொண்டு வந்து கொடுத்தால், அவருக்கு காலை உணவு அளிக்கப்படுகிறது. இந்தக் கஃபேயை அம்பிகாபூரின் நகராட்சி நிர்வகித்து வருகிறது.
நண்பர்களே, இதைப் போலவே ஒரு அருமையான விஷயத்தை பெங்களூரூவின் பொறியாளர் கபில் ஷர்மா செய்திருக்கிறார். பெங்களூரூ என்பது ஏரிகள்-குளங்களின் நகரமாகக் கருதப்படுகிறது, கபில் அவர்கள் இங்கிருக்கும் ஏரிகள்-குளங்களுக்குப் புத்துயிர் அளிக்கும் இயக்கம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். கபில் அவர்களின் குழுவானது பெங்களூரூ மற்றும் அதன் அருகில் இருக்கும் பகுதிகளில் 40 குளங்கள் மற்றும் 6 ஏரிகளுக்குப் புத்துயிர் அளித்திருக்கிறார்கள். குறிப்பான விஷயம் என்னவென்றால், இவர்கள் தங்களுடைய இந்தப் பணியோடு தனியார் பெருநிறுவனங்கள் மற்றும் அந்தப் பகுதிவாழ் மக்களையும் இணைத்திருக்கிறார்கள் என்பதுதான். இவர்களுடைய இந்த அமைப்பானது மரம் நடும் இயக்கத்தோடும் தொடர்பு கொண்டிருக்கிறது. நண்பர்களே, அம்பிகாபூர் மற்றும் பெங்களூரூ, இந்த கருத்தூக்கம் அளிக்கவல்ல எடுத்துக்காட்டுகள் எல்லாம், நாம் ஒன்றைச் செய்ய தீர்மானித்துவிட்டால், மாற்றம் ஏற்பட்டே தீரும் என்பதையே நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
நண்பர்களே, மாற்றத்திற்கான மேலும் ஒரு உதாரணம், மேலும் ஒரு முயற்சி குறித்து நான் உங்களோடு பகிர விரும்புகிறேன். மலைகளின் மீதும், சமவெளிகளிலும் இருக்கும் காடுகள் எல்லாம், வனங்களின் மண்ணை இறுக்கப் பிணைத்து வைக்கின்றன, அதே போல கடலோரங்களிலும் இருக்கும் சதுப்புநிலக்காடுகளும் சிறப்புத்தன்மை வாய்ந்தவை. இந்த அலையாத்திக் காடுகள் கடலின் உவர்நீர் மற்றும் சதுப்புநிலத்திலே வளர்கின்றன, கடற்பகுதி சூழலமைப்பின் முக்கியமான அங்கமாக இருக்கின்றன. சுனாமியோ, சூறாவளியோ, எந்த ஒரு இயற்கைப் பேரிடர் வந்தாலும், இந்த அலையாத்திக் காடுகள் மிகவும் உதவிகரமாக இருக்கின்றன.
நண்பர்களே, குஜராத்தின் வனத்துறை சதுப்புநிலக்காடுகளின் இந்த மகத்துவத்தைப் புரிந்துகொண்டு மிகச் சிறப்பான இயக்கம் ஒன்றை முன்னெடுத்திருக்கிறது. ஐந்து ஆண்டுகள் முன்பாக வனத்துறையின் குழுக்கள், அஹமதாபாதிற்கு அருகிலே தோலேராவிலே, அலையாத்திக் காடுகளை ஏற்படுத்தும் பணியைத் தொடங்கினார்கள். இன்று, தோலேராவின் கரையோரத்தில் 3,500 ஹெக்டேர் பரப்பளவில் சதுப்பு நிலக்காடுகள் பரவியிருக்கின்றன. இந்த அலையாத்திக் காடுகளின் தாக்கம் இன்று மொத்தப் பகுதியிலும் காணக் கிடைக்கிறது. இங்கிருக்கும் சூழலமைப்பில் டால்ஃபின் மீன்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. கேகடே மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்கள், முன்பைவிட அதிகம் காணப்படுகின்றன. இது மட்டுமல்ல, இப்போது இங்கே வலசைவரும் வெளிநாட்டுப் பறவைகளும் கணிசமான எண்ணிக்கையில் வரத் தொடங்கியிருக்கின்றன. இதன் காரணமாக அங்கே சுற்றுச்சூழலின் மீது நல்ல தாக்கம் ஏற்பட்டிருப்பதோடு, தோலேராவில் இருக்கும் மீன் வளர்ப்பாளர்களுக்கும் ஆதாயங்கள் ஏற்பட்டு வருகிறது.
நண்பர்களே, தோலேராவைத் தவிர, குஜராத்தின் கட்ச் பகுதியிலும் கூட இப்போதெல்லாம் சதுப்புநிலக்காடுகள் அதிக அளவில் அமைக்கப்படுகிறது, மேலும் கோரி க்ரீக்கிலே சதுப்புநிலக்காடுகள் கற்றல் மையம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.
