December 7, 2025, 4:04 AM
24.5 C
Chennai
Home Blog Page 14

கந்த சஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு!

tiruuchendur temple secrity meet - 2025

மதுரை: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் (பொறுப்பு) . சந்தோஷ் ஹடிமணி மற்றும் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், கந்த சஷ்டி திருவிழா கடந்த 22.10.2025 அன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கி 27.10.2025 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் 28.10.2025 அன்று திருக்கல்யாண நிகழ்வுடன் முடிவடைகிறது.

இந்த திருவிழாவை முன்னிட்டு, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் (பொறுப்பு) சந்தோஷ் ஹடிமணி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஆல்பர்ட் ஜான் ஆகியோர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகம், சூரசம்காரம் நடைபெறும் கடற்கரை பகுதி, கோவில் சுற்றுவட்டார பகுதி மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் உள்ள சாலைகள் மற்றும் வாகனம் நிறுத்தும் இடங்கள் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு போக்குவரத்து மாற்றங்கள் உள்ள சாலைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில்
அதுகுறித்த அறிவிப்பு பலகைகள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பயன்படும் வகையில் அனைத்து இடங்களிலும் வைக்க வேண்டும் எனவும், காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

துணை ஜனாதிபதியாக தமிழகத்துக்கு முதல்முறையாக வருகிறார் சிபிஆர்.,!

cpradhakrishnan wth pm modi - 2025

பதவி ஏற்ற பின் முதல்முறையாக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நான்கு நாள் பயணமாக தமிழகம் வருகை தருகிறார்.

27ம் தேதி முதல் சென்னை திருப்பூர் கோவை நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் 30ம் தேதி மதுரை வந்து அங்கிருந்து பசும்பொன் சென்று, முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

துணை ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் 4 நாள் பயணமாக வருகிற 27ம் தேதி தமிழகம் வருகிறார்.திருப்பூரைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், கடந்த செப்டம்பர் 9ம் தேதி நடைபெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பின்னர் உடனடியாக பதவி பிரமானமும் செய்து வைக்கப்பட்டார். அவர் பதவி ஏற்ற முதல் முறையாக அவர் 4 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.

வருகிற 27ம் தேதி சென்னைக்கு வரும் அவர், தனது வீட்டில் தங்குகிறார். பின்னர், சென்னையில் அவருக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார். பாஜவினரும் அவருக்கு வரவேற்பு அளிக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து, 28ம் தேதி கோவை செல்லும் அவர், அங்கும் அவருக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவில் கலந்து கொள்கிறார். மேலும் பேரூர் மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 29ம் தேதி சொந்த ஊரான திருப்பூர் செல்கிறார். அங்கும் அவருக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.

மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். பின்னர் 30ம் தேதி மதுரை வந்து அங்கிருந்து பசும்பொன் சென்று, முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மதுரையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி முன்கூட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது

இரிடியம் முதலீட்டில் இரட்டை லாப ஆசை காட்டி கோடிக்கணக்கில் மோசடி; 3 பேர் கைது!

Dhinasari Home page

விருதுநகரில் இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் என்று ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட அதிமுகவை சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் கைது செய்து விசாரணை – இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை சிபிசிஐடி போலீஸார் தேடி வருகின்றனர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் அதிமுக நிர்வாகியும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளரான பட்டுராஜன்(52,) அதிமுக உறுப்பினர் கந்தநிலா (55) மற்றும் ராணி நாச்சியார் ( 53) மற்றும் சிலர் தனியார் அறக்கட்டளை (டிரஸ்ட்) ஆரம்பித்து இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் என்று ஆசை வார்த்தை கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலரிடம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக பணத்தை இழந்த வெம்பக்கோட்டையை சேர்ந்த பழனியப்பன் மாவட்ட சிபிசிஐடி போலீஸில் புகார் அளித்தார்.

அப்புகாரின் பேரில் விருதுநகர் சிபிசிஐடி போலீஸார் அதிமுக நிர்வாகிகளான பட்டுராஜன், கந்தநிலா, ராணி நாச்சியார் ஆகிய மூவர் மீதும் விருதுநகர் மாவட்ட சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய சிலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இருடியம் மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள பட்டுராஜன் சேத்தூர் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவராகவும், சேத்தூர் பேரூராட்சி 8 வது வார்டு கழகச் செயலாளர், செட்டியார்பட்டி பேரூராட்சி பூத் கமிட்டி பொறுப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவில் சொத்து கோவிலுக்கே என்று மீண்டும் உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வரவேற்கத் தக்கது

kadeswara subramaniam hindu munnani - 2025

தொடர்ந்து நீதிமன்றத்தில் குட்டுவாங்கும் திராவிட மாடல் திமுக அரசு…
கோவில் சொத்து கோவிலுக்கே என்று மீண்டும் உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது – இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிக்கை அறிக்கை.
 