நண்பர்களே, செடிகள்-தாவரங்கள், மரங்களின் சிறப்புத்தன்மையே இதுதான். எந்த இடமாக இருந்தாலும், அவை அனைத்து உயிரினங்களின் சிறப்பான நன்மைக்கு உதவிகரமாக விளங்குகின்றன. ஆகையால் தான் நமது புனித நூல்களில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்றால் –
அதாவது, யாருக்கும் ஏமாற்றம் அளிக்காத மரங்கள்-தாவரங்களுக்கும் தலைவணங்குகிறோம் என்பதே இதன் பொருள். நாம் எந்தப் பகுதியில் வசிக்கிறோமோ, அங்கே கண்டிப்பாக மரங்களை நாம் நட வேண்டும். தாயின் பெயரால் ஓர் மரம் இயக்கத்தை நாம் இன்னும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
என் கனிவான நாட்டுமக்களே, மனதின் குரலில் நாம் உரையாடும் விஷயங்களில் எனக்கு அதிக நிறைவை அளிக்கும் விஷயம் என்ன தெரியுமா? இது குறித்து நான் ஒன்றை மட்டும் கூறுவேன், நாம் எந்த விஷயங்கள் குறித்துப் பேசுகிறோமோ, அவற்றால் சில நல்லவற்றை, சில புதுமையானவற்றை சமுதாயத்திற்குக் செய்யும் உத்வேகம் மக்களுக்குக் கிடைப்பதாக இருக்கவேண்டும், இதனால் நமது கலாச்சாரம், நமது தேசத்தின் பல கோணங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதை மட்டும் நான் கூறிக் கொள்கிறேன்.
நண்பர்களே, உங்களில் பலருக்கு ஒரு விஷயம் நினைவிருக்கலாம், சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், நான் இந்த நிகழ்ச்சியில் இந்திய நாய் இனங்கள் பற்றிப் பேசியிருந்தேன். நாட்டுமக்களோடு இணைந்து நான் நமது பாதுகாப்புப் படைகளிடத்திலும் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன், அதாவது இந்திய நாய் இனங்களைப் பயன்படுத்த வேண்டும், ஏனென்றால் அவை நமது சூழல்-நிலைகளோடு அதிக எளிதான வகையில் இணைந்து விடுகின்றன. நமது பாதுகாப்புப் படைகள் இந்தத் திசையில் மிகவும் பாராட்டுக்குரிய முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை மட்டற்ற மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லையோரக் காவல்படை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் தங்களுடைய அணிகளில் இந்திய இனங்களைச் சேர்ந்த நாய்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கின்றார்கள். நாய்களின் பயிற்சிக்காக, எல்லையோரக் காவல்படையின் தேசிய பயிற்சி மையம் குவாலியரின் டேகன்பூரில் இருக்கிறது. இங்கே உத்தர பிரதேசத்தின் ராம்பூர் ஹவுண்ட், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த முதோல் ஹவுண்ட் ஆகியவை மீது சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பயிற்சியாளர்கள், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் படைத்தலின் துணையோடு நாய்களுக்குச் சிறப்பான பயிற்சி கொடுத்து வருகிறார்கள். இந்திய நாய் ரகங்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்கான கையேடுகளும் எழுதப்பட்டிருக்கின்றன, இதன் வாயிலாக அவற்றின் தனித்தன்மை வாய்ந்த பலங்கள் முன்வைக்கப்படுகின்றன. பெங்களூரூவிலே, மத்திய ரிசர்வ் காவல்படையின் நாய்கள் இனப்பெருக்கம் மற்றும் பயிற்சிப் பள்ளியில், மாங்க்ரெல்ஸ், முதோல் ஹவுண்ட், கோம்பை மற்றும் பாண்டிகோனா போன்ற இந்தியரக நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நண்பர்களே, கடந்த ஆண்டு லக்னவில், அகில இந்திய காவலர்கள் பணிச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நேரத்தில், ரியா என்ற பெயருடைய ஒரு நாய், அனைவரின் கவனத்தையும் தன்பால் ஈர்த்தது. இது ஒரு முதோல் ஹவுண்ட், இதற்கு எல்லையோரக் காவல் படை பயிற்சி கொடுத்திருந்தது. பல அயல்நாட்டு நாய் இனங்களை இங்கே பின்னுக்குத் தள்ளி முதல் பரிசினை வென்றது ரியா.