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான கந்தகோட்டம் கோவிலின் நிதியிலிருந்து வணிக வளாகம் கட்டுவதற்கு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தமிழக முழுவதும் எந்த கோவில் நிதியிலிருந்தும் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது என்று உடனடியாக சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்றும், அவ்வாறு வெளியிடாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை இந்து முன்னணி வரவேற்கிறது.
 
அதே சமயத்தில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் இதுபோன்று தீர்ப்பளிப்பது இது முதல் முறை அல்ல, திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதலாக கோயிலை கபளிகரம் செய்ய எடுக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் தடை விதித்து நாள்தோறும் இது போன்ற தீர்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக அசட்டையாக மீண்டும் மீண்டும் கோயில் நிதியை கபளிகரம் செய்யும் முயற்சியை இந்து சமய அறநிலையத்துறையும் தமிழக அரசும் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பது வாடிக்கையாக உள்ளது இவ்வாறான செயல் கடும் கண்டனத்துகுரியது.
 
திருக்கோவில்களுக்குச் சொந்தமான சொத்துகளையும், பக்தர்கள் அன்றாடம் செலுத்தும் காணிக்கைகளையும் திருக்கோவில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல், வணிக வளாகம், பள்ளி கல்லூரிகள் அமைப்பது என்ற போர்வையில் கோயில் நிதியை அபகரிக்கும் முறையற்ற செயலை தமிழக அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
 
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிதியிலிருந்து வணிக வளாகங்கள் கட்டக் கூடாது என்ற சுற்றறிக்கையை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று இந்து முன்னணி தமிழக அரசினை வலியுறுத்துகிறது. தவறும் பட்சத்தில் பக்தர்களை திரட்டி தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் முறையற்ற செயலை தடுக்க இந்து முன்னணி போராடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இருமுடி கட்டி சபரிமலை கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழிபாடு!

president draupati murmu in sabarimala - 2025

இருமுடி கட்டி சபரிமலை வந்த, தனி தபால் பின் கோடு உள்ள இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதல்முறையாக தனக்கென தனி அஞ்சல் பின் கோடு கொண்ட சபரிமலை ஐயப்பனை கண்குளிர தரிசனம் செய்தார்.

அவர் பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக ஜனாதிபதிக்கு கோவில் தந்திரி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பை நதியில் புனித நீராட வசதியாக திரிவேணி சங்கமம் பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. பம்பையில் வைத்து இருமுடி கட்டிய ஜனாதிபதி, சபரிமலை யாத்திரையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய் கிழமை கேரளா வந்தார். திருவனந்தபுரத்தில் உள்ள விமானப்படை தொழில்நுட்பப் பகுதிக்கு வந்த குடியரசுத் தலைவரை, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்வர் பினராயி விஜயன், மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன், மேயர் ஆர்யராஜேந்திரன், அந்தோணி ராஜு எம்.எல்.ஏ., தலைமைச் செயலாளர் டாக்டர் ஏ. ஜெயதிலக் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் குடியரசுத் தலைவர் ராஜ்பவனுக்குச் சென்று தங்கினார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று கேரளா வந்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லுதல், ராஜ்பவனில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றல், வர்க்கலா சிவகிரி மடத்தில் நடக்கும் ஸ்ரீ நாராயணகுரு மகா சமாதி நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதமாக அவரது பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றார். இதற்காக அவர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவரது ஹெலிகாப்டர் முதலில் நிலக்கல்லில் தரையிறங்குவதாக இருந்தது.ஆனால் மழை உள்ளிட்ட பாதகமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் இறங்கும் இடம் பத்தினம்திட்டா மல்லசேரி அருகே உள்ள பிரமடம் மைதானத்திற்கு மாற்றப்பட்டது.