நண்பர்களே, இப்போது எல்லையோரக் காவல்படையானது தனது நாய்களுக்கு அந்நியப் பெயர்களைக் கொடுப்பதற்கு பதிலாக, இந்தியப் பெயர்களைச் சூட்டும் பாரம்பரியத்தைத் தொடங்கியிருக்கிறது. நமது நாட்டு ரக நாய்கள் அற்புதமான சாகஸங்களை வெளிப்படுத்தி இருக்கின்றன. கடந்த ஆண்டு, சத்திஸ்கட்டின் மாவோயிஸம் பாதித்த பகுதிகளில், ரோந்துப் பணிகளின் போது, மத்திய ரிசர்வ் காவல் படையின் ஒரு நாட்டுரக நாயானது, 8 கிலோகிராம் வெடிப்பொருட்களை இனம் கண்டது. எல்லையோரக் காவல்படையும், மத்திய ரிசர்வ் காவல் படையும் இந்தத் திசையில் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை. மேலும் நான் அக்டோபர் 31ஆம் தேதிக்காகவும் காத்திருக்கிறேன். இது இரும்புமனிதர் சர்தார் படேல் அவர்களின் பிறந்த நாளாகும். இந்தச் சந்தர்ப்பத்தில் ஒவ்வோர் ஆண்டும் குஜராத்தின் ஒற்றுமை நகரில் உள்ள ஒற்றுமைச் சிலைக்கு அருகிலே ஒரு சிறப்பான கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்வார்கள். இங்கே ஒற்றுமை நாள் அணிவகுப்பு நடக்கும், அந்த அணிவகுப்பிலே மீண்டும் இந்தியரக நாய் ரகங்களின் வல்லமை வெளிப்படுத்தப்படும். நீங்களும் வாய்ப்புக் கிடைத்தால் இதைக் கண்டிப்பாகப் பாருங்கள்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, சர்தார் படேல் அவர்களின் 150ஆவது பிறந்தநாள், நாடெங்கிலும் ஒரு சிறப்பான சந்தர்ப்பமாகும். சர்தார் படேல், நவீனகால தேசத்தின் அதிக மகத்துவம் வாய்ந்த ஆளுமைகளில் ஒருவர். அவருடைய மாபெரும் ஆளுமைத்தன்மையில் பல குணங்கள் நின்று ஒளிவீசுகின்றன. அவர் பெரும் மேதாவிலாசம் உடைய மாணவர். அவர் பாரதம் மற்றும் பிரிட்டன், இருநாடுகளிலும் கல்வியில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டார். அவர் தன்னுடைய காலத்தின் மிக வெற்றிகரமான வழக்குரைஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அவர் வக்கீல் தொழிலில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தாலும், காந்தியடிகளால் உத்வேகம் அடைந்து, தன்னைத்தானே சுதந்திரப் போராட்ட வேள்வியில் அர்ப்பணம் செய்து கொண்டார். கேடா சத்தியாகிரகம் தொடங்கி போர்சத் சத்தியாகிரகம் வரை பல போராட்டங்களில் அவருடைய பங்களிப்பு இன்றும் கூட நினைவில் கொள்ளப்பட்டு வருகிறது. அஹ்மதாபாத் நகராட்சியின் தலைவர் என்ற வகையிலே அவருடைய பணிக்காலம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் என்ற வகையிலே அவருடைய பங்களிப்பிற்காக நாம் அனைவரும் கடன்பட்டிருக்கிறோம்.
நண்பர்களே, சர்தார் படேல் தான் பாரதத்தின் அதிகாரத்துவ சட்டகத்தின் பலமான அடித்தளத்தை அமைத்தார். தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அவர் ஈடு இணையற்ற முயற்சிகளைச் செய்திருக்கிறார். அக்டோபர் 31 அன்று சர்தார் ஐயாவின் பிறந்த நாள் நாடெங்கிலும் நடக்கவிருக்கிறது, இதிலே நீங்கள் பங்கெடுப்பது மட்டுமல்லாது, மற்றவர்களோடு கூடவும் சேர்ந்து பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன். ஒரு வகையில் இளைஞர்களின் விழிப்புணர்வுக்கான சந்தர்ப்பமாக இந்த ஒற்றுமை ஓட்டம் ஆக வேண்டும், இது ஒற்றுமைக்கு மேலும் வலுசேர்க்கும். இதுவே பாரதத்தை ஒற்றுமை என்ற இழையில் இணைக்கின்ற அந்த மகத்தான ஆளுமைக்கு நாம் செலுத்தக்கூடிய மெய்யான சிரத்தாஞ்சலியாக இருக்கும்.
என் அன்பான நாட்டுமக்களே, தேநீருடனான என்னுடைய ஈடுபாட்டை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள் ஆனால் நாம் ஏன் இன்றைய மனதின் குரலில் காஃபியோடு உரையாடலை நிகழ்த்தக் கூடாது என்று நான் எண்ணமிட்டேன். கடந்த ஆண்டு நாம் மனதின் குரலில் அராகு காப்பி பற்றிப் பேசியது உங்களுக்கு நினைவிருக்கலாம். சில காலம் முன்பாக, ஒடிஷாவின் பலர் கோராபுட் காப்பி பற்றியும் தங்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொண்டிருந்தார்கள். மனதின் குரலில் கோராபுட் காப்பி பற்றியும் நான் பேச வேண்டும் என்று அவர்கள் கேட்டு கொண்டார்கள்.