இதற்காக அந்த மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டது.
அந்த ஹெலிகாப்டர் தளத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் இன்று காலை தரையிறக்கப்பட்டது. அப்போது ஜனாதிபதி வந்த ஹெலிகாப்டரின் சக்கரம் கான்கிரீட் தளத்தில் பதிந்து லேசாக சரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஹெலிகாப்டர் சக்கரம் சிக்கி லேசாக சரிந்தபடி இருந்ததால் ஹெலிகாப்டரில் இருந்து ஜனாதிபதி உடனடியாக இறங்கவில்லை. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஜனாதிபதியின் ஹெலிகாப்டரை தள்ளி சமமான பகுதிக்கு கொண்டு சென்றனர்.
அதன்பிறகு ஹெலிகாப்டரில் இருந்து ஜனாதிபதி இறங்கிவந்தார்.

அவரை தேவசம்போர்டு மந்திரி வாசவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பிறகு அங்கிருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கார் மூலமாக சபரிமலை கோவிலுக்கு புறப்பட்டார்.

சபரிமலைக்கு செல்லும் முன் ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பை நதியில் புனித நீராட வசதியாக திரிவேணி சங்கமம் பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்துக்கு சென்று பம்பை நதியில் கால்களை நனைத்துவிட்டு ஜனாதிபதி திரும்பினார். பின்பு பம்பையில் வைத்து இருமுடி கட்டிய ஜனாதிபதி, சபரிமலை யாத்திரையை தொடங்கினார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு சுவாமி ஐயப்பன் சாலை மற்றும் பாரம்பரிய மலையேற்றப் பாதை வழியாக சிறப்பு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். பகல் 11.55 மணி முதல் 12.25 மணி வரை ஜனாதிபதி சாமி தரிசனம் மற்றும் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக ஜனாதிபதிக்கு கோவில் தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரு மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

18 படிகளில் பக்தியுடன் ஏறி சென்ற ஜனாதிபதி சபரிமலையில் ஐயப்பனுக்கு இருமுடி காணிக்கை செலுத்தி சாமி தரிசனம் செய்துவிட்டு நெய்யபிஷேகம் செய்து வழிபட்டு மளிகபுறம் கோயிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேவசம் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்பு பிற்பகலில் சபரிமலையில் இருந்து பம்பைக்கு திரும்பினார் .ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஜனாதிபதி வந்ததால் மாதாந்திர பூஜையின் கடைசி நாளான இன்று பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சோழவந்தான் பிரளயநாத சிவன் கோயிலில் சனி பிரதோஷம்!

chozhavanthan pralayanada sivan temple sani pradosham - 2025

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளய நாதசிவாலயத்தில் ஐப்பசி மாத சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை வடகரையில் விசாக நட்சத்திரத்திற்குரிய திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சிவாலயத்தில் ஐப்பசி மாத சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது

விழாவையொட்டி சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மர் தொடர்ந்து நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணை நெய் திரவியம் மஞ்சள் பொடி மா பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் திருக்கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாளித்தனர் அப்போது பக்தர்கள் “ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா”என மனமுருக வேண்டி பிரார்த்தனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை எம் .வி. எம் குழும சேர்மன் மணி முத்தையா, கலைவாணி பள்ளி தாளாளர் எம் .மருது பாண்டியன் ,நிர்வாகி எம்.வள்ளிமயில் மற்றும் திருக்கோவில் நிர்வாகத்தினர் பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

இதில் சோழவந்தான் தென்கரை முள்ளிப்பள்ளம் மன்னாடிமங்கலம் குருவித்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு
சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல திருவேடகம் ஏலவார் குழலி சமேத ஏடகநாத சுவாமி திருக்கோவிலிலும் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாதர் கோவில் கீழ மாத்தூர் மணிகண்டேஸ்வரர் திருக்கோவில் மற்றும் சோழவந்தான் பகுதி சிவாலயங்களிலும் சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது.

மதுரையில்… காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டி!

kanthara rishab shetty - 2025

மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் காந்தாரா கதாநாயகன் ரிஷப் ஷெட்டி, கதாநாயகி சப்தமி கவுடா. ரசிகர்கள் உத்ஸாகம்.

அண்மையில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் காந்தாரா சாப்டர் 1. சுமார் ரூ.700 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது இந்தப் படம்.

காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் கதாநாயகன் ரிஷப் ஷெட்டி இந்நிலையில், ராமேஸ்வரம் செல்வதற்காக தனி விமானம் மூலம் மதுரை வந்திருந்தார். பின்னர் மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்குச் செல்கிறார் .