நண்பர்களே, கோராபுட் காப்பியின் சுவை அலாதியானது, இது மட்டுமல்ல, சுவை ஒருபுறம் இருந்தாலும், காப்பி சாகுபடி மக்களுக்கு ஆதாயங்களை அளித்து வருகிறது. கோராபுட்டில் சிலரோ தங்களின் பேரார்வம் காரணமாக காப்பி சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். தனியார் பெருநிறுவன உலகில், மேல்நிலைகளில் வேலை பார்த்து வந்தாலும், காப்பியின் மேலுள்ள பிரியத்தால் இந்தத் துறைக்கு வந்ததோடு, வெற்றிகரமாகப் பணியாற்றியும் வருகிறார்கள். இதிலே பல பெண்களும் இருக்கிறார்கள், இவர்களின் வாழ்க்கையில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. காப்பியால் அவர்களுக்கு மரியாதை, வளமை இரண்டுமே கிடைக்கின்றன. சொல்லப்படும் இந்தக் கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை :
कोरापुट कॉफी अत्यंत सुस्वादु | एहा ओडिशार गौरव | – இதன் பொருள், கோராபுட் காப்பி மிகவும் சுவையானது! – இதுவே ஒடிஷாவின் பெருமிதம்!!
நண்பர்களே, உலகெங்கிலும் பாரதத்தின் மீதான நாட்டம் மிகவும் அதிகரித்து வருகிறது. கர்நாடகத்தின் சிக்மங்களூருவாகட்டும், கூர்காகட்டும், ஹாஸனாகட்டும், தமிழ்நாட்டின் பழனி, ஷெவ்ராய், நீலகிரி, அண்ணாமலை பகுதிகளாகட்டும், கர்நாடக-தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளின் பிலிகிரி பகுதியாகட்டும், கேரளத்தின் வயநாடு, திருவாங்கூர் மற்றும் மலபார் பகுதிகளாகட்டும், பாரதத்தில் கணிசமான அளவு காப்பியின் பன்முகத்தன்மை இருக்கிறது. நமது வடகிழக்கிலும் கூட காப்பி சாகுபடி அதிகரித்து வருகிறது. இதனால் பாரத நாட்டு காப்பியின் அடையாளம் உலகெங்கிலும் பலமடைந்து வருகிறது. இதனால் தான் காப்பிப் பிரியர்கள் கூறுகிறார்கள் – இந்தியாவின் காப்பிதான் மிகச் சிறப்பான காப்பி. இது இந்தியாவில் காய்ச்சப்பட்டு, உலகத்தால் விரும்பப்படுகிறது.
எனதருமை நாட்டுமக்களே, இப்போது மனதின் குரலில் நாம் உரையாட இருக்கும் ஒரு விஷயம், அனைவரின் இதயங்களுக்கும் மிகவும் நெருக்கமானது. இந்த விஷயம் நமது தேசியப் பாடல் பற்றியது – பாரதத்தின் தேசியப் பாடலான வந்தே மாதரம். இது எப்படிப்பட்ட பாடலென்றால், இதன் முதல் சொல்லே கூட நமது இதயங்களின் உணர்வுகளைக் கொள்ளை கொண்டு விடுகிறது. வந்தேமாதரம் என்ற இந்த ஒரு சொல்லிலே தான் எத்தனை உணர்வுகள், எத்தனை சக்திகள்!! இயல்பான வகையிலே இது நமக்கு பாரத அன்னையின் தாய்மை உணர்வை உணரச் செய்கிறது. இதுதான் பாரத அன்னையின் பிள்ளைகள் என்ற வகையில் நமது பொறுப்புக்களைப் பற்றி நமக்கு அறிவுறுத்துகிறது. கடினங்கள் நிறைந்த வேளையாக இருந்தால், வந்தேமாதரம் என்ற கோஷம், 140 கோடி நாட்டுமக்களுக்குள்ளே ஒற்றுமை சக்தியை நிரப்பி விடுகிறது.
நண்பர்களே, தேசபக்தி, பாரத அன்னையிடம் அன்பு, சொற்களுக்கு அப்பாற்பட்ட உணர்வுகள் என்றால், வந்தேமாதரம் அந்த வெளிப்படுத்த இயலா உணர்வுகளுக்கு வடிவம் தரும் பாடலாகும். பல நூற்றாண்டுக்கால அடிமைத்தனத்தில் சிதைந்து போயிருந்த பாரதத்தில் புதிய உயிர்ப்பை ஏற்படுத்த பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா அவர்கள் இதனை இயற்றினார். வந்தேமாதரம் 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக இருந்தாலும், இதன் உணர்வு பாரதத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான, என்றும் அழியா விழிப்புணர்வோடு இணைந்தது. மாதா பூமி: புத்ரோ அஹம் பிருதிவ்யா: என்று வேதங்கள் முழங்கி, பாரதீய கலாச்சாரத்திற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தன. பங்கிம்சந்திரர், வந்தேமாதரம் பாடலை எழுதி, தாய்த்திருநாட்டிற்கும், அதன் குழந்தைகளுக்கும் இடையேயான உறவினை, உணர்வு உலகில் ஒரு மந்திரத்தின் வடிவிலே இறுகப் பிணைத்தார்.
நண்பர்களே, நான் திடீரென்று வந்தேமாதரம் பற்றி ஏன் பேசுகிறேன் என்று நீங்கள் எண்ணமிடுவீர்கள்!! உள்ளபடியே சில நாட்களுக்குப் பிறகு, நவம்பர் மாதம் 7ஆம் தேதியன்று நாம் வந்தேமாதரத்தின் 150ஆவது ஆண்டு உற்சவத்தில் நுழைய இருக்கிறோம். 150 ஆண்டுகள் முன்பாக வந்தேமாதரம் இயற்றப்பட்டு, 1896ஆம் ஆண்டில் குருதேவ் ரவீந்திரநாத் டகோர் அவர்கள் முதன்முறையாக இதனைப் பாடினார்.
நண்பர்களே, வந்தேமாதரம் பாடலில் கோடிக்கணக்கான நாட்டுமக்கள் எப்போதுமே தேசபக்தியின் எல்லையில்லா உணர்வுத் திவலைகளை உணர்ந்தார்கள். நமது தலைமுறைகள் வந்தேமாதரத்தின் சொற்களிலே பாரதத்தின் உயிர்ப்புடைய, மகத்தான ரூபத்தைக் கண்டிருக்கிறார்கள்.
நாம் இப்படிப்பட்ட பாரத தேசத்தைப் படைக்க வேண்டும். நமது இந்த முயற்சிகளில் நமக்கு என்றைக்குமே கருத்தூக்கமாக வந்தே மாதரம் இருந்துவரும். அந்த வகையிலே நாம் வந்தேமாதரத்தின் 150ஆவது ஆண்டினை நினைவில் கொள்ளத்தக்க ஒன்றாக ஆக்க வேண்டும். வரவிருக்கும் தலைமுறையினருக்காக இந்தக் கலாச்சாரத் தொடரை நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டும். இனிவரும் காலங்களில் வந்தேமாதரத்தோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் இருக்கும், தேசத்தில் பல நிகழ்ச்சிகள் நடக்கும். நாட்டுமக்களான நாமனைவரும் வந்தேமாதரம் என்ற இந்த பெருமைமிகு பாடலின் பொருட்டு, உள்ளெழுச்சியோடு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்களுடைய ஆலோசனைகளை #VandeMatram150 என்பதிலே கண்டிப்பாக அனுப்புங்கள். நான் உங்களுடைய ஆலோசனைகளுக்காக காத்திருப்பேன், நாமனைவரும் இந்தச் சந்தர்ப்பத்தை வரலாற்றுப்பூர்வமானதாக ஆக்கும் பணியில் ஈடுபடுவோம்.
எனதருமை நாட்டுமக்களே, சம்ஸ்கிருதம் என்ற பெயரைச் சொன்னவுடனேயே நமது மனங்களில் வருவது, நமது அறநூல்கள், வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், சாஸ்திரங்கள், பண்டைய ஞானம்-விஞ்ஞானம், ஆன்மீகம் மற்றும் தத்துவஞானம் ஆகியவைதாம். ஆனால் ஒரு காலத்தில் இவை அனைத்தோடு கூடவே சம்ஸ்கிருதம் வழக்கு மொழியாகவும் இருந்து வந்தது. அந்தக் காலத்தில் கல்விக்கான சாதனமாக இருந்ததோடு கூடவே, சம்ஸ்கிருதம் வழக்கு மொழியாகவும் இருந்து வந்துள்ளது. நாடகங்கள்-நடனங்கள் எல்லாம் கூட சம்ஸ்கிருதத்தில் இருந்தன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அடிமைத்தளைக் காலகட்டத்திலும் சரி, சுதந்திரத்திற்குப் பிறகும் கூட, சம்ஸ்கிருதம் தொடர்ந்து புறக்கணிப்புக்கு உள்ளானது. இதன் காரணமாக இளைய தலைமுறையினரிடம், சம்ஸ்கிருதத்திடம் ஈடுபாடு குறைந்து கொண்டே சென்றது. ஆனால் நண்பர்களே, இப்போது காலம் மாறி வருகிறது, சம்ஸ்கிருதத்தின் காலமும் மாறி வருகிறது. கலாச்சாரம் மற்றும் சமூக ஊடக உலகம் சம்ஸ்கிருதத்திற்குப் புதிய உயிர்ப்பினை அளித்திருக்கின்றன. இப்போதெல்லாம் பல இளைஞர்கள், சம்ஸ்கிருதம் தொடர்பாக பல சுவாரசியமான பணிகளைச் செய்து வருகிறார்கள். நீங்கள் சமூக ஊடகத்திற்குச் சென்றால், பல