மதுரை விமான நிலையம் வந்த ரிஷப் ஷெட்டியுடன் அங்கிருந்த இளைஞர்கள் சிலர் செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவருடன் காந்தாரா திரைப்படத்தின் கதாநாயகி சப்தமி கவுடாவும் செல்கிறார்.

தூய்மைப் பணியாளர்க்கு தாமோதர்தாஸ் அறக்கட்டளை புத்தாடைகள் வழங்கல்!

sengottai damodardass trust free distribution - 2025

செங்கோட்டையில் தாமோதர் தாஸ் சமூக நல அறக்கட்டளை சார்பில் துாய்மை பணியாளா்களுக்கு எம்எல்ஏ.கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா புத்தாடைகள் வழங்கினார்.

செங்கோட்டை வண்டிமலச்சியம்மன் கோவில் அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து தாமோதர தாஸ் சமூகநல அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளை நிறுவனத்தலைவரும் 14வது வார்டு நகர்மன்ற உறுப்பினருமான பொன்னுலிங்கம்(எ)சுதன் ஏற்பாட்டில் செங்கோட்டை நகராட்சி துாய்மை பணியாளா்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை உறுப்பினா் ஜமீன்முத்தக்குமார் தலைமைதாங்கினார். பொருளாளா் லஷ்மணன் முன்னிலைவகித்தார். அறக்கட்டளை உறுப்பினா் விஷ்ணுகுமார் அனைவரையும் வரவேற்றார். செயலாளா் எல்.எம்.முரளி வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி(எ) குட்டியப்பா கலந்து கொண்டு துாய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் பொன்னாடை அணிவித்து புத்தாடைகள் இனிப்புகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில் அதிமுக நகரச்செயலாளா் கணேசன், பாஜக நகரத்தலைவா் முத்துமாரியப்பன், தென்காசி பாஜக நகரத்தலைவா் சங்கரசுப்பிரமணியன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் கருப்பசாமி உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் ராஜ்குமார் தென்காசி நகரச் செயலாளர் நாராயணன் தென்காசி நகர பொருளாளர் விஸ்வநாதன் மேலகரம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் மகேஸ்வரன் செங்கோட்டை ஒன்றியத்தலைவா் பால்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஸ்ரீனிவாசன், ஓபிசி அணி மாவட்டத்தலைவா் மாரியப்பன், பாஜக நகர்மன்ற உறுப்பினா்கள் செண்பகராஜன், வேம்புராஜ், ராம்குமார் விகே புதூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பரசுராமன் செங்கோட்டை நகர பாஜக துணைத்தலைவா் கேகே.சுந்தரம்
அறக்கட்டளை உறுப்பினா்கள் முத்துகிருஷ்ணன், வீராயாதவ், கண்ணபிரான், சிவா முன்னாள் நகர இளைஞரணி நிர்வாகி ஸ்ரீராம்கார்த்தி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் சமூக ஆர்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஸ்டாலின் எழுப்பிய அரசியல் கேள்விகளுக்கும் அண்ணாமலை அளித்த அவசிய பதில்கள்!

1719347 mk stalin - 2025

நீதிமன்றத்திலோ, மக்கள் மன்றத்திலோ திமுக அசிங்கப்படும்போது, அறுபதாண்டு கால பழைய மடைமாற்றக் கதைகளைக் கொண்டு வராமல், புதியதாகச் சிந்தித்து வரக் கேட்டுக் கொள்கிறோம்… என்று குறிப்பிட்டு, திமுக., அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார் தமிழக பாஜக., முன்னாள் தலைவர் கு. அண்ணாமலை.

ஸ்டாலினின் கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள் :

நீதிமன்றத்திலோ, மக்கள் மன்றத்திலோ திமுக அசிங்கப்படும்போது, அறுபதாண்டு கால பழைய மடைமாற்றக் கதைகளைக் கொண்டு வராமல், புதியதாகச் சிந்தித்து வரக் கேட்டுக் கொள்கிறோம்.