ரீல்களில் பல இளைஞர்கள் சம்ஸ்கிருதம் பற்றியும், சம்ஸ்கிருதத்தில் உரையாடல் மேற்கொண்டும் வருவதை உங்களால் காண முடியும். பலர் தங்களுடைய சமூக ஊடக சேனல் வாயிலாக, சம்ஸ்கிருதத்தைக் கற்பித்தும் வருகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு உள்ளடக்க உருவாக்குபவரான சகோதரர் யஷ் சாலுங்கே அவர்கள்; இவருடைய சிறப்பம்சம் என்னவென்றால் இவர் உள்ளடக்கம் உருவாக்குபவர் என்பதோடு, ஒரு கிரிக்கெட் வீரர் என்பதும் கூட. சஸ்ம்கிருதத்தில் உரையாடிக் கொண்டே கிரிக்கெட் விளையாடும் இவருடைய ரீல் மக்களுக்கு மிகவும் பிடித்துப் போயிருக்கிறது. நீங்களே கேளுங்களேன் –
(ஒலி…)
நண்பர்களே, கமலா, ஜாஹ்னவி ஆகிய இந்த இரு சகோதரிகளின் பணியும் மிகவும் சிறப்பானது. இந்த இரு சகோதரிகளும் ஆன்மீகம், தத்துவஞானம், சங்கீதம் ஆகியவை தொடர்பான உள்ளடக்கத்தை உருவாக்குகிறார்கள். இன்ஸ்டாகிராமில் மேலும் ஒரு இளைஞர்களுக்கான சேனல் இருக்கிறது, இதன் பெயர் சம்ஸ்கிருத சாத்ரோஹம். இந்த சேனலை நடத்தும் இளைய நண்பர் சம்ஸ்கிருதம் தொடர்பான பல தகவல்களை அளிப்பதோடு, சம்ஸ்கிருதத்தில் நகைச்சுவை காணொளிகளையும் உருவாக்குகிறார். இளைஞர்களால் இந்த காணொளிகள் மிகவும் விரும்பப்படுகின்றன. உங்களில் பல நண்பர்கள் சமஷ்டியின் காணொளிகளைப் பார்த்திருக்கலாம். சம்ஸ்கிருதத்தில் தனது பாடல்களை பல்வேறு வகையில் அளித்து வருகிறார் சமஷ்டி. மேலும் ஒரு இளைஞரான பாவேஷ் பீமநாதனி. பாவேஷ் அவர்கள் சம்ஸ்கிருத ஸ்லோகங்கள், ஆன்மீகம், தத்துவம் மற்றும் சித்தாந்தங்கள் குறித்துப் பேசி வருகிறார்.
நண்பர்களே, மொழி என்பது எந்த ஒரு நாகரீகத்தின் விழுமியங்களையும், பாரம்பரியங்களையும் கொண்டு செல்லும் ஒரு சாதனம். இந்தக் கடமையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சம்ஸ்கிருதம் ஆற்றியிருக்கிறது. இப்போது சம்ஸ்கிருதம் தொடர்பாக சில இளைஞர்கள் தங்களுடைய கடமையை ஆற்றி வருவது மிகவும் இனிமையானதாக இருக்கிறது.
எனதருமை நாட்டுமக்களே, இப்போது நான் உங்களை சிலகாலம் பின்னோக்கிக் கொண்டு செல்ல விரும்புகிறேன். நீங்கள் கற்பனை செய்து பாருங்கள், 20ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலகட்டம். அப்போது சுதந்திரம் பற்றிய எந்தவொரு ஒளிக்கீற்றும் கூட தென்படவில்லை. ஆங்கிலேயர்களின் அடக்குமுறையின் அனைத்து எல்லைகளையும் பாரதநாடு முழுவதும் அனுபவித்துக் கொண்டிருந்தது, அந்தக் காலகட்டத்திலே, ஹைதராபாதின் தேசபக்தர்களுக்கு தமனுக்குப் பயணம் என்பது மிகவும் பயங்கரமானதாக இருந்தது. அவர்கள் கொடூரமும், கருணையும் இல்லாத நிஜாமின் கொடுமைகளை சகித்துக் கொள்ள ஆட்படுத்தப்பட்டார்கள். ஏழைகள், ஆதரவற்றவர்கள், பழங்குடிச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைக்கு எல்லையே இல்லை. அவர்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டன, மேலும் சொல்லொணா அளவுக்கு வரிகள் போடப்பட்டன. இந்த அநியாயத்துக்கு எதிராக அவர்கள் குரல் கொடுத்தால், அவர்களுடைய கைகள் வெட்டப்பட்டன.
நண்பர்களே, இப்படிப்பட்ட கடினமான காலகட்டத்தில் சுமார் 20 வயது பெருமானமுடைய ஒரு இளைஞன், இந்த அநீதிக்கு எதிராக எதிர்த்து நின்றான். இன்று ஒரு சிறப்பான காரணத்துக்காக நான் இந்த இளைஞன் குறித்து உங்களோடு உரையாடவிருக்கிறேன். இவருடைய பெயரைக் கூறும் முன்பாக இவருடைய வீரம் பற்றி நான் கூறுகிறேன். நண்பர்களே, அந்த நாட்களில் நிஜாமுக்கு எதிராக ஒரு சொல்லைக் கூறுவது கூட பெருங்குற்றமாகக் கருதப்பட்டது. நிஜாமின் ஒரு அதிகாரியான சித்திக்கி என்பவனுக்கு எதிராக நேருக்கு நேர் சவால் விட்டார் அந்த இளைஞர். விவசாயிகளின் மகசூலைக் கைப்பற்ற சித்திக்கியை அனுப்பினான் நிஜாம். ஆனால் இந்த அராஜகத்துக்கு எதிரான போராட்டத்திலே சித்திக்கியை வதம் செய்தார் இந்த இளைஞர். அது மட்டுமல்லாமல் கைது செய்யப்படாமல் தப்பியும் விட்டார். நிஜாமின் அடக்குமுறை காவல்துறையிடமிருந்து தப்பிய இந்த இளைஞர், அங்கிருந்து பல நூறு கிலோமீட்டர் தொலைவான அஸாமுக்குச் சென்று விட்டார்.
நண்பர்களே, நான் பேசிக் கொண்டிருக்கும் மகத்தான ஆளுமையின் பெயர் கோமரம் பீம். சில நாட்கள் முன்னர் அக்டோபர் 22ஆம் தேதியன்று தான் அவருடைய பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. கோமரம் பீமுடைய ஆயுள் அதிகம் இருக்கவில்லை, வெறும் 40 ஆண்டுக்காலம் மட்டுமே அவர் உயிர் வாழ்ந்தாலும், தனது வாழ்நாளிலே இவர் எண்ணில்லா மக்களுக்கு, குறிப்பாக பழங்குடி சமூகத்தவரின் இதயங்களிலே அழிக்கமுடியாத முத்திரையைப் பதித்தார். இவர் நிஜாமுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த மக்களுக்குப் புதிய சக்தியை அளித்தார். இவர் தன்னுடைய தந்திரோபாயத் திறமைக்குப் பெயர் போனவர். நிஜாமின் ஆட்சிக்கு எதிரான பெரிய சவாலாக இவர் உருவெடுத்தார். 1940இலே, நிஜாமின் ஆட்கள் இவரைப் படுகொலை செய்தார்கள். இவரைப் பற்றி நிறைய தகவல்களைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் என்று நான் இளைஞர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
அதாவது கோமரம் பீம்ஜிக்கு என் பணிவான அஞ்சலிகள். அவர் என்றுமே மக்களின் இதயங்களில் உறைந்திருக்கிறார்.
நண்பர்களே, அடுத்த மாதம் 15ஆம் தேதியன்று நாம் பழங்குடி மக்களின் பெருமித நாளான ஜனஜாதீய கௌரவ் திவஸைக் கொண்டாட இருக்கிறோம். இது பகவான் பிர்ஸா முண்டா அவர்களின் பிறந்த நாள் என்ற சுபமான தினம். நான் பகவான் பிர்ஸா முண்டா அவர்களை மிகுந்த சிரத்தையுணர்வோடு வணங்குகிறேன். தேசத்தின் சுதந்திரத்திற்காக, பழங்குடி சமூகத்தின் உரிமைகளுக்காக, அவர் செய்திருக்கும் பணிகள் ஈடு இணையற்றவை. ஜார்க்கண்டில் பகவான் பிர்ஸா முண்டா அவர்களின் கிராமமான உலிஹாதுவுக்குச் செல்லும் பெரும்பேறு எனக்குக் கிட்டியது. பகவான் பிர்ஸா முண்டா அவர்கள், கோமராம் பீம் அவர்களைப் போல நமது பழங்குடி சமூகங்களில் இன்னும் பல ஆளுமைகள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி நீங்கள் அவசியம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் விண்ணப்பம்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் நீங்கள் அனுப்பியிருக்கும் பல செய்திகள் கிடைத்திருக்கின்றன. பலர் இந்தச் செய்திகளில் தங்கள் பகுதிகளைச் சேர்ந்த பல மதிப்புமிக்க ஆளுமைகளைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். நமது சிறிய நகரங்கள், பகுதிகள், கிராமங்களில் கூட பல நூதனமான கருத்துக்கள் தொடர்பான பணிகள் நடைபெற்று வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சேவை உணர்வோடு சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்துவதில் ஈடுபட்டுவரும் இப்படிப்பட்ட நபர் அல்லது சமூகங்களைப் பற்றி உங்களுக்கும் தெரியும் என்றால், நீங்கள் கண்டிப்பாகத் தெரிவியுங்கள். நீங்கள் அனுப்பும் தகவல்களுக்காக நான் எப்போதும் காத்திருப்பேன். அடுத்த மாதம், நாம் மனதின் குரலின் மேலும் ஒரு பகுதியில் சந்திப்போம். புதிய விஷயங்கள் குறித்து விவாதிப்போம், அதுவரை எனக்கு விடை தாருங்கள். உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகள். வணக்கம்.