எப்போதெல்லாம், மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும், திமுக அசிங்கப்படுகிறதோ, அப்போதெல்லாம், ஒரு திரைப்படத்தில் வரும் வடிவேலு காமெடியைப் போல, ஹிந்தி எதிர்ப்பு அல்லது, மத்திய அரசு வஞ்சிக்கிறது என்ற பெட்டியைத் திறப்பது வழக்கம். அறுபது ஆண்டுகளாக, அவரது தந்தை காலத்தில் தொடங்கி, அவரது பேரன் காலத்திலும், அதே நாடகத்தை அரங்கேற்ற முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்குக் கூச்சமாக இல்லையா?

குழப்பத்தில் இருக்கும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, சில விளக்கங்கள்.

ஊழலைப் பற்றிப் பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது?  அதிலும், முன்னாள் சாராய அமைச்சரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு Washing Machine பற்றி முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் பேசுவது உச்சகட்ட நகைச்சுவை.

அனைத்துச் சட்டங்களும், திட்டங்களும், அந்தந்த மாநிலங்களில் மாநில மொழிகளிலேயே மொழிபெயர்த்து அழைக்கப்படுகின்றன. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், அந்தந்த அங்குள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள், தலைவர்களைப் புறக்கணித்து விட்டு, உங்கள் தந்தையின் பெயரையும், சிலையையும் வைப்பதை விடவா ஆணவம் வந்துவிடப் போகிறது?

தாய்மொழி தமிழை, பிழையின்றிப் பேச, எழுதத் தெரியாதவர்களை அமைச்சர்களாக வைத்துக் கொண்டு, ஐம்பது ஆண்டு காலமாக, யுனெஸ்கோ விருது உள்ளிட்ட போலி வரலாறுகளை உருவாக்கி, நமது மாணவர்களை மட்டுப்படுத்தியதை விட தரம் தாழ முடியாது என்பது முதலமைச்சருக்குத் தெரியாதா?

நீங்கள் மத்திய அரசில் அங்கம் வகித்தபோது உங்களுக்கு  வேண்டப்பட்டவர்களை ஆளுநர்களாகக், கேட்டுப் பெற்று, ஆடிய ஆட்டத்திற்குத்தான் பத்து ஆண்டுகள் ஆட்சியைப் பறிகொடுத்து, அதே ஆளுநர் மாளிகையில் சட்டையைக் கிழித்துக் கொண்டு நின்ற வரலாற்றை தமிழக மக்கள் அறிவார்கள். உங்களுக்கு வேண்டப்பட்டவர்களை நியமிக்க, அது டாஸ்மாக்கைக் கையாளும் அமைச்சரவை இல்லை.

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஆர்.கே. நகர் தொகுதியில் போலி வாக்காளர்களை நீக்கக் கோரி வழக்கு தொடர்ந்ததை முதலமைச்சர் திரு ஸ்டாலின் மறந்துவிட்டாரா? போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தால். முதலமைச்சர் ஏன் பயப்படுகிறார்?

இரும்பின் தொன்மை குறித்த ஆய்வு, கீழடி ஆய்வறிக்கை இவை எல்லாம். உலக அரங்கில் செல்லும்போது, நமது இந்திய நாட்டின் வரலாறாகவே பார்க்கப்படும். உலகின் பல நாடுகளும் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கும்போது. நாமும் அதற்கேற்ப கூடுதல் ஆய்வுகளும், தகவல்களும் வழங்க வேண்டும். அவற்றைக் கேட்டால். திமுக அரசு தர மறுப்பது ஏன்?

நீதிமன்றத்தில், ஒன்றல்ல இரண்டல்ல. நான்கு வழக்குகளில் ஒரே நாளில் குட்டு வாங்கிய திமுக அரசு, அதை மடைமாற்ற வேறு வழியின்றி தமிழக நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களை மீண்டும் அனுப்பியிருக்கிறது. இதே கேள்விகளை, திமுக அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள். மாற்றி மாற்றி வெவ்வேறு நேரத்தில், வெவ்வேறு தளங்களில் கேட்பதும், ஒவ்வொரு முறையும் நாம் அவர்களுக்குப் பொறுமையாக அதே பதிலை மீண்டும் மீண்டும் தெரிவிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

எழுப்பிய கேள்விகளும் பதில்களும்…

கேள்வி: மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் GST  சீர்திருத்தம் COOPERATIVE FEDERALISM என்பது வெற்று முழக்கமா?

பதில்: GST திருத்தத்தால் மக்கள் அன்றாடம்  உபயோகிக்கும் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. இதில் திமுக அரசுக்கு என்ன கோபம் என்று புரியவில்லை.

கேள்வி: NEP  இந்தியை திணித்து தமிழ்நாட்டு குழந்தைகள் கல்வியை சிதைப்பது மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லையா?

பதில்:  புதிய தேசிய கல்விக்கொள்கையில்  இந்தி திணிக்கப்படவில்லை என்று  தமிழகத்தின் சாமானிய மக்கள் அனைவருக்கும் புரிந்துவிட்டது. இந்தி திணிப்பு என்ற புளித்துப்போன பொய்யை இன்னும் எத்தனை நாட்களுக்குச் சொல்வீர்கள்?

மாற்றாந்தாய் மனப்பான்மை  என்றால் எது தெரியுமா? திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் மும்மொழி கற்கும் வாய்ப்பை வழங்கி, அதை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுப்பதே மாற்றாந்தாய் மனப்பான்மை.

கேள்வி: உ.பி, குஜராத், மகாராஷ்டிராவுக்கு அளிக்கப்படும் சாலை திட்டங்களை தமிழ்நாட்டிற்கு தராதது ஏன்?

பதில் : கடந்த  4 ஆண்டுகளில், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை செயல்படுத்த, 46,617 கோடி ரூபாய் வழங்கியுள்ளது நமது மத்திய அரசு. இங்கே திமுக அரசு இந்த சாலை திட்டங்களை விரைவுபடுத்த  நடவடிக்கையும் எடுக்காமல், மூலப்பொருட்கள் கிடைப்பதில் கூட  தட்டுப்பாடு ஏற்படும் சூழலை உருவாக்கி, அற்ப அரசியல் செய்து வருவதை மக்கள் நன்கு அறிவார்கள்.

கேள்வி: புதிய  ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தென்னக ரயில்வேவுக்கு மட்டும் ஏன் பாரபட்சம்?

பதில்: கடந்த 4 ஆண்டுகளில், தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை செயல்படுத்த, 33,467 கோடி ரூபாய் வழங்கியுள்ளது நமது மத்திய அரசு. இந்த நிதியாண்டு தொடங்குகையில், தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை செயல்படுத்த தேவையான மொத்த நிலம் 4288 ஹெக்டேர். அதில் தமிழக அரசு கையகப்படுத்திய நிலத்தின் அளவு 991 ஹெக்டேர். அதாவது, ரயில்வே திட்டங்களை செயல்படுத்த தேவையான நிலத்தில் 22  சதவீத நிலங்களை மட்டுமே திமுக அரசு கையகப்படுத்தி வழங்கியுள்ளது. உண்மை இப்படி இருக்கையில் இந்தக் கேள்வியை எழுப்ப உங்களுக்கு கூச்சமாக இல்லையா?

கேள்வி: மதுரை, கோவை  மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி தர ஏன் இவ்வளவு தாமதம்?

பதில்:  மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான DPR, 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசிடம் வழங்கப்பட்டது. ஆனால், DPR உடன் வழங்கவேண்டிய Mobility Plan மற்றும் Alternative Analysis Report ஆகிய இரண்டை இணைக்காமல் அரைகுறை DPRஐ தமிழக அரசு கொடுத்துள்ளது.

2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், விடுபட்டஇந்த இரண்டு  ரிப்போர்ட்களை மத்திய அரசிடம் கொடுத்தது திமுக அரசு. நடப்பாண்டு ஆரம்பத்தில், இந்த DPRக்கு ஒப்புதல் பெற 9 மாதங்கள் ஆகும் என்று CMRL நிர்வாக இயக்குனர் தெளிவுபடுத்தினார். அரைகுறை DPR கொடுத்தது யார் தவறு?

கேள்வி:  தமிழ்நாடு அரசின் நிதியில் கட்டப்படும் வீடுகளில் பிரதமர் பெயர் எதற்கு?

பதில்: தமிழக மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு திரு முக ஸ்டாலினின் பெயர் எதற்கு?  திமுக காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி செய்த காலத்தில், பிரதமரின் திட்டம் என்று பொதுவாக இல்லாமல், இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோரின் பெயரில் திட்டங்கள் தொடங்கப்பட்ட போது என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?

கேள்வி: 100  நாள் வேலைவாய்ப்பு  திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதி ரூ.975 கோடி நிதி எங்கே?