தாம்பரம் – திருநெல்வேலி – திருச்செந்தூர் -தாம்பரம் சிறப்பு ரயில் மேலும் நெல்லை திருச்செந்தூர் இடையே முழுவதும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு இயக்கப்படுகிறது . திருச்செந்தூர் செல்ல சிறப்பு ரயில் அறிவித்துள்ளது முருகன் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து மற்றும் பிற பகுதிகளில் இருந்து செல்லக்கூடிய பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
06135/06136 தாம்பரம் –திருநெல்வேலி திருச்செந்தூர் — தாம்பரம் சிறப்பு ரயில் அக்டோபர் 26 ஞாயிற்றுக்கிழமை அன்று தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது .
அக்டோபர் 27 திங்கட்கிழமை அன்று திருச்செந்தூரிலிருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது
தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு மேல்மருவத்தூர் விழுப்புரம் விருதாச்சலம் அரியலூர் ஸ்ரீரங்கம் திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் மதுரை விருதுநகர் சாத்தூர் கோவில்பட்டி திருநெல்வேலி வழியாக செல்கிறது.
திருச்செந்தூரிலிருந்து புறப்படும் ரயில் கூடுதலாக ஆறுமுகநேரி நாசரேத் ஸ்ரீவைகுண்டம் செய்துங்கநல்லூர் ஆகிய நிலையங்களிலும் நின்று செல்லும். காலை நேரத்தில் திருச்செந்தூரில் நடைமேடை சிக்கல் உள்ளதால் இந்த ரயில் திருநெல்வேலியுடன் நிறுத்தப்படுகிறது . திருநெல்வேலியில் இருந்து இணைப்பு ரயில் மூலம் திருச்செந்தூர் செல்லமுடியும் அல்லது பேருந்து மூலமாகவும் செல்ல முடியும்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவிற்கு செல்லக்கூடிய பயணிகள் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ள தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரை: சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிற்கு பரிந்துரைத்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி- மதுரையில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி. அளித்தார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தங்க கவசத்தை தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாவிடம் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் பசும்பொன்னிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொனில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014 ம் ஆண்டு 3.7 கோடி ரூபாய் மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அளித்திருந்தார்.
மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வின் பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த வரை ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவின் போது அவரும், தேவர் நினைவிட அறங்காவலர் காந்தி மீனாவும் வங்கிக்கு நேரில் வந்து கையெழுத்திட்டு கவசத்தை பெற்று , குருபூஜை முடிந்த பின்னர் , அதனை மீண்டும் வங்கியில் ஒப்படைப்பது வழக்கம்.
ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்தும் , பொருளாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்ட காரணத்தால் வங்கியில் உள்ள தங்க கவசத்தை தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள் மற்றும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் இணைந்து வங்கியில் இருந்து எடுக்க அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது.
அதன் பின்னர், அதிமுகவின் பொருளாளராக உள்ள திண்டுக்கல் சீனிவாசன் வங்கியில் இருந்து தங்க கவசத்தை பெற்று தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இந்தாண்டு 2025 – ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜயந்தி விழாவை முன்னிட்டும், 63-வது குருபூஜை முன்னிட்டும், இன்று தேவர் தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தேவர் நினைவிட அறங்காவலர் காந்தி மீனா ஆகியோர் மதுரை அண்ணா நகர் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கையெப்பமிட்டு, வங்கி லாக்கரில் இருந்து எடுத்தனர்.
பின்னர், அந்த தங்க கவசம் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது , அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். அதனை அடுத்து, தங்க கவசத்தை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
எடுத்துச் செல்லப்படும் தங்க கவசம் , தேவர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்து அணிவிக்கப்படும். தேவர் ஜெயந்தி விழா 30 ஆம் தேதி முடிந்த பின்னர் வருகின்ற 1- ஆம் தேதி மீண்டும் தங்க கவசம் மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் , தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனால் ஆகியோர் வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.
தொடர்ந்து , முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;-
சுதந்திரப் போராட்ட வீரர் எம்.எல்.ஏ .எம்பி, ஆக ஒரே நேரத்தில் வெற்றி பெற்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118 வது ஜெயந்தி விழா 63வது குருபூஜை விழாவை முன்னிட்டு. அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தேவர் நினைவிடத்திற்கு வழங்கிய 13.5 அரை கிலோ தங்க கவசத்தை முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் புறப்பட்டு பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் வழங்கப்பட்டது.
சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன்பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தியாகத்தை போற்றிட பாரத ரத்னா விருதிற்காக மத்திய அரசிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பரிந்துரைத்துள்ளார் என , தெரிவித்துள்ளார்.