பதில்:  100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கடந்த ஆண்டுகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதி 39,339 கோடி ரூபாய். கிராமப்புற மக்கள்தொகை குறைவாக உள்ள மாநிலங்களில் அதிக நிதி பெற்ற மாநிலம் தமிழகம். ஏன்? 

ஒவ்வொரு ஊராட்சியிலும் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நிதி இடைத்தரகர்கள் போல் உள்ள திமுக நிர்வாகிகள் பொய்யான விவரங்கள் வழங்கி பல லட்ச ரூபாய் ஊழல் செய்து வருகிறார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்  போல ஈரோடு மாவட்டத்தில் ஒரு ஊராட்சியில் நடந்த ஊழலை மக்கள் மன்றத்தில் வைத்தோம். என்ன நடவடிக்கை எடுத்தது ஊழல் திமுக அரசு?

கேள்வி: ஓய்வூதிய திட்டத்திற்கு வெறும் ரூ.200 தருகிறீர்கள். ஆனால்  தமிழ்நாடு அரசு ரூ.1,200 வழங்குகிறது.

பதில்: மத்திய அரசின் கிசான் கடன் அட்டை  திட்டத்தில் கருணாநிதியின் புகைப்படம் போடுவது ஏன்? 

கேள்வி: ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய ரூ.3,709 கோடி நிதி ஏன் இன்னும் விடுவிக்கப்படவில்லை?

பதில்: ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஜல் ஜீவன் திட்டத்திற்கு ஒதுக்கும் நிதியை செலவிடாமல் வைப்பு வைத்திருந்த வரலாறு தான் திமுக அரசுடையது. பயன்பாட்டு சான்றிதழ் வழங்காமல் நிதி பெற இயலாது என்பது கூடவா நிதி அமைச்சருக்கு தெரியவில்லை?

கேள்வி: நாட்டின் மக்கள் தொகையில் தமிழ்நாடு 6%, ஆனால், 4% மட்டும் நிதிப் பகிர்வு அளிப்பது ஏன்?

1969ஆம்  ஆண்டு முதல் இந்தியாவில் உள்ள நிதிப்பகிர்வு நடைமுறை இது. கடந்த 55 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதிப்பகிர்வில் பல மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. 2015ஆம் ஆண்டு, அப்போது 32 சதவீதமாக இருந்த நிதிப்பகிர்வை, 42 சதவீதத்திற்கு உயர்த்தியது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடிஅவர்கள். 

தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதி பகிர்வு மற்றும் மானியம் (Devolution + Grants) 2004-05 to 2013-14: 1,52,902 கோடி ரூபாய் 2014-15 to 2024-25: 6,21,938 கோடி ரூபாய். ஓரவஞ்சனை செய்தது யார்?

அரைகுறை திமுக அரசுக்கு ஆறு கேள்விகள்

1. 2023-24ஆம் ஆண்டு CAG அறிக்கையின்படி, 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 14,808 கோடி ரூபாய் நிதி செலவிடப்படாமல் வீணாக்கியது ஏன்?

2. 2023-24ஆம் ஆண்டு மக்களிடம் வசூலிக்கப்பட்ட மின்சார வரி 1,985 கோடி ரூபாய். இதில், 507 கோடி ரூபாயை TANGEDCO நிறுவனம் ஒருங்கிணைந்த நிதிக்கு செலுத்தாமல் மடைமாற்றியது ஏன்? 

3. 2021-22 முதல் 2023-24 வரையிலான 3 ஆண்டுகளில் மத்திய அரசிடம் பெற்ற GST இழப்பீடு தொகையான 28,024 கோடி ரூபாயில் 10 சதவீதம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கவேண்டும் என்பது மாநில திட்டக்குழுவின் பரிந்துரை. ஆனால் இவை வழங்கப்படவில்லை. ஏன்?

4. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவதற்காக, 511 வாக்குறுதிகளை கொடுத்தீர்கள். இவையன்றி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனி தனியாக தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தது திமுக. இவற்றில் 10 சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றாமல் 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

5. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழகத்தின் கடன் சுமையை குறைப்போம் என்று கூறி, கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் புதிதாக கடன் வாங்கியது ஏன்?

6. தமிழகத்தில், மத்திய அரசின் திட்டங்களில் நடக்கும் ஊழல்களை ஊக்குவிக்கும் விதமாக, திமுக அரசு கள்ள மௌனத்தில் இருப்பது ஏன்?

இவற்றிற்கு பதிலளிக்க முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திராணி இருக்கிறதா? அடுத்த முறை நீதிமன்றத்திலோ மக்கள் மன்றத்திலோ திமுக அசிங்கப்படும்போது, அறுபதாண்டு கால பழைய மடைமாற்றக் கதைகளைக் கொண்டு வராமல், புதியதாகச் சிந்தித்து வரக் கேட்டுக் கொள்கிறோம்.

என்றும் தேசப் பணியில்
K. அண்ணாமலை






ஆலயச் சொத்துகளை அபகரிக்கும் சதி!

sekharbabu with stalin - 2025
#image_title

கோயில் இடங்களில் கல்லூரிகள் கட்டலாம் என தமிழக அரசு தாக்கல் செய்த மசோதாவுக்கு, இந்து கோவில்களின் சொத்துக்களை அபகரிக்க சதி செய்வதாக, இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:

கோவில் இடங்களில் கல்லூரி துவங்க தமிழக அரசு மசோதா தாக்கல் செய்து அவசரம் அவசரமாக நிறைவேற்றியுள்ளது.

ஒரே நாளில் 16 மசோதாக்கள் விவாதிக்காமல் நிறைவேற்றப்பட்டதே ஜனநாயக கேலிக் கூத்து. மேலும் இந்து சமய அறநிலையத்துறையின் சதியை அதிமுக எம்ஏல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி கண்டித்து எதிர்த்துள்ளார். அவரை இந்து முன்னணி மனதாரப் பாராட்டுகிறது.

நீதிமன்றம் பலமுறை கோவில் சொத்துகள், நிதி, கோவில் இடங்கள் ஆகியன கோவிலுக்கு தான் பயன்படுத்த வேண்டும் என்று கூறிய பிறகும், திமுக அரசு இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவில் நிதி, தங்கம், இடங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. விஞ்ஞானப்பூர்வமான ஊழலில் கைதேர்ந்தது திமுக என்று நீதியரசர் சர்காரியா தெரிவித்த கருத்து இன்றும் மிகப் பொருத்தமாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

கோவில் சொத்துக்களை கபளீகரம் செய்வதில் திமுக ஏன் அவ்வளவு வேகம் காட்டுகிறது? சனாதன இந்து தர்மத்தை அழிப்பதே எங்கள் கொள்கை என்று துணை முதல்வரான உதயநிதி கூறினார். அதனை அருகில் இருந்து கைதட்டி வரவேற்றவர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அந்த கொள்கையை மறைமுகமாக நிறைவேற்றவே கோவில் சொத்துக்களை அழிக்க இத்தகைய திட்டங்களை வகுக்கிறார் என இந்து முன்னணி பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறது.

கோவில் இடங்கள், நிதி ஆகியவற்றை ஒழித்துவிட்டால் தற்போது பல்லாயிரம் கோவிலில் விளக்கு ஏற்ற, வழிபாட்டிற்கு வழியில்லாமல் பாழடைந்து பூட்டி கிடப்பதை போல் பிரபல கோவில்களின் நிலையை ஏற்படுத்திடவே இத்தகைய திட்டங்களை மக்கள் நலன் என்ற போர்வையில் சட்டசபையில் அமைச்சர் மசோதாவை நிறைவேற்றியுள்ளார்.

தங்களது செயல்பாட்டினை மூடி மறைக்க இசைக் கல்லூரி, வேத பாராயணம் நடத்தவும் என அதில் கண்துடைப்பாக சேர்த்துள்ளனர். இந்துக்கள் ஏமாளிகள் என்ற நினைப்பிலும், நீதிமன்றத்தின் கவனத்தை திசைத்திருப்பவும் இந்த வார்த்தைகளை சேர்த்து கபட நாடகம் ஆடுகிறது திமுக அரசு.

இந்த மசோதா சட்டவிரோதமானது. இதனை தமிழக ஆளுநர் ஏற்கக்கூடாது என்று இந்து முன்னணியின் சட்டக்குழு, மேதகு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களை சந்தித்து மனு அளிக்கும்.

தமிழக அரசு நிறைவேற்றி உள்ள இந்து கோவில் இடங்களில் கல்லூரி கட்ட அனுமதிக்கும் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக அரசின் இந்த சதியை தமிழக இந்துக்கள் புரிந்து எதிர்க்கவும், சிவனடியார் முதலான இந்து ஆன்மிக அமைப்புகள், ஆதீன மடாதிபதிகள் கண்டிக்கவும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்..